2012/03/10

நிம்மதி



    'what now?' என்றவனை வெறியோடு பார்த்தேன். என் வீட்டில் என் கண்ணெதிரே என் மனைவியை அம்மணமாகப் புணர்ந்துவிட்டு, என்னிடமே 'வாட் நௌ?' என்னும் இந்தப் புறம்போக்குச் சொறிநாயை வெட்டிப் போடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேனே? ஏற்கனவே அவன் முகத்தில் இஸ்திரிப் பெட்டி எறிந்து ஏற்பட்ட ரத்தக்காயத்தால் விளையக்கூடியச் சட்டரீதிச் சிக்கலின் சாத்தியம், என் வெறியைச் சற்று அடக்கியது.

    ழக்கறிஞர் மாநாட்டிற்கு நான்கு நாட்கள் மெம்பிஸ் போய்த் தங்க வேண்டியிருக்கும் என்று சொல்லிவிட்டுப் போயிருந்தேன். எதிர்பாராமல் வாய்தா விழுந்த செய்தி கிடைத்து அவசரமாகக் காரில் வீடு திரும்பிய போது பிற்பகலாகி விட்டது. கான்பரன்ஸ் ஹோட்டல் அறையைக் கூட காலி செய்ய நேரமில்லை. போட்டது போட்டபடி ஓடி வந்தேன். வீட்டுள் நுழைந்ததுமே என் சந்தேக ஏன்டனா உயிர்த்தது. குரல் கொடுக்க நினைத்தவன், குரல் கேட்டுச் சுதாரித்தேன்.

நான் உள்ளே நுழைந்ததை அவர்கள் கவனித்திருக்க முடியாது. படுக்கையறையிலிருந்து வந்தக் குரல்களைத் தொடர்ந்தேன். சிரிப்பும் கிறக்கமும் விட்டு விட்டு வந்த இரட்டைக்கிளவி முனகலும் என் நெஞ்சைக் கிழித்தன. என் மனைவியா? கள்ளக்காதலா? யாரவன்? சமையலறையில் கண்ணெதிரே கிடந்தக் கத்தியை எடுத்துக் கொண்டு அடி மேல் அடி வைத்தேன்.

"ஏன் என்னவோ போலிருக்கே? உனக்குத் திருப்தியில்லையா கண்ணா?" இது என் மனைவி. எப்படிக் கொஞ்சுகிறாள் கிராதகி!

"சேசே! அது இல்லைடா" இது ஆண். என் பெண்டாட்டியைச் செல்லமாக டா போட்டுப் பேசுகிறான். நாய்.

"பின்னே என்னவாம்?"

"எனக்கு நீ இப்பவும் வேணும், எப்பவும் வேணும். என் கூட வந்துடு. இப்படித் திருட்டுத்தனமா எவ்வளவு நாள்.."

"நான் வெளியே வரேன்"

"அதையே சொல்லிட்டிருந்தா எப்படி? என்ன தயக்கம் உனக்கு?"

"இப்ப அதையெல்லாம் இழுத்து ஏன் மூட் அவுட்டாக்குறே? இன்னும் ஆறு மாசம் பொறுத்துக்க செல்லம்" அடிப்பாவி! ஆறு மாசமா? என்ன செய்யப்போறே?

"இதையே அஞ்சு வருசமா சொல்லிட்டிருக்கியே? சொன்னா கேளு நீ வெளில வந்தின்னா நான் உன்னைக் கண் கலங்காம காப்பாத்துவேன்" தாழி.. அஞ்சு வருசமாவா நடக்குது?

"நீ ஒண்ணும் காப்பாத்த வேணாம். நானே பாத்துக்குவேன்" ..புடுங்குவே. பத்து காசு சம்பாதிக்க வக்கில்லாம, நான் போடற எச்ச ரொட்டியைத் தெனம் தின்ற நீயாவது.. உன்னைக் காப்பாத்துறதாவது?

"நான் சீரியசா பேசுறேன். என்னை நம்பி நீ இல்லைனு தெரியும். இருந்தாலும் நான் உனக்கு உதவியா இருக்கக் கூடாதா? நானுந்தானே உன்னைக் காதலிக்கிறேன்? தினம் உன் முகத்துல முழிச்சு உன் முகத்தைப் பாத்துகிட்டே தூங்க ஆசைப்படுறேன். வாழ்க்கைல காதல் அடிக்கடி வராது. நாம காதலிக்கத் தொடங்கின பிறகும் இந்த மாதிரி வாழுறது சரியா சொல்லு?" சைத்தான்! இவனும் டயலாக் விடுறானே?

"நானும் உன்னைக் காதலிக்கிறேன். என் வாழ்க்கைல இனிமைனு எதையாவது சொல்லணும்னா உன்னோடு பழகுற நேரங்கள் தான். உன் குரல், உன் பார்வை, உன் அணைப்பு. இப்போதைக்கு அந்த இனிமையிலே கொஞ்ச நாள் இருப்போமே?" வாழ்க்கையில் இனிமை இன்னொருத்தனைத் தொட்டதா? தேவடியா முண்டை! என்னமா பேசுறா?

"காதல், இனிமைனு எப்பவும் டயலாக் விட்டுகிட்டே இருக்கே. செயல்ல இறங்க மாட்றியே?"

"செயல்ல இறங்கிட்டா போச்சு" என்ற அவள் குரலைத் தொடர்ந்து சில நொடிகள் மௌனம். பிறகு சிணுங்கல்களும் முனகல்களும் தொடங்கி மறுபடி அமைதி. சில நொடிகளில் வேகமான மூச்சோசை கேட்க.. இதான் செயலா? என்னால் பொறுக்க முடியவில்லை. கதவை உதைத்துத் திறந்தேன்.

அவன் கட்டிலில் கால்களை நீட்டி உட்கார்ந்திருந்தான். அவள் அவனுடைய வயிற்றை ஒட்டிக் கொண்டு, கால்களைக் குறுக்கி அவன் மேல் உட்கார்ந்து, அவன் தோள்களில் கைகளைப் பொருத்தியிருந்தாள். அவன் அவளுடைய முதுகைத் தன்னுடன் சேர்த்தழுத்தி அணைத்திருந்தான். துளிக்கூட உடையில்லாமல், சிவசக்தி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

என்னைப் பார்த்துத் திடுக்கிட்டு விலகினார்கள்.

யோசிக்காமல் கையிலிருந்தக் கத்தியை வேகமாக அவள் மேல் எறிந்தேன். அவன் சுதாரித்து, ஒரு தலையணையால் அதைத் தட்டிவிட்டான். அவள் அவசரமாகக் கட்டிலிலிருந்து இறங்கி மூலைக்கு ஓடினாள். நான் ஆத்திரத்தோடு சுற்றும் பார்த்து, மேசை மேலிருந்த இஸ்திரிப் பெட்டியை எடுத்து அவன் மேல் வீசி எறிந்தேன். காதுக்கும் நெற்றிக்கும் இடைப்பட்ட மண்டைப் பிரதேசத்தில் சரியாகக் குத்திக் கிழித்து கீழே விழுந்தது. ரத்தம் கசியத் தொடங்கியச் சில நொடிகளில் அவன் நிலகுலைந்து விழுந்தான்.

என் மனைவி கைகளை வீசிக் கூச்சல் போட்டு அலறிய போது, காளி போலிருந்தாள். மூலையிலிருந்த ஸ்கைலைட் திறக்கும் கழியை எடுத்து என்னைத் தாக்க ஓடி வந்தாள். தடுத்து அவளையும் கீழே தள்ளினேன். வந்த ஆத்திரத்தில் கழியைப் பிடுங்கி அவள் தோளிலும் முதுகிலும் நாலு அடி வைத்தேன். "தூ! மானங்கெட்டப் பன்னி! பஜாரி! பொறுக்கி முண்டை!" என்றேன்.

ஒன்றுமில்லாததற்கு ஊரைக் கூட்டிக் கத்திக் கூச்சல் போடுகிறவன், இதற்குச் சும்மா இருப்பேனா? நான் அலறிய அலறலில், சீறிப் பாய்ந்த கெட்ட வார்த்தைகளில், அடித்த அடியில்.. நடுங்கிப் போனாள் நிர்வாணக் காளி. உடலில் துணியில்லாததைக் கூட மறந்து வெலவெலத்துப் போனாள். அழத் தொடங்கினாள். ஆத்திரம் குறையாமல், கழியை அவள் மேலேயே எறிந்தேன்.

கதவை அறைந்து மூடிவிட்டு ஹாலுக்கு வந்தேன். அலைபாய்ந்தேன். செத்து கித்து வைக்கப் போகிறான்! சில நிமிடங்கள் பொறுத்து, படுக்கையறைக்குள் மெள்ள நுழைந்தேன்.

பேருக்கு உடையணிந்திருந்த மனைவி, அவனைக் கைத்தாங்கலாக உட்காரவைத்து, அவனுடையக் காயத்தைத் துடைத்துக் கட்டுப் போட்டுக் கொண்டிருந்தாள். தரையெல்லாம் காயத்துணி. அதிகம் இல்லையென்றாலும் அங்கங்கே ரத்தத்திட்டு. அவன் முனகினான். ரத்தம் கொட்டுவது நின்றுவிட்டிருந்தது. அப்பாடி! என் மனைவி என்னைப் பார்த்துவிட்டு, "மிருகமே!" என்று சீறினாள். "கெட் அவுட்!" என்று கத்தினாள். காயத்துணிகளைத் திரட்டி என் மேல் வீசி எறிந்தாள். "கெட் அவுட்!" என்றாள் மறுபடி. "இது என்னோட வீடுறி, ஓடுகாலி!" என்றேன். அவள் அவனுக்குப் பணிவிடை செய்வதைக் காணப் பொறுக்காமல், ஹாலுக்கு வந்து சோபாவில் விழுந்தேன்.

அரைமணி கழித்து என் எதிரில் வந்து அமர்ந்தான். பின்னால் நின்றுகொண்டு அவன் தலையைப் பிடித்து விட்டாள் மனைவி. பாவி. உனக்கு எவ்வளவு செய்திருக்கிறேன்! ஒரு நாளாவது எனக்கு இதமாக ஏதாவது செய்திருக்கிறாயா? நன்றி கெட்டவளே! அவர்களை மனதுள் தோலுரித்துச் சுண்ணாம்பு தடவினேன். உடல் துண்டுகளைப் பிய்த்துப் பெருச்சாளிகளுக்கு எறிந்தேன்.

என்னை நேராகப் பார்த்தான். பிறகு அமைதியாக, "what now?" என்றான்.

    what now, what now, யாரிடம் கேட்கிறான் what now? எத்தனை திமிர்! அவன் கண்களைக் கடித்துக் குதறித் துப்ப வேண்டும் போலிருந்தது. எப்படிப் பார்க்கிறான் என் மனைவியை! அவனுக்கு உடனடியாகப் பதில் சொல்லப் பிடிக்காமல் கண்களை மூடிச் சோபாவில் சரிந்தேன்.

என் மனைவி! என் மகன் உருவானத் தருணத்தில் கூட உடலில் துணியோடு என்னைப் புணர்ந்த என் மனைவி! இன்று என் கண்ணெதிரே இன்னொருவனுடன் அம்மணமாக... என்ன அக்கிரமம்! எனக்குள் ஆத்திரமும் அவமானமும் பொங்கியது.

என் மனைவிக்கும் எனக்கும் உறவு இருந்ததாக நினைவில்லை. உண்மையில் கல்யாண நாளிலிருந்தே உறவில்லை எனலாம். என்னவோ இழவு கல்யாணம், இழவு முதலிரவு என்றுதான் கழிந்தது. உடலுறவில் கொஞ்சம் கூட ஆர்வமோ வேகமோ இல்லாதிருப்பாள். சிறு குழந்தைகளுக்கு விரிக்கும் ரப்பர் ஷீட் போல இருக்கும், அவள் மேல் படுத்தால். உணர்ச்சி இல்லாத ஜடம். ஒரு தடவை கூடத் தானாக முத்தமோ அணைப்போ எதுவுமே செய்ததில்லை. என் தேவை தீர நானாகவே வலியத் தொட்டுத் தடவி எல்லாம் செய்வேன். எரிச்சலாக வரும். ஏனென்று கேட்டால்... பழகவில்லை, பேசவில்லை, நெருக்கம் வளரவில்லை, அன்பில்லை, மனமில்லை, தலைவலி என்று என்னவோ உளறுவாள். இல்லையென்றால் என் வேகத்தில் அரண்டு போவாள். ஹ்ம்ம்ம்... என்ன உறவு இது? ஏதோ கடமைக்குச் செய்து உருவான கருவும் கலைந்து விட்டது. ஆனால் இன்றைக்கு... இன்றைக்கு... எவனோ ஒருவனுடன்... வாழ்வின் இனிமை என்று வசனம் பேசிக்கொண்டு கலக்கிறாளே?

