2010/10/15

அதர்மு மாமா (கதை)



    மூஷிகவாகனா, முடிஞ்ச வரைக்கும் காப்பாத்துடாப்பா.

ஸ்மச்ரம்னா தேவபாஷைலே மீசைனு அர்த்தம். பொம்னாட்டிகளுக்கு அந்தக்காலத்துலே மீசை உண்டாக்கும். மீசைக்குச் சின்னதா பட்டுக் குஞ்சலம் கட்டி அலங்காரம் பண்ணுவா. சர்வமும் ஒரு நா காக்கா ஊஷ்னு காணாமப் போயிடுத்து. ஸ்த்ரீகளுக்கு ஸ்மச்ரம் போன கதைதான் இன்னக்குப் பிரசங்கம். கீர்த்தனாரம்பத்துலே டிஸ்கி ஒண்ணைச் சொல்லிடறேன். எசகு பிசகா நெறைய விஷயம் வரும். பால்யரெல்லாம் படிக்கப்படாது, அப்படியே படிச்சாலும் கள்ளத்தனமா படிக்கணும்.

யுகாரம்பத்திலே மாண்டவியர் மாண்டவியர்னு ஒரு மகரிஷி இருந்தார். அவருக்கு அதிசுந்தரியா ஒரு பத்னி இருந்தார். அவா ரெண்டு பேரும் கூடிக் கூடி ரொம்ப சந்தோஷமா இருந்தா. அதனாலயோ என்னவோ அவாளுக்கு சுருக்கவே ஒரு பொண் கொழந்தை பொறந்தது. லாவண்யம்னா லேசுப்பட்ட லாவண்யமில்லே அந்தக் கொழந்தைக்கு. சாக்ஷாத் மகாலட்சுமி, பார்வதி, சரஸ்வதி, திலோத்தமை, மேனகை எல்லாரையும் கரைச்சடிச்ச அழகான அழகு. லாவண்யானு பேரு வச்சு, கொழந்தைய ஆசையும் பாசமும் அளவுச்சாப்பாடும் போட்டு வளத்தா. கொழந்தைக்கு விவாக வயசாறச்சே மாண்டவியருக்கு திடீர்னு லோக சஞ்சாரம் பண்ண ஆசை வந்துடுத்து. பார்யாளையும் அழைச்சுண்டு போக ஆசை. ஆனா ப்ராயக்கன்னியைக் கூட்டிண்டு போகப் பிரியப்படலை. "அதெல்லாம் முடியாதுன்னா. தெறண்ட பொண்ணு, தனியா எப்படி விட்டுட்டுப் போறது?"னு கவலை பிச்சுண்டு போறது தாயாருக்கு. தோப்பனாருக்கு ஒரு ஐடியா தோணறது. "யாராவது நம்பிக்கைக்குப் பாத்திரமா, தர்மானுஷ்டானம் பண்றவாள்ட்டே விட்டுட்டு போகலாம்"னு சொல்றார்.

மாண்டவியர் இப்படி பேபி சிட்டர் தேடறார்னு தெரிஞ்சோடனேயே அத்தனை புருஷ தேவாளும் "ஒங்காத்து லாவண்யாவா? எங்கூட தங்கட்டுமே.. பட்டாட்டம் பாத்துப்பேனே.. உக்கார வச்சு சிஸ்ருஷை பண்ணுவேனே?"னு சமுத்ரமா ஜொள் விட்டுண்டு அலையரா. இவாளைப் பாத்ததும் அப்பா அம்மா ரெண்டும் பேரும் செலக்ஷன் கமிட்டி போட்டு யோசிக்கறா.

"பிறைசூடிப் பெருமானாச்சே பரமசிவன்? அவர் லாவை ஆசையா வச்சுக்கறேங்கறார்.. அவர்கிட்டே விட்டுட்டுப் போவோம்"னு சொல்றார் மிசஸ் மாண்டவியர்.

"அடியே, அடியே. அவர் ஆசையா வச்சுக்கறேங்கறதுக்கு அர்த்தமே வேறேடி. தாருகாவனத்துல திகம்பரமாத் திரிஞ்சு அத்தனை ரிஷி லேடீஸ் மனசையும் கலைச்சு, பின்னாலயே சுத்த வச்சார் அந்தப் பித்தர். வேற ஆளைப் பாப்போம். வாட் அபவுட் மகாவிஷ்ணு?"ங்கறார் மிஸ்டர் மா.

"நன்னா பிடிச்சேளே. போறும் போறும்.. லீலைக்கெல்லாம் நாயகன்னா அவர்? ஒரு பொண்ணா ரெண்டு பொண்ணா? கோபிகாளோட சென்சஸ் லிஸ்ட் எடுத்து வச்சுண்டு ஏழு வயசுலந்தே குஷால் ஆட்டம் போட்டவராக்கும் ஒங்க மகாவிஷ்ணு.. நம்ம கொழந்த லாவண்யா ரொம்ப எளகின சுபாவம்... வெகுளி. லாவை ஏமாத்திடுவாராக்கும் விஷ்ணு. டஸ்ட் பின்" அப்படிங்கறார் மிசஸ் மா.

"தேவராஜனாச்சே இந்திரன், அவனண்ட விட்டுப்போவோமா?"னு மாமா கேட்டு முடிக்கறதுக்கு முன்னாலயே மாண்டவிய மாமி மோவாய்ல இடிச்சுக்கறா. "கண்றாவி. அகலிகை விஷயம் தெரியாதான்னா ஒங்களுக்கு? ஏன் இப்படி புத்தி கெட்டுப் போறேள்?"னு நறுக்குனு கேக்கறா. "நான் சொல்றேன், பிரம்மாவைப் பிடிங்கோ..".

"ஏண்டி, பைத்தியமா பிடிச்சிருக்கு நோக்கு? பெத்த பொண் பின்னாடியே கைல பிடிச்சுண்டு சுத்தின காமாந்தகன்டி பிரம்மா.. நம்ம பொண்ணுக்கு அப்படியொண்ணும் பிராரப்தமில்லே"னு எரிச்சல் படறார் மாண்டவியர்.

இப்படி ஒத்தொத்தரா குத்தம் குறை சொல்லி, கடைசில அத்தனை தேவாளையும் சப்ஜாடா தள்ளி வச்சுடறமாதிரி ஆயிடறச்சே, டக்குனு எமதர்மராஜன் ஞாபகம் வரது மாமிக்கு. சொன்னதும், "சொர்க்கத்தை விட்டு நரகத்துல ஏண்டி ஆள் தேடறே?"ங்கறார் மாமா.

"அதான் கல்யாணம் பண்ணிண்டாச்சே, இப்ப நெனச்சு என்ன பண்றது?"னு நைசா கதலீபலத்துல ஊசி ஏத்தறா மாமி. "எமதர்மராஜன், தர்மத்துக்கு ராஜனாக்கும். பாவ புண்யங்களை அளந்து ஆளற பகவானாக்கும். நரகத்துல உத்யோகம் பாத்தா என்னப்போ? அவர்கிட்டே தப்பு தண்டா நடக்காது. அவர்தான் நம்ம லாவுக்கு சரி"ங்கறார். மாமாவும் "கரெக்டு. நேக்கு அப்பவே தெரியும்"னார். கவனிச்சேளா?.. நன்னாருந்தா பார்யாள் ஐடியாவை தன்னோடதா எடுத்துக்கற பழக்கம் அப்பவே இருந்திருக்கு பாருங்கோ.

ரெண்டு பேரும் லௌகீக புத்ரி லாவண்யாவை சர்வாலங்காரம் பண்ணி எமதர்மனோட குவாடர்சுலே விட்டுட்டுப் போறா. எமனும் "ஆகா, அதுக்கென்ன பாத்துண்டா போச்சு.. நன்னா சஞ்சாரிச்சுட்டு எல்லா தரிசனமும் முடிச்சுண்டு வாங்கோ"னு சொல்றார். லாவண்யாவைப் பாத்துட்டு, "நீ உள்ளே போம்மா லாக்குட்டி... பாத்து, பாத்து"னார்.

மிஸ்டர் அன்ட் மிசஸ் மாண்டவியர் ஷேத்ராடனம் கெளம்பிட்டா. இங்க திருவாளர் தர்மராஜன் தெனம் லாவைப் பாத்துக்க வேண்டிய நெலமை. ஒரு நாள் பாத்துண்டார். ஒரு வாரம் பாத்துண்டார். அப்றம் அவருக்கே பொறுக்க முடியலை. முழுப்பழமாத் தெறண்ட தனம் ப்ருஷ்டத்தோட, ஸ்ருங்கார ஸ்வரூபிணியா ஒரு யுவஸ்த்ரீ கண்ணெதிர இருக்கப்போ, எந்த மடையன் பாவபுண்யக் கணக்குப் போட்டுண்டிருப்பான்னு தோணிடுத்து அவருக்கு. அவளை அப்படியே ஆலிங்கனம் பண்ணிண்டு ஆனந்தமா இருக்கணும்னு ஆசைப்படறார். லா கிட்டே போய் தன்னோட ஆசையைச் சொல்றார். எமனோட தேஜசைப் பாத்துட்டு லாவுக்கும் கிறக்கமா இருக்கு. சரிங்கறா. ரெண்டு பேரும் டக்குனு ஒரு முத்தா கொடுத்துக்கறா. அவசரம் அவசரமா வஸ்திரங்களை அவுக்கும் போது ஏதோ சப்தம் கேக்கறது. எமனுக்கு பயம் வந்துடுத்து. நாமளோ தர்மராஜன். இந்த அதர்மத்தை யாராவது பாத்துட்டா என்ன பண்றது? அதனாலே ஒரு ஐடியா பண்றார். லாப்பொண்ணைப் பலாச்சொளையாட்டம் முழுங்கிடறார். தேவைப்படும் போதெல்லாம் அக்கம்பக்கத்துல ஆளில்லைனு தெரிஞ்சதும் அவளை வெளியே துப்பிடுவார். லா வெளியே வந்த உடனே ரெண்டு பேரும் ப்ரியத்தோடக் கொஞ்சிக் குலாவி சந்தோஷமா இருப்பா. இப்படியாகத்தானே ப்ளானாட்டம் போயிண்டிருக்கு.

ஒரு நாள் கார்த்தால எமன் லாவை வெளில கொண்டுவந்து, "சித்த இங்கயே இருடிம்மா"னுட்டு உத்தரத்தைக் காதுல மாட்டிண்டு போறார். அப்போ அக்னியும் வாயுவும் அந்தப் பக்கமா வாக்கிங் போயிண்டிருக்கா. அக்னி லாவைப் பாக்கறார். கண்டவுடன் காதல்னு சில பேர் சொல்றா. அதெல்லாம் சிலாக்யமில்லாத பேச்சு. பொதுவா ஆம்ப்ளேளுக்கு பொம்னாட்டியைக் கண்டவுடனே தோண்றது லவ்வில்லே, லஸ்டாக்கும். முகஸ்துதிக்கு மேடம் சிஸ்டர்னு சொன்னாலும், மனசுக்குள்ளே இவ்ளோ லட்சணமா இருக்காளே, இவளை மடக்கிப் போட்டா எப்படியிருக்கும்னு ப்ளாட் போட்டுண்டே இருப்பாளாக்கும். இது புருஷ ஸ்வபாவம். அக்னிக்கும் அதே எண்ணம் தான். லாவண்யாவை ஆனந்தபவன் அல்வா மாதிரி பாக்கறார். உடனே வாயுகிட்டே சொல்றார், "நான்தாண்டா மொதல்ல பாத்தேன். மி த பஸ்டு. நீ கொஞ்சம் மந்தமா மயக்கமா வீசுடா... அவளைப் பிக்கப் பண்றேன்"கறார். வாயுவும் போதை வரமாதிரிப் பூமணத்தோட வீசறார். அவ முன்னால நின்னதும் போதைல பொண்ணுக்கு அக்னியை ரொம்பப் பிடிச்சுப் போச்சு. ரெண்டு பேரும் உடனே குலாவறா. தூரத்துல எமன் வர்றதைப் பாத்துட்டு வாயு சிக்னல் கொடுக்கறார். என்னதிது, குக்கர் விசில் கேக்கறதேனு யோசிச்ச பொண்ணு, எமன் வர்றதைப் பாத்துட்டு பயந்துடறா. அக்னிக்கும் கை கால் ஓடலை. லாப்பொண்ணு இப்ப பெரிய வீலர் டீலரோன்னோ? தெரிஞ்ச வித்தையைக் காட்டறா. டக்குனு அக்னியை முழுங்கிடறா. வாயுவோ ஆள விடுறா ராமானு காத்தா மறைஞ்சு போயிடறார். எமனுக்கு இந்தச் சங்கதியெல்லாம் தெரியலை. அன்னைக்கு தர்மசம்ஸ்தாபன சென்டர்லே கஸ்டமர் கம்ப்ளெயின்டு சிவியரிடி ஒன் பிராப்ளமெல்லாம் ஜாஸ்தியானதுனால ஸ்ரத்தையில்லாம வரார். வழக்கம் போல லாவை முழுங்கிட்டு ஜோலியைப் பாக்கப் போறார்.

ரஷ்யப் பொம்மை மாதிரி ஆயிடுத்தில்லையோ? எமனோட வயத்துல லாப்பொண்ணு. லாவோட வயத்துல அக்னி. பொண் புத்தி பொன் புத்தியாச்சே? விடுமா? எமன் வயத்துல இருக்கறப்போ சும்மா இருப்பானேன்னு தோணிடுத்து லாவுக்கு. அக்னியை வெளில கொண்டு வரா. இதாண்டா சான்சுனு எமனோட வயத்துக்குள்ளே அக்னியும் லாவும் ராசலீலைகள் பண்ணிண்டு சந்தோஷமா இருக்கா. எமன் தன்னை வெளில கொண்டு வரப்போ மட்டும் அக்னியை முழுங்கிடுவா. இப்படியே போயிண்டிருக்கு இவா கூத்து.

இதுல பாருங்கோ, லேடீஸ் அன்ட் ஜென்டில்மென், ஒரு சிக்கல் வந்துடுத்து. அக்னியைக் காணலைனா லோகத்துல ஒரு ஸ்ரேஷ்டமான கார்யமும் நடக்காதே? யாகத்தைக் காணோம். விளக்கைக் காணோம். சமையலைக் காணோம். பிரம்மசபை, விஷ்ணுசபை, சிவசபை எல்லாத்துலயும் விவாதம் நடக்கறது. நெலமை மோசமானதும் எல்லாருமா முதல் தேவர் மூவர்ட்ட முறையிடறா. சிவன் விஷ்ணுவைப் பாத்தார். விஷ்ணு பிரம்மனைப் பாத்தார். பிரம்மா சிவனைப் பாத்தார். இது கொஞ்ச நேரம் நடக்கறது. 'பார்த்தது போதும், பொங்கியெழு'னு சபைல யாரோ கத்தறா. சிவன் வாயுவைக் கூப்பிடறார். "இங்க வாடாப்பா, நீயும் அக்னியும் ஜிகிரித் தோஸ்தில்லையோ? எங்க அக்னி?"னு கேட்டார். வாயு பகவானுக்கு விஷயம் தெரியும்னாலும் வாயே தொறக்கலை. பயம். தேவாள் பொய் சொல்லப்படாதே? யோசிக்கிறார். பொய் சொல்லப்படாதுனா அதுக்காக உண்மையைத்தான் சொல்லணும்னு அர்த்தம் பண்ணிக்கப்படாது. "அக்னியைத் தேடிண்டிருக்கேன்"னு சமயோசிதமா சொல்றார் வாயு. விஷ்ணு ஒடனே, "நீ தான் தேடிப் பிடிக்கணும்"னு சொல்றார். சிவனோ ஒரு படி மேலே போய், "இன்னும் ரெண்டு நாழிலே அக்னியைத் தேடிக் கொண்டு வரணுமாக்கும்"னு ஆணை போடறார். பிரம்மன் நன்னா நாலு மண்டையையும் ஆட்டிட்டு, "மீடிங் அட்ஜர்ன்டு"னு சொல்றார்.

'இதேதுடா வம்பாப் போச்சே!'னுட்டு வாயு, லாப்பொண்ணைத் தேடிண்டு போறார். எமன் குவாடர்ஸ் தெருக்குள்ள நுழையும் போது யாரைப் பாக்கறார்? லோக சஞ்சாரம் போன மாண்டவியர் வந்துண்டிருக்கார். சிக்கல் தாண்டி விக்கல்ல மாட்டிப்போம் போலிருக்கேனு நெனக்கறார் வாயு. ப்ரகாசமா ஒரு க்ளைமேக்ஸ் ஐடியா தோணறது. மாண்டவியரைப் பாத்து பவ்யமா சேவிக்கிறார். முனிவரோன்னோ, புஸ்குனு சாபம் கொடுத்துடுவாளே? "நமஸ்காரம் அண்ணா. ஷேத்ராடனம்லாம் எப்படி இருந்தது? ஆத்துல சௌக்கியமா? எங்க இவ்வளவு தூரம்?"னுட்டு குசலம் சாரிக்கிறார். மாண்டவியரும் பதிலுக்கு நம்ஸ்காரம் சொல்லிட்டு, "எங்காத்துப் பொண்ணை எமதர்மர் ஆத்துலந்து கூட்டிண்டு போறதுக்காகப் போயிண்டிருக்கேன்"னு சொல்றார். வாயு விடுவாரா? "அடடா! நானும் அங்கே தான் போயிண்டிருக்கேன். ஒங்களுக்கு ஏன் சிரமம்? எமன் ஆத்தில இருக்காரோ ஆபீஸ்ல இருக்காரோ? அவர் வந்ததும் லாவை நானே கூட்டிண்டு வந்து ஒங்காத்துல விட்டுடறேன்"னு சொல்றார். மாண்டவியரும் "நல்லதா போச்சு. பார்யாள் மத்த ரிஷி லேடீசோட காத்தாலயே கெளம்பிட்டா. நான் ஆத்துக்குக் காவல் இருக்கணும். ரொம்ப தேங்சு வாயுண்ணா, ஜாக்ரதையா கூட்டிண்டு வந்துடுங்கோ"னுட்டு திரும்பிப் போறார்.

மாண்டவியர் அந்தப்பக்கம் போனதும் டாக்கு டாக்குனு நடந்து எமதர்மராஜன் குவாடர்சுக்குள்ளே நுழைஞ்சார் வாயு. அங்கே எமதர்மன் லஞ்சுக்கு ரெடியாயிண்டிருக்கார். மாத்யாஹ்னிகம் பண்ணிட்டு, தயாரா இருக்குற இலை முன்னால் ஒக்காரச்சே, வாயு நுழையறத பாக்கறார். "தேவாள் என்னோட குவாடர்சுக்கு வந்திருக்கேளே! வாங்கோ,வாங்கோ. பையா இன்னொரு இலை போடுறா"ங்கறார். உடனே வாயு, "ரொம்ப சந்தோஷம். ஆனா நாலு பேருக்கு ரெண்டு எலை போறாதே?"னார். "வாட்யூ மீன் வாயு?"ங்கறார் எமன். வாயு நேரா எமனைப் பாக்கறார். "இருக்குற தலைக்கு எலை போட்டுறலாம். இல்லாத தலைக்கு எப்படி எலை போடறதுனு பாக்கறீங்களா?"னு டயலாக் விடறார். "புரியலையா? உங்க வயத்துக்குள்ள ஒளிச்சு வச்சிருக்கேளே, லாப்பொண்ணு அவளுக்கு ஒரு இலை. மொதல்ல அவளை வெளில கொண்டு வாங்கோ"னார். எமன் திருதிருனு முழிக்கிறார், "ஒங்க வாகனமாட்டம் தாமசம் பண்ணாம சட்டுனு கொண்டு வாங்கோ. நேக்கு எல்லாம் தெரியும்"னார். எமன் லாவை வெளில கொண்டு வந்துட்டு வாயுவைப் பாத்து, "ஹிஹி.. நாம ரெண்டு பேருமே தேவலோகம்... அல்ப விஷயம்.. பெரிசு பண்ணாதேங்கோ"னார். அப்புறம், "நாலு பேர்னேளே?"னு கேட்டார். அதுக்கு வாயு லாவைப் பாக்கறார். "ஏண்டீம்மா ஒனக்கு என்ன, படிச்சுப் படிச்சு சொல்லணுமா? ஆகட்டும், ஆகட்டும். அக்னியைக் கொண்டு வா"னு சொல்றார். லாவுக்கு ஒரே பயம். எமன் ஏதாவது சொல்லிடப் போறாரோனுட்டு. அவசர அவசரமா அக்னியை துப்பிடறா. பொசுக்குனு வெளில வந்தார் அக்னி. எமனைப் பாத்துட்டு அசடு வழிஞ்சார். ஆளாளுக்கு அசடு வழியறா. "போறும் நிறுத்துங்கோ எல்லாரும். நடந்தது நடந்து போச்சு. இனிமே லாவை அவ ஆத்துல விட்டுட்டு மறு காரியம் பாக்கணும் நீர் எமதர்மரே"னு மாண்டவியரைப் பாத்ததையும் பிராமிஸ் பண்ணதையும் சொல்றார் வாயு. சரினு எமன் தலையாட்டிண்டே லாவைப் பாத்ததும் அதிர்ந்து போறார். தனக்குச் சமமா அழகா முறுக்கி விட்டிருந்த லாவோட மீசையைக் காணோம்!

"எங்கடீ மீசை?"ங்கறார் எமன். லாவும் அதிர்ந்து போய், "இங்க தானே வச்சேன்?!"னுட்டு உதட்டுக்கு மேலே தடவிப் பாக்கறா. சுத்தமா வழவழனு இருக்கு. "பொம்னாட்டி மீசையில்லாம எப்படி வெளில போறது?"னுட்டு துடிக்கறா. எல்லாம் அக்னியோட கைங்கர்யம். பொசுக்குனு வந்தார் இல்லையா, பொசுக்கிண்டே வந்துட்டார். அவசரத்துலயும் பயத்துலயும் வெளில வந்தாரோன்னோ, லாவோட மீசையை வேரோட பஸ்பம் பண்ணிட்டார். விஷயமெல்லாம் வெளில வந்து மாண்டவியர் சபிச்சுடுவாரே, என்ன பண்றதுனு எல்லாரும் பதறிப் போறா. யோசிக்கறா. பிரம்மாட்ட போறா. எல்லாத்தையும் சொல்லி சமஸ்தாபராதம்னு கால்லே விழறா. பிரம்மா லாவைப் பாக்கறார். 'மீசை இல்லாம ஜோரா இருக்காளே இந்தக்குட்டி!'னு நெனக்கறார். குஞ்சல சப்தம் கேக்கறது. மீசையை முறுக்கிண்டே சரஸ்வதி அந்தப்பக்கம் வரதைப் பாத்துட்டு சட்டுனு நெனப்பை மாத்திக்கிறார். "சரி, அபயம் தந்தேன். இனிமே பொம்னாட்டிகளுக்கு மீசை கிடையாதுனு ரூல் போட்டுடறேன்"னு சொல்றார். அந்தக்ஷணமே ஸ்த்ரீகளுக்கு ஸ்மச்ரம் காணாமப் போயிடுத்து.

ரொம்ப தேங்க்ஸ்னுட்டு லாவை அழைச்சுண்டு கெளம்பறார் எமன். வாயு விடுவாரோ? "சித்தே இருங்கோ மார்சுவரி மேனேஜர்வாள். உங்களை நம்பாம இல்லை, எதுக்கும் கூட வரேன்"னுட்டு எமன் கூடவே வந்து லாவை அவா அம்மா அப்பாட்டே ஒப்படைச்சுட்டு, ஸ்த்ரீ மீசை ஒழிச்ச பிரம்ம ரூல் பத்தியும் சொல்றார். "கவனிச்சேன்"னு கண்ணடிச்சார் மாண்டவியர்.

இப்படியாகத்தானே ஸ்த்ரீகளுக்கு முகக்ஷவர செலவு கொறஞ்சதுனு விப்ரப்புராணத்துல சொல்லியிருக்கு. இந்தப் புராணக்கதையைக் கேட்டவாளுக்கு முகம் பொலிவா இருக்கும்னு பலன் சொல்லியிருக்கு.

பிரசங்கம் சமாப்தம். போய்ட்டு வாங்கோ.

    ந்தப் புராணக்கதையை முதலில் கலைஞர் கருணாநிதியின் உரைத்தொகுப்பான 'முத்துக்குளியல்' புத்தகத்தில் படித்தேன். புராணக்கதை பற்றிய மேலதிக விவரங்களை இணையத்தில் தேடினாலும் அதிகம் கிடைக்கவில்லை. அடுத்த வருடச் சென்னைப் பயணத்தில் தேடவேண்டிய புத்தக லிஸ்டில் விப்ரப் புராணத்தையும் சேர்த்திருக்கிறேன். கதையைக் கலைஞர் அவர் பாணியில் சொல்லியிருந்தார். நான் என் பாணியில் சொல்லியிருக்கிறேன். இயற்கையான உணர்ச்சிகளைச் செயற்கையான உணர்வுகள் கொண்டு அடைத்து வைக்கும் பொழுது, சலன பூகம்பங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்று நினைக்கிறேன். அந்தக் கண்ணோட்டத்தில் இது ஒரு சுவையான ஜாலக்கதை. கலைஞர் கோடு காட்டியிருக்கும் 'தெய்வங்களுக்கே ஒழுக்கமும் கற்பும் கிடையாது' என்கிற சித்தாந்தம் பக்கம் போக விரும்பவில்லை. காமத்தையும் கற்பையும் ஒரே தட்டில் வைத்துப் பார்த்திருக்கும் அவர் உரையை நான் ரசித்தேன் என்றாலும் ஏற்க முடியவில்லை. காமம் என்பது இயற்கையான உணர்ச்சி. கற்பு என்பது செயற்கையான உணர்வு. உணர்வு கூட இல்லை, குறுகிய நெறி என்பேன். ஏற்புடைய நெறியெனில், கற்பு காமத்தையும் கடந்தது என்று நினைக்கிறேன். உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் வேறுபாடு இருப்பதைப் புரிந்து கொண்டவர்களுக்கு என் கருத்து புரியும். முறையற்ற காமம், அளவுக்கதிகமான காமம் என்றெல்லாம் சொல்கிறார். முறையற்றக் காமம் புரிகிறது. அளவுக்கதிகமான காமம் என்னவென்றே புரியவில்லை. எது அளவுகோல்? நெறி என்றாலும், ஆண்கள் கற்பு என்பது சினிமாச் சிந்தனையுடன் நின்று விட்டது. காமம் என்ற சொல்லில் ஆண்களின் வேகத்தை அடக்கியிருப்பது போல் பெண்களின் வேகத்தைக் கற்பு என்ற சொல்லுக்குள் நாம் அடக்கியிருப்பதாக நினைக்கிறேன். காமம் இருந்தாலும் கற்பு போனாலும் குடி கெட்டது போல் பதைக்கிறோம். (இன்னொரு இடுகைக்கான கரு.)

இந்த இடுகைக்கு வேறு தலைப்பு வைத்திருந்தேன். சமீபப் பின்னூட்டமொன்றில் RVS எழுதியிருந்த சுஜாதாவின் 'தர்மு மாமா' கதை பற்றிப் படித்ததும், இந்த இடுகைக்கு அதர்மு மாமா என்று தலைப்பு வைக்கத் தோன்றியது. சீப் ஸ்ட்ன்ட். தீவிர சுஜாதா ரசிகர்கள் மன்னிக்க வேண்டும். (தொழிலை விட முடியுமா?)

41 கருத்துகள்:

  1. அமிர்தம்.சுஜாதாவின் நடையை உதறி உங்களால் மேலே நகர முடியும் என்ற நம்பிக்கையை இக்கதை ஏற்படுத்தியது.அப்புறம் 'முழுப்பழமாத் தெறண்ட தனம்'! ரொம்பப் பிடிச்சிருந்தது.யூஸ் பண்ணிக்கறேன்.[பேடன்ட் இல்லையே?]

    பதிலளிநீக்கு
  2. நன்றி, போகன். Glad you like it.
    (திரண்ட தனம் ஆதி சங்கரர் சொன்னது.. அவருக்கு முன்னால வேறு யாராவது சொல்லியிருக்கலாம். அபிராம பட்டர் சொன்னது. அவங்களுக்குப் பிறகு எங்க பாட்டி அடிக்கடி சொன்னது. :-)

    பதிலளிநீக்கு
  3. திரள்வது அல்ல முழுப்பழமா என்ற பிரயோகத்தைச் சொன்னேன்.நான் முன்பு இந்த 'திரள்வதைப்'பற்றி கொஞ்சம் யோசித்ததுண்டு.என் பாட்டி பால்திரட்டு செய்யும்போதெல்லாம் 'பால் சரியா திரண்டிருக்கா'என்று கேட்பார்.அது போல்தான் பெண்டுகளும் திரள்கிறார்களா என்று கேட்டு முறைக்கப் பெற்றதுமுண்டு .

    பதிலளிநீக்கு
  4. Chastity is not Diginity
    It is Lack of Opportunity...
    அப்படின்னு எங்கயோ படிச்சது.
    அப்பாடி..அந்த காலத்ல அத்தையெல்லாம் சித்தப்பாவா இருந்த கதை சொல்லியிருக்கீங்க. விப்ர புராணம் கேள்விப் படாத ஒன்னு. அதே மாண்டவ்யருக்கு ஆணி மாண்டவ்யர் என்ற இன்னொரு பெரும் உண்டு. வேறு திக்கில பார்க்காதியும் ஓய். ஆணிக்கு வேற அர்த்தம் தேடாதியும். விப்ர புராணம் படிச்சுட்டு ஏதாவது விகாரமா நினச்சுக்காதியும். மஹாபாரதத்தில வருது அந்த கதை. ஒரு பதிவாத்தான் எழுத முடியும். நல்ல சுவாரஸ்யமா இருக்கும். இருந்தாலும் அதர்மு மாமா மாதிரி என்னால எழுத முடியாது. தர்ம தேவதையை துணைக்கு வச்சுண்டு எழுத ட்ரை பண்றேன்.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லாஅக்டோபர் 15, 2010

    **"எங்கடீ மீசை?"ங்கறார் எமன். லாவும் அதிர்ந்து போய், "இங்க தானே வச்சேன்?!"னுட்டு உதட்டுக்கு மேலே தடவிப் பாக்கறா.**

    Vulgar story with a touch of humour. No need for Brahmin style.

    பதிலளிநீக்கு
  6. சுந்தர பாகவதர் ஸ்டைல்ல ஒரு கதை. அதில் உங்களுக்கு உரித்தான வார்த்தைப் பிரயோகங்கள். பல வரிகளை ரொம்ப ரசித்தேன். படித்த புத்தகங்களில் இருந்து சிறு கருவை எடுத்து தனி இடுகையாக்குவது கலைதான்.

    //"முகஸ்துதிக்கு மேடம் சிஸ்டர்னு சொன்னாலும், மனசுக்குள்ளே இவ்ளோ லட்சணமா இருக்காளே, இவளை மடக்கிப் போட்டா எப்படியிருக்கும்னு ப்ளாட் போட்டுண்டே இருப்பாளாக்கும். இது புருஷ ஸ்வபாவம்"//

    //"காமம் என்பது இயற்கையான உணர்ச்சி. கற்பு என்பது செயற்கையான உணர்வு. உணர்வு கூட இல்லை, குறுகிய நெறி என்பேன்"//

    //"உணர்வுக்கும் உணர்ச்சிக்கும் வேறுபாடு இருப்பதைப் புரிந்து கொண்டவர்களுக்கு என் கருத்து புரியும்"//

    //" காமம் என்ற சொல்லில் ஆண்களின் வேகத்தை அடக்கியிருப்பது போல் பெண்களின் வேகத்தைக் கற்பு என்ற சொல்லுக்குள் நாம் அடக்கியிருப்பதாக நினைக்கிறேன்"//

    மொத்தத்தில் இந்த வரிசையில் மனதில் நின்ற கருத்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  7. அப்பாஜி,உங்கள் பதிவின் மையக் கருத்தைச் சற்று தள்ளிவைத்து விட்டு, பதிவைப் பார்ப்போம் .

    எழுதப் பட்ட விதம், ஊடாடும் எள்ளல், நகைச்சுவை, பிராம்மண பாஷையைக் கையாண்ட நேர்த்தி ஆகியவை பாராட்டுக்குரியவை.
    ஒரு உபன்யாசமாய் கதையை விவரித்து இருப்பதால் பிராம்மண பாஷை திணிக்கப் பட்டதாகத் தோன்றவில்லை.
    இந்த பாராட்டு எழுத்து எனும் CRAFTஐ கையாண்ட விதம் வரையில்....

    விப்ர புராணம் இன்று நீங்கள் குறிப்பிடுவது, பதினெட்டு புராணங்களில் இல்லை. உப புராணங்களால் பதினெட்டிலும் இல்லை. பிற்ச்சேர்க்கையான பல கிரந்தங்களில் இருந்திருக்கலாம்.. அறியாதது என் குறையே..(பாக்கியமோ என்னவோ!)
    புராணக் கதைகளில் இவ்வகையானப் உறவுக் குழப்பங்கள்,மீறல்கள் காணக் கிடைக்கின்றன. இது பற்றிய விவாதம் மிக நீண்டதும்,முடிவில்லாததுமாய் நீளும்..
    பெரும்பாலும், அத்தகு மீறல்களால் உண்டாகும் விளைவுகளையும் அக்கதைகள் எடுத்துரைக்கும்..
    இந்து மதத்தின் பெருமையே இத்தகு கருத்து சுதந்திரங்களை புராண காலங்கள் தொட்டே அனுமதித்தது தான்.


    கற்பு பற்றிய உங்கள் கருத்தில், கற்பு ‘ஓர் உணர்வில்லை,குறுகிய நெறி’ என்கிறீர்கள் .
    ஒரு நெறி பயன்பாட்டின் காரணமாய்,ஒரு சமூக உணர்வாக மாறுதல் என்பது இன்றியமையாதது.
    கற்பு எனும் நெறி அமைக்கப்படாத ஒரு சமுதாயத்தின் நிலையை கற்பனை செய்து பாருங்கள். எத்தனைக் குழப்பங்களும், சச்சரவுகளும் ஏற்ப்பட்டிருக்கும்.?
    குடும்பம் எனும் அமைப்புக்கு அச்சாணி இந்த நெறி மட்டுமே.
    ஊடகமும்,பிறநாட்டுக் கலாச்சாரங்களும் நிகழ்த்தும் இடைவிடாத் தாக்குதல்களின் இடையிலும், இன்னும் குடும்பம் எனும் அமைப்பு நிலைத்திருப்பதற்கு காரணம் இந்த நெறியின் பிடிமானத்தில் தான்.

    ஆனாலும் ஆணாதிக்க சமூகத்தின் சூழ்ச்சியே கற்பு என்பதும் ஒரு நிலைப் பாடு. மனைவிக்கு மட்டும் கற்பு வேண்டும்,அடுத்தவள் அனுமதித்தால் போதும் என்பது கயமை.

    கற்பு என்பதை இருபாலார்க்கும் பொதுவில் வைக்கச் சொன்னான் பாரதி.
    தாம்பத்தியத்தில் எதில் பிரச்சனை வந்தாலும் சரியாகிவிடும்.. ஒருவருக்கொருவர் உண்மையாக இல்லை என்பதே பிரச்னையானால் தீர்வு கடினமே.

    உணர்வுகள்,உணர்ச்சிகள் என்று நீங்கள் வகைப் படுத்தியது அருமை.

    உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளலாம்,மன்னிக்கவும் செய்யலாம்.
    உணர்வுகளோ மதிக்கப் படவேண்டியவை.

    பதிலளிநீக்கு
  8. ஆதொள கீர்த்தனாராம்பத்தில..அப்பாத்துரை ..அப்பாத்துரைன்னு ..ஒருத்தர் பரத கண்டத்தில இருந்தாராம். அவர் என்ன சொன்னார்னா..
    திமிகிட..திமிகிட ..வாத்யம்
    முழங்க.... தாண்டவ ந்ருத்ய ஹரி..கஜானன..தாண்டவ ந்ருத்ய
    ஹரி... மாண்டவ்யர் பொண்ணைப் பத்தின கதை..
    சுந்தர பாகவதர் தோற்றார், போங்கள்!!

    பதிலளிநீக்கு
  9. ஸையின்ஸ் ஃபிக்ஸன் மாதிரி புராண ஃபிக்ஸனும் இப்படி தூள் கிளப்புகிறிர்கள்... இதுல நான் ரசிச்சது வித்தியாசமான நடை ..

    பாகவதர்களுக்கே உண்டான இங்கிலிஷ் மிக்ஸிங்...

    பாகவதர் பாஷையின் நிறைய வெகாபலரி வெளியே வந்திருக்குது இக்கதையில்.... நல்ல வேளை ஒரிஜினல் கதை பலபேருக்கு தெரியாதனாலே பின்னூட்ட கும்மி களை கட்ட கொஞ்ச நேரமாகும் ...

    கலைஞர் இதை படிச்சார்னா , கழக ஆஸ்தான புராண எதிர்ப்பு செயலாளரா பதவி கொடுத்து .. எல்லா புராணத்தையும் இப்படியே கிழி துரை ன்னு முரசொலியின் ஒரு முழுப்பக்கத்தையும் ஒதுக்கிடுவாரு...

    ( தலைப்புக்கெல்லாம் சண்டைக்கு வரமாட்டங்க ....ஆழம் இல்லை அகலம் இல்லை ன்னு பாதாள இலக்கியர்கள் மாதிரி சொன்னாத்தான் வருவாங்க.. சொல்லப்போன, இந்த தலைப்பு கூட வாத்தியார் பாணி )

    பதிலளிநீக்கு
  10. மோகன்ஜி அவர்களின் கற்பு பற்றிய கருத்துக்கு பெரிய ``ஓ`` போட வேண்டும் .. பொதுவில் வைக்கவேண்டும் எனும் பாரதியின் கருத்துக்கும் ஒரு ``ஓ``

    இன்று கூட ஒரு வெள்ளைக்காரனோட பேசிட்டு இருந்தேன் . உனக்கென்னப்பா ஜாலி, மாசத்துக்கொன்னு காலண்டர திருப்பற மாதிரி மாத்திக்கிட்டே இருப்பிங்கன்னு சொன்னதற்கு அவன் சொன்னது , ஒன்னே ஒன்னுல கிடைக்கிற நிம்மதியும் ,திருப்தியும் அததாண்டி எவ்வளவு மாத்தினாலும் கிடைக்கிறதில்லை உங்களுதுதான்யா ( இந்திய கலாச்சாரம் ) நிம்மதி .ஜாலி எங்கப்பா.. நாங்க மாத்தறதுக்கு காரணம் மனசு மாத்தி மாத்தி தேடுது ..கடைசி வரைக்கும் கிடைக்கெறதே இல்லே...

    இருபாலருக்கும் கற்பு -கட்டி காப்பத்தாவேண்டிய கலாச்சாரம் ..உணர்ச்சி வசப்படாம உணர்வுகளை பாதுகாப்போம்.

    பதிலளிநீக்கு
  11. நன்றி RVS, ஸ்ரீராம், மோகன்ஜி, ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி, பத்மநாபன்..

    பதிலளிநீக்கு
  12. மோகன்ஜி: கதையோட மையக்கருத்து என்னனு நீங்க தான் சொல்லணும். அப்படியெல்லாம் ரொம்ப யோசித்து எழுதுற ஆளப்பாத்தீங்களே... இது ஒரு ஜாலக் கதை. சுவாரசியமான நகைச்சுவையான கதை. இந்தக் கதையின் மையம்னு ஒண்ணு இருந்தா - காமெடி மட்டும் தான். (கற்பு பத்தின கருத்துக்கு திரும்பி வரேன்.)

    பதிலளிநீக்கு
  13. ராமமூர்த்தி... நீங்க கதாகாலட்சேப பாட்டை அப்படியே எடுத்து விட்டிருக்கீங்களே? சேர்த்திருக்கலாம், மறந்து போச்சு! :)

    பதிலளிநீக்கு
  14. நாலு வகைப் பொய்கள்ல புராணம் நாலாவது. விப்ரப் புராணம்னு ஒண்ணு இருக்குறதே (இருக்குதா?) கலைஞர் உரை படிச்ச பின் தான் தெரிஞ்சுகிட்டேன். கலைஞர் நிறைய பொய் சொல்வார். அவருடைய பழைய உரைகளில் (எழுபதுகளுக்கு முற்பட்டவை) பூணூலறுக்கத் துடிக்கும் கைகளுக்கு துடிப்பேற்ற நிறைய உடான்ஸ் விட்டிருக்கிறார்; அண்ணாதுரையும் தான். பெரியார் பள்ளியில் வந்தவர்கள் அல்லவா? அதனால் நிறைய இட்டுக்கட்டி கிண்டல் பண்ணும் வகையில் பேசியிருக்கிறார்(கள்). புராணம் என்பதே இட்டுக்கட்டு என்ற பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால் அவர்கள் கதைகளும் சுவையானவை தான். அத்தோடு நிறுத்திக்கொள்கிறேன். புராண எதிர்ப்பு சங்கத் தலைவர் பதவி கொடுத்தாலும் வேணாமுங்க பத்மநாபன்! புராண ஆதரவாளர் சங்கத் தலைவர் பதவி கிடைக்குமா சொல்லுங்க, நான் ரெடி. வேலையில்லா டயத்துல புராணங்களைப் போல ஒரு பொழுதுபோக்கு அம்சம் கிடையாது.

    விப்ரன் என்ற வடமொழிச் சொல்லுக்கு அறிவுள்ளவன் என்று ஒரு பொருளுண்டு - எப்படியோ அதை பிராமணரோடு இணைத்துவிட்டார்கள். பிராமணன் என்றால் அறிவுள்ளவன் (வேத அறிவுள்ளவன் என்பதிலிருந்து வந்திருக்கலாம்) என்பது பொறுக்குமா? (எனக்கே பொறுக்கவில்லை). விப்ரப்புராணம் என்று கதை கட்டி இது போல் ஏதாவது சொல்லியிருக்கலாம். அல்லது உண்மையாகவே விப்ரப்புராணம் என்று இருக்கிறதோ என்னவோ! தேடிப் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  15. இந்து மதம் பற்றிச் சொன்னீர்களே மோகன்ஜி.. இந்து மதத்தின் தொன்மை புரிகிறது, பெருமை புரியவில்லையே?

    பதிலளிநீக்கு
  16. கற்பைக் கலாசாரம் என்கிறீர்களா பத்மநாபன்? உடன்கட்டை என்று ஒரு கலாசாரம் இருந்ததே, அதைப் பற்றி இப்போது என்ன நினைக்கிறீர்கள்? எப்படியோ ஐநூறு ஆண்டுகள் பின்னோக்கிப் போகமுடிந்து சிந்தித்தால் என்ன நினைப்பீர்கள்?

    கற்பு என்பதன் தாக்கம் இன்னும் இன்னும் இன்னும் மிகப் பரவலாகப் போனாலொழிய சதி போன வழி தான் கற்பும் போகும் என்பது என் எண்ணம்.

    கலாசாரங்கள் காய்ந்த பூக்கள் நண்பரே. ஒரு நாள் பொடியாகும்.

    பதிலளிநீக்கு
  17. உடன்கட்டை என்பது காட்டுமிராண்டித்தனமான பிற்போக்குத்தனமான மனிதத்தை அழிக்கும் கலாச்சாரம் ..ஒழிய வேண்டியது ஒழிந்தது.

    கற்பு என்பது காட்டுமிராண்டித்தனத்திலிருந்து மேலே பரிணமித்து ஒரு ஆக்கும் கலாச்சாரம்... வாழ வேண்டியது வாழவைக்க வேண்டும்...

    கற்பு வேண்டாம் என்பது நிச்சயம் பகுத்தறிவல்ல... சிற்றின்ப வேட்கையின் சால்ஜாப்பு ..சாமிவேண்டாம் என்று திருட்டுத்தனம் செய்வது போல ( வாதட விரும்புவோர் அந்த திருட்டு ச்சாமியார்களை துணைக்கு அழைத்து க்கொண்டு வர வேண்டாம் )

    பொதுவான கருத்து அப்பாஜி ...உரிமையா பகிர்ந்துள்ளேன் ..

    பதிலளிநீக்கு
  18. இன்றைக்கு சொல்கிறீர்கள் பத்மநாபன்.. ஐநூறு வருடங்களுக்கு முன்னால் அது சமகாலக் காட்டுமிராண்டித் தனமான கலாசாரமா?

    கற்பு என்பது ஒழிய வேண்டியதென்பது என் கருத்தல்ல. விழுப்பம் தர உயிரினும் ஓம்பபடும் - இன்றைய கற்பு விழுப்பமா விழுப்புரமா என்பது தான் ஐயம்.

    உடன்கட்டை போலத் தான் கற்பும் - ஆணாதிக்கச் சூழ்ச்சி என்று மோகன்ஜி சொன்னது போல - ஒரு குறுகிய, வர்க்கத் தொடர்பான, அடிப்படையில்லாத நெறி அல்லது கலாசாரம் நாமறிந்த கற்பு என்பேன். காட்டுமிராண்டித்தனம் என்று ஐநூறு வருடங்கள் பொறுத்து நம் சந்ததி சொல்லும். :)

    கற்புக்கும் சிற்றின்பத்துக்கும் நீங்கள் முடிச்சு போடுவது யதார்த்தம் போல் இருந்தாலும் உண்மை குறைவோ என்று மருள்கிறேன். சிற்றின்பம் இல்லையென்றால் கற்பு தேவையில்லையா?

    திருமணமான, லைசன்சு பெற்ற விலமகன் அல்லது விலைமகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கணவனோ மனைவியோ உடலுறவின் போது இன்னொருவரை மனதில் வரிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    மதிய வேளை டீ, ஓரியோவோடு ரசித்து எழுதிக்கொண்டிருக்கிறேன். நாம ரெண்டு பேர் தான்... உரிமையோட சொல்லுங்க. இதுல என்ன இருக்கு?

    பதிலளிநீக்கு
  19. பகுத்தறிவு என்ற அருமையான சொல்லைக் குறுகிய சிந்தனைக்களத்துக்குள் கொண்டுபோனது பெரியாரியல். பகுத்தறிவு என்று சொல்லிக்கொண்டு மற்ற சாராரின் வேட்டியை உருவப் போவது எந்த வகையில் பகுத்தறிவாகும்? அது உருப்படாது விடுங்க. நம்ம சர்ச்சைக்கு வருவோம். கற்பும் கடவுளும் பகுத்தறிவு என்று நம்புகிறேன் - அவையற்ற நிலையும் பகுத்தறிவு தான். ஒன்றைத் தேவை என்று நம்புவதற்கும் தேவையில்லை என்று நம்புவதற்கும் - இரண்டுக்குமே பகுத்தறிவுதான் ஆதாரம். என் கருத்து பெரியாரியல் பகுத்தறிவு இல்லிங்க.

    அது சரி, சாமி வேண்டாம்னு சொல்றது திருட்டுத்தனம்ன்றீங்களா இல்லை திருட்டுத்தனமா சாமி வேண்டாம்னு சொல்றதைச் சாடுறீங்களா பத்மநாபன்?

    பதிலளிநீக்கு
  20. அற்புதமான கேள்விகள்... பேச முடியாத வகையில் ஆணிகள்..

    ரசித்தவை மட்டும் இப்போழுது ..பதில்கள் இரவு

    //விழுப்பமா விழுப்புரமா //

    //கற்பும் கடவுளும் பகுத்தறிவு//

    //திருட்டுத்தனமா சாமி வேண்டாம்னு//

    பகுத்தறிவின் தளம் உயர்த்திய வகையில் மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  21. அப்பா சார்!
    சாமி வேணும் வேண்டாம்னு சொன்னது ஒரு விழுப்பத்துக்காக சொன்னதுன்னு வச்சுக்கிட்டாலும், இப்ப சாமி பேரை சொல்லி "ஆ"சாமிகள் அடிக்கிற லூட்டி சாமி சொல்லாமல் கற்போடு இருக்கறது மேல்னு தோணுது. கலக்ஷன், கற்பு ரெண்டுமே சாமி பேரை சொல்லி நாட்ல வெகு சகஜமா சூறையாடப் படுது. ஆசரமத்தில் இருந்து ஆலயங்களின் கர்ப்பகிரகம் வரை பெண்களை ஸ்பெஷலாக கூப்பிட்டு "கவனிக்கிறார்கள்". இந்த கவனிப்பு மத வித்தியாசமில்லாமல் எல்லா மதங்களிலும் நடக்கிறது. இதை வைத்துதான் நாத்திகமோ, பகுத்தறிவோ பேசுபவர்கள்... எள்ளி நகையாடுகிறார்கள்.

    கற்பு பல நிலைகள்ல இதிகாச புரணாங்கள்ல அலசியிருக்காங்க. சோ கால்ட் பகுத்தறிவாளர்கள் போற்றும் கண்ணகி... மார்பை பிச்சு எரிஞ்சு மதுரையை எரித்தாள் அப்படின்னு நம்பறவங்க.. ராமாயணத்தில சீதையோட கற்பை பற்றி ராமனே சந்தேகப்பட்டான் அப்படின்னு கிண்டலடிப்பாங்க...

    என்னோட அறிவுக்கு எட்டிய வரையில் கற்பு என்பது நம் போன்ற ஆறறிவுக்கும் நாய் போன்ற ஐந்தறிவிற்கும் வித்தியாசம் காட்டுவதற்காக என்று கூட வைத்துக் கொள்ளலாம். நீங்க சொல்ற "மனசுக்கு கற்பு" என்கிற கான்செப்ட் "கலி"க்கு பொருந்தாது. ;-) ;-)

    பகுத்தறிவு அப்படின்னா என்ன அப்டின்னு தெளிவா புரியறா மாதிரி யாராவது புஸ்தகம் போட்டா என்னை மாதிரி தற்குறிங்க படிச்சு தெரிஞ்சுக்கலாம். இன்னும் அலசுங்க சார்! பெரிய ஜமா கூடும் போலருக்கு கமெண்ட்ஸ் படிச்சு தெருஞ்சிக்குறேன் நன்றி. ;-)

    பதிலளிநீக்கு
  22. அப்புறம் இன்னொன்னு... கற்பை பற்றி குஷ்பூ கருத்து சொன்னா தான் கேஸ் போடுவாங்க... நாம் பேசினா ஒன்னும் போடா மாட்டங்கன்னு நினைக்கிறேன்.. ;-) ;-)

    பதிலளிநீக்கு
  23. அப்புறம் இன்னொன்னு இன்னொன்னு.. பத்மநாபன் இன்னும் என் பக்கத்துக்கு வரலை. கற்பு பத்தி அப்புறம் சாவகாசமா பேசலாம் என்று அந்தப் பக்கம் அனுப்பி வைக்கவும். நன்றி அப்பா சார்!

    பதிலளிநீக்கு
  24. உங்களுக்கு பதில் சொல்வது என் சந்தோஷமும் கடமையும் ஆகும். நீண்ட பதிலுக்கு சற்று நேரம் தேவை.. மிக அலுவல் பளுவில் இந்த நாலு நாள் சரியாக இருக்கும். மீண்டும் சந்திப்போம் தலைவரே!

    பதிலளிநீக்கு
  25. இந்தக் கும்பமேளாவை இப்போதுதான் கவனித்தேன்.எங்கெல்லாம் கற்பு குறைகிறதோ அங்கெல்லாம் தோன்றி கற்பின் பெருமையை நிலைநாட்டவேண்டும் என்று எனக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு ஆகி இருப்பதால் ஒரு மாறுதலுக்கு மோகன்ஜி மற்றும் ஆர் வி எஸ் தரப்பை நான் எடுத்துக் கொண்டு சில கருத்துக்களை தெரிவிக்க அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    கற்பு தேவையா என்றெல்லாம் விவாதிப்பதற்கு முன்பு மதங்கள் அவற்றை ஏன் விழுமியங்களாக வைத்தன என்று யோசிக்கலாம்.கொஞ்சம் சமூகவியல் படித்தால் கூட தனி மனிதர்கள் சமூகமாகத் திரள ஆரம்பித்த பிறகே மதங்களும் கடவுள்களும் உருவாக ஆரம்பித்தன என்று அறியலாம்.உண்மையில் தனிமனிதனை சமூகம் ஆக்குவதில் மதங்கள் முக்கிய பங்கு வகித்தன.ஆகவேதான் அவை தனி மனிதனைப் பற்றி என்றுமே யோசிப்பது இல்லை.நான் ஒருவன் சுவர் ஏறி குதித்து பிறன் மனை விழைந்தால் ஏற்படும் விளைவை விட எல்லோரும் இவ்வாறு செய்தால் என்ன ஆகும் என்றே யோசிக்கும்.டாமினோஸ் விளைவு பற்றிக் கேள்விப் பட்டு இருப்பீர்களே அதேதான்.நான் எனும் ஒரு சீட்டு சரிந்தால் அதன் மீது சாய்ந்திருக்கும் ஒவ்வொரு சீட்டாய்ச் சாய்ந்து எல்லாமே போய்விடும் என்றே அஞ்சும்.மார்க்சியம் போன்ற கடவுள் இல்லாத நவீன சித்தாந்தங்களில் கூட தனி மனிதனை விட சமூகமே முக்கியம் என்பதைப் பார்க்கலாம்.அவ்வ்வாறு ஒரு குழுவாய் சமூகமாய் இருக்கும் போது ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பொருந்தும் விழுமியங்களையே முன்வைக்கமுடியும் இல்லையா...அதாவது விபச்சாரம் செய்யாதே என்றுதான் சொல்லமுடியும்.விபச்சாரம் செய்தால் பரவாயில்லை என்று சொல்லமுடியாது.சொன்னால் ஒட்டுமொத்த அமைப்புமே சிதறிவிடும் அல்லவா..

    இன்னும் கொஞ்சம் பச்சையாக ஏன் நண்பர் சொன்னார்.''உன் அம்மாவும் ஏன் ஆத்தாவும் வேறு எவன் கூடவோ ஓடிப் போகாததால்தான் இப்போது ஓரளவு விச்ராந்தியுடன் உட்கார்ந்து கொண்டு கற்பு வேண்டுமா இல்லையா என்று கதைத்துக் கொண்டிருக்கிறோம்.''அப்போது இதை நான் வன்மையாக மறுத்தாலும் தாய் தந்தையரின் காம ஒழுக்கம் அல்லது அதன் இல்லாமை குழந்தைகளின் மன நலனைக் கடுமையாக பாதிக்கின்றன என்று உளவியல் கட்டுரைகளில் நேரடியாகவோ மறைமுகமாகவோ வந்து கொண்டே இருப்பதைக் காணும் போது இதை வேண்டும் வேண்டாம் என்று அத்தனை எளிதில் தீர்மானித்துவிட முடியாது என்றே தோன்றுகிறது.

    அதாவது நீங்கள் கற்புக்கரசனாய் அரசியாய் தனியாக சமூகத்தை அதிகம் தொந்திரவு செய்யாமல் இருந்துவிடலாம்.கற்பு மீறுபவராக குறைந்தபட்சம் பக்கத்துவீட்டுக் காரன் குடும்பத்தையோ உங்கள் குழந்தைகளையோ கூட பாதிக்காமல் இருந்துவிட முடியாது!

    பதிலளிநீக்கு
  26. அருமையான கருத்துக்கள், bogan.
    நீங்கள் குறிப்பிட்டிருக்கும் social measure கற்புக்குப் பொருந்துமா என்று எனக்கு இன்னும் சந்தேகம் தான்.

    கடவுளைப் போல..கற்பு தேவையா இல்லையா என்பது அவரவர் விருப்பமும் தீர்மானமுமாகும் என்பதே என் கருத்து. கடவுளைக் கும்பிட விரும்பவில்லையென்றால் அவர்களுக்குக் கற்பில்லை என்று சொல்லிக் கீழே தள்ளக்கூடாது.

    இன்றைக்கு நாம் சுவரேறி குதிக்காததன் காரணம் கற்பென்றோ காம ஒழுக்கச் சிந்தனை என்றோ நினைக்கிறீர்களா? திரும்பத் திரும்ப கற்பையும் காமத்தையும் ஒரே தட்டில் வைக்கிறோம். காமம் தொலைந்தால் கற்புக்கு அவசியம் இல்லாமல் போய்விடுமா? கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.

    'தனிமனிதனைச் சமூகமாக்கிய மதங்கள்' - சுவாரசியமான கரு.
    போரை நாடுவது தனிமனிதனா சமூகமா? இத்தனை பரிணாம வளர்ச்சிக்குப் பின்னும் அழிவையும் போரையும் நாடுவது தனிமனித எண்ணமா சமூகப் பிரதிநிதித்துவமா? தனிமனிதன் சமூக உணர்வோடு நடந்த/நடக்கும் பொழுதெல்லாம் ஆக்கத்துக்கு ஏற்றாற்போல் அளவில் நிறைய அழிந்திருக்கிறது/அழிகிறது. கொஞ்சம் வேரை அசைத்துப் பார்த்தால் தனிமனிதரைச் சமூகமாக்கிய நம் மதங்கள் அத்தனையும் நம்மை அழிவுப்பாதையில் கொண்டு சென்றிருக்கின்றனவோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  27. hilarious, bogan!
    >>எங்கெல்லாம் கற்பு குறைகிறதோ அங்கெல்லாம் தோன்றி கற்பின் பெருமையை நிலைநாட்டவேண்டும் என்று எனக்கு மேலிடத்திலிருந்து உத்தரவு ஆகி இருப்பதால்...

    பதிலளிநீக்கு
  28. நம்மாள கடை பிடிக்கமுடியேலே என்பதற்க்காக ஒரு சிஸ்டத்தை குறை சொல்லக்கூடாது... பொதுவில வச்சுட்டா ஆணாதிக்கம் என்கிற பேச்சுக்கு இடமிருக்காது ..

    செக்ஸ் ஒன்றை மட்டும் கற்போட லின்க் பன்றப்பதான் பெண் தனித்து விடப்படுகிறாள். அதை தாண்டி நட்பு ,சிந்தனை, இப்படி பல வகையிலும் கற்பு பரவலாக்க வேண்டும் . உலகம் போகும் இந்த போக்கில் அதெல்லாம் சாத்தியமா ? பரிணாமக்கோட்பாட்டுக்கு இதை விட்டா வேற என்ன வேலை யிருக்கு?

    புழு காலத்திலிருந்து சலிக்காமால் உறவாடியாச்சு..படுத்தே கிடந்த உடம்பு படிப்படியா நிமிர ஆரம்பிச்சதே , இனப்பெருக்கம், பிழைத்தல் தாண்டி வேறெங்கோ, பரிணாமம் அழைத்துச்செல்வதற்கான ஏற்பாடு .அது நெடுந்தொடர் ...அதுல நாம கைவைக்க முடியாது...

    நமக்கு கிடைச்ச இந்த சின்ன எபிசொட்ல, நாம என்ன செய்ய முடியும்ன்னு பார்த்தோம்னா...முடிஞ்ச வரைக்கும் சிஸ்டத்தை கரப்ட் பண்ணாம பார்த்துக்கிறது... அதுக்கு அததற்கு உண்டான அறிவை கொடுக்கிறதான் வழி,,,,

    // கணவனோ மனைவியோ உடலுறவின் போது இன்னொருவரை மனதில் வரிப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? //
    இது பொதுவான விஷயமல்ல .மனித இயல்பான விஷயமுமல்ல .ஆனால் பெரும்பாலான விஷயம்.. தனிமனித ஒழுக்கம் சம்பத்தபட்டது ... ராத்திரி முழுக்க மது போதையில் இருந்துவிட்டு காலையில் உடல் தொங்குவது மாதிரி , மனமும் குற்றவுணர்வில் தொங்குகிறது.. ( குற்ற உணர்வெல்லாம் எனக்கு கிடையாதுப்பா எனச்சொல்பவர்கள் , தன்னைத்தானே எமாற்றிக்கொள்ளும் பொய்யர்கள் )

    இதற்கு பல காரணங்கள் , உணவுப் பழக்கங்கள், ஊடகங்கள், மிதமிஞ்சிய சுதந்திரம் இப்படிப் பலப் பல.. நீ முழு ஒழுங்கா ? இப்படி என்னை நோக்கி வரும் கேள்விக்கு, ``இல்லை `` அதே சமயத்தில் ``இதுலென்னதப்பிருக்கு``ங்கிற திமிர் இல்லை. குற்ற உணர்வில்லா மனிதர்களை சுற்றி வாழவேண்டுமென்றால், குற்றங்களை இனம் கண்டு குறைக்க வேண்டும்..

    பெரியாரியல் பகுத்தறிவு யுகப்புரட்சியெல்லாம் இல்லை, அதுவும் பரிணாம கோட்பாடுதான் .. பிழைத்தல் எனும் தலைப்பின் கீழ்வருகிறது. நீ மாத்திரம் எப்படி ? நானும் வர்றேங்கிறே ஆத்திரம்... நேர்மறையான போட்டியாயிருந்தா வரவேற்க கூடியது..பொய்யும் புரட்டுமா இருந்தா அதுவும் ஆதிக்க உணர்வுதான் ..
    மறுபடியும் ராத்திரி வர்றங்க.....

    பதிலளிநீக்கு
  29. அசத்துறீங்க பத்மநாபன்.
    >>பிழைத்தல் எனும் தலைப்பின் கீழ்வருகிறது..

    தூங்கப் போகலாம்னு இருந்தேன்.. இப்ப உங்க கருத்தைக் கொஞ்ச நேரமாவது அசை போட்டபின் தான் தூக்கம் வரும். திரும்ப வரேன்:)

    பதிலளிநீக்கு
  30. that settles it, RVS.
    >>கற்பு என்பது நம் போன்ற ஆறறிவுக்கும் நாய் போன்ற ஐந்தறிவிற்கும் வித்தியாசம் காட்டுவதற்காக...

    பதிலளிநீக்கு
  31. போகன் சார்,பத்மநாபன் மற்றும் உங்கள் கருத்துக்கள் ரொம்பவே ஆழமானவை.
    உசுப்பெத்தாதீங்க.. நிறைய வேலை..

    பதிலளிநீக்கு
  32. //கற்பு மீறுபவராக குறைந்தபட்சம் பக்கத்துவீட்டுக் காரன் குடும்பத்தையோ உங்கள் குழந்தைகளையோ கூட பாதிக்காமல் இருந்துவிட முடியாது // போகன் அவர்களின் அருமையான கருத்து . இந்த பாதிப்புகளை புரிந்த தனாலே ,கள்ளத்தனம், குற்ற உணர்வு கூடி கற்ப்பாவது மண்ணாங்கட்டியாவது என புலம்ப ஆரம்பித்து விடுகிறான் .

    //காமம் தொலைந்தால் கற்புக்கு அவசியம் இல்லாமல் போய்விடுமா?//

    அஃப் கோர்ஸ் அப்பாஜி , காமம் போற்றிப் பாராட்ட வேண்டிய குணம் இல்லையே. தொலையாமல் தொல்லை பண்ணிக்கொண்டிருக்கும் இக்குணம் தொலையத்தானே வேண்டும் . நான்(ம்) ஸோ அண்ட் ஸோ நடிகையை பார்த்து ஜொள்ளாறு விடுவதும், அதற்கென்று அப்பெண்மணியும் அதன் பின் ஒரு கூட்டம் மக்களை எக்ஸ்ப்ளாயிட் செய்வதும் காம வகையை சார்ந்ததே...

    பதிலளிநீக்கு
  33. அழகையும் கவர்ச்சியையும் ரசிப்பது காமமா? ஏற்கமுடியவில்லை பத்மநாபன்.

    காமம் என்பது தொடல்சுகம் தொடர்பான உணர்வு அல்லது உபாதையென்று வைத்துக் கொள்வோம். ஏனெனில் அந்த வகையில் தான் காமம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். பிறன்மனை, நடிகை ஜொள் என்று...
    'காமம் தொலைந்தால்' என்ற என் கேள்வியின் பொருள் தொடல்சுகம் பற்றிய உணர்வு வற்றிப் போனதும் - வயாகராவையும் தாண்டிய நிலையென்றே வைப்போம் - கற்பு தேவையில்லையா என்பதே. தொடல்சுகம் என்ற கண்ணோட்டத்தில் கற்பின் முக்கியத்துவம் சிலபத்து வருடங்கள் தானா? நெறியென்ற வகையில் கற்பு காமத்தைக் கட்டுப்படுத்துமா? நம்ப முடியவில்லை.

    கொஞ்சம் டேஞ்சரான டெரிடரி... இருந்தாலும் கேட்கிறேன். அழகையும் கவர்ச்சியையும் கடவுள் லீலையென்று பாடுவதும், கோவிலில் சிற்பங்களாக வடிப்பதையும் நாம் காமம் என்று சொல்வதில்லையே? ஏன்? நடிகையை நினைத்தால் மட்டும் காமமா?

    பதிலளிநீக்கு
  34. ரொம்ப யோசிக்க வைக்கிறிங்களே அப்பாஜி....

    அழகை ரசிப்பது ஒக்கே , .கவர்ச்சி என்கிற வார்த்தையே ஒரு எக்ஸ்ப்ளாய்ட்டேஸேன் தானே.

    நடிகை என்பவர் நடிக்கிறார் ...கலை இன்ன பிற... அந்த வகையில் அவருக்கு தொந்தரவு தரவேண்டியது இல்லை ...

    அதுதாண்டி உள்நோக்கத்தோடு ஒரு கூட்டமாக சேர்ந்து, தரித்ததை உரிப்பது தான் பிரச்சினையே....
    காமம் -கடவுள் லீலை எனும் சொல்வதற்கு காரணங்கள் மனவியலாளர் யாராவது வந்து சொன்னால் பரவாயில்லை .

    படம் பார்க்கும் பழக்கம் தொன்றுதொட்ட பழக்கம் போல ...டிஜிட்டல் வந்தபிறகு சிற்ப வேடிக்கை குறைந்து விட்டது ( கலைரசிப்போரை கணக்கில் எடுத்து க்கொள்ளவில்லை அதுக்குன்னு அவர்களுக்கு தனி சுழி தலையில் இருக்கும் )

    பதிலளிநீக்கு
  35. அப்பாஜி! இது இங்க ஃபிட் ஆகுமான்னு பாருங்க..

    சாந்தோக்கிய உபநிஷத்ல ஒரு கதை வருது..
    ஜாபாலன் அப்படின்னு ஒரு பையன் கௌதமர் கிட்ட குருகுல வாசத்திற்காக போறான்.
    "தம்பி... உன் பெயர் என்ன?" என்ற கேள்விக்கு ஜாபாலன் அப்படின்னு சொல்றான்.
    உங்க அப்பா பெயர் என்ன? அப்படின்னு கேட்டா தெரியாதுன்றான். எல்லா பசங்களும் சிரிக்கறாங்க. கௌதமர் "நீ போய் உங்க அம்மா கிட்ட கேட்டுகிட்டு வா.." அப்படின்னு அனுப்பறார்.
    பையன் நேரா அம்மாட்ட வந்து "என் அப்பா யார்? சொன்னாதான் படிக்க சேர்த்துப்பாங்களாம்" அப்படின்னு சொல்றான்.
    "மகனே... நான் நிறைய ரிஷிகள் வீட்ல வேலை செய்து அங்கு வரும் பல பேருக்கு(ராஜாக்கள் உட்பட) பணிவிடை செய்தேன். நீ யாருக்கு பிறந்தாய் என்று எனக்கு தெரியவில்லை. ஆகையால் ஜாபாலியின் மகன் ஜாபாலன் என்று அறிமுகம் செய்து கொண்டு குருலத்தில் சேர்ந்து படி" என்று அனுப்புகிறாள்.
    கௌதமர் சத்தியமான இந்த வாக்கியத்தை எடுத்துக்கொண்டு அவனுக்கு பாடம் கற்பிக்கிறார்.

    இங்கே கேள்வி என்னான்னா...
    ஜாபாலி பொதுமகள் இல்லை.
    ஆனால் பிள்ளை பெற்றிருக்கிறாள். பிள்ளையிடமே யார் தகப்பன் என்று தெரியாது என்கிறாள்.
    கௌதமர் பெரிய ரிஷி... அவரும் உண்மை சொன்ன வரைக்கும் சரி என்று பாடம் நடத்துகிறார்.
    அப்படியென்றால் உபநிஷத் காலத்தில் கற்பு என்றால் என்ன?
    கற்போட விளக்கம் என்ன? கற்பு என்பது எதுவரையில்?

    இங்கே கேட்டா விளக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்....

    பதிலளிநீக்கு
  36. அருமை RVS. அப்போ இந்த சிக்கல் பின்னாளில் வந்தது தான். மதத்துலயோ நெறியிலயோ (உபனிஷத்) நேரிடையாக சொல்லாத சமாசாரம். நாமதான் வெரும் பாத்திரத்தை உருட்டிக்கிட்டுத் திரியறமோ?

    பதிலளிநீக்கு
  37. எனக்கு கேட்க மட்டுந்தான் தெரியும் பத்மநாபன். அழகிருந்து கவர்ச்சி வந்ததா கவர்ச்சியுள்ளதால் அழகானதா?

    பதிலளிநீக்கு
  38. அப்புறம் உடன்கட்டை ஏறுதல் பற்றி சில வார்த்தைகள்...அது நமது நூல்களில் அதிகம் வலியுறுத்தப் படவில்லை எனினும் நிகழ்ந்து கொண்டே இருந்தது.காரணம் என்னவெனில் அந்தக் காலத்தில் போர்கள் அதிகம் நிகழ்ந்தவாறே இருந்தன.எந்த ஒரு போரிலும் முதல் பலி பெண்களே.ஆநிரை கவர்தலில் மனிதப் பசுக்களும் கவரப் பட்டன.ஒரு தடவை எதிரிகள் கையில் சிக்கிவிட்டால் அந்தப் பெண்கள் ஒவ்வொரு அந்தப் புறமாகப் பந்தாடப் படுவார்கள்.முகலாயர்கள் இந்த விசயத்தில் மிகக் கொடூரமாக நடந்து கொண்டார்கள்.கொஞ்சம் சரித்திரத்தை ஊன்றிப் படித்தால் அவர்கள் காலத்தில் தான் சதி அதிகம் நிகழ்ந்தது என்பதைக் காணலாம்.பெரும்பாலும் ஷத்திரியகுலப் பெண்களே இதை அதிகம் செய்தார்கள்.எதிரிகளின் கையில் சிக்கி மிக இழிநிலை அல்லது மரணம் என்ற இரண்டு வாய்ப்ப்புகளில் மரணத்தைத் தேர்ந்தெடுத்தார்கள்.அவ்வாறு செய்தவர்கள் பிரமிப்புடன் பார்க்கப் பட்டார்கள்.தெய்வங்களாகி வணங்கப் பட்டார்கள்.இன்னும் திருநெல்வேலிப் பகுதிகளில் தீப் பாஞ்சான் தேவி ன்ற சிறு தெய்வக் கோயில்கள் நிறைய இருக்கின்றன.கேரளாவில் இருக்கும் அனைத்து பகவதிகளும் கண்ணகியின் வேறு வேறு பேர்களே.கேரளாவில் போன நூற்றாண்டில் மார்த்தாண்ட வர்மாவுக்கும் எட்டு வீட்டுப் பிள்ளைமார்களுக்கும் நடந்த போரில் வர்மா வென்றதும் அவர் செய்த முதல் காரியம் தோற்றவர்களின் பெண்களை அவருக்கு போரில் உதவிய மீனவர்க்குப் பங்கு போட்டு கொடுத்ததுதான்..ஏன் இலங்கையிலும் இதுவே நிகழ்ந்தது..ஆனால் என்ன அந்தப் பெண்கள் சயனைடுக் குப்பியை சதிக்குப் பதிலாய்த் தேர்ந்தெடுத்தார்கள். கற்பு என்கிற விஷயம் சரித்திரத்தில் ஒற்றைப் பரிணாமத்தில் வளரவில்லை.ஆகவே அதை ஓர் இரவில் தடை செய்துவிட முடியாது..

    பதிலளிநீக்கு
  39. கற்பைத் தடை செய்வானேன், bogan? இருந்து விட்டுப் போகட்டும். (besides, அடுத்தவரை நினைத்தால் தொட்டால் புணர்ந்தால்.. ஆளுக்கொரு/ காலத்துக்கொரு விளக்கம் தரப்படுகிற கற்பு தானாகவே கரைந்து விடும் என்பதே இன்னும் என் எண்ணம்.)

    சில சமயம் விபரீத பந்தயங்கள் ஆடத் தோன்றும். இப்பொழுது ஒன்று தோன்றுகிறது. இன்னும் நூறு, இருநூறு, முன்னூறு என்ற வருடக்கணக்கில் தொலைந்து போகக்கூடிய கலாசார வழக்கங்கள் என்ன என்று bet கட்ட வேண்டும். காலவரை முடிந்ததும் வெற்றி பெற்ற கட்சியின் ஆசைப்படி வெற்றித்தொகையைச் செலவழிக்க வேண்டும். கற்புக்கு நூறு வருடங்கள். கல்யாணத்துக்கு இரு நூறு வருடங்கள். கடவுளுக்கு முன்னூறு வருடங்கள். இது என் பெட்.

    பதிலளிநீக்கு
  40. புராண காலத்திலேயே சதி நடந்திருக்கிறது, bogan. (pun:)
    சத்தியவான் சாவித்ரி கதை. மகாபாரதத்திலும் சதி பற்றிய விவரங்கள் இருக்கின்றன. கிரேக்கக் காப்பியங்களில் சில விவரங்கள் உண்டு. சீசர் காலத்தில் விதவைகள் தற்கொலை செய்து கொள்ள எதிர்பார்க்கப் பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

    அந்தந்த காலக்கட்டங்களில் இந்த வழக்கங்களும் எதிர்பார்ப்புகளும் இயற்கையாகவும் ஏற்புடையதாகவும் தான் இருந்து வந்தன. காட்டுமிராண்டித்தனம், மூடப்பழக்கம் என்ற அறிவு வர பத்து ஐம்பது நூறு வருடங்களாயின. சரித்திரப்படி, வரும் தலைமுறைகள் கடந்த தலைமுறைகளை விட அறிவிலும் முதிர்ச்சியிலும் மேன்மைப் பட்டிருப்பதால் ஒரு காலத்து நம்பிக்கைகள் மறு காலத்துக் கேலியாக மாறுகின்றன. நிறைய பழக்கங்கள் இப்படி கேலிக்குரியவையாகக் காத்துக் கிடக்கின்றன. (போர் மட்டும் ஒழியுமா தெரியவில்லை.)

    சதியை ஏற்றவர்கள் கற்புடையவர்களா, கற்பின் உந்துதலால் அப்படிச் செய்தார்களா? நூற்றுக்கணக்கான வருடங்கள் கழித்து சுகமான லெதர் நாற்காலியில் உட்கார்ந்து இப்படி கேள்விகள் கேட்பதும் வியாக்கியானம் செய்வதும் சுலபம் தான் என்றாலும், எனக்கென்னவோ அவர்கள் கற்பின் காரணமாக உடன்கட்டை ஏறவில்லை என்று தோன்றுகிறது. (பள்ளிக்கூட காலத்து பெரியார் சீடர் வாத்தியாரின் ஒரு க்ரூட் ஜோக்: செத்தப்புறம் கூட விடமாட்டாங்கப்பா அந்தக்கால பொஞ்சாதிங்க; கூடவே வந்துருவாங்க)

    பதிலளிநீக்கு
  41. மதியச் சாப்பாடு முடித்து புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்பைப் படித்துக் கொண்டிருந்தேன். அடடா, எப்படி மறந்தோம் என்று அவர் எழுதிய சிலவற்றைப் பற்றி என்னை நானே நொந்து கொண்டேன். அப்படியே பகல் தூக்கம் போட்டு எழுந்து வந்து பிளாக் மேய்ந்தால் coincidence - நான் அடிக்கடி படிக்கும் திருமதி. சுசீலாவின் பதிவில் புதுமைப்பித்தன்! அதைவிட strange coincidence - சுசீலாவும் கற்பைப் பற்றி எழுதியிருக்கிறார், using PP as her front. அவசியம் படிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு