2010/10/25

புகை


முன் கதை 1 2 3


    ன் பதில் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்ததா என்பது தெரியவில்லை. பாலைவனக்கல் போல் அசையாதிருந்தான். என் அப்பா இறந்த விவரங்கள் கேட்டான். அலுத்துப் போகும் வரை சொன்னேன். 'இது எங்கே போகிறது?' என்று நினைத்தேன். பிறகு, "துரை, உங்க அப்பாவின் உருவம் தோன்றுவது எதனால் என்று நினைக்கிறீர்கள்?" என்றான்.

'அதைக் கண்டுபிடிக்கத்தானே உனக்குப் பணம் தருகிறேன்?' என்று சொல்லத் துடித்தவன் அடக்கிக் கொண்டேன்.

கெவின் சில நிமிடங்கள் அமைதி காத்துவிட்டு, "நீங்க உங்க அப்பா உருவத்தைப் பார்ப்பது, உங்க உள் விகாரம். ஏதாவது குற்ற உணர்வா? கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்லுங்க" என்றான். இன்னும் சில நிமிட அமைதிக்குப்பின், "தாயத்தைக் கையில் எடுத்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றியது?" என்றான்.

"என் அப்பா சாகவேண்டும் என்று நினைத்தேன்" என்றேன் நிதானமாக.

இருபது வருடங்களாக அடைத்திருந்த கதவு உடைந்துத் தெறித்தது. "எனக்கும் என் அப்பாவுக்கும் சுமுகமான உறவே இல்லை. எதற்கெடுத்தாலும் அடி உதை ஆத்திரம் ஆங்காரம்னு இருந்ததால எனக்கு வேறு எதுவும் தோணல. பேயோட்டிய மறுநாள் காலை தேவையில்லாம, வளர்ந்த பிள்ளைனும் பாராம, என்னைத் திட்டி அவமானப்படுத்தினார். அந்த ஆத்திரத்தில் இருந்தவன், தாயத்து கிடைச்சதும் வேண்டிக்கிட்டேன். அவருடைய கண்மறைக்கும் ஆத்திரம் எனக்குள்ளும் இருக்குதே?" என்றேன்.

கெவின் வேண்டுமென்றே அமைதியாக இருந்தது போல் பட்டது. "துரை, உங்க ஹெலூசினேசனுக்கு ஒரு காரணம் இப்ப புரியுது. குற்ற உணர்வு. நீங்க தாயத்தை வேண்டினதால உங்க அப்பா இறந்துட்டாருனு நம்புறீங்க; அதான் பல வகையில உங்க அப்பாவோட உருவம் கண் முன்னால வந்துகிட்டே இருக்கு. தாயத்தை வேண்டிக்கிட்டதால நீங்க ஒரு தப்பும் செய்யலை. தற்செயலா நடந்த இரண்டு சம்பவங்கள், அவ்வளவுதான். நீங்க குற்றம் செஞ்சதா நினைக்காதீங்க" என்றான்.

"இல்லை" என்று தலையாட்டினேன்.

நோட்பேடில் என்னவோ கிறுக்கினான். "உங்க ட்ரீட்மென்டை ஒரு மைல்ட் ரிலேக்சன்டோட தொடங்கப்போகிறேன். ஆறு வாரத்துக்கு தினம் ஒரு வேளை. ஏங்சைடி சப்ரெசன்ட்" என்ற கெவின், என்னிடம் ஒரு ப்ரிஸ்க்ரிப்ஷன் கொடுத்தான். பிறகு, "நாளைக்குச் சில எலக்ட்ரோ மேக்னடிக் வேவ் ரீடிங் பாத்துடலாம். உங்க ந்யூரோ ஹெல்த் சரியா இருக்கானு பாத்துருவோம்" என்றான்.

"ட்ரீட்மென்ட், மருந்தெல்லாம் வேண்டாம். நமக்குள்ளயே ஏதோ பேசித் தீத்துக்குவோம்" என்றேன். எனக்கு இருப்புக் கொள்ளவில்லை.

சிரித்தான். "துரை, ஐ'ம் நாட் எ தெரபிஸ்ட். பேசித் தீக்குறதுக்கு இது என்ன யுஎன் கவுன்சிலா? நான் ஒரு சைகயேட்ரிஸ்ட். நோய் நாடி நோய் முதல் நாடித் தீர்ப்பவன். உங்க மென்டல் மேகப் தெரியற வரைக்கும் நீங்க ஒரு அட் ரிஸ்க் பேசன்ட்" என்றான். "கண்டிப்பா ட்ரீட்மென்ட் எடுத்துகிட்டுத்தான் ஆகணும். யு ஓ இட் டு யூர்செல்ப்"

அப்போது தான் அவன் மேசை மேல் ஏதோ அசைவதைக் கவனித்தேன். "அது என்ன கெவின்?" என்றேன். "ஓ..சிலந்தி பேபர் வெயிட்! ஸ்பைடர்மேன் படக்குழுவுக்கு நான்தான் சைகயேட்ரிஸ்ட்.." என்றபடி அதை எடுத்து உள்ளங்கையில் வைத்துக்கொண்டான். சிலந்தி சிலிர்த்து அவன் உள்ளங்கையைக் கவ்விக்கிழிக்கத் தொடங்கியது. அவன் அலறக்கூட நேரமில்லை. நொடிகளில் துவண்டு விழுந்தபோது அவன் கண்களில் பெரும் வேதனை தெரிந்தது.

நான் திடுக்கிட்டு அலறினேன். ஓடி வந்தப் பெண் சிப்பந்தி முதலில் அலறிவிட்டு இரண்டாவதாகப் போலீசை வரவழைத்தாள்.

    ழில் சென்னை போக வேண்டி வந்தது. என் விவாகரத்துச் சிக்கல்கள் முடிந்து, அம்மாவுடன் கொஞ்சம் ஓய்வெடுக்கச் சென்றேன். பழைய நட்புகள் சிலவற்றைப் புதுப்பித்தேன். தேசி ஆளைக் காணோம். வயலின் வீட்டை விட்டு ஓடிவிட்டதாகக் கேள்விப்பட்டேன். செ.இலவனுக்குப் பிறகு இந்தியா திரும்பிய சுரேஷ், ஐடி வேலையை விட்டு அவன் மனைவி பெயரில் வீட்டுமனை வியாபாரத்தில் இறங்கி இன்றைக்குப் பெரிய பில்டர். கொழிக்கிறான். குடிப்பதில்லை. பதிலுக்கு நெற்றியில் பட்டை அடிக்கிறான். என் மனநிலையையும் கெவினுடன் பேசி நடந்ததையும் சொன்னேன். அவன் சிவப்பழமாகத் தலையாட்டினான். "அதுக்குப் பிறகு எங்கப்பா உருவத்தைப் பார்க்கலேடா" என்றேன்.

"நல்லதுரா. தாயத்தோ புண்ணாக்கோ, நம்மள ஆட்டிவச்சது தொலஞ்சதுனு இருப்போம்" என்றான். "இந்தாடா, பழனி விபூதி. தினம் ஒரு கீத்து வச்சுக்க" என்று உள்ளிருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து வந்து கொடுத்தான். வெளியே வந்ததும் அதை எறிந்தேன். அவனுடைய வீட்டைத் திரும்பிப் பார்த்தபடியே நடந்தேன்.

மறுநாள் செரடன் ஹோடலில் அவளைச் சந்தித்தேன். என்னை அடையாளம் கண்டு அருகில் வந்து புன்னகை செய்தாள். நான் "ஹலோ" என்றேன். சினிமா தயாரிக்கிறாளாம். "எத்தனை வருசமாச்சு பாத்து?! எத்தனையோ நாளா சந்திக்கணும்னு நெனச்சேன், இங்க சந்திக்கணும்னு இருக்கு பாருங்க" என்றாள். "என்ன செஞ்சுட்டிருக்கீங்க?".

"நான் அமெரிகாவுல இருக்கேன்"

"தெரியும், இங்கே என்ன செஞ்சுட்டிருக்கீங்க?"

தோளைக்குலுக்கி உதட்டைப் பிதுக்கினேன்.

