2013/06/24

இதுவும் காதல்



    காந்தி நகர் பஸ் நிலையத்தில் கூட்டம் சேரத் தொடங்கியிருந்தது. பிற்பகல் வேளைக்கு சற்று அதிகமான கூட்டம். அவ்வப்போது காலனிக்குள்ளிருந்து வந்து போன ஒன்றிரண்டு லூனாவைத் தவிர அதிகம் போக்குவரத்து இல்லை. வெயில் தகித்தது. கிழிந்து தொங்கிய சுவரோர சினிமா போஸ்டர் ஒன்றில் ஐ.வி.சசி என்பது மட்டும் தெரிந்தது. எதிரே ரிகரி போர்ட் தொங்கிய டீக்கடை ரேடியோவில் ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி அலறியது. எதையும் பொருட்படுத்தாத எருமை மாடு ஒன்று பஸ் நிலைய நிழலில் படுத்திருந்தது.

வந்தனா பதட்டத்தை அடக்கிக் காத்திருந்தாள். பஸ் வரணுமே! சாலிடேரில் வேலை பார்த்த வந்தனாவை அன்று மாலை பெண் பார்க்க வருகிறார்கள். லீவ் கிடைக்காமல் அரை நாள் வேலைக்குப் போனவள், மதியம் கிளம்பி, கிண்டிக்கு பஸ் பிடிக்கக் காத்திருந்தாள். வீட்டுக்குப் போய், குளித்து, புடவை நகை அணிந்து, நாலு மணிக்குள் தயாராக வேண்டும்.

மனவாடு ராஜ்குமார் அமைதியாகக் காத்திருந்தான். ஐஐடியில் வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதமாகிறது. அன்று மாலை பெண் பார்க்கப் போகிறான். ஆலந்தூரில் ஒரு ரெட்டிக் குடும்பத்தில் எப்படியோ வரன் பிடித்து வந்திருந்த அம்மாவுடன் கிளம்பி, கிண்டிக்கு பஸ் பிடிக்கக் காத்திருந்தான்.

ராஜ்குமார் நோக்கினான். வந்தனாவும் நோக்கினாள். காத்திருந்த கண்கள் ஒரு கணம் சந்தித்து நின்றன.

சில நிமிடங்களில் வண்டி வந்தது. கூட்டமோ கூட்டம். நிற்காமலே போய்விட்டது. அடுத்து வந்த மூன்று பஸ்களும் அப்படியே. பிறகு முக்கால் மணி நேரத்துக்கு ஒரு பஸ் கூட வரவில்லை. அரைமணி முன்பு வந்த இரண்டு ஆட்டோக்களையும் தவிர்த்தது தவறோ என்று நினைக்கத் தொடங்கினான் ராஜ்.

இருந்திருந்து ஒரு ஆட்டோ வர, வந்தனா துணிச்சலுடன் அதை நிறுத்த முயலுகையில் ராஜ்குமாரின் அம்மா முந்திவிட்டார். "ஆலந்தூர்" என்று ஊர்ப்பெயரைச் சொல்ல, ஆட்டோக்காரன் நக்கலாகச் சிரித்துக் கொண்டே கிளம்பிப் போனான். "மதராஸ்வாளு அந்தரு அரவாளு.. தொங்கரு" என்றுச் சலித்துக் கொண்டார் அம்மா.

வந்தனா கலங்கியதைக் கண்ட ராஜ், "நீங்க அவசரமா போவணுமா?" என்றான்.

"பழவந்தாங்கல். பெண் பார்க்க வராங்க. பஸ் காணோம். லேட்டாயிடுச்சு" என்றாள் வந்தனா தந்திமொழியில்.

"ஏமாயிந்தி அம்மயிகி..?" என்று விசாரித்த அம்மாவுக்கு வந்தனாவின் நிலையை விளக்கினான் ராஜ். ஏனோ தெரியவில்லை, அம்மாவுக்குக் குளிர்ந்து போனது. "பாகுன்னாலமா நுவ்வு.." என்று தெருவிலே பொதுவில் வந்தனாவின் முகத்தை வாஞ்சையுடன் கைகளால் சுற்றி நெட்டி முறித்தார். ராஜிடம் அவசரமாகத் தெலுங்கில் சுந்தரமாக ஏதோ சொன்னார்.

ராஜ்குமார் சற்று வெட்கத்துடன், "மேடம்.. நாங்க ஆலந்தூர் போறோம். நானும் பெண் பார்க்கத்தான் போறேன்" என்றான். "உங்களுக்கு சம்மதம்னா கூட வாங்க. உங்களை வீட்ல விட்டுப் போவலாம்னு அம்மா சொல்லச் சொன்னாங்க.. பயப்படாம வாங்க.. நீங்க மகாலட்சுமி மாதிரி நேரில் வந்தது நல்ல சகுனம்னு நம்புறாங்க"

"அவுனம்மா.." பண்புடன் சிரித்தார் அம்மா. திகைத்த வந்தனா, புன்னகையால் நன்றி சொன்னாள்.

அடுத்தப் பதினைந்து நிமிடங்களில் காந்தி நகரிலிருந்து ஒரு டேக்சியைப் பிடித்து வந்தான் ராஜ்குமார். தயக்கமும் தவிப்பும் கலந்த உணர்வுடன் பின்னிருக்கையில் அம்மாவுடன் அமர்ந்தாள் வந்தனா.

வழியெங்கும் அம்மாவும் பிள்ளையும் தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தார்கள். டிரைவர் அருகே ராஜ்குமார் உட்கார்ந்திருந்த காரணத்தால் இவர்களை நோக்கிச் சற்றுத் திரும்பிப் பேச வேண்டியிருந்தது. அவ்வப்போது வந்தனாவுடனும் தமிழில் பேசி மாப்பிள்ளை பார்ப்பது பற்றி பண்புடன் கேலி செய்தான். பழவந்தாங்கல் வந்தது தெரியவில்லை.

வந்தனாவைப் அவள் வீட்டில் இறக்கி விட்டான். வழியில் வாங்கிய ஒரு கூடை மல்லிகைப்பூவை அப்படியே வந்தனா வீட்டில் கொடுத்தார் ராஜ்குமாரின் அம்மா. ஆளாளுக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டார்கள். முகம் முழுதும் புன்னகையுடன் ஆசி வழங்கி, மகனுடன் ஆலந்தூர் கிளம்பத் தயாரானார் ராஜ்குமாரின் அம்மா.

"நீங்க வண்டிச்சத்தமாவது வாங்கிக்கணும்..", வந்தனாவின் அப்பா வற்புறுத்தினார். தன் அப்பாவிடம் இருபது ரூபாய் வாங்கி ராஜ்குமாரிடம் கொடுத்த வந்தனா, "சார்.. தயவுசெஞ்சு வாங்கிக்குங்க.. இல்லின்னா எங்கப்பாவுக்கு மனசு தாங்காது" என்றாள். தன் பெற்றோருடன் வாசல் வரை வந்து வழியனுப்பிய வந்தனா, ராஜ்குமாரிடம் "ரொம்ப தேங்க்ஸ்" என்று உரக்கச் சொல்லிக்கொண்டு வந்தாள். "எதுக்குங்க இத்தனை தேங்க்ஸ்?" என்று கூச்சப்பட்ட ராஜ்குமார் வண்டியருகே வந்ததும், வந்தனா மென்மையாக, "மிஸ்டர் ராஜ், உங்கம்மாவுக்கு தமிழ் தெரியாது. ஆனா எனக்கு தெலுங்கு நல்லா தெரியும். பஸ் ஸ்டேன்ட்லயும் வழியிலயும் நீங்க பேசினதெல்லாம் கேட்டேன். நீங்க நல்ல மனுஷங்க. அதுக்குத்தான் இத்தனை தேங்க்ஸ்" என்றாள்.

திடுக்கிட்டதை சாமர்த்தியமாக மறைத்த ராஜ், "ரொம்ப நன்றி வந்தனா. உங்க மனம் போல் வாழ்வு அமைய எங்க வாழ்த்துக்கள்" என்றபடி தன் அம்மாவுக்கு வண்டியேற உதவினான்.

உள்ளே வந்ததும் வந்தனாவின் அம்மா, "வந்தனா.. என்ன சொன்னே அந்தாளு கிட்டே.. என்ன பேசிக்கிட்டாங்க தெலுங்குல?" என்றார்.

"ஷ்!" என்று செல்லமாக அதட்டிய வந்தனா, "அம்மா.. உன் பொண்ணு எவ்ளோ அழகா இருக்கானு அந்தம்மா தன் பையன் கிட்டே வழியெல்லாம் சொல்லிட்டே வந்தார்.. அதான்" என்று லேசாகச் சிரித்தாள். வழியில் அவர்கள் பேசியதைச் சுருக்கமாகச் சொன்னாள்.

"உனக்கென்னடி ராஜாத்தி.." என்றார் வந்தனாவின் அம்மா. "ம்ம்ம்.. அந்தப் பையனும் மகாராஜாவாட்டம் தான் இருக்கான்.. ஆனா வேறே ஜாதியாப் போச்சே?!" என்றவர், கணவர் வருவதைப் பார்த்ததும் அடங்கி, "வந்தனா.. குளிச்சு ரெடியாகு சீக்கிரம்" என்று சமையலறைக்குள் மறைந்தார். புன்சிரிப்புடன் குளிக்கப் போன வந்தனா, கடந்த இரண்டு மணி நேர நினைவுகளையும் கழுவத் தொடங்கினாள்.

    வண்டி மீனம்பாக்கம் கடந்ததும் அம்மாவிடம், "அம்மா.. அந்தப் பெண்ணுக்கு தெலுங்கு நல்லா வருமாம். நாம பேசினது, நான் எங்கே பேசினேன், நீ வழியெல்லாம் எங்கிட்டே சொன்னது அவளுக்கு தெரிஞ்சு போச்சு.. எத்தனை அவமானம்!" என்றான் ராஜ்குமார்.

"எந்துகு? அந்தப் பொண்ணு அழகா லட்சுமிகரமா இருக்குறா, நம்ம குலதெய்வம் மங்களாம்பிகா போல இருக்குறானு தானே சொன்னேன்?"

"இந்தப் பெண்ணுக்கு யார் புருஷன்னு எழுதியிருக்குதோ? உனக்குப் பாக்கப் போற பெண்ணு எப்படியோனு வேறே சலிச்சுக்கிட்டியே..?"

"அதனால என்ன ராஜு? அந்தப் பெண்ணையோ, உன்னையோ, இப்ப நாம பாக்கப் போற பொண்ணையோ தப்பா சொல்லலியே? என்னவோ அந்தப் பெண்ணைப் பாத்ததும் எனக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு.. அவ என் மருமகளா வரக்கூடாதானு ஆசை வந்துருச்சு.. அது தப்பா?"

"இல்லம்மா.. நீ ஆசைப்பட்டதுல தப்பே இல்லே.. ஆனா.."

"ஆனா லேது பானா லேது.. கம்முன்டுரா" என்று அடக்கினார் அம்மா. "போனி.. அதான் நாம பாக்க போற பொண்ணோட போட்டோ பாத்திருக்கமே? நேரில எப்படி இருப்பாளோனு எப்படி நடந்துக்குவாளோனு அப்படி சொன்னேன்.. தப்பாயிருந்தா மன்னிச்சுக்கப்பா.."

"அதில்லம்மா.. அந்தப் பெண்ணு நம்ம பேச்சையெல்லாம் கேட்டுக்கிட்டிருந்தான்றது.. தெலுங்கு தெரியும்னு அவ நம்ம கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாமோனு கூட தோணுது.. இருந்தாலும் இது ரொம்ப சங்கடமா போயிருச்சுமா.."

"நீ கூடத்தானே அந்தப் பொண்ணு அழகா இருக்கானு சொன்னே? அதைக் கூடத்தானே அவ கேட்டிருப்பா?"

"ஆமாம்.. அதான் சங்கடம்னு சொன்னனே?". சிரித்தார்கள்.

    ஆலந்தூர் பெண்ணைப் பார்த்துவிட்டுத் திரும்பும் பொழுது மணி ஏழிருக்கும். கிண்டி வரும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை.

"ஏன்ரா.. பெண்ணு பிடிச்சிருக்கில்லே?" என்றார் அம்மா.

"உனக்கு?"

"ஏன்ரா.. நானா கல்யாணம் செஞ்சுக்குறேன்? உனக்கு பிடிச்சிருக்கா?"

ராஜ் பதிலேதும் சொல்லவில்லை. சிறிது நேரம் பொறுத்து ராஜின் தோளை ஆதரவாக மெள்ளத் தொட்டார் அம்மா. "ராஜூ.. உன் மனசுல என்ன ஓடுதுனு எனக்குத் தெரியும்டா"

"நான் நினைக்கறதைத் தான் நீயும் நினைக்கிறியாம்மா?"

அம்மா புன்னகைத்தார்.

"எனக்கு இந்தப் பெண் பிடிச்சிருக்குனு பொய் சொல்ல விரும்பலமா. அப்படி சொன்னா இந்தப் பெண்ணுக்குத் துரோகம் செய்யுறாப்புலாவும். என் மனசுல அந்தப் பொண்ணு, வந்தனா, அவளே சுத்தி சுத்தி வரா. பெண் பார்க்குறப்ப கூட.. அவ முகத்தைத்தான் பார்த்தேன்.. எனக்கே கொஞ்சம் அசிங்கமா இருக்குமா.."

"உன் மனசுக்கு விருப்பம் போல நடந்துக்கப்பா, அதுதான் சரி. அந்தப் பெண்ணை மனசுல நெனச்சுட்டு இந்தப் பெண் வாழ்க்கையோட விளையாடக் கூடாதுனு நீ நெனச்சது எனக்கு ரொம்பப் பெருமையா இருக்குப்பா.." என்ற அம்மாவின் கண்கள் லேசாகப் பனித்தன. "ராஜூ.. உனக்கு அந்தப் பெண்.. வந்தனாவைப் பிடிக்குதுனா.. நாம போய் கேட்டுப் பார்ப்போமா?"

"அதெப்படிமா.. அவங்க தமிழாளுங்க.. நாம தெலுங்கு.. வேறே ஜாதி.. வேறே கலாசாரம்.. பரம்பரை.. இதெல்லாம் எப்படி ஏத்துக்குவாங்க?"

"ஜாதி பரம்பரை கலாசாரம் எல்லாத்தியும் கொளுத்திப் போடுவோம் அடுத்த சங்க்ராந்தியப்போ. உனக்கு அந்தப் பெண்ணைப் பிடிச்சிருக்கு. அந்தப் பெண்ணுக்கும் உன்னைப் பிடிச்சிருந்தா எதுவுமே தேவையில்லே.. வாழ்க்கைலே சந்தோஷம் முக்கியம். அந்தப் பெண்ணைப் பத்திப் பேசுறப்பவே உன் கண்ணு திருப்பதி லட்டாட்டம் பெரிசாவுதே?" என்ற அம்மா, வண்டியை நிறுத்தச் சொன்னார். "வண்டியை முன்ன போனமே, பழவந்தாங்கல்லோ, அந்த வீட்டுக்கு ஓட்டிப் போ" என்றார்.

"என்னம்மா இது.. என்ன செய்யுறே?"

"என் மருமகளைப் பாக்கப் போறேன்"

அம்மாவின் துணிச்சலைக் கண்டு திகைத்தான் ராஜ். "உன்னை மாதிரி எனக்கொரு அம்மா கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியலேமா"

"வந்தனா போல ஒரு மருமகள் கிடைக்க நான் எதுனா புண்ணியம் செஞ்சிருக்கனா தெரியலியே ராஜூ? என்னோட செல்ல மகன் அவளைப் பத்தி சும்மா கனவு கண்டுட்டிருந்தா எப்படி? நேரில பாத்து இன்னிக்கே பேசி முடிச்சுடலாம்" என்று மகனைத் தட்டிக் கொடுத்தார் அம்மா.

வந்தனா தன்னை ஏற்க வேண்டுமே என்ற ஆசையும் ஏக்கமும் கலந்த எதிர்பார்ப்புடன் அம்மாவுக்கு நன்றி சொன்னான் ராஜ். வண்டி ஊர்ந்து செல்வது போல் தோன்றியதால் லேசான எரிச்சல் வந்ததை உணர்ந்து சிரித்துக் கொண்டான். "வந்தனா" என்று மனதுள் சொல்லிப் பார்த்தான்.

    அப்பொழுது தான் சாப்பாடு முடிந்து அன்றைய மாலையின் விவரங்களை அலசத் தொடங்கியிருந்தது வந்தனாவின் குடும்பம். வாசலில் வண்டி வந்து நிற்பதைப் பார்த்த வந்தனாவின் தம்பி உள்ளே ஓடி வந்தான். "அம்மா.. அந்த கொல்டி ஆளு அம்மாவோட மறுபடி வரான்.."

"சும்மா இருடா ப்ரூட்" என்ற வந்தனா, "அப்பா.. அவங்க கதவைத் தட்டுறாங்க" என்றாள்.

"நீங்கள்ளாம் உள்ளே போங்க" என்றபடி அவசரமாக ஒரு சட்டையை அணிந்து வாசல் கதவைத் திறந்து வரவேற்றார் வந்தனாவின் அப்பா. "வாங்க.. எதுனா மறந்துட்டீங்களா? இப்படி உட்காருங்க" என்றபடி வாசலறை சோபாவைச் சுட்டினார்.

"இல்லே.. மறக்கக் கூடாதுனு தானே வந்திருக்கோம்?" என்றபடி ஒரு கூடை பழமும் பூவும் கொடுத்தார் ராஜின் அம்மா. வசதியாக அமர்ந்து, மகனின் உதவியுடன் வந்த விவரத்தைச் சொன்னார்.

வந்தனா அப்பாவின் முகத்தில் ஆச்சரியத்திலிருந்து கோபம் வரை அத்தனை உணர்வுகளும் மின்னலாய் வந்து போயின. உள்ளே இதைக் கேட்டுக்கொண்டிருந்த வந்தனாவின் முகத்தில் கோபத்திலிருந்து ஆச்சரியம் வரை அத்தனை உணர்வுகளும் மின்னலாய் வந்து போயின. வந்தனா அம்மாவின் முகத்தில் சந்தோஷம் மட்டும் வந்து போனது. 'அப்பா என்ன சொல்லப் போகிறார்?!' என்று தவித்தார்கள்.

"வந்து.." என்றார் வந்தனாவின் அப்பா. "என் பொண்ணை நீங்க பிடிச்சிருக்குனு சொன்னது சந்தோஷம்.. ஆனா இந்தக் கல்யாணம் எப்படி.."

"ஐயா.. உங்க பெண்ணுக்குப் பிடிச்சிருக்கானு ஒரு வார்த்தை முதல்ல கேட்டுருங்களேன்.." என்றான் ராஜ்.

"எம் பொண்ணை பத்தி எனக்குத் தெரியும்" என்று அமைதியாகச் சொன்னாலும் வந்தனா அப்பாவின் குரல் ஆத்திரத்தில் நடுங்கியது.

"ஐயா" என்றார் வந்தனாவின் அம்மா. "நாங்க வேறே மொழி.. வேறே ஜாதி.. வேறே கலாசாரம்.. எல்லாம் இருக்கலாம்.. ஆனா வேறே மனுஷங்க இல்லே.. நீங்க நாங்க எல்லாரும் அதே சாமியைத்தான் கும்பிடுறோம்.. அதே சாப்பாட்டைத்தான் சாப்பிடுறோம்.. அதே ரத்தம் அதே சதை அதே உணர்வு.. எல்லாம் ஒண்ணுதானே? வந்தனா என் மருமகளா வர நான் தான் கொடுத்து வச்சிருக்கணும்.. என் பையன் நல்லா படிச்சவன், பெரிய வேலை. நாளைக்கு நல்லா வருவான். உங்க பெண்ணும் அவனும் ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க.. அதோ அந்தப் படத்துல இருக்காங்களே ஸ்ரீனிவாசனும் தாயாருமாட்டம் இருப்பாங்க.. பெரியவங்க நாமதான் நடத்தி வைக்கணும்"

வந்தனாவின் அப்பா சட்டென்று, "இல்லிங்க.. இது நடக்காது" என்றார்.

"ஐயா.. அப்படிச் சொல்லாதீங்க" ராஜ்குமார் அம்மாவின் குரல் கெஞ்சியது. "உங்கப் பொண்ணைக் கேட்டுச் சொல்லுங்க.. எனக்கு புருஷன் இல்லே.. ஒரே மகன்.. அத்தனை சொத்தும் சுகமும் இருக்கு.. இதை வச்சுக்கிட்டு என் பையனுக்கு என்னால தர முடியாத மன நிம்மதியை ஒரு பார்வையிலயோ புன்சிரிப்புலயோ உங்க பெண் தினமும் தர முடியும்.. உங்க பெண்ணுக்கு என் பையனைப் பிடிக்கலின்னா வேணாம்.. ஆனா அவங்க ரெண்டு பேருக்கிடையில அன்பிருந்தா அதை நாம தடை செய்ய வேண்டாம்.. தயவுசெஞ்சு கொஞ்சம் யோசனை பண்ணிச் சொல்லுங்க.. ஜாதியெல்லாம் பாக்காதிங்க"

வந்தனாவின் அப்பா அமைதியாக, "அப்படி எதுவும் கேட்க வேண்டியதில்லிங்க...ஜாதியெல்லாம் பார்க்கலே. இன்னிக்கு சாயந்திரம் பெண் பார்க்க வந்தவங்களுக்கு வந்தனாவைப் பிடிச்சுப் போச்சு. நாங்க வெத்திலை பாக்கு மாத்திக்க சம்மதிச்சுட்டோம். தயவுசெய்து இந்த பழம் பூவெல்லாம் எடுத்துட்டுப் போயிருங்க. உங்க பையனுக்கு வேறே பெண் கிடைப்பாங்க" என்றார்.

"உங்க பெண்ணை ஒரு வார்த்தை.."

"ப்லீஸ்.. இடத்தைக் காலி பண்ணுங்க".

    அவர்கள் அகன்றதும், "ஏம்பா பொய் சொன்னே? பெண் பார்க்க வந்தவங்க ஊருக்குப் போய் லெடர் போடுறோம்னு தானே சொன்னாங்க?" என்றான் வந்தனாவின் தம்பி. அவனைச் சுட்டெரிப்பது போல் பார்த்தார் வந்தனாவின் அப்பா.

[வரும் பதிவில் நிறையும்]▶ 2

54 கருத்துகள்:

  1. இப்படி இடையில் ஆச்சரியத்துடன் விட்டாள்§ம்ம் முடிவை கான வேண்டி!

    பதிலளிநீக்கு
  2. https://www.youtube.com/watch?v=uGHYz2QEoCI

    subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. ம்ம்ம்ம்.... முடிவு எப்படி இருக்கும் என்ற யூகங்களோடு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. அப்பாவின் முகத்தில் ஆச்சரியத்திலிருந்து கோபம் வரை அத்தனை உணர்வுகளும் மின்னலாய் வந்து போயின. உள்ளே இதைக் கேட்டுக்கொண்டிருந்த வந்தனாவின் முகத்தில் கோபத்திலிருந்து ஆச்சரியம் வரை அத்தனை உணர்வுகளும் மின்னலாய் வந்து போயின.////

    -வார்த்தைகள் வித்தியாசத்தில் பொருள் என்ன அழகாய் வேறுபட்டு மனசை மயக்குது. தென்றல் வீசுவதை அனுபவிக்கிற சுகத்தோடு இந்த சிறுகதையப் படிச்சுட்டு வந்தேன் அப்பா ஸார்! மீதிப் பகுதியை எப்ப வெளியிடுவீங்க? இப்பவே மனசுக்குள்ள எப்படிக் கொண்டு ‌போய் முடிச்சிருப்பீங்கன்னு ஒரு ட்ராக் திங்கி்ங் ஓட ஆரம்பிச்சிட்டுது!

    பதிலளிநீக்கு
  5. அடுத்து என்ன நடக்குமோ...? ம்... ஆவலுடன்...

    பதிலளிநீக்கு
  6. வாழ்க்கையின் முரண்களை கைப்பொம்மையாக்கி பொம்மலாட்டம் ஆடுகிறீர்கள் அப்பாதுரை.

    சாலிடேர்-லூனா-ஐ.வி.சசி-ஆகாய கங்கை என்று பச்சக்கென்று எண்பதைப் பொருத்தி, மனதை ஏங்கவைத்து விட்டீர்கள்.

    //வண்டி ஊர்ந்து செல்வது போல் தோன்றியதால் லேசான எரிச்சல் வந்ததை உணர்ந்து சிரித்துக் கொண்டான்.//

    இந்த வாக்கியம் மிக மிக்கியமானது. சொல்லப்போனால் இந்த ஒரு வாக்கியம் கதையின் ஆன்மாவின் குரலாய் ஒலிக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. ஷ்!" என்று செல்லமாக அதட்டிய வந்தனா, "அம்மா.. உன் பொண்ணு எவ்ளோ அழகா இருக்கானு அந்தம்மா தன் பையன் கிட்டே வழியெல்லாம் சொல்லிட்டே வந்தார்.. அதான்" என்று லேசாகச் சிரித்தாள். வழியில் அவர்கள் பேசியதைச் சுருக்கமாகச் சொன்னாள்.

    //"உனக்கென்னடி ராஜாத்தி.." என்றார் வந்தனாவின் அம்மா. "ம்ம்ம்.. அந்தப் பையனும் மகாராஜாவாட்டம் தான் இருக்கான்.. ஆனா வேறே ஜாதியாப் போச்சே?!" என்றவர்,//

    அம்மாவுக்கும், பெண்ணுக்கும் பையனை பிடித்து இருக்கிறது.


    வந்தனா அப்பாவின் முகத்தில் ஆச்சரியத்திலிருந்து கோபம் வரை அத்தனை உணர்வுகளும் மின்னலாய் வந்து போயின. உள்ளே இதைக் கேட்டுக்கொண்டிருந்த வந்தனாவின் முகத்தில் கோபத்திலிருந்து ஆச்சரியம் வரை அத்தனை உணர்வுகளும் மின்னலாய் வந்து போயின. வந்தனா அம்மாவின் முகத்தில் சந்தோஷம் மட்டும் வந்து போனது. 'அப்பா என்ன சொல்லப் போகிறார்!' என்று தவித்தார்கள்.//


    அப்பாவின் ஆச்சிரியம் கோபம் ஆனது, வந்தனாவின் கோபம் ஆச்சிரியம் ஆனது.
    ஏனென்றால் அந்த பெண்ணைப் பார்க்க போகாமல் இங்கேயே ஏன் சொல்லவில்லை விருப்பத்தை என்றும், அந்தபெண்ணைப் பார்த்துவிட்டு வந்து சொல்கிறார்களே என்று கோபம் வந்ததோ !
    அம்மாவும் , வந்தனாவும் அப்பா என்ன சொல்ல போகிறார் என்று தவித்தார்கள் என்றால் அம்மாவுக்கும் , பெண்ணுக்கும் விருப்பம் தானே!

    // நீங்க நல்ல மனுஷங்க. அதுக்குத்தான் இத்தனை தேங்க்ஸ்" என்றாள். //
    வந்தனா நல்ல மனுஷங்களை ஏற்றுக் கொள்வாளா?

    அடுத்தவாரம் என்ன சொல்ல போகிறீர்கள் பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  8. 22 ஆகஸ்டு 1979 அன்று சூரிய கிரகணம். பஞ்சாங்கத்தை திரும்பவும் பார்த்தேன். சரிதான்.

    அன்று பெண் பார்க்க யாரும் வருவதற்கோ அல்லது வருவதாக சொல்வதற்கோ வாய்ப்பில்லை.

    சரியாக தேதியைப் பார்த்துவிட்டு சொல்லவும்.

    நீங்க சொன்னப்பறம் தான் அந்த தேதிக்கான ப்ரச்னைத்தை போட்டு ,
    மேற்கொண்டு இந்த கதை எப்படி போகும் என்று சொல்ல முடியும்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  9. தாத்தாவின் கருத்துரை : இதைப் எதிர்ப்பார்க்கவேயில்லை... எல்லாம் கனவா...?

    பதிலளிநீக்கு
  10. கிரகணத்துல எல்லாம் கதையில் வரும் குடும்பங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆகஸ்டு 22, 1979 என்றால் ஆகஸ்டு 22, 1979.

    இருந்தாலும், ஆராய்ச்சிக்கு என்னுடைய சபாஷ் சூரி சார்.

    பதிலளிநீக்கு
  11. ஜாதி பரம்பரை கலாசாரம் எல்லாத்தியும் கொளுத்திப் போடுவோம் அடுத்த சங்க்ராந்தியப்போ. உனக்கு அந்தப் பெண்ணைப் பிடிச்சிருக்கு. அந்தப் பெண்ணுக்கும் உன்னைப் பிடிச்சிருந்தா எதுவுமே தேவையில்லே.. வாழ்க்கைலே சந்தோஷம் முக்கியம். அந்தப் பொண்ணைப் பத்திப் பேசுறப்பவே உன் கண்ணு திருப்பதி லட்டாட்டம் பெரிசாவுதே?"

    இப்படி எல்லா பெற்றோரும் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றே நினைக்க தோனுது.

    பதிலளிநீக்கு
  12. கடைசியில் பேசிய ஒரு வார்த்தையில்
    பெண்ணின் மன நிலை நமக்குப் புரிந்து போகிறது
    அப்பாவுக்கும் புரியாமலா இருக்கும் ?
    சுவாரஸ்யம் கூட்டிப் போகும் முடிவு
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து ....

    பதிலளிநீக்கு

  13. சகல சாத்தியக்கூறுகளும் உள்ள அழகான கதை. அந்த சில கணங்களில் உணர்வுகள் ஒன்று பட்டது போல் தெரிகிறது. கதா மாந்தரின் முரணான பின்னணி வாழ்க்கையில் எந்நேரமும் பூதாகாரமாய் வெடிக்கலாம். காதலில் கைகூட மன முதிர்ச்சி வேண்டும்.கதைகளில் வருவதுபோல் they married and lived happily thereafter என்று நினைக்க முடியவில்லையே.

    பதிலளிநீக்கு

  14. சகல சாத்தியக்கூறுகளும் உள்ள அழகான கதை. அந்த சில கணங்களில் உணர்வுகள் ஒன்று பட்டது போல் தெரிகிறது. கதா மாந்தரின் முரணான பின்னணி வாழ்க்கையில் எந்நேரமும் பூதாகாரமாய் வெடிக்கலாம். காதலில் கைகூட மன முதிர்ச்சி வேண்டும்.கதைகளில் வருவதுபோல் they married and lived happily thereafter என்று நினைக்க முடியவில்லையே.

    பதிலளிநீக்கு

  15. பதிவில் காணும் பாடல்கள் இடம் பெறும் வீடியோவுக்கும் கதைக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா.?

    பதிலளிநீக்கு
  16. அடுத்து என்ன நடக்கும்ன்னு தெரியலியே!

    பதிலளிநீக்கு
  17. பாசிட்டிவ்?

    பின்னூட்டங்களைப் பார்த்து அப்புறம் முடிவா?!

    பதிலளிநீக்கு
  18. ஒவ்வொரு முறையும் ஆச்சரியத்தோடு பயத்தோடு தான் உங்கள் உழைப்பை பார்க்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  19. காலத்தைச் சொல்ல பாட்டும், டைரக்டர் பெயரும் சரி... ஐ வி சசி டைரக்ஷனில் சட்டென படம்பெயர் எதுவும் நினைவில் வரவில்லையோ? :))

    பதிலளிநீக்கு


  20. ஐ ஆம் ஸாரி டு இன்டர்ரப்ட் .. பட் ஐ ஹாவ் ஈக்வலி நோ அதர் வே டு மூவ் அவுட்.

    ஃபர்ஸ்ட் பாயின்ட்.

    ப்லீஸ் இல்ல. ப்ளீஸ். ல இஸ் டோடலி டிஃப்ஃரன்ட் ஃப்ரம் ள.
    லவ்வும் போது ரோடுலே ஒண்ணா போவாங்க இல்லயா. அப்ப இள நீர் கடை வரும்.
    நின்னு பேசறதுக்கு கொஞ்சமா சான்ஸு கிடைக்கும். ( சொந்த அனுபவமா என்று தாத்தாவை பார்த்து
    யாரும் கேட்டுடக்கூடாது. பாட்டி கோவிச்சுக்குவா. )


    அந்த ள உறிஞ்சு உள்ள போகும்போது தான் இந்த ல இன்னும் கொஞ்சம் ஸ்வீட்டா இருக்கும்.

    இரண்டாவது முக்கியமான பாயின்ட். ஸ்ரீராம் கேட்டிருக்கார்.
    பாஸிட்டிவ் ?

    ரொம்ப டிஃபிகல்ட் ஏபி நெகடிவ் க்ருப் கேஸுல்லாம் கூட யாருன்னாச்சும் எங்கேந்தாவது வந்து டொனேட்
    பண்ணிடராங்க... ஸோ நோ வொரியிங்.

    கிருஹணத்திலே துவங்கினது கிருஹணம் விட்டோன்ன சரியாயிடும்.
    ஒரு கிருஹணத்திலே துவங்கினது இன்னொரு கிருஹணத்திலே ,பாணிகிருஹணத்துலே, சரியாயிடும்.

    மனுசன் மனசிலே நிழல் படியறதும் அண்டத்திலே சூரியனை சந்திரன் மறைச்சு நிழல் ஒரு கோம்ப் லைக்
    ஃபார்மேஷனா தோன்றது மாதிரி தான். அந்த கால அப்பாக்களுக்கெல்லாமே ஒரு அப்ஸெஷன். தன்னாலே
    தான் தன் பொண்ணுங்களுக்கு நல்ல வரனைத் தேடித் தர முடியுமுன்னு ஒரு பிலீஃப். பொண்ணுங்களுக்கும்
    வித் சம் எக்ஸப்ஷன்ஸ் அஃப் கோர்ஸ் தானா ஒரு பையனை தேடிக்கொண்டு வர தில் இருந்ததில்ல. அந்த
    தில் இருக்கிற த்ரில் சமீபமாத்தான் ஜாஸ்தி இருக்கு. ( பாட்டி அந்த எக்செபன்ஸ்ல இருக்காளா அப்படின்னு
    யாரும் கேட்டு விட்டு, நாளைக்கு காலைலே நயாகரா ப்ரோக்ராமை வைப் அவுட் பண்ணிடக்கூடாது.)

    ஹாவிங் ஸெட் ,
    நம்பிக்கை ஒரு விஷயம். நடக்கற வாய்ப்புகள் வேற விஷயம். எ திங் ஹைலி பாசிபிள் மே நாட்பி ப்ராபபிள்.

    என்னுடைய ஒரு க்ளோஸ் ஃப்ரன்டு எ டை ஹார்டு ஏதீயிஸ்ட், பட் அ வெரி ஹானஸ்ட் ஸ்ட்ரைட் ஃபார்வேர்டு
    பர்சன், அவரோட அஞ்சு பசங்களுக்கும், ( அதிலே மூணு பொண்ணுங்க.) சனிக்கிழமை அன்னிக்கு ராகு காலத்திலே தான் திருமணம் செஞ்சு வச்சாரு.

    ஆனாலும் இது மாதிரி எத்தனை ஃபாமிலிலே நடக்கறதுக்கு வாய்ப்பு இருக்கிறது. ?

    ஏதோ என் மனசுலே பட்டதைச் சொன்னேன். இருந்தாலும் கார்யம் ஆரம்பிச்சாச்சு.
    விக்னேச்வரன் இருக்கானே விக்னத்தை உண்டு பண்றவனும் அவன் தான்.
    ஹாவிங் ஸ்டார்டட், அந்த விக்னத்தை அவிக்னம் குரு மே தேவா என்று சர்வ கார்யேஷு சர்வதா
    என்று நன்னா முடிச்சு வச்சு இருக்கறவனும் அவன் தான்.

    ப்ளிசிங்க் அப்படிங்கர இடத்துலே சித்தி வினாயகர் கோவிலுக்கு போன சனிக்கிழமை அன்னிக்கு தான் போனேன்.
    வினாயகருக்கு முன்னாடி இரண்டு லேடீஸ் ( நம்ம ஊரு புடவை மடிசார் மாதிரி கட்டிண்டு )
    உட்கார்ந்து பாடறத பாத்தேன்.

    குறை ஒன்றும் இல்ல. மறை யூர்தி கண்ணா. வினாயகன் முன்னாடி ஒரு பாட்டா இது ? இறை மேலே இதயத்தை இணையச்செய்தவனுக்கு வினாயகனுக்கும் கண்ணனுக்கும் என்ன வித்தியாசம் ?

    ஒரு காரியம் நடக்கணும் அப்படின்னா, கிருஹணமாவது, அஷ்டமியாவது.!! பெருமாள் நா எல்லாத்தயும்
    நடத்தறார். !!

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com
    www.subbuthatha72.blogspot.in





    பதிலளிநீக்கு
  21. வந்தனாவும், ராஜும் சேர்ந்துடுவாங்கனு நினைக்கிறேன். இல்லைனா அம்மா துணையோடு வந்தனா கல்யாணம் பண்ணிப்பாளா? அதுக்கு தைரியம் இருக்கா அவளுக்கு? சம்பவக் கோர்வைகள் வெகு அழகாகப் பின்னி இருக்கிறீர்கள். கொஞ்சம் இல்லை, நிறையவே பொறாமையாவும் இருக்கு! :))))

    பதிலளிநீக்கு
  22. இதுவும் காதல் என்பதால் ராஜ் வந்தனா சேர்ந்துவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.
    காதல் கதையில் யாராவது தொடரும் போடுவார்களா?

    முதல் பாட்டை விட இரண்டாவது பாட்டு ரொம்பவும் பிடித்தது.

    பதிலளிநீக்கு
  23. ம்ம்.. ஓய்வு நாள்ள மெட்ராஸ் வந்து நாள் பாத்துக் குடுக்குற வேலை செய்யலாம்னு இருந்தேன்.. அடி வாங்க வச்சுரும் போலிருக்குதே?

    தேதியை வச்சு ஒரு சின்ன பின்னல் சேர்க்கலாம்னு பாத்தா இந்தப் பின்னு பின்றீங்களே சூரி சார்?! கந்தசாமி கேட்டாப்புல நீங்க உண்மையிலேயே.. என்னா எனர்ஜி!

    தேதிப் பின்னலை இன்னொரு கதைல வச்சுக்கிட்டு, ஸ்ரீராம் சொல்றாப்புல இந்தக் கதையை பின்னூட்டத்தை வச்சுக் கொண்டு போயிற வேண்டியதுதான்.


    பதிலளிநீக்கு
  24. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    கதைக்கும் விடியோவுக்கும் தொடர்பிருந்தா அதைப் பிடிக்கிற பொறுப்பை படிக்கிறவங்க கிட்டயே கொடுத்துடறேன் ஜிஎம்பி சார்.

    கதை முடிவை போட்டுடைத்த கிர்ர்ர்ர்ர்ர்காரரைப் பாத்து ஒரு கிர்ர்ர்ர்ர்ர். கூட சேந்துகிட்ட ரஞ்சனியவர்களுக்கு டபுல் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். 'அம்மா துணையோட கல்யாணம் செய்துக்க தைரியம் இருக்கா அவளுக்கு?' - கோணம், யோசிக்க வைக்குதே? (காதல் கதையில் தொடரும் போட்டது எவ்வளவு வசதியாப் போச்சு பாத்தீங்களா)

    பதிலளிநீக்கு
  25. இது சுப்புத்தாத்தாவுக்காக எழுதின கதை. ஆனா அவரு அரை செகன்டுல ஒரு அமுக்கு அமுக்கிட்டாரு.

    பதிலளிநீக்கு
  26. முக்கியமான இடத்தில் தொடரும் போட்டுவிட்டீர்களே அய்யா . ஆவலுடன் காத்திருக்கின்றேன் தங்களின் அடுத்தப் பதிவிற்கு..

    பதிலளிநீக்கு
  27. @சூரி சார்,

    //குறை ஒன்றும் இல்ல. மறை யூர்தி கண்ணா//

    மறை மூர்த்தியா, மறை யூர்தியா????????

    பதிலளிநீக்கு
  28. ஆரம்பத்தில் மேலோட்டமாக படித்துக் கொண்டு வந்தாலும் முடிவில் அடுத்த பகுதிக்கு காத்திருக்க வைத்து விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  29. பழவந்தாங்கல் பெண்ணா - ஆலந்தூர் பெண்ணா?..

    விடை: ரொம்ப ஈஸி.

    க்ளூ: கதையின் தலைப்பு.

    பதிலளிநீக்கு
  30. //மறை மூர்த்தியா, மறை யூர்தியா????????//



    மறை மூர்த்தி தான் . சந்தேகமே இல்லை.

    ஆல்டஸ் ஹக்ஸ்லி அவர்களது அந்த காலத்து பரோஸ் இன் ப்ரைஸ் ஆப் மிஸ்டேக்ஸ் படித்திருப்பீர்கள்.

    தப்பு கண்டு பிடித்து அதை முதலிலே சொல்வதிலே தான் எத்தனை சந்தோசம் ? எத்தனை ஆனந்தம் ? எத்தனை திருப்தி ?

    இந்த ஹிந்து எடிடர் அதாவது ரீடர்ஸ் எடிடர் விஸ்வநாதன் அவர்கள் ரொம்ப பொறுமை சாலி. வாரத்தில் இரண்டு நாளைக்கு நான் ஹிந்து பேப்பரில் அது தப்பு இது தப்பு என்று அவர் உயிரை எடுத்து விடுவேன். உங்களுக்கு தெரிந்திருக்கும். ஹிந்து பேப்பரில் இப்பொழுதெல்லாம் இலக்கணத்தப்புகள் நிறையவே வருகின்றன
    ஒரு எண்ணத்தை வார்த்தைகளில் வடிப்பதில் கடந்த ஒரு 50 ஆண்டுகள் வித்தியாசத்தில் பார்த்தால் எத்தனை இடைவெளி ?

    . ஒரு நாள் அவரை நான் கேட்டேன். போனில் தான். நான் அடிக்கடி பேசுவது உங்களுக்கு தொந்தரவாக இல்லையா ? என்றேன்.
    இங்கே வேலை செய்பவர்களுக்கு, தினசரி ஏற்படும் தொந்தரவுகளை சமாளிப்பதற்குத்தானே எனக்கு வேலை கொடுத்து இருக்கிறார்கள் என்றார். .

    கமிங் டு த பாயிண்ட், மறை மூர்த்தி இஸ் த அசல் டெக்ஸ்ட்.
    மறையிலே ஊர்ந்துகொண்டு ( சம் திங் லைக் க்ராலிங்) மறையாகவே போய்விட்ட கண்ணன் என்பது எனக்குள் நான் உணர்வது

    மறைக்கும் கண்ணனுக்கும் வித்தியாசம் ஏது ? நமது பார்வையில் அல்லவா இருக்கிறது ?

    ராஜாஜி இஸ் எ நோபிள்மேன் .

    சுப்பு தாத்தா

    பதிலளிநீக்கு
  31. ஹாஹாஹா, சூரி சார், ஹிந்து பேப்பரில் மட்டுமா இலக்கணப் பிழைகள், எழுத்துப் பிழைகள்??? தொலைக்காட்சியில் செய்திகள் ஓடுகையில் பாருங்க, எப்படி எல்லாம் தமிழ்க் கொலை நடக்குதுனு புரிஞ்சதோ, சீத்தலைச் சாத்தனாரை விட மோசமா ஆயிடுவோம். இதிலே பொதிகையும், மக்களும் தான் நல்ல தமிழைக் கொடுக்கும் தொலைக்காட்சிகள். பொதிகைக்கு முதலிடம்.

    பதிலளிநீக்கு
  32. வினாயகர் முன்னால குறையொன்றுமில்லை..
    குரோம்பேட்டை நாட்களில் அனேகமாக தினமும் கொலுவுக்கு வந்த இரண்டு பெண்கள் 'செந்தூர் முருகனின் கோவிலிலே' சினிமா பாட்டை பாடுவார்கள். 'ஒரு பாட்டு பாடுங்க' என்ற் யாராவது சொன்னால் போதும், உடனே செந்தூர் முருகனின் தான். அவர்களும் கவலைப்பட்டதில்லை.

    பதிலளிநீக்கு
  33. இன்னொரு குரோம்பேட்டை நினைவு. என் தங்கையின் சினேகிதி ராஜஸவாரி (ராஜேஸ்வரி) அவளுக்குக் கடிதமெழுதுவாள். அத்தனை பிழைகள் இருக்கும். நாலாம் வகுப்போ ஐந்தாவதோ படித்தாலும் பெயரைக் கூட சரியாக எழுத மாட்டாள்.

    ராஜஸவாரி கடித்ம் என்றால் எங்கள் வீட்டில் போட்டி இருக்கும் - என் தங்கை தர மறுத்தாலும் கெஞ்சினாலும் பிடுங்கிக்கொண்டு உரக்கப் படித்துச் சிரிப்போம்.

    தெரிந்தோ தெரியாமலோ பிழைகள் இருந்தாலும், கடிதம் எழுத வேண்டும் என்று அவளுக்குத் தோன்றியது பற்றிப் பின்னாளில் வெட்கம் கலந்த நிறைவாகவே உணர்ந்தோம்.

    பதிலளிநீக்கு
  34. //விடை: ரொம்ப ஈஸி. க்ளூ: கதையின் தலைப்பு.

    (அறிவு)ஜீவிகள் நடுவுல கதை எழுதுறதுல சுகமும் உண்டு, சிரமமும் உண்டு :)

    பதிலளிநீக்கு
  35. அறிவு ஜீவிகள் கதை எழுதுறதுல சுகமும் உண்டு, சிரமமும் உண்டு :)

    subbu thatha

    பதிலளிநீக்கு
  36. The Hindu-வின் தற்போதைய ரீடர்ஸ் எடிடர் 'அவுட்லுக்' புகழ் திரு. ஏ.எஸ். பன்னீர்செல்வன் இல்லையோ?..

    பதிலளிநீக்கு
  37. மறைமூர்த்தி கண்ணா...

    மறை = வேதம்

    பதிலளிநீக்கு


  38. மறை = வேதம் அப்படிங்கறது எனக்கு 1960 லேந்து தெரியும்.
    ஏன் 1960 அப்படின்னு கேட்பீக.. அடுத்த பின்னூட்டத்திலே.. அதனாலேஇப்பவே அதுக்கும் பதில்.

    வேதாரண்யம்.தமிழிலே அந்தஊருக்குபெயர் திரு மறைக்காடு.

    அந்த ஊருக்கு 1962 முதல் அடிக்கடி போவேன். ஏன் எனக்கேட்கக்கூடாது. பாட்டி கோவிச்சுப்பா ! பழசெல்லாம்
    இப்ப எதுக்கு போட்டு உடைக்கிறீக என்பாள்.

    அந்த ஸ்வாமி பேரு திரு மறைக்காடர். வேதாரண்யேஸ்வரர். அம்பாள் பேரு வேத நாயகி.

    மறை மூர்த்தி அப்படின்னு ராஜாஜி எழுதியிருக்கார். வேதங்களுக்கு வித்தான மலயப்பனை போற்றி எழுதிய பாடல்.

    நிற்க.

    ஹிந்து இன்னிக்கு தேதி எடிட்டர் பன்னீர் செல்வமா ? எனக்குத் தெரியாது. பன்னீர் செல்வம் அப்படின்னு
    ஒரு மினிஸ்டர் இருக்கார். ஒரு தடவை , பரதனாகி கூட இருந்தார். அது தான் தெரியும்.

    நான் சொன்னது விஸ்வனாதன் ஸார். ஒரு காலத்துலே அவர் ஹிந்து எடிட்டராகவே இருந்திருக்கார். வயசு
    ஆயிடுத்து அவருக்கு.

    வயசானாலே வாய்சு குறைஞ்சுடும். ஆனா விஸ்வனாதன் ஸார் வாய்சுக்கு என்னிக்குமே மதிப்பும் மரியாதையும்
    உண்டு.

    இந்தக்காலத்துலே குழந்தைகள் பெரியவங்களாயிட்டா, புருஷன் வாய்ஸுக்குக்கூட கொஞ்சம் மதிப்பு குறைஞ்சுடறது.

    இதெல்லாம் அப்பாதுரை ஸார் கிட்டே சொல்லி ஸைட் ட்ராக் பண்ணக்கூடாது.
    பாவம். அப்பாதுரை ஸார் !! ஏற்கனவே அறிவு ஜீவுகள் நடுவிலே ஏண்டா கதை சொல்ல ஆரம்பிச்சோம்
    அப்படின்னு நொந்து போய் இருக்கார்.

    one thing however is certain.

    ஜூன் 28 ந்தேதி முகூர்த்த நாள். அன்னிக்கு வந்தனாவுக்கு டும் டும் டும். நடக்கும். அது எப்படி நடக்கும் ? மாங்கல்யம் தந்து நா நே நா வா ? இல்லை
    ரிஜிஸ்டர் ஆஃபீஸ்லே சுப்பு தாத்தா சாட்சி போட்டு கையெழுத்தா அப்படின்னு....


    பார்த்துட்டு தான் நான் பாஸ்டனுக்கு போகணும்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
  39. அரசூரான்ஜூன் 26, 2013

    //அந்தப் பெண்ணைப் பத்திப் பேசுறப்பவே உன் கண்ணு திருப்பதி லட்டாட்டம் பெரிசாவுதே?"// என்ன ஒரு டீட்டெயில் - அதுதான் அப்பாதுரை ஸ்டைல்.
    சார், காதல கோங்குரா சட்னி, ஆவக்கா ஊறுகாய் விருந்தோட முடிச்சி வைங்க சார்! - ஹி... ஹி... நேயர் விருப்பம்.

    பதிலளிநீக்கு
  40. அரசூரான்ஜூன் 26, 2013

    //ஜூன் 28 ந்தேதி முகூர்த்த நாள். அன்னிக்கு வந்தனாவுக்கு டும் டும் டும். நடக்கும். அது எப்படி நடக்கும் ? மாங்கல்யம் தந்து நா நே நா வா ? இல்லை
    ரிஜிஸ்டர் ஆஃபீஸ்லே சுப்பு தாத்தா சாட்சி போட்டு கையெழுத்தா அப்படின்னு....//
    சுப்பு தாத்தா ரொம்ப பாஸ்ட், கல்யாணம் முடிஞ்சி ஹனிமூனுக்கு நயகரா வராங்கோ... தாத்தாவிடம் ஆசி வாங்க... வாழ்த்து அனுப்புங்கோ!

