2017/07/10

பாத்திரம்        “என்னிடம் பணம் இல்லை” என்று அன்றைக்கு மட்டும் பத்தாவது முறையாகச் சொன்னாள் லிசா.

“என்னம்மா இது.. அடுத்த வருசம் நான் காலேஜ் போக வேணாமா? ஸேட் பயிற்சிக்குத் தானே கேக்குறேன்? உன் புருஷன் டானி கிட்டே வாங்கிக் கொடேன்?” என்றாள் கேதரின்.

டானி லிசாவின் இரண்டாவது கணவன் என்பதாலும், வரும் ஆகஸ்டில் தான் பதினெட்டு வயதைத் தொடும் காரணத்தாலும் டானியை அப்பா என்றழைக்க மறுத்திருந்தாள் கேதரின். மேலும் லிசாவின் திருமணம் முடிந்து ஒரு வருடம் கூட ஆகாததால் டானியுடன் அதிகமாகப் பழகவும் இல்லை. “ஏம்மா.. உன் புருஷன் டானி பணம் தரமாட்டானா? கடனா வாங்கித்தரியா?”

லிசா ஏற்கனவே டானியைக் கேட்டிருந்தாள். கேதரினைப் பற்றிய அத்தனை விவரங்களையும் அறிந்த டானி பணம் தர மறுத்துவிட்டான். “லிசா.. இதப்பாரு.. உன் பெண் கேட் படிக்குறதுக்காக பணம் கேக்கலே.. அவ காதலன் ப்ரையனுடன் பிறந்த நாள் கூத்தடிக்கக் கேக்குறா.. ஏற்கனவே இந்த எட்டு மாசத்துல ரெண்டு தடவை அப்பானு கையெழுத்து போட்டு அவளையும் ப்ரையனையும் ஜாமின்ல எடுத்திருக்கேன்.. இனி அவ பாடு.. அடுத்த முறை ஜாமினும் எடுக்க மாட்டேன்.. புத்தி சொல்லிவை.. பதினெட்டு வயசு கூட ஆவலே.. படிப்பு வரலேனா பர்கர்கிங்ல இறைச்சி புறட்டுலாம்ல? கூலியாவது கிடைக்கும்.. கவுரவத்தோட இருக்கலாமே? என்ன பொண்ணு வளத்திருக்கே?”.

டானி அத்துடன் நிற்கவில்லை. “லிசா.. உனக்கே இத்தனை கடன் இருக்குதுனு என் கிட்டே சொல்லாமலே கல்யாணம் கட்டியிருக்கே.. க்ரெடிட் கார்ட்ல எட்டாயிரம் கடன் வச்சிருக்கியே? இத நான் எப்படி கட்டுவேன்? உன் செலவையெல்லாம் பாக்குறப்ப ஏன் கல்யாணம் கட்டினோம்னு தோணிடுச்சு.. காசுக்குத்தான் என் பின்னாடி சுத்தி என்னை வளைச்சுப் போட்டியா? வேலைக்குப் போவியோ என்ன செய்வியோ நீயேதான் அடைக்கணும்.. எங்கிட்டே ஒரு டாலர் கூட எதிர்பார்க்காதே” என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டான்.

மகளிடம் எல்லாவற்றையும் சொல்லி அழுதாள் லிசா. “தினம் கலெக்சன் ஆசாமிங்க வராங்க கேட்.. இந்த சின்ன ஊர்ல எல்லாருக்கும் எல்லாம் தெரியுது இல்லே? காருக்குப் பணம் கட்டலேனு வந்த டீலர்காரன் நேத்து என்ன கேட்டான் தெரியுமா?” என்று கையைக் குவித்து வாயில் வைத்துக் காட்டினாள். “..செஞ்சா இந்த மாசம் தவணைப்பணம் கட்டுறதா சொன்னான்”. மறுபடி அழுதாள்.

“ஏம்மா.. டானிக்கு இன்சூரன்சு இருக்குதுல்ல?” என்றாள் கேட் நிதானமாக.
*
படுக்கையில் நெருக்கமாக அணைத்துக் கொண்டிருந்தார்கள்.

“ப்ரை.. எனக்காக இதை நீ செய்தே ஆவணும்” என்றாள் கேட்.

“என்ன பேபி இது.. உங்கப்பனைக் கொலை செய்யச் சொல்றியே?” அதிராமல் கேட்டான் ப்ரையன்.

“டானி எங்கப்பன் இல்லே, இடியட்! இன்னொரு முறை அப்படிச் சொல்லாதே” சட்டென்று எழுந்த கேதரின் தணிந்து, “என் அம்மா நிறைய கடன்ல இருக்கு.. எனக்கும் பணம் வேணும்.. எங்கம்மா கிட்டே எல்லாம் பேசிட்டேன்..”

ப்ரையன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். கேதரின் தொடர்ந்தாள். “டானிக்கு இருநூறாயிரம் இன்சூரன்சு இருக்கு.. அவன் செத்தா எங்கம்மாவுக்கு வரும். இருவத்தஞ்சாயிரம் எங்கம்மாவுக்கு, மிச்சம் எல்லாம் நமக்கு.. எங்கம்மா உடனே ஒத்துகிட்டா. அவளுக்கென்ன.. பணம் கிடைக்குது இல்லே? டானி போனா வேறே ஜானி கிடைப்பான்”. அவன் முழங்காலருகே குனிந்தாள். “கொஞ்சம் யோசிச்சுப் பாரு ப்ரை.. நாம இங்கிருந்து ஓடிறலாம்.. உனக்கும் கேனடா ஓடிறனும்னு ஆசை.. கைல பணத்தோடு ஓடிறலாம்.. ஒன் செவன்டி பை தௌ.. உனக்கு எழுவத்தஞ்சு.. எனக்கு நூறு.. என்ன சொல்றே?”

ப்ரையன் அசையாமல் “ரொம்ப ரிஸ்க் கேட்” என்றான்.

“உன்னால முடியும் ப்ரை.. லுக் அட் தி மனி..” ப்ரையன் கன்னத்தைத் தொட்ட கேதரின் “இதப் பாரு நீ ஒத்துழைச்சா நானும் ஒத்துழைப்பேன்” என்றாள்.

“என்ன சொல்றே?”

அவன் கைகளை இழுத்த கேதரின் சட்டென்று தரையில் குனிந்து நின்று தன் இடுப்பை இரண்டு கை விரல்களாலும் தட்டினாள்.

சிரித்தபடி எழுந்த பரையன் “ஸ்டுபிட்.. கொலை செய்வது பெரிசில்லே.. நம்ம மேலே பழி வராம தப்பிக்கணும்ல?” என்று கேதரினை இழுத்துத் தன் மடி மேல் அமர்த்தினான். “அடையாளம் தெரியாத துப்பாக்கி, நம்ம மேலே பழி வராதபடி சாட்சிகள், டானியைக் கூட்டி வர தூது.. எல்லாம் பத்துக்கு மேலே செலவாகுமே.. பணம் யார் கிட்டே இருக்கு?”

“என்னை நம்பி நீ செலவு செய்.. வேணுமுன்னா என் பங்குலந்து பத்து எடுத்துக்க.. இல்லின்னா எங்கம்மாவுக்கு பதினஞ்சு கொடுத்தா போதும்”

“நோ.. இந்த நம்பிக்கை விவகாரம் எல்லாம் வேண்டாம்.. இன்சூரன்சு பணத்துல எனக்கு நூறு.. உனக்கு எழுவத்தஞ்சு.. செலவெல்லாம் நான் பாத்துக்குறேன் சரியா?” என்றான் ப்ரையன்.
*
ஒரு வாரத்தில் டானி இறந்தான்.

சேம்பர் சந்தையின் கழிவறையில் கழுத்திலும் இடுப்பிலும் சுடு காயங்களுடன் கிடந்ததாகப் போலீஸ் சொன்னதும் துடித்துப் போனாள் லிசா. அலறினாள். கதறினாள்.
*
முப்பது நாட்களாகியும் இன்சூரன்சு ஆசாமி யாரும் வராததால் கேதரினை அழைத்துக் கொண்டு சேம்பர் சந்தையில் இன்சூரன்சு ஏஜன்ட் அலுவலகத்துக்குப் போனாள் லிசா.

விவரங்கள் கேட்டுக்கொண்ட இன்சூரன்சு அலுவலக கண்ணாடி ஆசாமி, “கொஞ்சம் இருங்க லிசா” என்று கணினியில் தட்டினான். “இனசூரன்சு பணம்.. அகால மரண போனஸ் சேர்த்து இருநூத்துப்பத்தாயிரம்.. பட்டுவாடா ஆயிருச்சே.. போன வாரம்.. முப்பதாம் தேதி..” என்றான் மெள்ள.

“இல்லியே.. எனக்கு அறிவிப்பு கூட வரலியே.. பணம் கட்டாயம் வரலே.. மறுபடி பாருங்க" பதைத்தாள் லிசா.

“இருங்க” கண்ணாடி ஆசாமி இம்முறை நிறைய கணினி தட்டினான். “ஆ.. விளங்கிருச்சு” என்றான். “பாருங்க.. டானி இன்சூரன்சு பாலிசில உங்க பேரை சேர்க்கவே இல்லே.. அவரு உங்க பேர்ல உரிமையை மாத்தாம விட்டதால பழைய மனைவியே இன்சூரன்சு பணத்துக்கு… அவங்களுக்குத்தான் பணம் போயிருக்கு.. இதப் பாருங்க... கொலராடோ பேங்க் கணக்குல பணம் போயிருக்கு பாருங்க…”
* * *அசல் லிசா கேதரின் ப்ரையன் டானி கதை இன்னும் விவகாரமானது. விரும்பினால் ‘க்லீவ்லன்ட் யுலோமா’ என்று இணையத்தில் தேடித் தெரிந்து கொள்ளலாம்.

22 கருத்துகள்:

 1. அங்கிருந்து படித்திருந்தால்
  ஒருவேளை இது கொஞ்சம்
  ஓவராகத் தெரிந்திருக்கும்

  இப்போது இங்கிருந்தே படிப்பதால்
  டாலர் மற்றும் உறவுகளின் மதிப்புக்
  குறித்து கொஞ்சம் நெருக்கமாய்ப்
  பார்ப்பதாலோ என்னவோ
  திட்டமும், செயல்பாடும் முடிவும் கூட
  மிக மிக யதார்த்தமாகப் படுகிறது

  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோயமுத்தூர் அருகே நடந்த சமாசாரம் கேள்விப்பட்டிருப்பீங்க.. தமிழ் பண்பாடு எந்த அளவுல இருக்குன்றீங்க போங்க!

   நீக்கு
 2. மேலை நாட்டு வாழ்க்கை முறையில் இப்படி பட்ட சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன...

  என்னாச்சு நீண்ட காலமாக பதிவுகள் ஏதும் உங்களிடம் இருந்து வரவில்லையே...வேலையில் பிஸியோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது ஒரு பெரிய கதை.. சரியான சிக்கல்.. தீர இத்தனை நாளாச்சு.. எழுத உற்சாகமில்லாம போச்சு.

   எங்கள் பிளாக்ல 'சீதை ராமனை மன்னித்தாள்'னு கடைசி வரி கொடுத்து ஒரு கதை எழுதச் சொன்னாங்க; இந்தக் கதையை எழுதிட்டு சீதை ராமனை மன்னித்தாள்'னு கடைசி வரியை சும்மா சேரத்தா பிறகு அவங்க ஒத்துக்க மறுத்தா என்ன செய்யனு தோணிச்சு.. அதான் இங்க சேர்த்துட்டேன். ஹிஹி

   நீக்கு
 3. மொத்தம் இரண்டு இடங்களில் 'ஐயே'! வேண்டுமென்றே நுழைக்கப்பட்டிருப்பதால் துருத்திக் கொண்டு தெரிகிறதோ?

  படுக்கையில் நெருக்கமாக அணைத்து.. என்று ஆரம்பிக்கும் இடத்தை இன்னொரு பகுதியாகக் காட்டியிருக்கலாம்.

  பணம் படுத்தும் பாடு.. அது டாலராய், ரூபாயாக, கார்டாக எதுவாக இருந்தால் தான் என்ன?.. உலகளாவிய வேதம் அதுவே!

  பதிவில் உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பின்னே?.. அது பாட்டுக்க நுழைந்தது என்றா நினைக்கிறீர்கள்?..

   நீக்கு
  2. இப்பத்தான் பதில் எழுதினேன்.. அதுக்குள்ளே காணோம்.. மறுபடி நினைவிலிருந்து..

   உண்மையை சொல்லிடறேன்.. ஹிஹி.. இந்தக் கதை எழுதி முடிச்சதும் ஒரு வேளை நீங்க இதைப் படிச்சா நாலு இடங்கள்ள என்ன கமென்ட் எழுதுவீங்கன்னு நினைச்சேன்.. நாலாவது இடத்தை நானே எடுத்துட்டேன்.. மூணாவதை நீங்க மன்னிச்சுட்டீங்க போல.. அச்சு அசலா நான் நினைச்ச மாதிரியே இருந்துச்சு உங்க கமென்ட் :-)

   என் மட்டில் இவை குணதிசயங்களை வெளிப்படுத்துவதாகவே நினைக்கிறேன்.. அசூயையாக நினைப்பது கூட இல்லை.. இயல்பாகவே நினைக்கிறேன்.. கனியிருப்ப காய் கவருவது அத்தனை ஏற்புடையாதாகப் படவில்லை..

