2012/03/22
முகமூடி
04:30
அலுவலக எலவேடரில்
ஏறிய என்னை
அழுக்குச்சட்டை முகமூடிகள் சுட
அலறிவிழித்தது காலைக்கனவு
09:30
அலுவலக எலவேடரில்
ஏறிய என்னை
அவசரமாய் ஒதுங்கி வணங்கிய
ஆறுபேரும் சூட்கோட்கள்.
ம்.
ஆடையில்லாதவர் அரைமனிதர்
நீயும் நானும் சேர்ந்து
முழுமனிதராகலாம் வா.
சிறிய முத்தம்
பெரிய சுமை.
காதல் போதிமரம்.
முன்னவன் முத்தம்
மறைவதற்காக உதட்டுச்சாயம்.
உண்மைக் காதலி.
எட்டுமணி நேரம் புணர்ந்தார்கள்
ஈர்ப்புப்பாய் எடுக்க மறந்து.
நிலவில் காதலர்கள்.
இன்ப்ராரெட் உஷ்ணம் காற்றுருவி மசாஜ்
இரண்டே நொடியில் உச்சம்.
காமம் சுபம்.
முழுதும் நம்பி
மந்தைகள் நுழைந்தது
மேய்ப்பன் கசாப்புக்கடை.
மரம் செத்தால்
மனிதனின் பேராசை.
மனிதம் செத்தால்
மகோன்னதத் திருவிளையாடல்.
பசி பஞ்சம் பிணி
கொலை கற்பழிப்புக் கொள்ளை நடுவில்
சிட்டுக்குருவிச் சாவுப் பெருங்கவலை.
வகை
கவிதை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எல்லாமே கலக்கல்!
பதிலளிநீக்குமுதல் இரண்டை மிகவும் ரசித்தேன். அப்பாதுரை ஸ்டைல்! :)
கடைசி பிரமாதம்.
அட, அப்பா ஸாரின் கவிதைகள்! கடைசிக் கவிதை மனதில் தங்கி விட்டது. மற்றவை எல்லாமே ரசிக்க வைத்தன.
பதிலளிநீக்குசிறிதான கவிதைகளாக இருந்தாலும் - கீர்த்தி பெரிதாக உள்ளது.
பதிலளிநீக்குகடைசி கவிதை சற்று நெருடுகிறதே சார்!
பதிலளிநீக்கு//பசி பஞ்சம் பிணி கொலை கற்பழிப்புக் கொள்ளை நடுவில்//
அப்படி என்றால் மனித உயிர் மட்டும்தான் உயிரில் கணக்கா?அவன் உணர்வுகள் மட்டும்தான் உணர்வா?
சிட்டுக்குருவி போன்ற சிறிய உயிர் உயிரில் சேர்த்தி இல்லையா? அதன் கஷ்டமும் உணர்வும் உணர்வில் சேர்ந்தது இல்லையா?
பசியும் பஞ்சமும் பிணியும் கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் மனிதனுக்கு மனிதனே ஏற்படுத்திக் கொள்வது.ஆனால் சிட்டுக்குருவியின் அழிவை அதுவே ஏற்படுத்திக் கொள்ளவில்லை.அதையும் மனிதன்தான் செய்கிறான்
சிறிய உயிரின் சாவும் கவலைப்பட வேண்டிய விஷயமேதான் சார்!அந்த அடிப்படை உணர்விருந்தாலே நீங்கள் கூறியுள்ள பசி பஞ்சம் கொலை கொள்ளை கற்பழிப்பு இல்லாமல் போகும்
பதிலளிநீக்குஅன்பின் அப்பாதுரை சார்,
பதிலளிநீக்குகலக்கல்தான் அனைத்தும். ஆனால் ராஜி சொன்னதுபோல என் கருத்தும் அதேதான்.. வாயில்லா ஜீவன், கேட்க நாதியில்லா குட்டி உயிர். கட்டுப்பாடில்லாத அழகிய வாழ்வு. ஆனால் இப்படி ஒரு இனம் இருந்தது என்று நம் சந்ததியினருக்கு படத்தில்தான் காட்ட வேண்டும் போல் உள்ளதே.. அதற்கும் உங்களிடம் கட்டாயம் பதில் இருக்கும். ஆனாலும்....திரும்பவும் முதல்வரி....
Superb
பதிலளிநீக்குகவிதை அலைகள்!
பதிலளிநீக்குஅப்பாதுரை அவர்களே! கடைசிக் கவிதை .அருமை.பலர் அது பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். காசிரைட் ,கொல்டன் என்று இரண்டு கனிமங்கள் காங்கோவில் உள்ளது. காங்கோ பெல்ஜியத்தின் காலனியாக இருந்தது.அரசர் லியொபார்டு 1885ம் ஆண்டு ஒரு உத்திரவு போட்டார். அமெரிக்க மோட்டார் தொழிலுக்கு ரப்பர் தேவைப்பட்டது. அதனை கொடுக்க பெல்ஜியம் சம்மதிதது. ஒரு நாளைக்கு இவ்வளவு ரப்பர் எடுக்கவேண்டும் என்று அரசர் உத்திரவிட்டார். அப்படி எடுக்காத காங்கோ பிரஜயை கொன்றுவிட உத்திரவிட்டார். கொன்றதற்கு சாட்சியாக பிணத்தின் கைகளை வெட்டி அனுப்ப சொன்னார் 1960.காங்கோ விடுதலை பெற்றது. தற்பொது காங்கோ, உகாண்டா,ருவாண்டா நாடுகளில் மேலை நாடுகளின் ஆதரவோடு ஆயுதக்குழுக்கள் செயல் படுகின்றன்.இதுவரை 1 கோடி மரணமாகியுள்ளனர். இதனைத்தடுக்க ஐ.நா படையை அனுப்பியுள்ளது. இந்த ஆயுதக்குழுக்கள் தன் மக்களை துப்பாக்கி முனைகளில் சுரங்கத்திற்குள் சென்று காசிரைட்,கொல்டன் கனிமங்களை எடுத்து வரச்சொல்கிறது.மூன்ரு அடி விட்டத்தில் முண்ணுறு அடி ஆழம் குழாய் மூலம் சென்று கோண்டுவரவேண்டும். இந்தகனிமங்கள் தான் செல்போனுக்கு முக்கியமானவை .செல்போன் கம்மபனிகள் இதனை ஆயுத்க்குழுக்களிடம் பெற்றுக்கோண்டு ஆயுதங்களை கொடுக்கிண்ரன. இதில் முக்கியமானது "நோக்கியா". நீங்கள் நோக்கியாவை பயன்படுத்துகிறீர்களா?அப்படியானால் உங்கள் கையின் ஆப்பிரிகணின் ரத்தம் படிந்திருக்கும்.காங்கோவில் உள்ள ஐ,நா படையில் இந்திய ராணுவமும் உள்ளது. ராஜி அம்மையார், மீனாட்சி அம்மையார் அவர்கள் என்ன செல்போன் வைத்திருந்தாலும் அதில் ரத்தம் தோய்ந்திருக்கும் . நான் குருவிக்காகவும் கவலைப் படுகிறேன்.---kaaSyapan
பதிலளிநீக்கு//ஐ,நா படையில் இந்திய ராணுவமும் உள்ளது//
பதிலளிநீக்கு@kashyapan
மனிதனைக் காக்க ராணுவம் இருக்கும் பட்சத்தில் குருவிக்காகவும் சிலராவது தேவை என்பதே என் கருத்து.
மற்றபடி யார் எந்த செல்ஃபோன் உபயோகித்தாலும் அவர்கள் எல்லாருமே இது போன்ற எந்த விவரமும் அறிந்து இருப்பார்கள் என்று சொல்வதற்கில்லை.செல்ஃபோனில் ரத்தம் தோய்ந்திருக்கும் பட்சத்தில் அதைச் செய்வதும் மனிதர்கள்தான்.நான் சொல்வது குருவி என்பதால் அலட்சியம் வேண்டாமே என்றுதான்.அதை நீங்கள் புரிந்து கொண்டிர்கள் என்பதை தங்களது கடைசி வரி கூறுகிறது.
அப்பாதுரை அவர்களே, கவிதை எழுதும்போது, நீங்கள் இத்தனை கருத்துக்களை I MEAN CONTRADICTORY எதிர்பார்த்தீர்களா.?சிந்திக்கவைக்கும் கருத்துக்களை அறிந்தோ அறியாமலோ எழுதி விடுகிறீர்கள். நான் கவிதையையும் கருத்துக்களையும் ரசிக்கிறேன்.
பதிலளிநீக்குவருக meenakshi, கணேஷ், தமிழ் உதயம், raji, நித்திலம்-சிப்பிக்குள் முத்து, சாய், ஸ்ரீராம்., kashyapan, G.M Balasubramaniam, ...
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி raji.
பதிலளிநீக்குஉங்கள் குரல் நன்றாகக் கேட்கிறது. எனினும், என் கருத்தை கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு விரிவாகச் சொல்கிறேனே? உயிர்களிடத்து அன்பு வேண்டும் என்றே நம்புகிறேன். பிறகு வருகிறேன் :)
ஜிஎம்பி சார்... சிட்டுக்குருவி பத்தி சொல்றீங்களா? :)
பதிலளிநீக்குசில கருத்துக்களை எழுதும் போதே சச்சரவுக்கான தளம் என்று புரியும். எழுதுவதா வேண்டாமா என்ற கேள்வி எழும். சிட்டுக்குருவியும் அப்படித்தான். மனதில் பட்டதை எழுதாவிட்டால் வருந்த நேரிடும் என்பதால் எழுதினேன். சில நேரம் எழுதாமலும் விட்டிருக்கிறேன். ஜெயேந்திரரைப் பற்றி ஒரு முறை எழுத நினைத்ததை எழுதாமல் விட்டது சச்சரவுக்குப் பயந்தல்ல - அடி உதைக்குப் பயந்து :)
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. எது பிரச்சினையைக் கிளப்பும் என்று சரியாக எதிர்பார்க்க முடியாது. கருத்துக்கு நன்றி ஐயா.
வாங்க நித்திலம்..
பதிலளிநீக்குநீங்க சொல்லுறது சரியே. ஒரு விஷயம் சொல்லலாமா? சிட்டுக்குருவி பத்தி படிச்சுட்டு ஒரு பதிவர் ரொம்ப ஆவேசமா தன்னோட எதிர்ப்பைத் தெரிவிச்சார் (திறமையான பதிவர்).. எல்லாத்தையும் கேட்டுப் பிறகு அவரிடம், "ஆமா.. இப்ப இதை செல்போன்ல தானே கூப்பிட்டுச் சொன்னீங்க?"னு கேட்டேன்.
நான் வசிக்கும் இடத்தில் இப்போ குருவித் தொல்லை தாங்க முடியவில்லை. தப்பா நினைக்காதீங்க.. காலைல நாலு மணிக்கெல்லாம் கீச் கீச்னு தூக்கத்துலந்து எழுப்பிடுதுங்க.. ஒரு மரம் விடாம கூடு கட்டி... அதை விட, வீட்டை விட்டு ரொம்ப மெதுவா கார் எடுக்குறப்பவே முட்டி விழுந்து.. விடுங்க வருத்தப்படுவீங்க. பத்து வருஷம் முன்னே இங்கே இப்படித்தான் குருவியைக் காணோம் செல் டவரை இடினு கொடி பிடிச்சாங்க.. பத்து வருஷத்துல என்னாச்சு? செல் டவர் அப்படியே தான் இருக்கு. காணாமல் போன குருவிங்க எங்கிருந்து வந்துச்சு?
சிட்டுக்குருவி.. கூடங்குளம்... எல்லாத்துக்குமே இரண்டு பக்கம் இருக்கு. கொஞ்சம் யோசிச்சு விரிவா பின்னூட்டம் எழுதுறேன். திரும்ப வரேன்.
வாங்க காஸ்யபன் சார்.. இப்படிப் பீதியைக் கிளப்பிட்டுப் போயிட்டீங்க.? நான் நோகியா உபயோக்கிறதில்லே (அப்பாடி!) ராஜியும் மீனாக்ஷியும் தான்.. :)
பதிலளிநீக்குகவிதைகள் அருமை..
பதிலளிநீக்குஅதன் தொடர்பான கருத்துக்களும்
அருமை....
அத்தனைக் கவிதைகளும் அருமை.
பதிலளிநீக்குசிட்டுகுருவிக் கவிதையில் கிடைத்த பின்னூட்டத் தகவல்கள் ... யோசிக்க வைத்தன.
காதல்,காமம்,கடமை,கருணை என அத்தனையும் ரசிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.இப்பத்தான் தெரியுது எனக்கு மட்டும் விளங்கின கவிதைகள் மத்தவங்களுக்கு விளங்காதுன்னு !
