2013/10/15

கனவில் பாடியவர்



நேரமும் வாய்ப்பும் கிடைத்தால் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.
ப்ரேங்க் போரன்சிக்கின் எளிய சத்துமா புத்தகத்தைப் படிக்க வாய்ப்பு கிடைத்தாலும் கிடைக்காவிடிலும் அவசியம் படிக்க/பார்க்க வேண்டிய சுட்டி. புத்தக வலைப்பக்கத்தின் இடதோர வரிசையில் Games and Movementsஐ அவசியம் பார்க்கவும். உங்கள் உடல்/மன வளத்தை சில படிகள் உயர்த்திக் கொள்ளவும். நன்றியெல்லாம் வேண்டாம். ஒரே ஒரு கின்றி போதும். (சமீபத்தில் மாயா பஜார் இரண்டு முறை பார்த்தேன்).


'பத்து கேள்விகள்' என்று ஒரு சமூக அமைப்பு சிகாகோவில் இயங்குகிறது.

பல வருடங்களுக்குப் பிறகு ஒரு மாலைச் சந்திப்பில் கலந்து கொள்ள நேரமும் வாய்ப்பும் கிடைத்தது. அதே இடம் தான். ஆனால் சிகரெட் மது சுத்தமாகக் காணோம். சிக்கன், உருளை வறுவலுக்குப் பதில் பாதாம் பருப்பு, கொழுப்பற்ற யோகர்ட் என்று சைவ மயம். நிறையப் புதுமுகங்கள். இளமுகங்கள். உற்சாகமாகப் பேசுகிறார்கள். கலக்கிறார்கள். என் வட்டத்து ஆட்கள் இன்னமும் கலந்து கொள்வது நிறைவாக இருந்தது.

அறிமுகங்கள் முடிந்ததும் வட்ட இருக்கையில் அமரவேண்டும். யாராவது ஒருவர் நடு மேசை மேல் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் காகித அடுக்கிலிருந்து காகிதத்தை எடுக்க வேண்டும். அதில் பத்துக் கேள்விகள் இருக்கும். மனதில் பட்டதை உடனே சுருக்கமாகச் சொல்ல வேண்டும். பிறகு அவருக்கு வலப்புறம் இருப்பவர் அடுத்த காகிதத்தை எடுக்க வேண்டும். காகிதத்தில் அதே கேள்விகளோ வேறு கேள்விகளோ இருக்கலாம். பதில் சொன்னதும் அடுத்தவர். சுவாரசியமான சில சமயம் சிந்திக்க வைக்கும் பொழுதுபோக்கு. ஊர்ப்பட்ட கின்டில்களும் ஐபேட்களும் இன்னபிற டேப்களும் கிடைக்கையில் ஏனோ இன்னும் இதை மின் வடிவாக்கவில்லை. காகிதத்திலும் ஒரு குணச்சித்திரம் இருக்கத்தான் செய்கிறது.

எனக்குக் கிடைத்தப் பத்துக் கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன். மனதில் பட்டதை உடனே சுருக்கமாகச் சொல்ல வேண்டும். சாக்ரேட்ஸ் போல் யோசித்து, கடைசியில் கமல்ஹாசன் போல் பதில் சொன்னால்.. தொலைச்சுப்புடுவேன் தொலைச்சு!.
    • உங்களின் மூன்றாவது தலைமுறைச் சந்ததிக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? எப்படிச் சொல்லப் போகிறீர்கள்?
    • 'சூபர் பவர்' ஒன்று கிடைக்குமானால் உங்களுக்கு எத்தகைய சக்தி பெற விருப்பம்?
    • இந்த வருட இறுதிக்குள் நீங்கள் செய்து முடிக்க விரும்பும் மிக முக்கியமான செயல் எது?
    • பின்னோக்கிப் போகும் கால எந்திரம் கிடைக்குமானால் எந்தக் காலத்துக்குப் போக விரும்புகிறீர்கள்? ஏன்?
    • நாளை பொழுது விடிந்ததும் ஒரு பெரும் ஏமாற்றம் காத்திருக்கிறது. அது என்னவாக இருக்கலாம்?
    • அத்தனைப் புத்தகங்களும் மின் வடிவானபின், உலகின் அச்சுவடிவக் கடைசிப் பிரதி உங்கள் கையில் கிடைக்கிறது. என்ன செய்வீர்கள்?
    • முட்டாள்தனம் என்றால் என்ன?
    • உங்கள் பிள்ளைகள் எத்தனை வயது வரை வாழ விரும்புகிறீர்கள்?
    • உங்கள் டீனேஜ் மகனையோ மகளையோ அவர்கள் அறையில் 'எக்கச்சக்கமான' நிலையில் பார்க்க நேர்ந்தால் என்ன செய்வீர்கள்?
    • உங்கள் மதத்தை விடச் சிறந்தது என்று எந்த மதத்தைச் சொல்வீர்கள்?


கல்லூரி படிப்புக்குத் தயாராகிறாள் செல்ல மகள். தினம் ஒரு கல்லூரி விண்ணப்பம், நற்சான்றிதழ் என்று அலைகிறாள்.

அவசியமே இல்லாமல்.

சிறந்தவை என்றுக் கருதப்படும் இரண்டு கல்லூரிகளிலிருந்து முன்னிடத்துக்கான அனுமதியும் முன்பதிவுக்கான அழைப்பும் வந்திருக்கிறது. ஒன்றைத் தேர்ந்தெடுத்து ஜனவரி மாதம் பணம் கட்டினால் போதும். இவளோ இரண்டு கல்லூரிகளும் வேண்டாம் என்று அடம் பிடித்துப் பெற்றவர் நெஞ்சில் பால் வார்க்கிறாள். கொதிக்கக் கொதிக்க.

"ஏண்டீம்மா பொண்ணே.. அவனவள் இந்த யூனியில் இடம் கிடைக்க உசிரை விடுறப்ப, நீ வந்த இடத்தை வேணாங்கிறியே?" என்று கேட்டு முறைப்பையும் கடுப்பையும் பதிலாகப் பெற்று, "எல்லாம் நீ கொடுத்த இடம்" என்று நானும் மனைவியும் ஒருவரையொருவர் பழி சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

மகளுடன் அவள் விரும்பும் கல்லூரிச் சுற்றுலா சென்று வந்தேன். தனக்கு என்ன தேவை என்பதில் கவனமாகவும் தீர்மானமாகவும் இருக்கிறாள். இந்தப் பக்குவத்தை எனக்கு முப்பது வருடங்களுக்கு முன் இவள் சொல்லிக் கொடுத்திருக்கக் கூடாதோ?


ஸ்டேன்பர்டு பல்கலைக்கழக வளாகத்தில் இந்தப் போஸ்டரைப் பார்த்ததும் அதிர்ந்து போனேன்.

இந்த நிலைக்கு நம் பிள்ளைகள் பொறுப்பா? அல்லது நாமா? எதையோ தேடி, எதையோ துரத்தி, எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறோமா?


கமல் ஜோக்ஸ்.

வாடிக்கையாளர்: இந்தாப்பா.. 2014 காலென்டர் கொடு.
கடைக்காரக் கமல்: அய்யய்யோ.. மொத்தமே இருபத்திரண்டு காலென்டர் தாங்க இருக்குது கடையில.

செக்ரடரி வேலைக்கான இன்டர்வ்யூவில் கேள்வி: கமல், உங்களுக்கு மைக்ரோசாப்ட் ஆபீஸ் தெரியுமா?
கமல்: தெரியாதுங்க. அட்ரெஸ் சொன்னீங்கன்னா கண்டுபிடிச்சுடுவேன்.

ஆட்டோ மெகானிக் வேலைக்கான இன்டர்வ்யூவில் கேள்வி: இந்த மோட்டார் எப்படி ஓடுதுனு சொல்ல முடியுமா?
கமல்: க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்க்டக்க் க்க்ற்ற்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ர்ர்ர்ர்க்டக்க் ப்ர்ர்ர்ம்ம்ம்ம்..
இன்டர்வ்யூ: நிறுத்துபா நிறுத்துபா..
கமல்: க்ய்க்.. ப்ய்ய்ய்ய்ய்ம்.. டப்.
இன்டர்வ்யூ: என்னப்பா நீ?
கமல்: அதுவா.. சடன் ப்ரேக் போட்டா அப்படித்தான் ஆவும்.

