2016/04/28

பல்கொட்டிப் பேய்

10

9◄

        குவைத் தொடர்ந்து ரமேஷும் நானும் இழுக்கப்பட்டோம். பூசாரி சொன்னதையெல்லாம் ஸ்ரீராம் நினைவில் வைத்திருக்க வேண்டுமே! "சின்னத்தம்பி.. இப்ப நீதான் ஹீரோ. ரஜினிகாந்த். தெரிதா?" என்று பூசாரி அவனை உசுப்பேற்றியிருந்தார். ஸ்டைல் பண்ணுகிறேன் பேர்வழி என்று இவன் சொதப்பாமல் இருக்கணுமே!

எங்கள் வீட்டு வாசல் கதவைத் தாண்டியதும் மற்ற மூவரில் எவருமே என் கண்களுக்குத் தெரியவில்லை. "தம்பிங்களா.. பேய் ஒருத்தரை ஒருத்தர் காட்டாது.. மயக்கி மறைச்சுறும். ஆனா நீங்க பேசுறத ஒருத்தரை ஒருத்தர் கேக்க முடியும்.. மறந்துறாதீங்க. நான் உங்களை பாத்துட்டே இருப்பேன். என் குரலை நீங்க கேட்க முடியும்.. எப்படியாவது சமாளிச்சு பல்கொட்டியை ஏமாத்திறலாம்.. பயந்துறாதீங்க. நான் சொன்னதையெல்லாம் மறந்துறாதீங்க.." என்று எங்கள் பின்னால் அவர் இரைவது கேட்டது.

'இத்தனை நேரம் பேய் என் முகத்தருகே வந்திருக்கணுமே? வரலியே?' என்று எண்ணிக்கொண்டிருந்த போதே பல்கொட்டி என் முகத்தருகே வந்து உற்றுப் பார்த்தது.. என்னைச் சுற்றியது.. "தம்பி.. எச்சில் அடையாளம் இருக்குதானு பாத்துக்குது!".

"ஹ்ஹா!" என்ற பல்கொட்டியின் ஆவேசம் எங்களை பயமுறுத்தியது. கயிற்றை அறுக்கப் பார்த்து முடியாமல் ஜிவ்வென்று உயரே ஏறியது. "தம்பிங்களா.. கயிறு முனையில அம்மனுக்கு வெட்டின ஆட்டு ரத்தம் கொட்டி கயிறு முச்சும் பூசியிருக்கேன்.. பல்கொட்டியால வெட்ட முடியாது. நீங்க கயித்தை மட்டும் விட்டுராதிங்க"

"ரொம்ப ஸ்ரேஷ்டம்.. துரை, உங்கம்மா பக்தியா துளசிமாடம் எல்லாம் வச்சா ஆணியடிச்சு மாமிசம் தடவிட்டாரு தணிகாசலம்.. என்ன்ன்னவோ நாறுதேனு பாத்தேன்.. ரகு வேறே கன்னாபின்னானு சாப்பிட்டிருந்தானா, சரியா சொல்ல முடியலே.. ஆட்டு ரத்தமா? சரிதான்.. துளசியும் ஆட்டு ரத்தமும் கலந்து.. பலே பலே""

"சும்மா இருடா ரமேஷ்.." என்றான் ரகு.

திடீரென்று எங்களைக் கட்டியிருந்த கயிறு தாறுமாறாக ஆடியது. "தம்பிங்களா.. கயிற விட்டுறாதீங்க. பல்கொட்டி வெள்ளாடத் தொடங்கிடுச்சு.." பூசாரியின் குரல்.

"ஸ்ரீராம்! பிடியை விட்டுறாதே!" என்று அலறினேன். "ரகு.. அவனைப் பாத்துக்கடா"

"எங்கடா? அவன் என் கண்ணுக்குத் தெரிஞ்சா தானே?"

கயிறு ஆவேசமாக ஆடி எங்களை சுழற்றியடித்தது. "மந்திரக்கயித்த வெட்ட முடியாம பேய் உங்களை தூக்கியாட்டி வெளில கொணாரப் பாக்குது.. பேயாத்தா சொன்னாபுலயே"

"ஸ்ரீராம்.. பிடிச்சுக்கடா" என்றேன் மறுபடி.