பதிலளிநீக்குபசி பஞ்சம் பிணி
பதிலளிநீக்குகொலை கற்பழிப்புக் கொள்ளை நடுவில்
சிட்டுக்குருவிச் சாவுப் பெருங்கவலை.//
ம்ம்ம்ம்ம் சிட்டுக்குருவிகளுக்கு மட்டுமா செல்போன் டவரினால் அழிவு ஏற்பட்டது?? மற்றப் பறவைகள் எப்படி உயிர் வாழ்கின்றன இன்னமும்? இது பல ஆண்டுகளாய் நான் கேட்க நினைத்த கேள்வி. ஹூஸ்டனில் சிட்டுக்குருவிகள் மட்டுமில்லாமல் காக்கைகளையும் பார்த்தேன். அமெரிக்காக் காக்கைகள் கொஞ்சம் கரகரப்பான தொனியில் கரைந்தன. படமும் எடுத்தேன். போடலை. கூட்டம் கூட்டமாக எங்க வீட்டு patioவில் வந்து கூச்சலிட்டுக் கொண்டிருக்கும். அழகான காட்சி. ஆனால் இங்கேயோ சிட்டுக்குருவிகள் வேட்டையாடப் பட்டன எனக் கேள்விப் பட்டேன்.
அப்பாதுரை டச் கவிதைகள் அனைத்தும் அருமை.
பதிலளிநீக்குசலாம் சாரே! :-)
பதிலளிநீக்குநன்றி ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி, சிவகுமாரன், ஹேமா, geethasmbsvm6, RVS,...
பதிலளிநீக்கு//மற்றப் பறவைகள் எப்படி உயிர் வாழ்கின்றன இன்னமும்?
பதிலளிநீக்குகேட்டீங்களே ஒரு கேள்வி! tops!
சிட்டுக்குருவிகள் வாழ்க!
பதிலளிநீக்கு'சிட்டுக்குருவி சாவுப் பெருங்கவலை' என்று எழுதியதன் காரணம் சிட்டுக்குருவி செத்தால் சாகட்டும் என்ற பொருளில் அல்ல. சிட்டுக்குருவிகளைப் போலவே, சிகுவை விடக் கொடுமையாக, மனிதர்களும் மறைகிறார்கள் - அந்தக் கவலை பெரிதாக இருக்கிறது (எனக்கு) என்ற பொருளில். .
உப்.. 'மனிதர்களைக் கொல்வது மனிதர்கள் தான். சிட்டுக்குருவி பாவம் அது என்ன செய்யும்?' என்று உடனே இறங்கிவிடலாம். உண்மை. சிட்டுக்குருவி பாவம். வாயில்லா (?) ஜீவன். அதன் மேல் கருணை காட்டவேண்டும் தான். still மனிதர்கள் திட்டம் போட்டு சிட்டுக்குருவியைக் கொல்வது போல் தொனிக்கிறது இந்தக் கருத்து. (of course, லேகியத்துக்காக மனிதர்கள் நூற்றுக்கணக்கில் சிட்டுக்குருவிகளை வளர்த்து விற்பதாகவும் படித்திருக்கிறேன். இதர் செல் டவர் காரே? :-)
இதன் flip side ஒன்று இருக்கிறது என்று நினைக்கிறேன். அதற்கு வருவோம். மனிதம் சாகட்டும். பிறவி லாட்டரியில் பரிசு விழாமல் மொழி இனம் மதம் மாறுபட்டக் காரணத்துக்காக எறும்பைப் போல் நசுங்கிச் சாகும் மனிதம் சாகட்டும். மனிதச்சாவு மனிதச்செயல் தான். சிட்டுக்குருவிக்கு வருவோம்.