கடைத்தெருவில் பக்கத்து வீட்டுக்காரர்:
    என்னப்பா கமல்.. இங்கே நிக்குறே? வீட்டுல உன் ப்ரண்டு உன் பெண்டாட்டியை கொஞ்சிட்டிருக்கான்.. சீக்கிரம் போவியா?!..
அவசரமாக வீடு சென்று திரும்பிய கமல், பக்கத்து வீட்டுக்காரரிடம்:
    பொய் சொல்லி என்னை விரட்டிட்டியே? அந்த ஆளு என் ப்ரண்டு இல்லே.. நான் முன்னே பின்னே பார்த்தது கூட கிடையாது.


விசித்திரமான கனவு. இறக்கும் தறுவாயில் பி.சுசீலா.

மயிலாப்பூர் ஆஸ்பத்திரியில் இருப்பதாகச் செய்தி கிடைத்ததும் ஓடிச் சென்று பார்க்கிறேன். மயிலாப்பூர் ஆஸ்பத்திரி போலவே இல்லை. மல்லேஸ்வரம் ஆஸ்பத்திரி போல இருக்கிறது. படுக்கையில் அமைதியாகப் படுத்திருக்கிறார் சுசீலா. வயதான பெண் டாக்டர் ஒருவர் அவசரமாக என்னைத் தடுத்து, "அவங்க தான் உங்களை பார்க்க விருப்பமில்லைனு சொல்லிட்டாங்களே, ஏன் தொந்தரவு தரீங்க? உங்களால அவருக்கு எத்தனை கஷ்டம் பாருங்க.." என்று வெளியே தள்ளுகிறார். "ப்லீஸ்" என்கிறேன்.

சுசீலா திடீரென்று விழித்து என்னை அருகே வரச் சொல்கிறார்.

அவர் பாடிய பாடல்களில் #1 என்று நான் கருதும், மிகவும் ரசிக்கும், கவிஞர்-மன்னர்-இயக்குனரின் அழகானக் கற்பனையில் அற்புதமாக வெளிப்பட்டு நிரந்தரமாக என் நெஞ்சில் இடம் பெற்றத் துள்ளல் பாடலை - என்னைப் பார்த்தபடி ஹம் செய்து சில வரிகளைப் பாடுகிறார். பிறகு என்னை மிக அருகே அழைத்து ஒரு கேள்வி கேட்கிறார். புன்னகையுடன் கண் மூடுகிறார்.

சுசீலா கேட்ட கேள்வி: உனக்கு மிகவும் பிடித்த பாட்டு இதானே?

காலையிலிருந்து நெஞ்சைப் பிழிகிறது கனவு.

25 கருத்துகள்:

  1. அடராமா.............. இதுக்குத்தான் கண்ட நேரத்தில் தூங்கக்கூடாது!

    பசங்க(பொண்களையும் சேர்த்துத்தான்) தெளிவா இருக்காங்கதான்.

    என் மகளின் மன உரம் கண்டு நான் திகைச்சு நின்னேன்.

    பதிலளிநீக்கு
  2. சுட்டியில் சுட்டி படிக்கிறேன் ... நன்றி...

    கமல் ஜோக்ஸ் ஹா... ஹா...

    கனவு கனவாக போகட்டும்...

    பதிலளிநீக்கு
  3. // என் வட்டத்து ஆட்கள் இன்னமும் கலந்து கொள்வது நிறைவாக இருந்தது. // உங்கள் வட்டத்தில் எங்களை சேர்த்துக் கொண்டது தான் எங்களுக்குக் கிடைத்த மகிழ்ச்சி :-)))

    ஆனாலும் உங்களுக்கு கமல் மேலயும் கடல் (படம்) மேலயும் என்ன பூர்வ ஜென்ம பகைன்னு
    தெரியலியே :-)))))))))) சுட்டி இருந்தால் கொடுக்கவும் GK வளர்க்க உதவியாய் இருக்கும் :-))))

    பதிலளிநீக்கு
  4. சுவாரசியமான சில சமயம்
    சிந்திக்க வைக்கும் பொழுதுபோக்கு.

    சாக்ரட்டீஸ் போல் யோசித்து, கடைசியில் கமல்ஹாசன் போல் பதில் சொன்னால் --ரசிக்கவைக்கிறது ..!

    பதிலளிநீக்கு
  5. பி சுசீலா என்ன பாட்டு பாடினாங்க அப்பாதுரை சார்?:)

    பதிலளிநீக்கு
  6. கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல என்று பாடியபடியே எழுந்து உட்கார்ந்துவிட்டார் சுசீலா.

    பசங்க நம்மைத் திகைக்க வைப்பதில் கைதேர்ந்தவர்கள்.

    பதிலளிநீக்கு
  7. இல்லை என்றால் யாருக்கு மாப்பிள்ளை யாரோ?
    கவலை வேண்டாம் .சுசிலாம்மா 100 வயது வரை இருப்பார்.
    கஷ்டப்படாமலும் இருப்பார்.
    அந்தக் குரலுக்கு மரணம் ஏது.

    பதிலளிநீக்கு
  8. மூன்றாம் சந்ததிக்கு முடியுமானால் ஒரு ஹலோ மட்டும்! சூப்பர் பவரே கிடைத்தபின் இன்னும் என்ன வேண்டும்? அன்றைய வேலைகளை அன்றே முடிக்கும் வரம்தான், வருட முடிவுக்குள் அல்ல, எப்போதும். பின்னோக்கிப் போகும் யந்திரத்தை உங்களுக்குப் பரிசளித்திட விருப்பம்; கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும். நோ புதிய தவறுகள்! நாளைய ஏமாற்றம் இன்றைய விளைவுதானே... அச்சுவடிவின் கடைசிப் பிரதியையும் மின்பதிப்பு எடுத்து விட்டு, வெயிட்டுக்குப் போட்டு பேரீச்சம் பழம் வாங்கி விடுவேன்! புத்திசாலித்தனம் இல்லாத எந்த செயலும் முட்டாள்தனம்தான்! என் பிள்ளைகள் குறைந்தபட்சம் வாழும்வரை வாழ விரும்புகிறேன். அப்புறம் என்ன ஆனாலும் எனக்குத் தெரியப் போவதில்லை! "கதவைச் சாத்தித் தாழிட கூடவா மறக்கும்? அதற்குள் என்ன அவசரம்?" என்று சுடச்சுடக் கேட்பேன். மதம் பிடிக்காத எம்மதமும் சம்மதம்!

    பதிலளிநீக்கு
  9. வல்லிம்மா.. முதல் பந்துலயே 160மீ சிக்சர் அடிச்சுட்டீங்களே! my goodness!

    பதிலளிநீக்கு
  10. மனதில் பட்டதை சட்டென சொன்னதற்கு நன்றி ஸ்ரீராம்.
    என் பதிவு சரித்திரத்தில் கேட்ட கேள்விக்கு நீங்க நேராக பதில் சொன்னது இதான் முதல் தடவைனு நினைக்கிறேன் - அதற்காக இன்னொரு ந. அதுலயும் ஒண்ணு ரெண்டு.. சரி வந்த வரைக்கும் லாபம்னு விட்டுறுவோம்.

    இன்னும் யார் என்ன பதில் சொல்றாங்கனு பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  11. கமலஹாஸன் ஜோக்ஸ் அருமை. இதாவது கற்பனை என்று கூறிவிடலாம். இந்த 'அதிமேதாவி' அண்மையில் அடித்த உண்மையான ஜோக் தெரியுமா? "விஸ்வரூபம்-2 படத்துக்கு மீண்டும் இடையூறு ஏற்பட்டால் கண்டிப்பாக வெளி நாடு சென்றுவிடுவேன்" என்று கூறினார். கவுண்டமணி கூறுவது போல, நாராயணா ! இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா சாமி!

    பதிலளிநீக்கு
  12. //நாளைய ஏமாற்றம் இன்றைய விளைவுதானே...//

    இந்த வரிகளில் எதிர்பார்ப்பு கூகிள் சதியால் விட்டுப் போய் விட்டது! 'நாளைய ஏமாற்றம் என்பது இன்றைய எதிர்பார்ப்பின் விளைவுதானே' என்றிருக்க வேண்டும். இப்போதுதான் கவனித்தேன்!

    //என் பதிவு சரித்திரத்தில் கேட்ட கேள்விக்கு நீங்க நேராக பதில் சொன்னது இதான்...//

    :)))))

    நம்ப முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  13. தனக்கு என்ன தேவை என்பதில் கவனமாகவும் தீர்மானமாகவும் இருக்கிறாள்.//
    அவர்கள் அப்படி இருப்பது நல்லது என்றே தோன்றுகிறது. நம் தீர்மானங்களை அவர்கள் விருப்பம் இல்லாமல் ஏற்றுக் கொண்டு பின் அது பிடிக்காமல் போய்விட்டால் வாழ்நாள் முழுவதும் நம்மிடம் உன்னால் தான் என்ற புலமபல் இருக்கும்.
    இப்போது உள்ள குழந்தைகள் மிகவும் கெட்டிக்காரர்கள். தங்களது விருப்பு, வெறுப்புகளை அழகாய் சொல்லி விடுகிறார்கள் முன்பே.

    பதிலளிநீக்கு
  14. பகிர்வு அருமை...
    கமல் ஜோக்ஸ் அருமை.

    பதிலளிநீக்கு
  15. 1.ஏதுமில்லை 2.பசிக்கு உணவிடும் சக்தி 3.ஏதுமில்லை. 4.பாட்டில் நீர்,ப்லாஸ்டிக் இல்லாத முப்பது ஆண்டுகளுக்கு முன்னால். 5.ஏமாற இனி ஒன்றுமில்லை. 6.முத்தமிட்டுக் கண்களில் ஒத்திக் கொள்வேன்.7.அறிவே முதன்மையானது என்ற எண்ணம்.8. ஆரோக்கியமான முதுமை வரை. 9. சிறிது திடுக்கிட்டு, கதவைச் சாத்துவேன்.கொஞ்சம் தண்ணீர் குடிப்பேன். 10.மதங்களைக் கடக்க முயல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. எல்லாமே beautiful சுந்தர்ஜி. 'அறிவே முதன்மையானது என்ற எண்ணம்' முத்திரை.

    பதிலளிநீக்கு
  17. எனக்குக் கிடைத்தப் பத்துக் கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன். மனதில் பட்டதை உடனே சுருக்கமாகச் சொல்ல வேண்டும்.//

    1. அடுத்த சந்ததிக்கே நாம் சொல்வதில், செய்வதில், நம்பிக்கை இல்லை. அப்படி இருக்கையில் மூன்றாவது சந்ததிக்கு என்று என்ன சொல்வது ? அப்படியும் சொல்லத்தான் வேண்டும் என்றால், அவரவர் வாழ்க்கையை அவரவர் முடிவு செய்ய வேண்டும். தம் முடிவுகளுக்கு பிறவற்றை பழி கூறலாகாது.

    2. அடுத்த நிமிஷம் அமேரிக்கா வந்து அப்பாதுரை தலையில்.........

    3. கிளம்பணும் . ஆல்ரெடி இட் இஸ் டூ லேட்.

    4. யூனி செல்லாக இருந்திருப்பேன் இல்லையா ஒரு கணத்தில்.. அங்கே.

    5.ஆவின் பால் ஸ்ட்ரைக் . நோ காபி.

    6. அது ஆத்துக்காரி அந்தக்காலத்துலே எழுதிய கடுதாசா இருக்குமோ என்று அவசரமாக பார்ப்பேன்.

    7. இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தருவது.

    8. போதும் என்றவரை வாழவேண்டும்.

    9. நம்ம செய்யாத முட்டாள்தனத்தை அவர்கள் செய்வதற்கு வாய்ப்பில்லை.

    10. என் மதத்தை மதம் என்று நான் நினைக்க வில்லை. இது ஒரு வே ஆப் லைப்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  18. After scoring good percentage in +2, when we (myself and spouse) were expecting that she would like to choose computer engineering in B.E., my daughter gave us a shock of telling us that she wanted to pursue her studies in psychology or English literature. But ultimately she changed her mind after we counseled her. Even though she is in last year, we do not have any hope that she may go for a job related to her studies.

    பதிலளிநீக்கு
  19. 10Q பதில்களுக்கு நன்றி சூரி சார்.
    6,9 மிகவும் ரசித்தேன். 4 கொஞ்சம் ஆழமான பதில்.
    10Q சந்திப்பில் இந்தக் கேள்வி சிலருக்கு வந்தது - அனேகமாக எல்லாருமே கொடுத்த பதில்: ஏசுவை சந்தித்துப் பேசுவதாகவோ, சிலுவையில் அறையப் போகும் ஆபத்து இருப்பதை அறிவிப்பதாகவோ, அமெரிக்க சுதந்திர சாசனம் கையெழுத்திடப்படுவதைப் பார்ப்பதாகவோ..

    பதிலளிநீக்கு
  20. //she wanted to pursue her studies in psychology or English literature.

    brave child. she would have done extremely well in psychology (the most challenging, satisfying and lucrative medical field of the future). i hope she still has the courage to pursue :)

    in my view, computer or allopathic medical science seems to the preferred choice of most parents in india. i also find it sad that parents have the means to impose their choice on their children. as parents, a lot of us tend to live the life we didn't get - vicariously through our children.