   மீண்டும் வருக :-)

   நீக்கு
  3. எது எழுதினாலும் முன்னெல்லாம் குறிப்பிட்ட பத்து பேர் என்ன கமென்ட் போடுவீங்கன்னு தோராயமா எழுதி வச்சு அசலோட ஒப்பிட்டுப் பார்ப்பேன்.. பழகிடுச்சு.. :-)

   நீக்கு
 4. இன்னொன்றும் தோணிச்சு.காரியத்தை பணம் பெற்றவர் கூட செய்திருக்கச் சாத்தியமே என்று

  பதிலளிநீக்கு
 5. யார் படிக்கப் போறாங்கனு இருந்தேன்.. வந்து வாசிச்சு பின்னூட்டமும் எழுதினதுக்கு நன்றி.

  ஜீவி சார்: வேண்டுமென்றே நுழைத்தார் போலவா இருக்கிறது?

  ரமணி சார்: இங்கியா இருக்கீங்க? நான் இப்பத்தான் இந்தியா போய் வந்தேன். இங்க விட கண்றாவி பெங்களூர்ல நடக்குதுங்க.

  பதிலளிநீக்கு
 6. ஊருக்கு வந்தீர்களா?
  அம்மா நலமா?
  பாத்திரம் அறிந்து தான் தருவரோ ?
  யாருக்கு பணம் போக வேண்டும் என்று இருக்கோ அவர்களுக்கு போய் விட்டது அப்படித்தானே?
  கதை நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. கொலையும் செய்வாள் பத்தினி என்பதற்கு பதில் பெண் என்று இருக்க வேண்டுமோ இன்சூரன்ஸ் பணம்யாருக்கு என்று கூடத்தெரியாமலா கொலை

  பதிலளிநீக்கு
 8. இதெல்லாம் அங்கு சர்வ சகஜமாக நடக்குதுன்னு சொல்லறோம். த ஸோ கால்டு கலாச்சார இந்தியாவிலும் நடக்குதே இப்ப..மும்பையில் போன வருஷம் வரை பேப்பர்ல முதல் பக்கத்தை ஆக்ரமிச்சருந்த நிகழ்வு...கேஸ் டீல் பண்ணின வக்கீலும், ஜட்ஜும் கண்டிப்பா வழுக்கை ஆகிருப்பங்க....யார் எத்தனையாவது கணவன்..யாருக்கு, யாருக்குப் பிறந்த பிள்ளைன்னு....பணம் நா...பத்தும் பறக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
 9. மனுஷன் உடலில் மிருகம், அந்த மிருகம் கையில உலகம்,
  பணத்தில் சுத்துது பூமி இதைப் புரிஞ்சு கொள்ளடா சாமி

  ன்னு ஒரு இசை வித்தகர் 1979 லேயே பாடியிருக்கார். பாவம் டானிக்கு அது தெரியலை. இந்திய சட்டப்படி எத்தனை மனைவி, பிள்ளை நோ அப்ஜக்ஷன் எல்லாம் கேட்டு பிரித்துத் தருவார்கள்!

  பதிலளிநீக்கு
 10. மூன்றாம் சுழி மீண்டுக் துளிர்த்திருப்பதை கீதா ரெங்கன் சொல்லியே அறிந்தேன்.

  நான் எப்படிப் பின்னூட்டம் தருவேன் என்று நினைத்து வைத்திருக்கிறீர்களா?!!!

  பதிலளிநீக்கு
 11. நான் என்ன சொல்லுவேன்னு நினைச்சீங்க துரை? அத சொன்னீங்கன்னா மேற்கொண்டு என் கருத்தை சொல்வேன்.
  சொல்லாமலேயே பூடுவேன்னு நினைச்சீரோ பல்லாவரம் பழைய சிவமே?!

  Welcome back! நின்னு விளையாடும்!

  பதிலளிநீக்கு
 12. ஹிஹி..ஆளாளுக்கு இதையே கேக்கறிங்களே? கருத்து சொல்லனும்னு எதிர்ப்பாக்குறது இல்லை.. ஆனா சில மேட்டருங்க எழுதுறப்போ இன்னார் படிச்சா என்ன நினைப்பாங்கன்னு சட்னு தோணும்.. அவ்ளோ தான்.

  பதிலளிநீக்கு