ஒரு உயிருக்கு அழிவு ஏன் ஏற்படுகிறது? இன்னொரு உயிரின் பேராசை பொறாமை ஒரு காரணமாகச் சொல்லலாம். அதை நீக்கி விட்டால்? உயிர் வாழத் தேவையான மூலப்பொருள் அழிந்தால் உயிர் அழியும். மூச்சுக்காற்றுக்கு அடுத்த மூலப்பொருள் உணவு. உணவு கிடைக்கவில்லையெனில் எல்லாருமே அழிய வேண்டியது தான். அடுத்தது இருக்க இடம். இருக்க இடமில்லையெனில் இடந்தேடி ஓடலாம் - எங்கும் இல்லையெனில் அழிவு தான். கான்க்ரீட் பரந்து கிடக்கையில் குருவிகள் எங்கே தங்கும்? புழு பூச்சிகளைப் பெரும்பாலும் சாப்பிட்டுப் பழகியவை பொங்கல் இட்லி வடைக்குப் பழக நாளாகும். காற்று ஒலி ஒளி ஊடுறுவல்கள் நம்மையே அச்சுறுத்தும் போது - குருவிகள்? வயல்வெளிகள் மறைகின்றன, நீர்நிலைகள் மறைகின்றன. குருவிகளுக்கு பிஸ்லெரி உடைத்துக் குடிக்கத் தெரியாது - or இன்னும் தெரிந்து கொள்ளவில்லை.
ஓகே.. இதெல்லாம் மனிதப் பேராசையின் விளைவு என்று காரணம் பேசலாம். எனக்கென்னவோ பேராசையாகத் தோன்றவில்லை. முந்தையத் தலைமுறையை விட அடுத்தத் தலைமுறை அறிவிலும் பண்பிலும் வசதியிலும் மேம்பட்டு வருவதாகவே நம்புகிறேன். குருவிகள் தானாகவே ஒதுங்கி விட்டன. வாழும் வசதிகள் திரும்பியதும் குருவிகளும் திரும்பும். அப்படித் திரும்பாவிடில் வேறு 'குருவி' வகை திரும்பும். ecosystem என்பதில் மனிதர்கள் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
சிட்டுக்குருவியைப் பூனையோ குரங்கோ பிடித்தால் என்ன செய்வோம்? அததற்கு என்ன எழுதியிருக்கோ அப்படி நடக்கும் என்றபடி ஒதுங்குவோம். சரியா? (குரங்கு குருவியைப் பிடித்துத் தின்றதைப் பார்த்திருக்கிறீர்களா? குற்றாலத்தில் ஒரு தடவைப் பார்த்திருக்கிறேன். ஒரு கோவில் கோபுரத்தில் உட்கார்ந்திருந்த குரங்கு அந்தப் பக்கம் வந்த குருவியை ஆச்சரிய வேகத்தில் லபக்.)
மனிதனின் பேராசையை உடனே தாக்கத் தோன்றும் நமக்கு, நம் தேவைகளைக் குறைக்கத் தோன்றுகிறதா? சிட்டுக்குருவி தினத்தன்று செல்போனை முடக்கி வைப்போமா? 'சிட்டுக்குருவி தின வாழ்த்துக்கள்' என்று விடிந்ததும் எஸ்எம்எஸ் அனுப்புவோமே ஒழிய ஒரு நாளும் செல்போனை முடக்க மாட்டோம். the point is செல்போனை முடக்கத் தேவையில்லை. சிட்டுக்குருவியை விட மனித வளர்ச்சி முக்கியம். மனித முன்னேற்றம் முக்கியம். மனித அமைதி முக்கியம். அதற்காக sometimes we pay a steep price. priceக்கும் valueவுக்கும் இருக்கும் பெரிய வித்தியாசத்தை மனிதம் மறக்கவே இல்லை என்று நம்புகிறேன். valueவில் நம்பிக்கை இருப்பதால் மறவாமல் இருப்பதால் தான் சிட்டுக்குருவிகளுக்கு மரங்களுக்கு கொடி பிடிக்கிறோம். தேவையே. தவறாக எண்ண வேண்டாம். மனிதனால் சிட்டுக்குருவியைக் கொண்டு வர முடியும். சிட்டுக்குருவியால் மனிதனைக் கொண்டு வரமுடியும் என்பதற்கான நம்பக்கூடிய ஆதாரங்கள் இதுவரை தெரியாததால் மனிதக் கட்சிக்கே இன்னும் ஆதரவு.
ஆணவமென்று நினைக்கவேண்டாம். சிட்டுக்குருவிக்கோ செம்மூக்கு வௌவாலுக்கோ கொடி பிடிப்போம். அதே நேரம் எங்கோ விசுவமேட்டில் ஒரு தமிழ்க்குழந்தை சாவதையோ தென்னாப்பிரிக்காவில் பதினொரு வயதுப்பெண்ணை பருவம் வந்த இரண்டாம் நாள் அப்பனே விலைக்கு விற்பதையோ அறிந்தும் அரசியல் என்று ஒதுங்காமல் ஒரு வார்த்தை - ஒரே ஒரு வார்த்தை - சொல்லுவோம். பிரதமருக்கும் ஐநாவுக்கும் எழுதுவோம். (செல்போனில் சொன்னாலும் சரிதான் :)
தேர்வுத் திறன் மற்றும் பரிணாம வளர்ச்சியில் நம்பிக்கை உள்ளவனின் கருத்து இது. யாருங்க அது கல்லெறியுறது? கண்ட இடத்துல பட்டுறப்போவுது.
@raji: உங்கள் கருணைச் செயல்களை பற்றிப் படித்திருப்பதால் உங்கள் கருத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. மனிதத்தையும் பிற உயிர்களையும் ஒரே அளவில் மதிக்கும் ஒரு சிலரில் நீங்கள் இடம்பெறுகிறீர்கள். பெரும்பாலோர் உங்களைப் போலில்லை.
உங்கள் கருத்தை மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள் அப்பாதுரை! Superb!
பதிலளிநீக்குமத்திய ஆப்பிரிக்காவில் பதினொரு வயதுப்பெண்ணை பருவம் வந்த இரண்டாம் நாள் அப்பனே விலைக்கு விற்பதை.. (தென்னாப்பிரிக்கா என்று எழுதியது என் தவறு)
பதிலளிநீக்குஉங்களுக்கு நிறைய பரிமாணங்கள் போல....இதுவும் ஜொலிக்கிறது :)
பதிலளிநீக்குஅப்பாதுரை, சிட்டுக்குருவிகளோடு நெருங்கிப் பழகிய வகையில் அவற்றின் இல்லாமை எனக்கு வருத்தம்; துக்கம்; இன்னும் என்ன என்னமோ. ஆனால் செல்போன் டவர்கள் தான் காரணம் எனில் அந்தக் காரணம் மற்றப் பறவைகளின் உயிரையும் பறிக்கவில்லை என்பதும் மகிழ்ச்சியைத் தருகிறது. சிட்டுக்குருவிகள் மட்டும் ஏன் தாங்கும் சக்தி இல்லாமல் போய்விட்டன?? இதைத் தான் என்னால் ஏற்க முடியவில்லை. குறிப்பாய்ச் சிட்டுக்குருவிகளை மட்டும் தாக்குவானேன்?? சிட்டுக்குருவிகள் மறைவதற்கு வேறே என்ன காரணம்??
பதிலளிநீக்குசிட்டுக்குருவிகள் வாழ்க!ன்னு ஒரு கோஷம் போட்டு ஆரம்பிச்சீங்க பாருங்க... அங்க இருக்கீங்க நீங்க..... :-)
பதிலளிநீக்குசிட்டுக்குருவிகள் இந்தியாவில் காணாமல் போக காரணம் - மொபைல் போனின் டவர்கள் என்று கேள்விப்பட்டேன். ஆறாயிரம் ருபாய் வாடகைக்கு தன் வீட்டின் மொட்டைமாடியை டவர் வைக்க வாடகைக்கு கொடுப்பதால் வந்த வினை. அமெரிக்காவில் ஆளுக்கு இரண்டோ மூன்றோ கைத்தொலைபேசி வைத்து இருந்தாலும் குடியிருப்பு பகுதிகளில் டவர் வைப்பதில்லை. என் வீட்டின் பேரகீட் (கிளி வகை) என்ற பறவைகள் காலையில் குதித்து விளையாடுவதே வெளியில் நாங்கள் போடும் இரைக்கு அங்கு வரும் குருவிகளின் கோல்கள திருவிழாவை காணத்தான். எனக்கென்னவோ அழிந்த இடங்கள் எல்லாம் வளரும் நாடுகளின் இந்த டவர் இடம் இடங்களால் வந்தது என்று நினைக்கின்றேன்.
பதிலளிநீக்குகாஷ்யபன் சார்,
ரொம்ப யோசிக்க வைத்துவிட்டார். ஒன்றுக்கு இரண்டாக மொபைல் போன் வைத்துக்கொண்டு இருக்கும் நான் இன்னும் ஐந்து வருடங்களில் சின்னவனையும் கல்லூரியில் போட்டபிறகு காடு மலை என்று சுத்த எண்ணம் (அப்போது அங்கே ஒரு விலங்காவது இருக்குமா தெரியவில்லை).
