2013/03/20
பேசும் படம்
இரண்டு படங்களுக்கும் என்ன ஒற்றுமை? இரண்டுமே கைக்கடிகார விளம்பரங்கள். ரைட்.
இந்தியாவுக்கு அடுத்தபடி பெண்களை அதிகமாக மதிப்பது இத்தலியாக இருக்க வேண்டும்.
இதற்குத்தான் நான் கைக்கடிகாரமே அணிவதில்லை. கைக்கடிகாரத்தை காட்டுகிறேன் பேர்வழி என்று ஏதாவது செய்யப் போய்..
ஜான் கெரி வாய் திறந்தால் முத்து உதிரும். அன்றைக்கும். இன்றைக்குச் சற்று அதிகமாகவே உதிர்கிறது.
ஜான் கெரி தன் சொந்த உரிமையைப் பற்றிச் சொல்கிறார், நம்புங்கள். ஒபாமாவுடன் சேர்வதற்கு முன்பிருந்தே இப்படித்தான்.
என்னே அமெரிக்க நாட்டுக்கு வந்தச் சோதனை!
தான் பெறும் ஒவ்வொரு ஆண் மகவுக்கும் ஒரு தாயின் ஆயுள் 1-6 வருடங்கள் குறைகிறதாம்.
எனில், பெண் குழந்தைகளை நாம் ஏன் வெறுக்கிறோம்? பெரிய சூழ்ச்சியாக இருக்கும் போலிருக்கிறதே?
அதான் இந்தியாவில் பெண்களை ஒரேயடியாக மதித்துத் தள்ளுகிறோமோ?
குவைத்தின் ஒரு தீவில் (பெயர் மறந்து போனது, பலேக்கா?) பிடித்த படம்.
சிலையோ என்று நினைத்தேன். ஸ்மைல் ப்லீஸ் என்று சொல்ல வேண்டியிருக்கவில்லை. கட்டிப் போட்டிருக்கிறார்கள். வாயை.
ஒட்டகத்தின் கஷ்டம் ஒட்டகத்துக்கு மட்டுமே தெரியும்.
ஒரு ஒதுக்குப்புறமான அயல்நாட்டுத் தீவின் (அதே குவைத் அதே தீவு) சாலையில் இந்தக் கையெழுத்து.
சாலைத் தொழிலாளரின் தமிழ்ப்பற்றா இல்லை தமிழர் மீதான கடுப்பா? எதுவாக இருந்தாலும் ஒரு கணம் மனம் இனித்துப் போனது.
ஒருவேளை தொழிலாளரின் காதலி பெயராக இருக்ககூடும். கல்வெட்டுக் கவிதை, அப்படியெனில்.
குவைத்தில் மஞ்சுபாஷிணியைச் சந்தித்துப் பேசினேன். ஓகே, சந்தித்தேன். "என்ன அப்பாதுரை.. நான் பேசிட்டே இருக்கேன்.. நீங்க எதுவுமே பேசமாட்றீங்க? அடுத்த ட்ரிப்புல நீங்க தான் பேசணும், நான் கேட்டுகிட்டே இருப்பேன்..". அதான் மபா!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Enjoyed. We americans have a right to be stupid - This must be the height of stupidity.
பதிலளிநீக்குCamel looks good though it is tight lipped sorry tight mouthed.
Keep a watch on the watch.
The words Tamil in tamil language must have been written by a tamilpiriyan.
கதை இருக்கும் இங்கே என வந்தவனை
பதிலளிநீக்குஇரு கண்கள் இது கவிதை என
இழைகின்றன.
எனக்கு கடிகாரம் வேண்டாம்.
சுப்பு
எனக்கும் கடிகாரம் வேண்டாம்...
பதிலளிநீக்குஅனைத்தும் கலக்கல்...
மபா பேசவே விடவில்லையா...? புரிகிறது...
//குவைத்தில் மஞ்சுபாஷிணியைச் சந்தித்துப் பேசினேன். ஓகே, சந்தித்தேன். "என்ன அப்பாதுரை.. நான் பேசிட்டே இருக்கேன்.. நீங்க எதுவுமே பேசமாட்றீங்க? அடுத்த ட்ரிப்புல நீங்க தான் பேசணும், நான் கேட்டுகிட்டே இருப்பேன்..". அதான் மபா!//
பதிலளிநீக்கு;))))) மிகவும் மகிழ்ச்சியான தகவல்.
மஞ்சுவைவிட நீங்க இபானிடன் நிறைய பேசிக்கொண்டு இருந்தீர்கள் எனக் கேள்விப்பட்டேன்.
>>>>>
சிலையோ என்று நினைத்தேன். ஸ்மைல் ப்லீஸ் என்று சொல்ல வேண்டியிருக்கவில்லை. கட்டிப் போட்டிருக்கிறார்கள். வாயை.
பதிலளிநீக்கு//ஒட்டகத்தின் கஷ்டம் ஒட்டகத்துக்கு மட்டுமே தெரியும்.//
பெண்களின் மனஸு பெண்களுக்குத்தான் தெரியும் என்பார்கள்.
அதுபோல உள்ளது இதுவும். ;)))))
ஒட்டகம் சிரித்தாலும், சிரிக்காமல் சீரியஸ் ஆக இருந்தாலும், கொட்டாவி விட்டாலும் அதன் முகம் பார்க்க சகிக்காது.
இருப்பினும் நான் பலமுறை இதைப் பார்த்திருக்கிறேன்.
>>>>>
//இதற்குத்தான் நான் கைக்கடிகாரமே அணிவதில்லை. கைக்கடிகாரத்தை காட்டுகிறேன் பேர்வழி என்று ஏதாவது செய்யப் போய்..//
பதிலளிநீக்குGOOD T I M E L Y JOKE ! ;)))))
வாசனைக் கதம்பம்.
பதிலளிநீக்குஜான்கெர்ரி சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். அதுபோல் நம் இந்தியர்கள் மூட நம்பிக்கைகளில் உழல்வது எங்கள் உரிமை என்று சொல்வார்களா. ? தமிழ் என்ற வார்த்தையை வளைகுடா நாட்டில் பார்த்தபோது இனித்தது என்றால்.... சும்மா சொல்லக் கூடாது. என்னே உங்கள் தமிழ்ப் பற்று.....!”/அதான் இந்தியாவில் பெண்களை மதித்துத் (மிதித்துத்.?) தள்ளுகிறோமோ./....!?
பதிலளிநீக்கும.பா.... :))
பதிலளிநீக்குரசனையான கதம்பம்! அருமை! குவைத்துக்குப் போய் வந்த நீங்க, அங்க பாத்தவைகளைப் பத்தி பகிர்ந்துக்கலாமே...! ம.பா.வுடன் பேசி மகிழ, ஸாரி, பேச்சைக் கேட்டு மகிழ எனக்கும் கொள்ளை ஆவல்! அந்நாள் எந்நாளோ...?
பதிலளிநீக்குதுணுக்கு செய்திகளும் படங்களும் சுவாரசியம் தந்தது.
பதிலளிநீக்குஅப்பதுரை அவர்களே! கொஞ்சம்கூட பத்தாது!---கஸ்யபன்>
பதிலளிநீக்குகடைசி பாரா தவிர எனக்கு ஒன்றும் புரியவில்லை.கணினியில்படங்கள் தெரியவில்லை..Blank ஆக உள்ளது Bad luck.
பதிலளிநீக்குரசனையான கதம்பம்.
பதிலளிநீக்குஒட்டகம் பாவம் - ராஜஸ்தானில் இந்த ஒட்டகங்களைப் படுத்தும் பாடு! - ஒட்டக சவாரி என பல முறை அதை கீழே அமர வைத்து, அதன் மேல் மனிதர்களை ஏற்றி விட்டு மீண்டும் ஒட்டகத்தினை எழுப்பி இரண்டு ரவுண்ட் அடித்து மீண்டும் அடுத்த பயணியை அமர்த்த ஒட்டகத்தினை கீழே உட்கார வைப்பார்கள். நாள் முழுதும் இதே கதை - தொடர்கதை!
// கடைசி பாரா தவிர எனக்கு ஒன்றும் புரியவில்லை.கணினியில்படங்கள் தெரியவில்லை..Blank ஆக உள்ளது Bad luck.
பதிலளிநீக்கு3/20/2013 //
நல்ல வேளை தெரியல்ல.
நல்ல வேளை புரியல்ல.
சிவகுமாரன் அவர்களே !!
முதல் படம் நெசமாவே தெரியல்லயா..
அது பாஸிபிலி சென்சார் ப்ண்ணிட்டாங்க போல ...
பதிவு போட்ட அடுத்த பத்து நிமிசத்திலே கட் பண்ணிட்டாகளாம்....
யாரு சொன்னாகளா !
பட்சி சொல்லுதய்யா !!
எங்கனவா ?
பறந்து போச்சுய்யா ....
// அப்பதுரை அவர்களே! கொஞ்சம்கூட பத்தாது!---கஸ்யபன்> //
பத்தாதா !! இதுக்கு மேலே பத்தவச்சா உமக்கு தாங்காதய்யா....
தாங்காதய்யா....
சுப்பு தாத்தா.
.
.
.
எங்கும் தமிழ் !
பதிலளிநீக்குஒவ்வொரு புகைப்படக் குறிப்பும் ரசிக்க வைத்தது. அந்த ஒட்டக ஸ்மைல் வேதனை நகை என்றாலும், ஒட்டகத்தின் கஷ்டத்தை ஓர்ந்து உணர்ந்ததில் முந்தைய வேதனை மறைந்து நகை மிஞ்சியது.
பதிலளிநீக்குகாதலி பெயரைத் தமிழாக யொசித்தது, கவிதை!
குவைத் ஹைலைட் மஞ்சுபாஷினி:)
பதிலளிநீக்குஒட்டகம் சிரிக்காதே. பாவம் அதான் கட்டிவிட்டார்கள். !!
கெர்ரி மாதிரி ஏதாவது பேச ஆரம்பித்துவிட்டால்?
மணக்கும் கதம்பம்.
கடற்கரை மணலில் தமிழ்ச் சிற்பமா!!
சுவாரசியம்
பதிலளிநீக்குமஞ்சு பாஷிணி ஏன் பதிவுகள் எழுதுவதை நிறுத்திவிட்டார் என்று கேட்டீர்களா? அதைக்கூட கேட்க முடியாவில்லையா? சரி சரி நீங்கள் சந்தித்தீர்கள், அவர்தானே பேசினார்!!!! இது பற்றி ஒன்றும் சொல்லவில்லையா?
பதிலளிநீக்குநம்மூரில் தான் மிருங்கங்கள் கொடுமைக்கு ஆளாகின்றன என்றால் அங்குமா?
பேசும்படம் அருமை!
கவனம்: கருத்தும் நடையும் முதிர்ந்த வாசகருக்கானவை
பதிலளிநீக்குஇன்று தான் கவனித்தேன். ரசித் தேன்
பின்னூட்டங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குகூகிளார் கிட்டே எதையோ தேடப் போய் உங்களோட இந்தப் பதிவின் இந்த வாசகம் கண்ணையும், கருத்தையும் கவர்ந்தது! :) அப்போக் கருத்துச் சொல்லும்போது சரியாக் கவனிக்கலை போல! :))
பதிலளிநீக்கு// தான் பெறும் ஒவ்வொரு ஆண் மகவுக்கும் ஒரு தாயின் ஆயுள் 1-6 வருடங்கள் குறைகிறதாம். //
என் மாமியார் குறைந்தது பதினைந்து குழந்தைகளாவது பெற்றிருப்பார். அவர்களில் ஆண் குழந்தைகள் நிறைய இருக்கும். மாமியாரின் வயது இப்போது 90 க்கு மேல்.
என் சித்திக்கு நாலு ஆண் குழந்தைகள், நாலு பெண் குழந்தைகள். சித்தி அப்படி ஒண்ணும் சின்ன வயசில் சாகலை! :)
என் அம்மாவழிப் பாட்டிக்கும் ஆண் குழந்தைகள் நான்கு பேர் உண்டு. பாட்டி செத்தப்போ 78 வயசுக்கும் மேல்.
அப்பாவழிப் பாட்டி பெற்றதெல்லாம் ஆண் குழந்தைகளே! ஒரே ஒரு பெண் குழந்தை! ஆனால் பாட்டி சிறு வயசிலேயே போயிட்டார்! அதுக்கு எல்லாமும் ஆண்களாக இருந்தது ஒரு காரணமோ என இப்போது நினைக்கத் தோன்றுகிறது! :)
கீ.சா மேடம்... அப்பாத்துரை சார் சொல்வது சரிதான். உங்கள் மாமியார் 150 வயது வரை வாழணும்னு இருந்து, ஆண் மகவுகளைப் பெற்றதனால் குறைந்திருக்கிறதோ என்னவோ.. யாருக்குத் தெரியும்?
நீக்கு