2011/08/12

மாலை மயக்கம்

வெத்து வேலை



ஸ்ரீதரின் பாடல் படப்பிடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். பெரும்பாலான பாடல் காட்சிகளை ரசிக்கும்படி படம் பிடித்தவர். இந்தப் பாடலின் psychedelic setting பாட்டுக்கு மிகப் பொருத்தமாகப் பட்டது. துள்ளும் இசை. உரசிப் பார்த்துப் பொருள் கொள்ள வேண்டிய பாடல் வரிகள். சிவாஜி, விஜயாவின் திரை ஆக்கிரமிப்பு. எல்லாமே ரசிக்க வைத்தன.

கண்ணதாசன்-விஸ்வநாதன். அடுக்குமா பாவிகளா? இப்படியா இனிமையின் மொத்த விளைநிலமாக இருப்பது?

விஜயா.. அந்தப் pendant ஒரு இடத்தில் தங்குகிறதா பாருங்களேன்? ஆகா! என்ன டான்ஸ்!! இதைப் பார்த்தபிறகு மற்றதெல்லாம் உடான்ஸ் போலத் தோன்றுவதேன்?

சினிமா-9 | 2011/08/12 | அங்கே மாலை மயக்கம்



8 கருத்துகள்:

  1. நல்ல பாடல்
    கே.ஆர் விஜயா கொஞ்சம் கூடுதலாக
    பாவனைகள் காட்டுவது கூட
    அந்தப் படத்தில் அந்த இடத்தில்
    பாலையாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தத் தான் என்பது
    படத்தோடு பார்க்கையில் மிகவும்
    ரசிக்கும் படியாக இருக்கும்
    நல்ல பாடலை பார்க்கக் கொடுத்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. அப்பாதுரை அவர்களே! நசிகேத வெண்பாவில் இப்படி தத்துவ விளக்கம் கொடுக்கவும் வேண்டாம். இப்படி பாட்டுகளைப் போட்டு சிவகுமரன் மாதிரி சின்னப்பையங்களை கெடுக்கவும் வேண்டாம் . வெளங்கு வீராய்யா!---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லாஆகஸ்ட் 13, 2011

    மிக அருமையான ஒரு பாடல், என்றும் பசுமையான பாடல்..
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi@gmail.com

    பதிலளிநீக்கு
  4. நான் இனிமையின் உச்சம் என்று நினைக்கும் சில பாடல்களில் இதுவும் ஒன்று. காதலுக்குரிய இலக்கணங்கள் நிறைந்த பாடல் இது என்பது என் கருத்து. தொடர்ந்து நான்கு நாட்களாக இனிமையான தருணங்களை வழங்கியதற்கு நன்றி அப்பாதுரை! இது இனியும் தொடருகிறதா? இல்லை இன்றோடு நிறைவு பெறுகிறதா?

    பதிலளிநீக்கு
  5. beautiful song.
    பாதி விடியோவை அடைச்சுக்கும் லோகோ இல்லாம ப்ரின்ட் கிடைக்குதா என்ன? இதையும் இங்க்லீஷ்ல எழுதியிருகாலாம்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல ’’ மலரும் நினைவுகள்’’ மூடில் இருக்கிங்க போல...

    பதிலளிநீக்கு
  7. ரசித்து சிரித்தேன் காஸ்யபன் சார்!

    பதிலளிநீக்கு
  8. ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நடக்கட்டும்...
    நடக்கட்டும்.....
    லீவு முடிஞ்சு வந்தா இனிமை இதோ இதோன்னு பாடலா போட்டு கலக்கிட்டு இருக்கீங்க...மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு