2010/09/29

மெல்லிசை நினைவுகள்

போக்கற்ற சிந்தனை



மெல்லிசை மன்னரின் பாடல்களை இன்றைய இளைஞர் குரலில் கேட்டு ரசிக்கும் வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. (நன்றி, எங்கள் பிளாக்).

இந்தச் சிட்டுக்களின் குரல் வளமும் உழைப்பும் மலைக்க வைத்தது. இவர்கள் இன்றைய இசை மன்னர்களின் கண்ணிலும் கருத்திலும் படவேண்டும் என்று மனதார விரும்பினேன். வாழ்த்துகிறேன். 'சொல்லத்தான் நினைக்கிறேன் படம் பார்த்ததில்லை', என்றார் பாடலைப் பாடிய பெண். (சுமாரான படம் தான், ஒன்றும் குறைந்து போகவில்லை பெண்ணே. பாட்டு பிரமாதம்; நீங்கள் பாடியதும் பிரமாதம்).

வெற்றியின் உச்சத்திலும் சரி, பின்தங்கிய பொழுதும் சரி, மெல்லிசை மன்னர் புதுக்குரல்களை அதிகம் அறிமுகப்படுத்தவில்லையே என்ற வருத்தம் தோன்றியது. நினைத்துப் பார்க்கையில் எம்எஸ்வி, பிறமொழியிலோ பிறர் இசையிலோ வெற்றி பெற்றபின் தன் இசையில் வாய்ப்பளித்தாரே தவிர, ஒரு புதுக்குரலையாவது அறிமுகப்படுத்தினாரா தெரியவில்லை.

மெல்லிசை மன்னரின் ஆடம்பரமே இல்லாத எளிய பாடல்கள் மூன்றை இங்கே தொகுத்திருக்கிறேன். இந்தப் பாடல்களை இன்றைய தலைமுறையினர் கேட்டிருப்பார்களா?
எம்எஸ்வி-10 | 2010/09/29


பெருமூச்சு நினைவுகள்: 'தங்கச்சிமிழ்' பாட்டை அந்த நாளில் ஆயிரம் தடவையாவது கேட்டிருப்பேன். குரோம்பேட்டை நாட்களில்... ஆறாம் கிராஸ்-ஜிஎஸ்டி தெருமுனை வீட்டொன்றில் ஒவ்வொரு கோடை விடுமுறையும் வந்து தங்கி, பக்கத்து வீட்டில் இருந்த தோழி தேஜாவதி வீட்டுக்கு நான் காரணமில்லாமல் போகும் பொழுது, காரணமில்லாமல் வந்து காம்பவுன்ட் சுவர் மேல் உட்கார்ந்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கண்களால் வெட்டி வெட்டி ரணப்படுத்திய தங்கச்சிமிழே, இப்போது எங்கே எப்படிப் பொலிகிறாயோ?

22 கருத்துகள்:

  1. The clarity of the songs are very clear. சுசீலாவின் பாட்டை தவிர மற்ற இரண்டு பாடல்களும் கேள்விபட்டதே இல்லை.
    சில பாடல்களை கேட்கும்போது சிலரின் நினைவுகள் தானாகவே வந்துதான் விடுகிறது. வேறு எந்த நேரத்திலும் அவர்களை பற்றிய சிந்தனை சிறிது கூட இல்லாத போது, எப்படி அந்த பாட்டை கேட்கும்போது மட்டும் அவர்களின் நினைவு வருகிறது என்று எண்ணி பலமுறை வியந்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நான் ஏற்கெனவே ஜெயச்சந்திரனின் ரசிகன். தங்கச் சிமிழ் பாடல் ரொம்பப் பிடிக்கும். இனிமையான பாடல். மற்ற ரெண்டு பாடல் கேட்டதில்லை. பாடல்கள் படு கிளியர் ஆகக் கேட்கின்றன.