"ஐயோ! சின்னதம்பி பிடியை விட்டுருச்சுபா!" என்று பூசாரி கூவுவது கேட்டது.

"ஸ்ரீராம்!" என்று அலறினோம். அவனிடமிருந்து பதில் இல்லை. விர்ரென்று பல்கொட்டி எங்களைச் சுற்றி வந்தது. அடுத்த நிமிடங்களில் நாங்களும் எங்களை பிடிப்பைத் தளர்த்தினோம். பூசாரி சொன்னது போலவே பல்கொட்டி தன் வாயருகே இருந்த புகைக் கயிற்றினால் எங்களைக் கட்டித் தலைகீழாகத் தொங்கவிட்டது.

""வவ்வாலாயாச்சுரா.. வாழ்க்கைல வவ்வாலா மாறுவேன்னு நினைக்கவேயில்லே"

"சும்மா இருடா ரமேஷ்.." என்றேன். "ஸ்ரீராம்!" என்று கூவினேன். பதிலே இல்லை. எனக்குப் பயம் வந்தது.

பூசாரி சொன்னது போல் பல்கொட்டி உப்பென்று ஊதிய வேகத்தில் அதன் பற்கள் அத்தனையும், வாய் நடுவில் இருந்த குட்டித் தலையைத் தவிர, கீழே விழுந்து தெறித்து எங்களைச் சுற்றிப் பறந்தன. ஊதிய வேகத்தில் எங்கள் தலைமுடி உதிர்ந்தது. உச்சந்தலையில் கொசு கடிப்பது போல் ஒரு உணர்வு. ஏதும் செய்ய இயலாத நிலையில் தலையைத் தடவிக்கொண்டேன். இனி ரத்தம் சொட்டத் தொடங்கிவிடும். எரிச்சலோடு கைகளைக் காற்றில் துழாவிப் பேயைப் பிடிக்கப் பார்த்தேன்.. பேயின் கழுத்தை நெறித்து என்ன பலன் என்றெல்லாம் தோன்றவில்லை. பயத்தில் எங்கள் இஷ்டத்துக்கு என்னென்னவோ செய்தோம் என்பது பூசாரியின் ரன்னிங் கமென்டரியினால் புரிந்து கொண்டோம்.

"ஸ்ரீராமை காவு குடுத்தப்புறம் தானேடா நம்பளைப் பிடிக்கும்னான் பூசாரி? அதுக்குள்ளே என் தலைல ஓட்டை போட்டுருச்சேடா" என்று அலறினான் ரமேஷ். என் தலையைத் தடவிக்கொண்டேன். நிச்சயம் ஈரமாக இருந்தது.

"ஸ்ரீராம்!" என்று நான் கூவ.. தொடர்ந்து மற்றவரும் கூவ.. அவனிடமிருந்து பதிலே இல்லை. பூசாரி சொன்னபடி பல்கொட்டி எங்களைச் சுற்றி ஆடி வந்தது. திறந்த வாயில் சிறிய தலை இன்னும் கோரமாகத் தெரிந்தது. ஒவ்வொரு சுற்றிலும் அதன் வாயில் தெரிந்த தலையைப் பார்த்து திடுக்கிட்டேன். ஸ்ரீராம் நிச்சயம் மயங்கி இருக்க வேண்டும். ஒரு வேளை.. "தணிகாசலம்!" என்று கூவினேன். "தம்பி எப்படி இருக்கான் பாருங்க.. பாத்து சொல்லுங்க..!"

"ரகு தம்பி மயங்கிருச்சு.. ரமேஷ் தம்பி செத்துருச்சா மயங்கிருச்சா தெரியலே"

"யோவ் குடிகாரப் பூசாரி.. நான் இன்னும் சாவலயா.. நான் மட்டும் செத்தா மவனே உன் மேலே பேயாட்டம் ஆடறேனா இல்லையா பாரு"

"தணிகாசலம்.. என் தம்பியைச் சொன்னேன்.. ஸ்ரீராமைப் பாருங்க! ரமேஷ், சும்மா இருடா! நாம செத்தா எல்லாருமே சேந்து பல்கொட்டியை ஒரு வழி பண்ணிறலாம்.. இப்போதைக்கு பூசாரி திட்டப்படி நடப்போம்.."

திடீரென்று பல்கொட்டி உக்கிரமானது.. புஸ் புஸ் என்று தீப்பொறி.. கோபமும் ஆத்திரமும் பொங்க எங்கள் மீது பாய்ந்து பாய்ந்து விலகியது.. எங்களைச் சுற்றி வெப்பம்.. புகைக்கயிறு எங்களை இறுக்கத் தொடங்கியது..

"ஆகா! பலே பலே! சூப்பருபா" என்ற பூசாரியின் குரல் கேட்டது..

"யோவ்.. பேய் எங்க கழுத்தை இறுக்கி தணல்ல போடப் போவுது.. நீ ரஜினிகாந்த் படமாட்டம் விசிலடிக்கிறியா?"

"ஆமா தம்பிங்களா.. சின்னத்தம்பி சூப்பர் ஸ்டாரு. பல்கொட்டி இந்தப்ப சுத்தி வந்துச்சா.. தம்பி தொங்கிட்டிருந்தபடியே உல்டாவா ஒரு பல்டியடிச்சு காலால பல்கொட்டி வாயில இருந்த குட்டித் தலையை உதைச்சு தட்டி விட்டிருச்சு.. பறந்து விழப்போன தலையை அலாக்கா எம்பிப் பிடிச்சிருச்சு.. சூப்பர்"

எனக்குப் பெருமையாக இருந்தது.. பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கை. இனி பூசாரி சொன்ன எதையும் ஸ்ரீராம் மறக்காமல் செய்தால் சரி. தம்பியுடையான் பேய்க்கு அஞ்சான்.

பல்கொட்டி ஆவேசமாக ஸ்ரீராமையே சுற்றி வருவது பூசாரி சொல்லச் சொல்லப் புரிந்தது. "பயந்துராத ஸ்ரீராம், தலையை மட்டும் திருப்பிக் குடுத்துடாத.. ஏறக்குறைய விடியத் தொடங்கிடுச்சுடா.." என்ற ரகுவின் குரலைக் கேட்டதும் நிம்மதியானது. "ரகு.. நீ பூட்டகேஸ்னு நினைச்சுட்டேன்.. சாரிடா" என்றேன்.

ஒரு மணி நேரம் போல் எங்களைக் கொடுமைப்படுத்திய பேய் விடியலில் சட்டென்று காணாமல் போனது. கீழே விழுந்த எங்களை பூசாரி ஓடி வந்து மறுபடி ஆட்டு ரத்தக் கயிற்றினால் கட்டி வீட்டுக்குள் இழுத்து வந்தார். எங்கள் தலைக்காயங்களைத் துடைத்து விபூதி பூசினார். எல்லோரும் ஸ்ரீராமைக் கட்டிப் பிடித்துப் பாராட்டினோம். நன்றி சொன்னோம்.

"தணிகாசலம்.. நீங்க சொன்னபடி பல்கொட்டி என்னைச் சுத்தி சுத்தி வந்தப்போ தலையை எடுக்கத் தாவினேன்.. ஆனா அது விலகி விலகி சிரிக்குது.. அதான் அடுத்த தடவை வந்தப்ப ரஜினி ஸ்டைல்ல ஒரு பல்டி அடிச்சு தலையை தூக்கியடிச்சு இடது கையால ஒரு கேச் பிடிச்சேன்.."

"ரொம்ப ஓவரா போவாதடா டேய்.. தலையை பத்திரமா வச்சிருக்க இல்லே?"

"இதோ" என்று காட்டினான். ஒரு பெரிய கோலி உருண்டை போல் வழவழப்பாக இருந்த எலும்பு உருண்டையின் நடுவே கரும்பொட்டு. இப்போது பார்ப்பதற்கு சாதுவாக இருந்தது. பூசாரி அதை வாங்கிக் கொண்டார். "அம்மனுக்கு மாலை கட்டிப் போட்டுர்றேன் தம்பிங்களா. பல்கொட்டி பயமே வராது இனி.. சின்னத்தம்பி.. நான் சொன்னபடி பேயாண்ட கேட்டில்ல?"

"தலையைக் குடு.. உன்னை மட்டும் விட்டுடறேனனு சொல்லிச்சு பேய் மொதல்ல. தலையைக் குடுக்காட்டி உங்க அத்தனை பேரையும் ரத்தம் உறிஞ்சு சாவடிக்குறதா பயமுறுத்திச்சு.. சுத்தி சுத்தி வந்து அதட்டலும் மிரட்டலும்.. நான் எதுக்குமே பதில் சொல்லாம அமைதியா இருந்தேன்.. கடைசில பேய் கெஞ்ச ஆரம்பிச்சு.... தலையை குடுத்துரு அத்தனை பேரையும் விட்டுறதா சொல்லிச்சு.. அப்பத்தான் பூசாரி சொன்னாப்புல பேய் கிட்டே சொன்னேன்.."

"என்ன?"

"முப்பது வருஷம் கழிச்சு வானு"

"அடப்பாவி.. டேய்.. தணிகாசலம் முன்னூறுனு இல்லே சொன்னாரு?"

"ஆமா தம்பி.. நான் கூட முன்னூறு மில்லி மாதிரினு எத்தினி தபா சொன்னேன்?"

"தெரிலடா.. பயத்துலயும் அவசரத்துலயும்.." என்ற ஸ்ரீராமை முறைத்தோம். பூசாரி சொன்ன முக்கியமான விஷயத்தைக் கோட்டை விட்டுவிட்டான். முன்னூறில் ஒரு சைபர் குறைத்துவிட்டான் "ஏண்டா.. இதென்ன உன் கணக்கு பரீட்சையா? முப்பது வாங்க? வாழ்க்கை பரீட்சைடா" என்றான் ரகு.

"முப்பது வருசத்துல திரும்பி வந்தா என்ன பண்றது?"

"போனாப் போகுது" என்றார் பூசாரி. "சின்னத்தம்பியை கோவிக்காதீங்க.. அதாலதானே இன்னிக்கு பிழைச்சு வந்தீங்க.." என்ற பூசாரி பேச்சைக் கேட்டு அடங்கினோம். அவர் தொடர்ந்தார். "தம்பிங்களா..இன்னும் முப்பது வருசத்துல பல்கொட்டியே காணாமப் போயிறலாம்.. அப்படி இல்லின்னா கூட உங்க அத்தினி பேருக்கும் கல்யாணம் கட்டிக் குடும்பமாயிரும்.. பொஞ்சாதி பிள்ளைக் குட்டிங்க தொல்லையைப் பாத்து.. இருக்குற பேய் பிசாசுங்களே போதும்னு பல்கொட்டி வராமலே இருந்துரும்"

"கண்டிப்பா வரும்" என்றான் ரகு. "நீ வேணா பாரு துரை. முப்பது வருஷம் கழிச்சு தனியா இருக்குறப்ப ஒரு நாள் ராத்திரி நிச்சயம் வரும்".

9◄ ►11

20 கருத்துகள்:

  1. சரி... கொசுவர்த்தி முடிஞ்சுது... அடுத்து? பல்கொட்டி கரெக்டாய் ரிமைன்டர் போட்டு வந்துடுச்சே...

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாஏப்ரல் 28, 2016

    பொஞ்சாதி பிள்ளைக் குட்டிங்க தொல்லையைப் பாத்து.. இருக்குற பேய் பிசாசுங்களே போதும்னு பல்கொட்டி வராமலே இருந்துரும்"//

    29 வருஷம் 11 மாதம் 29 நாள் 11 மணி நேரம் தான் முடிஞ்சிருக்கு.

    இன்னும் ஒரு மணி நேரம் பாக்கி இருக்கு.

    லேட் ஆ வந்தாலும் லேட்டஸ்ட் ஆ வரும்.

    ஹ ஹ ஹா ஹா.

    பல்கொட்டி

    பதிலளிநீக்கு
  3. அப்போ இந்தக்கதையைத் தொடர்ந்து படிக்க இன்னும் 30 வருஷங்கள் நாங்கக் காத்துக்கிடக்கனுமா? :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லாஏப்ரல் 29, 2016

      நோ.நோ.
      கதையை நீ ஆரம்பத்திலே சரியா படிக்கல்லே
      இப்பவாவது படி.
      2 லேந்து 5 வரை பிளாஷ் பாக்.
      30 வருஷம் ஆயிடுத்து.

      நாளைக்கு 30 வருஷம் முடிஞ்சு போயி.

      கதவை சாத்தி வை எதுக்கும்.

      வர்றேன்.

      நீக்கு
    2. அனானி கமென்ட் எனக்கே கொஞ்சம் பயமா இருக்கே?

      நீக்கு
  4. திகில் திகில் . நான் இப்ப சிரித்தால் கூட என் பல்லைப் பார்த்து எனக்கு பயம் வந்துடும்.

    பதிலளிநீக்கு
  5. ஷஷ்டியை நோக்க சரவண பவனார்
    சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
    பாதம் இரண்டில் பன்மணி சதங்கை
    கீதம் பாட கிண்கிணி ஆட
    மைய நடம் செய்யும் மயில் வாகனனார்
    கையில் வேலால் எனை காக்க என்று வந்து
    வர வர வேலாயுதனார் வருக!
    வருக! வருக! மயிலோன் வருக!
    இந்திரன் முதலா எண்டிசை போற்ற
    மந்திர வடிவேல் வருக வருக!
    வாசவன் மருகா வருக வருக!
    நேச குறமகள் நினைவோன் வருக
    ஆறுமுகம் படைத்த ஐயா வருக
    நீறிடும் வேலவன் நித்தம் வருக
    சிரிகிரி வேலவன் சீக்கிரம் வருக!
    சரவண பவனார் சடுதியில் வருக
    ரஹண பவச ரரரர ரரர
    ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
    விணபவ சரஹண வீரோ நமோ நம!
    நிபவ சரகன நிற நிற நிறென
    வசர ஹணபவ வருக வருக!
    அசுரர் குடி கெடுத்த ஐயா வருக!

    என்னை ஆளும் இளையோன் கையில்
    பன்னிரண்டு ஆயுதமும் பாசாங்குசமும்
    பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க
    விரைந்தெனை காக்க வேலோன் வருக!
    ஐயும் கிளியும் அடைவுடன் சௌவும்
    உய்யொளி சௌவும் உயிரையும் கிலியும்
    கிலியும் சௌவும் கிளரொளி ஐயும்
    நிலை பெற்று என்முன் நித்தமும் ஒளிரும்
    சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும்
    குண்டலி யாம்சிவ குகன் தினம் வருக!
    ஆறு முகமும் அணிமுடி ஆறும்
    நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
    பன்னிரு கண்ணும் பவள செவ்வாயும்
    நன்னெறி நெற்றியில் நவமணி சுட்டியும்
    ஈராறு செவியில் இலகு குண்டலமும்
    ஆறிரு தின் புயத்து அழகிய மார்பில்
    பல்பூஷணமும் பதக்கமும் தரித்து
    நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
    முப்புரி நூலும் முத்தணி மார்பும்
    செப்பழகு உடைய திருவயிறு உந்தியும்,
    துவண்ட மருங்கில் சுடரொளி பட்டும்
    நவரத்னம் படித்த நற் சீராவும்
    இரு தொடை அழகும் இணை முழந்தாளும்
    திருவடி அதனில் சிலம்பொலி முழங்க

    செககண செககண செககண செகண
    மொகமொக மொகமொக மொகமொக மொகென
    நகநக நகநக நகநக நகென
    டிகு குண டிகுடிகு டிகுகுண டிகுண
    ரரரர ரரரர ரரரர ரரர
    ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

    பதிலளிநீக்கு
  6. டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
    டகு டகு டிகு டிகு டங்கு டிங்குகு
    விந்து விந்து மயிலோன் விந்து
    முந்து முந்து முருகவேல் முந்து
    எந்தனை ஆளும் ஏறக செல்வ!
    மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும்
    லாலா லாலா லாலா வேசமும்
    லீலா லீலா லீலா விநோதனென்று
    உன்திரு வடியை உறுதி என்று எண்ணும்
    என் தலை வைத்து உன் இணை அடி காக்க!
    என் உயிருக்கு உயிராம் இறைவன் காக்க!
    பன்னிரு விழியால் பாலனை காக்க!
    அடியேன் வதனம் அழகு வேல் காக்க!
    பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க!
    கதிர்வேல் இரண்டும் கண்ணினை காக்க!
    விதிசெவி இரண்டும் வேலவர் காக்க!
    நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க!

    பேசிய வாய்தனை பெருவேல் காக்க!
    முப்பத்திரு பல் முனைவேல் காக்க!
    செப்பிய நாவை செவ்வேல் காக்க!
    கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க!
    என் இளம் கழுத்தை இனியவேல் காக்க!
    மார்பை இரத்ன வடிவேல் காக்க!
    சேர் இள முலைமார் திருவேல் காக்க!
    வடிவேல் இருதோள் வளம்பெற காக்க!
    பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க!
    அழகுடன் முதுகை அருள்வேல் காக்க!
    பழுபதினாரும் பருவேல் காக்க!
    வெற்றிவேல் வயிற்றை விளங்குவேல் காக்க!
    சிற்றிடை அழகுற செவ்வேல் காக்க!
    நாணாம் கயிற்றை நல்வேல் காக்க!

    பதிலளிநீக்கு
  7. ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க!
    பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க!
    வட்ட குதத்தை வல்வேல் காக்க!
    பணை தொடை இரண்டும் பெருவேல் காக்க!
    கணைக்கால் இரண்டும் கதிர்வேல் காக்க!
    ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க!
    கைகள் இரண்டும் கருணைவேல் காக்க!
    முன்கை இரண்டும் முரண்வேல் காக்க!
    பின்கை இரண்டும் பின்னவள் இருக்க!

    நாவில் சரஸ்வதி நற்றுணை ஆக
    நாபி கமலம் நல்வேல் காக்க!
    முப்பால் நாடியை முனைவேல் காக்க!
    எப்போதும் எனை எதிர்வேல் காக்க!
    அடியேன் வசனம் அசைவுள நேரம்
    கடுகவே வந்து கனகவேல் காக்க!
    வரும்பகல் தன்னில் வஜ்ரவேல் காக்க!
    அரை இருள் தன்னில் அனையவேல் காக்க!
    ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க!
    தாமதம் நீக்கி சதுர்வேல் காக்க!
    காக்க காக்க கனகவேல் காக்க!
    நோக்க நோக்க நொடியினில் நோக்க!
    தாக்க தாக்க தடை அற தாக்க!
    பார்க்க பார்க்க பாவம் பொடிபட
    பில்லி சூனியம் பெரும்பகை அகல
    வல்ல பூதம் வலாஷ்டிக பேய்கள்
    அல்லல் படுத்தும் அடங்கா முனியும்,

    பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்
    கொள்ளிவாய் பேய்களும் குறளை பேய்களும்
    பெண்களை தொடரும் ப்ரம்ஹராட்சடரும்,
    அடியினை கண்டால் அலறி கலங்கிட,
    இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும்
    எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்
    கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
    விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
    தண்டிய காரரும் சாண்டாளர்களும்
    என் பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட

    ஆனை அடியினில் அரும் பாவைகளும்
    பூனை மயிரும் பிள்ளைகள் என்பும்
    நகமும் மயிரும் நீள் முடி மண்டையும்
    பாவைகள் உடனே பல கலசத்துடன்
    மனையில் புதைத்த வஞ்சனை தனையும்
    ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும்
    காசும் பணமும் காவுடன் சோறும்
    ஓதும் அஞ்சனமுடன் ஒருவழி போக்கும்
    அடியனை கண்டால் அலைந்து குலைந்திட
    மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட
    கால தூதாள் கண்டால் கலங்கிட

    பதிலளிநீக்கு
  8. அஞ்சு நடுங்கிட அரண்டு புரண்டிட
    வாய் விட்டு அலறி மதி கெட்டு ஓட,
    படியினில் முட்ட பாச கையிற்றால்
    கட்டுடன் அங்கம் கதறிட கட்டு
    கட்டு உருட்டு கால்கை முறிய
    கட்டு கட்டு கதறிட கட்டு
    முட்டு முட்டு முழிகள் பிதிங்கிட
    செக்கு செக்கு செதில் செதிலாக
    சொக்கு சொக்கு சூர்பகை சொக்கு
    குத்து குத்து கூர்வடி வேலால்
    பற்று பற்று பகலவன் தணலெரி
    தணலெரி தணலெரி தணலது அது ஆக
    விடு விடு வேலை வெருண்டது ஓட
    புலியும் நரியும் புன்னரி நாயும்
    எலியும் கரடியும் இனி தொடர்ந்தோட
    தேளும் பாம்பும் செய்யான் பூரான்
    கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம்
    ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க

    ஒளிப்பும் சுளுக்கும் ஒரு தலை நோயும்
    வாதம் சயித்தியம் வலிப்பு பித்தம்
    சூலை சயம் குன்மம் சொக்கு சிரங்கு
    குடைச்சல் சிலந்தி குடல்வி புருதி
    பக்க பிளவை படர் தொடை வாழை
    கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி
    பற்குத்து அரணை பருஅரை யாப்பும்
    எல்லா பிணிகளும் என்னை கண்டால்
    நில்லாது ஓட நீ எனக்கு அருள்வாய்!

    ஈரேழு உலகமும் எனக்கு உறவாக
    ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா
    மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும்
    உன்னை துதிக்க உன் திரு நாமம்
    சரவண பவனே சைலொளி பவனே
    திரிபுர பவனே திகழ் ஒளி பவனே
    பரிபுர பவனே பவம் ஒளி பவனே
    அரிதிரு மருகா அமரா வதியை
    காத்து தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
    கந்தா குகனே கதிர் வேலவனே
    கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
    இடும்பனை ஒழித்த இனியவேல் முருகா
    தணிகா சலனே! சங்கரன் புதல்வா!
    கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா!
    பழனி பதி வாழ் பால குமாரா
    ஆவினன் குடி வாழ் அழகிய வேலா!
    செந்தில் மாமலையுரும் செங்கல் வராயா!
    சமராபுரி வாழ் சண்முகத் தரசே!
    காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
    என் நா இருக்க யான் உன்னை பாட
    எனை தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனை
    பாடினேன் ஆடினேன் பரவசமாக
    ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை
    நேசமுடன் யான் நெற்றியில் அணிய
    பாச வினைகள் பற்றது நீங்கி

    உன்பதம் பெறவே உன்னருள் ஆக
    அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும்
    மெத்த மெத்தாக வேலாயுதனார்
    சித்தி பெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க!
    வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க!
    வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க!
    வாழ்க வாழ்க மலை குரு வாழ்க!
    வாழ்க வாழ்க மலை குற மகளுடன்
    வாழ்க வாழ்க வாரண துவசம்
    வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
    எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
    எத்தனை அடியேன் எத்தனை செயினும்
    பெற்றவன் நீ குரு பொறுப்பது உன் கடன்
    பெற்றவள் குறமகள் பெற்றவளாமே
    பிள்ளை என்று அன்பாய் பிரியம் அளித்து
    மைந்தன் என் மீது உன் மனமகிழ்ந்து அருளி
    தஞ்சம் என்று அடியார் தழைத்திட அருள் செய்!

    கந்தர் ஷஷ்டி கவசம் விரும்பிய
    பாலன் தேவ ராயன் பகர்ந்ததை
    காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
    ஆசாரத்துடன் அங்கம் துலக்கி
    நேசத்துடன் ஒரு நினைவது ஆகி
    கந்தர் ஷஷ்டி கவசம் இதனை
    சிந்தை கலங்காது தியானிப்பவர்கள்
    ஒரு நாள் முப்பத்தாறு உரு கொண்டு
    ஓதியே செபித்து உகந்த நீறு அணிய
    அட்ட திக்கு உள்ளோர் அடங்கலும் வசமாய்
    திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருள்வர்
    மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
    நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும்
    நவமதன் எனவும் நல்லெழில் பெறுவார்
    எந்த நாளும் ஈரட்டாய் வாழ்வார்
    கந்தர் கை வேலாம் கவசத்து அடியை
    வழியாய் காண மெய்யாய் விளங்கும்
    விழியால் காண வெருண்டிடும் பேய்கள்
    பொல்லாதவரை பொடிபொடி ஆக்கும்
    நல்லோர் நினைவில் நடனம் புரியும்

    சர்வ சத்துரு சங்கா ரத்து அடி
    அறிந்தெனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில்
    வீர லக்ஷ்மிக்கு விருந்து உணவாக
    சூரா பத்மாவை துணித்த கையதனால்
    இரு பதேழ்வர்க்கு உவந்து அமுதளித்த
    குருபரன் பழனி குன்றினில் இருக்கும்
    சின்ன குழந்தை சேவடி போற்றி!
    எனை தடுத்து ஆட்கொள என்றனது உள்ளம்
    மேவிய வடிவுறும் வேலவா போற்றி
    தேவர்கள் சேனாபதியே போற்றி!
    குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
    திறமிகு திவ்விய தேகா போற்றி!
    இடும்பா யுதனே இடும்பா போற்றி!
    கடம்பா போற்றி! கந்தா போற்றி!
    வெட்சி புனையும் வேளே போற்றி!
    உயிர்கிரி கனக சபை கோர் அரசே!
    மயில் நடம் இடுவோய் மலரடி சரணம்

    சரணம் சரணம் சரவணா பவ ஓம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்
    சரணம் சரணம் சண்முகா சரணம்


    --------------------------------
    முருகா சரணம்

    பதிலளிநீக்கு
  9. யாரும் பயப்பட வேண்டிய தேவை யே இல்லை.
    தாத்தா ஷஷ்டி கவசம் சொல்லியாச்சு.

    எல்லாரும் கண்ணை மூடிண்டு தூங்குங்க.

    நாலைப்போது நல்ல படியா விடியும்.

    பல்கொட்டி, தூரப்போ, தூரப்போ.

    முருகா முருகா, காப்பாத்து.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தது என்ன? வைத்யநாத அஷ்டகமா?

      நீக்கு
    2. அது அதன் ரங்க ரூப லாவண்யங்களையும் கார்ய கலாபங்களையும் பொறுத்தது.

      சு தா

      நீக்கு
    3. பொருத்தது அப்படின்னு மெல்லின ரு ஆ இருக்கணுமோ !


      சு தா

      நீக்கு
    4. சாரி, இடையினமா இருக்கணுமோ ?

      பயத்திலே நாக்கு, கை எல்லாமே உதர்றது.

      சு தா
      நேத்திக்கு ராத்திரி எல்லாக் கதவையும் மூடி வச்சப்பரமும், வாஷிங் மெஷின் ட்யூப் போற வழி திரந்திருக்கே என்று நடு ராத்திரி லே அதை கடுதாசி வச்சு அடிச்சுட்டு வந்தேன் அப்படின்னா பாத்துக்கங்க.
      சு தா

      நீக்கு
  10. யப்பாடி, ரொம்ப நாளைக்கப்புறமா ஒரிஜினல் அப்பாதுரை ஸ்டைல் கதை ஒண்ணு கிடைச்சது! தொடருமா? முடிஞ்சுடுச்சா? அது சரி, முப்பது வருஷம் ஆயிடுச்சா? இது நடக்கிறச்சே உங்களுக்குப் பதினைந்து வயதுக்குள் அப்படின்னா ஏற்கெனவே 30 வருஷம் ஆயிருக்கணும். அந்த அனுபவங்களையும் சொல்லுங்க! :)

    பதிலளிநீக்கு
  11. ம்ம்ம்ம் அடுத்தது இன்னும் வரலை போல! எப்போ வரும்?

    பதிலளிநீக்கு
  12. இனிவரும் பதிவு 30 வருஷம் கழித்ததா?நான் ரசித்த பின்னூட்டம் திகில் திகில் . நான் இப்ப சிரித்தால் கூட என் பல்லைப் பார்த்து எனக்கு பயம் வந்துடும்.

    பதிலளிநீக்கு