2012/03/18
வாலன்டியர்
நியூஜெர்சி அருகே ஸ்டாக்டனில், ஸ்டாப் அன்ட் ஷாப்பில், வேலை பார்க்கிறேன்.
வாடிக்கை சேவையாளர் என்று வேலைக்கு எடுத்த போது கொடுத்த பதவி, பெயருக்குத் தான். காசாளர் வேலை, பிலாஸ்டிக்கா பேப்பரா என்று கேட்டு பொட்டலம் கட்டுவது, ஸ்டாக் ரூமில் மளிகை அடுக்குவது, காய்கறி அடுக்கி வைப்பது, பாத்ரூம் துடைப்பது என்று எந்த வேலை கொடுத்தாலும் செய்ய வேண்டும். வயதான காலத்தில் வேலை கிடைப்பதே கஷ்டம், இதில் ஜம்பம் பார்த்தால் முடியாது என்று வாயை மூடிக் கொண்டு வேலை பார்ப்பேன்.
என் வேலையின் ஒரே சுவாரசியம், இங்கே நான் சந்திக்கும் குணச்சித்திரங்கள்.
இந்த வாரம் முழுதும் காலை ஆறு மணியிலிருந்து மதியம் மூன்று மணி வரை வேலை. சிகரெட் பிடிக்கவும், சாப்பிடவும், ஸ்டாக் ரூமின் இருட்டில் இள வயசுப் பசங்களுடன் ரெட் ட்யூபில் பலான படம் பார்க்கவும், இடையில் ஒன்றரை மணி நேரம் கிடைக்கும். ஒரு பலான படத்தில் பாருங்கள், ஆகாசத்தில் உட்கார்ந்து கொண்டு இந்த சர்கஸ்காரப் பெண்... ஷ், என் மேலதிகாரி வருகிறாள், பிறகு சொல்கிறேன்.
இன்றைக்கு சனிக்கிழமை. சனி ஞாயிறென்றால் கூட்டம் அதிகமாக வரும். விளம்பரக்காரர்கள்.. இலவச சாம்பிள் கொடுத்து ரெண்டு டாலர் கூப்பனும் கொடுத்து, பொருள் வாங்க மாட்டார்களா என்று ஏங்கும் வியாபாரிகள்.. தப்பிக்க முடியாதபடி ஒவ்வொரு வாசலிலும் கர்ல் ஸ்கௌட் பாய் ஸ்கௌட் என்றுக் கடைவிரித்துத் துரத்தி நன்கொடை கேட்டு நச்சரிப்பவர்கள்.. வயதான ஆசாமிகளை ஷாப்பிங் அழைத்துப் போய் கொஞ்சம் புண்ணியம் சேகரித்துக் கொள்ளும் வாலன்டியர்கள்.. என்று வாடிக்கையாளர் தவிர விதம் விதமாகக் கூட்டம் வரும். வாலன்டியர்களைக் கவனிப்பது சுகம். அதுவும் அழகான இளவயதுப் பெண்களைக் கவனித்தால் பொழுது போவதே தெரியாது.
அதோ, சிரித்த முகத்துடன் உதவி செய்து கொண்டிருக்கிறாள் ஒருத்தி. முகத்தைத் தவிர எல்லாவற்றையும் மூடிக் கொண்டிருக்கிறாள். இரானியராக இருக்கலாம். சற்றுத் தள்ளி, அர்த்தமில்லாமல் சிரித்து தலையைத் தலையை ஆட்டி 'ஸங்க்யூ' என்று நன்றி சொல்லிக்கொண்டு நிற்பவள், வழக்கமாக வரும் சைனாக்காரி. இரண்டு மூன்று வயதான நபர்களை, கை பிடித்தோ தள்ளுவண்டியிலோ அழைத்துக் கொண்டு போவாள். இன்னும் ஒரு மணி இரண்டு மணி பொறுத்து அவர்கள் வாங்கிய பத்து டாலர் மளிகையை என்னவோ பொக்கிஷம் போல பாதுகாப்பாய் அவர்களிடம் கொடுத்து பஸ் ஏற்றி விடுவாள். இதோ இந்தியாக்காரி. நெற்றியில் சிவப்புப் பொட்டு. சக இந்தியரைத் தவிர, பார்த்தவருக்கெல்லாம் விவரமில்லாமல் ஒரு சிரிப்பு. 'மே ஐ ஹெல்ப் யூ?' என்று அனுமதி கேட்டு உதவி செய்கிறாள். இங்கே சில்லறை பொறுக்கிக் கொடுத்து, அங்கே கைப்பிடித்து உட்கார வைத்து, இன்னொரு சமயம் பேச்சுத் துணை கொடுத்து... இன்றைக்கு இவள் தான் சூபர் ஹிட். காலையிலிருந்து இவளைத்தான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். வழவழவென்று இருக்கிறாள் கட்டை. ஈங்கிவளை யான் பெறவே.
ம்ம்ம். மணி மூன்றடிக்கப் போகிறது. வெத்துக் கூட்டமெல்லாம் போயாகி விட்டது. எனக்கும் ஷிப்ட் முடிகிற டைம். கை கால் முகம் கழுவிக் கொண்டு, இலவச காபி ஒரு கப் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.
வெளியே வந்தபோது, வாசலில் என்னைப் போல் மூன்று கிழங்கள். ஷாப்பிங் உதவி பெற்றவர்கள். பஸ் வரக் காத்துக் கொண்டிருந்தார்கள். சேர்ந்து கொண்டேன். ஏதோ பேச்சு கொடுக்க நினைத்து, அவர்கள் கையிலிருந்த ஷாப்பிங் பையைப் பார்த்து, "நிறைய மளிகை போல..?" என்றேன். மொத்தமே மூன்று டாலருக்கு மேல் இருக்காது, இருந்தாலும் கேட்டு வைத்தேன்.
"ஷாப்பிங் செய்யவா வந்தேன்? நீங்க வேறே!" என்றான் ஒருவன். "எல்லாம் அந்த வாலன்டியர் பொண்ணுங்களைத் தொட்டுப் பார்க்கத்தான்" என்றான் இன்னொருவன். "எப்பவும் நம்ம ஊர் வெள்ளச்சிகளையும் கறுப்பிகளையும் தொட்டுத் தொட்டு, இது பரவாயில்லை.. புது மாதிரி. பட்டால் தான் சுகம்" "அந்த சைனாக்காரி ஸ்கர்ட் படபடனு ஆடுறப்ப இருபது வருஷம் கழிச்சு பிறக்காம போயிட்டமேனு தோணிச்சு" "இந்தியாக்காரி அடுத்த வாரமும் வராளாம். விடக்கூடாது" "மே ஐ ஹெல்ப்னு குனிஞ்சு குனிஞ்சு சிரிக்கிறாபா. என் கையைப் பிடிச்சு உட்கார வச்சப்ப, சொக்கிட்டேன்" "ஓ, அவளா? டாப்ஸ்" "வேணும்னே சில்லறையைத் தவற விட்டேனே, பாத்தியா? பொறுக்கி எடுத்து கொடுத்தா, கண்ணுக்குக் குளிர்ச்சி. சில்லறையை கைல பட்டுக்கிட்டே குடுத்தாபா" "அடுத்த வாரம், என்னை பாத்ரூம் கொண்டு விடச் சொல்லணும்".
"வயசான காலத்துல இப்படிக் கிடைச்சாத்தான் உண்டு" என்றபடி நானும் சிரித்தேன். பஸ் வந்து விட்டது.
வகை
சிறுகதை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அல்ப சுகம் என்பது இதுதானோ ?
பதிலளிநீக்குபெருசுங்களுக்கு வயசு சுமாரா அறுபது எழுபது இருக்குமா?
பதிலளிநீக்குவெயிட்டான பதிவுகளுக்கு இடையில் ஒரு சைட்டான சாரி லைட்டான பதிவா?
இளவட்டங்களையும் கவர முயற்சியா?
நல்லா இருக்கு சார்! :-)
அண்ணே....!
பதிலளிநீக்கு:))))))
இதற்கு மூன்ற டாலர் செலவா....!
இந்த அளவுக்கு ‘சபலிஸ்ட்’ ஆகறதுன்னா எல்லாரும் ரொம்பவே வயசானவங்களோ? மைல்டான ஹ்யூமரோட சுவாரஸ்யமா இருந்துச்சு.
பதிலளிநீக்குhumour touch இதில் சுவாரஸ்யம்! முட்சுமை இன்னும் வாசிக்கவில்லை வருகிறேன் மீண்டும்.
பதிலளிநீக்குஅமெரிக்காவிலும் வயசானவங்க சில பேர் இப்படி இருக்காங்களா?
பதிலளிநீக்குமனிதர்(வயதானவர்)கள் பல விதம்.
பதிலளிநீக்குவயதானவர்களில் இன்னொரு ரகம். என்னுடைய பதிவு போய்ச்சேர் வீடு நோக்கி படித்தீர்களா.?.
பதிலளிநீக்கும்ம்...ம்ம் ....!
பதிலளிநீக்குகைப்பற்றுதல் இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். இந்தப் பதிவைப் பொறுத்து ஒரு பக்கம் வயதானவர் என்றால், இன்னொரு பக்கம்- 'அதோ,அந்தக் கிழத்தை கைப்பற்றி சிரித்த முகத்துடன் உதவி செய்து கொண்டிருக்கிறாள், ஒருத்தி!
பதிலளிநீக்குஒரு பக்க வயதானோர் உணர்வு இதுவென்றால், இன்னொன்றான 'அதோ, கரம் பற்றி உதவி செய்து கொண்டிருக்கும்' அந்த இன்னொரு பக்க உணர்வு? அது மகத்தானது. இந்தப் பக்க உணர்வு பற்றியே சிந்தனையற்றது. காசுக்காக உதவி என்றாலும், 'ஈங்கிவரை இவர் பெற'..
மிக நன்றி Ramani, RVS, ஸ்ரீராம்., கணேஷ், ஷைலஜா, மோகன் குமார், தமிழ் உதயம், G.M Balasubramaniam, ஹேமா, ஜீவி (ஆகா!),...
பதிலளிநீக்குகொடுமை என்னவென்றால் வீட்டில் புருஷனுக்கு புவ்வா - அங்கே வெளியில் சரவங்கா நமஷ்காரத்துடன் காட்சி - பேஷ் பேஷ்
பதிலளிநீக்குபோகிற போக்கில் அப்படி அனுபவித்தால் தான் உண்டு போலிருக்கு ! அதுக்கு தான் ஜொள்ளோட அடுத்த கதை !!
உங்கள் பதிவுகளைப் படிப்பதற்காகவே சீக்கிரம் ரிட்டயர்ட் ஆக வேண்டும் என்று தோணுகிறது.
பதிலளிநீக்குஎங்கிருந்து கிடைக்கிறது நேரம் உங்களுக்கு ?
கடவுளே, உதவியை உதைவியாகக் கூடவா பயன்படுத்துவார்கள்?? உதவும் எண்ணமே போய்விடும் போலிருக்கே! :P
பதிலளிநீக்கு