    பதிலளிநீக்கு
  41. மறை என்றால் ஒளித்துவை இல்லையா?

    பதிலளிநீக்கு
  42. வேதமும் உட்பொருளை "மறை"த்துச் சொல்லப்பட்டது தானே அப்பாதுரை! ஆகவே அந்தப் பெயர் வேதத்துக்கும் பொருந்தும். :)))))

    பதிலளிநீக்கு
  43. 'நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளர்ந்த
    மறைமொழி தானே மந்திரம் என்ப..'

    --என்பது தொல்காப்பிய வரிகள்.

    பதிலளிநீக்கு
  44. கதை அருமை..

    தமிழ் தெரியாத அம்மா, வந்தனாவின் குடும்பத்தாருடன் உரையாடுவதும்(தெலுங்கில்தான் உரையாடியிருக்க வேண்டும் இல்லையா?), அதைச் சட்டென்று அவர்கள் புரிந்து கொள்வதும் கதையில் வெளிப்படையாகச் சொல்லப்படாத க்ளூக்கள் இருக்கின்றனவோ என்று யோசிக்க வைத்து விட்டது :-))

    முடிவை கீத்தாம்மா போட்டு உடைச்சிட்டாங்க. ஆகவே டென்ஷனில்லாமல் அடுத்த பகுதியை எதிர்நோக்கி..

    பதிலளிநீக்கு
  45. வாயைக் காட்டி இப்போ மூஞ்சியை மறைக்க வேண்டியதா போச்சே!

    பதிலளிநீக்கு
  46. வேத மந்திரங்கள் ஆரம்பிக்க வேண்டிய நேரமாயிடுத்தே...

    வேதத்தைப் பற்றிய வாதங்கள் எல்லாத்தையும் பின்னாலே கட்டு சாத கூடைக்கு அப்பறம் வச்சுக்கலாம்.

    நிச்சயதார்த்துக்கு டைம் ஆயிடுச்சு. அப்பறம் காசி யாத்திரை போக டைமே இருக்காது.

    மாப்பிள்ளைக்கு பஞ்ச கச்சம் கட்டியாச்சா ? யாரங்கே..! அந்த சாஸ்திரிகளைக் கூப்பிடுங்கோ...

    மேளம்...கெட்டி மேளம்.


    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  47. கதையின் முடிவு அப்பாதுரை அவர்களின் கையில்..!

    பதிலளிநீக்கு
  48. happy wedding wishes vanthana and Rajkumar.


    sorry. new compyuter.thamiz download seyyanum. Fantastic narration.
    athenna ''anbu malli'you have my permission.

    பதிலளிநீக்கு
  49. எழுதுவோரின் குணாதிசயம் இது.

    எல்லோரும் ஒன்றையேச் சொல்லும் பொழுது அதை மாற்றி எழுதிக் காட்ட வேண்டும் என்று தோன்றூம்.

    முடிவு 'எதிர்பார்த்தது தான்' என்று சப்பென்று போய்விடக்கூடாது, பாருங்கள்.

    பதிலளிநீக்கு
  50. அந்த temptation உண்மை தான்; ஆனால் இந்தக் கதையில அப்படியில்லை ஜீவி சார்;

    ஒரு சிக்கல்ல மாட்டிக்கிட்டு அவசரமா சில வேலைகளை முடிக்க வேண்டியதா போச்சு; புதன் கிழமையே பதிவு செஞ்சிருக்கணும் - விட்டுப் போச்சு. கைல கணினியில்லாம இன்னும் கொஞ்சம் லேட்டாயிடுச்சு. மாத்தி எழுதுறதா இல்லே :)

    பதிலளிநீக்கு
  51. //மாத்தி எழுதுறதா இல்லே :)//

    சரி. போகட்டும். அந்த ஆலந்தூர் பெண்ணை அப்படியே விட்டுடாதீங்க.
    பெண் பாவம் பொல்லாதது. சாயந்தரம் வந்தனாவை பெண் பார்த்துவிட்டுப் போனவனை அட்லீஸ்ட் ஆலந்தூர் அனுப்பி வையுங்க!..

    பதிலளிநீக்கு
  52. ஒவ்வொரு கதையிலும் அதே வேகம். அடுத்த பதிவை எதிர்நோக்க வைக்கும் சுறுசுறு விறு விறு.

    வல்லமையாளர்க்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  53. // சாயந்தரம் வந்தனாவை பெண் பார்த்துவிட்டுப் போனவனை அட்லீஸ்ட் ஆலந்தூர் அனுப்பி வையுங்க!..//

    இந்த வந்தனாவை பார்க்க வந்தவனும், ஆலந்தூர் பொண்ணுமே கதைக்கு மசாலா சாமான்கள் தான்.

    தாமஸ் பெக்கட் என்று ஒரு நாடக ஆசிரியர். அவர் வைட்டிங் ஃபார் கோடாட் என்று ஒரு நாடகம் எழுதியிருக்கார்.
    இரண்டு வழிப்போக்கர்கள் பேசுவார்கள், பேசுவார்கள், பேசிக்கொண்டே இருப்பார்கள், அவர்கள் யாருக்காக வைட்
    பண்ணுக்கிறார்கள், எப்போ அவர்கள் வருவார்கள் என்று அவர்களுக்கே தெரியாத நிலையில் நாடகம் முடிந்துவிடும்.
    அப்பாதுரை ஸார் கண்டிப்பாக படித்திருப்பார் என நினைக்கிறேன்.

    எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல், ஒரு நாடகமோ அல்லது கதையோ முடிவது
    ரியலிசத்திற்கு அப்பாற்பட்ட தாகத்தான் இருக்கும்.

    அப்பாதுரை ஸார் ஐ பிலீவ் இஸ் எ ரியலிஸ்டிக் ஸ்டோரி டெல்லர். அனியாயத்திற்கு அவருக்கு ஐடியா கொடுத்து
    எங்களுக்கு கிடைக்கவேண்டிய
    ஒரு நல்ல கல்யாண சாப்பாடை அம்போ ஆக்கிவிடாதீர்கள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com


    பதிலளிநீக்கு
  54. //அப்பாதுரை ஸார் ஐ பிலீவ் இஸ் எ ரியலிஸ்டிக் ஸ்டோரி டெல்லர். //

    ஒரு சின்ன சைக்கிள் காப் கிடைச்சிடக்கூடாதே!

    மியர்லி ஸ்டோரி டெல்லர் சமாச்சாரம் எல்லாம் அப்பாஜிக்கு ஜூஜூபி.. அதையும் தாண்டி அவர் போக முயற்சிகள் செய்யும் பொழுது அவரைப் போய் செப்புப் பாத்திரத்திரத் திற்குள்ளேயே அடைக்க ஆசைப்பட றீங்களே!..

    //எங்களுக்கு கிடைக்கவேண்டிய
    ஒரு நல்ல கல்யாண சாப்பாடை அம்போ ஆக்கிவிடாதீர்கள்.//

    பழவந்தாங்கலில் ஒண்ணு, அடுத்த நாளே ஆலந்தூரில் ஒண்ணுன்னா விட்டுடவா போறீங்க?..

    பதிலளிநீக்கு