2010/10/07

மெல்லிசை நினைவுகள்

போக்கற்ற சிந்தனை



    ஜெயசந்திரனுக்கு ஒரு குட்டி ரசிகர் கூட்டம் கூடியிருக்கிறதே? இத்தனை பாடல்களை வரிசைப் படுத்தியிருக்கிறார்களே, இதில் எதைக் கேட்டிருக்கிறோம் என்று பார்த்தபோது, எனக்குத் தெரிந்த பாடல்கள் சில நினைவுக்கு வந்தன.

பொதுவாக எனக்கு டிஎம்எஸ் போல் கணீர் குரல் தான் பிடிக்கும். கணீர் என்று தெளிவாகப் பாடுவதோடு மட்டுமல்ல, டிஎம்எஸ் குரலை அருமையாக மாடுலேட் (பால்காரன் சொல்லும் சாக்கென்று நினைக்க வேண்டாம்) செய்வார். யார் தருவார் இந்த அரியாசனமும் வரும்; யாரந்த நிலவும் வரும் அவருக்கு. கணீரும் மென்மையும் சுருதி ஏற்ற இறக்கமும் சில பாடகர்களுக்கு மூச்சு விடுவது போல் தன்னிச்சையாக வரும். ரகுதாத்தா வீட்டுக்கு ஒரு நொடி தாவுவோம். அங்கே கிஷோரை விட ரபி எனக்குப் பிடிக்கும். கிஷோர் கணீர். கணீரோடு சரி. மரக்குரல். ஒன்று, ஒரே சுருதி. இல்லையென்றால் யோடலிங். ரபி அப்படியில்லை. மென்மையும் கணீரும் கலந்த குரல். பிரதமன் பாயசத்தில் பொறித்த அப்பளத்தை உடைத்துப் போட்டுக் கையால் அளைந்து அள்ளிக் குடித்த ஐம்புலன் நிறைவு, எனக்கு டிஎம்எஸ் ரபி குரல்களில் கிடைக்கும்.

எஸ்பிபி விலகலாக, மென்மையான குரல் கொண்ட பிபிஸ்ரீ, யேசுதாஸ் போன்றவர்களின் குரலைக் கேட்கும் பொழுதெல்லாம், ரசிப்பேன் என்றாலும், எனக்குத் தூக்கம் வரும். தூங்குமூஞ்சி பிபிஸ்ரீ என்று சொன்னதற்காக ஒரு காதலை இழந்திருக்கிறேன்! என்னவோ தெரியவில்லை, ஜெயசந்திரன் குரலில் கொஞ்சம் உற்சாகமும் வேகமும் இருப்பதாகப் படுகிறது. கணீர், மென்மை இரண்டும் கலந்திருந்த அவரது குரலை தமிழ்த்திரை அதிகம் பயன்படுத்தவில்லை. ஜெயசந்திரன் எஸ்பிபி போலப் பாட முயற்சி செய்தாரோ என்று சில சமயம் எனக்கும் தோன்றும். இந்தப் பாடல்களைக் கேட்டுப் பாருங்களேன்.
ஜெயசந்திரன் குரலில்.. | 2010/10/07


பிரதமன் ஜொள்: 'அங்கே கொஞ்சம் எடமிருக்கு' என்ற வரிகள் அடிக்கடி வரும் 'ஐயாவுக்கு மனசிருக்கு' பாடலில் ஸ்ரீப்ரியா சில இடங்களில் மட்டும் சஜஸ்டிவாக ஆடியிருப்பார். ரசாபாசம். (இல்லைனா அஞ்சு நிமிசம் கூட உட்கார முடியாத படத்தை அஞ்சு தடவக்கு மேலே பாக்க முடியுமா சொல்லுங்க?) இன்றைய சினிமா நடனங்களில் சஜஸ்டிவ் என்று எதுவும் இல்லை; குழாயடி பாணியில் தான் ஆடுகிறார்கள். அன்றைக்கு ஸ்ரீப்ரியா மூவ் கிக் என்று பட்டது.

மௌனமல்ல மயக்கம்: இசையமைத்தது யாரென்று தெரியவில்லை.

45 கருத்துகள்:

  1. ஸ்ரீநிவாசை இரவு நேரங்களில்தான் கேட்கவேண்டும்.ஜிம் ரீவ்ஸ் போல..சுள் என்று வெயில் அடிக்கும் கோடை மதியம் ஒன்றில் ஜிம் ரீவ்ஸ் முதலில் கேட்டு மேற்கத்திய இசை ரசிகர்களின் பிறப்பை எலாம் சந்தேகித்தேன்.ஆனால் அவரே இரவு நேரத்தில் ஆஹா

    பதிலளிநீக்கு
  2. s.p.b ஐ அவ்வளவு சுலபமாக ஒதுக்கி விடலாமா? சங்கராபரணம் ஒன்று போதுமே!---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  3. "அதிகாலை நிலவே அலங்கார சிலையே புது ராகம் நான் பாடவா .... இசைதேவன் இசையில் புதுப் பாடல் துவங்கு......." இளையராஜாவுக்காக மற்றும் என் போன்ற சினிமாப் பாட்டுப் பித்தர்களுக்காகவும் ஜானகியுடன் சேர்ந்து ஜெயச்சந்திரன் பாடியது.

    காஸ்யபன் சார் SPBயை டச் பண்றார். அட்லீஸ்ட் ரெண்டு மாசத்துக்கு பின்னூட்டம் போட வைக்கப்போறார்ன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல பாடல்.

    ஜெயச்சந்திரன் பாடல்கள் சிலவற்றைத் தவிர எல்லாப் பாடல்களும் எனக்குப் பிடிக்கும். பிடிக்காத பாடல்களை எண்ணி விடலாம். ஐயாவுக்கு மனசிருக்கு, மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம், கொடியிலே மல்லிகைப் பூ (எனக்கு..எனக்கு சொல்கிறேன்!)..

    வெள்ளி நிலாவினிலே, ஒரு வானவில் போலே, சித்திரச் செவ்வானம், மாஞ்சோலைக் கிளிதானோ போன்ற பாடல்களும், வைதேகி காத்திருந்தாள் பாடல்கள் இனிமையானவை. இன்னும் கூட லிஸ்ட் நீளும்!

    எஸ் பி பி பிடிக்கும். ரொம்ப...அதுவும் அவர் பொய்க் குரலில் பாடினாலும் தொடுவதென்ன தென்றலோ மலர்களோ போன்ற பாடல்கள், நிலவே நீ சாட்சி, தலைவன் போன்ற பழைய பாடல்கள் ரொம்பப் பிடிக்கும்.

    வடக்கில் ரஃபி, கிஷோர் பிடிக்கும். ரஃபியை விட கிஷோர்...மரக்குரல் என்று தோன்றவில்லை..(எனக்கு,எனக்கு..!)

    பொதுவாக பாடகர்களை என்றில்லாமல் எல்லா பாடகர்களும் பாடிய (எனக்குப் பிடித்த) எல்லா நல்ல பாடல்களும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  5. அப்பாஜி,
    டி.எம்.எஸ்-சிங்கம்
    சீர்காழி-யானை
    பி.பி.எஸ்-மான்
    எஸ்.பி.பி- குதிரை
    ஜேசுதாஸ்-மயில்
    மலேசியா
    வாசுதேவன்-பருந்து
    ஜெயச்சந்திரன்-பசு
    மனோ- வரிக்குதிரை

    ஒவ்வொன்றும் ஓர் அழகு...
    ஆனாலும் ராஜா-சிங்கம் தானே!

    பதிலளிநீக்கு
  6. மேற்கத்திய இசை ரசிகர்களின் பிறப்பை எலாம் சந்தேகித்தேன்// ஹிஹி..சரியாச் சொன்னீங்க போகன்

    பதிலளிநீக்கு
  7. வாங்க kashyapan.. எஸ்பிபி ஒதுக்கக் கூடியவரா? நாம முயற்சி செஞ்சு ஒதுக்கினாலும் நல்ல நேரம் நம்மளை சில சமயம் பிடிச்சுக்குது பாருங்க, எஸ்பிபி அந்த வகை. நம்ம நல்ல வேளை, தமிழ்ல வெறுப்பு வராம "ஆதிக்க" நாட்களில் தொடர்ந்து நம்பிக்கையோட பாடினாரு.

    பதிலளிநீக்கு
  8. கேட்காத பாட்டுகளா எடுத்து விடறீங்க RVS..

    பதிலளிநீக்கு
  9. மஞ்சள் நிலாவுக்கு அருமையான பாட்டு. மாஞ்சோலைக் கிளிதானோ பாட்டு தமிழில் ஜெயசந்திரனின் உச்சம் என்று நினைக்கிறேன். திகட்டாத சலிக்காத பாடல்கள். among ilayaraja's best.

    கிஷோர் குமாரையும் ரசிப்பேன் ஸ்ரீராம். உலகத்தின் தலை சிறந்த பாடல்களில் ஒன்றாக நான் நினைக்கும் 'கோரா காகஸ்'..

    பதிலளிநீக்கு
  10. வாங்க மோகன்ஜி..
    அதுல பாருங்க, இந்த இடுகையை "தீராத விளையாட்டுப் பிள்ளை, வானவில் மனிதன் போல எனக்கு நாய் யானை தவளை பத்தி சுவையா எழுத வரவில்லை; அவங்களை மாதிரி பின்னூட்டத்தையே இடுகையா கொண்டு போகும் அளவுக்கு மேட்டரும் இல்லை"னு தான் தொடங்கியிருந்தேன்... கிண்டல் பண்ணுறதா நெனச்சிடுவீங்களோனு பயந்து நீக்கிட்டேன்... அவரு ரெண்டு மாசத்துக்குப் பின்னூட்டம்ன்றாரு, நீங்க மான் பசு குதிரைனு புச்சா ரெண்டு மூணு எடுத்தாறீங்க.. :)

    ஆமாம், சீர்காழி யானையா? ஏங்க இப்படி.. ஏதோ அகஸ்தியரா நடிச்சாருன்றதுக்காக இப்படியா?

    பதிலளிநீக்கு
  11. பொய்க் குரலில் பாடினாலும்//
    புரியலையே ஸ்ரீராம்?

    பதிலளிநீக்கு
  12. //மோகன்ஜி கூறியது...

    அப்பாஜி,
    டி.எம்.எஸ்-சிங்கம்
    சீர்காழி-யானை
    பி.பி.எஸ்-மான்
    எஸ்.பி.பி- குதிரை
    ஜேசுதாஸ்-மயில்
    மலேசியா
    வாசுதேவன்-பருந்து
    ஜெயச்சந்திரன்-பசு
    மனோ- வரிக்குதிரை

    ஒவ்வொன்றும் ஓர் அழகு...
    ஆனாலும் ராஜா-சிங்கம் தானே!//

    மோகன்ஜி நீர் வாழ்க, நீன் கொற்றம் வாழ்க.

    பதிலளிநீக்கு
  13. நான் வன்மையாக கண்டிக்கிறேன் யுவர் ஹானர். டி.எம்.எஸ் சிங்கம்தான் ஒத்துக்கறேன். ஆனா இப்ப வயசான சிங்கம். அதனால இப்ப காட்டுக்கு ராசாவா எஸ்.பி.பியை ஏகமனதாக எல்லா சிங்கர் சிங்கிகளும் ஏத்துக் கிட்டாங்க. ஸ்டாப். ஸ்டாப்... ஸ்டாப்.. யாரும் அடிக்க வராதீங்க அண்ணன் எஸ்.பி.பி. மீது கொண்ட அளவுகடந்த அபிமானத்தாலும், காதலாலும் அப்படி எழுதினேன்.
    அசையும் பொருள் நிற்கவும், நின்ற பொருள் அசையவும் பாடிய "பாட்டும் நானே.. பாவமும் நானே... பாடும் உன்னை நான் பாடவைத்தேனே..." யாரால மறக்க முடியும் அந்த சிம்மக் குரலோனின் சங்கீதத்தை.

    இந்த மோகன்ஜி இப்படித்தான். எங்க போனாலும் ஒரு யானை பின்னூட்டம் போட வச்சுருவாறு.

    அப்பாஜி இன்னொரு ஜெயச்சந்திரன் ஹிட் புடிச்சுக்கோங்க... ஸ்ரீதேவி காலமும் கோலமும் போன காலத்தில் அர்விந்த் சாமி கூட ஹீரோயினியா தொன்னூறுகளில் நடித்தது. படம் பெயர் தேவராகம். தமிழில் பாடல் எழுதியது வைரமுத்து என்று ஞாபகம்.

    "கருநிற வண்டுகள் உந்தன் குழல்கள்
    உந்தன் நெற்றி முகத்தின் அணிகலன்கள்
    மாறனின் அம்புகள் உன் புருவம்
    நீலோற்பனங்கள் உன் விழிகள்"

    கீழே யுட்யூப் வீடியோ. (மலையாளத்தில்)
    http://www.youtube.com/watch?v=51KrHvLc_Bk

    பதிலளிநீக்கு
  14. அப்பாஜி,
    சீர்காழியை யானைன்னு சொன்னது,நீங்க சொன்ன அர்த்தத்துல இல்ல தலைவரே! அவர் குரல் யானைப் போல் திடமானது.
    ரொம்ப 'சைவமாவே'இருக்கும்..டபுள் மீனிங்க்ல்லாம் இருக்காது.எந்த ரேஞ்சுக்கும் யானைப் பிளிறல் போல் இருக்கும்.யானை மற்றதெல்லாம் அமுக்கிட்டு உசந்து நிற்பது போல்,அவர் குரல்,பக்கவாத்தியங்களை மீறி ஒலிக்கும்.. ஏ.ஆர்.ரேஹமான் பாச்சால்லாம் அவர்கிட்ட பலிச்சிருக்காது!
    "அமுதும் தேனும் எதற்கு நீ அருகினிலே இருக்கையிலே எனக்கு' ஒண்ணு போதுமே! அதுக்கே 'ஈ பில் டவரை' அவருக்கு எழுதி வைக்கலாமே!
    இதுக்கே அசந்துட்டீங்களே!
    அங்க சாய் விசிலடிக்கிறத பார்த்தீங்களா! நானு,சாயில்லாம் செனாய் நகர் அண்ணா நகர் பார்ட்டிங்க...
    கிராம்போன் ப்ளேட்டுலையே நாஸ்தா துண்ணவுங்க! நம்ம கைல வேணாம்!தெரிதா??நான் சொல்றது சரிதானே சாய்?!

    பதிலளிநீக்கு
  15. மௌனமல்ல மயக்கம், என்னை ரெம்ப கவர்ந்த பாடல்.

    பதிலளிநீக்கு
  16. மோகன்ஜி கைலியை மடிச்சு கட்டிக்கிட்டு கோதாவுல இறங்குற அளவிற்கு யார் என்ன சொல்லிட்டாங்க? ஒரு உருவ ஒற்றுமை இருக்கே அப்படின்னு எங்க அணித்தலைவர் அப்பாஜி (அப்பாடி பெருங்கையை என் பக்கம் சேர்த்தாச்சு) அப்பாவியா ஒரு கேள்வி கேட்டுட்டாரு. யானை அப்படின்னு இருக்குற எந்த மேட்டருக்கும் ஊர்ல யாருமே வாயத் திறக்கக்கூடாதுன்னா எப்பிடி. ஒடனே கிராமஃபோன் தட்டையே நாங்க பல் தேய்க்காம நாஷ்டா மாதிரி கடிச்சி துன்னுவங்கோ... அப்படின்னு உதார் உடரீங்க. நாங்கெல்லாம் DVD/ Blu-Ray Disc போல லேட்டஸ்ட் டெக்னாலஜி சமாச்சாரங்களை ஸ்நாக்ஸ் மாதிரி எடுத்துக்ரவங்க. மெய்யாலுமே...க்கும்.. வயத்தை லேசா தட்டுனா வாய்லேர்ந்து பாட்டு வரும்.. ஆனா வயத்தில அடிச்சுராதீங்க!!!

    போறதுக்கு முன்னாடி இன்னொன்னு சொல்லிக்கிறேன். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் லேட் என்ட்ரி கொடுத்தாலும் லேட்டஸ்டாக கொடுக்கப்போகும் பாலைவன பாபா, கொங்குநாட்டு தங்கம், பாட்டுக்கொரு தலைவன் பத்துஜி எங்கள் அணியில் சேர்ந்து தான் பணியாற்றுவார் என்பதை உறுதியுடன் அறிதியிட்டு கூறிக்கொள்ள பெருமைப்படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  17. பாலைவன பாபாவா? டிவிடியெல்லாம் நாஷ்டா துன்னா இப்படித் தோணுமா?

    பதிலளிநீக்கு
  18. //மோகன்ஜி சொன்னது…

    //எந்த ரேஞ்சுக்கும் யானைப் பிளிறல் போல் இருக்கும்...அவர் குரல், பக்கவாத்தியங்களை மீறி ஒலிக்கும்.. ஏ.ஆர்.ரேஹமான் பாச்சால்லாம் அவர்கிட்ட பலிச்சிருக்காது!
    ....அங்க சாய் விசிலடிக்கிறத பார்த்தீங்களா! நானு,சாயில்லாம் செனாய் நகர் அண்ணா நகர் பார்ட்டிங்க...//

    எனக்கு சீர்காழியின் குரலும் ரொம்ப பிடிக்கும்.

    நடந்தாய் வாழி காவேரி , புதியதோர் உலகம் செய்வோம், காதிலிக்க நேரமில்லை காதிலிப்போர் யாரும் இல்லை, அறுபடை வீடு கொண்ட திருமுருகா, நெஞ்சின் உரமுமின்றி, மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா காண்டீபம் எடுக, உள்ளத்தில் நல்ல உள்ளம் (சீர்காழியின் குரலையும் மென்மையாக காட்ட நடுவில் இந்த பாட்டில் ஒரிஜினல் சிம்மகுரலோன் - சிவாஜி கணேசன் அவர்களின் முனகல் வேறு !!), தேவன் கோவில் மணியோசை, ஜாலிக்காக - ஆழம் தெரியாம காலம் விட்டு மற்றும் பட்டணம் தான் போகலாமடி என்று.

    எல்லாவற்றையும் விட அவரின் "ஷண்முக கவசம்" காஸ்செட் கேளுங்கள்.

    //கிராம்போன் ப்ளேட்டுலையே நாஸ்தா துண்ணவுங்க! நம்ம கைல வேணாம்!தெரிதா??நான் சொல்றது சரிதானே சாய்?! //

    மோகன்ஜி அண்ணே,

    துரை என்னைவிடவும் டி.எம்.எஸ்ஸின் பரம பரம விசிறி. அவரிடம் பாச்சா பலிக்காது. ஏறி மிதிச்சிட்டு போய்டுவான்.

    துரை,

    நீ சொன்ன "யார் தருவார் அந்த அரியாசனம்" வெங்கடேஷுக்கு ரொம்ப பிடித்த பாடல். எப்போது ஹை பிட்ச் என்று சொல்லும்போது இந்த பாடலை சொல்லுவான். ஆரம்பிக்கும்போதே அப்படி உச்சஸ்தாயில் பிசிறி இல்லாமல் எடுக்க அவர் ஒருவரால் மட்டும் தான் முடியும். அது உண்மை.

    அந்த பாடல், கண்ணா நீயும் நானுமா என்று இப்போது உள்ளவர்கள் எடுத்தால் பின்னாடி பிச்சிக்கிட்டு கொட்டும் !!

    பதிலளிநீக்கு
  19. அட யானையே! யானை வாழைப்பழம் விழுங்குற கணக்கா வாதாபி அசுரர்களை விழுங்கின ரோலாச்சேனு சொல்ல வந்தேன்..

    பதிலளிநீக்கு
  20. //தூங்குமூஞ்சி பிபிஸ்ரீ என்று சொன்னதற்காக ஒரு காதலை இழந்திருக்கிறேன்//

    துரை ஒண்ணுதானே போச்சு !! விடு விடு. டி.எம்.எஸ். பிடித்ததால் ஏதாச்சும் தெறிச்சா ? அது மேட்டரு !

    பிபிஎஸ் பற்றி சொல்லறயே - கீதுவும் திட்ட போறா. எங்க அம்மாவுக்கும் அவர் பாடல்கள் தான் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  21. //அப்பாதுரை கூறியது... அட யானையே! யானை வாழைப்பழம் விழுங்குற கணக்கா வாதாபி அசுரர்களை விழுங்கின ரோலாச்சேனு சொல்ல வந்தேன்..//

    மோகன்ஜி - பம்மல் ஜகா வாங்குது !!

    பதிலளிநீக்கு
  22. அப்பாஜி அந்த "கருநிற வண்டுகள்..." ஜெயச்சந்திரன் பாட்டு கேட்டீங்களா!

    பதிலளிநீக்கு
  23. ஆர்.வீ.எஸ்,நாஸ்டா துண்ணசொல்ல நாங்க தொட்டுக்குறதே DVD/ Blu-Ray Disc சமாச்சாரங்க தான்பே! வவுத்துல
    தட்டுனா பாட்டு வருதாம்ல!எங்க வவுறு மட்டும் வண்ணான்சாலா? அது ஜோக் பாக்ஸ்பே!
    பாட்டுக்கொரு தலைவன் பத்துஜி வர்றாராமில்ல? தோடா! அவர அஞ்சு வருசம் கான்ராக்ட்ல கப்பலேத்தி விட்டதே நாங்க தான் தெர்தா?
    எங்காளு அவரு..அவுராண்ட கொக்கி போட்டா மெர்சலாய்டுவீங்க. பங்காளி பி.யூ.சின்னப்பா,கிட்டப்பா,பாகவதரு,திருச்சி லோகநாதன்,தண்டபாணி தேசிகருக்கேல்லாம் ரசிகர் மன்றம்லாம் வச்சிங்கிறாரு.
    காட்ல சிங்கம் ஒண்ணு தான்! நாட்ல தங்கம் டீ.எம்.எஸ்ஸு! சாய்! சோடாபாட்டில்லாம் எங்க நைனா? ரெண்டு க்ரேட்டு சர்ருசர்ருன்னு வுட்டாத் தெரியும் சங்கதி..

    பதிலளிநீக்கு
  24. //சாய்! சோடாபாட்டில்லாம் எங்க நைனா? //

    மூன்று வருடங்கள் பச்சையப்பன் கல்லூரியில் பண்ணிய அடாவத்து இருபத்து ஆண்டுகள் கழித்தும் இன்னும் துரத்துது ஒய் !! நீர் வேறு. போதும் போதும்.

    நான் இப்போது பி.எஸ். ஹை ஸ்கூலில் படித்த ஐயர் ஆத்து சமத்து பையன் !!

    உதிரி: அது சரி, வங்கியில் பயிற்சி இந்த பாஷையில் எடுப்பதில்லையே ?

    பதிலளிநீக்கு
  25. //பொதுவாக எனக்கு டிஎம்எஸ் போல் கணீர் குரல் தான் பிடிக்கும்... யார் தருவார் இந்த அரியாசனமும் வரும்; யாரந்த நிலவும் வரும் அவருக்கு. //

    பாட்டிலும் மெல்லிய பெண்ணிது
    தொட்டதும் மெல்லிடை துள்ளுது ...

    என்ற "ஞாயிறும் திங்களும்" பாடல் பி.சுஷீலாவுடன் டி.எம்.எஸ் பிண்ணி இருப்பார். உன்னிடம் இருக்கா ?

    பதிலளிநீக்கு
  26. ஷேக்குகிட்ட இருந்து தப்பிச்சு வர்றக்குள்ளே , ஷோக்கா கருத்துரையை குமிச்சிறிங்களே ஆர்.வி.எஸ் ...மோகன் ஜி,

    நமக்கு அர்த்த ராத்திரியில வலையில் சிக்கலில்லாமல் பாட்டுகேட்க முடியும் ,தட்டமுடியும்... அப்பாஜி செலக்ஷன்னாலே, பாட்டு முழுசா கேட்க வச்சுரும்... பாட்டுகளை கேட்டுட்டு வர்றேனுங்க

    பதிலளிநீக்கு
  27. ஜெயச்சந்திரன் பாடல்கள் எனக்கு பிடித்தவை

    - மந்தார மலரே மந்தார மலரே என்று எல்.ஆர். ஈஸ்வரியுடன்
    - அமுத தமிழில் எழுதும் கவிதை என்று வாணி ஜெயராமுடன்
    - சித்தர செவ்வானம் சிரிக்கக்கண்டேன்
    - மாஞ்சோலை கிளிதானோ, மான்தானோ வேப்பந்தோ
    - ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
    - பூந்தேன்றலே நல்ல நேரம் காலம் சேரும்
    - தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்

    மேலும் எம்.எஸ்.வியின் இசையில் மூன்று முடிச்சு மற்றும் அந்த ஏழு நாட்கள் பாடல்கள்.

    பதிலளிநீக்கு
  28. கேட்காத பாட்டாயிருக்கு.ஆனா நல்ல இதமாயிருக்கு.

    மோகன் அண்ணா அடுக்கிச் சொல்லிட்டார்.பிறகென்ன சொல்ல இருக்கு.அவர்களின் பழைய பாடல்கள்போல இன்னும் இல்லை !

    பதிலளிநீக்கு
  29. ஆர்பாட்டமே இல்லாமல் அருமையான பாடல்கள் பல பாடி உள்ளார். அவருக்கென்று ஒரு பதிவு, சந்தோஷமாக இருக்கிறது. எம்.ஜீ.ஆர், ஜெமினி, சிவகுமார், ஜெய்ஷங்கர், ஜெய்கணேஷ், விஜயகுமார், சரத் பாபு என்று அந்த கால நடிகர்கள் முதல், இந்த காலத்து வினித் வரை பாடி இருக்கிறார். சிவாஜிக்காக இவர் ஒரு பாடலாவது பாடி இருக்கிறாரா என்று தெரியவில்லை.

    கண்ணன் முகம் காண காத்திருந்தாள்
    என் மேல் விழுந்த மழை துளியே
    இசைக்கவோ நம் கல்யாண
    பூந்தென்றல் காற்றே வா
    இது போல இன்னும் பல நல்ல பாடல்கள் எவ்வளவோ இருக்கிறது.
    பதிவில் இவரை பற்றி பேச்சு வந்ததால், எனக்கு பிடித்த இவர் பாடல்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் ரசித்து கேட்டுக் கொண்டிருக்கிறேன்.
    'மௌனமல்ல மயக்கம்' பாடலுக்கு இசை அமைத்தவர் G.K. வெங்கடேஷ்.

    பதிலளிநீக்கு
  30. மந்தார மலரே... மறந்தே போச்சு சாய்.

    பதிலளிநீக்கு
  31. சாய்... சவுண்டுக்குராஜனைப் பத்தி ஸ்ரீ எடுத்துப் போட்டிருக்கிற விவரமெல்லாம் சுவை... டிஎம்எஸ் குரலை மட்டும் தான் தெரியுமே தவிர பாடகரைப் பத்தி எதுவுமே தெரியாம இருந்தேன்.

    பதிலளிநீக்கு
  32. சலீல் சௌத்ரி டைப்புல இருக்கே ஆனா நம்ம ஊர் மாதிரியும் இருக்கேனு நெனச்சேன்.. ஜி.கே. வெங்கடேஷா? நன்றி meenakshi.. (டக் டக்குனு பதில் எடுத்து வுடறீங்க... ஸ்கூல்ல எப்பவும் முதல் பெஞ்சோ?)

    பதிலளிநீக்கு
  33. வருக வருக ஹேமா.. இந்தப் பாட்டையெல்லாம் கேட்டதில்லையா? எல்லாம் புதுப் பாட்டுங்க..அதான்.. (வம்பாயிடுச்சே?? இருபதாம் நூற்றாண்டுனு ஸ்டாம்பு ஒட்டி போஸ்டு பண்ணிருவாங்க போலிருக்கே)

    பதிலளிநீக்கு
  34. அருமையான பாட்டு RVS. இப்பத்தான் கேட்கிறேன்.. காலத்தின் கோலமோ என்னவோ ஸ்ரீதேவி முகம் நல்லாத் தான் இருக்கு. டேன்சு கொடுமை.. ஆனா முக பாவமெல்லாம் டாப்.. கடைசி ஷாட்லே இந்த மடிசஞ்சிக்கு இத்தனை மோகமா என்று ஒரே சமயத்தில் ஆச்சரியம், சந்தோசம், வெட்கம், எதிர்ப்பார்ப்பு எல்லாவற்றையும் பட் பட் என்று காட்டுகிறாரே... தமிழ் சினிமாவின் கடைசி நடிகையோ? குதிகால் எழும்பும் அந்தக் காட்சியை மிகவும் ரசித்தேன்... மலையாளத்தில் அருமையாக காதல் பாட்டு படம் பிடிக்கிறார்கள்... மீச மாதவன் படப் பாட்டு நினைவுக்கு வந்தது.

    பதிலளிநீக்கு
  35. அரவிந்தசாமியா இவர்? சிறு வயதில் கொல்லம் (எங்கள் பாட்டி ஊர்) போயிருந்த பொழுது பக்கத்து வீட்டில் ஒரு மாமா.. ராஜா மாமா கதையை ஏற்கனவே எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். வயசுக்கு வந்து கொண்டிருக்கும் சிறு பையன்களிடம் நகாசு வேலை செய்வார். ஏனோ தெரியவில்லை அரவிந்தசாமியைப் பார்த்ததும் அவர் நினைவு வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  36. ``மெளனம் அல்ல மயக்கம் `` இப்படி அனுபவிச்சு இப்பொழுது தான் கேட்கிறேன்... ஜெயசந்திரன்....என்ன ஒரு காம்பினேசன் டி.எம்.எஸ், எஸ்.பி.பி ,ஜேசுதாஸ் இவர்களெல்லாம் ஒரே குரலில் ஒரே பாட்டில் பிசிறு தட்டாமால்.... பாட்டு காலத்திலும் கதை காலத்திலும் வாழ்ந்திருக்கோம்ங்கறத நமக்கு பெருமை..... இந்த பெருமை இப்ப இருக்கிற பதின்மர்களுக்கு கிடைக்குமா..... அவர்களும் பிற்காலத்தில் நரேஷ், கார்த்திக், ஹரிஷ் ..என்று லயிப்பார்களோ ..வாய்ப்பு குறைவாகத்தான் இருக்கிறது....

    பா.பா. கொ.த....அடைமொழி வைத்த ஆர்.வி.எஸ் அவர்களுக்கு தனிக்கச்சேரி ( அது பாராட்டு கச்சேரியாகவும் இருக்கலாம்)..அடைமொழின்னாலே வடிவேல் அலப்பறை தான் ஞாபகம் வருது.

    மோகன்ஜி....டி.எம்.எஸ்..கணிர் யாரும் மறுக்கமுடியாது..முருகனையே முன்னாடி கொண்டு வந்து நிறுத்தனவராச்சே. அவராகட்டும், சிவாஜியாகட்டும் ..இந்த மாதிரி சிங்கங்களை தயிர் சாதம் கொடுத்தே காயவேச்சுட்டோம்ங்கிறது தான் கசப்பான உண்மை.

    பதிலளிநீக்கு
  37. மீனாக்ஷி, உங்கள் லிஸ்ட்டில் உள்ள பூந்தென்றல் காற்றே வா பாடல் மலேஷியா வாசுதேவன் பாடியது இல்லையோ? பூந்தென்றலே என்ற புவனா ஒரு கேள்விக் குறி பாடலைச் சொல்கிறீர்களோ?

    அப்பாஜி, பொய்க்குரல் என்பதை எப்படி சொல்வது... இந்தப் பாடலும் இன்னும் சில பாடல்களும் பிடிக்கும் என்று சொன்ன போது சில பேர் இப்படிச் சொல்வார்கள். ஏ.எம் ராஜா எப்போதுமே பொய்க் குரல் என்று சொல்வோரும் உண்டு. என்னைப் பொறுத்தவரை, பாட்டு ரசிக்கும்படி இருக்கா ஓகே...

    ஆர் வி எஸ்...

    யூ ட்யூபில் கேக்காமல் நீங்கள் சொன்ன பாடலை MP3 யில்
    கேட்டேன். தமிழில் வேறு யாரோ பாடியிருக்கிறார்கள் போலும். மலையாளப் பாடலைக் கேட்கும்போது ஒரே யேசுதாஸ் வாசனை.
    அதிகாலை நிலவே அலங்கார சிலையே புது ராகம் நான் பாடவா .... இசைதேவன் இசையில் புதுப் பாடல் துவங்கு......." இளையராஜாவுக்காக மற்றும் ..." இது என்ன படம்? நான் கேட்காததாக இருக்கிறது. பாலைவன பாபா?

    பதிலளிநீக்கு
  38. ரசித்ததில் மகிழ்ச்சி பத்மநாபன். சில இரவு நேரங்களுக்குத் தமிழ் சினிமாப் பாடலின் போதை மட்டும் போதும்.

    //சிங்கங்களை தயிர் சாதம் கொடுத்தே காயவேச்சுட்டோம்
    அடேங்கப்பா! very profound!

    பதிலளிநீக்கு
  39. ஸ்ரீராம்.. ஏ.எம்.ராஜா பத்தி சொன்னதும் பொய்க்குரல் புரியுது.. i know what you mean.

    ரொம்ப நாள் கழித்து போன வாரம் அவரும் லீலாவும் பாடின 'கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே' கேட்டேன். அன்னிக்கு மட்டும் பத்து முறையாவது கேட்டிருப்பேன். நீங்க கேட்டிருக்கீங்களோ?

    பதிலளிநீக்கு
  40. 'பூந்தென்றல் காற்றே வா....' இது ஜெயச்சந்திரன் பாடினதுதான் ஸ்ரீராம்.
    கேளுங்க!
    http://www.youtube.com/watch?v=q01OX1cx3Tc&p=C65035704069C2E5&playnext=1&index=47

    பதிலளிநீக்கு
  41. கையும் கையும் கலந்திடவா....அந்தப் பாட்டு கேட்காம இருக்க முடியுமா... ஜாலியான பாட்டுதான்.

    மீனாக்ஷி..... பாட்டு ஞாபகம் வந்து விட்டது

    பதிலளிநீக்கு
  42. ஜெயச்சந்திரனின் "இசைக்கவோ நம் கல்யாண ராகம்.." another masterpiece...
    http://www.youtube.com/watch?v=AXnub2eMI8w

    பதிலளிநீக்கு
  43. ஸ்ரீராம் அதிகாலை நிலவே... படம் பெயர்: உறுதி மொழி. பிரபு நடிச்சதுன்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  44. துரை - ரொம்ப தேங்க்ஸ்.

    அவர் ஐயங்கார் என்று இதுவரை எனக்கு தெரியாது. பட்டைபட்டையாக தீருநீறு அணிந்து முருகன் மேல் பாடல்கள் பாடிய அவரை சைவர் என்றே நினைத்திருந்தேன்

    பல சுவையான தகவல்கள்.

    இங்கே மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் வேலை பார்க்கும் கணேஷ் குடுவாமூர்த்தி என்று அவர்கள் ஊர் (சௌராஷ்டிரா) மற்றும் மதுரை தமிழ்காரர் தான் டி.எம்.எஸ் வெப்சைட் நடத்துக்கின்றார். அவருக்கு அனுப்புகின்றேன்.

    பதிலளிநீக்கு
  45. //அப்பாதுரை கூறியது..
    சிறு வயதில் கொல்லம் (எங்கள் பாட்டி ஊர்) போயிருந்த பொழுது பக்கத்து வீட்டில் ஒரு மாமா.. ராஜா மாமா கதையை ஏற்கனவே எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். வயசுக்கு வந்து கொண்டிருக்கும் சிறு பையன்களிடம் நகாசு வேலை செய்வார். ஏனோ தெரியவில்லை அரவிந்தசாமியைப் பார்த்ததும் அவர் நினைவு வந்து விட்டது.//

    Oh Oh that is what you meant when you spoke about him is it ? Ada paavi manushaa

    பதிலளிநீக்கு