2013/08/10

கண்பிடுங்கி நீலன்

2


1


    ரு மணி நேரம் காக்க வைத்துப் பின் ரகுவை உள்ளே அழைத்தார் டாக்டர். "உங்களை உள்ளே வர வேணாம்னு சொன்னதுக்கு மன்னிச்சுருங்க ரகு. சில சோதனைகளைத் தனிமையில் செய்ய மருத்துவச் சட்டம் இன்னும் எங்களுக்கு அனுமதி கொடுக்குது.. எங்களுக்கும் அது தேவை.." என்றார் புன்னகையுடன்.

"பரவாயில்லை டாக்டர்.. நீங்க அனுமதிச்சிருந்தாலும் எனக்கு துணிச்சல் கிடையாது"

டாக்டர் புன்னகை குன்றாமல் "விமலாவுக்கு அபார்ஷன் அபாயம் இருக்கிறது. எந்த ட்ரீட்மென்டுக்கும் இது ரொம்ப சீக்கிரம். எத்தனை வாரக் கர்ப்பம் தெரியுமா?" என்றார்.

"பதினேழு வாரம்னு நினைக்கிறேன் டாக்டர்.. சரியாத்"

"நாட் பேட். பதினெட்டு வாரம். நிறைய கணவர்களுக்கு இதிலெல்லாம் அக்கறை கிடையாது. படுக்குறதோட சரினு போயிருவாங்க"

"என் மனைவியை மிகவும் நேசிக்கிறேன் டாக்டர். விமலா இல்லாமல்.."

"பொறுங்கள். அந்த டயலாக் இப்ப வேணாம். டூ எர்லி" என்றார் டாக்டர். ப்லேஸ்டிக் புன்னகை என்று நினைத்தான் ரகு. "உங்க மனைவிக்கு மது அருந்தும் பழக்கம் உண்டா?"

"உண்டு.. ஆனால் குழந்தை பெறத் தீர்மானித்ததும் ஆறு மாதம் நாங்கள் குடிக்கவில்லை டாக்டர். அதற்கப்புறம் தான் பாதுகாப்பில்லாமல்.. கருத்தரிக்கவே முயற்சி செஞ்சோம்"

"வாட் அபவுட் சிகரெட்ஸ், ட்ரக்ஸ்?"

"வி டோன்ட் ஸ்மோக். என் மனைவி விளம்பரத்துறையில் பெரிய அதிகாரி டாக்டர். வி கெட் இன்வைடட் டு எக்சாடிக் பார்டிஸ் ஆல் த டைம். எப்பவாவது கொகெயின் அல்லது மரிவானா.. ரொம்ப ரேர்.. ஆனா எனக்குத் தெரிஞ்சு கடந்த மூணு வருஷமா நாங்க எந்த போதைப் பொருளையும் தொட்டதில்லை டாக்டர்.. வி ஆர் க்ளீன்.. விமலா ரொம்ப மன உளைச்சல்ல இருக்கா டாக்டர்.. புது வீடு, கர்ப்பம்.."

"கரு அதிரும் அளவுக்கு இவை பாதிக்குதுன்னா.. உங்க ரெண்டு பேருக்குள்ள அன்னியோன்யம் குறைவா? இல்லை அவங்க இயல்பிலேயே மனோதைரியம் குறைஞ்சவங்களா?"

"எங்க பாரம்பரியத்துல புலியை முறத்தால் விரட்டுன பொம்பளைங்க பத்தி லெஜன்ட் இருக்கு. ஆனா பார்வையாலயே புலியை விரட்டுற டைப் என் விமலா. ஷி இஸ் தட் ஸ்ட்ராங்க். ஷி ஆல்சோ லவ்ஸ் மி டீப்லி.." விமலாவின் கனவைப் பற்றிச் சொன்னான். அன்று நடந்த விபத்து, கிழவி பற்றிச் சொன்னான். "ஐ திங்க்.. விமலா இந்த சம்பவங்களினால ரொம்ப ஆடிப்போயிருக்கா.. இல்லின்னா.."

"கிழவி சூனியம் வச்சிருப்பானு நினைக்கிறீங்களா?" சிரித்தார் டாக்டர். "கமான் ரகு.. வாட் டு யு டூ பார் எ லிவிங், ட்ரீம்?"

குழந்தைகள் புத்தகம் எழுதிப் பிரபலமானதைச் சொன்னான்.

"ஓ.. யு ஆர் த ஒன்!" வியந்தார் டாக்டர். "என் பெண்ணுக்கு உங்க புத்தகம்னா உயிர். ஆடோகிராப் தந்துருங்க ப்லீஸ். அப்ப உங்களை ட்ரீமர்னு சொன்னது உண்மை தான்" என்றுச் சிரித்தார். ப்லேஸ்டிக் மறைந்து சினேகம் தெரிந்தது. "கவலைப்படாதீங்க. இத்தனை தொடக்கக் கர்ப்பத்துல அதிகமா மருத்துவம் வழங்கவும் தயக்கமா இருக்குது. ப்ரெதின் ஷாட் குடுத்திருக்கோம். 48 மணி நேரம் விமலா எங்க பார்வைல இருக்கட்டும். முழு ஓய்வு தவிர வேறே ட்ரீட்மென்ட் தேவையில்லை. சில சோதனைகள் செய்யணும். செர்விக்ஸ் அளவெடுக்கணும். ப்ரொஜெஸ்ட்ரோன் ட்ரீட்மென்ட் தேவையானு பார்க்கணும். தேவைப்பட்டா கர்ப்ப காலம் முழுக்க ட்ரீட்மென்ட் தர வேண்டியிருக்கும். இன்ஷூரன்சுல சொல்லிடுங்க. உங்க மனைவிக்கு ஓய்வு தேவை. ஓய்வுனா கம்ப்லீட் பெட் ரெஸ்ட். இன்னும் ஆறு வாரத்துக்காவது அப்படி இருக்கணும். இருபத்துநாலு வாரத்துக்கு மேலே ப்ரொஜெஸ்டிரோன் கொடுக்க முடிஞ்சா கர்ப்பம் வெற்றிகரமா முடிய நிறைய வாய்ப்பிருக்கு. ஆறு வாரம் உங்க மனைவியை நீங்க நிழலாத் தாங்க முடியுமா?"

"நிச்சயமா டாக்டர்.."

"குட். கர்ப்பமான பெண்டாட்டி கீழே விழுந்தா ஆள் வரும் வரை வேடிக்கை பார்க்குற பிரபலங்களைத் தெரியும்.. ஹோப் யு ஆர் டிபரென்ட்.."

"அப்படி நான் வேடிக்கை பார்த்தா, விமலா என் மேலே காறித்துப்பி கட்டையால அடிப்பா டாக்டர். சுயமரியாதை தன்னம்பிக்கையெல்லாம் அவளைப் பார்த்து நான் கத்துக்கிட்டது"

"ஸ்மார்ட் மேன். சரி.. 48 மணி நேரத்துக்கு ஷி ஹேஸ் டு ஸ்டே ஹியர். அவங்களை எக்ஸக்யுடிவ் ஸ்வீட்டுக்கு மாத்திடச் சொல்றேன். தனியா சிறப்பா கவனிச்சுக்குவாங்க. ஒரு நாளைக்கு இரண்டாயிரம் டாலர், மருத்துவச் செலவு தனி. இன்ஷூரன்ஸ் இல்லாமலே கூட உங்களால செலவை ஏத்துக்க முடியும், செலப்ரடியாச்சே?"

"நாட் என் ஆப்ஜெக்ட் டாக்டர்"

"ஓகே தென்.. சோதனைகள் முடிவு தெரிஞ்சதும் கூப்பிடுறேன்" என்ற டாக்டர் தயங்கினார். "ஆமாம் ரகு.. கர்ப்பத்துல இருக்குறது ஆணா பெண்ணானு தெரியுமா?"

"தெரியாது டாக்டர். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு விட்டுட்டோம்"

"தெரிஞ்சுக்க விரும்புறீங்களா?"

"விமலாவைக் கேட்டுச் சொல்றேன் டாக்டர்.. அவ இல்லாம எனக்குத் தெரிஞ்சு ஒரு பயனும் இல்லே"

"ஆதர்சத் தம்பதி.. நீங்க லக்கியா இல்லே விமலா லக்கியா தெரியலே.. "

"கண்டிப்பா நான் தான் டாக்டர். அதுல சந்தேகமே இல்லை. விமலா என்னுடைய மேரிகோல்ட். அவ தனியா இருந்தாலே சிறப்பு. என் கூட சேர்ந்ததுனால எனக்குத்தான் சிறப்பு"

"ஓகே.. லவர் பாய்.. கோ ஹோம்" சிரித்தார் டாக்டர். "உங்க மேரிகோல்டை வாடாம பாத்துக்குறோம். இப்ப போங்க. வி க்லோஸ் பார் கெஸ்ட்ஸ் அட் மிட்நைட். அதுக்குள்ள பேபர் வர்க் முடிச்சுருங்க. தென் கெட் சம் ரெஸ்ட். தேவைப்பட்டா போன் செய்யுறோம்".

