2015/09/02

பாடல் பெற்ற பதிவர்


சூரியெனும் சித்தரிவர் சிந்தனையில் புத்தரிவர்
வாரியெழும் பின்னூட்டப் பாற்கடல் - சீரிளையோன்
பல்மொழிப் பல்கலைப் பாட்டன் பதிவுலக
நல்வினையின் மொத்தப் பலன்.




    வயது என்பது ஒரு எண்ணிக்கை மட்டுமே என்பதன் ஒட்டு மொத்த பொருளுக்கான உருவம் சூரி அவர்கள். ஆத்திகமும் எழுதுகிறார், ஆன்மிகமும் எழுதுகிறார், அலேக் விஷயமும் எழுதுகிறார், அப்பள சமாசாரமும் எழுதுகிறார். இவரின் பன்மொழிப் பிடிப்பும் பரந்த கலை ரசனையும் என்னை மிகவும் கவர்ந்த விஷயங்கள். கவராத விஷயம்? ஹிஹி.. எதுவும் இல்லை.



அடுத்து பாடல் பெறும் பதிவர்: சீனு

முன்னர்:

ஜோதிஜி
கீதா சாம்பசிவம்
பாலகணேஷ்
சிவகுமாரன்
ஹுஸைனம்மா
மோகன்ஜி
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி




31 கருத்துகள்:

  1. சூரி சாருக்கு வாழ்த்துக்கள். மற்றவர்கள் எழுதிய கவிதைகளை உற்சாகமாய் பாடி காட்டும் அவரின் சுறு சுறுப்பு பாராட்டதக்கது.

    பதிலளிநீக்கு
  2. அட! நம்ம சுப்புத் தாத்தா/ஸாரி இளைஞர்!....சரியாகச் சொன்னீர்கள்! "பன்மொழிப் பல்கலைப் பாட்டன்..." ஆனால் பாட்டன் என்பதை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!!!....யங்க் மேன் ஹீ இஸ்!!!! .செம ரகளை பண்ணுவாரு....பெட்டெர் ஹாஃபைச் சொல்லி....உடனே அடுத்து ஏதாவது ஒரு சாமி மேல உருகிடுவார்!

    கீதா: பெரும்பாலும் தர்பாரிகானடா...அவரது ஃபேவரிட் ராகம்னு நினைக்கிறோம்....

    செம பதிவர்!
    ஹை அடுத்து நம்ம சீனு....லிட்டில் பாய்! இலக்கிய வள்ளல்!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கீதா: பெரும்பாலும் தர்பாரிகானடா...அவரது ஃபேவரிட் ராகம்னு நினைக்கிறோம்....//
      நீங்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கும்போல...

      கடந்த பதிமூன்று ஆண்டுகளில் எனக்குப் புரிந்த 70 ராகங்களில் நான் மெட்டு அமைத்த 1500 பாடல்களில் (நேற்று எக்செல் வழியாகப் பார்த்ததில்) கானடா, தர்பாரி கானடா ராகம் 38 விழுக்காடு இருக்கிறது.. அடுத்து வருவது ஹிந்தோளம், ஆபோஹி, நான் என்ன செய்யட்டும் ?
      கணினி உலகம் கந்தர்வ லோகமாக இருக்கிறது. சிருங்காரம், விரகம், தாபம், இந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் கவிதைகள் தானே முன் நிலை வகிக்கின்றன. !!

      சு தா.



      நீக்கு
    2. //எனக்குப் புரிந்த 70 ராகங்களில் நான் மெட்டு அமைத்த 1500 பாடல்களில்
      impressive!

      நீக்கு
  3. தாத்தாவின் படம் செம கலக்கல் !!!! அர்த்தநாரீஸ்வரர்???!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அர்த்தநாரீஸ்வரர்???!!!!!!

      இல்லயா பின்னே !!

      ஒரு அர்த்தமுள்ள நாரி க்கு ஈஸ்வரனாக இருப்பது
      என்பது பூர்வ ஜன்மப் புண்யமாக்கும்.

      ( அடுத்த வேளைக்கு போஜனம் அஸ்யூர்டு)

      சுப்பு தாத்தா
      www.subbuthathacomments.blogspot.com

      நீக்கு
  4. பன்மொழிப் பிடிப்பும் பரந்த கலை ரசனையும் கொண்ட சூரியெனும் சித்தருக்கு வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  5. அருமையான தேர்வு! இவருக்குத் தெரியாததே இல்லை எனலாம். :) முக்கியமான நேரத்தில் வந்து கருத்துச் சொல்லிப் பதிவுக்கே ஒரு அழகை ஏற்படுத்தி விடுவார்.

