2015/10/02
பாடல் பெற்ற பதிவர்
எண்ண முதிர்ச்சி எழுத்து வளர்ச்சியொடு
அண்மைப் பதிவுகளில் ஆளுமை - நுண்மை
பிறழா இலக்கிய நூலெழுதி இன்னும்
சிறந்து வளரட்டும் சீனு.
காதல் கடிதத்தில் சீனுவுடன் ஏற்பட்ட பழக்கம் இனிமையாகத் தொடர்கிறது :-).
எழுத்து மெருகு என்று ஏதாவது இருந்தால் இவரின் வளர்ச்சிக்கு உதாரணமாகச் சொல்வேன். (நம்ப முடியாதவர்கள் சீனுவின் 2012 காலப் பதிவுகளையும் சமீபப் பதிவுகளையும் படிக்கலாம் :-). அதிகம் படிக்கிறாரா அல்லது எழுதுகிறாரா, இரண்டுமா?
வியக்க வைக்கும் வளர்ச்சி. வாழ்த்துக்கள் சீனு!
அடுத்து பாடல் பெறும் பதிவர்: ஷைலஜா
முன்னர்:
சுப்புத்தாத்தா
ஜோதிஜி
கீதா சாம்பசிவம்
பாலகணேஷ்
சிவகுமாரன்
ஹுஸைனம்மா
மோகன்ஜி
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
உண்மை.பாடல் பெற தகுதியான பதிவர்.
பதிலளிநீக்குசீனுவுக்கு வாழ்த்துக்கள்
அதிகம் படித்ததில்லை என்றாலும் திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசீனுவின் ஆரம்ப கால பதிவுகளை படித்து அதிகம் பாராட்டியதுண்டு. இப்ப நான் பாராட்ட வேண்டிய இடத்தில் அவர் இல்லை மிக உயர்ந்த இடத்தை பெற்றுவிட்டதாகவே நான் கருதுகிறேன். அவரிடம் இருந்து பாராட்டு பெறும் நிலையில்தான் நான் இருக்கிறேன்.
பதிலளிநீக்குசீனுவின் எழுத்துகள் மெருகேறிக் கொண்டே வருகின்றன. இளமையான வயதும், முதிர்ச்சியான மனமும் கொண்டவர். வாழ்த்துகள் சீனு.
பதிலளிநீக்குதிடங்கொண்டு போராடு என்னும் வலையிலே
பதிலளிநீக்குஎழுதும் சீனு எனக்கு மிகவும் தெரிந்தவர் பழக்கமானவர்.
பேசும்போது கூட சீனியை நிறைய உதிர்க்கிறார்.
ரேஷன் சீனி அல்ல. Parrys கம்பெனி சீனி.
வாயில் போட்டாலே கரையும்
வாசமுடன் எழுதும் இவர் வார்த்தைகளோ
வசந்த மல்லிகை மொட்டுக்கள்.
திடங்கொண்டு போராடச் சொல்பவர் சில சமயம் நம்மை
திடுக்கிடவும் வைக்கிறார்.
இதைப் பாருங்கள்.
சுப்புத் தாத்தாவை பயமுறுத்தக்கூடாது என்று
சொல்லி வையுங்கள்.
சு தா.
Attachments area
Preview attachment 3d Horror wallpape44.jpg
[Image]
சீனுவுக்கு வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குபதிவர் சீனுவுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபதிவர் சீனுவுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅட! நம்ம சீனு! அவர் கலக்குபவர்! வாழ்த்துகள் சீனு!
பதிலளிநீக்குஅடடா! நிறைய விட்டுப் போயிருக்கே எப்படியோ...அதையும் பார்த்துட்டாப் போச்சு...
பதிலளிநீக்குஆமாம் அப்பா ஸார். அவன் எழுதத் துவங்கிய நாளிலிருந்து இன்று வரை மெருகேறி வரும் அவன் வளர்ச்சியைக் கண்டு ஒரு தந்தையின் மனநிலையில் மகிழ்ந்து நிற்கிறேன். இன்று உங்களால் பாடல் பெற்ற பதிவராகி முழுமை பெற்றுவிட்டான் என்றே சொல்வேன். ஆல் த பெஸ்ட்ரா சீனு. (பாட்டுல அப்பா ஸார் உனக்குச் சொன்ன செய்தியை நன்கு கவனிக்கவும்.)
பதிலளிநீக்குஅடடே.. அடுத்து மை.பா. அக்காவா..? என்ன எழுதப் போறீங்கன்னு பாக்க ஆவலோட வெயிட்டிங் அப்பா ஸார்.
பதிலளிநீக்குசீனுவை எல்லோரும் பாராட்டியது என்னை ஒருவர் பாராட்டி கூறியது போலத்தான் உணர்கிறேன்.
பதிலளிநீக்குஆயினும் இந்த பாராட்டுகள் அனைத்தும் ஒரு துவக்கப் புள்ளியாகவே பார்க்கிறேன். நான் அவரிடம் சில நாட்கள் முன்னர் சொன்ன ஒரு விஷயம் (அதற்காக நண்பர்கள் பலர் என்னை கடிந்து கொண்டதும் உண்டு) - சீனு, நீங்க உங்க துறையை தவறாக தேர்வு செய்து விட்டீர்கள். நீங்கள் ஒரு எழுத்தாளராக பரிணமிக்க வேண்டியவர். ஐ.டி வேலை முடித்து அல்லது விடுமுறை நாட்களில் எழுதுவது மட்டும் போதாது. தீவிர எழுத்தாளனாக வேண்டிய நீங்கள் கொஞ்சம் சிந்தித்து எழுத்து ஒன்றையே முழுமூச்சாக எடுத்து அந்த துறையில் செல்வதே என் அவா என்று சொல்லியிருந்தேன். இது ஒரு ஆபத்தான அறிவுரை என்பதை நான் நன்கறிவேன். ஆனால் அதை சாத்தியப் படுத்திக் கொள்ளக் கூடிய அசாத்திய திறமை சீனுவுக்கு உண்டு என்பதையும் நான் முழுதாய் நம்புகிறேன். அவர் வாழ்வில் இன்னும் பல உயரங்களுக்கு அப்பாதுரை சாரின் இந்த பாடல் ஒரு இன்ட்ரோ சாங் (song) ஆக அமையும் என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை.
இணையத்தில் நான் எழுதத் தொடங்கிய காலத்தில் முன்னனி பதிவராக இருந்த சீனுவின் எழுத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன! தொடர்ந்து வாசித்து வருகையில் அவரின் முன்னேற்றமும் எழுத்தில் அவரது முதிர்ச்சி கூடியிருப்பதையும் கவனித்து வருகிறேன்! உங்களின் ஆசியும் அவருக்கு கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் சீனு! வாழ்த்துக்கள் அய்யா!
பதிலளிநீக்குமுதிர்ச்சியான எழுத்துக்குச் சொந்தக்காரரிடம் இருந்து
பதிலளிநீக்கு(வஷிஷ்டர் எனச் சொல்லலாமே என யோசித்தேன் )
பாடல் பெற்ற பதிவருக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்