"அப்ப, எங்கூட மேலே வாங்களேன். ஒரு சின்ன ஷூடிங் எடுக்குறோம் மூணாவது மாடில. பாத்துகிட்டே பேசுவோமே?" என்றாள். என் கை தொட்டு அழைத்தாள். சென்றேன். மூன்றாவது மாடியில் ஷூடிங் அறைக்குப் பின்னால் தனியறைக்குப் போனோம். தொட்டிலில் ஒரு குழந்தை என்னைப் பார்த்துச் சிரித்தது. வாயெல்லாம் கோரைப்பல். அரையிருளில் அவளைக் கவனித்துப் பார்த்தேன். இருபது வருடங்களுக்கு மேலாகியும் முகத்தில் களையிருந்தது. பொலிவுடன் பளிச்சென்று இருந்தாள் பேய்ப்பெண். பட்டாம்பூச்சிக் கண்களில் அழைப்பிருந்தது. உதட்டின் சிவப்புச் சாயம், நிச்சயம் மேபலீன்.



மாற்று:


    ன் பதில் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்ததா என்பது தெரியவில்லை. பாலைவனக்கல் போல் அசையாதிருந்தான். என் அப்பா இறந்த விவரங்கள் கேட்டான். அலுத்துப் போகும் வரை சொன்னேன். 'இது எங்கே போகிறது?' என்று நினைத்தேன். பிறகு, "துரை, உங்க அப்பாவின் உருவம் தோன்றுவது எதனால் என்று நினைக்கிறீர்கள்?" என்றான்.

நான் பதில் சொல்லவில்லை.

கெவின் சில நிமிடங்கள் அமைதி காத்துவிட்டு, "நீங்க உங்க அப்பா உருவத்தைப் பார்ப்பது, உங்க உள் விகாரம். ஏதாவது குற்ற உணர்வா? கொஞ்சம் யோசித்துப் பதில் சொல்லுங்க" என்றான். இன்னும் சில நிமிட அமைதிக்குப்பின், "தாயத்தைக் கையில் எடுத்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றியது?" என்றான்.

"என் அப்பா சாகவேண்டும் என்று நினைத்தேன்" என்றேன் நிதானமாக.

இருபது வருடங்களாக அடைத்திருந்த கதவு உடைந்துத் தெறித்தது. "எனக்கும் என் அப்பாவுக்கும் சுமுகமான உறவே இல்லை. எதற்கெடுத்தாலும் அடி உதை ஆத்திரம் ஆங்காரம்னு இருந்ததால எனக்கு வேறு எதுவும் தோணல. பேயோட்டிய மறுநாள் காலை தேவையில்லாம, வளர்ந்த பிள்ளைனும் பாராம, என்னைத் திட்டி அவமானப்படுத்தினார். அந்த ஆத்திரத்தில் இருந்தவன், தாயத்து கிடைச்சதும் என்ன செய்றோமுன்னு தெரியாம வேண்டிக்கிட்டேன். அவருடைய கண்மறைக்கும் ஆத்திரம் எனக்குள்ளும் இருப்பதை அன்னக்கு நான் தெரிஞ்சுக்கலே" என்றேன். "இதெல்லாம் நடக்காதுனு தான் நினைச்சேன். ஆறு மாசத்துக்குள்ள சாலை விபத்தில அடிபட்டு, துணிப்பொட்டலமா வந்த அப்பா உடலைப் பாத்ததும் ரொம்ப உடைஞ்சு போனேன். வேண்டுதலின் விளைவா இருக்குமோனு சந்தேகப்பட்டேன். பிறகு வயலின் திலகத்துடன் ஓடிப்போனதும் எனக்குள் இருந்த சந்தேகம் தீந்து பயம், பிராந்தி... வெளிப்படையா இதைக் காட்டிக்கொள்ளாவிட்டாலும் என்னை இந்த உணர்வு அரிச்சுக்கிட்டே இருக்கு".

"நீங்க காண்பதாகச் சொல்லும் உங்க அப்பாவின் உருவம் உங்களை எந்த விதத்திலாவது துன்புறுத்தியிருக்கிறதா? அச்சப்படுத்தியிருக்கிறதா?"

