சங்கீத சீசனாச்சே? விட்டு வைப்பானேன்? இசையை மையமாக வைத்து ஒரு குறுக்கெழுத்துப் புதிர். இசையறிவு இருந்தால் சுலபம். (அதனால்தான் புதிர் பக்கமே நான் வருவதில்லை)
பின் வரும் 'குறுக்கெழுத்துப் புதிர்' என்ற தலைப்பைக் க்ளிக்கினால், புதிய பக்கத்தில் இசை தொடர்பான குறுக்கெழுத்துப் புதிர் தோன்றும். விடைகளுக்கான துப்புகளும், விடைகளும் புதிர்ப்பக்கத்தில் கிடைக்கும். (என்னைப் போல் பிட் அடித்தே பிழைத்தவர்களுக்காக ஒரு சகோ உணர்வு)
புதிரின் இடப்பக்க மேல் முனையில் தெரியும் '+' சின்னத்தைச் சொடுக்கினால் தமிழ் எழுத்து அட்டவணை விரியும். விடைக்கான எழுத்தை அட்டவணையிலிருந்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
புதிர் பக்கம் திறக்க> குறுக்கெழுத்துப் புதிர்
அறிக:
1. புதிரைச் செயல்படுத்த Flash மென்பொருள் நிறுவி இருக்க வேண்டும். Flash இங்கே பெறவும்
2. சில உலாவிகளில் புதிர்ப்பக்கம் அப்ஸ்கான்ட் ஆகிறது அல்லது கிறுக்கலாகத் தோன்றுகிறது; காரணம் தெரியவில்லை. அத்தனை தொழில்நுட்பம் தெரிந்தால் நான் பூனையை என்றோ துரத்தியிருப்பேனே? புதிர் கடவுள் போலவோ என்னைப் போலவோ தெரிந்தால் மன்னித்து, உங்களுக்குப் பிடித்த இசையை முணுமுணுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
2011/01/06
குறுக்கெழுத்துப் புதிர்
வெத்து வேலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
எதிர்வாதம்:
பதிலளிநீக்கு1. தற்காலத்திய குறுக்குப்புதிரின் "பொதுவிதி"களைப் பின்னிடவில்லை.
2. க் என்பது சொல்லின் முதலெழுத்து ஆகாது....
ஆனால்,
1. இசை பற்றியது என்பதாலும், முதன்முறை தமிழில் இந்த நுட்பத்தைப் பயன்படுத்தினதாலும், மன்னித்து விட்டோம்.
அந்த நிரலி என்னது? கூகிளிட்டேன், பல வருகின்றன.. நன்றி.
துப்புகளைப் படிக்கும்போதே கஸல் மற்றும் கடம் மட்டும்தான் கண்டுபிடிக்க இயன்றது.
பதிலளிநீக்குநன்றி கெக்கே பிக்குணி, பாலராஜன்கீதா..
பதிலளிநீக்குநிரலி கேள்வி புரியலியே கெபி?
தற்காலத்திய குறும்புதிர் பொதுவிதியா? அப்படின்னா? (நாங்க என்ன கற்காலமா?)
துப்பு. மற்றும் விடைகள் 'க்ளிக்'கும்போது அவை கலைந்து வந்து விழும் அழகை ரசித்தேன்.
பதிலளிநீக்குநமக்கு சம்பந்தம் இல்லாத ஏரியா
பதிலளிநீக்கு1. தற்காலத்திய குறுக்குப்புதிரின் "பொதுவிதி": http://www.crossdown.com/howtomake.htm. தமிழில் "தென்றல்" இதழின் வாஞ்சிநாதனின் விதிகள்: https://docs.google.com/Doc?id=dqkgg6j_0dhdnj2hr&pli=1
பதிலளிநீக்குஇலவசக் கொத்தனார் நிறைய குறுக்கெழுத்துப் புதிர் செய்திருக்கார், எ.கா.: http://elavasam.blogspot.com/2008/08/blog-post.html
//நாங்க என்ன கற்காலமா?// நான் ஒண்ணும் சொல்லலை, நீங்களே சொல்வது - //முதிர்ந்த வாசகருக்கான கருத்தும் நடையும் ஆங்காங்கே காணலாம்.
//
2. நிரலி = software. கண்டுபிடிச்சிட்டேன், நீங்கள் பயன்படுத்துவது: Crossword Forge Live.
thanks கெபி. நிரலினா softwareனு இப்பத் தான் தெரியும். crossword urls படிச்சுப் பாக்கறேன், ரொம்ப தேங்க்ஸ். (இதெல்லாம் மசாலா இருக்குறவங்க செய்யணும், என்னை மாதிரி ஆளுங்க pavementல நிக்கணும், நிசமாத்தான்)
பதிலளிநீக்குகரெக்டா பிடிச்சிடுவீங்களே - முதிர்ந்த வாசகர்னு சொல்லியிருக்கேன், முதிர்ந்த எழுத்தர்னா (?) சொன்னோம்? இதெப்டி?
கச்சேரி ...இசை ன்னு ஒன்னு ரெண்டு பிடிபட்டுது ..ஒரு மூடு ஓட உட்கார நேரம் கிடைக்கல இன்னமும் .....
பதிலளிநீக்கு