2011/08/14

காதல் கண்ணியம்

வெத்து வேலை


திரையிசை, குறிப்பாகக் காதல் பாடல்கள், வளர்ந்த விதம் சுவையான ஆய்வுக்கான கரு.

'எனையாளும் ஈசரே!' என்று கடவுளைப் பாடினார்கள். பிறகு அதே வரிகளால் காதலனைப் பாடினார்கள். கொஞ்சம் துணிச்சல் வந்ததும், பத்தடிக்கும் குறைவான இடைவெளியில் நின்று கொண்டு கைகளைப் பிசைந்தபடி, 'உம்முடன் கலந்த ஏகாந்தமே' என்றார்கள். ஏதோ ஒரு காலக்கட்டத்தில் ஒருவரை ஒருவர் தொடுவதைக் காட்டுவது ஏற்கப்பட்டதும், உடல் பகுதிகளையும் உணர்வுகளையும் பாடி ஆடினார்கள். அதற்குப் பிறகு எம்.ஜி.ஆர் தயவால் இருபொருள், காமவிகார உட்பொருளுடன் கூடிய, கொச்சையான, பாடல்களும் குலுக்கலாட்டமும் வரத்தொடங்கின. அந்தச் சரிவு(?) தொடர்கிறது என்று நினைக்கிறேன்.

தொட்டுத்தடவிக் கட்டிப்புரண்டுப் பாடுவது இயல்பான நிரந்தரமாகிக் கொண்டிருந்தக் கட்டத்தில் வந்தக் கண்ணியமான பாடல் இது. இதற்குப் பின் ஒருபாடல் கூட இதன் தரத்தைத் தொடவில்லை என்பது என் கருத்து. ஆணாதிக்கமா, என்ன காரணமென்று தெரியவில்லை, கவிஞர் தொடர்ந்து எழுதாதது தமிழ்த் திரையிசையின் இழப்பு.

அமைதியான அழகான வரிகளுக்கு, ஆர்ப்பாட்டமில்லாத இசை. இனிமையான மெட்டை இன்னும் மேம்படுத்தும் குரல்கள். கண்ணியம் குறையாத காதல் நயம் துள்ளும் படமாக்கம். எம்ஜிஆர் பாடல் என்பது தான் முரணான வியப்பு. நான் அதிகமாகக் கேட்ட/பார்த்தப் பாடல்களுள் ஒன்று.

சற்று சிக்கலான கேள்வி. தமிழ்ச் சினிமாவின் தலை சிறந்தக் காதல் டூயட் பாடலுக்கான உங்கள் தேர்வு எது, சொல்லுங்களேன்?

மிகச் சிறந்தக் காதல் டூயட் என்று நான் கருதும் பாடலை இன்னொரு சமயம் பதிவு செய்கிறேன். இரண்டாம் இடத்துக்கான இந்த முதல்தரப் பாடலுடன் இப்போதைக்கு விடை பெறுகிறேன்.

ஒரு வாரமாக என் தொகுப்பை ரசித்த அனைவருக்கும் நன்றி.

சினிமா-11 | 2011/08/14 | குங்குமப்பொட்டின் மங்கலம்



48 கருத்துகள்:

  1. இதை பார்த்து கேட்ட பிறகு தான் தெரிகிறது இது மாதிரி ஒலி /ஒளி டுயட் பாடல் கிடைப்பது அரிது...

    பதிலளிநீக்கு
  2. முதலாவது பந்தி சுப்பர் சேர். அருமையாகக் கூறிவிட்டீர்கள் எப்படி காதல் பால்கள் உருப் பெற்றது என்று ரசித்தேன்.
    இனிய சுதந்திரதின வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www,kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  3. பதிவை மறுபடி படித்த பொழுது தோன்றிய இன்னொரு பாடல் - 'ஆடி வெள்ளி தேடி உன்னை நான் அடைந்த நேரம்'. கண்ணியம் இல்லை என்று எவருமே சொல்ல முடியாது - படப்பிடிப்பில் ஏதாவது ரசமாக இருந்தால் தானே ஐயா, கண்ணியமா இல்லையா என்று பார்க்க? கவியரசின் பொன்னான காதல் கற்பனை, கண்வலிப் படப்பிடிப்பில் தொலைந்து போன்தோ?

    பதிலளிநீக்கு
  4. அதென்ன, quote செய்யக் கூட எடுக்க முடியாத அளவு உங்கள் தளத்தின் வரிகளைக் கட்டுப் படுத்தி வைத்திருக்கிறீர்கள்...!

    தமிழ் சினிமாவின் தலை சிறந்த காதல் டூயட் பாடலுக்கான தேர்வு என்று எப்படி முடிவெடுக்கச் சொல்கிறீர்கள்?
    அ. சிறந்த பாடல் வரிகள்.
    ஆ. அருமையான காட்சியமைப்பு.
    இ. ஆபாசம் கலக்காத காட்சியமைப்பு.
    ஈ. ஈர்க்கும் குரல்கள்.
    உ. இவை எல்லாம்...!!

    ஒரு பாடலில் தேர்வைக் கட்டுப் படுத்த முடியுமா?!

    பதிலளிநீக்கு
  5. தெரியலையே ஸ்ரீராம்.. firefoxல் எடுக்க முடிகிறது, internet explorerல் முடியவில்லை. ராமசுப்ரமணி கூட ஒரு விடியோவையும் download செய்ய முடியவில்லை என்றார். right click செய்தால் என் browserல் download தேர்வு தெரிகிறது.

    சில மாதங்களுக்கு முன்னால் ஒரு நண்பர் கொடுத்த code ஒன்றை சேர்த்தேன் - அதை நீக்கி விடுகிறேன். தொந்தரவுக்கு மன்னிக்கவும். கட்டுப்படுத்தும் எண்ணம் எதுவும் இல்லை.

    உங்கள் கேள்விக்கு பதில் உ.

    பதிலளிநீக்கு
  6. நல்ல கேள்வி ஸ்ரீராம்.. ஒரு பாடலில் தேர்வைக் கட்டுப்படுத்த முடியுமா என்று இன்னொருவரும் கேட்பார். waiting.

    இப்படி ஏதாவது கேட்டு வைத்து, ஆளுக்கொரு பாடல் சொன்னால் பத்து பாட்டு தேறும் பாருங்க? அதைத் தொகுத்து ஒரு பதிவு போட்டுறலாம் பாருங்க. ஹிஹி..

    பதிலளிநீக்கு
  7. //"உங்கள் கேள்விக்கு பதில் உ."//

    அப்படியா...

    ஆபாசம் கலக்காத காட்சியமைப்பை எப்படி வகைப் படுத்துவது? நீங்கள் சொல்லியுள்ள படிப்படியான வளர்ச்சிக் கால கட்டங்களிலேயே எம் கே டி பாகவதர் பாட்டில் வரும் (மன்மத லீலையை வென்றார் உண்டோ) பாடலில் டி ஆர் ராஜகுமாரி சுற்றி வந்து ஒரு பறக்கும் முத்தம் தருவது அந்நாளில் ஆபாசக் காட்சியாகப் பார்க்கப் பட்டது. வனமோகினி என்ற படத்தில் நடித்த நடிகை (பெயர் ஞாபகம் இல்லை வசுந்தரா...?) அணிந்த உடைகள் அக்காலத்தில் பயங்கரக் கவர்ச்சி உடைகளாகக் கருதப்பட்டதாகப் படித்திருக்கிறேன். இந்தக் காலத்தில் என்ன நிலை என்று தெரியும். காலத்துக்குத் தகுந்த மாதிரி பார்த்தால் இது கூட ஆபாசம் இல்லைதான்!

    (ஹி..ஹி...அபபடி இப்படி எழுதி யாராவது ஏதாவது லிஸ்ட் தருவார்கள் என்று பார்க்கிறேன்...ம்..ஹூம்...)

    பதிலளிநீக்கு
  8. இனிமை, அழகு,அருமை என்று ஒருவாரமாக பதிவில் பாடல்கள் சூப்பர்! காலையில் எழுந்திருக்கும்போதே இன்று என்ன பாடல் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே எழுந்தேன். எனக்கு பிடித்த பாடல்களை நான் எப்போதுமே ரசித்து கேட்பேன் என்றாலும், இது போல பதிவில் அதுவும் பழைய பாடல்களை கேட்டு ரசிப்பது இன்னும் சுகம்தான். நன்றி அப்பாதுரை.

    இந்த பாடலும் மிகவும் அழகு. மெட்டும், வரிகளும், குரலும் காலை வேளையில் கேட்டபோது மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி, இதம், சுகம்.

    மிகவும் சிக்கலான கேள்வியை கேட்டிருக்கிறீர்கள் அப்பாதுரை. உங்கள் கேள்வியை படித்தபோதே கடகடவென்று நாலைந்து பாடல்கள் நினைவுக்கு வந்தன. சற்று நிதானித்ததில் மேலும் முப்பது பாடல் நினைவுக்கு வந்தது. இன்னும் யோசித்ததில் என்னால் தேர்வே செய்ய முடியாது என்று தோன்றி விட்டது. என்ன செய்வது? :)

    பதிலளிநீக்கு
  9. ஆபாசம் என்பது உடை அல்லது உடையின்மையில் மட்டும் தான் என்றால் நீங்கள் சொல்வது சரி ஸ்ரீராம். ஆபாசம் எதிலும் வரலாம். சுளிக்காமல் ரசிக்க முடிந்தால் ஆபாசம் இல்லை என்ற மிகச் சாதாரணமான definition எனது. நீங்கள் சொல்வது போல் காலத்துக்கேற்ப மாறுவது. ஆனால் சில எந்தக் காலத்திலும் மாறாமல் சுளிக்க வைக்கக் கூடியது. சமீபத்தில் குடிமகனே பாடலின் விடியோ பார்த்தேன். 'கொடுக்கட்டுமா அதை உனக்கு?' வரியில் சிவாஜியின் movementஐப் பார்த்த போது இருபத்தைந்து வருடங்களுக்கு முன் தோன்றிய அதே உணர்வு தான் இப்போதும் தோன்றியது. ஆபாச நடிப்பு அந்தப் பாடலுக்கு பொருந்தி வந்தது என்று இப்போது rationalize செய்தாலும், ஆபாசம் தான். ரசிக்க முடிகிறதா என்பதே கேள்வி. so, நடிப்பிலும் ஆபாசம் இருக்கலாம். பாடல்களில் ஆபாசம் இருக்கலாம். குரலில் கூட ஆபாசம் இருக்கலாம் (எல்.ஆர் ஈஸ்வரி குரலில் இல்லாத ஆபாசம் எஸ்.ஜானகி குரலில் வெளி வந்தது என்றால் நம்ப முடிகிறதா?)

    ஆபாசம் ஒரு தனி criterion இல்லை. ஆனால் நீங்கள் சொன்ன அத்தனை criteriaவும் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
  10. இனியொரு விதி செய்வோம். meenakshi தவிர மற்றவர் கலந்து கொள்ளலாம். முப்பது பாட்டா? என்னாங்க கிண்டலா?

    பதிலளிநீக்கு
  11. என் உறவினர் ஒருவரின் உடனடி 'ஃபீட பேக்...'

    "இதய வானின் உதய நிலவே...."

    அல்டிமேட் ஒன் என்று கேட்டதால் இதைச் சொல்லுகிறேன் என்றார்.!

    பதிலளிநீக்கு
  12. 'இதய வானின்..' டூயட் பாட்டா அது?

    பதிலளிநீக்கு
  13. i know that. ஏ.எம்.ராஜா சுசீலா. நல்ல பாட்டு. படம் பார்த்ததில்லை. சாம்பார் படம் தானே?

    பதிலளிநீக்கு
  14. நீங்கள் குறிப்பிடிருப்பது மிகவும் சரி
    இத்தனைக் கருத்துச் செரிவுள்ள
    எதுகையும் மோனையும் இயைபுத் தொடையும்
    மிக இயல்பாக அமைந்து பாடலை செழுமைப் படுத்தும் பாடல்
    தமிழ் திரையுலகில் இல்லை என உறுதியாகச் சொல்லலாம்
    இதை எழுதியவர் ஒரு முஸ்லிம் பெண் கவிஞர்
    இந்த ஒரு பாடலுக்குப் பின் அவர் வேறு பாடல்
    எதுவும் எழுதியதாகத் தெரியவில்லை
    தரமான பாடலை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  15. நல்ல காதல் பாட்டை படமாக்கியவர்கள் முடிந்தவரை medium (அல்லது wide angle என்பார்கள்) ஷாட்களைப் பயன் படுத்துவார்கள். ஸ்ரீதர் பாடல்கள் நிறைய இதற்கு உதாரணம்.
    'குங்குமப்பொட்டின் மங்கலம்' படமாக்கம் அப்படியொன்றும் பிரமாதமில்லை. காதல் நயத்தை இன்னும் மேம்படுத்திக் காட்டியிருக்கலாம். நட்சத்திர வடிவத்தை மொத்தமாகக் காட்டவேண்டும் என்று கஷ்டப்பட்டு, நடிகர்களின் பாவங்களைக் கோட்டை விட்டார்கள். அந்த ராதாக்ருஷ்ண சிலை, அதில் எம்ஜிஆரின் குறும்பு, gazebo ஓடிப்பிடி, இரண்டு இடங்களில் ஜெயலலிதாவின் mannerism (புடவைத் தலைப்பை இடது கையை வீசி அலட்சியமாகச் சுருட்டிக் கொள்கிறார் பாருங்கள் - இடையை அசைக்கும் விதத்தில் குஞ்சலம் ஒரு ரவுண்டு சுற்றி நிற்கிறது - இரண்டுக்கும் காதல் பொருள் சொல்லலாம், சொன்னால் தான் ஆபாசம், சொல்லாவிட்டால் நயம்)... இவை இல்லையென்றால் இந்தப் படமாக்கம் உப்பில்லா சப்பாத்தி.

    பதிலளிநீக்கு
  16. என்ன அப்பாதுரை இது! என்ன செய்வதுன்னு கொஞ்சம் யோசிக்கறதுக்குள்ள, இப்படி கழட்டி விடறீங்க!
    எவ்வளவு சிக்கலான கேள்வி கேட்டிருக்கீங்க. அவ்வளவு சுலபமா முடிவெடுக்க முடியுமா!
    சரிதான், நீங்கள் கேட்டிருக்கும் கேள்விக்கு ஒரு பதிலை சொல்லிடுவோம்னு ஒரு முடிவுக்கு வந்து இதை எழுதறேன். :)
    காதல் பாடல்கள் என்றாலே என்னை பொறுத்தவரை மென்மையுடன் கூடிய கொஞ்சல், கெஞ்சல், மயக்கம்தான். இந்த வகையில் நான் மிகவும் ரசித்த பாடல்கள் பல இருந்தாலும், 'மெல்ல போ, மெல்ல போ', 'இதுவரை நீங்கள் பார்த்த பார்வை', 'எங்கிருந்தோ ஆசைகள்' என்ற இந்த மூன்று பாடல்களும் எனக்கு என்றுமே கொஞ்சம் கூடுதல் ஸ்பெஷல். என்னை பொறுத்தவரை இந்த மூன்று பாடல்களுமே சிறந்த காதல் டூயட் பாடலுக்கு உரிய அனைத்து தகுதிகளையும் பெற்றிருப்பவைதான்.
    இந்த பாடல்களின் இனிமையையும், பாடல் காட்சிகளில் அவர்கள் நடித்திருக்கும் அழகையும் நான் ரசித்ததை ஒரு கட்டுரையாகவே எழுதுவேன். எல்லாம் கொள்ளை அழகு. இதிலும் எதை சொல்வது என்று திண்டாடி இறுதியில் என் ஒட்டு 'இதுவரை நீங்கள் பார்த்த பார்வை' என்ற பாடலுக்குதான். இந்த பாடல் காட்சியில் அவர்களிடையே ஒரு intimacy இருப்பது மிக மிக அழகாக வெளிபட்டிருக்கும். நான் மிகவும் ரசிக்கும் பாடல் காட்சி இது.

    பதிலளிநீக்கு
  17. meenakshi... ரொம்ப அருமையா விளக்கம் எழுதியிருக்கீங்க. very nice. எல்லாமே எம்ஜிஆர் பாட்டு! காதல் டூயட்கள்னா எம்ஜிஆர் தான் போலிருக்கு. (ஜெமினி?)

    முப்பது பாட்டுன்னதும் கொஞ்சம் பயம் அவ்வளவுதான்...அய்யய்ய.. உங்களைப் போய் கழட்டி விடுவேனா? (அப்புறம் வீட்டுக்கு வந்தா காபி சாப்பிடச் சொல்லி கற்பூரம் ஏத்துவீங்களே..)

    மூணு பாட்டும் எனக்குப் பிடிக்கும். மெல்லப்போ நிறையவே பிடிக்கும். டிஎம்எஸ் அட்டகாசமாகப் பாடியிருப்பார்.

    பதிலளிநீக்கு
  18. நன்றி அப்பாதுரை! அடுத்த முறை நீங்க வீட்டிற்கு வரும்போது நிச்சயம் காபி வேணுமான்னு கேக்கவே மாட்டேன். இதை கற்பூரம் எத்தாமலே நிச்சயமா சொல்றேன். :)

    ஸ்ரீராம், 'இதய வானின் உதய நிலவே' பார்த்திபன் கனவு படத்தில் வரும் இந்த பாடல் அழகானதுதான், ஆனால் இது ஒரு சோகமான பாடல். இதே படத்தில் வரும் இன்னொரு பாடலான 'பழகும் தமிழே, பார்த்திபன் மகனே' பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.
    சரி, அப்பாதுரை கேள்விக்கு உங்கள் தேர்வு எந்த பாடலாக இருக்கும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் சீக்கிரம் எழுதறீங்களா? :)

    பதிலளிநீக்கு
  19. இதய வானின் உதய நிலவே... beautiful line! இப்போது தான் கவனித்தேன். சோகப்பாட்டா அது?

    பதிலளிநீக்கு
  20. அப்பதுரை அவர்களே! அந்தக்காலத்தில் நாங்கள் எம்.ஜி.ஆர் - ஜே காதல் பாடல்களை "மைதாமா " பாடல் என்போம். மைதா மாவை அடித்துத் துவைது வீசிப் பிசைந்தால் தான் பக்குவத்திற்கு வரும். சும்மா கிடைக்கவில்லை முதலமைச்சர் பதவி. 2014ல் துணைப் பிரதமராகலாம் என்று பெசிக் கொள்கிறார்கள்.---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  21. மைதாமா? ஹிஹிஹி.
    முதலமைச்சர் பதவிக்கும் அதற்கும் சம்பந்தம் உண்டா தெரியவில்லை.. அதுவும் எம்ஜிஆர் இறந்து இருபது வருடங்கள் போல் ஆனபின்.. துணை முதல்வர்? இந்தியப் பொதுமக்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள்.

