2016/04/21

பல்கொட்டிப் பேய்

5


4◄

        "காஞ்சிபுரம் போயிடலாம்" என்று கிளம்பிய ஸ்ரீராமை என்னருகே இழுத்தபடி பூசாரியிடம் கேட்டேன். "டேஞ்சர்னா என்ன மாதிரி சொல்றீங்க?"

"எனக்கு அவ்வளவா தெரியாதுப்பா... எங்க ஆத்தா சொல்லும் .. பல்கொட்டி ரொம்ப அபூர்கமுனு.. அதுகிட்டே கேக்கலாம்"

"உங்களுக்கே ரெண்டு ஆத்தா வயசு இருக்கும் போலிருக்குதே? உங்க ஆத்தா சொன்னாங்களா?" என்றான் ரகு.

"எங்க ஆத்தா இறந்து அம்பது வருசமாச்சு தம்பி"

"என்னாது? அம்பது வருசமாச்சா? அவங்ககிட்டே எப்படி கேப்பீங்க?"

"தம்பி.. எல்லா பேயும் ஒண்ணா நினைச்சுறாதே.. எங்க ஆத்தாவும் பேய் தான். பேயாத்தானு கூப்பிடுவோம்"

"பேயாத்தா.. நல்ல பேரு. யாரு, நீங்க வச்சதா?"

"அடக் கேளு தம்பி.. பேயுன்னாலும் குடும்பத்துல ஒண்ணாச்சே..?"

"குடும்பப் பேய்னு சொல்லுங்க"

"வெளயாட்டில்ல தம்பி. எல்லார் வூட்லயும் நடக்குறது தான்.. உங்க ஐரூட்டுங்கள்ள வருசா வருசம் திதினு செத்தவங்களைக் கூப்பிட்டு கொண்டாடலியா? செத்தவங்க திரும்புனா பேயில்லாம என்னாவாம்? அத்த விடு தம்பி.. எங்க பேயாத்தா இருக்குதுல்ல? அதாண்ட குடும்ப விசயங்களுக்கு அடிக்கடி குறி கேப்போம்.. ஒரு கல்யாணம் கருமாதினா கூப்டா வரும்.. அதான் சொல்லியிருக்குது பல்கொட்டி பேய் பத்தி புள்ளயா இருக்குறப்ப.. பேயுங்க உலாத்துறப்ப எப்பனாச்சும் தான் பல்கொட்டி வருமாம்.. கருநாகப்பாம்பு மாதிரி.. பல்கொட்டியப் பாத்தா உடனே அத்தனை பேயுங்களும்.. காட்டேரி கூட.. சட்டுன்னு ஓரங்கட்டிக்குமாம்.."

"உங்க ஆத்தா பல்கொட்டியா? காட்டேரியா?"

"பேயாத்தா சாதுபா. ஆனா அதுக்கு பேயுங்க பத்தின வெவரம் அத்தினியும் தெரியும்.. அப்பப்ப எம்மேலே வந்து சாமியாடுறாப்புல ஆடும்.. அதுகிட்ட கேட்டு சொல்றேன்.. ராத்திரி ஒம்பது மணிக்கு மேலே வா.. காப்பு கட்டறதுனா கட்டித் தாரேன்.." என்று தணிகாசலம் கருங்கல் பெஞ்சிலிருந்த துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினார்.

ஒன்பது மணியடித்ததும் எல்லோரும் பூசாரி வீட்டுக்குப் போனோம். துர்கையம்மன் கோவிலை ஒட்டியே அவர் வீடு. சரியாகக் குடித்திருந்தார். "அடப்பாவி.. இவன் சாதாரணமாவே ரீல் விடுவான்.. இப்ப குடிச்சிருக்கான்.. என்ன சொல்லப் போறானோ?" என்று முணுத்தபடி நான் பூசாரியருகே சென்று "தணிகாசலம்.. எங்களை வரச்சொன்னீங்களே.. இப்படி குடிச்சிருந்தா எப்படி ?" என்றேன்.

"தம்பி.. எனக்கு பயம் வந்தா குடிச்சிருவேன். அதான்"

"என்ன சொல்றீங்க?"

"ஆத்தா கிட்டே பேசினேன்.. பல்கொட்டி பிடிச்சா பொஞ்சாதி மாதிரியாம். சாவுற வரைக்கும் விடாதாம்.. அதும் யார் கை கண் பட்டுச்சோ அவங்களை விடவே விடாதாம்.. உங்கள்ள யார் பாத்தாங்க? யாருனா தொட்டாங்களா?"

"எல்லாரும் பார்த்தோம்.. ரகு மட்டுந்தான் தொட்டது "

"விடாதுபா.. உங்களை நினைச்சு எனக்கே பயமாயிருச்சு.. அதான் குடிச்சுட்டேன்" என்றபடி பட்டென்று கீழே படுத்து உடனே தூங்கிவிட்டார்.

"என்னடா செய்யுறது?" என்றான் ரமேஷ்.

"சும்மா இருங்கடா" என்றேன். என்னவோ தெரியவில்லை. தைரியம் பொங்கி வந்தது. "பம்மல்ல இருந்துகிட்டு பேய்க்கு பயந்தா எப்படி?" என்றேன்.

"அதானே?" என்ற ரகு எங்களைத் தள்ளியபடி வீட்டுக்குள் நடந்தான்.

ஹாலில் படுத்தோம். அரட்டையடித்தபடி தூங்கிவிட்டோம்.

பின் கதவு கடகடவென்று தட்டப்படும் ஓசை லேசாகக் கேட்க சட்டென்று விழித்தேன். என் போர்வையைக் காணோம். பக்கத்தில் படுத்திருந்த ரகு இழுத்திருக்க வேண்டும் என்று நான் அவன் மேலிருந்த போர்வையை இழுத்தேன். அத்தனை மென்மையான போர்வை எங்கள் வீட்டிலே கிடையாதே என்று தோன்ற, எழுந்து விளக்கைப் போட்டேன்.

ரகு, ஸ்ரீராம், ரமேஷ்.. வரிசையாகப் படுத்திருந்த யார் மீதும் போர்வையைக் காணோம். மாறாக போர்வை போல் அடர்ந்து படர்ந்திருந்த கருகருவென்று முடி.. தொடர்ந்து பின் கதவு வரை போனது. இவர்களோ அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள்.

அப்போதுதான் கவனித்தேன். போர்வை போல் படர்ந்திருந்த முடி இவர்களை மெள்ள மெள்ள கதவை நோக்கி இழுக்கத் தொடங்கியதை.

"எழுந்திருங்கடா டேய்!" என்று கூச்சல் போட்டேன். ரகு எழுந்து உடனே நடப்பதைக் கவனித்து விட்டான். சடாரென்று ஸ்ரீராமையும் ரமேஷையும் முடிப் போர்வையிலிருந்து வெளியே இழுத்துப் போட்டான்.

புசுக்கென்று அத்தனை முடியும் பின் கதவு வழியாக மறைந்தது.

4◄ ►6

17 கருத்துகள்:

  1. இன்னிக்கி தூங்கின மாதிரி தான்!

    பதிலளிநீக்கு
  2. //"ஆத்தா கிட்டே பேசினேன்.. பல்கொட்டி பிடிச்சா பொஞ்சாதி மாதிரியாம். சாவுற வரைக்கும் விடாதாம்.. அதும் யார் கை கண் பட்டுச்சோ அவங்களை விடவே விடாதாம்.. உங்கள்ள யார் பாத்தாங்க? யாருனா தொட்டாங்களா?"

    "எல்லாரும் தான் பார்த்தோம்.. ரகு மட்டுந்தான் தொட்டது "

    "விடாதுபா.. உங்களை நினைச்சு எனக்கே பயமாயிருச்சு.. அதான் குடிச்சுட்டேன்" என்றபடி பட்டென்று கீழே படுத்து உடனே தூங்கிவிட்டான்.//

    சூப்பரோ சூப்பர் ! :)))))))))))))))

    தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  3. கதையை சீக்கிரம் முடிச்சு விடுங்க சார்...இப்படி துண்டு துண்டா அனுப்பாதீங்க..பதறுது...

    பதிலளிநீக்கு
  4. அட! ஆத்தா பேய், காட்டேரி, குடும்பப் பேய், நல்லாருக்கே...

    பதிலளிநீக்கு
  5. //குடும்பப் பேய்//

    ஒவ்வொரூ குடும்பத்திலும் ஒவ்வொரு பேய் .

    இயற்கை தானே !!

    சிலர் பேயாய் திரிஞ்சிட்டு, மற்றவர்களைப் பாடாய் படுத்திவிட்டு
    மலை ஏறுகிறார்கள்.
    சிலருக்கு பேய்க்குணம் அப்படியே தங்கிப் போய் விடுகிறது.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  6. இறந்தவர்கள் எல்லாம் பேய்களா. அப்போ இந்த ஆவி ஆன்மா சமாச்சாரமெல்லாம் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இறந்தார்கள் எல்லாம் பேய்களா? எங்கிருந்து பிடிச்சீங்க? இருப்பதாக என்னும் இறந்தவர்கள்னு சொல்றீங்களோ?
      அது சரி, சுப்பு தாத்தா சொல்றத கவனிச்சா இருக்குறவங்க தான் பேய்னு தோணலே? "சிலர் பேயாய் திரிஞ்சிட்டு, மற்றவர்களைப் பாடாய் படுத்திவிட்டு மலை ஏறுகிறார்கள்"

      நீக்கு
  7. //பல்கொட்டி பிடிச்சா பொஞ்சாதி மாதிரியாம். சாவுற வரைக்கும் விடாதாம்.//
    சிரிச்சு சிரிச்சு முடியல....என் பல்லு கொட்டிப்போயிடும் போலிருக்கே!

    பதிலளிநீக்கு
  8. போர்வை போல் படர்ந்திருந்த முடி இவர்களை மெள்ள மெள்ள கதவை நோக்கி இழுக்கத் தொடங்கியதை.//

    பயங்கரம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வேறே!
      புசுக்கென்று அத்தனை முடியும் பின் கதவு வழியாக மறைஞ்சதே தவிர, இவங்க இல்லே! இவங்க மேலே ஒண்ணு ரெண்டு முடித் துணுக்குகளை விட்டுப் போயிருந்தாத் தான் ஆபத்து!

      நீக்கு
    2. கதையை சொல்லிடுவீங்க போலிருக்கே?

      நீக்கு
  9. /செத்தவங்க பேயில்லாம என்னவாம் / மேலே பதிவிலிருந்து பிடிச்சேன்

    பதிலளிநீக்கு
  10. சில பின்னூட்டங்களைப் பார்த்தால், பதிவுக்கு ஒத்துழைக்கணுமே என்று எழுதுகிற மாதிரி இருக்கு. இல்லே இஜ்த மாதிரி விஷயங்களைப் படிக்கும் பொழுதே அப்படிப் பயப்படற பாப்பா மனசு வந்திடுமோ?.. இல்லே, இறந்தவங்க அப்படி இப்படில்லாம் கப்ஸா கலக்கறதாலே, ஏதாவது குத்தமாகிடப்போயிடுமோங்கற ஜாக்கிரதை உணர்வோ?.. தெரியலே!

    ஆனாலும் ஒண்ணு சொல்லணும். இந்த மாதிரி விஷயங்களுக்கு என்றே சில வார்த்தைப் பிரயோகங்கள் இருக்கு.. அது செய்யற வேலைன்னு நினைக்கிறேன். இன்னும் முழுசா உங்க சரக்கு வெளிவராத போதே, இப்படின்னா.. போகப்போக என்னவாகும்ன்னு தெரிலே.

    ஊரோட ஒத்து வாழ் கதையாய் நாமும் சொல்லி வைப்போம்: இப்போ வந்து போனது பல்கொட்டி பேய்க்கு அம்மா கூந்தல் விரிச்ச பேய் தானே>,, இது போய் பல்கொட்டிப் பேய் கிட்டே எல்லார்மேலேயும் கூந்தலை விரிச்ச கதையைச் சொன்னால், அதுக்கு மேலே என்னவாகும்ங்கறதை நினைக்கவே பயமா இருக்கே! ஒரு துணுக்கு கூந்தல் யார் மேலே அது விட்டுப் போயிருந்தாலும் ஆபத்தாச்சே! நல்லா நறுவிசா தட்டி கொட்டிப் பாத்திடுங்க.. பின்னாலே இதுவாயிடுத்து, அதுவாயிடுத்துன்னு புலம்பினா பிரயோசனமில்லே.. ஆமா!..

    பதிலளிநீக்கு
  11. பல்கொட்டிப் பேய்க் கூந்தலை விரித்துப் போர்வைப் பேயாகி,,

    ஆத்தா பேயையே ஓட்டிவிட்டது.
    பொஞ்சாதி வேற பேய் வேற சாமி.
    நீங்க வேற.

    பதிலளிநீக்கு
  12. ஆஹா, கூந்தலாலே கட்டி இழுக்கும் பேயா? நல்லாத் தான் இருக்கு!

    பதிலளிநீக்கு