2016/04/25

பல்கொட்டிப் பேய்

7


6◄

        சாமி அலமாரியிலிருந்த விபூதி குங்குமப் பொட்டலங்களை எடுத்தான் ரகு. அவ்வப்போது யாராவது தந்த அர்ச்சனை பிரசாத பொட்டலங்கள், மகாலக்ஷ்மி விக்ரகம் எதிரே ஒரு குப்பியில் கிடக்கும். நாங்கள் பரீட்சைக்குப் போகும்பொழுது ஸ்பெஷலாக எங்கள் நெற்றியில் ஒரு சின்ன கீற்றாக இட்டு விடுவார் அம்மா. என்னமோ அதனால் மட்டும் கேள்விகள் சுலபமாகி விடும் என்ற நம்பிக்கையில் நாங்களும் "எக்சாமுக்கு இட்டு விடுமா" என்போம்.

பொட்டலங்களைப் பிரித்துக் குப்பியில் கொட்டினான் ரகு. ஒவ்வொரு கதவு ஜன்னலாகப் போய் விபூதிக்குங்குமம் தேய்த்தான். என்னவோ ஜெபித்தான்.

"என்னடா சொல்றே?" என்றேன்.

"காயத்ரி"

எங்களுக்கு ஸ்ரீதேவியைத் தவிர ஒரு காயத்ரியையும் தெரியாது. அதைக்கூட பார்க்க விடாமல் தடை போட்டுவிட்டார்கள் அம்மா. "என்னடா கதை இது? சுஜாதா கிஜாதலாம் படிக்காதனு சொன்னா கேக்குறியா? எப்பப் பாத்தாலும் மாரைத் தொட்டான்னு ஒரு கதை.. கண்றாவி.. இதையெல்லாம் சினிமா வேறே எடுத்து வச்சிருக்கானா? தோலை உரிக்கணும்".

ரகு மட்டுமே எங்கள் வட்டத்தில் பூணல் அணிந்தவன். அந்தப் பந்தாவில் விபூதிக்குங்குமத்துடன் வீடு முழுதும் ஓடி மந்திரம் போல் ஓதிக் கொண்டிருந்தான். "காயத்ரி மந்திரம் சொல்றேண்டா"

"சொன்னா பேய் ஓடிருமா?" என்றான் ஸ்ரீராம்.

"யார் கண்டா? பேய் மட்டும் போலனு வை.. மவனே.. நான் பூணலே போடமாட்டேன்" என்றான் ரமேஷ்.

"சும்மா இருங்கடா.." என்று அவர்களை அடக்கினான் ரகு. "இனிமே பேய் வராது. வந்துச்சுனா பாத்துக்க வேண்டியது தான்" என்று அவன் சொல்லி முடிக்கவும். பின்கதவு படபடவென்று விட்டுவிட்டுத் தட்டியது. சில நிமிடங்களில் வாசல் கதவருகே ணங் ணங் ணங் என்று சத்தம். கருங்கல்லில் ஆணி அறைவது போல. வாசல் கதவு மற்றும் ஜன்னல்களின் விரிசல்கள் வழியாக வெளியே பார்த்தோம். இரண்டரை அடி மனிதர் ஒருவர் எங்கள் வீட்டு வாசல் துளசிமாடத்தைச் சுற்றியிருந்த கோலத்தரையில் ஒரு ஆணி அடித்துக் கொண்டிருந்தார். திடுக்கிட்டோம் என்றால் அது மிகையல்ல.

"டேய்.. இது குள்ளப் பிசாசுடா. பால்கார தாமு சொல்லியிருக்கான் ஞாபகமிருக்கா? நைட்டு ஒரு மணிக்கு பால் கறக்குறாபுல சத்தம் கேட்டுச்சேனு தொழுவத்துக்குப் போனா அங்கே மூணு காலோட குள்ளமா ஒரு உருவம் மாட்டைச் சுத்தி தரையில ஆணி தேச்சிட்டிருந்துச்சாம். ரெண்டே நாள்ல கறவை மாடு செத்துடுச்சுனு சொல்லி நமக்கு ஒரு வாரம் பால்லே எக்ஸ்ட்ரா தண்ணி கலந்து கொண்டு வந்தான் ஞாபகம் இருக்கா?" என்றேன்.

"சே.. இது தணிகாசலம்டா.. சரியா பாரு"

ஆணி அறைந்து அதில் ஒரு கயிற்றின் முனையைக் கட்டி, நிமிர்ந்து மிச்சக் கயிற்றை இழுத்தபடி எங்கள் வாசற்கதவை நோக்கி எழுந்து நடந்து வந்த உருவம் தணிகாசலம் தான். கதவை வேகமாகத் தட்டி "தம்பிங்களா" என்றார்.

நாங்கள் திகைத்தோம். கதவைத் திறக்கப் போன என்னைத் தடுத்தான் ரமேஷ். "டே.. யோசிச்சு பாருடா.. இது தணிகாசலமா இருக்காது. குடிச்சிருந்தான்ல? பாத்தோம்ல? இப்ப எதுக்கு எழுந்து வந்து வீட்டு வாசல்ல ஆணி அடிக்கிறான்? இதுவும் பேய் தாண்டா. எத்தனை படம் பாத்திருக்கோம்? இது கூட தெரியலேனா எப்படி? கதவைத் தொறந்து உள்ளே விட்டேனு வை. பளார்னு ஒரே அறை.. நம்ம பல்லெல்லாம் கொட்டிடும்.. பல்கொட்டிப் பேய்னு சொன்னாரில்லே?"

"எனக்கு ஏற்கனவே முன்பல் விழுந்து அசிங்கமா இருக்கு.. எல்லா பல்லும் கொட்டிப் போச்சுனா ஸ்கூல் போக மாட்டேன்" என்றான் ஸ்ரீராம்.

"இதான் சாக்குனு ஸ்கூலை நிறுத்துறியா.. பேய் உன் ரெண்டு காலை வெட்டி எடுத்தா கூட உருண்டாவது ஸ்கூல் போகச் சொல்வா அம்மா.."

"தம்பிங்களா.. கதவைத் தொறங்கப்பா சீக்கிரம்.. நீங்க அந்தப்புல நிக்குது தெரியுது.. வெட்டியா பேசாம பல்கொட்டி என்னை விழுங்குறதுக்குள்ளாற தொறங்கப்பா.. மந்திரக் கயிறு கொணாந்திருக்கேன்" என்று கையில் கயிற்றுடன் மீண்டும் கதவைத தட்டினார் தணிகாசலம். "தொறங்கப்பா.. பல்கொட்டிக்கு தெரிஞ்சிடுச்சு.. இந்தால வந்துரும்.. தொறங்கப்பா". பரபரத்தார்.

"வேணாம் தொறக்காதே" என்றான் ரமேஷ். "யோசிங்கடா.. கழுத்துல கயிறு கட்டுன கொப்புளம் இருந்துச்சானு கேட்டு இப்ப இந்தாளே கயிறோட வந்திருக்கான்.. சத்தியமா இது பேய் தான்.. சாமி மட்டும்லடா.. பேய் கூட அவதாரம் எடுக்கும்.. தணிகாசல அவதாரம்"

அதற்குள் விஷ் விஷ் என்று புயல் காற்றடிப்பது போல் பெருத்த ஓசை வாசலில் கேட்க, தணிகாசலம் பதறினார். துளசிமாடம் அருகே பல்கொட்டி உயர்ந்து நின்றது அரைகுறையாகத் தெரிந்தது. உரக்கச் சிரித்தது கேட்டது. "என்ன ஆனாலும் ஆகட்டும்டா" என்றபடி ரகு கதவைத் திறக்க, தணிகாசலம் பதறி உள்ளே வந்தார். திறந்த கதவின் வழியே முதன் முறையாக நாங்கள் எல்லாரும் பல்கொட்டியைப் பார்த்தோம்.

துளசி மாடத்தை ஒட்டி நின்றிருந்தது. தலைகீழான தலை. கிட்டத்தட்ட நாலடி அகலத்துக்கு வாய். நிறைய பற்கள். காதருகே அகஸ்மாத்தாக அந்தரத்தில் தொங்கிய கைகள். ஒரு கையில் மட்டும் விரல்களுக்கு பதிலாக இன்னொரு வாய். ப்ளக் ப்ளக் ப்ளக் என்று திறந்து மூடியபடி இருந்தது. உய்ய்ய்ஹஹ் என்று விசித்திரமான ஓசையுடன் சிரித்து, கோபத்துடன் துப்பியது. முகவாயின் அத்தனை பற்களும் கொட்டி துளசிமாடத்தை மூடின. எத்தனை பற்கள்!

மின்னல் வேகத்தில் இரண்டு கைகளையும் எங்களை நோக்கி வீசியது. ஏறக்குறைய ஸ்ரீராமைப் பிடித்துவிட்டது கையிருந்த வாய். அதாவது வாய் இருந்த கை.

"கதவை மூடிரு தம்பி" என்று தணிகாசலம் அரண்டு மிரண்டு ஸ்ரீராமைக் கயிற்றினால் சுற்றிப் பிடித்துக் கொண்டார்.. பின் வாங்கிய பல்கொட்டி ஹூவென்று அலறி இன்னும் உயர்ந்து... உப்ப்ப்ப் என்று ஊத.. அத்தனை துளசிமாடப் பற்களும் எங்களை நோக்கிக் கத்தி போல் பறந்து வரவும் ரகு வாசல் கதவை மூடவும் சரியாக இருந்தது.

6◄ ►8

26 கருத்துகள்:

  1. //எங்களுக்கு ஸ்ரீதேவியைத் தவிர ஒரு காயத்ரியையும் தெரியாது. //

    யாரு? நம்ம மயிலா? :))))) சூப்பர் !

    >>>>>

    பதிலளிநீக்கு
  2. //எப்பப் பாத்தாலும் மாரைத் தொட்டான்னு ஒரு கதை.. கண்றாவி.. இதையெல்லாம் சினிமா வேறே எடுத்து வச்சிருக்கானா? தோலை உரிக்கணும்". //

    மார்புத் தோலையா உரிக்கணும்ன்னு சொல்றாங்க? (ஒரு டவுட்டு)

    பதிலளிநீக்கு
  3. //இரண்டரை அடி மனிதர் ஒருவர் எங்கள் வீட்டு வாசல் துளசிமாடத்தைச் சுற்றியிருந்த கோலத்தரையில் ஒரு ஆணி அடித்துக் கொண்டிருந்தார். திடுக்கிட்டோம் என்றால் அது மிகையல்ல.

    "டேய்.. இது குள்ளப் பிசாசுடா.”//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    நான் எழுதிய எட்டாக்க(ன்)னிகள் என் நினைவுக்கு வந்து பலக்கச் சிரித்து விட்டேன்.

    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-19_23.html

    >>>>>

    பதிலளிநீக்கு
  4. //ஏறக்குறைய ஸ்ரீராமைப் பிடித்துவிட்டது கையிருந்த வாய். அதாவது வாய் இருந்த கை. //

    நல்லாவே நகைச்சுவையா எழுதுறீங்க. ஒரு நூறு பகுதிகளுடன் மிக நீண்ட நகைச்சுவை தொடராக மிளிரட்டும் என வாழ்த்துகிறேன். :) பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. //ஏறக்குறைய ஸ்ரீராமைப் பிடித்துவிட்டது கையிருந்த வாய். அதாவது வாய் இருந்த கை. //

    நல்லாவே நகைச்சுவையா எழுதுறீங்க. ஒரு நூறு பகுதிகளுடன் மிக நீண்ட நகைச்சுவை தொடராக மிளிரட்டும் என வாழ்த்துகிறேன். :) பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூறு பகுதியா? ஹ்ம்ம்ம்.. ஐடியா எல்லாம் குடுக்காதீங்க..

      நீக்கு
  6. //இரண்டரை அடி மனிதர் ஒருவர் எங்கள் வீட்டு வாசல் துளசிமாடத்தைச் சுற்றியிருந்த கோலத்தரையில் ஒரு ஆணி அடித்துக் கொண்டிருந்தார். திடுக்கிட்டோம் என்றால் அது மிகையல்ல.

    "டேய்.. இது குள்ளப் பிசாசுடா.”//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    நான் எழுதிய எட்டாக்க(ன்)னிகள் என் நினைவுக்கு வந்து பலக்கச் சிரித்து விட்டேன்.

    http://gopu1949.blogspot.in/2014/05/vgk-19_23.html

    >>>>>

    பதிலளிநீக்கு
  7. ’பால்கார தாமு’வைப்பற்றி மேலும் அறிய ஆவலுடன் பல்கொட்டி பேய் துரத்துவதாக நினைத்துக்கொண்டு, இதோ சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரென்று நான் கிளம்பி விட்டேன்.

    பதிலளிநீக்கு
  8. மூணுகால் உருவம்.!!! தலைகீழ் தலை..??? விரலில் ஒரு வாய்...!!!

    கதையின் போக்கு திகில் நடையில் இருந்து மெல்ல மெல்ல நகைச்சுவை நடையினிற்கு மாறிச் செல்வதை எளிதாக உணர முடிகிறது.. சூப்பர்...!!!

    பதிலளிநீக்கு
  9. கண்ணுல தெரியற மாதிரி பேயா? ஐயோ.... பேய் வேற குடும்பம், பிசாசு வேற குடும்பமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐடியா கொடுத்தீங்க ஸ்ரீராம்.. பேயைப் பாத்ததும் கண் தெரியாம போயிடுறாப்புல ஒரு கதை.. கபோதிப் பேய்னு பேரு வைக்கலாமா?

      நீக்கு
    2. இல்லே கண்கொத்திப் பேய்?

      நீக்கு
  10. நான் படிக்கப் போற்தில்லை சாமி. ஆளைவிடுங்க. உங்க ஊருக்காத்தே பேய் மாதிரிதான் சத்தம் போடுகிறது. வெதர் ரேடியோ வேற வார்னிங்க் கொடுத்துக் கத்தறது.
    இந்தக் கலாட்டாவில் உங்க கதையைப் படிச்சதே கலக்கமாக இருக்கு. ஹஹஹஹா.

    பதிலளிநீக்கு
  11. அது சரி, இதிலே வர ஶ்ரீராமுக்கும் எங்கள் ப்ளாக் ஶ்ரீராமுக்கும் ஸ்நானப் ப்ராப்தி இல்லை தானே! :) நகைச்சுவையைத் தெளிப்பதற்கு பதிலாக அள்ளிப் போட்டுடலாம். இன்னும் நல்லா இருக்கும். விரலிலே வாய் இருக்கும் அந்தப் பேயைப் பார்க்கும் ஆவல் ஜாஸ்தியா இருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாமி !
      //அந்தப் பேயைப் பார்க்கும் ஆவல் ஜாஸ்தியா இருக்கு.//

      ayyayyo !! vendam. vendaam.
      அந்த பேயாழ்வார் வந்து சாரை இரண்டு மொத்து மொத்திடுவாரோ அப்படின்னு
      நினைக்கத் தோன்றது.

      அவரோட பாசுரம் ஒன்னு படிக்கச் சொல்லுங்கோ.

      பெற்றம் பிணைமருதம் பேய்முலை மாச்சகடம்,
      முற்றக்காத் தூடுபோ யுண்டுதைத்து, - கற்றுக்
      குணிலை விளங்கனிக்குக் கொண்டெறிந்தான், வெற்றிப்
      பணிலம்வாய் வைத்துகந்தான் பண்டு.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
    2. தமிழ் கொஞ்சுது. குணில். எத்தனை அற்புதமான சொல். எத்தனை பேருக்கு தெரியுமோ? சாதாரண சொற்களுக்கும் ஆங்கிலம் யூஸ் பண்ணும் (ஹி) 'பண்ணு தமிழ்' தற்காலத்தில் எதேச்சையாகப் படித்தாலும் வைணவத் தமிழ் வியக்க வைக்கும் பல நேரம். எனக்கு மிகவும் பிடித்தது: சாதாரண (பிராமண?) விசாரிப்பான "சௌக்கியமா?" என்பதை "நல்லா இருக்கீங்களா?" என்று தெருத் தமிழில் சொன்னாலும் வைணவத் தமிழில் 'திருமேனி பாங்கு' என்று படிக்கையில் ஒரு போதை கிடைக்கிறது. யார்கிட்டேயாவது திருமேனி பாங்கானு கேட்டா அடிக்க வரலாம் இந்நாளில்.

      என் ப்ரென்ட் ராகோ ஒரு தடவை எனக்கு நாலாயிரம் அன்பளிப்பா கொடுத்தான். ஊர் ஊரா மாறினதுல எங்கே வச்சேன்னு தெரியலே, காணோம்.

      நீக்கு
    3. 'யூர் குட் நேம்?'னு இந்தியால கேக்குறது திருப்பெயர்லந்து வந்திருக்குமோ?

      நீக்கு
    4. இதையே பொன்றச்சகடம்னு திருப்பாவை அபேஸ் பண்ணிடுச்சா? யார் மொதல்ல பாடினாங்க?

      நீக்கு
    5. சு.தா. அதெல்லாம் பேய், பிசாசு எல்லாம் என்னைப் பார்த்தாலே ஓடி விடாதா? என்ன, ராத்திரி ஒவ்வொரு நாள் ஓலமிடுவேன்னு நம்ம ரங்க்ஸ் சொல்லுவார். ஒருவேளை பல் கொட்டிப் பேயால இருக்குமோ என்னமோ! முந்தாநாளைக்கு எனக்குப் பதிலா அவர் கத்தினார்! ஹிஹிஹி! அவரும் பல்கொட்டியைப் பார்த்திருப்பார் போல!

      நீக்கு
    6. நிஜமாத்தான். பேய் பிசாசுங்களுக்கு மனுசங்களைக் கண்டாத்தான் பயம். என்னடா இன்னும் விட மாட்டறாங்களேனு பிராந்தி.

      நீக்கு
    7. ஓ, உங்க தம்பி ஶ்ரீராமா அது? இப்போப் புரிஞ்சது! :)

      நீக்கு
  12. /திறந்த கதவின் வழியே முதன் முறையாக நாங்கள் எல்லாரும் பல்கொட்டியைப் பார்த்தோம்/ முன்னொரு பதிவில் பல்கொட்டிப்பேயுடன் முதலிரவு என்று படித்த நினைவு பார்க்காமலேயே முதலிரவா?

    பதிலளிநீக்கு

  13. எங்களுக்கும் பேயைப் பார்க்கும் ஆவல்.
    நான் படித்ததில் இருந்து பிடித்த நல்ல புதிய செய்திகளை மனம் என்ற புதிய இதழயிலில் படித்தேன் அந்த தமிழ் இணைய இதழில் மேலும் சில சுவையான செய்திகளை படிக்க முடிகிறது.

    https://play.google.com/store/apps/details?id=manam.ajax.com.manam

    பதிலளிநீக்கு