    இளசுகளின் குரல்வளம் ரசித்ததாகச் சொல்லி இருக்கிறீர்கள். இதைதான் ஆசியா நெட் டிவியில் உஷா உதுப் நிகழ்ச்சி என்று சொன்னேன். அங்கு நடுவர்களில் ஒருவர்தான் உஷா உதூப். மற்றபடி ஒருமுறை.அங்கு பாடும் இளையவர்களின் குரலைக் கேளுங்கள். திறமையைப் பாருங்கள் இங்கு பாடியவர்களை குறைத்து மதிப்பிடவில்லை என்றாலும் அங்கு இன்னும் கூட நன்றாக இருக்கிறது என்பது என் அபிப்ராயம். எம் எஸ் வி கேபிக்காகத்தான் அந்த மூன்று நாள் நிகழ்ச்சிகள் தொடர்ந்து பார்த்தேன்.

    சாய்..முந்தா நாள் நாகேஷின் பிறந்த நாளாமே..

    பதிலளிநீக்கு
  3. முதலிரண்டு பாடல்களை முதல் முறையாக கேட்கிறேன். பிடித்துள்ளது. ஏதோ ஒரு வசிகரம் உள்ளது..

    பதிலளிநீக்கு
  4. வாவ். எந்த ஒரு பாடலும் கேட்டதில்லை. உடனே என்ன எம்.எஸ்.வி ரசிகன் என்று திட்டாதே !!

    தங்கச்சிமிழ் பாடல் நிறைய இடங்களில் சிறு வயது எஸ்.பி.பி சாயல் இருக்கின்றது.

    //காரணமில்லாமல் வந்து காம்பவுன்ட் சுவர் மேல் உட்கார்ந்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் கண்களால் வெட்டி வெட்டி ரணப்படுத்திய தங்கச்சிமிழே//

    ஐயோ ஏன் கேட்கறே பிரதர். கிழக்கு அண்ணாநகரில் இப்போதே சுமாராகத்தான் இருக்கும் நான் இன்னும் படு கேவலமாக இருப்பேன் !! இருந்தாலும் அந்த பெண்களுக்கு என்ன கருமமோ - ஆனால் என்னையும் இப்படி கண்களால் வெட்டி வெட்டி ரணப்படுத்திய ஒரு சிலர் உண்டு !

    பார்வையை பார்த்தால் "ஐயோ, கண்ணாளா என்னை கட்டிப்பிடி ; கண்ணாலாம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா" என்று இருக்கும் - எதுக்கு ரிஸ்க் என்று நல்லவனாக இருந்து ஒரு நல்ல பெயரும் கிடைக்கவில்லை துரை.

    அவர்களை இப்போது பார்த்து "ஏண்டி" என்று கேட்கவேண்டும் என பலநாள் ஆசை !!

    பதிலளிநீக்கு
  5. //ஸ்ரீராம். கூறியது...

    சாய்..முந்தா நாள் நாகேஷின் பிறந்த நாளாமே..//

    ஸ்ரீராம் அவர் இறந்த நாள் தான் இப்போது நினைவிருக்கின்றது. ஏனென்றால் அவரை தொலைத்துவிட்டோமே என்று !

    இப்போது ப்ளாக் வேறு இல்லை அதனால் அடுத்த ஜனவரி 31 அன்று எனக்காக ஒரு நீங்கள் அவரின் காமெடி சீன் ஒன்றை "எங்கள் ப்ளாகில்" போடமாட்டீர்களா ?

    பதிலளிநீக்கு
  6. அதனால் அடுத்த ஜனவரி 31 அன்று எனக்காக ஒரு நீங்கள் அவரின் காமெடி சீன் ஒன்றை "எங்கள் ப்ளாகில்" போடமாட்டீர்களா ?"//

    போட்டு விடலாம்... நிறைய நாள் இருக்கிறதே... ஆனால் நீங்களே உங்கள் ப்ளாக்கில் போடுவீர்கள்..போட வேண்டும்!

    பதிலளிநீக்கு
  7. ஆஹா! தங்கச்சிமிழ் உங்களுக்கும் புடிக்குமா.. எனக்கென்னவோ பாடகர் ஜெயச்சந்திரனுக்கு இங்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையோ என்றே தோன்றுகிறது.
    என்னடா பதிவு "பாட்டோடு " மட்டுமே துவங்குதேன்னு யோசிச்சிகிட்டே படிச்சேன்."பார்ட்டி"கடைசில இல்லை வந்திருக்கு?" அதெல்லாம் ஒரு நிலாக்காலம் பாஸ்.. உம்.. இப்போ பாட்டைக் கேட்போம்..

