2012/04/26

நீங்கள்



நிலவு வேளையில் நீங்களும் வராதீர்கள்
என்று எத்தனை முறை வேண்டுவது?
அன்புடையீர், ஒரு நேரத்தில் ஒரு அவலட்சணம் போதும்.

வீடு வேலை படிப்பு பிள்ளை சமையல் சுத்தம் மளிகை கோவில் வயலின் ட்யூசன்
எத்தனை வேலை எத்தனை சுற்றல் என்று எப்போதும் புலம்பல்.
எடை மட்டும் எண்பது கிலோ.

நேற்றைய பஸ் பயணப்
பின்னிருக்கைப் பிள்ளையின் ஓலம்.
உங்கள் நச்சரிப்பு.

விழியைக் கண்டு வாள்
மொழியைக் கண்டு மது. உங்கள்
மனதைக் கண்டு விஷம்.

பொன்னுக்கும் பணத்துக்கும் உடைக்கும் ஊர்சுற்றலுக்கும் போடும்
திட்டமும் அக்கறையும்
கிட்டவரக் குறையும்.

மாயப்பேயிடமிருந்து காப்பாற்று மகேசா
என்று போனால்
அங்கேயும் மாயப்பேய்.

ல்லா இடங்களிலும் தான் இருக்க முடியாது என்பதால்
உங்களைப் படைத்தானாம் இறைவன்.
நாத்திகத்தின் வித்து நீங்களே.

வ்வொரு அறிவினமாய் உலகில் விழச் சொன்னானாம் இறைவன்.
ஒன்று என்றதும் புழுக்கள் விழுந்தன
ஐந்து என்றதும் நீங்கள்.

வெளியுலகப் பயண வாகனத்தைக் கொஞ்சம்
வேகமாகக் கொண்டுவா ப்ரேன்சன்.
மூணேகால் பிலியன் பயணிகளுக்கு நாங்கள் உத்தரவாதம்.





18 கருத்துகள்:

  1. பெயரில்லாஏப்ரல் 26, 2012

    பிரமாதம்!
    //வெளியுலகப் பயண வாகனத்தைக் கொஞ்சம்
    வேகமாகக் கொண்டுவா ப்ரேன்சன்.
    மூணேகால் பிலியன் பயணிகளுக்கு நாங்கள் உத்தரவாதம்.//
    கலக்கல்! மாயபேய் அங்க வராதோ! :)

    தலைப்பு அட்டகாசம்!

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லாஏப்ரல் 26, 2012

    நான் பின்னூட்டம் எழுதும் போது தலைப்பு 'ண்கள்' அப்படின்னு இருந்துது. அது ரொம்ப பிடிச்சது.

    பதிலளிநீக்கு
  3. நான் இரசித்தது... (எனக்குப் புரிந்தது)

    //உங்கள் விழியைக் கண்டு வாள்
    மொழியைக் கண்டு மது
    மனதைக் கண்டு விஷம்.//

    :-)

    பதிலளிநீக்கு
  4. //
    எல்லா இடங்களிலும் தான் இருக்க முடியாது என்பதால்
    உங்களைப் படைத்தானாம் இறைவன்.
    நாத்திகத்தின் வித்து நீங்களே.

    ஒவ்வொரு அறிவினமாய் உலகில் விழச் சொன்னானாம் இறைவன்.
    ஒன்று என்றதும் புழுக்கள் விழுந்தன
    ஐந்து என்றதும் நீங்கள்.//

    மனதை ஏதோ செய்கிறது உங்கள் கவிதை. அதற்கு மேல் என்ன
    சொல்வதென்று தெரியவில்லை. வாழ்த்துக்கள் அப்பாதுரை சார்.

    பதிலளிநீக்கு
  5. சாடல் பாடல் என்று குத்து மதிப்பாக புரிகிறது.. ஒன்றை மட்டுமா பலவற்றையுமா என்பது படிக்க படிக்க பிடிபடுகிறதா என்று பார்க்கிறேன்....

    பதிலளிநீக்கு
  6. 4, 5, 6, 7 ஆகியவை அசரடித்தன. ரொம்பவே நல்லா இருக்குங்க!

    பதிலளிநீக்கு
  7. சிலருக்கு சில வரிகள் புரிந்திருக்கின்றது என்பது எனக்கு ஆச்சரியம். எனக்கு எளக்கியமே புரியாது!

    பதிலளிநீக்கு
  8. யாருக்காக எதைச் சொல்லுகிறோமோ, அது அவர்களைச் சென்றடைதல் என்பது படைப்பில் முக்கியம் என்று நான் எண்ணுகிறேன்.நீங்கள்.?

    பதிலளிநீக்கு
  9. அவர்களைப் பற்றி நான் கூறத் தயங்கினது எல்லாம் புட்டுப்புட்டு.... விழுந்த ஐந்தறிவு இனம்... ரொம்பவே தில் சார் உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  10. //உங்கள் விழியைக் கண்டு வாள்
    மொழியைக் கண்டு மது
    மனதைக் கண்டு விஷம். //

    தனித்தனியாக என்றிருக்கும் நிலை மாறி ஒன்றில் ஒன்று கலந்து கடைசியாகக் கலந்ததில் விஷமாகிப் போனது போலும்.


    //ஐந்து என்றதும் நீங்கள்.//

    ஆறு புலப்படுகிற வரை ஐந்திற்கே முக்கியத்துவம். அதுசரி, அது என்ன நீங்கள்?.. நாம் அல்லவோ?

    பதிலளிநீக்கு
  11. மாயப்பேயிடமிருந்து காப்பாற்று மகேசா
    என்று போனால்
    அங்கே மாயப்பேய் மாநாடு.!!!!

    பதிலளிநீக்கு
  12. பின்னூட்டங்களுக்கு நன்றி.
    kg gouthaman :-)
    நல்ல கேள்வி ஜிஎம்பி சார். செய்தி என்று ஒரு இருந்தால் சென்றடைதல் முக்கியம் எனலாம். சென்றடைந்ததா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள வழியில்லாததால், சென்றடைவதை விட சொல்வது முக்கியம் எனலாம். பல நேரம் சொல்லப்பட்டதும் சென்றடைந்ததும் வெவ்வேறு செய்தியாக அமைகிறது என்பது என் அனுபவம்.

    பதிலளிநீக்கு
  13. ஹேஹிஹா.. மாய்ப்பேய்களை அனுப்பிட்டு குஷாலா இருக்கலாமா? ஐடியா நல்லா இருக்குங்க. புள்ளி விவரக் கவிதை பலே.

    பதிலளிநீக்கு
  14. //செய்தி என்று ஒரு இருந்தால் சென்றடைதல் முக்கியம் எனலாம். சென்றடைந்ததா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள வழியில்லாததால், சென்றடைவதை விட சொல்வது முக்கியம் எனலாம். பல நேரம் சொல்லப்பட்டதும் சென்றடைந்ததும் வெவ்வேறு செய்தியாக அமைகிறது என்பது என் அனுபவம்.//

    நீங்க கமல் ரசிகரா? அவரை மாதிரியே பேசுறீங்க ??

    பதிலளிநீக்கு
  15. பெயரில்லாஏப்ரல் 29, 2012

    ///செய்தி என்று ஒரு இருந்தால் சென்றடைதல் முக்கியம் எனலாம். சென்றடைந்ததா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள வழியில்லாததால், சென்றடைவதை விட சொல்வது முக்கியம் எனலாம். பல நேரம் சொல்லப்பட்டதும் சென்றடைந்ததும் வெவ்வேறு செய்தியாக அமைகிறது என்பது என் அனுபவம்.//

    beautiful அப்பாதுரை! இந்த பதிவிற்கான என் பின்னூட்டமும், ராமசுப்ரமணியன் அவர்கள் பின்னூட்டமுமே இதற்கு ஒரு சிறு உதாரணம். :)
    நன்றி ராமசுப்ரமணியன்! நலம்தானே! :)

    பதிலளிநீக்கு
  16. நலம் தாங்க மீனாக்ஷி. நீங்க நல்ல இருக்கீங்களா?

    பதிலளிநீக்கு
  17. முதலில் கவிதைகளைப் படிக்கவில்லை. அதன் வடிவத்தை ரசித்தேன். ஒரு தேர் மாதிரி இருந்தது. ஆம் கவிதைத்தேர். வடம் பிடித்தால் --- அட ஊர்வலம் அல்ல "பார்வலம்" வருகிறதே.
    அருமை அப்பாஜி.
    அது சரி .. ப்ரேன்சன்- என்ன, யார், எது?
    ( நான் கொஞ்சம் மக்கு)

    பதிலளிநீக்கு
  18. சிவகுமாரன், என்னைவிடவா நீங்க மக்கு? ஒண்ணுமே புரியல உலகத்திலே. ::))))))

    பதிலளிநீக்கு