2011/08/09

காலமென்றும் உண்டு

வெத்து வேலை


தேடியபோது கிடைக்காத விடியோ. 'இங்கே தானே வச்சேன்?' என்று சுலபமாகத் தேட முடிகிறதா?

சிவாஜி நன்றாக நடிக்கக் கூடியவர் (க்க்ம்ம்ம்). சேக்சபோன் வாசிக்கிறார். வாயில் காட்டிய நரம்பு புடைக்கும் நடிப்பை சற்று விரலிலும் காட்டியிருக்க வேண்டாமோ? சேக்சபோனின் ஒலிநயம் ஊதுவதால் மட்டுமே வருவது என்று நினைத்தாரோ? (ரஜினிகாந்த் எப்படி வாசித்திருப்பார்? காற்றில் தூக்கிப் போட்டு ஒலியெழுப்புவாரோ என்னவோ? நினைத்தாலே நடுங்கும்.)

நடனமாடும் கோஷ்டியினரிடம் ஒன்றைக் கவனித்தேன். எத்தனை விதவிதமான தொப்பிகள்! யாருடைய ஐடியா?

சரோஜாதேவியின் நளினம். அன்பு கொண்ட நெஞ்சில் அனுபவம் இல்லை - சக்கை போடு போடுகிறார். அபிநய சரஸ்வதி என்றால் சும்மாவா? இவருக்கு சிவப்பு சேலை கட்டிய ஒப்பனையாளருக்கு நல்ல ரசனை.

விஸ்வநாதன்-கண்ணதாசன்-சுசீலா-சரோஜாதேவி. வாழ்க்கை இனிப்பதற்கு ஒரு காரணம்.

சினிமா-6 | 2011/08/09 | உன்னை ஒன்று கேட்பேன்

8 கருத்துகள்:

  1. மெல்லிசை மன்னர் - கவியரசர் - பாடும் குயில் - க. பைங்கிளி --- நல்ல காம்பினேஷன் ....

    பதிலளிநீக்கு
  2. உண்மை தான். வாழ்க்கை இனிப்பதற்கென்றே சில காரணங்கள் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  3. சூப்பர் பாடல்
    மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்தேன்
    பதிவிட்டுத் தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. வாழ்க்கை இனிக்கன்னு சொல்லிட்டு ஒரே ஒரு இனிப்புத்தானா !

    பதிலளிநீக்கு
  5. ஒரு கதாநாயகனுக்கு எவ்வளவு பொறுப்பு பாருங்கள்...அவருக்கு பியானோ முதல் சக்ஸபோன் வரை எந்த வாத்தியமும் வாசிக்கத் தெரிந்திருக்க வேண்டும். கூடவே நாட்டியமும்!
    'கண்ணை மெல்ல மூடும் தன்னை எண்ணி வாடும் பெண்ணைப் பாடச் சொன்னால் என்ன பாடத் தோன்றும்...'அபிநய சரஸ்வதிதான். கொஞ்சுமொழி பேசிய அதீத பவுடர் அழகி! எனக்கு மிகவும் பிடித்த சுசீலாம்மா பாடல்களில் ஒன்று இது. (என் பையன் சொல்வான் "சிவாஜி என்னப்பா ஒரு ரூவா கொடுத்தா பத்து ரூவாக்கு நடிக்கிறாரு...")

    பதிலளிநீக்கு
  6. //ஸ்ரீராம். கூறியது...(என் பையன் சொல்வான் "சிவாஜி என்னப்பா ஒரு ரூவா கொடுத்தா பத்து ரூவாக்கு நடிக்கிறாரு...")//

    ஸ்ரீராம்

    சென்னை வரும்போது உங்கள் வீடு வர எண்ணம். உங்கள் பையனை ஓடிவிட சொல்லிவிடுங்கள். நான் பச்சையப்பன் கல்லூரி ஆளு. எதாவது ஆகிவிடும்.

    சிவாஜிகணேசன் அவர்கள் பரவாயில்லை, எதற்கும் கொடுத்த காசுக்கு மேலே நடித்து கொடுத்து விடுகின்றார் !!

    இளைய தளபதி என்று பெயர் வைத்து எல்லா பைசாவுக்கும் ஒரே மாதிரி நடிப்பதை விடவா !

    - சாய்

    துரை - நான்கு நாள் ஊர் போனால் இத்தனை பாட்டா. ஆனாலும் இந்த பாடல் தான் எனக்கு நிரம்ப பிடித்தது. உன்னுடைய நெறைய பாடல்களை அடக்கிய எட்டு மணிநேர எம்.பி.த்ரீ பாட்டை தான் டல்லாசில் (டெக்சாஸ்) கேட்டுக்கொண்டு இருந்தேன்.

    "ஆண்கள் மனதே இப்படித்தான் அடிக்கடி மாறும்" பாடலில் பி.சுஷீலா சொல்லும் "ஐய" பல மணிநேரம் ரீங்காரம் இட்டது.

    பதிலளிநீக்கு
  7. //இளைய தளபதி என்று பெயர் வைத்து எல்லா பைசாவுக்கும் ஒரே மாதிரி நடிப்பதை விடவா !//

    பாடல் பல நூறு முறை கேட்டு ரசித்தது. பாடலைவிடவும் ஸ்ரீராம், சாய் இருவரின் பின்னூட்டம் ரசனையாக இருந்தது.

    பதிலளிநீக்கு