    பதிலளிநீக்கு
  8. எங்களுக்கும் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கவைத்த பாடல் நினைவுகள் இருக்கு. இப்போதைக்கு மூச்சு விடாமல் இருப்பது நல்லது. அரசல் புரசலா தெரிஞ்சதை அம்பலத்தில் ஏத்திட்டா நம்ம மூச்சுக்காத்துக் கூட பட்டா தப்புன்னு ஒதுங்கிருவாங்க..
    மத்தபடி பாடல்கள் அருமை.. குறிப்பா தங்கச் சிமிழ்...
    நான் ரசித்த ஜெயச்சந்திரன்.... "எங்கெங்கும் அவள் முகம்.. அங்கெல்லாம் என் மனம்..." சூப்பர்.. என்னபடம் யார் நடிச்சா அதெல்லாம் தெரியாது.. ஆனா அட்டகாசம்.

    பதிலளிநீக்கு
  9. சரியாச் சொன்னீங்க மோகன்ஜி. ஜெயச்சந்திரன் தனக்கென்று ஒரு அடையாளம்/உத்தி ஏற்படுத்திக் கொள்ளாததால் சரியான அங்கீகாரம் பெறவில்லை என்று நினைக்கிறேன். தங்கச்சிமிழ் போல் இன்னும் சில பாடல்களில் எஸ்பிபி சாயல்; பல பாடல்களில் பிபிஸ்ரீ சாயல், ஜேசுதாஸ் சாயல் என்று ஆரம்ப காலத்திலிருந்தே அவர் இன்னொரு குரலை நினைவுபடுத்தும்படி பாடியதால் கொஞ்சம் பின்தங்கி விட்டார் என்று நினைக்கிறேன்.

    சாய், இந்தப் பாட்டு எஸ்பிபி பாடின மாதிரி இருக்கா? ரைட்டு தான். இதே டயத்துல தான் எம் எஸ்வி இன்னொரு பாட்டையும் போட்டாரு. இதே மெட்டையும் இசையையும் அடிப்படையா வச்சு கொஞ்சம் மிதமான டெம்போல உல்டா பண்ணிப் போட்டாரு. எஸ்பிபி பாடின அந்தப் பாட்டு ரொம்ப ஒகோனு பிரபலமாயிடுச்சு. இந்தப் பாட்டைக் கேக்கும் போதெல்லாம் எனக்கு அந்தப் பாட்டும் ஞாபகம் வரும். அந்தப் பாட்டு மனசுல தங்கினதாலே இவர் குரல் அவர் சாயலில் இருப்பதா எனக்கும் தோணும். அது என்ன பாட்டு சொல்லுங்க பாக்கலாம்? (எம்எஸ்வி ரசிகனா இருந்தா அந்தப் பாட்டை சொல்லுங்க பாப்போம், இல்லாகாட்டி ரசிகன் பேஜ்ஜை அவுத்து கொடும்மா கண்ணா).

    சாய்... நல்லவன் கெட்டவன் எல்லாம் அடுத்தவங்க கொடுக்குற பட்டம்; அதுக்கு ஏன் நாம ஆசைப்படணும் ஆதங்கப்படணும் சொல்லுங்க? மோகன்ஜியோட 'தமிழே! என் தமிழே!' இடுகையைப் படிச்சுப் பாருங்க. அடுத்தவங்க நல்லவன்னு சொல்றதுனால நாம நல்லவனாயிடப்போறதுமில்லே, கெட்டவன்னு சொல்றதுனால கெட்ட காரியம் செய்யாமலும் இல்லே... (தொழிலை விட முடியுமா? கதையா கீதே?).

    ஸ்ரீராம், நீங்க எழுதினதை தப்பா புரிஞ்சுகிட்டேன்; மன்னிக்க வேண்டுகிறேன். (நல்ல வேளை; உஷா உதுப் தான் அருமையா பாடியிருக்கிறார்னு சொல்லிட்டீங்களோனு பயந்துட்டிருந்தேன்.. விபூதி நீர்மோர் எதுவுமே குணப்படுத்தவில்லை நடுக்கத்தை). அந்த டிவியெல்லாம் பாக்க வாய்ப்பே இல்லை சார்,அதனால உங்க பிளாக்கைப் படிச்சுத் தெரிஞ்சுக்குறேன்.