    இன்சூரன்சுக்கான படிவங்களை நிரப்பி, அறை வாடகை மற்றும் பராமரிப்புச் செலவுகளை முன்பணமாகக் கட்டி, அங்கே இங்கே கையெழுத்திட்டுத் திரும்பிய ரகு களைத்திருந்தான். பேராமெடிகல் ஆசாமிகளோடு ஆம்புலன்சில் வந்ததால் திரும்பிப் போக டேக்சி எடுத்தாக வேண்டும். லாபியில் ஆஸ்பத்திரி கான்சியர்ஜ் டேக்சி ஆர்டர் செய்து "வர இருபது நிமிடமாகும்" என்றாள். சம்மதித்தான். வலது கையின் ரோலெக்ஸ் ஆய்ஸ்டர் பெர்பெசுவல் மூன்பேஸ் பத்து பத்து என்றது. லாபியின் எதிரே ஸ்டார்பக்ஸ் இன்னும் இயங்குவதைக் கவனித்தான். ஐபேடில் எதையோ பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த சிப்பந்திப் பெண்ணையும் சற்றுத் தள்ளி லவுஞ்சின் நாற்காலிகளில் இருந்த ஓரிருவரையும் கவனித்தான். கடை நோக்கி நடந்தான்.

"இருபத்து நாலு மணி நேரமும் திறந்திருப்போம்.." என்ற கடைப்பெண், ரகுவின் அமெக்ஸ் கார்டைத் திருப்பினள். "உங்க லாடே இதோ தயாராயிடும்".

காபியைப் பெற்றுக்கொண்டு ஆளற்ற இடமாக அமர்ந்து பருகத் தொடங்கினான். சில நிமிடங்களில் அவனெதிரே ஒரு முதியவர் சிரித்துக் கொண்டிருந்தார். "மே ஐ?" என்றார் தன்னுடைய வீல் சேரை அவனருகே நிறுத்தியபடி.

"இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல நான் போகணும்.." என்றான் ரகு, கடியாரத்தைப் பார்த்தபடி.

"தட்ஸ் ஓகே.. அதுவரைக்கும் பொழுது போகும்" என்றார் முதியவர். "எண்பது வயசுக்கு மேலே தூக்கம் சட்டுனு வரமாட்டேங்குது.. ஏதோ என்னை வீல் சேர்ல உலாத்த அனுமதிச்சிருக்காங்க"

"உங்களைப் பாத்தா எண்பதுனு சொல்லவே முடியாது. யு லுக் யங்"

"நம்மில் சில பேர் வயதோ காலமோ கடந்தவர்கள்" சிரித்தார் முதியவர். "டோன்ட் மீன் டு ஸ்கேர் யு.. ஐ எம் மென்டலி யங்னு சொல்றேன்.. ஆமாம்..நீங்க எதுக்கு வந்திருக்கீங்க?"

"என் மனைவிக்கு நலமில்லை". ரகு காபி குடிப்பதில் கவனமாக இருந்தான்.

சிறிது மௌனத்துக்குப் பிறகு "தெரியும்" என்றார் முதியவர்.

ரகு சட்டென்று அவரை நிமிர்ந்து பார்த்தான். முதியவர் அவனை நேராகப் பார்த்தார். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. "என்ன சொல்றீங்க?" என்றான் ரகு.

"தெரியும்னு சொல்றேன்". முதியவர் அழுத்தமாகத் தொடர்ந்தார். "கவனமாகக் கேள். உனக்குப் பிறக்கப் போகும் மகன் மிகக் கொடியவன். பாதகம் மற்றும் அதர்மங்களின் மொத்த அம்சம். அவனைக் கொன்றாக வேண்டும். கருக்கலைந்து அவன் சாக வேண்டும் என்பது என்றைக்கோ எழுதி வைக்கப்பட்டது. நிச்சயமாக இறப்பான். அதற்கு நான் உத்தரவாதம். அதனால் தான் உன் மனைவிக்கு இப்படி நடக்கிறது. அவன் மறைவைப் பற்றிக் கவலைப்படாதே".

ரகு திடுக்கிட்டு எழுந்தான். "ஹூ ஆர் யூ?"

"அவசியமில்லை. உன் மகன் இறந்ததும் நீ என்னைப் பார்க்கப் போவதில்லை. அவன் இறந்தாக வேண்டும்.." என்ற முதியவர் நிறுத்தி நிதானமாக, "..ரகு.. அவன் இறக்கவில்லையென்றால் நீ அழிந்து போவாய்" என்றார்.

ரகுவுக்குக் கோபம் வந்து இரைந்தான். அவன் குரல் கேட்டு அவசரமாக ஓடி வந்த ஆஸ்பத்திரிச் சிப்பந்திகள், "என்ன ஆச்சு?" என்றனர்.

"திஸ் மேன்.." ரகு திணறினான். முதியவர் சோர்ந்திருந்தார். முகத்தில் களையில்லை. கண்கள் செருகியிருந்தன.

"எங்களை மன்னிச்சுருங்க சார்.." என்றனர் சிப்பந்திகள். "பத்தரைக்கு இவரோட பெட் டைம். உலாத்தக் கூட்டிப் போனோம். காபி சாப்பிட ஒதுங்கினோம். எப்படியோ ப்ரேக் விலகியிருக்க வேண்டும்.. வீல் சேர் நகர்ந்து வந்திருக்க வேண்டும்.. இவரால் அசையக்கூட முடியாது.. தொந்தரவுக்கு மன்னிச்சுருங்க.. பெக் யு டு நாட் ரிபோர்ட் திஸ்.. எங்க வேலை போயிடும்.. இவரால உங்களுக்கு எந்தத் தொந்தரவும் இருக்காது. வி ஆர் சாரி சார்" என்றபடி அவரைத் தள்ளிக்கொண்டு போனார்கள்.

ரகுவுக்கு வியர்த்தது. யாரிந்த ஆள்? என்னைப் பற்றி இவருக்கு எப்படித் தெரியும்? மகனா? எனக்கே தெரியாதே! என்ன உளறுகிறார் இந்தாள்? காபியை அங்கேயே வைத்துவிட்டு வேகமாகப் படியேறி மாடிக்கு விரைந்தான். எக்சக்யுடிவ் லாபியை அடைந்தான். லாபியில் இருந்த பெண் இவனைப் பார்த்ததும் பணிவாக "என்ன வேண்டும் சார்?" என்றாள்.

"இந்த இடத்தின் பாதுகாப்பு பற்றி எனக்குத் தெரிந்தாக வேண்டும். ஹூ இஸ் இன் சார்ஜ் ஆப் செக்யுரிடி?"

ஒரு நிமிடத்துக்குள் வந்து சேர்ந்த ஆறடிக்கு நாலடி மனிதர் ரகுவின் கையைக் குலுக்கி, "நான் சீப் செக்யூரிடி ஆபீசர்.. உங்களைப் போன்ற பிரபலங்கள் எங்கள் ஆஸ்பத்திரியைத் தேர்ந்தெடுத்தது எங்களுக்குப் பெருமை" என்றார். "என்ன செய்யட்டும்?"

ரகு நடந்தவற்றைச் சொன்னான், "லிஸன்.. ஐ'ம் நாட் க்ரேஸி ஆர் எனிதிங்.. காலையிலிருந்து இது போல் விளங்காத, விளக்க முடியாத சம்பவங்கள் நடக்கின்றன.. மே பி வி ஆர் பேரனாய்ட்.. டயர்ட்.. அது முக்கியமில்லை.. என் மனைவி பாதுகாப்பாக இருக்கிறாள் என்பது தான் எனக்கு முக்கியம்"

"கவலையே வேண்டாம் சார். உங்க மனைவி எங்க கண்காணிப்பில் ரொம்ப பத்திரமாக இருக்கிறார். வேண்டுமென்றால் நீங்களும் உங்க மனைவி அறையைக் கண்காணிக்கலாம். ஐபோன் ஆன்ராய்ட் ரெண்டுலயும் ரூம்வாச் அப்ளிகேஷன் இருக்கு. போனைக் கொடுத்தா நானே இலவசமா இன்ஸ்டால் செஞ்சு தரேன்" என்றபடி ரகுவின் ஐபோனை வாங்கிச் சில நிமிடங்களில் திருப்பிக் கொடுத்தார். "இதோ பாருங்க.. உங்க மனைவி அமைதியா படுத்திருக்காங்க".

ஐபோன் திரையில் விமலா அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. ரகுவுக்கு தெம்பாக இருந்தது. "ஐ'ம் சாரி. உதவிக்கு மிக நன்றி" என்றான்.

"எங்க கடமை சார். நீங்க சொன்ன விவரம் பத்தி நான் கவனிக்கிறேன். தேவைப்பட்டா நடவடிக்கை எடுக்குறேன்" என்ற செக்யூர்டி ஆபீசர், லாபி வரை வந்து ரகுவை வழியனுப்பினார். "உங்க வண்டி வெயிட் பண்ணிட்டிருக்கு".