    பதிலளிநீக்கு
  22. ஆமாம். கல்கியின் 'பார்த்திபன் கனவு' பாடல்தான் அது. சோகம்தான். காதல் சோகம்! அப்பாதுரை சோகக் காதல் கூடாது என்று கண்டிஷனில் சொல்லவில்லையே...!! இதைச் சொன்னவரையே மேலும் ஒரு கேள்வி கேட்டு 'ரெண்டாவது..?'என்ற போது 'இந்த மன்றத்தில் ஓடி வரும்' என்றார். ( இதுவும் சற்றே சொகம்தானோ..?! ச்சே...சோகம்தானோ...) எனக்கு ஆச்சர்யம் எப்படி ஒன்று இரண்டு என்று அடக்கினார் என்றுதான்...! உடனே நினைவில் முதலில் மோதும் பாடல் என்று சொல்லி விட்டாரோ என்னமோ...

    பதிலளிநீக்கு
  23. டூயட் என்றால் காதல்தானா...நட்பு, சகோதரப் பாசப் பாடல்கள் எல்லாம் கூட டூயட்டுகள் இருக்கின்றனவே...

    பதிலளிநீக்கு
  24. குங்குமப்பொட்டின் மங்கலமா...மங்களமா...எது சரி? என் மாமா ஒருவர் விருப்பம், 'என்ன பார்வை உந்தன் பார்வை' பாடலாம். (அவர் சொல்வார் என்று நான் எதிர்பார்த்தது 'நாளாம் நாளாம் திருநாளாம்' அதை என் மாற்றினீர்கள் என்று கேட்டாள் உடனே இதுதான் நினைவுக்கு வந்தது என்றார். ஆனால் அதுவும் உண்டாம்! ரெண்டாவது'இயற்கை என்னும் இளைய கன்னி' பாடல். (அவர் காஞ்சனா ரசிகரும் கூட!) மற்றவர்கள் சொன்ன பாடலைச் சொன்னபோது ரொம்ப சீரியஸா யோசிச்சா தேன் நிலவு பாடலான, 'இரவும் நிலவும் ஆடுது' பாடல்!

    பதிலளிநீக்கு
  25. மைதாமா...? ஓ...இதுல அரசியல் வேறயா...!!

    மீனாக்ஷி, முப்பதே முப்பது சொன்ன உங்களையே என்ன கிண்டலா என்று கேட்கிறார் துரை. நான் என்ன செய்யறதுன்னு கையைப் பிசையறேன்! நம்ம லிஸ்ட்டா... மற்றவர்கள் சொல்லட்டும்...கஷ்டப் படறேன் போங்க...

    பதிலளிநீக்கு
  26. 'நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்' போல இன்னொரு பாட்டு வரவில்லை.

    பதிலளிநீக்கு
  27. காதலே சோகம் தான்னு எத்தனையோ பேர் சொல்றாங்க.. (நிறைய தமிழ் ப்ளாக் கவிதைகளைப் படிச்சதனால இல்லிங்க :).. அதனால சோகக் காதல் பாட்டு ஓகே.

    காதல் டூயட்னு தானே சொன்னேன் ஸ்ரீராம்? கொஞ்சம் விட்டா 'வேல் முருகா வேல்'னு ரெண்டு பேர் சேந்து பாடுறதையும் கணக்கு சேர்த்துடலாம்னா எப்படி? (நீங்களும் விடாம ட்ரை பண்றீங்க.. ஆனா யாருமே லிஸ்ட் தர மாட்றாங்களே?)

    சகோதர பாச டூயட்களா? எம் ஜிஆர் பாட்டுன்னா ஓகே.. அவர் தான் டூயட் பாடிட்டு தங்கச்சினுவாரு. அந்த மாதிரி பாச டூயட்களை சேர்க்கலாம்னு தோணுது.

    என்ன பார்வை, இந்த மன்றத்தில் ஓடி வரும் ரெண்டும் அருமையான பாட்டு. 'நாளாம்' பாட்டு சிறந்த காதல் டூயட்னு அவார்ட் வாங்கியிருக்குனு படிச்சிருக்கேன். இயற்கை எனும் ரொம்ப இனிமையான பாட்டு, என் டாப்10 லிஸ்டில் இடம் உண்டு.

    மங்கலம். மங்களத்துக்கு வேறே பொருள்.

    பதிலளிநீக்கு
  28. great choice, ராமசுப்ரமணியன். காதல் பாட்டுக்கான எல்லா criteriaவும் பொருந்தும். தன்னலமில்லாத காதல்னு சொல்வாங்களே அதை வெளிக்கொண்டு வந்த (ஒரே?) பாட்டுனு தோணுது. இதுவும் மிக மிகக் கண்ணியமான பாட்டு. ஒரு தடவை இன்னிக்கு இந்தப் பாட்டைக் கேட்டுற வேண்டியது தான். (சிவாஜி தான் மோசம் இந்தப் பாட்டுல - ஓவர் ஏக்டிங்)

    பதிலளிநீக்கு
  29. முப்பதே முப்பதா? ஸ்ரீராம், எதுக்குங்க வம்பு..?

    பதிலளிநீக்கு
  30. நாம் பாடலை ரசிப்பதற்கு கால, நேரமும் ஒரு காரணம். எல்லோருக்குமே (பெரும்பாலும்) மனதில் பதிந்து விட்ட பாடல் என்பது (மறுபடியும் பெரும்பாலும்) அவர்கள் பதின்ம வயதுகளில் கேட்ட பாடல்களாய் இருக்கும். இன்னும் கொஞ்சம் 'சாரித்து'ப் பார்த்தால் அந்தப் பாடலுக்குள் அவர்களின் எதாவது ஒரு அனுபவ நினைவுகளைப் பொதித்து வைத்திருப்பார்கள்!

    எம்ஜியார் நட்பு டூயட்டில் 'பாடினாள் ஒரு பாட்டு', சிவாஜிக்கு சகோதர டூயட்டாய் 'பெண்ணொன்று கண்டேன்'...னுல்லாம் சொல்லலாமா...ஒன்று செய்யலாம். ஒவ்வொரு நடிகருக்கும் பத்து சொல்லி மூன்று தேர்வு செய்து ஒன்றைச் சுருக்கலாம்!!

    பதிலளிநீக்கு
  31. காஷ்யபன் சார் துணைப் பிரதமர் என்று சொன்னால் நீங்கள் துணை முதல்வர் என்று இறக்கி விட்டீர்களே...!

    கேஜி நான் மலரோடு தனியாகவும் சந்தனத்தில் நல்ல வாசமெடுத்தும் துயிலாத பெண்ணொன்று கண்டேனும் பல முதல்களில் ஒரு முதலாய்ச் சொல்லியுள்ளார்!!

    அப்புறம், அவரே பிருந்தாவனமும் நந்த குமாரனும்..கூட சொல்கிறார்!

    பதிலளிநீக்கு
  32. இனிய இருகுரலிசைப்பாடல்கள் எவ்வளவோ இருக்கின்றன. நாங்கள் இரசித்த பாடல்கள் வலையில் கிடைத்தால் தரவிறக்கி அனுப்புகிறேன். முதலில் நீங்கள் குறிப்பிட்ட பாடல் ஒன்று - ஆங்கில subtitleகளுடன் உள்ள ஆடிவெள்ளி தேடி உன்னை பாடலைத் தனிமடலில் அனுப்பியிருக்கிறேன். இயன்றால் இடுகையாக இட்டால் மகிழ்வோம்.

    பதிலளிநீக்கு
  33. அழகாகச் சொன்னீர்கள் ஸ்ரீராம்.
    //..மனதில் பதிந்து விட்ட பாடல் ..அந்தப் பாடலுக்குள் அவர்களின் எதாவது ஒரு அனுபவ நினைவுகளைப் பொதித்து வைத்திருப்பார்கள்

    கேஜி அவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்.

    'பாடினாள் ஒரு பாட்டு' காதல் டூயட்டாகாது.. ஏற்க மாட்டீங்களா? சரி, இனியின்னொரு விதி செய்வோம்.. ஒருவரையொருவர் காதலித்து, காதலில் திளைத்தோ, காதலை வெளிப்படுத்தியோ பாடும் டூயட்டாக இருகக வேண்டும். ஒரு ஆண் இன்னொரு ஆணைக் காதலித்துப் பாடுவதாக இருந்தால் இருகுரல் ஆணிசை ஓகே.
    (என்னங்க இது.. ஒரே அமைதியா இருக்கு?)

    பதிலளிநீக்கு
  34. நன்றி பாலராஜன்கீதா.. இடுகையிட்டால் ஆயிற்று.

    subtitle இல்லாத ஆடிவெள்ளி பிரதி என்னிடம் இருக்கிறது. அதையும் சேர்த்து விடுகிறேன். (இந்த subtitle logo லொள்ளு தாங்க முடியலிங்க - is the parrot talking பாட்டு கேட்டிருக்கீங்களா?)

    அது சரி.. உங்களுக்குப் பிடித்த, நீங்கள் தேர்வு செய்யும் அந்த ஒரு காதல் டூயட் என்ன என்று எனக்கு மட்டும் சொல்லிவிடுங்களேன் ப்லீஸ்..

    பதிலளிநீக்கு
  35. ஆ! ஒரு வேளை ஜெ அபிமானிகள் ஆட்டோ அனுப்புவார்களோ?
    //நீங்கள் துணை முதல்வர் என்று இறக்கி விட்டீர்களே...!

    பதிலளிநீக்கு
  36. பெயரில்லாஆகஸ்ட் 17, 2011

    poo malarndhida nadamidum pon mayile

    பதிலளிநீக்கு
  37. அந்த கால பாட்டுக்களில் செயற்கை நிரம்பி வழியும் ..... எனவே சம கால சாய்ஸ் எடுத்து பிடித்தவற்றுள் இரண்டு மட்டும் கமலின் சத்யா பட பாட்டு வளையோசை கலகல வென .... மணிரத்னத்தின் ரோஜா பட பாட்டு ''புது வெள்ளை மழை''

    பதிலளிநீக்கு
  38. இரவும் நிலவும் வளரட்டுமே - கர்ணன்.
    சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே - எங்கிருந்தோ வந்தாள்
    கண்ணில் கண்டதெல்லாம் காட்சியா? - பட்டணத்தில் பூதம்.
    நான் பார்த்ததிலே -- அன்பே வா
    குமரிப் பெண்ணின் உள்ளத்திலே - எங்க வீட்டுப் பிள்ளை.
    நான் உன்னைச் சேர்ந்த செல்வம் - கலைக்கோவி(யி?)ல்.

    பதிலளிநீக்கு
  39. போற போக்குல இடிச்சுட்டுப் போறீயளே பத்மநாபன்? சிவாஜியின் நடிப்பு (ஜூனியர் ஸ்ரீராம் சொல்வது போல்) பல நல்ல பாடல்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கியது கொஞ்சம் நினைவுக்கு வந்தாலும், செயற்கை வளர்ந்திருக்கிறது என்று தான் தோன்றுகிறது. நீங்க கேட்காத பாட்டை நான் சொன்னதுக்காகவா?.. சரி, ரோஜா பாட்டைக் கேட்டுப் பாத்துடறேன் :)

    பதிலளிநீக்கு
  40. அடிச்சு விடுங்க கௌதமன்.. நல்ல லிஸ்ட், நன்றி.
    கண்ணில் கண்டதெல்லாம் அதிகம் கேட்டதில்லை. சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது. (ஹிஹி.. கேஆர்விஜயாவின் ஸ்விம் சூட் நினைவுக்கு வருதே தவிர மெட்டு நினைவுக்கு வர மாட்டேங்குதே?)
    மிச்ச பாடல்களை நிறைய ரசித்திருக்கிறேன். இரவும் நிலவும் முன்பெல்லாம் தினம் கேட்பேன். அத்தனை பிடிக்கும். கவிதையும் இசையும் சேர்ந்து மயக்கும் சில பாடல்களுள் ஒன்று. (ஓகே, தேவிகாவும்)
    சிரிப்பையும் ஸ்வரங்களையும் edit செய்த version ஒன்று என்னிடம் இருக்கிறது. அதைக் கேட்ட பிறகு சிரிப்புச் சுரம் பயமுறுத்துவது போல் படுகிறது. சுசீலா சிரிப்பது சௌகார் ஜானகி போல் ஒலிப்பதாக எனக்குத் தோன்றும்.
    குமரிப்பெண்ணின் படமாக்கம் (ராஜ் கபூர் பட ஒரிஜனல் ஐடியா?) கொஞ்சம் சறுக்கியது என்றாலும் டிஎம்எஸ் குரலுக்காக எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம். கலைக்கோவில் பாட்டு தேன் லட்டு.

    பதிலளிநீக்கு
  41. உங்க இசை , பாட்டு ரசனையை இடிக்கவில்லை ... ரொம்ப டாப்பான ரசனை ... நாயக நாயகியரின் டுயட் ஆட்டம் பாட்டம் பற்றி தான் சொன்னேன் ... டுயட்டை விட்டுவிட்டு தொழில்முறை நடனம் என்றால் பழையவர்கள் தங்கம் தான்......

    பதிலளிநீக்கு
  42. நான் அப்படி நினைக்கவும் இல்லை பத்மநாபன். எனினும் நன்றி.

    நான் சொன்னதும் இன்றைய திரையிசையில் செயற்கை வளர்ந்திருக்கிறது என்ற பொதுவான கருத்தே. திரையிசை என்பதே செயற்கை.. certain escapism என்ற பார்வையில் தினசரி சிக்கல்களிலிருந்து இந்த செயற்கை ஒரு விடுதலை.

    எத்தனை இளைஞர்கள் பின்னால் பத்து பேர் உடம்பை ஒடித்து நடனமாட நடைமுறையில் காதலிக்கிறார்கள்? இன்றைக்கு எந்த தமிழ்ப்படத்திலும் (எந்தப் படம் என்று கேட்டு விடாதீர்கள், மாட்டிக்கொள்வேன்) சாதாரணமாக ஹலோ என்பதற்குக்கூட பத்து பேர் பின்னணியுடன் புரியாத பாஷையில் கூச்சல் போட்டு ஹலோ என்கிறார்கள். செயற்கை வளர்ந்திருக்கிறது என்றது இதைத்தான். இதையும் கோடிக்கணக்கானோர் ரசிக்கிறார்கள் - என் போன்றவரை வேறு உலகத்தவர் போல் பார்க்கிறார்கள் :)

    பதிலளிநீக்கு
  43. சரியாகச் சொன்னீர்கள் Ramani. (எதுகை மோனை என்று புது உயரத்துக்குப் போய்விட்டீர்கள் :)
    பாடல் எழுதியவர் பெண் என்ற நினைவிருந்ததே தவிர பெயர் மறந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  44. காதல் பாடல்களை காமப் பாடல்களாக்கிய பெருமை எம்.ஜி.யாரைச் சேரும் என்று சொல்கிறீர்கள்.

    கரெக்ட்டுதான். பழைய படங்களுக்கு கலரூட்டப்பட்ட சில எம்.ஜி.யார் படங்களில் பார்த்திருக்கிறேன். மஞ்சுளா, லதா போன்ற நடிகைகளை உருட்டி (புஜங்களிலும், தரையிலும்) எடுத்திருப்பார்.

    ஒரு பாடல் நடித்துவிட்டு வந்தால் நிச்சயம் தோள்வலி கண்டிருக்கும். வென்நீர் ஒத்தடம் கொடுத்திருப்பார்கள்.

    அப்புறம் ரொம்ப உங்க காலத்து பாட்டு பற்றி பேசிக்கிட்டு இருக்கீங்க.. ஹி..ஹி.. சின்னப் பய என்னால நல்லா இருக்கு அப்டீங்கறதுக்கு மேல வேற எதுவும் சொல்ல முடியலை.. :-))

    பதிலளிநீக்கு
  45. வாங்க RVS..
    அந்தப் பெருமை ரசிகப் பெருமக்களாகிய நம்மைச் சேரும். அதனால் தான் சரிவு கேள்விக்குறி. எம்ஜிஆர் ரசிகர்களைப் புரிந்து கொண்டவர் என்கிறேன். சிவாஜி ரசிகர்களைப் புரிந்து கொள்ள முயலவில்லை என்று நினைக்கிறேன். புரிந்து கொண்டிருந்தால் ஓவர் ஏக்டிங்கைத் தொலைத்திருப்பார். - ரசிகர்கள் தன்னைப் புரிந்து கொள்ளட்டும் என்று நினைத்தாரோ என்னவோ?
    ராஜ்கபூர் துணிந்து சில காதல் காட்சிப் புரட்சிகளைச் செய்தார் இந்தியில். அதை எம்ஜிஆர் இங்கே கொண்டு வந்தார். இல்லையென்றால் mkt பாணி தொடர்ந்திருக்கும். (பயமாக இல்லை?)

    பதிலளிநீக்கு
  46. //அப்புறம் ரொம்ப உங்க காலத்து பாட்டு பற்றி பேசிக்கிட்டு இருக்கீங்க.. ஹி..ஹி.. சின்னப் பய என்னால நல்லா இருக்கு அப்டீங்கறதுக்கு மேல வேற எதுவும் சொல்ல முடியலை.. :-))//

    ஆர்.வி.எஸ், யூத்தாம்ம்மா !

    எம்.ஜி.யார் அமுக்கி பிசைந்ததில் மஞ்சுளா / லதாவுக்கு ஒத்தடமா அல்லது அவருக்கா ?

    ரிகஷாக்காரன் படித்தில் பதினெட்டு வயது மஞ்சுளாவை இடுப்பில் பிடித்துக்கொண்டு ரிப்பன் கொண்டு சண்டை போடுவார் ? அந்தப்படத்துக்கு அவருக்கு விருது வேறே.

    "உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை" என்ற பாடலை ஒருங்கே செயல் படுத்தியவர் அவர் ஒருவர் தான்.

    பதிலளிநீக்கு
  47. துரை

    லிஸ்ட் இன்னும் யோசித்துக்கொண்டு இருக்கின்றேன்.

    - சாய்

    பதிலளிநீக்கு
  48. பதிவைக் காட்டிலும் கும்மி பிரமாதம்.

    பதிலளிநீக்கு