2012/05/04

வருடல்


ண்ணைக்கட்டி உடலைச்சுடும்
உச்சி வெயில்
ஆதி அந்தம் தெரியாமல் வளரும்
அனாதைப் பாதை
ஓரப் புதர்த்தரையில் ஓடி மறையும்
அவசர நட்டுவாக்களி
தொடுவானில் விட்டுக் கரையும்
பசிப் பட்சி
தொலைதூரத் தனிமரத்தின் நிழல்கோட்டை நாடி
முக்கால் பயணம்.
கிழிந்த மேலாடை மூடிய மனதுள்
கிழியாத நினைவுகள்
எதிரே துள்ளியோடும் பதினாறுக்கு
எண்பதில் எத்தனை பதினாறு என்பது
கணிதம் தாண்டிப் புரியுமா?
எத்தனையோ கேள்விகள் குமிழியாய் எழும்ப
கேட்க மறுத்தது
ஒரு வாய் சோறு கொடுக்க முடியுமா தாயே?
அரிச்சுவடியை வரிசையாக நினைவில்..
அறுந்த நரம்பில் அபசுரமில்லாமல்..
காணாத காட்சிக்குக் கண்களை இடுக்கி..
ஒரு பஞ்சுக்கையின் அணைப்

23 கருத்துகள்:

  1. தென்றலாய், மயிலிறகாய் வருடியது உங்கள் கவிதை. ஆனாலும் கடைசி வரியில் ஒரு எழுத்துப்பிழை. சரி செய்து விடுங்கள் அப்பாதுரை சார். காற்று தடையில்லாமல் வரட்டும்.

    பதிலளிநீக்கு
  2. பாதியிலேயே பப்ளிஷ் ஆயிடிச்சா என்ன? 'ஒரு பஞ்சுகையின் அணைப்....என்று நின்று விட்டதே....!

    பதிலளிநீக்கு
  3. எண்பது வயது முதியவர் நொந்து, (அக்னி நட்சத்திர) மட்ட மத்தியான வெயில்ல, முடிவு தெரியாத மொட்டைப் பாதைல தூ..ரத்துல தெரியற மர நிழலை பெரிய விஷயமா மதிச்சி பசியோட நடக்கும்போது பட்சி தூரத்துல கத்தற சத்தத்தையும், நட்டுவாக்கிளி ஓடறதையும் பார்த்துகிட்டே முன்னால போற வாலிப வட்டம் மேல் லேசான பொறாமை கொள்ளும்போது நினைவுக்கு வரும் குளிர் நிழல் சோலையாக 'மனைவியின் கைகள்'...?!

    பதிலளிநீக்கு
  4. தொடுவானில் விட்டுக் கரையும்
    பசிப் பட்சி

    முடியாது தொடரும் கவிதை வரிகள்!

    பதிலளிநீக்கு
  5. ஒரு வாய்ச் சோறு கொடுக்க முடியுமா தாயேன்னு கேக்க முடியாமல் காணாத காட்சிக்கு கண்களை இடுக்கி, அந்த முதியவர் மயங்கி விழுந்துட்டதை கவிதையப் பாதியா நிக்க விட்டே உணர்த்தின உங்களுக்கு என் ராயல் சல்யூட் அப்பா ஸார்!

    பதிலளிநீக்கு
  6. கவிதையில் எழுத்துப்பிழை இல்லை.
    எனக்குத்தான் ஞானப்பிழை.

    பதிலளிநீக்கு
  7. பெயரில்லாமே 04, 2012

    இதமான வருடல்.
    //எத்தனையோ கேள்விகள் குமிழியாய் எழும்ப
    கேட்க மறுத்தது//
    மனதை தொட்ட வரி!
    இந்த 'அணைப்' பில் அடங்கிவிட்டது இந்த கவிதை. பிரமாதம்!

    பதிலளிநீக்கு
  8. I fail to understand abstract thinking or writing.Again I emphasize
    that writings should reach the reader clearly and the writer's feeling should be understood. உங்கள் எழுத்து ஓரளவு பரிச்சயம் உள்ளதால் இதமான வருடலை எதிர்நோக்கிக் கிடைக்காத தவிப்பை எழுத்தில் கொண்டு வந்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்.சரியா அப்பாதுரை சார்.?

    பதிலளிநீக்கு
  9. வலையின் முகப்பிலேயே “கவனம்” என்று கூறியதைக் கவனிக்காமல் கருத்து எழுதி விட்டேனோ.?

    பதிலளிநீக்கு
  10. தொடுவானில் விட்டுக் கரையும்
    பசிப் பட்சி
    மனதை தொட்ட வரி..

    பதிலளிநீக்கு
  11. வருடல் மனதுள் நிறைய நெருடல்களை உருவாக்குறது...

    //அந்த முதியவர் மயங்கி விழுந்துட்டதை கவிதையப் பாதியா நிக்க விட்டே//

    சபாஷ் கணேஷ்....

    பதிலளிநீக்கு
  12. //தொலைதூரத் தனிமரத்தின் நிழல்கோட்டை நாடி
    முக்கால் பயணம்.
    கிழிந்த மேலாடை மூடிய மனதுள்
    கிழியாத நினைவுகள்//

    அன்பின் அப்பாதுரை சார்,

    மனதை நெகிழச் செய்த வரிகள்.....
    நல்லாயிருக்கு சார்....

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  13. பத்மநாபனுக்குப் பாராட்டத் தெரிந்திருக்கிறது.
    அவரோடு சேர்ந்து என்னுடைய சபாஷும் உங்களுக்கு அனுப்பிவைக்கிறேன் கணேஷ்.
    நன்றி பத்மநாபன்.

    பதிலளிநீக்கு
  14. இந்தக் கவிதை(?)யின் 'வருடல்', மரணவருடல். மூப்பின் தள்ளாமையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைதியோடு மரணம் என்கிற நிழல்கோட்டைத் தேடிப்போகும் ஒரு பண்பட்ட முதிய உள்ளத்தை, மரணம் என்கிற பஞ்சுக்கை திடீரென்றுத் தொடுவதே கவிதையின் சாரம். வெயில் பாதை மரம் நட்டுவாக்களி பட்சி சோறு பதினாறு எல்லாமே metaphors. அவரவர் கற்பனைக்கே விடுகிறேன். (ஸ்ரீராம், கணேஷின் விளக்கங்களும் பொருந்தும்)

    நூறை நெருங்கும் என் பாட்டியின் தற்போதைய அசல் பயணம் இதுதான் என்று நினைக்கிறேன். சமீபத்தில் மோகன்ஜியுடன் பேசியபோது அவர் சொன்ன விவரங்களிலிருந்து அவர் அம்மாவின் கடைசி நேர உதட்டுத் துடிப்பும் இதுவே என்று புரிந்துகொண்டேன். ஒரு சென்னைப் பயணத்தில் பரிசாகக் கிடைத்த (ஸ்ரீராமின் அப்பா எழுதிய) கவிதைப் புத்தகத்தில் புதைந்திருக்கும் நூலிழை ஏக்கங்களும் இதைப் பற்றித்தான்.

    கொடிய தள்ளாமையிலும் அடுத்தவரை புண்படுத்தாமல், வாழ்க்கையைக் குறைசொல்லி அல்பமாக நடக்காமல், முதுமையை gracefulஆக ஏற்று, வறுத்தும் ஆயாசத்திலும் நினைவுகளை மெல்லிய நன்றி உற்சாகத்தோடு அசைபோடும் அத்தனை பண்பட்ட உள்ளங்களுக்கும் இந்தக் கவிதை காணிக்கை. மோகன்ஜிக்குச் சிறப்புக் காணிக்கை.

    பின்னூட்டங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  15. ”எண்பதில் எத்தனை பதினாறு....”வருடலின் கணக்குச் சரியாக இருந்தாலும் நினைவுக்கணக்கை மனம் சசிபோட்ய்ம் முடியாத கணக்கோடு.
    அற்புதமான வார்த்தைக் கோர்வைகள் அப்பாஜி !

