2010/08/05

ஆறுதல்



லோ... | எப்படி இருக்கே? | நல்லா இருக்கேன்? நீ எப்படி? | எனக்கென்ன குறை? என்னை விடு.. உன் மனைவி, பிள்ளைங்க நலமா?| நலம் | கால்வலி இப்போ போயிடுச்சா? | ம் | தலைவலி? | ம் | அதிகமா ஓடாதே, அடிக்கடி ஓய்வெடு, உழைச்சு ஓடாயிடாதே | ம், ம், ம் | ஒழுங்கா சாப்பிடுறியா? | சாப்பிடுறேன் | உடம்பைப் பாத்துக்க | சரி, உனக்கு உடம்பு சரியில்லாம இருந்துச்சே? | அதெல்லாம் சரியாயிடுச்சு.. என்னைப் பத்திக் கவலைப்படாதே, போற கட்டை | என்னைப் பத்தியும் கவலைப்படாதே | கவலைப்படாம எப்படி இருக்க முடியும்? அடிக்கடி போனாவது செய், சரியா? | சரி | முடியுறப்ப என்னை வந்து பாரு போதும், கஷ்டபடாம இரு | ம் | வச்சுடவா? | ம் | வச்சுடவா? | ம்.

அலோ... | எப்படி இருக்கே? | நல்லா இருக்கேன்? நீ எப்படி? | எனக்கென்ன குறை? என்னை விடு.. உன் மனைவி, பிள்ளைங்க நலமா?| நலம் | கால்வலி இப்போ போயிடுச்சா? | ம் | தலைவலி? | ம் | அதிகமா ஓடாதே, அடிக்கடி ஓய்வெடு, உழைச்சு ஓடாயிடாதே | ம், ம், ம் | ஒழுங்கா சாப்பிடுறியா? | சாப்பிடுறேன் | உடம்பைப் பாத்துக்க | சரி, உனக்கு உடம்பு சரியில்லாம இருந்துச்சே? | அதெல்லாம் சரியாயிடுச்சு.. என்னைப் பத்திக் கவலைப்படாதே, போற கட்டை | என்னைப் பத்தியும் கவலைப்படாதே | கவலைப்படாம எப்படி இருக்க முடியும்? அடிக்கடி போனாவது செய், சரியா? | சரி | முடியுறப்ப என்னை வந்து பாரு போதும், கஷ்டபடாம இரு | ம் | வச்சுடவா? | ம் | வச்சுடவா? | ம்.

அலோ... | எப்படி இருக்கே? | நல்லா இருக்கேன்? நீ எப்படி? | எனக்கென்ன குறை? என்னை விடு.. உன் மனைவி, பிள்ளைங்க நலமா?| நலம் | கால்வலி இப்போ போயிடுச்சா? | ம் | தலைவலி? | ம் | அதிகமா ஓடாதே, அடிக்கடி ஓய்வெடு, உழைச்சு ஓடாயிடாதே | ம், ம், ம் | ஒழுங்கா சாப்பிடுறியா? | சாப்பிடுறேன் | உடம்பைப் பாத்துக்க | சரி, உனக்கு உடம்பு சரியில்லாம இருந்துச்சே? | அதெல்லாம் சரியாயிடுச்சு.. என்னைப் பத்திக் கவலைப்படாதே, போற கட்டை | என்னைப் பத்தியும் கவலைப்படாதே | கவலைப்படாம எப்படி இருக்க முடியும்? அடிக்கடி போனாவது செய், சரியா? | சரி | முடியுறப்ப என்னை வந்து பாரு போதும், கஷ்டபடாம இரு | ம் | வச்சுடவா? | ம் | வச்சுடவா? | ம்.

சுழன்று சுழன்று | காரணமும் கருவும் கிடைக்காமல் சுழன்று சுழன்று சுழன்று சுழன்று இதே உரையாடல் | ஒவ்வொரு முறையும் தொலைபேசச் சலிக்கும் எனக்கு | சிலிர்க்கும் அம்மாவுக்கு.

மூன்று நிமிட ஆறுதல், பத்தே ரூபாய்.

20 கருத்துகள்:

  1. இப்படியெல்லாம் கூட கவிதை தர முடியுமா?... என வியந்து நிற்கிறேன் சார்...

    பதிலளிநீக்கு
  2. //முடியுறப்ப என்னை வந்து பாரு போதும், கஷ்டபடாம இரு //

    நிபந்தனையற்ற அன்பிலிருந்து வெளிப்படும் வார்த்தைகள். எதிர்பார்ப்பில்லாத அன்பு உறுதியாக கிடைப்பது தாயிடமிருந்து மட்டுமே.

    உரைக்கவிதைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. பாசமும் ஏக்கமும் வார்த்தைகளில்...

    பதிலளிநீக்கு
  4. அம்மா என்றாலே பாசம்தானே !

    பதிலளிநீக்கு
  5. துரை, கலக்கிட்டே.

    என்னால் உன்னையும் / உன் அம்மாவையும் வைத்து காட்சியை அசை போட வைக்கின்றது வரிகள். நான்காவது வார்த்தை "சாப்பிட்டாயா" விட்டு விட்டது.

    பதிலளிநீக்கு
  6. வித்யாசமா நல்லா இருக்கு.
    உண்பதிலும், உறங்குவதிலும் சில நேரம் சலிப்பு ஏற்பட்டாலும் ஒருநாளும் தவிர்க்க முடிவதில்லை. அதுபோலத்தான் மனதிற்கு மிக நெருக்கமான ஒன்றிரண்டு உறவுகள். இந்த ஒன்றிரண்டு உறவிலும் சில நேரம் சலிப்பு கண்டு, தவிர்க்க நினைத்தால் பிறகு வாழ்கையில் எதற்குமே மதிப்பில்லை. வாழ்வதே வீண்தான்.

