2011/08/13

மூன்றாம் பால்

வெத்து வேலை


இரண்டாம் புலிகேசி ஐந்தாம் ஜார்ஜ் கணக்கில், மூன்றாம் பால் என்று சொல்ல வந்தேன் - நீங்கள் என்ன நினைத்தீர்களோ தெரியாது.

சரி, போகிறது. பதினைந்து வருடங்களுக்கும் முன்னால் இந்தப் பாடலின் ஒலிப்பதிவை அவருக்குக் கொடுத்ததை நினைவில் வைத்திருந்து, 'உனக்குப் பிடிச்ச பாட்டாச்சே?' என்று விடியோவை எனக்குச் சமீபத்தில் அனுப்பியிருந்தார் என் பாகிஸ்தான் தமிழ் நணபர் பால். (பாலச்சந்திரனின் சுருக்.)

எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. இந்தப் பாடலுக்கான மெட்டும் இசையும் எப்பொழுது கேட்டாலும் தாளம் போட்டு ரசிக்க வைக்கும். டிஎம்எஸ்-சுசீலா இருவரும் இந்தப் பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இந்தப் பாடல் காட்சியில் முத்து-மஞ்சுளாவின் 'சுவாஹா சுவாஹா' நடனத்தை அடிக்கடி பார்த்துச் சிரித்திருக்கிறேன். தனிக்காமெடி தேவையில்லை. விடியோவைப் பார்க்கும் பொழுதெல்லாம் இரண்டு சந்தேகங்கள் தோன்றும்:
1. இப்படி இளிக்கிறாரே முகமு, கவிஞர் 'முத்துப் பல்' என்று பாடியது தன் பல்லைப் பற்றியென்று நினைத்தாரோ ?
2. பாடலின் நடுவில் தரையில் சிவப்பு நிறத்தில் கிடக்கிறதே, அதான் முல்லைப்பூ விரிப்பா? அல்லது, காசித்துண்டுச் சுருணையா?

சினிமா-10 | 2011/08/13 | முத்துப்பல் சிரிப்பென்னவோ?


10 கருத்துகள்:

  1. எனக்கும் பிடித்த பாடல்.

    பதிலளிநீக்கு
  2. முகமு பாடல்களில் 'காதலெனும் பொன் வீதியில்' கேட்டிருக்கிறீர்கள்தானே...எனக்கு மிகவும் பிடித்த பாடல் அது. முகமு என்று சொல்வது பாவம். டி எம் எஸ் ஜானகி எம் எஸ் வி பாடல். இவர் நடித்த படங்களில் இவரே சொந்தக் குரலில் கூட ஒரு பாட்டு பாடியிருப்பார்!

    பதிலளிநீக்கு
  3. எனக்கும் அந்தப் பாட்டு பிடிக்கும் ஸ்ரீராம்.

    >>>முகமு என்று சொல்வது பாவம்
    :)
    சில அருமையான பாடல்கள் ஊர் பேர் தெரியாத ஒரு நாள் கூட ஓடாத படங்களில் இடம்பெறுவது ஆச்சரியம் தான். 'முத்துப்பல்' பாடல் படமாக்கம் பற்றி நான் நினைத்திருந்ததற்குக் கொஞ்சம் கூட ஒத்துப்போகாத காட்சி இது. அருமையான peppy பாடலை நகைச்சுவைப் பாடல் போல் படமாக்கியிருக்கிறார்களே என்று வருந்தியிருக்கிறேன். படம் பார்க்கவில்லை; பின்னணி தெரியாததால் வருந்துவதோடு சரி.

    பதிலளிநீக்கு
  4. வாழ்க்கையிலே கேட்காத அருமையான டி.எம்.எஸ் சுசிலா டுயட்களை அழகாக எடுத்து கொடுக்கிறீர்கள்...

    எம்.ஜி.ஆர் மேக் அப் எம்.ஜி ஆர் டிஎம்எஸ், எம்.ஜி. ஆர் மஞ்சுளா இருந்தும் முத்து தேறவில்லையே...

    பதிலளிநீக்கு
  5. ஏன் என்றே தெரியாமல் நான் கேட்க தவறிய, என் செவிக்கு எட்டாமலே போயிருந்த பேரின்ப பாடல் இது அப்பாதுரை. சில வருடங்களுக்கு முன் உங்களால் தயவால்தான் இந்த பாடலை கேட்டேன். கேட்ட அந்த நாளில் இருந்து இன்று வரை ரசித்து ரசித்து கேட்டு கொண்டிருக்கிறேன். டி.எம்.எஸ். அவர்கள் இந்த பாடலை பாடிய அழகில் மிகவும் லயித்து போய் ஒரு நாள் தொடர்ந்து ஒரு பதினைந்து முறையாவது இதை கேட்டிருப்பேன். :)
    பாடல் காட்சியை பார்த்த பிறகு இந்த பாடல் எம்.ஜீ.ஆர். படத்தில் இடம் பெற்றிருந்தால் காட்சி அமைப்பு எவ்வளவு பிரம்மாண்டமாய் இருந்திருக்கும், ஆனால் இப்படி இருக்கிறதே என்று எண்ணி பலமுறை வருந்தியதுண்டு. முகமு. இந்த விஷயத்தில் அதிர்ஷ்டகாரர்தான். இவர் நடித்த படத்தில் நிறைய நல்ல பாடல்கள் இவருக்கு.

    'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ' முகமு. க்கு இந்த பாடலை எழுதிய பிறகு வாலியிடம் எம்.ஜீ.ஆர் கேட்டாராம் 'ஏன் என்னை பார்த்தால் எல்லாம் மூன்று தமிழ் தோன்றவில்லையா?' என்று.

    //தரையில் சிவப்பு நிறத்தில் கிடக்கிறதே, அதான் முல்லைபூ விரிப்பா? அல்லாது, காசிதுண்டு சுரணையா?// மிகவும் ரசித்தேன் அப்பாதுரை.

    ஸ்ரீராம், 'காதலின் பொன் வீதியில்' இனிமை என்ற வார்த்தைக்கு அர்த்தமாக இந்த பாடலையே கூறலாம். அவ்வளவு இனிமை, அழகு இந்த பாடல். உங்கள் கமெண்ட் படித்தவுடன் இந்த பாடலை ஒரு முறை கேட்டே விட்டேன்.

    பதிலளிநீக்கு
  6. //பாடலின் நடுவில் தரையில் சிவப்பு நிறத்தில் கிடக்கிறதே, அதான் முல்லைப்பூ விரிப்பா? அல்லது, காசித்துண்டுச் சுருணையா?//
    இருந்தாலும் மு.க.மு வின் பற்களை இப்படியெல்லாம் தாங்கள் வர்ணிக்கக் கூடாது.

    பதிலளிநீக்கு
  7. //ஸ்ரீராம், 'காதலின் பொன் வீதியில்' இனிமை என்ற வார்த்தைக்கு அர்த்தமாக இந்த பாடலையே கூறலாம். அவ்வளவு இனிமை, அழகு இந்த பாடல்//

    என் செல்லில் என் மனைவி அழைத்தால் வரும் ரிங் டோன் அதுதான்!

    பதிலளிநீக்கு
  8. //பத்மநாபன் கூறியது... வாழ்க்கையிலே கேட்காத அருமையான டி.எம்.எஸ் சுசிலா டுயட்களை அழகாக எடுத்து கொடுக்கிறீர்கள்...//

    huh, huh.....you have missed so much man not listening to this song ..... I would not recommend seeing the video..

    TMS + PS = Eternal combo that can't be found again

    பதிலளிநீக்கு
  9. மு.க.மு விற்கு டிஎம்எஸ் பாடிய இன்னொரு ஜெம் "மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ" என்ற பாடல்.

    இந்த பாடல் எழுதிய வாலியிடம் எம்.ஜி.யார். ஏன் எனக்கு பாடல் எழுதும்போது இந்த நினைவு வரவில்லையோ என்று புலம்பியது உண்டாம் !
    இந்த முறை சென்னை வரும்போது டி.எம்.எஸ். அவர்களை நேரில் காண எண்ணம்

    பதிலளிநீக்கு
  10. //ஸ்ரீராம். சொன்னது… //ஸ்ரீராம், 'காதலின் பொன் வீதியில்' .....
    என் செல்லில் என் மனைவி அழைத்தால் வரும் ரிங் டோன் அதுதான்!//

    ரசனை மிக்கவர் தான் நீங்கள்

    பதிலளிநீக்கு