    ஓஹோ அப்படியா சங்கதி meenakshi? யார் நினைவு வருதுனு கொஞ்சம் புட்டு வைங்க.. RVS மாதிரி அம்பேலாயிடாதீங்க. சாய் பாருங்க, என்னமா எடுத்து உடுறாரு?!

    பதிலளிநீக்கு
  10. சொல்றதுக்கு என்ன பெரிய தைரியம் வேணும். சொன்னா போச்சு.
    'காணா இன்பம் கனிந்ததேனோ.....' இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் பள்ளி நாட்களில் எங்களுடைய ஆர்கெஸ்டிரா ட்ரூப்பில் இருந்த லக்ஷ்மி என்பவளின் நினைவுதான் வரும். பள்ளி நேரம் முடிந்து ப்ராக்டிஸ் செய்ய எல்லோரும் சந்திக்கும்போது, பாட்டு டீச்சர் வரும்வரை சினிமா பாடல்தான் பாடுவோம். இந்த பாடல் எங்கள் எல்லோருக்கும் பிடிக்கும், ஆனால் லக்ஷ்மிதான் மிகவும் அற்புதமாக இந்த பாடலை பாடுவாள். அதனால் இந்த ஒரு பாடலை அவளை பாட சொல்லி கேட்டு ரசிப்பும். இந்த பாடலை அவ்வளவு உருகி உருகி பாடுவாள்.
    'ராதையின் நெஞ்சமே....' இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என்னுடன் மூன்று வருடம் ஒன்றாக படித்து, இருதய நோயினால் எட்டாவது வகுப்பின் அரையாண்டு தேர்வுக்கு முன் இறந்த என் தோழி அகிலாவின் நினைவுதான் வரும். அவளுக்கு இந்த பாடல் உயிர். எப்பொழுதும் இந்த பாடலை பாடல் சொல்லி மிகவும் ரசித்து கேட்பாள். அவள் இறந்த பின் சிறிது காலம் இந்த பாடலை கேட்பதையே தவிர்த்தேன். ஆனால் இன்று என்னிடம் உள்ள சுசீலா பாடல்களின் தொகுப்பில் முதலாவதாக உள்ள பாடலே இதுதான், அவள் நினைவுக்காகவே.
    'மருதமலை மாமணியே....' இந்த பாடலை கேட்கும்போது குன்னக்குடியின் நினைவுதான் வரும். அவருடைய மேடை நிகழ்ச்சி ஒன்றில் இந்த பாடலை வயலினில் நிறைய சங்கதிகளுடன் மிகவும் அற்புதமாக வாசித்தார். அதனால் இப்பொழுது இந்த பாடலை கேட்டாலும் அவர் நினைவுதான் வரும்.
    எங்கள் வீட்டில் எப்பொழுதுமே இரவு மீதம் இருக்கும் உணவை ராப்பிச்சைக்கு போடுவது வழக்கம். அதுவும் நான்தான் போடுவது வழக்கம். அதில் ஒருவர் ஒருநாள் 'அம்மா ராபிச்சை' என்று கூவினார். நான் உணவை கொண்டு வரும்போது அவர் 'மணப்பாறை மாடுகட்டி' என்ற பாடலை பாடிக் கொண்டிருந்தார். அவர் குரல் அவ்வளவு அழகாக இருந்தது. அந்த பாடலை முழுவதும் கேட்டுவிட்டுதான், நான் அவருக்கு அந்த உணவையே கொடுத்தேன். அந்த நாளுக்கு பிறகு நான் அவரை பார்க்கவேயில்லை. ஆனால் இந்த பாடலை கேட்கும்போது அவர் நினைவுதான் வரும்.
    இது போல இன்னமும் சில நினைவுகள் உள்ளது. எழுதிக்கொண்டே போகலாம். ஆனால் இது பதிவு இல்லை, பின்னூட்டம்தானே.

    பதிலளிநீக்கு
  11. அப்பாதுரைஅக்டோபர் 01, 2010

    meenakshi தெரியாம கேட்டுட்டங்க... வரட்டா?