டேக்சியுள் அமர்ந்ததும் முகவரியைச் சொன்னான். தூக்கம் கண்ணைச் சுற்றியது. வீட்டருகே வந்ததும் எழுப்பச் சொல்லிக் கண்ணயர்ந்தான். மூன் பே மார்கெட் தெருவின் கரடுமுரடு அவனை எழுப்பிவிட்டது. "என்ன சார்.. எழுந்திட்டீங்களா?" என்றான் டிரைவர். "நானே எழுப்பணும்னு இருந்தேன்"

"தேங்க்ஸ்" என்றான் ரகு.

"ரொம்ப டயர்டா இருக்கீங்க போல"

டிரைவர் என்னவோ சொல்லிக் கொண்டும் கேட்டுக் கொண்டும் வந்தான். ரகுவின் மனதில் வீல் சேர் முதியவர் சுற்றிச் சுற்றி வந்தார். வண்டி வீட்டு வாசலில் நின்றது தெரியாமல் சிந்தனை வயப்பட்டிருந்தான். "சார்.. இதானே வீடு..?" என்ற டிரைவரின் குரல் கேட்டு சுதாரித்தான். "நாற்பத்தியெட்டு டாலர்.. கேஷா க்ரெடிட்டா?"

மூன்று இருபது டாலர் நோட்டுக்களைக் கொடுத்தான் ரகு. "வச்சுக்க" என்றான். "வீடு வந்ததை கவனிக்கலே"

"பரவாயில்லை" என்று பணத்தை வாங்கிக் கொண்டான் டிரைவர். "ரொம்ப தேங்க்ஸ். ஆஸ்பத்திரில ப்ராப்ளமா சார்?"

"ஒண்ணுமில்லே.." என்றபடி இறங்கத் தயாரானான் ரகு.

"தப்பா நினைக்காதீங்க. லாபியில சொல்லிட்டிருந்தாங்க.. அதான் கேட்டேன்" என்ற டிரைவர், ரகு இறங்க வேண்டித் தானியங்கிக் கதவுக்கான பித்தானை அழுத்தினான். "கவலைப்படாதீங்க சார். உங்க பெண்ணுக்கு ஒண்ணும் ஆவாது"

"பெண்ணில்லப்பா. பெண்டாட்டி" என்றபடி இறங்கிய ரகு, டிரைவரை திரும்பிப் பார்த்தான்.

"எல்லாமே பெண் தானே சார்? கவலைப்படாதீங்க.. உங்க பெண்ணுக்கு எதுவும் நேராது.. உலகத்தைக் காப்பாத்தவே பொறந்திருக்கா பொண்ணு" என்ற டிரைவரின் முகத்தைக் கவனிக்குமுன் வண்டி நகர்ந்தது.

    சில மணி நேரங்களே உறங்கினாலும் தெளிந்து எழுந்தான் ரகு. இரவின் சம்பவங்கள் நிழலாட, ஐபோனை எடுத்து ரூம்வாச் அடையாளத்தைத் தொட்டான். நொடிகளில் ஆஸ்பத்திரியில் விமலாவின் அறை தெரிந்தது. படுத்தபடி மேலே எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்தாள். ஃபேஸ்டைமுக்கு மாற்றி அவளை அழைத்தான். நொடிகளில் அவள் போனில் சிரித்தாள். "டார்லிங்" என்றாள்.

"இப்பத்தான் நிம்மதியா இருக்கு விமலா" என்றான் ரகு. "என்ன எங்கேயோ மேலே வெறிச்சுப் பாத்துட்டிருக்கே?"

"எப்படித் தெரியும்?"

ரூம்வாச் பற்றிச் சொன்னான். "நீ எழுந்துட்டது தெரிஞ்சு ஃபேஸ்டைம்ல கூப்பிட்டேன்.. இங்கிருந்து உன்னைக் கண்காணிச்சுட்டு இருந்தேன்.."

"ஒரு கர்ப்பவதிக்கு நாட்டுல தனிமை இல்லாமப் போச்சே? சரி சரி.. என்ன வாச் பண்ணினே?"

"உன்னைத்தான். உன் முகத்தை.. உன் வயிற்றை.."

"மாரை வாச் பண்றியா? கேமை கீழிறக்கவா?" என்றாள் மென்மையாக.

"ஆஸ்பத்திரில ரேடியோக்ரபி அனுமதி உண்டு. போர்னாக்ரபி அனுமதிக்கறாங்களா என்ன?"

