2012/02/01
விட்டேனா பார்
போன பதிவுக்காகக் கிண்டியதில் மிஞ்சியதுடன் அவசரமாக ஒரு பதிவு போட விரும்பினேன். அவசியத்தைக் கடைசியில் சொல்கிறேன்.
2008ல் "புஷ்"ஷை எதிர்த்து ஒரு கல்லை நிற்க வைத்தால் கூட வெற்றி பெறும் என்றது டெமோக்ரேட் கட்சி. ஒருவேளை அதைத்தான் செய்தார்களோ என்ற சந்தேகம் எனக்குள் நான்கு வருடங்களாகவே இருந்தாலும், இப்போது ஒபாமாவை எதிர்த்துக் களிமண்ணை நிற்க வைத்தாலும் வெற்றி பெறும் என்கிறது ரிபப்லிகன் கட்சி. கல்லை எதிர்த்துக் களிமண்ணா? பலே! கண்மூடி மக்களுக்கு கல்லும் ஒன்றுதான், களிமண்ணும் ஒன்றுதான்.
வரும் நவம்பரில் ஒபாமாவை எதிர்த்துப் போட்டியிட ரிபப்லிகன் கட்சி வேட்பாளர் தேர்தல் சூடுபிடிக்கிறது. மிட் ராம்னி, ஹெர்மன் கெய்ன், நூட் கிங்ரிச், ரிக் சேந்டோரம், ரான் பால் என்ற ஐவரில் (அறுவரான மிசல் பாக்மன் பாவம்) யார் வேட்பாளர் என்ற உள்கட்சித் தேர்தல். தொடக்கத்திலிருந்தே 'மிட் பணக்காரன்' என்றார்கள். அவருடைய மோர்மன் மதச் சார்பைப் பற்றி அதிகம் சொல்லத் துணிச்சல் வரவில்லை. அதனால் 'சுயமாகக் கோடிக்கணக்கில் சம்பாதித்த பணக்காரன்.. போதாக்குறைக்கு பரம்பரைப் பணம் வேறே.. ஏழை படும் பாடு அறியாதவன்' என்று திட்டத் தொடங்கினார்கள். பதிலுக்கு 'பெண் பித்தன்' 'ஊழல் பேர்வழி' 'மக்கள் பணத்தை அபகரித்தவன்' என்று கெய்னையும் நூட்டையும் மிட் திட்டித் தீர்த்தார். ரிக்கும் ரானும் நொடிந்து விட்டார்கள். இப்போது மிட்டுக்கும் நூட்டுக்கும் குடுமிப் பிடி. ஊழலும் கபடமும் நூட்டைத் தொடர்ந்து நிழலாக வருகிறது. மிட்டைத் தொடர்ந்து அவருடையப் பணம் வருகிறது. 'ஊழல்' 'ஏமாற்று' 'மக்கள் பணம்' 'பெண் பித்தன்' 'கோபக்காரன்' 'ஒத்துழைக்கத் தெரியாதவன்' என்று பலவாறு திட்டுகிறார் மிட். 'பணக்காரன்' 'பணக்காரன்' 'பணக்காரன்' அப்புறம்.. 'பணக்காரன்' என்று திட்டுகிறார் நூட். நூட்டுக்கு ஜூட்.
இதில் ஒபாமாவுக்குத் தான் குஷி. எம்ஜிஆர் போல் (காமராஜ்?) படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்று சொல்லி வழக்கம் போல் தூங்கப் போகலாம். உளுத்தப்பை ராஜ்ஜியத்தில் உதவாக்கரை ராஜா.
"ம்ம்ம்" என்ற ரஸூல் சிரித்தான். "இவனால் நம் காதல் பிழைத்தது. ஒருவேளை பீஜாபூர் சுல்தானுக்கு இவனைப் பிடித்துப் போய் இவன் மூலமாக நமக்கு ஒரு வழியும் பிறக்கலாம்.. யாருக்குத் தெரியும் ஸ்வர்ணா? இந்தப் பிள்ளையின் தலையில் என்ன கவிதை எழுதியிருக்கிறானோ இறைவன்?" என்றான். அதீதத்தில் புதுவம்சமும் பூச்சாண்டிப் படமும்.
போன வாரம் வெள்ளிக்கிழமை மாலை திடீரென்று கூகுல் குண்டு வெடித்தது. பிலாக்கில் மூன்றாம் சுழியும் நசிகேத வெண்பாவும் காணவில்லை! சூடாமுடியும் லிப்போவும் இன்னொரு சோதனை பிலாகும் இருக்கிறது, இந்த இரண்டையும் காணோம். வெண்பா பதிவை வெளியிடலாமென்று பார்த்தால் ஆட்டம் குளோஸ் என்றது பிலாகர்! 'ஐயையோ!' என்று அரண்டுபோய் பிலாகர் உதவியை நாடினேன்.