அப்போதில் இருந்தாவது இந்த கருமத்தை விட்டு ஒழிப்பேனா தெரியவில்லை.
வருக Shakthiprabha, சாய், ...
பதிலளிநீக்குசெல்போன் உபயோகத்தால் RF மற்றும் EMW காரணமாக மூளை பாதிக்கப்படலாம் என்றும் சொல்லுறாங்க. நாம அதுக்காக கவலைப்படுறமா?
பதிலளிநீக்குbrain damage is more likely. (இப்ப என்னையே எடுத்துங்க..:) hard evidenceடன் நிரூபிக்கணுமுன்னா இன்னும் ரெண்டு தலைமுறையாவது ஆவும். போனாப் போகுது விடுங்க, நாம் என்ன அதுவரைக்கும் உயிரோடயா இருக்கப் போறோம்? என்ன நான் சொல்றது?
முப்பத்தேழு வருசத்துக்கு முன்னால estrogen கொடுத்து கறந்தப் பாலை அன்னைய பச்சைக் குழந்தைங்க குடிச்சு குடிச்சு இன்னைக்கு அவங்க வழியில வந்த ஆண்களுக்கு homosexual orientation அதிகமாயிருக்குனு சொல்றாங்க. உலகின் இரண்டே இரண்டு நகரங்களில் மட்டும் இதுக்கு ஓரளவுக்கு நம்பவைக்கப் போதுமான ஆதாரங்கள் கிடைச்சிருக்கு. அதை வச்சுகிட்டு இன்னும் ஐம்பது வருஷத்துல எல்லாரும் எல்லா இடத்திலும் அப்படி ஆவாங்கனு சொல்ல முடியுமா? அப்படியே ஆனாத்தான் என்ன, போவுது விடுங்க.
சிட்டுக்குருவி மேட்டர் பறக்குது... கீதா மேடம் கேள்வியில் அர்த்தம் இருக்கு...அப்பாதுரையின் வாதம் பிரமிக்க வைத்தது...காஷ்யபன் சார் சொல்வது போல யாரும் செல் ஃபோனை விடப் போறதில்லை. அணு உலைகள் அபாயம் தாண்டி மின் தேவைகளுக்கு அவற்றை ஆரம்பிப்பதில்லையா....இந்தக் காலத்துக்கு இது அவசியம். இப்படி யோசிக்க வேண்டியதுதான்...மனிதனின் ஏழு பிறப்புகளில் குருவிப் பிறப்பு வேகமாக முடிந்து அடுத்த பிறவி கிடைத்து விடுகிறது! குருவி தின வாழ்த்துகள் எஸ் எம் எஸ் ரொம்ப ரசித்தேன்.
பதிலளிநீக்குஆனால் நானும் சிட்டுக் குருவிக்கு மொட்டை மாடியில் பெட்டி வைக்க யோசித்துக் கொண்டு இருக்கிறேன். பறவைகளுக்கு ஏற்கெனவே தண்ணீர் வைத்துக் கொண்டு இருக்கிறாள் என் மனைவி. [அதையும் சொல்லணுமில்லே...:)) }
அய்யாமார்களே! என்னைப்போட்டு மிதிக்காதீங்க சாமிகளா! நான் drive பண்ற விஷயம் வேற ! காட்டுவிலங்குகளை பத்தி கவலைபடுங்க! குருவிய பத்தியும் காலைப் படுங்க! அதொட காங்கோவில குழாய் மூலம் இறங்குற சிறுவனயும் ஞாபகம் வெச்சுக்குங்க. "Blood in Mobile" படம்.விலாவரியா கட்டறான். ---காஸ்யபன்.
பதிலளிநீக்குசிட்டு குருவி/கசாப்பு கடை --- class!
பதிலளிநீக்குஉங்க கவிதை மூலம், எங்க வீட்டு balcony க்கு வந்து அரிசி/கீழே விழுந்து கடக்கும் light பூச்சிகள சாப்டு பறந்து போகும் சிட்டு குருவிகளை மறுபடியும் நினைத்து பார்க்க வாய்ப்பு கிடைத்தது! சமீப காலத்துல எனக்கு ரொம்பவே வருத்தம் கொடுத்த செய்திகள்-ல ஒண்ணு இது/இன்னொண்ணு office type writer manufacturing stop பண்ணினது! Will miss them both ...
விளக்கமான கருத்துரைக்கு நன்றி :-)
பதிலளிநீக்கு