திருமணமான பின் இன்னொருவர் மீது காதல் தோன்றுவது இயற்கையாக இருக்கலாம். என் உலகில் அப்படியில்லை. என் மனைவி என்னை மட்டுமே விரும்பி, என் சொல் கேட்டு, பிடிக்காவிட்டாலும் உடன்பட்டு, அடங்கி நடப்பதையே விரும்புகிறேன். நான் வா என்றால் வர வேண்டும்; சமை என்றால் சோறாக்க வேண்டும்; படு என்றால் படுக்க வேண்டும். பின் தூங்கி முன் எழ வேண்டும். அவ்வப்போது என்னை நன்றியோடுப் புகழ வேண்டும். என்னைப் பெயர் சொல்லி அழைப்பதும் எனக்குப் பிடிக்காது. அது மரியாதை குறைவு. என் சொற்படி நடந்து என்னைச் சுகப்படுத்தவே மனைவி. பதிலுக்கு அவளுக்குச் சத்தான சோறு போடுகிறேன், தேவைக்கு மேல் புடவை நகை எடுத்துக் கொடுக்கிறேன், சினிமா பீச் போக அனுமதிக்கிறேன், ஒண்ணரை ஏக்கர் நில எட்டாயிரம் சதுரடி அழகான வீட்டில் அனைத்து வசதிகளுடன் வாழச் செய்கிறேன். இதைவிட என்ன தேவை ஒரு பெண்ணுக்கு? இப்படி இன்னொருவனுடன் காதல் கொண்டால், என் கௌரவம் என்னாவது? நான் அவளை விட்டுச் சென்றாலாவது பரவாயில்லை, நான் ஆண். இவள் என்னை விட்டுச் சென்றால் எத்தனை அவமானம்!

நான் இறந்தபின் எக்கேடோ கெட்டுப் போகட்டும், உயிருடன் இருக்கும்வரை என்னை விட்டால் நாதியில்லை என்று கிடக்க வேண்டும். அப்படித்தான் என் அம்மா, அப்பாவிடம் நடந்து கொண்டாள். என் பாட்டி தாத்தாவும் அப்படித்தான். மனைவியின் பிறந்த வீட்டிலும் அப்படித்தான். என் மனைவி மட்டும் ஏன் மாறுபட வேண்டும்? என்ன ஆனது இவளுக்கு? ஆயிரம் இருந்தாலும் கணவனை அனுசரித்து வாழ வேண்டும். அதுவே நல்ல மனைவியின் அடையாளம். நம்முடைய கலாசாரம், பண்பாடு எல்லாம் அதைத்தான் சொல்கின்றன.

பெண் விடுதலை என்ற பெயரில் பெருங்கொடுமை நடக்கிறது. சீர்திருத்தவாதிகள், கவிஞர்கள் என்று எட்டணாவுக்கு உருப்படாதவர்கள் பேச்சைக் கேட்டு.. உருப்படாத எதையெதையோ படித்து.. உருப்படாத சினிமா டிவி சீரியல் பார்த்து.. ஆண்களை விடத் தாங்கள் மேம்பட்டவர்கள் என்று நினைத்து ஏமாந்து போகிறார்கள். அதுவும் நம்மூர் பெண்கள் கொஞ்சம் படித்துவிட்டால் சிறகு முளைத்தது போலக் கிடந்துத் துள்ளுகிறார்கள். பெண்கள் ஆண்களுக்கு அடங்கி நடக்க வேண்டும். பிடிக்கிறதோ இல்லையோ, தாலி ஏறிவிட்டால் கனவுகளை அடக்கிக் கொண்டு, கணவன் மனம் கோணாதபடி சாகும்வரை நடக்கவேண்டும். கணவனிடம் பக்தியோடும் பணிவோடும் நடந்து கொள்ள வேண்டும். வரதட்சணை, நகைநட்டு, கல்யாணச்செலவு என்று தகப்பன் கடன்வாங்கிச் செலவழித்ததை மறக்காமல், நன்றியோடும் பொறுப்போடும் குடும்பம் நடத்த வேண்டும். அப்பொழுதுதான் உலகம் உருப்படும். புருஷனோடு வாழப்பிடிக்காமல் இன்னொருவனைக் காதலிக்கும் இவள் மாதிரி ஓடுகாலிகளைத் துருக்க தேசத்தில் செய்வார்களாமே.. அது போலக் கல்லெறிந்துக் கொல்ல வேண்டும்.

எனக்குள் ஆத்திரம் அடங்காது போலிருந்தது. விட்டது சனியன் என்று குதூகலிக்காமல் ஏன் இப்படிப் பொறுமுகிறேன்? இன்றோடு இதற்கு முடிவு கட்டவேண்டும் என்பது மட்டும் புரிந்தது. என்ன பதில் சொல்வது? என்ன செய்வது?

இவளை வீட்டை விட்டுத் துரத்தி அக்கடா என்று இருப்பதா? ஜீவனாம்சம் கேட்டால் செருப்பால் அடிக்கலாம். அடல்ட்ரி. குழந்தையும் இல்லாததால் உதவித்தொகை எதுவும் தர வேண்டியதில்லை. கட்டிய புடவைகூட நான் வாங்கிக் கொடுத்தது. அதையும் கழற்றிப் போட்டு அம்மணமாக ஓடுறி நாயே என்று அடித்து விரட்டலாம். அதே நேரம்.. இவளை அவனுடன் அனுப்பினால் அவனைக் காயப்படுத்தியதற்கு பரிகாரம் எதுவும் செய்ய வேண்டியதில்லை. யோசித்தேன்.

    "i'll tell you what now.. you degenerate prick.." என்றேன் அவனைப் பார்த்து. "என் வீட்டை விட்டு ஓடு. இனி இந்தப் பக்கமே வராதே. அவள் என் மனைவி. தீ வளர்த்து சத்தியம் செய்த கல்யாணம். அதை விடுவதாக இல்லை". ஏன் அப்படிச் சொன்னேன்? விட்டுத் தொலையட்டும் வியாதி என்று வினாடிகள் முன்னே நினைத்தவன், ஏன் விழுந்தேன்? ego. தேவையில்லாத கௌரவம்.

"முடியாது. இவ்வளவு நடந்தபிறகு இவளை தனியே உன்னுடன் விட்டு வர முடியாது.. நீ கொலைகாரனாக மாற நான் விரும்பவில்லை" என்றான். 'த்தா டேய்.. அட்வைஸ் வேறயா?' என்றேன் மனதுள்.

"ஆமாம்.. என்னாலும் இனிமேல் இங்கே இருக்கமுடியாது. ஐ நீட் எ டிவோர்ஸ்" என்றாள் மனைவி.

"ஐ அக்ரி" என்றான். அவள் கைகளைப் பிடிக்க முயன்றான். என்னைப் பார்த்து, "விவாகரத்துக்கான செலவெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ எந்தவிதப் பண உதவியும் செய்ய வேண்டாம்" என்றான்.

என்னுள் இருந்த மிருகமா இல்லை பரம்பரைக் கண்மூடித்தனமா என்னவோ தெரியவில்லை, கொதித்தேன். என் மனைவி என்னை விட்டு விலகி, நான் இருக்கும் பொழுதே, இன்னொருவனுடன் போவதா? பொறுக்க முடியவில்லை. "முடியாது. இவள் உன்னுடன் வந்தால் போலீசுக்குச் சொல்வேன். உன் மேலும் அவள் மேலும் அடல்ட்ரி வழக்கு போடுவேன். விவாகரத்துக்குச் சம்மதம் தராமல் வருடக் கணக்கில் இழுத்தடிப்பேன். உங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டேன்" என்றேன்.

மனைவியின் முகத்தில் கோபமும் ஆற்றாமையும் வெடித்தது. அவன் என்னை அமைதியாகப் பார்த்து, "ஏன்?" என்றான்.

"வாட் டு யூ மீன்?"

"ஏன் இந்தப் பிடிவாதம்? ஏன் இந்த வரட்டுக் கௌரவம்? நீங்களிருவரும் கணவன் மனைவியாக வாழவில்லை என்பது எனக்குத் தெரியும்.."

"வாட் டு யூ மீன்?"

"வெல்.. தப்பா நினைக்காதே.. ஐ'ல் பி ப்லன்ட்.. நீ பதினஞ்சு வருஷத்துல எவ்வளவு தடவை உன் மனைவியோட உறவு கொண்டாடினயோ அதை நாங்க ரெண்டு மாசத்துல செஞ்சிருக்கோம்.."

"ஸ்டாப் இட்" என்றேன் ஆத்திரத்தோடு.

என்னைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்தான். "இன் பேக்ட்.. தீ வளர்த்து சத்தியம் செஞ்சு கட்டின மனைவியை இதுவரைக்கும் நீ உடையில்லாம பார்த்தது கூட இல்லை.. சரியா?"

அந்தக் கணத்தின் அந்தச் சொற்கள் என்னை நெட்டித் தள்ளின. என்னுள் பலூன் வெடித்தது. எதிரே கண்ணாடி அலமாரியின் சேப்டி லாக்கரைத் திறந்து கைத்துப்பாக்கியை எடுத்தேன். அவனை நெஞ்சுக்கு நேராகச் சுட்டேன். திடுக்கிட்டு அலறத்தொடங்கிய மனைவியை அவசரப்படாமல் சுட்டேன்.

கொஞ்ச நேரம் திகைத்து நின்றேன்.

பிணங்களைத் தனித்தனியாக மூட்டை கட்டி கராஜ் வழியாக என் காரில் திணித்தேன். கறைகளைத் துடைத்தேன். தடங்களைத் துடைத்தேன். அறைகளை ஒழுங்குபடுத்தினேன். பேஸ்மென்டிலிருந்து கிருமிநாசினி ப்யூமிகேடரை எடுத்து வந்து அறைகளில் அடித்தேன். நாலு மணி நேர வேண்டாத வேலை. அவர்களை ஓட விட்டிருக்கலாம்.

    காரைக் கிளப்பி மெம்பிஸ் நெடுஞ்சாலையில் கலந்தேன். நல்ல வேளை கான்பரன்ஸ் ஹோட்டல் அறையைக் காலி செய்யவில்லை... அறைக்குப் போனதும் வாய்தா விவகாரம் கவனிக்கவில்லை என்று இன்றிரவு தகவல் சொல்லிவிட வேண்டும்... இனி என் மீது சந்தேகம் வராதபடி நடந்து கொண்டால் போதும். மனதுள் எண்ணங்கள் முட்டி மோதி வரிசையில் விழுந்தன.

1. கொலை நடந்தது யாருக்கும் தெரியாது
2. அவன் வீட்டில் யாராவது தேடித் தகவல் கொடுத்தால் உண்டு. தனியாளாக இருந்தால் அதுவும் சந்தேகம். என்னைத் தேடி வருவது இன்னும் சந்தேகம்
3. நான் வீடு திரும்பி நாலு நாள் பொறுத்து மனைவியைக் காணவில்லை என்று புகார் கொடுக்கலாம். பணம், காரோடு ஓடிவிட்டாள் எனலாம். ஆறு மாதம் கழித்துத் துப்பாக்கியும் காணவில்லை எனலாம். அவசரமேயில்லை
4. அதற்குள் எதிர்பாராவிதமாக ஏதாவது நிகழ்ந்தால், நான் நான்கு நாட்கள் வெளியூரில் இருந்ததற்கான அசைக்க முடியாத அத்தாட்சியும் சாட்சியும் உண்டு
5. கள்ளக்காதல் விவகாரம் என்பது எனக்கு வசதியாக மாறும். என் வீட்டில் அவனுடைய ரேகைகள் இருந்தால் கவலையில்லை. மேலும், அவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டார்கள் என்ற கதை நிறைய நாள் செல்லும். பிணங்கள் கிடைக்காவிட்டால் பிரச்சினையே இல்லை.

இந்தப் பிணங்களையும் துப்பாக்கியையும் எப்படித் துறப்பது என்ற சிந்தனையுடன் சாலையில் கவனம் செலுத்தினேன். சே! இந்த டிரேபிக் நெரிசல் மோசமாகிக் கொண்டே இருக்கிறது. ■



22 கருத்துகள்:

  1. அப்பாதுரை , இப்பதான் இதை கொஞ்சம் வேற மாதிரி சொல்லிட்டு இங்க வந்தா, இங்க ஒரு இன்ப அதிர்ச்சி. நம் சமுதாயத்திற்கு இன்னும் மனப் பக்குவம் வேண்டும் என்றேத் தோன்றுகிறது .

    இங்க படிச்சிட்டு என் மெயில் பார்த்தால் உங்கள் பின்னூட்டம் :))

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாமார்ச் 10, 2012

    indha maadhiri kanraavi kathaikku ippadi oru thalaippaa?

    பதிலளிநீக்கு
  3. பிடிபடாமல் இருந்தால் நிம்மதி. ஆனால் மனசாட்சி நிம்மதியை குலைக்குமே.

    எங்கும் தவறுகள், எதிலும் தவறுகள் - இது தானே மனித வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
  4. powerful writing!திருமணம் என்ற உறவில் புனிதம் ஒன்று இருக்கிறதா என்றே கேள்வி எழுதுகிறது. சில இடங்களில் ஏன் இது மாதிரி நடக்கிறது என்றும் ஒரு கேள்வி.இதெயெல்லாம் ஒரு சிறுகதையாக்க அப்பாதுரையால் மட்டுமே முடியும்.

    பதிலளிநீக்கு
  5. இந்தக் கதை இங்கு முடிந்து விடுகிறதா....

    பதிலளிநீக்கு
  6. கண்டிப்பா பிடிபடுவீங்க.
    கதை தொடரும்.தொடர்கதைன்னு லேபிளை மாத்திடுங்க அப்பாஜி !

    பதிலளிநீக்கு
  7. அப்பாதுரை அவர்களே! ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வளர்ந்துவந்த ஆணாதிக்க வெறியை, அதன் திமிரை, கையாலாகாத்தனத்தை அருமையாக சித்தரித்துள்ளீர்கள்---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  8. Why now? ன்னு husband கேட்ட கதையா அப்பாஜி! அற்புதம்.. எப்படித்தான் சீன் சீனா புட்டுப் புட்டுப் வைக்கிறீங்களோ? :-)))

    பதிலளிநீக்கு
  9. அன்பின் திரு அப்பாதுரைஜி

    அரண்டு போய் நிற்கிறேன்...... என்ன சொல்வது என்று தெரியவில்லை... அப்பப்பா என்ன சக்தி வாய்ந்த எழுத்துக்கள்!!!! வாழ்த்துகள்..... நிறைய சொல்லத் தோன்றினாலும்......

    பதிலளிநீக்கு
  10. மூவரையும் மிகச் சரியாகப் புரிந்து கொள்ள முடிகிறது
    அப்படியே உள்ளார்ந்த விஷயங்களையும்...
    மனம் கவர்ந்த கதை

    பதிலளிநீக்கு
  11. ராமசுப்ரமணியன் அவர்கள் கேட்க நினைத்ததைதான் நானும் நினைத்தேன். யாருக்கு நிம்மதி?
    கதையை படித்தபோது இது போன்ற காட்சிகளை கொண்ட நிறைய படங்கள் நினைவுக்கு வந்தன.

    பதிலளிநீக்கு
  12. 'கேட்டதைதான்' என்று எழுதாமல் 'கேட்க நினைத்ததைதான்' என்று தவறுதலாக எழுதி விட்டேன். மன்னிக்கவும்!

    பதிலளிநீக்கு
  13. எதிர்பாராததை எதிர்பார்க்கலாம் என்ற நம்பிக்கையை மூன்றாம் சுழி பொய்ப்பிக்கவில்லை.

    பதிலளிநீக்கு
  14. ஜல்சாவில் ரத்த "சம்சா"வனா கதை !

    பாதி வீடுகளில் கணவன் மனைவி புணர்வு சொசோ தான். நேற்று "தில் துபாரா நகி மிலா" என்ற ஹிந்தி படம் மறுபடியும் பார்த்தேன். ஒத்.....என்னாம்மா கிஸ் அடிச்சிகிறாங்க. ஒக்....ளி காசு கொடுத்து நடிச்சாலும் சும்மா ஜிவ்வுன்னு இருந்தது.

    இந்திய திருமணங்களில் நிரந்தர வெறுமை பல இடங்களில். புரிந்து கொள்ளாமல் கல்யாணம் செய்து, புரிந்துக்கொள்ளாமல் புணர்ந்து, புரியாத வயதில் பிள்ளைகள் - அவர்களை கரை சேர்க்க ஓட்டம்....ஏதோ வாழ்க்கை என்று .....

    பதிலளிநீக்கு
  15. சாய்....பேக் டு ஃபார்ம்...-!? :)))

    பதிலளிநீக்கு
  16. இந்திப் படத்துல கிஸ்ஸா.. சும்மா :)
    இந்தியத் திருமண வெறுமை.. புரியாமலே வாழ்வது... எல்லாம் யதார்த்தம். கலாசாரமா பண்பாடா கண்மூடித்தனமா என்று புரியாமலே போனது புரியாமலே போகட்டும்.

    புதிய தலைமுறையில் விவரமும் விழிப்பும் தெரிவதாய்த் தோன்றுகிறது. சமீப இந்தியப் பயணம் ஒன்றில் நட்சத்திர ஓட்டல்களில் பார்த்த நம்பமுடியாத காட்சிகள் கொஞ்சம் அதிர வைத்தாலும் நம்பிக்கையும் தந்தது என்பேன். இரண்டு ஆண்களுடன் ஒருவருக்குத் தெரியாமல் மற்றொருவருடன் ஒரே நேரத்தில் பழகிய இந்தியப் பெண்களைப் பற்றியும் டைம்ஸ் ஆப் இந்டியாவில் படித்தேன். இரண்டு பேருக்கும் ஒரே வேலந்டைன் கார்ட் வாங்கி உள்ளே பேரெழுதிக் காதலைக் கொட்டி அட்ரெஸ் மட்டும் மாற்றி அனுப்பிவிட்டாளாம் ஒருத்தி. கவலைப்படாமல் பேட்டி கொடுத்திருப்பது சுவாரசியம். மேற்கிலிருந்து வந்த கலாசாரம் என்று போர்வை போட்டு அடித்துக் கொல்லத் தயாராக இல்லாத சமூகம் இன்னும் பெரிய சுவாரசியம். காதல் என்றாலே 'செருப்பாலடிப்பேன்' என்றிருந்த கூட்டத்தில் வளர்ந்தவனுக்கு இது விசித்திரமாகத் தோன்றியது.

    பதிலளிநீக்கு
  17. உங்களின் எழுத்து நடையை (எப்போதும் போல்) பிரமிக்கிறேன் அப்பா ஸார்... மிக அருமை. பழமைச் சிந்தனையில் வந்தவன் மட்டுமல்ல... புதிய தலைமுறைச் சிந்தனைகள் கொண்டிருப்பவனாலும் பொறுக்க இயலாத ஒன்று Adultry. முடிவு நன்று. அதன் பின் என்ன நடந்தாலும் படிப்பவர் கற்பனைக்கே என்பது நல்ல உத்தி.

    பதிலளிநீக்கு
  18. //ஸ்ரீராம். சொன்னது… சாய்....பேக் டு ஃபார்ம்...-!? :)))//


    ஸ்ரீராம் எனக்கு தெரிந்தது அது ஒன்று தான் அதனால் தான் வனவாசத்தில் இருந்து சில சமயம் வெளியே வருகின்றேன்.

    பதிலளிநீக்கு
  19. இதை ஏற்கெனவே ஹூஸ்டனில் இருக்கும்போதே படிச்சேன்; பிடிக்கவில்லை என்றால் ஆரம்பத்திலேயே அந்தப் பெண் விலகி இருக்கவேண்டும். இம்மாதிரிக் கள்ளக்காதல் தவறே. ஆனால் அதற்காகக் கொலை வரை போயிருக்க வேண்டாமோ! அந்தக் கணவனின் இடத்தில் இது சரியாக இருக்கலாம். ஆனாலும் விவாகரத்துக் கொடுத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.

    செக்ஸ் தேவைதான் என்றாலும் அதுவே வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை ஏற்கவோ, புரிந்து கொள்ளவோ முடியவில்லை. :((((((((((

    பதிலளிநீக்கு
  20. அப்பபா திகிலாக இருந்தது. முடிவு எப்ப்டியிருக்கும் என இன்னும் சில கதைகள் எழுத எங்களுக்கு தளம் இட்டு சென்று கதையை முடித்து விட்டீர்களோ?

    பதிலளிநீக்கு