"போடா. நீ என் மாரைப் பார்க்க வேணாம்னா போ.. பட் ஐ வான்ட் டு ஸீ யு நேகட்" என்றாள். "சட்டையைக் கழட்டு.. சீக்கிரம் சீக்கிரம்.."

"ஓகே" என்று போனைக் கீழே வைத்தான். சட்டையைக் கழற்றுகையில் இன்னொரு போன் கால் வந்தது. அழைப்பது ஆஸ்பத்திரி என்று தெரிந்ததும், சட்டென்று எடுத்துப் பேசினான். "ஹலோ" என்றான். மறுமுனையில் விமலாவுக்கு மருத்துவம் பார்த்த டாக்டர். "ரகு.. உங்களோட பேசணும்.. அதான் அதிகாலைல எழுப்பிட்டேன்.." என்ற டாக்டரின் குரலில் பதட்டம். "தேர் மே பி எ காம்ப்லிகேஷன்"

"சொல்லுங்க டாக்டர்" ரகுவுக்கும் பதட்டம்.

"உங்களுக்கு இரட்டைக் குழந்தைங்கன்றது தெரியாது இல்லையா?"

"வாட்?"

"ஐ நோ.. நானே உங்க மனைவியோட நேடல் ரெகர்ட்ஸ் நேத்து பார்த்தனே.. எனக்கு அப்போ தெரியலே.. ஐ'ம் எம்பேரஸ்ட்.. பட் எங்க சோதனைகளை முடிச்சுப் பார்த்ததும்.. யு ஸீ.. வி டிட் த்ரீ சிக்ஸ்டி அல்ட்ரா சவுன்ட் அன்ட் சோனார் மேபிங்க்.. கரு அதிர்ந்திருக்குதா செர்வெக்ஸ் ஷார்டா இருக்குதானு பார்க்க.. ஸ்ட்ரேஞ்ச்.. விசித்திரம் பாருங்க.. இரண்டு ஹார்ட் பீட்.. தனித்தனியா கேக்குது.. நிச்சயமா கருவுல இருக்குறது இரட்டைக் குழந்தைங்கனு நம்புறேன்.."

"என்ன சொல்றதுனு தெரியலே டாக்டர்.. தேங்க்யூ சொல்லவா? என் மனைவி கிட்டே சொன்னீங்களா?"

"நாட் யெட்.. ரகு.. ஒரு சிக்கல் இருக்கு.. இரண்டாவது கரு ரொம்ப வீக். பிழைக்குமானு சந்தேகமா இருக்கு.. தேர் மே பி எ காம்ப்லிகேஷன்.. அதான் கூப்பிட்டேன்.. அதுல பாருங்க.. எனிவே, இப்ப உங்களுக்குத் தெரிஞ்சே ஆகணும்.. இரண்டு கருவுல ஒண்ணு பெண், இன்னொண்ணு ஆண். வீக்கா இருக்குறது பெண் சிசு. ஆண் சிசு கிட்டத்தட்ட பெண் சிசுவின் கழுத்தை நெறிக்குறாப்புல அழுத்திட்டு இருக்கு.. இத்தனை நாள் இது தெரியாம இருந்ததுக்கு உங்க மனைவியோட கருப்பையும் காரணமா இருக்கலாம்.. வெரி ஸ்ட்ரேஞ்.. பயலாஜிகலி.. இதை எப்படி புரிஞ்சுக்கிறது விளக்கறதுனு தவிக்கிறேன்.."

"என்ன செய்ய டாக்டர்?"

"வி ஹவ் டு ஸீ.. முதலில் இரண்டு சிசுக்களையும் பாதுகாப்பா பராமரிக்கணும். ஒண்ணு இறந்து போச்சுன்னா மற்றதுக்கும் ஆபத்து.. உங்க மனைவியோட கலந்து பேசி முடிவெடுக்கலாம்.. உடனே புறப்பட்டு வரீங்களா?"

"வரேன்" என்ற ரகுவின் மனதில் 'எல்லாமே பெண் தான்' என்று டிரைவர் சொன்னது எதிரொலித்தது.

