என்று எழுதுவார் என்றறியோம் ஒன்றெழுதி
அன்றே வருவார் வலைதேடி - நன்றெனத்
தேடிவந்தோர் பின்னூட்டம் சேர்த்ததும் மோகன்ஜி
மூடிவைப்பார் வானவில்லைப் போர்த்து.
இதை எழுதிய இளங்காலை வெளியே -51°F. வானவில் மனிதனை வம்புக்கிழுப்பதும் சூடான சுகமே.
அன்றிலாய் எழுதினாலும் என்றும் இவரெழுத்து குன்றிலிட்டச் சுடர்.
அடுத்து பாடல் பெறும் பதிவர்: ஹுஸைனம்மா.
திண்டுக்கல் தனபாலன்
மெட்ராஸ் தமிழன்
ராமலக்ஷ்மி
’வானவில்’ எப்போதாவது மட்டுமே தோன்றும் !
பதிலளிநீக்குமோகன்ஜிக்கு மிகப்பொருத்தமான வரிகள். :)
பதிலளிநீக்குபாடல்பெற்ற வானவில் பதிவருக்கு வாழ்த்துக்கள்.
மோகன்ஜி அவர்களின் பதிவுகளை அதிகமாகப் படித்ததில்லை.நிச்சயம் படிப்பேன்.பாடல் பெற்ற பதிவரான மோகன்ஜிக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஎன்று எழுதுவார் என்று அறியோம் எழுத வேண்டினாலும் எழுத மாட்டார். சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதுபோல் இது மோகன் ஜி போக்கு எனலாமா.
பதிலளிநீக்குவெண்பாவின் இறுதி வரிக்குப் பொருள் என்ன மன்னா?
பதிலளிநீக்குஅதில் என்ன குற்றம் கண்டீர் ?
இல்லை.வான வில்லே ஒரு மாயத்தோற்றம் தானே ?
அதை மூடி வைப்பது என்பது எங்கனம் சாத்தியம்.?
புலவரே!! சற்று சும்மா இரும்.
அப்பாதுரை சாருக்கு மூடு வரும்போது
அவரே விரி உரை தருவார்.
அது இருக்கட்டும்.
மோகன்ஜிக்கு ஜே சொல்லி விடுங்கள்.
சுப்பு தாத்தா.
வானவில்லை அபூர்வமாகத் தானே பார்க்க முடியும். மோகன் ஜியின் எழுத்துகள் நினைவில் என்றென்றும் நிற்பவை.
பதிலளிநீக்குவானவில் என்று வந்தாலும் ரசிப்பேன்...
பதிலளிநீக்குவாங்குவர் என்னுடன் வந்திங்கு என்றெண்ண
பதிலளிநீக்குவாங்கினரே என்னையும் வாங்கு.
வானவில் பதிவர் - அவ்வப்போது வந்து சிறப்பான பதிவிடும் மோகன் ஜி! அவர்களுக்கு பொருத்தமான பா. வாழ்த்துகள் மோகன் ஜி!
பதிலளிநீக்குவானவில் மோகனை அண்மையில் தஞ்சையில் சேக்கிழார் அடிப்பொடியின் சதாபிஷேக விழாவினில் பார்த்தேன்...எளிமையானவர் திறமைகள் பல கொண்டவர் மோகனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகாளிதாச மகாகவிக்கும் போஜ ராஜனுக்கும் ரொம்ப சிநேகிதம்.
பதிலளிநீக்குஒரு நாள் போஜன் காளிதாசனிடம் “நான் இறந்தால் என்ன இரங்கற்பா பாடுவாய் என்று அறிய ஆவலாய் இருக்கிறது. என் மீது இப்போதே ஒரு இரங்கற்பா பாடு” என்றான். அருட்கவியான காளிதாசன் தன் நண்பன் உயிருடன் இருக்கும் போதே இரங்கற்பா பாடினால் மன்னன் இறந்துகூட போய் விடுவானே என்று பாட மறுத்து விட்டார். மன்னனாய் பாடும்படி ஆணையிட்டும், காளிதாசன் பாட மறுத்ததால் கோபம் கொண்டு, தன் நாட்டைவிட்டே வெளியேறுமாறு தண்டனை வழங்குகிறார் போஜராஜன் . காளிதாசனும் நாட்டைவிட்டு வெளியேறி விட்டார்.
நண்பனின் பிரிவைத் தாங்கமுடியாத போஜன் மாறுவேடம் பூண்டு காளிதாசனைத் தேடி அலைகிறார். பக்கத்து நாட்டில் ஒரு சத்திரத்தில் காளிதாசன் அமர்ந்திருப்பதைக் கண்டார். மாறுவேடத்திலிருந்த போஜன், தான் போஜனின் தேசத்திலிருந்து வந்திருப்பதாய்க் கூறினார். ஆவல் மேலிட,போஜ மகாராஜா எப்படி இருக்கிறார் என்று காளிதாசனும் வினவினார்.
எப்படியும் தன் மீதான காளிதாசனின் இரங்கற்பாவை கேட்டுவிடத் துடித்த போஜன், ராஜா இறந்து விட்டார் என்று சொல்ல, நண்பனின் பிரிவால் பெரும்துயருற்ற காளிதாசனும் போஜன் மீது இரங்கற்பாவை பாடிப் புலம்பினார். பாடல் கேட்ட மாத்திரத்திலேயே போஜனும் உயிர்நீத்தார்.
இறந்தது மாறுவேடத்திலிருந்த போஜனே என்றுணர்ந்து காளிதாசனும் உயிர்விட்டாராம்.
அப்பாதுரை சார்! நானும் நீரும் பாட்டிற்காக உயிர்விட வேண்டாம். ஆனால் போஜனைப் போல், இப்படி ஒரு வெண்பா என் மேல் நீங்கள் பாடுவதாய் இருந்தால், வலைக்கு அவ்வப்போது மட்டம் போடுவேனே!
பின்னூட்டத்தில் அன்பையும் ஆதங்கத்தையும் பொழிந்த அன்பு உள்ளங்களுக்கு என் நன்றியை, குற்ற உணர்வுடனே கூறுகிறேன். இனியும் வானவில் உங்களை ஏமாற்றாது. வானவில்மனிதனில் பதிவுகள் அடிக்கடி வரும் என்று காளிதாசன் மற்றும் போஜராஜன் தலையில் சத்தியம் செய்து உறுதி கூறுகிறேன்.
வெண்பா எழுதின கைக்கு ஒரு உம்மா...
வானவில் மனிதனுக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்கு