    பதிலளிநீக்கு
  6. //வாரி எழும் பின்னூட்டப் பாற்கடல்..//

    O.K.

    //பாட்டன் பதிவுலக நல்வினையின் மொத்த பலன்..//

    Double O.K.

    பதிலளிநீக்கு
  7. பாராட்டுக்குரியவர்.
    பாட்டரசர்...
    இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் எனது வாழ்த்துகளும் இளைஞருக்கு.

    பதிலளிநீக்கு
  8. அவரைப் பற்றிய உங்கள் பதிவில் எங்கே இன்னும் அவரைக் காணோமே, வரியெழும் பின்னூட்டப்பாற்கடல் , ஒரு சிலரது பதிவுகளில் மட்டுமே./ ஒரு ரசனையுள்ள மனிதர்.

    பதிலளிநீக்கு
  9. அழகான பாடல். அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

    வாழ்த்துகள் சூரி sir.

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லாசெப்டம்பர் 02, 2015

    you can take yourself out of the paarppaanism but you cannot take the paarppaanisam out from you

    பதிலளிநீக்கு
  11. சுப்பு அண்ணாவுக்கு உரித்தான குறும்பு அவரகள் இருவருக்கும் உண்டான அந்நியோன்யம் எல்லாமே அருமை.ரசனை மிக்க மனிதர்.பாடல் பெறத் தகுதி ஏகம் இவரிடம்.

    பதிலளிநீக்கு
  12. அழகான பொருத்தமான பாடல் சுப்பு தாத்தாவுக்கு. வாழ்த்துகளும் வணக்கங்களும் தாத்தா.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் ஐயா!

    பாட்டரசருக்குப் பாடிய வெண்பா அற்புதம் ஐயா!
    நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஈடாக இருப்பது கண்டு
    உள்ளம் மகிழ்கின்றேன்!
    இருவருக்கும் என் பணிவான வணக்கத்துடன் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. சுப்புத் தாத்தாவின் தகவிற்கு தக்க தரமான வரிகள். சூரிநாம் வயதுக்கும் உற்சாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உணர்த்திக் கொண்டேயிருக்கும் உற்சாக புருஷர். அவரின் எழுத்தும் கருத்தும் எனக்களிக்கும் சித்திரம்-' சம்பிரதாயங்களை அறிந்தவர், ஆழ்ந்த வாசிப்பை உடையவர் 'என்பதே. காலம் கொண்டு சேர்க்கும் 'நொய்மை' எனும் மனமுடக்கத்தை அண்டவிடாதவர் யாவரும் இளைஞர்களே! அவரின் பின்னூட்டங்கள் பலவும் ஒரு பாடம் போல் அமைவது வலையுலகிற்கு அவரின் பங்களிப்பு. உங்கள் தளத்தின் நீலவிரிப்பில் நெடுஞ்சாண்கிடையாக கிடந்து சுப்புத்தாத்தா எனும் சுதாவுக்கு என் வந்தனங்கள்.

    பதிலளிநீக்கு
  15. வலையுலகில் மூத்த பதிவர்களே சிறப்பாக எழுதி வருகிறார்கள் . சுப்பு தாத்தாவின் பல்துறைப் புலமை வியக்க வைக்கிறது. சுப்பு தாத்தாவைப் போற்றிய வெண்பா அருமையோ அருமை .
    அடுத்து இந்த வரிசையில் இடம் பிடித்த சீனுவுக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  16. பின்னூட்டங்கள் பலவும் ஊட்டச்சத்து தருபவையாக இருக்கின்றன. மோகன்ஜி அவர்கள் பின்னூட்டம் ஒரு தஞ்சாவூர் டிகிரி காபி தரும் சுகம் தந்தது.

    எல்லோருக்கும் எனது நன்றி.

    பாடல் எழுதிய அப்பாதுரை அவர்களுக்கு எனது நன்றி.