    பதிலளிநீக்கு
  21. :விஸ்வ2 படத்துக்கு இடையூறு ஏற்பட்டால் கண்டிப்பாக வெளிநாடு சென்றுவிடுவேன்... (டிகெட் வாங்க யாராவது கடன் கொடுத்தால்)

    ***
    :என்ன இந்த ஆளு சும்மா வெளிநாடு போய் செடில் ஆவுறதா சொல்லிட்டிருக்காரே..
    :அட, நீங்க வேறே.. தமிழ்நாட்டு ஜனங்க என்ன அத்தனை அதிர்ஷ்டசாலிங்கனு நெனச்சீங்களா?

    ***
    :மேடம்.. விஸ்வ2 படத்துக்கு இடையூறு செஞ்சா வெளிநாடு போவுறதா..
    :ஷ்! சும்மா இருயா. அந்தமான் பக்கத்துல ஒரு தீவு இருக்குது. இந்தாளு எந்த ப்ளேன்ல டிகெட் வாங்குறாருன்றத மட்டும் தெரிஞ்சுகிட்டு வந்து சொல்லு.

    ***
    தலைப்புச் செய்திகள்.
    விஸ்வ2 படத்துக்கு தமிழ்நாட்டிலோ இந்தியாவிலோ அல்லது உலகின் எந்த நாட்டிலும் எந்தவித இடையூறும் செய்யக் கூடாது என்று ஐநா சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இரண்டு காட்சிகளில் இலவசமாக நடித்துக் கொடுப்பதாக அமெரிக்க அதிபர் ஒபாமா வாக்குறுதி அளித்தார். டூயட் பாடவும் தயாராக இருப்பதாக ஜெர்மனி அதிபர் மெர்கல் அறிவித்தார். "படம் இடையூறில்லாமல் வந்தால் போதும், அதற்காக ஒரு குத்தாட்டம் ஆடி உதவுவேன்" என்று இங்கிலாந்து ராணி எலிசபெத் பிரமாணம் செய்தார்.

    ***
    விஸ்வ2 படத்துக்கு இடையூறு ஏற்படாம இருக்கணும்னு வேண்டிக்குங்க expatguru :) இல்லின்னா தமிழ்நாட்டில் மையம் கொண்டு பிசுபிசுத்து அனேகமாக துபாய் பக்கம் இறங்கும் பயல் i mean புயல்.

    ***
    மோடிக்கு விசா தரக் கூடாதுனு ஒரு கூட்டம் கெளம்பிச்சாமே? என்ன செஞ்சாங்க, யாருக்கு லெட்டர் போட்டாங்கனு விவரம் கண்டுபிடிக்கணும்.ஒரு சமயத்துக்கு உதவும் பாருங்க:)

    பதிலளிநீக்கு
  22. While reading your Question No.9 of this post, it reminded me of one incident which occurred in my work place before 23 years. When I was busy working in my desk, one of my colleagues came rushing to me and said, “ Mohanbhai, I saw Mr. X and Mrs. Y of our office in an embracing position in the locker room when I went there to operate my locker; Immediately on seeing me, they got separated and I felt very embarrassed on seeing them like this. I simply asked my colleague:
    Embarrassment for whom; “for you or for them” and he got perplexed over this question.

    பதிலளிநீக்கு
  23. பத்து கேள்விகள் ரசிக்க வைக்கின்றன. சிந்திக்க வைக்கின்றன. நீங்கள் சொன்ன பதில்கள் என்ன .? பதில்கள் சரியாகக் கூறப் பட்டால் அவரைப் பற்றி ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.சரியா.? இருந்தாலும் கமலிடம் உங்கள் பிரியமே தனி. சுசீலாம்மாவின் அற்புதப் பாடல்கள் நிறையவே இருக்கின்றன. உங்கள் ரசனைக்கு ஏதுவாக எதையும் பாடி இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  24. நல்லா இருக்கு கேள்விகள் எல்லாம் பதில் யோசிக்கணும். :))) டக்குனு சொல்லணும்னா டக், டக், டக் இதான் பதில் கொடுக்கணும்

    கனவு கனவாகவே இருக்கட்டும். பி.சுசீலா நல்லாத் தான் இருக்காங்க. :))))

    பதிலளிநீக்கு