2012 முடியப் போகிறது. இந்த வருடத் தொடக்கத்தில் செய்வதாகத் தீர்மானித்தவைகளைச் செய்து முடிக்க இன்னும் இருபத்தைந்து நாட்களே உள்ளன, மக்களே! செய்யத் தொடங்க இன்னும் இருபத்தைந்து நாட்களே உள்ளன, அப்பாதுரை!
கணக்கற்ற வாக்குறுதிகளைக்
கண்ணாடியில் அள்ளி வீசும்
பத்து நாள் அரசியல்வாதி.
பாமரனின் புதுவருடச் சலுகை.
12/12/12 பற்றி ஒரு திகில் சிலருக்கு இருக்கிறது. இதை வைத்து நான் 2009ல் எழுதிய 'நாகூர் கசம் சே!' paranormal கதையை நினைவில் வைத்துக் கொண்டு இமெயில் அனுப்பி 'ஷ்யாமி 12/12/12 அன்று வருவாளா?' என்று விசாரித்த (பயமுறுத்திய) இந்ட்லி நண்பர் சுரேந்திரனுக்கு நன்றி. கதை மறந்தே போனது. கதையின் நாயகன் ரகு இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து போனான் என்று என்னுடைய சமீப இந்தியப் பயணம் ஒன்றில் தெரிந்து கொண்டேன். ஷ்யாமி வந்தாலும் ரகுவின் ஆவியைத் தான் தேடவேண்டும். உலகம் அழியுமோ என்றுக் கலங்குவோர் உடனடியாகக் கதையைப் படித்து பயப்படலாம். பிறகு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகலாம். ஒரு பயம் இன்னொரு பயத்தைப் போக்கலாம், அல்லது கூட்டலாம். எல்லாம் நல்லெண்ணம் தான்.
21/12/12 பற்றி ஒரு திகில் சிலருக்கு இருக்கிறது. இன்றிலிருந்து மூன்றாவது வெள்ளிக்கிழமை உலகம் அழியுமா? இதைப் பற்றிக் கலவரப்பட்டு NASAவுக்கு கோடிக்கணக்கில் இமெயில், கடிதங்கள் வருகின்றனவாம். தனியாக ஒரு இணையதளக் கேள்விபதில் பகுதி அமைத்து அமைதிப்படுத்த முனைந்திருக்கிறது அமெரிக்க அரசாங்கம்/NASA. அப்படி உலகம் அழியும் என்று நம்புகிறவர்கள் தங்கள் சொத்துக்களை விற்றுப் பணமாக என்னிடம் கொடுக்கலாம். என்னுடைய ஸ்விஸ் வங்கியில் போட்டு வைக்கிறேன். உலகம் அழியவில்லையென்றால் ஸ்விஸ் வங்கிச் சேமிப்புக்கான செலவை மட்டும் எடுத்துக் கொண்டு மிச்சதைத் திருப்பிவிடுகிறேன். என் கருமுடி, மீசை, தாடி மேல் சத்தியமாகச் சொல்கிறேன், என்னை நம்பலாம்.
2012ன் மோசமான தோல்வி, ஹ்ம், வேண்டாம், திரும்பத் திரும்பப் புலம்பி என்ன பயன்?
2012ன் மிகப்பெரிய வெற்றி.. க்கும்.. அது ஒன்றும் இல்லை.
2012ன் மிகப்பெரிய வெற்றி, கந்னம் ஸ்டைலாக்கும்.
கந்னம் ஸ்டைலுக்குச் சொந்தக்காரரான தென் கொரியாவைச் சேர்ந்தக் கலைஞர் ஸை (psy), யுட்யூப் சாதனத்தின் வழியாக உலகப் புகழ் பெற்றவர். இவரது கந்னம் ஸ்டைல் விடியோக்கள் ஒன்றரை பிலியன் பார்வைகளுக்கு மேல் பெற்று யுட்யூபில் யாராலும் எளிதில் எட்டிப் பிடிக்க முடியாத சாதனையைப் படைத்திருக்கிறது. இவரது அசல் விடியோ மட்டும் ஏறக்குறைய பிலியன் பார்வைகளைப் பெற்றிருக்கிறது. மெட்டு/டேன்ஸ் இரண்டையும் ஷாருக் கான், விஜய் போன்றவர்கள் காபியடித்து இந்தியாவுக்கு இன்னும் கொண்டு வரவில்லையென்றால் ஆச்சரியம். ஒரு வேளை ரஜனிகாந்துக்காகக் காத்திருக்கிறார்களோ என்னவோ.
