அவசரமாகப் பயணம் போக வேண்டியிருந்தது. ஏதோ குளறுபடியில் உடன் எடுத்துச் சென்ற பாடல்களில் இது மட்டுமே தமிழ்ப் பாடல். அதனால் திரும்பத் திரும்பக் கேட்டேன்.
உயர்நிலைப் பள்ளி நாட்கள் என்று நினைக்கிறேன். "என்னய்யா பாட்டு எழுதியிருக்கான் கண்ணதாசன்? அர்த்தமேயில்லையே? ஒருவன் காதலன்.. ஒருத்தி காதலி.. என்றதோ.. என்றது.. என்ன பாட்டு இது? ஒரு நயம் வேண்டாமா?" என்று கிண்டல் செய்த என் மாமா தூங்கும் பொழுது அவருடைய போர்வைக்குள் கணிசமான அளவும் எடையும் கொண்ட ஒரு தவளையை விட்டிருக்கிறேன். இப்பொழுது பயணத்தில் பாட்டைத் திரும்பத் திரும்பக் கேட்டபோது, மாமா சொன்னது உண்மையென்று தோன்றியது.
கண்ணதாசனின் டப்பா வரிகளில் ஒன்று. (பக்கத்தில் தவளையுடன் யாருமில்லையே?)
விஸ்வநாதன். வாழ்வின் இனிமைக்கு ஒரு காரணம். சில சமயங்களில், ஒரே காரணம்.
சினிமா-7 | 2011/08/10 | ஒருவன் காதலன் ஒருத்தி..
2011/08/10
டப்பாவரிக் காதல்
வெத்து வேலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நல்ல பித்தளை தவளை இருக்கு வீட்ல. :)
பதிலளிநீக்குஎன்றதோ...என்றது எங்கூர் பாஷை மாதிரி இருக்குதுங்க....
பதிலளிநீக்குமெட்டு போட்டவுடன் ட்ரேக்கிங் டம்மி வார்த்தைகளை இசையமைப்பாளர்களே இட்டு கட்டுவாங்களாம் ..அப்படி கட்டுனதோட அவுத்து விட்டுருப்பாங்க...அன்னைக்கு கவியரசர் இருந்த பிஸிக்கு இதெல்லாம் சகசம்....
நாமுளும் வார்த்தைகளையா பார்ப்போம்...
அப்பாஜி...உங்க தவளைக்கதை தெரிஞ்சிருந்தா அதுகூட இந்தப் பாட்டுக்குள்ள ஒரு வரியா
பதிலளிநீக்குவந்திருக்கும் !
ஓ...இது வேற பாட்டா....ரெண்டையும் சேர்த்தே போட்டிருக்கலாமோ...
பதிலளிநீக்குஎன்ன இருந்தாலும் இப்படி பாடல்களா போட்டு....
பதிலளிநீக்கு