    வழக்கமாக் வரும் நண்பர் குழாத்தில் இன்னும் இருவர் (பரோடா மோஹன் , எக்ஸ்பாட் குரு ) வரவில்லை எனினும் அவர்களுக்கும் அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் எனும் பாசுரத்தில் வருவது போல, அவர்களுக்கும் இன்றே நன்றி சொல்வேன்.

    மீண்டும் ஒரு முறை நன்றி.

    சுப்பு தாத்தா.
    முடிந்தால் நீங்கள் பார்க்க வேண்டிய என பதிவு.
    காசு மாலை வேண்டாம். கருக மணி வேண்டாம்.
    பதிவு இருக்கும் இடம்.
    www.subbuthatha.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கும்பகோணம் டிகிரி காபினு இப்ப அங்கங்கே ஏமாத்துறாங்க. தஞ்சாவூர் டிகிரி காபி எப்படி இருக்கும்னு பாத்துடுவோம்.
      திருவாரூர் டிகிரி காபி அம்சமா இருந்துச்சு.

      நீக்கு
    2. இந்திப்பாட்டு பகுத் துக்கம் ஹை சாப்.

      நீக்கு
  17. பாராட்டு வெண்பாப் பளிச்சென் றிருக்கிறதே!
    தேரோட்டம் போலத் திகழ்தமிழ் - நீரோட்டம்
    மங்கிவரும் காலம் மறுபடியும் பூக்கவைக்க
    எங்கிருந்து வந்தீர்? இனிது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி ஒரு பாராட்டு என்றால்,
      இனியா அவர்கள் வலைக்குச்சென்று
      ஒரு பாடலில், ஆம் ஒரே பாடலில்
      நான்கு வெண்பாக்களை,பார்த்தால்
      என்ன கூறுவீர்கள் ?
      இலக்கண வரம்புகள்.
      பஃ றொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க நேரிசை வெண்பா வர வேண்டும்! நேரிசை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க நேரிசைச் சிந்தியல் வெண்பா வர வேண்டும் ! நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க குறள் வெண்பா வர வேண்டும் !
      இது போன்ற ஒரு படைப்பினை இங்கு சென்று பார்க்கவும்.
      www.kaviyakavi.blogspot.in
      என்னக்கென்னவோ, இதைப் பார்த்தபின் ,
      அப்பாதுரை சார் எழுதும் அடுத்த வெண்பா
      பதிவர் சீனு வைப் பாடுவது
      இது போலத்தான் அமையுமெனத் தோன்றுகிறது.
      ஒரு சவால் என்று வந்துவிட்டால் அப்பாதுரை சார் சிங்கம் .
      சுப்பு தாத்தா

      நீக்கு
    2. அதெல்லாம் அசல் புலவர்களுக்கு சாமி! சிவகுமாரன் கிட்டே சவால் விடுங்க,..
      இத்தனை வெண்பா இருக்குறதே நீங்க சொல்லித்தான் தெரியும்!!

      நீக்கு
  18. பின்னூட்டங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. பின்னூட்டம் போடும்போதும் பாட்டுப்பாடி போடுபவர் திரு சுப்பு. என்னுடைய வலைப்பதிவில் எங்கள் பிறந்தநாளிற்கு வெகு இனிமையாகப் பாடி கூடவே ஒரு கல்யாணப் பாட்டும் போட்டு வாழ்த்தியவர். மனைவியை எப்போதும் விட்டுக் கொடுக்காமல் தான் எழுதும் பின்னூட்டங்களிலும் கூட்டி வருபவர்.
    அனேக நமஸ்காரங்கள், சுப்பு ஸார்!

    பதிலளிநீக்கு
  20. ஐ..சுப்புத்தாத்தா.. அவர் பேர் சொல்லும் போதே அவர் பாடல்கள் காதில் ஒலிக்கும். அப்பா சார் இப்போதான் இந்த 'பாடல் பெறும் பதிவர்' பகுதியை கண்டுகினேன்.. மன்னிச்சூ.. அசத்தல்! நல்ல முயற்சி. 'ஆவிப்பா' எழுதும் என்னை போன்ற பாமரனுக்கும் வெண்பா புரிகிறது.. (அது வெண்பா தானே.. அவ்வ்வ்வ்)

    பதிலளிநீக்கு
  21. அனைவரின் பாடலையும்
    பாடிப் பரவசப்படுத்துபவர்
    பாடல் பெற்றவரானது மகிழ்வளிக்கிறது
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு