2013/03/04

அதே Same


    மிழ்ப் படப் பாடல்களுக்கு ஆங்கிலத்தில் சப் டைடில் எழுதும் வேலை கிடைத்தால் மகிழ்வேன். உலகத்துக் கவலையெல்லாம் போக்கும் வேலை. யுட்யூபில் பாருங்களேன்:
      garland that moves in air told me as a woman - காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மை என்றது.

இதற்காகத் தனியாகப் பயிற்சி தருகிறார்களா தெரியவில்லை.

எனக்கு இந்த வேலை வேண்டும். பயிற்சி இல்லாமலே என்னால் எழுத முடியும். என் திறமைக்கு எடுத்துக்காட்டாக:
      1
      moon becomes woman, wandering is it cute?
      water waves transpose, swimming is that flute?

      2
      keeping in hand if patient
      waiting on foot grateful dogs in nation..
      hence without kin without bond
      without memory of coming way
      boys also born in the house..
      mother oh mother
      trusting to be a brother..

      3
      born on lies bred on lies
      oh bard great deer
      you she knows truth she knows
      this flower dynasty deer

      4
      what is it rockmother palanquin turning
      my heart is shaking a beat

      5
      this same moon came that day
      that same moon came this day
      always there only moon
      for both eyes only moon
      aaah aaah
      for both eyes only moon

தமிழ்ப்பாடல் வரிகள் உங்களுக்கு உடனே புலப்பட்டால், எனக்கு இந்த வேலை நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை கூடும். புரியவில்லையெனில், பயிற்சி பெறவும் தயார். எப்படியாவது இந்த வேலை எனக்குக் கிடைத்தால் பரவாயில்லை.

தமிழிலிருந்து அங்கே என்றில்லை, அங்கிருந்தும் இந்தப் பக்கத்துக்கு சும்மா அடித்து விடுவேன்.
      நள்ளிரவுக்கு அது மூடி
      எதுவோ சைத்தான் இருட்டில் லருக்கியது.
      it was close to midnight
      something evil lurking in the dark

எல்லா மொழிமாற்றமும் இப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. இலக்கியம், ரசனை, புதைபொருள், மறைபொருள் என்று சிரமப் படுத்திவிடும். சமீபத்தில் முத்துச்சரம் பதிவில் வந்த ராபர்ட் ப்ராஸ்ட் கவிதையின் தமிழாக்கம் ஒரு உதாரணம். நித்திலம் பதிவில் அவ்வப்போது வரும் கலீல் ஜிப்ரன் மொழி பெயர்ப்புகளும் அப்படித்தான். இவர்களுக்கு என்னைப் போலவோ தமிழ்ப்பட சப் டைடில் எழுதுவோரைப் போலவோ திறமை இருப்பதாகச் சொல்ல முடியாது. உதாரணத்துக்கு, இந்தப் பாட்டு இப்போ தோன்றி இப்போ பெயர்த்தது:
      silk insect silk insect baby
      cut and dropped tied hair toupee
இத்தனை சுலபமாக ராமலட்சுமியாலோ பவளசங்கரியாலோ மொழிமாற்ற முடியுமா? சான்சே லேது (தெலுங்கிலும் உதறுவேன்).

என்ன நான் சொல்வது?

அபாரமான திறமையுள்ள எனக்கு எப்படியாவது இந்த மொழிமாற்ற சப் டைடில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும்.

sir, if you appoint now you will never disappoint sir என்று எனக்கு வந்த வேலை விண்ணப்ப வரிகளின் பொருள் இப்போது புரிகிறது. me telling same that also.



58 கருத்துகள்:

  1. வேடிக்கையாக நீங்கள் சொன்னாலும் , உண்மை அது தான் . தங்கள் திறமை யாருக்கும் வராது.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாமார்ச் 04, 2013

    சிரிச்சு மாளல. :))

    இந்த வேலையே கொடுக்கும் அதிகாரம் எனக்கிருந்தா, இந்தாங்க பிடியுங்க அப்படின்னு வேலைக்கான உத்தரவை இப்பவே கைல குடுத்துடுவேன்.
    சப் டைட்டிலோட தமிழ் பாடல்கள் எப்பவாவதுதான் வரும். ரொம்ப கொடுமைதான். இதை சில பாடல்களில் கிண்டலா எடுத்துண்டு சிரிக்க முடிஞ்சுது. ஆனா நிறைய அந்த கால அர்த்தமுள்ள பாட்டுன்னு வரும்போது, ஐயா சாமி, அந்த கொடுமையை தாங்க முடியாது. ஆனா இதை பாத்துட்டு, இங்க நண்பர்கள் குடும்பங்களோட சந்திக்கும் பொழுது, சில நேரம் இதை ஒரு விளையாட்டா, எல்லாருமே சேந்து, நிறைய முறை விளையாடி இருக்கோம். ரொம்ப ரொம்ப சுவாரசியமா இருந்துது.

    1. நிலவு ஒரு பெண்ணாகி, 2. கையில் வைத்து காத்திருந்தால், காலடியில் காத்திருக்கும், (அம்மம்மா தம்பி என்று நம்பி), 3. பொய்யிலே பிறந்து, பொய்யிலே வளர்ந்த, 4. அடி என்னடி ராக்கம்மா, 5. அன்று வந்ததும்.

    ரொம்ப சிரமம் இல்லாம கண்டு பிடிக்க முடிஞ்சுது. சுவாரசியமான பதிவு.

    பதிலளிநீக்கு
  3. 'லருக்கியது'... ! :)))

    விடைகளை மீனாக்ஷி முன்னமே பகர்ந்து விட்டார்! எனக்கு வேலையில்லை! அப்புறம் கடைசிப் பாட்டு எனக்காக மிச்சம் வச்சுருக்கார் போல...(பட்டுப் பூச்சி பட்டுப் பூச்சி பாப்பா...)

    'எ பி' யில் பாடல்கள் பகிர்ந்தபோது நானும் இதுபோன்ற சில வரிகள் பகிர்ந்துள்ளேன் என்பதை இங்கு சொல்லிக் கொள்ள ஆசைப் படுவதில் தவறு இருக்காது என்று நீங்கள் நினைப்பீர்கள் என்று நானும் நம்புகிறேன்!! குறிப்பாக 'மீண்டும் கோகிலா' பாடல் என்றும் நினைவு.

    பதிலளிநீக்கு
  4. சபாஷ்! 'What I told to you? Why are you Garing' என்று ‘நான் என்ன சொல்லிவிட்டேன், நீ ஏன் மயங்குகிறாய்?’ பலேபாண்டியா பாடலுக்கு சப்டைட்டில் பாத்தப்பவே இந்த மாதிரி வல்லுனர்களை நினைத்து அசந்து போனேன். இப்ப நீங்களும் அசத்திட்டேள் போங்கோ...!

    பதிலளிநீக்கு
  5. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    மீனாக்ஷி, நீங்கள் கேட்ட பாடல் இதோ:
    played in river
    slayed head in flag
    walked oh young breeze!
    appeared on growing podigai hill
    saw madurai move
    poured oh tamil forum!

    பதிலளிநீக்கு
  6. அசத்தல்.....

    யூவில் பல தமிழ்ப் பாடல்களுக்கு வரும் ஆங்கில சப் டைட்டில்கள் இப்படித்தான்!....

    சிரித்து ரசித்தேன்!

    பதிலளிநீக்கு


  7. // garland that moves in air told me as a woman - காற்றில் ஆடும் மாலை என்னைப் பெண்மை என்றது.//

    பறந்தோடும் மாலை ஒன்று என்னை பாவை என்றது.

    அல்லது

    காற்றிலே ஊசலாடும் மலரிதழ் ஒன்று
    கன்னி நானும் உனைப்போல் தான் என்றது.

    இந்த மொழி பெயர்ப்பு குறிப்பாக சினிமா படங்கள் டப்பிங் செய்யும்போது அந்த வசனத்தை இன்னொரு மொழியில் எழுதுவது
    சிரமமான இல்லை எப்படி கடினமான வேலை என்று எனக்குப் புரிந்தது சில வருடங்கள் முன்பு. என் தம்பி ஒருவன் ஒரு சீனியர்
    எக்சிக்யூடிவ் இன் எ பப்ளிக் செக்டாரில் இருந்தவன் அந்த வேலைக்கு வி.ஆர்.எஸ். கொடுத்துவிட்டு, இந்த ஃப்ரீ லான்ஸர் வேலைக்கு
    வந்துவிட்டான். ஒரு வார்த்தைக்கு பத்து பைசா வாம். ஒரு பட வசனத்தை மொழி பெயர்த்தால் கிட்டத்தட்ட ரூ 50 முதல் ரூ 100 ஆயிரம்
    கிடைக்கிறது. நீ முயன்று பாரேன் என்று ஒரு பக்கம் அனுப்பினான். நான் அம்பேல் ஆகிவிட்டேன். ஏன் எனின் இரண்டு காரணங்கள்.

    ஒன்று. நமது மொழிபெயர்ப்பு வார்த்தைகள் அந்த சீனில் வரும் பாத்திரங்கள் இயல்பாக பேசும் மொழியில் இருக்கவேண்டும்.
    இரண்டாவது : வார்த்தைகள் அவர்களது வாயசைப்புகளோடு ஒத்துப்போகவேண்டும்.

    இது வெறும் மொழிபெயர்ப்பாக தோன்றவில்லை. இது ஒரு தனி ஸ்கில்.

    1950ல் இந்தியில் ஒரு அகராதி வெளியிட்டார்கள். அதில் சிகரெட் என்பதற்கு:

    ஸ்வேத பத்ர பரிவேஷ்டித தூம்ர ஸலாகா என்று போடப்பட்டிருந்தது.
    வெள்ளைக் காகிதத்தால் சுற்றப்பட்ட புகை விடும் ஒரு குச்சி .

    இது பற்றி பேச இன்னும் நிறைய விஷயங்கள் இருந்தாலும்
    உங்களது மற்ற ரசிகர்களுக்கும் இடம் வேண்டும். அதனால்
    நான் ஸைலன்ட் ஆகிறேன்.
    இப்போதைக்கு.

    சுப்பு தாத்தா.
    பி. கு: அமெரிக்கா இன், யூ லிவிங் ப்ளேஸ், யூ கிவ் பாஸிபிள் ?

    பதிலளிநீக்கு
  8. இன்றைய நாள் இனிதாக தொடங்குகின்றது,

    பதிலளிநீக்கு
  9. அப்பாதுரை அவர்களே! தமிழிலிருந்து ஆங்கிலம் ஒரு வகை! ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு வந்த கதை இன்னும் விசித்திரம்! ஜெய்ல்சிங் பஜ்சாபில் கங்கிரஸ் கட்சிக்குள் இருந்து கொண்டு குடைச்சல்கொடுத்துக் கொண்டிருந்தார்! அவரை உல்துறை அமைச்சராக்கி மத்தியில்போட்டார் இந்திரா அம்மையார் ! அப்போதும் பஞ்ச்சாபில் அவருடைய விளையாட்டு நிற்கவில்லை! "Jail singh runs the state of Punjab through his Fiat" என்று ப்ரிண்டெரில் செய்திவந்தது ! பிரபல பத்திரிகையின் தலப்புச் செய்தி "ஜெய்ல் சிங் தன் ஃபியட் காரை ஓட்டுவது போல் பஞ்சாபை ஓட்டுகிறார்" என்று போட்டிருந்தது! 60-80 ஆண்டுகளின் தமிழ் பேப்பரைப்பார்த்தால் நம்மூர் பத்திரிகைகள் தமிழை வளர்த்த கதை தெரியும்!---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  10. மொழி வளர்க்கும் அருமையான காவியப்பகிர்வு ..

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லாமார்ச் 04, 2013

    நன்றி அப்பாதுரை!

    'லருக்கியது' அப்படின்னா??

    ஸ்ரீராம், விடைகளை நான் எழுதி இருக்க வேண்டாம்னு ரொம்ப லேட்டா நெனச்சேன். :)

    பதிலளிநீக்கு
  12. நல்ல கூத்து போங்க! நானும் டப்பிங் பட வசனங்களில் வியப்படைவது உண்டு.

    எல்லா மொழிமாற்றமும் இப்படிப்பட்ட சந்தோஷத்தைக் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. இலக்கியம், ரசனை, புதைபொருள், மறைபொருள் என்று சிரமப் படுத்திவிடும்//

    ரொம்ப சரி.

    பதிலளிநீக்கு
  13. ROFL.. hilarious! We used to play a different game in college. We used to translate hindi/tamil proverbs to english. For instance... "same pond fell log","now came the camel below the hill","what donkey knows camphor smell","ginger ate monkey","if morning forgotten evening came back then he not called forgotten"...
    Your job is way better.. loved it..

    பதிலளிநீக்கு
  14. தமிழ்ப் படப் பாடல்களை, நாங்கள் தெலுங்கில் மொழி பெயர்த்துப் பாடுவதுண்டு. போத்தே போசுந்தி போரா!போல .... உங்கள் பதிவை மிகவும் இரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  15. வி.வி.சி. அருமையான முழிபெயர்ப்பு. தமில் வால்க, வலர்க!

    பதிலளிநீக்கு
  16. ஆனால் நிச்சயமாக சிவகுமாரன் சொல்வதை முழுமனதோடு ஆமோதிக்கிறேன். உங்கள் திறமைக்கு இதெல்லாம் ஜுஜுபி! :)

    பதிலளிநீக்கு
  17. நானும் சின்ன வயசுல இதெல்லாம் செய்திருக்கேன்.
    ரசித்தேன்!

    பதிலளிநீக்கு
  18. நானும் அதையே தான் சொல்கிறேன் உங்கள் திறமைக்கு முன் இதெல்லாம்...?

    பதிலளிநீக்கு
  19. நல்லதொரு வேலை தான்...:)

    பதிலளிநீக்கு
  20. Sir, What sins we have committed? Is it a sin to read your blog regularly? Why this Kolaveri?

    பதிலளிநீக்கு
  21. அபாரமான திறமையுள்ள எனக்கு எப்படியாவது இந்த மொழிமாற்ற சப் டைடில் வேலை கிடைத்தால் நன்றாக இருக்கும்.//

    நீங்களே தன்னம்பிக்கையுடன் உங்கள் மொழிமாற்ற திறமையை சொன்னவுடன் வேலை நிச்சயம் கிடைக்கும். இந்த பாடல் மொழிமாற்றத்தை இரண்டு மாதிரிக்கு கொடுத்தால் போதும் வேலை நிச்சயம்.

    பதிலளிநீக்கு
  22. பாடல்களின் மொழிபெயர்ப்பைப் பார்த்தே உங்களுக்கு இப்படி ஆசை வருதா? சீனர்கள், ஜப்பானியர்கள் பேசும் ஆங்கிலத்தை -அதுவும் டெக்னிக்கல் ஆங்கிலத்தை, மீண்டும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறதா? :-)))

    பதிலளிநீக்கு
  23. பட்டுப் பூச்சு பட்டுப் பூச்சி பாப்பா..கேட்டு மகிழ்ந்தேன். குரல் கேட்டால் ஜெய்ஷங்கருக்கோ,ரவிச்சந்திரனுக்கோ இருந்திருக்கணும்.

    கட்டோட குழலாட ஆட...எப்படி ஆங்கிலத்தில் எழுதறது:)

    சுப்பு சாருக்கு நல்ல விஷய ஞானம்.

    மீனாக்ஷி உங்களை யாரும் அடிச்சுக்க முடியாது(பீட் பண்ண முடியாது:) )

    பதிலளிநீக்கு
  24. சப்-டைட்டில் வேலைக்கான உங்கள் பிரயத்தனங்கள் வாய்விட்டுச் சிரிக்க வைத்தன:))!

    பதிலளிநீக்கு
  25. தமிழ் பாடல்களை ஆங்கிலத்தில் பார்ததும் சிரிப்பு வந்தது.


    ஆனால் மொழி பெயர்ப்பு மிகவும் கஷ்டமான வேலை, சார். அதை செய்ய நீங்கள் ஆசைப்படுவது great.

    லருக்கியது??

    பதிலளிநீக்கு
  26. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  27. டப்பிங் வசனமோ மாற்றுமொழி சப்டைடிலோ எழுதுவது ஈடுபாடும் பொறுமையும் தேவைப்படும் வேலை. எளிதல்ல.

    இந்தப் பதிவுக்கு என் மும்பை நண்பன் எனக்கு காட்டிக் கொடுத்த business opportunity தான் பின்புலம்.
    மாதம் பத்தாயிரத்திலிருந்து லட்சம் வரை சம்பளம் கிடைக்க வழி செய்யும் டப்பிங், சப்டைடில் தொழிலைக் கிண்டல் செய்ய எண்ணவில்லை.

    இருந்தாலும் "..green parrot will come to concert tomorrow, go mother my go mother" என்ற சப் டைடில் பார்த்ததும் மனம் இருக்கிறதே மனம்.. பேயாட்டம் சிரித்தது. பதிவு போட நினைத்தது.

    பதிலளிநீக்கு
  28. // go mother my go mother//

    செல்லம்மாஆஆஆ... என் செல்லம்மாஆஆ..???!!!!!! :-(

    பதிலளிநீக்கு
  29. ஸ்ரீராம், மீனாக்ஷி, RAMVI...
    அதான் சொன்னேனே, அடித்து விடுவேன் என்று :-)
    சமீபப் பயணத்தில் பார்த்த ஸ்பைடர்மேன் படத்தில் (ஸ்பைடர்மேன் தமிழில்!) "intimidate" என்ற ஆங்கில வார்த்தை 'இந்த மேட்டரு" என்று வருகிறது. க்லோசப்பில் பொருத்தமாகவே இருக்கிறது, அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ.

    பதிலளிநீக்கு
  30. கருத்துக்கு நன்றி சூரி சார். informative.
    இனிமேல் சிகரெட்டை "ஸ்வேத பத்ர பரிவேஷ்டித தூம்ர ஸலாகா" என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்று அவசர சட்டம் கொண்டு வர வேண்டும். வந்தால்,
    இந்தியாவெங்கும் ஸ்வேத பத்ர பரிவேஷ்டித தூம்ர ஸலாகா பிடிக்கும் பழக்கம் குறைந்து ஒழிந்துவிடும் - தமிழ்நாட்டைத் தவிர. ("பாமரனின் எளிய உரிமையைக்கூட பகிரங்கமாக பறித்துக் கொண்ட பார்ப்பனரின் பம்மாத்து வேலைகளுக்கு அளவே இல்லையா?")

    பதிலளிநீக்கு
  31. ஹாஹா.. காஸ்யபன் சார். செயில் சிங்குக்கே FIAT விளங்கியிருக்குமா என்று சந்தேகம் தான். இன்னொரு செயில் சிங் குளறுபடியும் உண்டு, சட்டென்று நினைவுக்கு வர மறுக்கிறது.

    பதிலளிநீக்கு
  32. :) இராஜராஜேஸ்வரி. ஏதோ என்னாலான தமிழ்த்துண்டு.

    பதிலளிநீக்கு
  33. 'கழுதை-கற்பூரம்' தவிர மற்ற எதையும் கண்டுபிடிக்க முடியவில்லையே மாதங்கி?!

    பதிலளிநீக்கு
  34. கோவிக்காதீங்க மோகன் சார். மொழியறிவு பெருகுதில்லே? :-)

    பதிலளிநீக்கு
  35. ஜப்பானிய-சீனரின் ஆங்கில ஆங்கில மொழிபெயர்ப்பு - அடடா! நகைச்சுவைச் சுரங்கமாச்சே? பதிவுக்கு ஐடியா ஹூஸைனம்மா. நன்றி.
    (நேத்து ஒரு சீன அம்மணியோட பொதுவில வாய்ச்சண்டை போட்டு.. இன்னும் அவமானத்துல குமைஞ்சிட்டிருக்கேன். இந்தியர்களைக் கண்டா ஏன் இவங்களுக்கு இளப்பமா இருக்குதோ புரியமாட்டேங்குது)

    பதிலளிநீக்கு
  36. bundled flute dancing dancing, வல்லிசிம்ஹன்.

    பதிலளிநீக்கு
  37. இன்னொரு ஜெயில் சிங் துண்டு இதுவா?
    ராஷ்டிரபதி பவனுக்கு வந்தார் சிங்கின் நண்பர். 'என்ன விஷயம்?' என்று கேட்டார் சிங்.
    நண்பர், "ஒரு கர்டசி கால்."
    சிங் உடனே டெலிபோனைக் காட்டி, "ஓ அதற்கென்ன? ஒரு கால் என்ன? எவ்வளவு கால் வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்!" என்றார்.

    பதிலளிநீக்கு
  38. பண்ட்ல்ட் ஃப்ளூட் டான்சிங் டான்சிங்..ஓகே இதைத் தமிழ் செய்தால்ல்.........

    கட்டப்பட்ட புல்லாங்குழல்ல் ஆடுகிறது ஆடுகிறது.!

    பதிலளிநீக்கு
  39. You can do it little brother, little brother! Your inside you believe!! ….anything finishing heart inside you I saw!!!!

    பதிலளிநீக்கு
  40. தொலைக்காட்சியில் ஆங்கிலப் படங்களுக்கான தமிழ் வசனங்களை இவர்களுக்கான வார்த்தைகள், வசவுகள் என்று எழுதுபவர்களின் திறமை என்னை வியக்க வைக்கும். படங்கள் என்று மட்டுமில்லை, ஹிஸ்ட்ரி சேனலில் அந்த டிரக் டிரைவர்களுக்கான வசனங்கள், 'குபீர்' சிரிப்பை வரவழைக்கும் அழகு தான் என்னே!..

    உதடு அசைவுக்களுக்கான உச்சரிப்புகள் என்கிற வரையறைகளெல்லாம் கூட உண்டே என்றெல்லாம் சிரமப்படுத்திக் கொள்ளக்கூடாது..அட, அது பாட்டுக்க அது, இது பாட்டுக்க இது என்று உதடுகளும் உச்சரிப்புகளும் இருகோடுகளாய் ஒன்று சேராமல்...

    பதிலளிநீக்கு
  41. //கட்டப்பட்ட புல்லாங்குழல்ல் ஆடுகிறது ஆடுகிறது.!

    கட்டோட குழலாட ஆட...அதே Same :)

    பதிலளிநீக்கு
  42. இதை விட சிறப்பாக முழி,சாரி,மொழி பெயர்க்க முடியுமா என்ன?!

    பதிலளிநீக்கு
  43. நீங்கள் எல்லோரும் இப்படி சிரமப்பட வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் இப்போது கவிஞர்கள் பாதி பாடலை ஆங்கிலத்திலயே எழுதிடுறாங்க!

    ஆமாம்... லாலாக்கு டோல் டப்பிமா கண்ணே கங்கம்மா... பாட்டை எல்லாம் எப்பூடி?

    படித்து சிரித்தேன்... நன்றி!

    பதிலளிநீக்கு

  44. முப்பது நாற்பது ஆண்டுகளுக்குமுன்,திருமண வீடுகளில் வாத்தியக்காரர்கள்,நாதஸ்வரமாக இருந்தாலும்,பாண்டுவாத்தியமாக இருந்தாலும் ஒரு பாட்டை வாசிக்காமல் இருக்கமாட்டார்கள்.அதிலும் பெண்ணோ, மாப்பிள்ளையோ ஊர்வலமாக வரும் போது கண்டிப்பாக வாசிப்பார்கள்.அது

    "கல்யாண

    ஊர்வலம் வரும்

    உல்லாசமே தரும்---மகிழ்ந்து நான்

    ஆடிடுவேன்" என்ற பாடலாகும்.இது ஒரு திரைப் படப்பாடல்."அவன்" என்ற படத்தின் பாடல். இந்தியில் "ஆ: என்று வெளிவந்த படத்தின் "டப்பிங்" வடிவம்.ராஜ் கபூர், நர்கீஸ் நடித்தார்கள்.சங்கர்--ஜெய்கிஷன் இசை அமைத்தனர்.ஷைலேந்திரா என்ற உருதுக் கவிஞர் படலை எழுதினார்.அது:

    " ராஜா-கி-ஆவொகி பராத்

    ரங்கோலி-கிராத்---மகனு மை

    நசூங்கி" என்பதாகும்.இந்தப் படத்தின் அத்துணை பாடல்களும் பிரபலமானவை".ஜி.கிருஷ்ணவேணி" என்ற "ஜிக்கி" பாடியவை.அந்த்க்காலத்தில் இசைத்தட்டு விற்பனையில் முத்லிடம் பெற்றவை. தமிழ்ப் பாடலைக் கேட்ட ஷைலேந்திரா பாடலாசிரியரைப் பார்க்க தமிழ்நாடு வந்தார்."ஐயா! மூலத்தை நீங்கள் தமிழில் எழுதி அதனை உருதுமொழியில் நான் மொழிபெயர்தது போன்று அமைந்துள்ளது" என்று பாராட்டினாராம்.

    மனதில் கவித்துவமும் மடியில் தமிழும் இருந்தால் கவிதையை மொழிபெயர்ப்பது என்பது ஒரு அற்புதமான அனுபவமாகும்.

    அந்தப் பாடலாசிரியர் பெயர் "கண்ணதசன்"

    பதிலளிநீக்கு
  45. மிகவும் பிடித்த பாடல்.

    ஜிக்கியின் குரலில் இருக்கும் துள்ளல்
    ஒரு மணமான சூழ்நிலையை உருவாக்கிவிடும்.
    கண்ணதாசனுக்கு என்ன சொல்வது. ஜீனியஸ்.!

    பதிலளிநீக்கு
  46. In our school days we used to sing :
    Oru Kingu Queeniyidam Very Days Aaga Desire Kondan
    He Wanted Wanted Enran
    She Tomorrow Tomorrow Enral

    This song struck my mind when I read your blog for the second time.

    பதிலளிநீக்கு

  47. கூகிள் மொழி மாற்றம் பார்த்திருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். சிலரது பதிவுகளில் அந்த வசதி இருப்பதைப் பார்த்தேன். செம தமாஸ்.

    பதிலளிநீக்கு
  48. //மனதில் கவித்துவமும் மடியில் தமிழும் இருந்தால்..
    அழகாகச் சொன்னீர்கள்.

    மாற்று மொழி புரிதலும் அவசியம். எல்லாவற்றுக்கும் மேல் காட்சியின் பேச்சு/பாட்டு, நிலை, உணர்வு இவற்றையும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் நகைச்சுவை. சிவாஜி-டிஎம்எஸ் உயிரைக் கொடுத்து (வாங்கி?) பாடிய 'நீயும் நானுமா, கண்ணா' பாடல் நாசமான கதை தான்.
    'நடை பழகும் போது தென்றல் விடை சொல்லிக் கொண்டு போகும்', 'சுமைதாங்கி சாய்ந்தால் சுமை என்ன ஆகும்' போன்ற வரிகளை சுத்தமாக மாற்றி விட்டார்கள் (யுவில் கிடைக்கின்றன). of course, சிவாஜி முகம் துடிக்க ஓவர் ஏக்ட் செய்வதைப் பார்க்கையில் கொஞ்சம் நகைச்சுவை ரிலீபாக இருக்கிறது. go mother my go mother.

    'கல்யாண ஊர்வலம் வரும்' என் வீட்டில் அம்மா சித்தி குழாம் ஹம் செய்து கேட்டிருக்கிறேன். பின்புலம் சுவாரசியம். நன்றி.

    பதிலளிநீக்கு
  49. பொட்டில் அடித்தீர்கள் ஜிஎம்பி சார்.
    ஒரு frustrating ரகசியம். நான் மொழிமாற்ற நகைச்சுவையை ரசித்துக் கொண்டிருக்கையில், இங்கே ஒரு 22 வயதுப் பெண் கல்லூரியின் கடைசி வருட விடுமுறையில், கூகில் ட்ரேன்ஸ்லேட் உதவியை வைத்துக் கொண்டு முதல் மிலியன் டாலரை சம்பாதித்திருக்கிறார்.
    very simple concept. சாப்பாட்டு மேஜையில் கூடியிருக்கும் தாத்தா பாட்டி மாமா அண்ணா அண்ணி பேத்தி என்று ஒரு பெரிய குடும்பம் ஒன்றை, ஒவ்வொரு கலாசாரத்துக்கும் ஏற்றவாறு ஆடை அலங்காரங்களுடன் படம் பிடித்திருக்கிறார். பிறகு கூகில் உதவியுடன் அப்பா அம்மா cousin பாட்டி ரொட்டி அரிசி என சொற்களுக்கு கூகில் உதவியுடன் மாற்றுச் சொல், எழுத்துரு, உச்சரிப்பு எல்லாவற்றையும் சேர்த்து, பத்து பக்க குழந்தைகள் புத்தகமாக 'my child can speak english' (hindi, arabic, french, spanish, mandarin, gujarati, etc) என்று நாற்பது மொழிகளில் வெளியிட்டிருக்கிறார். ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழியும் தெரியாதாம் இவருக்கு! 'கூகிலை நம்பி இறங்கினேன்' என்கிறார். what a genius!

    பதிலளிநீக்கு
  50. அன்பான அப்பாஜி.அதேsame சுவையான இடுகை.நீங்கள் தமிழ்நாட்டில் வந்து தங்கினால் டப்பிங் மற்றும் சப்-டைட்டில் துறையில் காசு பார்க்கலாம். உண்மையாகவே உங்கள் மொழிமாற்றம் நன்கு வந்திருக்கிறது.நான் சினிமாவில் முதலில் வசனகர்த்தா திரு.ஆரூர்தாஸ் அவர்களிடம் உதவி வசனம் பணிதான் பார்த்தேன்.சுமார் 250 படங்களில் வசன உதவி என என் பெயர் வந்திருக்கிறது. அந்த 3 வருட அனுபவம் ஒரு தனி நூல் எழுதும் அளவுக்கு சுவாரஸ்யமானது.பூ ஒன்று புயலானது அவற்றுள் ஒன்று.அதன் தமிழ்ப் பெயர் நான் சூட்டியதுதான். சம்பளம் தவிர பெயர் வைத்ததற்கு தனியே 1000 ரூபாய் சன்மானம் கிடைத்தது.அதுவும் ராமோஜிராவ் கையால்.அந்தப் படத்தின் மூலம்தான் தெலுங்கில் விஜயசாந்தி சூப்பர் ஸ்டாரிணி ஆனது.இரண்டு ஆண்டுகள் வரை மொழிமாற்ற ஸ்கிரிப்ட் எழுதவென சென்னையின் ஸ்டார் ஹோட்டல்களிலும் டப்பிங் தியேட்டர்களிலும் மட்டுமே வசிக்க நேர்ந்தது புது அனுபவம்.அப்போது சிறு குரல்களுக்கு டப்பிங் கொடுத்தபடி, திரையில் நடிக்க முயற்சி செய்து கொண்டிருந்தவர் நண்பர் எம்.எஸ்.பாஸ்கர்.எங்களையும் வாழ விடுங்கள் என்ற விலங்குகள் திரைப்படத்தில் நண்பர் நாசருக்கு வில்லன் குரங்குக்கு குரல் வாய்ப்பு வாங்கிக் கொடுத்தேன்.உங்கள் இந்த இடுகை எவ்வளவு ஃப்ளாஷ் பேக்குகளை கிளப்பி விட்டு விட்டது பாருங்கள் அப்பாஜி!


    நேசமிகு
    எஸ்.ராஜகுமாரன்

    பதிலளிநீக்கு
  51. நீங்க பஸ்ட் கிளாஸ்ல பாஸ் ஆயிட்டீங்க சார்.

    பதிலளிநீக்கு
  52. நான் என் பதிவுகளை indiblogger- இல் இணைக்கும்போது ஒரு பெங்காலி blogger தவறாமல் ஓட்டுப் போடுவார். ரொம்பவும் ஆச்சர்யப் பட்டு அவரிடம் கேட்டேன். தமிழ் தெ/புரியுமா என்று. google translator இருக்கே என்றார். அன்று என் பதிவை translator-இல் போட்டுப் பார்த்தேன்... தாங்க முடியல!

    அதை வைத்து பணம் பண்ணிய அந்தப்பெண் வால்க!

    சின்ன வயதில் சினிமா பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்ததில்லை. ஆனால் 'Son who temple salt flour needle gone' மாதிரியான மொழி பெயர்ப்புகளைப் பண்ணி ஆங்கில ஆசிரியையிடம் திட்டு வாங்கியது உண்டு.


    நீண்ட நேரம் சிரிக்க வைத்தது 'green parrot will come to concert tomorrow' தான்.
    இந்த வரிகள் எங்கள் குடும்பத்தினரின் அமோக வரவேற்பை பெற்று விட்டது.

    பதிலளிநீக்கு
  53. youkkalil oruvan i iru eyegallil b
    bedham why?

    idhu yenna paattu kandu pidinga sir!

    பதிலளிநீக்கு
  54. கொலைவெறி மாதிரி இன்னொரு பாட்டு rajalakshmi? clue nahin.

    பதிலளிநீக்கு
  55. பிரமிக்க வைத்தீர்கள் ராஜகுமாரன்.
    (கொசுவத்திக்கு இத்தனை மவுசா?)

    பதிலளிநீக்கு
  56. உங்களில் ஒருவன் நான், இரு கண்களில் பேதம் ஏன் ? - திரைப்படம்: நூற்றுக்கு நூறு,

    பதிலளிநீக்கு