    பதிலளிநீக்கு
  16. //கொடிய தள்ளாமையிலும் அடுத்தவரை புண்படுத்தாமல், வாழ்க்கையைக் குறைசொல்லி அல்பமாக நடக்காமல், முதுமையை gracefulஆக ஏற்று, வறுத்தும் ஆயாசத்திலும் நினைவுகளை மெல்லிய நன்றி உற்சாகத்தோடு அசைபோடும் அத்தனை பண்பட்ட உள்ளங்களுக்கும் இந்தக் கவிதை காணிக்கை. //

    The Great!

    'வறுத்தும்' மட்டும் 'வருத்தும்'..

    //இந்தக் கவிதை(?).... //

    அதிலென்ன சந்தேகம்?..

    ஒரு புறநானூற்றுப் பாடலை
    நம் நடைமுறைத் தமிழில் எழுதியதே
    போலல்லவா இருக்கிறது!
    'பாலை' என்று தலைப்பிட்டிருந்தால் அந்தப் பொருத்தம் இன்னும் கூடியிருக்கும்!

    //(ஸ்ரீராமின் அப்பா எழுதிய)//

    சென்னை வந்ததும் முதல் வேலையாக ஸ்ரீராமிடம் அந்தப் புத்தகத்தை வாங்கி வாசிக்க வேண்டும்..

    பதிலளிநீக்கு
  17. மீண்டும் மீண்டும் படிக்கிறேன்.காட்சிகள் விரிகின்றன. திருவருட்செல்வர் படத்தில் அப்பர் சிவாஜி உருவம் மனதுள் வருகின்றது.
    இறுதி வரி சுஜாதா டச்.
    அருமை அருமை அருமை
    மீண்டும் படிக்க ஆரம்பித்து விட்டேன். இன்னும் எத்தனை முறை படிப்பேன் தெரியாது.

    பதிலளிநீக்கு
  18. மேலே கவிதையையும் கீழே பலரின் புரிதல்களையும் படித்து எனக்குப் புரிந்தது மற்றவர்களுக்கும் புரிந்ததா என்று புரிந்துகொண்டேன்.

    சார்! மூன்றாம் சுழியில் இப்போது கவிதைக் காலமா? :-)

    பதிலளிநீக்கு
  19. கடைசி வரியைப் படிக்கையிலேயே விஷயம் புரிந்தாலும், பின்னூட்ட விளக்கங்கள் இன்னும் புரிய வைத்தன. நன்றி.

    பதிலளிநீக்கு
  20. சிறுகதை முதல் சுழி. கட்டுரை இரண்டாம் சுழி. கவிதை மூன்றாம் சுழி. கஷ்டப்பட்டுப் புரிந்த போது இவ்வளவு அழகா கவிதை என்று வியந்தேன். மரமண்டை.. மரமண்டை...

    அசத்துங்க..சகலகலா வல்லவா

    பதிலளிநீக்கு
  21. தனியாக வனாந்திரத்தில் பயணிப்பது போன்றிருந்தது தொடக்க காட்சிகள். கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது. பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  22. //எதிரே துள்ளியோடும் பதினாறுக்கு
    எண்பதில் எத்தனை பதினாறு என்பது
    கணிதம் தாண்டிப் புரியுமா?//

    என்னை உலுக்கிய வரி.

    ஒவ்வொரு பதினாறும் எண்பதுக்குள் அடக்கம். ஆனால் ஒன்றும் ஒன்றோடு பொருந்தாது.விலகவும் விலகாது.

    கடக்கும் தொலைவு வெகு தூரம் எனப் புரிந்தும் எந்தச் சுயபச்சாதாபமும் காட்டாது தனக்குள்ளே சுமக்கும் அந்தச் சுமை முதிர்ந்த முதுமைக்கே சாத்தியம்.

    ஜீவி சார் சொன்னது போல இது ஒரு புறநானூற்றுப் பாலைதான் அப்பாஜி.

    அற்புதம் அப்பாஜி.

    பதிலளிநீக்கு