(தொடரும்)▶ 3

18 கருத்துகள்:

  1. இரு பகுதிகளையும் சேர்த்துப் படித்தேன்,உலகை அழிக்க ஒன்று காப்பாற ஒன்றா?ஒரு கதை எழுத நீங்கள் அதிக ரிசர்ச் செய்கிறீர்கள் என நினைக் கிறேன்.கதையைப்பற்றி இப்போது என்ன சொல்வது .முடியட்டும்.ஆனால் ஒன்று.வலைப்பூவில் இப்படி எழுத உங்களைத் தவிர யாரும் இல்லை

    பதிலளிநீக்கு
  2. ஆஹா, முதல்லே பையர்னு சொல்லிட்டு அப்புறம் பெண்ணுமா? அதுவும் டிரைவர் சொல்றாரா? ஸ்ட்ரேஞ்சுனா இதான் ஸ்ட்ரேஞ்ச். அப்பாதுரை, எப்படி இப்படி எல்லாம்? இதான் திரும்பத் திரும்பத் தோணுது. ஆனால் இதில் நீங்க பயப்படறமாதிரி அதாவது திகிலடையற மாதிரி என்ன இருக்கு? ஒண்ணுமே இல்லையே? அடுத்தது இன்னும் மோசமா இருக்குமோ.

    இதிலே நீலன் எப்போ வரான்?? ஆவலுடன் காத்திருக்கேன்! யாரோட கண்ணைப் பிடுங்கப் போறான்?

    பதிலளிநீக்கு
  3. நன்றி சென்னைப் பித்தன் சார்.

    பதிலளிநீக்கு
  4. //திகிலடையற மாதிரி என்ன இருக்கு?

    விஜய் சினிமா மாதிரியே இல்லே?

    பதிலளிநீக்கு
  5. //யாரோட கண்ணைப் பிடுங்கப் போறான்?

    ஆக மொத்தம் கண்ணைப் பிடுங்கற வரைக்கும் விடப்போறதில்லேனு வச்சுட்டீங்க கீதாம்மா.. செஞ்சுருவோம்.

    பதிலளிநீக்கு
  6. உங்க கதைகள் எப்பவுமே சிறப்பு...
    அருமையான கதை...

    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    பதிலளிநீக்கு
  7. //அவன் இறக்கவில்லையென்றால் நீ அழிந்து போவாய்" என்றார்.//

    //இரண்டு கருவுல ஒண்ணு பெண், இன்னொண்ணு ஆண். வீக்கா இருக்குறது பெண் சிசு. ஆண் சிசு கிட்டத்தட்ட பெண் சிசுவின் கழுத்தை நெறிக்குறாப்புல அழுத்திட்டு இருக்கு..//

    //ரகுவின் மனதில் 'எல்லாமே பெண் தான்' என்று டிரைவர் சொன்னது எதிரொலித்தது.//

    மூணு முடிச்சையும் கவனமாகத் தான் போட்டிருக்கிறீர்கள். லேசில் அவிழ்ந்து விடாதபடிக்கு. இருந்தாலும் ஒண்ணைச் சார்ந்து இன்னொண்ணு ன்னு முடிச்சு போட்ட நேர்த்தி ஃபைன்.

    மூணையும் அவிழ்க்கணும்ன்னு இல்லே; ஒண்ணை அவிழ்க்கும் பொழுதே மத்த ரெண்டும் தானே கழண்டு அவிழ்ந்திடும் போல இருக்கு.

    இருந்தாலும் அவிழ்க்கறதிலே தான் சாமர்த்தியம் இருக்கு. அதான் விசிலடிக்க வைக்கும் போலிருக்கு.

    அந்த நீலன்?.. பேசாம முடிச்சை அவிழ்க்கிற வேலையை அந்தாளுகிட்டே கொடுத்திடலாம்ன்னு நெனைக்கிறீங்க?..

    பதிலளிநீக்கு
  8. சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை ஐயா. வலைப் பூவில் ,தமிழில் இப்படி ஒரு தொடரா. நம்பவே முடியவில்லை ஐயா. அருமை. காட்சிகளைக் கண் முன் கொண்டு வரும் எழுத்துக்கள். மகிழ்ச்சியுடன் தொடர்கின்றேன் ஐயா. நன்றி

    பதிலளிநீக்கு
  9. ஆஹா.....

    ஒன்றுக்குள் ஒன்று பிணைத்து அடுத்து என்ன என்று எதிர்பார்ப்பு அதிகரிக்க வைத்து விட்டீர்கள்.....

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. கண்ணைக் கவருபவன் கண்ணன். அவன் நல்லவனாகத் தான் இருக்கவேண்டும். பெண்ணாகிய ஒரு மாயப் பிசாசு அந்தப் பெண் கரு.
    ஏதொ ஒரு அம்மனுஷ்யத் தொடரில் இருக்கும் திகில் இதில நிறையவே இருக்கு,. இந்திரா சௌந்தரராஜனுக்கு உறவோ நீங்கள் துரை. :)

    பதிலளிநீக்கு
  11. இரண்டு கருவுல ஒண்ணு பெண், இன்னொண்ணு ஆண். வீக்கா இருக்குறது பெண் சிசு. ஆண் சிசு கிட்டத்தட்ட பெண் சிசுவின் கழுத்தை நெறிக்குறாப்புல அழுத்திட்டு இருக்கு..//

    டாக்டரிடம் சொல்லி ஆண் சிசு வேண்டாம், பெண்சிசுவை காப்பாற்றுங்கள் என்று
    சொல்லிவிடுவாரோ ரகு!

    // கருக்கலைந்து அவன் சாக வேண்டும் என்பது என்றைக்கோ எழுதி வைக்கப்பட்டது.//
    என்று பெரியவரும் சொல்கிறார்.
    பெரியவர் ஆண்குழந்தையை கருவிலேயே அழிக்க வேண்டும் என்கிறார்.
    அடுத்து டிரைவர் சொல்வது, அவர் வாழ்த்து

    "கவலைப்படாதீங்க சார். உங்க பெண்ணுக்கு ஒண்ணும் ஆவாது"

    உங்க பெண்ணுக்கு எதுவும் நேராது.. உலகத்தைக் காப்பாத்தவே பொறந்திருக்கா பொண்ணு"//

    //உனக்குப் பிறக்கப் போகும் மகன் மிகக் கொடியவன். பாதகம் மற்றும் அதர்மங்களின் மொத்த அம்சம். //
    பெரியவர் சொன்ன அதர்மத்தை செய்ய வந்த ஆண் குழந்தையை அழித்து உலகத்தை காப்பாற்றும் பெண் குழந்தை.என்று தெரிகிறது.


    டாகடர் சொல்வதைப்பார்த்தால்

    :ஆண் சிசு கிட்டத்தட்ட பெண் சிசுவின் கழுத்தை நெறிக்குறாப்புல அழுத்திட்டு இருக்கு..//

    கண், மூக்கு, தொண்டை எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது அல்லவா?அதனால் கண் நரம்பு பாதிக்கப்பட்டு பெண் குழந்தைக்கு கண் தெரியாமல் போய் விடும் என்று நினைக்கிறேன்.

    ஆண் குழந்தை பெண் கருவின் கண்ணை பிடுங்கும் நீலன் ஆகி விடுவான் நினைக்கிறேன்.

    பெரியவர், டிரைவர் எல்லாம் அம்மனுஷ்ய குரல்களாக வந்து இந்த கதையில் திகில் ஊட்டுபவர்கள் இல்லையா சார்?
    கதை படிக்க நல்ல விறு விறுப்பாய் இருக்கிறது.



    பதிலளிநீக்கு
  12. பின்னிட்டீங்க கோமதி அரசு! நல்லாவே இருக்கு (சத்தியமா எனக்கு இந்த கோணமெல்லாம் தோணவேயில்லே)

    பதிலளிநீக்கு
  13. இரண்டு சிசுக்களையும் பாதுகாப்பா பராமரிக்கணும். ஒண்ணு இறந்து போச்சுன்னா மற்றதுக்கும் ஆபத்து..

    எக்ஸார்ஸிஸ்ட்டும் ஓமனும் க்லந்து பார்த்தமாதிரி திகில் கதைதான் ..!

    பதிலளிநீக்கு
  14. ஆயிரமாவது பதிவுக்கு வாழ்த்துக்கூறி
    சிறப்பித்ததற்கு மனம் நிறைந்த
    இனிய அன்பு நன்றிகள்..

    பதிலளிநீக்கு
  15. மஞ்சள் துணியில் காசு முடிந்து நேர்ந்துக்கணும் கண்பட்டு விடக் கூடாதில்லையா.?அமானுஷ்யமான சங்கதிகள் சொல்லும் பதிவுகளில் பட்டம் வாங்கலாம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. நிசமாவே நடப்பதெல்லாம் விபரீதம் தான்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  17. ஆகா அடடே அற்புதம் இதைத் தவிர வேறு ஒன்று சொல்லத் தோன்றவில்லை சார்... ரேடியோகிராபி பார்னோகிராபி நல்ல சிலேடை :)))))))))))

    கோமதி அரசு அவர்களின் கமெண்ட் அற்புதம்

    பதிலளிநீக்கு
  18. கோமதி அரசு கதையை முடிச்சுட்டாங்களே!
    எப்படி இப்படியெல்லாம் எழுதறீங்க? படிக்கும்போது திகிலாக இல்லை. எப்படி கற்பனை இப்படிப் போகும் என்று உங்களை நினைத்துதான் வியப்பு!
    வல்லி நல்லா கேட்டாங்க: இந்திரா சௌந்திரராஜனுக்கு உறவா? என்று!

    பதிலளிநீக்கு