நாலு நாள் இமெயில் போராட்டம் முடிந்து கடைசியில் என்னுடன் தொலைபேச இணங்கிய கூகுல்பெண் சாதாரணமாக, "மூன்றாம் சுழி, நசிகேத வெண்பா இரண்டும் உங்களது இல்லை" என்றாள்.
"அடியே..அடியே! நியாயாயாயாயமா நீ சொல்லுறது?" என்றேன். "ரொம்ப வருஷமா எழுதிக்கிட்டு வரேன். அதும் நசிகேதன் கதை இருக்குதே.. ரொம்பக் கஷ்டப்பட்டு எழுதுறேண்டி.. என்னுது இல்லைனு அலட்சியமா சொல்லுறியே.. நல்லாருப்பியா?" என்றேன்.
"எங்க சிஸ்டத்துல இருக்குறதைத்தான் சொல்லுறேன்" என்றாள்.
"அத்தான் பொத்தானு என்னென்னவோ சொல்றியேடி என் தங்கம்.. ஐயையோ.. அது சிஸ்டமில்லேடி, கஸ்டம்! என்னோட பிலாக் ப்ரோபைலில் தெரியுது. ஆனா டேஷ்போர்டில் கோவிந்தான்னுதே? சரியாப் பாரும்மா ஒரு அப்பனுக்குப் பொறந்த கொழந்தே" என்றேன். ஏதோ சொல்லிக் காணாமல் போனாள் கொழந்தே.
கடைசியில் வேறே ஒரு சூபர்வைசர் வந்தார். நம்ம ஊர்க்காரர். 'ஆகா!' என்று அவரிடம் புலம்பினேன். நம்ம ஊர்க்காரராச்சே, வார்த்தைக்கு வார்த்தை இங்கிலிபிசு. 'ஹேக்' என்றார், 'பேக்' என்றார், என்னென்னவோ சொன்னார். கடைசியில் சிக்கலைத் தீர்த்து வைத்தார் சிகாமணி.
அடுத்த முறை கூகுல் 'privacy' 'security' என்ற பெயரில் உபரி அடையாளம் சேர்க்கச் சொன்னால் சோம்பல் படாமல் மறு கேள்வி கேட்காமல் சேர்க்கப் போகிறேன்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
நவரசம் ததும்பிய பதிவு சார், அமர்க்களம்.
பதிலளிநீக்கு//2008ல் புஷ்ஷை எதிர்த்து..//
பதிலளிநீக்கு2008ல் புஷ் பண்ணிய கூத்தினால் மெக்கெயினை எதிர்த்து.. என்று இருக்க வேண்டுமோ?
good catch bandhu. திருத்தி விட்டேன். சொல்ல நினைத்தது ரிபப்லிகன் கட்சி.
பதிலளிநீக்குவிட்டேனா பார்ன்னு பிடிச்சிடீங்களா! சூப்பர்!
பதிலளிநீக்குpregnancy test படம் அட்டகாசம்.
'பாரப்பா பழனியப்பா' பாடல் காட்சியை இப்பதான் சமீபத்துல அமுதகானம் நிகழ்ச்சியில் பாத்தேன். அஷ்டகோணல்தான் இந்த பாட்டுல எம்.ஜி.ஆர். வாயசைப்பு. எனகென்னவோ இந்த பாட்டை கேக்கும்போதெல்லாம் 'மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' பாடல்தான் கூடவே நினைவுக்கு வரும். ஏன்னா இந்த பாட்டுல 'கெட்டு போன புள்ளிகளா, வாழ பட்டணத்தில் வந்தீகளா' அப்படின்னு எழுதிட்டு, 'பாரப்பா பழனியப்பா' பாட்டுல 'சேத்த பணம் செலவழிஞ்ச நாட்டு பக்கம் ஒதுங்குதப்பா' அப்படின்னு எழுதி இருக்கார். கண்ணதாசனுக்கு ரெண்டு பாட்டுலேயும் பட்டணத்தை பத்தி எப்படிப்பட்ட கண்ணோட்டம்னு எப்பவுமே நினைப்பேன்.
அதீதத்துல பூச்சாண்டி படம் ஜோரா இருக்கு. :) கதையை படிச்சாச்சு. கருத்தை அதுலேயே போடறேன்.
தலைவரே! ப்ளாக்கைக் காப்பாற்றிக்கொள்வதற்கு என்ன செய்யவேண்டும் என்று ஒரு தனி பதிவு எழுதுவீர்களா?
பதிலளிநீக்குpregnancy test படம் இந்தியாவில் வெளியிட்டிருந்தால் நாடு ரெண்டுபட்டு போயிருக்கும்.
ஹையா! எனக்கும் உங்களைப் போலத்தான் எம்.ஜி.ஆர் -சரோஜா தேவின்னா ரொம்பப் பிடிக்கும். (அரச கட்டளைல ‘புத்தம் புதிய புத்தகமே’ன்னு ஒரு பாட்டு... பாருங்களேன்) ப்ளாக்கை மீட்ட கதை சுவாரஸ்யம். எனக்கும் ஒருமுறை இப்படி ஏற்பட்டு, தானாகவே அடுத்த நாள் சரியாச்சு. நீங்க போராடி மீட்டிருக்கீங்க. அதீதம் படிச்சுட்டு வர்றேன்...
பதிலளிநீக்குகண்மூடி மக்களுக்கு கல்லும் ஒன்றுதான், களிமண்ணும் ஒன்றுதான்.
பதிலளிநீக்கு:)Anyhow you regained your blog.
பதிலளிநீக்குEnjoy Durai.
//கண்மூடி மக்களுக்கு கல்லும் ஒன்றுதான், களிமண்ணும் ஒன்றுதான்//
அடுத்தவன் தலைலப் போடுரதுனு முடிவெடுத்த பிறகு, கல்லென்ன மண்ணென்னனுதான சொல்கின்றிர்கள்
a quick brown fox jumps right over the lazy dog
பதிலளிநீக்குpost is like the above sentence, A - Z irukkunga durai.
Case sensitive(vaa)? Capital letterla eluthirukkanumoo :)
'பிளாக்'கை மீட்ட கதை சுவாரஸ்யம்.
பதிலளிநீக்குஅப்பாஜி...சின்னப்பிளையில இப்பிடி ஒரு பூச்சாண்டியைக் காட்டியிருந்தாங்கன்னா சாப்பிட்டேயிருக்கமாட்டேன் !
பதிலளிநீக்குபுளொக் தொலையிறதை நிறையப் பேர் சொல்லிட்டாங்க.”பக்”ன்னுதான் இருக்கு !
பழைய பாடல்கள் எப்பவுமே சூப்பர்.அதுவும் எம்.ஜி.ஆர் + சரோஜாதேவி....!
ஆரம்பத்தில் இருந்து படிக்க படிக்க சுவாரசியம் கூடி கொண்டே போனது...ஒருவேளை இறுதியில் நீங்க பட்ட துன்பத்தை ரொம்ப ரசிச்சதால் இருக்குமோ ?!! :)
பதிலளிநீக்குபிளாக்கை மீட்டதை எப்படின்னு தெளிவா ஒரு பதிவு போட்டா உதவியா இருக்கும்...!!
// அடுத்த முறை கூகுல் 'privacy' 'security' என்ற பெயரில் உபரி அடையாளம் சேர்க்கச் சொன்னால் //
இதை பற்றி எனக்கு ஒரு மெயில் வந்தது...ரொம்பப நீளமா இருந்ததால படிக்க சோம்பல் பட்டு கண்டுக்காம போயிட்டேனே...!! :) ம்...உடனே அதை என்னனு பார்க்கணும்.
இதுக்காக உங்களுக்கு நன்றிகள்.
//போன பதிவுக்காகக் கிண்டியதில் மிஞ்சியதுடன் அவசரமாக ஒரு பதிவு போட விரும்பினேன். அவசியத்தைக் கடைசியில் சொல்கிறேன்//.
பதிலளிநீக்குஉண்மையாகச் சொல்லுகிறேன் அப்பாதுரை சார். எனக்கொன்றும் புரியவில்லை. ப்ளாக் மீட்டது தெரிகிறது.
கடைசியில் அவசியத்தை சொல்லியிருக்கிறீர்களா.?
ஐயையோ..ப்லாக் போயிடுமா..பயமா இருக்கே..அட ராகவனே! ஒண்ணும் பண்ணிடாதப்பா...கூகுளாண்டவருக்கு கொழுக்கட்டை நைவேத்யம் பண்றேன்!
பதிலளிநீக்குஒருவழியா பாடுபட்டு பிளாக்கை மீட்டுட்டீங்க போல
பதிலளிநீக்குநசிகேத வெண்பாவுக்கு இப்பவே காப்புரிமை வாங்கி வச்சுக்கங்க. காக்கா ஊஷ்... ஆயிடப்போறது.
பதிலளிநீக்குதங்கள் எழுத்தின் மேல் நான் வைத்துள்ள மதிப்பின் சிறு அடையாளமாக உங்களுக்கு "வெர்சடைல் ப்ளாகர்" என்ற விருதை மிகுந்த மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளேன். என் தளத்துக்கு வருகை தரும்படி அன்புடன் வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குhttp://minnalvarigal.blogspot.in/2012/02/blog-post_08.html
நன்றி meenakshi, RVS ((பதிவு ஐடியா கொடுத்தீங்க.. ஆனா எழுதுற அளவுக்கு எதுவும் இருக்குதா தெரியல.. 'இலவசம்'னாலே 'நம்பமுடியாது ஜாக்கிரதை'னு அர்த்தம் - அரசியலைச் சொல்லலிங்க.. இருந்தாலும் தெரிஞ்சிக்கிட்டதை ஒரு இலவசப் பதிவாக்கிட்டாப் போகுது :),கணேஷ்,இராஜராஜேஸ்வரி,ஸ்ரீராம்., ஹேமா, Kousalya, G.M Balasubramaniam, ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி, ராஜி, geetha santhanam, ...
பதிலளிநீக்கு