    பதிலளிநீக்கு
  7. நன்றி பத்மநாபன்; நீங்க சொல்றது சரி; எதிர்பார்ப்பே இல்லாத அன்பு தாயன்பு. என்னுடைய அம்மா 'போன் கூட முடிஞ்சா பண்ணு போதும்'னு சொல்றவங்க.

    பதிலளிநீக்கு
  8. இதையும் கவிதைனு ஏத்துக்கிட்டீங்களே கே.ஆர்.பி.செந்தில்; நன்றி.

    பதிலளிநீக்கு
  9. வருகைக்கு நன்றி சாய்ராம், ஹேமா, ஸ்ரீராம், ம்ம்ம்... குறிப்பாக உஜிலாதேவி.

    பதிலளிநீக்கு
  10. /உண்பதிலும், உறங்குவதிலும் சில நேரம் சலிப்பு ஏற்பட்டாலும் ஒருநாளும் தவிர்க்க முடிவதில்லை./

    :) meenakshi
    சாப்பாட்டையும் தூக்கத்தையும் விட முடியுங்களா?

    பதிலளிநீக்கு
  11. //அப்பாதுரை சொன்னது…

    :) meenakshi

    சாப்பாட்டையும் தூக்கத்தையும் விட முடியுங்களா? //

    துரை, அவுங்க - அவங்களோட சமையலை சொல்லறாங்க ?

    காபி வேண்டுமா உனக்கு ?

    - சாய்

    பதிலளிநீக்கு
  12. யதார்த்தம் மனதைப் பிழிகிறது.......ஐயா....ஓ..அவீங்களா......நீங்க...சரிங்கோ...

    பதிலளிநீக்கு
  13. தினம் தினம் நானும் இந்த ரொடீனில் மூழ்கி மூழ்கி எழுந்திருக்கிறேன்;)
    பேசாமலும் இருக்க முடியாது.அவங்களுக்கு நேரமும் கம்மி.அப்படி சொன்ன நேரத்தில் போன் வரலைன்னால்,நான் செய்துவிடுவேன்:)

    பதிலளிநீக்கு
  14. ஓ. சாப்பிட்டியான்னு கேட்காமல் இருக்கவே முடியாது:)என்னவோ ப்ளேன்ல ஏறிப் போய்த் தட்டில் சாப்பாடு போடப் போவது மாதிரி ஒரு முனைப்பு.
    அழகான யதார்த்தம் உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
  15. வாங்க, வல்லிசிம்ஹன். //சொன்ன நேரத்தில் போன் வரலைன்னால்,நான் செய்துவிடுவேன்:)//
    தாயோட தவிப்பும் சிலிர்ப்பும் தாய்க்குத் தானே தெரியும்?

    சாப்பிட்டியா என்று கேட்டாலே எனக்கு எரிச்சல் வரும்; அதனால் என் அம்மா சகோதரிகள் யாருமே என்னை சாப்பிட்டியா என்று கேட்பதில்லை; அம்மா சாமர்த்தியமா 'சாப்பிடுறியா ஒழுங்கா' என்று கேட்கத் தொடங்கியிருக்கிறார் :)

    பதிலளிநீக்கு
  16. நீங்கள் என தளத்தில் பின்னூட்டம் இட்ட பிறகு தான் உங்கள் பதிவுகளைப் பார்த்தேன். மென்மையான,ஆனால்
    இதயத்தில் கனம் சேர்த்த கவிதை.நன்று
    மோகன்ஜி ,ஹைதராபாத்

    பதிலளிநீக்கு
  17. //ஒவ்வொரு முறையும் தொலைபேசச் சலிக்கும் எனக்கு | சிலிர்க்கும் அம்மாவுக்கு.
    மூன்று நிமிட ஆறுதல், பத்தே ரூபாய்.//

    நிஜம்மாத்தான் சொல்றீங்களா .....
    நகர மனிதன் குறித்த விமர்சனம்னு எடுத்துக்கனுமோ என்னவோ ...எனக்குத் தெரியலை ...

    பதிலளிநீக்கு
  18. Geetha Ravichandranஆகஸ்ட் 24, 2010

    கீதா கபேக்கு வருகை தந்ததற்கும் உங்கள் கருத்துக்கும் மிக்க நன்றி. ப்ளாக் உலகுக்கு நான் புதிது. இப்பொழுது தான் explore செய்ய ஆரம்பித்துள்ளேன். உங்கள் கவிதை மிக அருமை. ஒரு அழைப்பிலேயே ஓராயிரம் பாச மழை பொழியும் தாய்க்கு ஈடு எவரும் இல்லை இப்புவியில். At this point I would like to share my personal experience. Every week I call my parents and talk. I make my daughter also to talk to them. Infact compel her to talk. it is the same monotonous way of enquiry. "Hello thaatha how r u? how is everyone? can I give it to amma?" My dad jokingly tells "instead of making her talk the same way everytime why don't you record the message and play it. " Still they find joy in hearing atleast the voice. That is wat true love is.

    பதிலளிநீக்கு
  19. well said, Geetha. life needs these monotonous moments..

    அன்பிற்குமுண்டோ அரைத்த மாவ்? :)

    பதிலளிநீக்கு