    நல்ல சுவர் எங்கே இருக்குனு தேடணும்.. காணா இன்பம் கனிந்ததேனோவா...இருதய நோய் ராப்பிச்சையா.. வெள்ளாட்டா போச்சுபா நாட்டுல...

    பதிலளிநீக்கு
  12. //அப்பாதுரை சொன்னது… meenakshi தெரியாம கேட்டுட்டங்க... வரட்டா?
    நல்ல சுவர் எங்கே இருக்குனு தேடணும்.. காணா இன்பம் கனிந்ததேனோவா...இருதய நோய் ராப்பிச்சையா.. வெள்ளாட்டா போச்சுபா நாட்டுல...//


    'மருதமலை மாமணியே....' ?!?!

    அதை விட்டுட்டியே துரை !! ஏதோ ஜல்சாவா சமாசாரம் வரும்னு பார்த்தா - ஏதோ "மடப்பள்ளி" கதையல்ல இருக்கு. எல்லாம் உடன்சுமா !! நொண்டி எடுத்த பெண் நண்பர்களை விட சில்மிஷ வேலைகள் வரும் !!

    நம்மள கேளும்மா. ஷெனாய் நகர் திரு.வி.கா கார்பரேஷன் பள்ளியில் படித்த காலத்தில் 'படாபட் ஜெயலக்ஷ்மி' போலிருந்த ஒரு பெண் இன்னும் வெள்ளை ஏஞ்சல் போல் வருகின்றாள் கனவிலே ! அதே போல் அண்ணா நகரில் நான் பன்னிரெண்டாம் வகுப்போ அல்லது முதல் வருட காலேஜ்
    போகும்போது ஒரு டாக்டர் பொண்ணு. நச்சினார்க்கினிய பட்லி !!

    "அடியே கொல்லுதே" பாட்டு தான் !!

    பதிலளிநீக்கு
  13. //RVS கூறியது...அரசல் புரசலா தெரிஞ்சதை அம்பலத்தில் ஏத்திட்டா நம்ம மூச்சுக்காத்துக் கூட பட்டா தப்புன்னு ஒதுங்கிருவாங்க..//

    என்ன ப்ரதர் இப்படி ஜகால்டி வாங்கிட்டே !

    பதிலளிநீக்கு
  14. //நல்ல சுவர் எங்கே இருக்குனு தேடணும்.. //
    ஹலோ, ஹலோ இருங்க, அவசரப்பட்டு அதுக்குள்ளேயே போய் முட்டிக்காதீங்க. என்னோட மீதி நினைவுகளான, செருப்பு தைக்கறவர் பாடினது, கேன்சர் பேஷண்ட் பாடினது, எங்க வீட்டுக்கு வேலை செய்ய வந்தவங்க பாடினதுன்னு எல்லாத்தையும் மொத்தமா கேட்டுட்டு ஒரு நல்ல குட்டிசுவரா பாத்து முட்டிக்கோங்க. ஹலோ, ஹலோ இருங்க, இருங்க...ஓடாதீங்க, ஓடாதீங்க.... ப்ளீஸ், ப்ளீஸ்......

    பதிலளிநீக்கு
  15. பாடல்கள் மூன்றும் முத்துக்கள்... படிக்கும் காலத்தில் எம்.எஸ்.வி சார்பாக நின்று பேசுபவனாக இருந்தாலும் ..நினைத்தாலே இனிக்கும்...அவர்கள், சிவாஜி படங்கள் என டி.எம்.எஸ்..எஸ்.பி.பி இவர்களை ஒட்டியே இருக்கும்.... வார்த்தைகளுக்கும் குரலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து இசையலங்காரம் செய்த இந்த பாடல்கள் கேட்பதற்கு சலிப்பதில்லை....
    அப்புறம் ஜெயச்சந்திரன் மிகவும் ரசிக்ககூடிய குரல்...கொஞ்சமும் பிசிறே அடிக்காத குரல்... ராசாத்திகளை தேடிய காலத்தில் கேட்ட ``ராசாத்தி உன்னை காணத நெஞ்சு, காத்தாடி போலாடுது ``` பாடல் இன்னமும் நெஞ்சில் இருக்கிறது....சமிப பாடலாக `` ஒரு தெய்வம் தந்த பூ வே ,சிறு ஊடல் என்ன தாயே `` மனதில் நிற்கிறது...இப்பாடலில் ஏ.ஆர்.ஆர் இசையிரச்சல் குறைத்தது உண்மையில் பாராட்டுக்குரியது....

    பதிலளிநீக்கு
  16. அப்பாதுரை சார்...
    சாய்க்கு நீங்கள் போட்ட புதிர் பாடல்”அவளொரு நவரச நாடகம்” சரியா?
    ஜெயச்சந்திரனின் சில பாடல்களை நினைவு கூர்ந்தேன். ரசிகமணி பத்மநாபன் லிஸ்ட்டு இதையும் பாருங்கள்
    ஒரு வானவில் போலே,
    இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே,
    கவிதை அரங்கேறும் நேரம்,
    தவிக்குது தயங்குது ஒரு மனது,
    சித்திர செவ்வானம் சிரிக்க,
    கண்ணனின் சன்னதியில்,
    அழகி ஒருத்தி இளநி விக்கிறா

    குறும்புக்கார சாயியின் ப்ளாகுக்கு என்ன ஆச்சு?

    பதிலளிநீக்கு
  17. நன்றி மோகன்ஜி...அத்தனையும் நான் ரசித்து/ ரசிக்கும் பாடல்கள்...என்ன ஒரு sync..ரசிகசிகாமணிகளுக்குள்....

    பதிலளிநீக்கு
  18. இரண்டு ரசிக மணிகளுக்கு அப்புறம் என்னோடது ஒன்னும் பெரிய லிஸ்ட்-ஆ இருக்காது. இருந்தாலும்...

    ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில்...
    சூரக்கோட்டை சிங்கக்குட்டியாக......காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ...
    புதுமைப் பெண்ணின்...காதல் மயக்கம்...

    பதிலளிநீக்கு
  19. ஜெயசந்திரன் இத்தனை பாடல்களைப் பாடியிருக்கிறாரா?! ஓசையில்லாமல் ஒரு ரசிகர் மன்றம் உருவாகுது போலிருக்கே?

    பதிலளிநீக்கு
  20. மோகன்ஜியிடம் வம்பு வைத்துக் கொள்ளக்கூடாது.. பின்ன என்னவாம்? 'அவளொரு நவரச நாடகம்' என்று தொப்பியிலிருந்து முயலெடுப்பது போல் எல்லாம் டக் டக் என்று அசால்டாக எடுத்துவிடுகிறாரே?

    பதிலளிநீக்கு
  21. மோகன்ஜி, ஜெயச்சந்திரனோட 'swing swing உனது ஊஞ்சல் நான்' இந்த பாடலை எப்படி எழுத மறந்து போனீங்கன்னு உங்களை கேக்க நெனச்சு, நான் மறந்து போயிட்டேன். :) இது எனக்கு ரொம்பவே பிடிச்ச பாட்டு. ஆனா இந்த பாட்டு ரஜினிக்காக பாடினதுங்கறதுதான் ஒத்துக்க முடியாத விஷயம். இன்னும் கூட ஜெயச்சந்திரன் பாடினதுல என்னோட favourites நிறைய இருக்கு. இவர் எனக்கும் ரொம்ப பிடிச்ச பாடகர்தான்.

    பதிலளிநீக்கு
  22. அட ஆமாங்க !அது நல்ல பாட்டு தான்.. இன்னமும் கொஞ்சம் லிஸ்ட்ல சேத்துக்குங்க...

    -கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
    -இசைக்கவோ நம் கல்யாண ராகம்
    -சாமத்தில் பூத்தமல்லி
    -மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே
    -வசந்த கால நதிகளிலே வைர மணி நீரலைகள்

    அடடா!'சொல்லாமலே யார் பார்த்தது' கூட விடு பட்டு போச்சுங்க.
    இன்னும் மூளையை கசக்கினா லிஸ்ட் ஏறும்
    என வருத்தம் என்னன்னா 'POORMAN'S S.P.B' போல் அவர் கொஞ்சம் தூக்குப் பாடல்களும் பாடியது தான்..
    ஆனாலும் அவர் பாடிய ரத்தினங்களுக்காய் அவருக்கு ஒரு சல்யூட்!

    பதிலளிநீக்கு