"இல்லை. சொல்லணும்னா கொஞ்சம் பாவமா இருக்கும். ஆனா அடிக்கடி என் முன்னால தோண்றது எனக்கு தொல்லைதான்"

நோட்பேடில் என்னவோ கிறுக்கினான். "உங்க ட்ரீட்மென்டை ஒரு மைல்ட் ரிலேக்சன்டோட தொடங்கப்போகிறேன். ஆறு வாரத்துக்கு தினம் ஒரு வேளை. ஏங்சைடி சப்ரெசன்ட்" என்ற கெவின், என்னிடம் ஒரு ப்ரிஸ்க்ரிப்ஷன் கொடுத்தான். பிறகு, "நாளைக்குச் சில எலக்ட்ரோ மேக்னடிக் வேவ் ரீடிங் பாத்துடலாம். உங்க ந்யூரோ ஹெல்த் சரியா இருக்கானு பாத்துருவோம்" என்றான்.

தலையாட்டினேன்.

"துரை, இதற்கு மருந்து கொடுத்து குணமாக்க முடியும் என்று என்னால் சொல்ல முடியாது. லெட் மி கிவ் யு மை வ்யூ. நீங்க சொல்றது போலவே தாயத்தின் விளைவென்றே வைத்துக் கொள்வோம். உங்க நண்பர்களுக்கு நல்லது நடந்ததும் தொடர்ந்து ஒரு கெடுதல் நடந்ததும் தாயத்தினால்தான் என்றே வைத்துக்கொள்வோம். மே பி யூ ஆர் லக்கி. உங்க நண்பர்கள் வேண்டியது எல்லாமே பாசிடிவ். நீங்க வேண்டிக்கொண்டது நெகெடிவா பாடிசிவா சொல்ல முடியாது, என்றாலும் அடுத்தவர் இறந்து போக வேண்டும் என்று நினைப்பது நிச்சயம் பாசிடிவ் இல்லை என்பேன். சரியா? அதனால அவங்களுக்குத் தொடர்ந்து கெடுதல் நடந்தது போல் உங்களுக்கு நடக்கும் என்று இல்லையே? காரணம் உங்க அப்பா அகாலமாய் இறந்து உங்களுக்கும் உங்கக் குடும்பத்துக்கும் ஏற்கனவே பல கெடுதல்கள் உண்டானதாலே, மே பி, உங்களுக்கு பாசிடிவாக ஏதாவது நடக்குமோ என்னவோ?" என்று ஏதோ சொல்லிக்கொண்டிருந்தான். "ஒரு வேளை உங்க அப்பாவின் உருவம் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறதோ என்னவோ? பார் ஆல் த இல்ட்ரீட்மென்ட் ஹி'ஸ் சபோஸ்டு ஹவ் டன்?". கடைசி வரிகள் உறைத்தன.

ஒரு வேளை என் அப்பாவின் உருவம் என்னிடம் மன்னிப்புக் கோருகிறதா? என்னை மன்னிக்கச் சொல்கிறதா? கெவினிடம் விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். அவன் கொடுத்த ப்ரிஸ்க்ரிப்ஷனைக் கிழித்துப் போட்டேன்.

"அப்பா, உன்னை மன்னித்தேன். லெட்ஸ் பர்கெட்" என்றேன் உரக்க.

என்னை ஏக்கமாகப் பார்த்துக்கொண்டிருந்த தெருவோர சேக்சபோன் பிச்சைக்காரன் பிஏஜி என்றான். அவன் பையில் ஐந்து டாலர் நோட்டைத் திணித்து நடந்தேன். உளுத்த பெட்டி என் கண்ணெதிரே பொடிப் பொடியாகிக் கரைந்து போனது.

27 கருத்துகள்:

  1. வடை எனக்குத் தான் சொக்கா!

    முதல் முடிவு தான் நல்லா இருக்கு.

    வரலாறு பதிவு செய்ய வேண்டியிருப்பதால் (என் பேருக்கு ஏற்றாற்போல் இப்படி எல்லா பதிவிலும் குண்டக்க மண்டக்க கேள்வி கேட்டு விடுவேன்):
    1. பாலைவனக்கல் போல அசையாதிருந்தான் என்றால், முல்லை, மருதத்தில் இருக்கும் கல் எல்லாம் அசையுமா?
    2. கெவின் கிட்ட தாயத்துக்கு என்ன பீட்டர் விட்டீங்க? சார்ம்-னா?

    ஆனாலும் நீங்கள் கெவினைக் கொன்ற குற்றத்தினால், உங்களை தாயத்து துரத்தியதைப் பார்த்து பாவம்னு தோணலை:-)

    கதை நல்லா இருந்தது. ஆனால், இதே போல் இன்னும் ஒரு தொடர் (அதுலியும் பெண்/paranormal) நீங்க எழுதிருந்தீங்க.

    இன்னும் எழுதுங்க! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  2. கேட்டீங்களே ஒரு கேள்வி கெக்கே பிக்குணி! (என்னமா யோசிக்கிறீங்க?!)
    ஹா.. என் பாட்டிலா குற்றம் காணுறீங்க (இந்த நெத்திக்கண்ணை எங்கே வச்சுத் தொலைச்சேன்.. டயத்துல காணாமப் போயிருது). பாலைவனக்கல்லுக்குப் பின்னாலே ஒரு காரணம் இருக்குங்க. ஆனா முல்லைக்கல்லும் அசையாது, கரெக்டு தான்.

    ஐயையோ... நீங்க போலீசா? கெவின் செத்ததை நான் பாத்ததோட சரிங்க.. எதுவோ செல்லப் பிராணி கூட வெள்ளாடுறாருனு நெனச்சேன்..

    வாழ்த்துக்கு நன்றி. (எங்க பரம்பரையிலே இது மாதிரி பேரானார்மல் சமாசாரம் கொஞ்சம் அதிகம்; இந்த பதிவை ரொம்ப உத்துப்பாக்காதீங்க... சொல்லிட்டேன்)

    பதிலளிநீக்கு
  3. //பட்டாம்பூச்சிக் கண்களில் அழைப்பிருந்தது.//
    அட்டகாசம். ;-)
    தாயத்து கூட நல்ல தலைப்புதான்.
    எனக்கென்னமோ சடார்னு முடிச்சா மாதிரி இருக்கு. ஷூட்டிங் அப்படின்னு கை பற்றி கூட்டிகிட்டு போன திலகாவை வச்சு இன்னும் கொஞ்ச தூரம் இழுத்திருக்கலாம். நல்லாத்தான் வந்திருக்கும். ;-)

    பதிலளிநீக்கு
  4. நன்றி, RVS
    நிசமாத்தான் சொல்றீயளா?
    >>>எனக்கென்னமோ சடார்னு முடிச்சா மாதிரி இருக்கு..
    (கை கூட்டிப் போனது திலகா இல்லை:)

    பதிலளிநீக்கு
  5. எனக்கு இரண்டாம் முடிவு பிடித்திருந்தது

    இம்மாதிரி க்கதைக்கெல்லாம் இரு முடிவுகள் இருப்பது கொஞ்சம் நீர்த்த உணர்வு....

    இரண்டாம் முடிவை ஒரே முடிவாக முடித்திருந்தால், இரண்டாம் பாகத்தில் புல்லரித்து ஜில்லிட்ட எங்களுக்கு இன்னமும் திருப்தியாக இருந்திருக்கும்.

    கோவிச்சுக்காதிங்க ...நாங்க அப்பாஜியை வைத்திருக்கும் இடம் அப்படி ..

    ( ஆர்.வி.எஸ் க்காக திலகாவை இன்னோரு கதையில் விஸ்தாரித்து விடுங்கள் ..அப்படியே நாங்களும் படித்து விடுகிறோம் )

    பதிலளிநீக்கு
  6. நன்றி பத்மநாபன்.
    (அதுக்குத் தானே ரெண்டு முடிவு... எது பிடிச்சிருக்கோ எடுத்துக்குங்க :)
    தொடர்ந்து படிச்சதே பெரிசு!

    பதிலளிநீக்கு
  7. நீங்க அப்பாதுரை இல்லே! துரையப்பா ! துரையப்பா!! பின்ன என்னங்க? ஒத்தையா ரெட்டயான்னு சாய்ஸ் வேற..
    எனக்கு என்னமோ ரெண்டு தான்
    லாஜிக்கலான முடிவாய்ப் படுகிறது.

    அப்பாஜி.. இன்னும் ஒண்ணு கவனிச்சீங்களோ ? உங்களின் முந்தைய பதிவிற்கு ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன்..

    //அப்பாஜி! சிலந்தி, இழையிலேயே தொங்கியபடி அசைந்து அசைந்து,ஒரு பிடிமானத்தில் இழை பதித்து, மீண்டும் சரசரவென அடுத்த வட்டம் வருவது போல்//
    டாக்டர் டேபிளில் அதே சிலந்தி.. ஏதோ அமானுஷ்யமா இருக்கு.. என்ன இது என் கழுத்தில் இறுக்க்...
    ஐயோ.. திலகா... சை.. ஜெயந்தீ! சீக்கிரம் வாயேன்...

    பதிலளிநீக்கு
  8. பழனி விபூதியோ தாயத்தோ.... நடக்கும் செயல்களுக்கு ஒரு காரணம் கற்பிக்க மனம் சாக்கு தேடுகிறது.

    பதிலளிநீக்கு
  9. ஒரு விறு விறுப்பான அமானுஷ்யமான உலகில் சஞ்சரித்து அப்பாடா என்று வெளிவந்த நிம்மதி. எப்படித்தான் சிந்தித்தீர்களோ என்று வியப்புடன் இன்னும்..

    இரண்டாம் முடிவே முத்தாய்ப்பாக என் பார்வையில் படுகிறது.

    இதுவே அறிவியல் யுகமான இக்காலத்திற்கு ஏற்றது. பிராய்டின் ஆழ்மன உணர்வு தத்துவமும், உளவியல் அறிவும் நன்கு வேலை செய்து இருக்கிறது. எங்கும் தொடர்பு அறுகாத நல்ல சிலந்திவலையை பின்னி அதில் எங்களையெல்லாம் சிக்க வைத்த அப்பா ஸ்பைடருக்கு வாழ்த்துக்கள்...

    இது போல இன்னும் படிக்க காத்திருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
  10. நன்றாக இருந்தது! முடிவுகளும் அருமை! நன்றி வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. நன்றி மோகன்ஜி, ஸ்ரீராம், ஆதிரா, எஸ்கே.

    பதிலளிநீக்கு
  12. அறிவியலும் அமானுஷயமும் சுவையான கலப்பு ஆதிரா. எனக்கும் இந்த genre பிடிக்கும். பேய்க்கதை எழுதிட்டா போவுது. பிடி சாமி, ரன்டார் கய் உஷார்..
    தொடர்ந்து படித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  13. மோகன்ஜி, உங்க கமென்ட் படிச்சப்ப நானும் அதையே நெனச்சேன். ஒரு வேளை பதிவை மாத்திப் போட்டுட்டனோனு கூட சந்தேகம் வந்து செக் பண்ணினேன்!

    பதிலளிநீக்கு
  14. இப்பத்தான் கவனிச்சேன் ஆதிரா... மோகன்ஜி சிலந்தி வலைன்னாரு, நீங்களும் சிலந்திவலைன்றீங்க.. கதைலயும் சிலந்தி... ஸ்பூகியா இருக்குதே? (ஸ்ரீராம்... நீங்களே சொல்லுங்க இதுக்கு என்ன சாக்கு சொல்லலாம்?)

    பதிலளிநீக்கு
  15. உருவகங்கள் இருக்கட்டும், வாசகர்கள் முதல் முடிவை விட இரண்டாவது முடிவை வரவேற்பது ஏன்? நீங்கள் இதற்கு மாற்று முடிவு தந்தது ஏன்?

    பதிலளிநீக்கு
  16. Your perception is amazing, ஸ்ரீராம். எனக்கும் அந்த எண்ணம் தோன்றியது. ஒரு தியரி - only தியரி - இருக்கு. இரண்டு நாள் பொறுத்து எழுத நினைத்திருக்கிறேன்.

    இரண்டு முடிவுகள் எழுத நினைத்ததும் ஒரு விதத்தில் பரிசோதனை தான். எனக்கு நானே வச்ச டெஸ்ட்?

    பதிலளிநீக்கு
  17. எப்பொழுதும் போல் இந்த கதையிலும் உங்கள் எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்தது. நிஜமும், நிழலும் கலந்த திகிலூட்டும் சுவாரசியமான கதை. கதையில் சில இடங்களில் காட்சிகளை உங்கள் பாணியில் வர்ணித்து இருப்பது அழகாய் இருந்தது.
    //உள்ளத்தின் ஆழ்கிணறுகள் ஒன்றில் சங்கிலிப் பாரம் கட்டிப் புதைந்து கிடந்த உளுத்த பெட்டி மெள்ள எழும்பியது..................அதிலிருந்து வெளிவந்த ஒரு கரப்பான்பூச்சி சர்ர்ர்ர்ரென்று வெளியே பறந்து எனக்குச் சற்றுத் தொலைவில் இறங்கி மனித உருவில் நடக்கத் தொடங்கியது. // அவன் மனதின் நிலையை அப்படியே துல்லியமாக, தத்ருபமாக எழுதி வாசகர்களையும் உணர வைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    'பாலைவனக்கல்' கேள்விபட்டதே இல்லை. மணலும் மணல் சார்ந்த இடம்தானே பாலைவனம்! பின் எதற்காக இப்படி எழுதினீர்கள்?

    பதிலளிநீக்கு
  18. அபாரம் அப்பாதுரை!
    இரண்டு முடிவுகள் புது முயற்சி - பரவாயில்லை, இரண்டுமே பொருத்தமா இருக்கும்.
    முதல் முடிவு வெரி ஸ்டைலிஷ், கதையோட தீம் கெடாம முடிச்சீங்க; இரண்டாவது முடிவுல ஹ்யூமன் டச் மனசுக்கு இதமா இருக்கு. எனக்கு பிடிச்சது இரண்டாவது முடிவு. இங்க்லிஷ் மருத்துவர் திருக்குறள் பேச வச்சிருக்கீங்கது பிடிச்சுது. பிச்சைக்காரனி 'பிஏஜி' ம்யூசிக் நோட்ஸ் - அவன் 'பை'யில் பிச்சை போடுவது நல்ல டச்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. நன்றி , meenakshi, ராமசுப்ரமணியன்,...

    எங்கே ஆளைக் காணோமேனு பாத்தேன் meenakshi. எம்எஸ்வி பத்தி எழுதினா மட்டுமே வருவீங்களோனு நெனச்சேன்.

    good catch ராம். கவனிச்சதுக்கு நன்றி. தற்செயலா தோன்றிய pun. இதை விட படா சொல்விளையாட்டு பாக்கணும்னா RVS ப்ளாக் போய்ப்பாருங்க. உங்க ஊர்க்காரர் தான்.

    பதிலளிநீக்கு
  20. நல்ல கேள்வி கேட்டீங்க ஸ்ரீராம்.

    புகை கதைக்கு இரண்டு முடிவுகள் கொடுத்த காரணம் மாற்று முடிவை ஏற்கனவே எழுதிவிட்டதால் தான். எழுதினதோ எழுதினோம், வேஸ்ட் பன்ணுவானேனு அப்படியே போட்டேன். மற்றபடி புதுமையோ வித்தியாசமோ மனதில் தோன்றவில்லை என்பது தான் நிஜம் (மன்னிச்சுருங்க ராமசுப்ரமணியன். உங்கள் பாராட்டை ஏற்றுக்கொள்ள நான் தயார், அதே நேரத்தில் என் மெய்யொப்புதலை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாரா என்று இதே மேடையில் நான் சவால் விடுகிறேன்).

    நான் முதலில் எழுதின மாற்று முடிவை, கதையோட சேத்துப் படிச்சுப்பாத்தப்ப மையக்கருத்திலிருந்து விலகினது போல தோன்றியது. அமானுஷ்ய திகிலோடயே முடிக்கணும் என்று பட்டது. அதனால் முதல் முடிவை எழுதினேன். ஆனால் கொஞ்சம் சாம்பாராகிவிட்டது என்று நினைக்கிறேன். கதாநாயகன் சந்திக்கும் பேய்ப்பெண் திலகா அல்ல. கதாநாயகன் தானும் பேய் (பேயாண்?) என்பதை.. கதாநாயகன் பேயாண் என்பதன் செடப் 'பேயோட்ட இரவன்று பையில் தாயத்து போடப்பட்டதுமே' நிகழ்ந்து விட்டது... கதையின் இறுதியில் பேய்ப்பெண்ணைச் சந்திக்கும் பொழுது தானும் ஒரு பேயாண் என்பதை உணர்கிறான் என்பதை 'படிப்பவர்கள் உணருமாறு' எழுதினேன் - அல்லது எழுதியதாக நினைத்தேன். சரியாக எழுதியிருக்கலாம்.

    இரண்டாவது முடிவு ஏற்புடையதாக இருப்பதற்குச் சாதாரண மனிதநேய உணர்வுகள் காரணம் என்று நினைக்கிறேன். மாற்று முடிவில் ஒரு 'முடிவு' இருப்பதால் நிறைவு ஏற்படுகிறது. அமானுஷ்யத்திலிருந்து விலகி நமக்குப் பழக்கமான மானிடத்தில் முடிவதால் உள்ளம் ஏற்கிறது. 'happily ever after' என்பதில் உள்ள நிறைவைப் பிற வகை முடிவுகள் பிடிப்பது கடினம்.

    தொடர்ந்து படித்து கருத்துத் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. (இனி அடுத்தப் பேய்க்கதை:-).

    பதிலளிநீக்கு
  21. விருவிருப்பு திகில் கலந்த அழகான அர்த்தமுள்ள கதை. என்ன அழகான எழுத்து நடை. ஒரு புத்தகமாக பிரசுரிக்கலாமே. உண்மையில் எனக்கு பொறாமையாக உள்ளது உங்கள் கற்பனை வளம், வார்த்தை ஜாலங்கள் கண்டு. வாழ்த்துக்கள் சகோதரா!!!

    பதிலளிநீக்கு
  22. படித்ததற்கும் பாராட்டுக்கும் மிக நன்றி Josephine Baba.

    பதிலளிநீக்கு
  23. பட்டப்பகலில் வீட்டில் தனியாக உட்கார்ந்து கொண்டு படிக்கும் போதும் இந்த தொடர் சிறுகதை திகிலை ஏற்படுத்திவிட்டது. யாரோ மெல்லிய குரலில் கூப்பிடுவதைப் போல் ஓர் உணர்வு. அதனால் ஜேசுதாஸின் ஆறுபடைவீடு திருப்புகழை யூட்யுபில் கேட்டுக் கொண்டிருக்கிறேன். :-)

    பதிலளிநீக்கு
  24. ஹிஹி.. (நான் சிரிக்கலிங்க)
    படிச்சதுக்கு நன்றி குமரன் சார்..

    ஜேசுதாஸ் பாடின திருப்புகழா?

    பதிலளிநீக்கு
  25. Yes. Here it is.
    http://www.youtube.com/watch?v=fRR8RfGOuv4&feature=results_main&playnext=1&list=PL5619A28349CF683B

    பதிலளிநீக்கு
  26. கதையின் நான்கு பகுதிகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன்.

    இரண்டுவிதமான முடிவுகள் கொடுத்துள்ளது தனிச்சிறப்பாக உள்ளது.

    மூன்றாவதாக ஓர் முடிவினையும் யோசித்திருக்கலாம். சரி பரவாயில்லை.

    அற்புதமான எழுத்துக்கள். நிறைய இடங்களில் சிரித்து மகிழ்ந்தேன்.

    அதிலும் திலகமும் உங்கள் நண்பரும் சேர்ந்தது, பிரிந்தது, மீண்டும் சேர்ந்தது, மீண்டும் பிரிந்தது போன்றவை முதலிடம் பெறுகிறது.

    தங்களின் இன்னொரு நண்பன் அமெரிக்காவுக்கு வந்தும் ‘கல்யாணி’ வேண்டும் எனக்கேட்டது என்னை குப்பென்று சிரிக்க வைத்தது. :)

    பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  27. இரண்டு முடிவுமே நன்றாக இருந்தாலும் முதல் முடிவில் கொஞ்சம் சலிப்புத் தெரிகிறது. ஏனெனில் அவன் பேயாண் எனில் எப்படி மனைவியுடன் குடித்தனம் நடத்தினான்? மனைவிக்குச் சந்தேகம் வரலையா?

    பதிலளிநீக்கு