2010/01/07

ட்டிக் ட்டிக் விதை
மோகத்தை ஒடுக்கச்சொன்ன
முனிவன் மனைவிக்கு
மூன்று சக்களத்தி.

அகம் பிரம்மாஸ்மி. இனி
அடுத்தக் கோவிலில்
அங்கப்பிரதட்சிணம்.

தடுக்கி விழுந்து நெற்றியிலடிபட்ட
கல்லை எறியப் போனால்
ஐயோ, சிவலிங்கம்.

ஆசை கோபத்தைக் கட்டச்சொல்லும் காவிவேட்டிக்காரனுக்கு
கடனில்லை குடும்பம் வாடகை வயோதிகப் பெற்றோரில்லை
வேளைக்குச் சோறு பாதபூசை ஆமாஞ்சாமிக் கூட்டம்.
ஓத்தா டேய்!

கொலைகாரப் பாவிக்கு மரண தண்டனை
ஆயுள் தண்டனை
குடும்பஸ்தனுக்கு.

இறந்துபோன
மனைவியின் நினைவில்
சிறையிலிருக்கும் கொலைகாரக் கணவன்.

அம்மா வீடு எங்கே?
இன்னும் கொஞ்ச தூரம்.
அம்மா வீடு, என்றும் அமைதி.

அனுபவத்துக்கும்
தத்துவத்துக்கும்
இரண்டு தலைமுறை இடைவெளி.

எல்லோரும் விழித்திருக்க
அயர்ந்து உறங்குகிறான்
குறட்டை மகான்.

அம்மா அப்பா சம்மதிக்க வேண்டும், இல்லை
கணவன் மனைவி சம்மதிக்க வேண்டும் - இந்தக்
காதல் பெருந்தொல்லை.

சந்தக்காரி அறியாமல் விட்ட
ட்டிக் ட்டிக் விதை
என் காதல்.

7 கருத்துகள்:

 1. அப்பா,முதலாவதும் மூணாவதும் கருத்துப் புரிஞ்சு நல்லாவேயிருக்கு.

  பதிலளிநீக்கு
 2. எல்லாமே நச்...நச்சுன்னு இருக்குங்க...

  பதிலளிநீக்கு
 3. குட்டிக் கவிதை! நல்லா இருக்கு.

  //அனுபவத்துக்கும் தத்வத்துக்கும் இரண்டு தலைமுறை இடைவெளி//
  இது தத்துவம் மாதிரி இருக்கே, அனுபவம் இல்லாத தத்துவமா!
  இரண்டாவது எனக்கு ரொம்ப பிடிச்சது.

  காதலுக்கு பெத்த குழந்தைங்கள் சம்மதம் வேண்டும்னு ஒருத்தர் படமே எடுத்திருக்கார். வசந்த் இயக்கிய 'கேளடி கண்மணி' படம் இந்த சப்ஜெக்ட்தான்.

  பதிலளிநீக்கு
 4. I like all of your haikus; last one just tops.
  Refreshing and impressive.

  பதிலளிநீக்கு
 5. நல்ல கலர்களில் நறுக்குன்னு எழுதி இருந்தாலும் ஒத்தை வார்த்தை தவிர்த்திருக்கலாம். அழகிய presentation.

  பதிலளிநீக்கு
 6. ஹேமா துவாரகநாத்ஜனவரி 08, 2010

  சுவையான ஹைகூ படித்து ரொம்ப நாளாகிறது. நன்று.

  பதிலளிநீக்கு