கவனிக்கவில்லையெனில் மறுபடியும் சொல்கிறேன். யுட்யூபில் ஒன்றரை பிலியன் பார்வைகளுக்கு மேல்!!! ஒரே ஒரு பாடல்/ஆட்டம் மட்டும்! ஆங்கிலம் கிடையாது, பிரபலங்கள் யாரும் இல்லை. புது ஆள் புரியாத பாஷையில் பின்னி எடுக்கும் இந்த விடியோவுக்கு பார்வைகள் இன்னும் பிய்த்துக் கொண்டு போகின்றன. பாடலின் தொடக்கத்தில் விளம்பரத்தை இணைக்க போட்டா போட்டியாம். ஒரு யுட்யூப் பதிவை வெட்/ஒட் செய்து மறு யுட்யூப் பதிவு செய்வோருக்கும் விளம்பரங்கள் குவிகின்றனவாம்!
இந்த வருடம் முழுதும் அமெரிக்காவில் கந்னம் கூத்து. டீனேஜ் பிள்ளைகள் முதல் ஒபாமா வரை கந்னம் ஜூரம். மடானா, ப்ரிட்னி, ப்ரூஸ் ஸ்ப்ரிங்க்ஸ்டீன் என்று பழைய பிரபலங்களும் டெய்லர் ஸ்விப்ட், கேடி பெரி போன்ற புதுப்பிரபலங்களும் புஸ்க் புஸ்க் என்று கந்னம் சூடு போட்டுக் கொண்டு குதித்தது சிரிப்பாக இருந்தது. அசல் கந்னமும் சிரிப்பு தான் - அது வேறே விஷயம்.
still, ஜூரம் வந்து ஆடும் இந்த ரசிகர்களைப் பாருங்களேன், நான் சொல்வது புரியும். இந்த ரசிகர்களின் உற்சாகம் கொஞ்சமாவது நம்மைத் தொற்றிக் கொள்ளும்.
கந்நம் ஸ்டைல் -- நம்ம ஊர்ர் கொலைவெறி பாடல் ஹிட் ஆனது மாதிரி தான்.
பதிலளிநீக்குரசிக்க முடிகிறது.
//21/21/12 //
பதிலளிநீக்கு???
நாகூர் கசம் ஸே கதையை மறுபடி ஞாபகப் படுத்தி விட்டீர்கள்! படித்துத் திகிலலாம்!
கங்நம் பக்கம் திறந்தவுடன் என் கணினி சண்டி செய்கிறது. ரோட் ரோலரைக் கைகளால் தள்ள முயற்சிக்கும் பிராயத்தனம்! எனவே அந்த இன்பத்தை இப்போது நான் பெறவில்லை. ஏற்கெனவே சில நாட்களுக்கு முன் விகடனில் இந்தத் தகவல் படித்து இதே பக்கம் சென்றபோதும் இதே நிலைமை. கங்க்னத்துக்குக் கொடுத்து வைக்கவில்லை!!
பல பழைய தீர்மானங்கள் பாவமாக
பதிலளிநீக்குஎன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாலும்
புதிய தீர்மானங்களைத் தீர்மானிக்கத் துவங்கியிருக்கிறேன்
இது ஏதோ வருடாந்திரச் சடங்காகிவிட்டதைப் போல இருக்கிறது
இந்த வருடமாவது இது சடங்காகாது இருக்கவேண்டும்
ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி
//"I know life can be tough at times, but when I think about the fact that I'll be dead for trillions and trillions of years longer than I'll be alive, I think I'll hang around and deal with it as long as I can". துயரங்கள் வாட்டினாலும், வாழ்வது எவ்வளவோ மேல்.//
பதிலளிநீக்குLife is never tough, as we say.
We have not just learnt to live in a simpler way
subbu thatha
வரட்டும் 2013
பதிலளிநீக்கு//என் கருமுடி, மீசை, தாடி மேல் சத்தியமாகச் சொல்கிறேன், என்னை நம்பலாம்//
பதிலளிநீக்குஆஹா இல்லாத சமாச்சாரங்கள் மட்டும் சொல்றீங்களே ஐயா எப்படி நம்பறது :)
பதிலளிநீக்குஎன் பிறந்த நாள் கடந்த வருடம்11-11-11 ல் வந்தபோது எதுவும் வித்தியாசமாக இருக்கவில்லையே. உங்கள் நாகூர் கசம் சே இப்போதுதான் படித்தேன். என் இரு கதைகளில் ( ஐந்தும் இரண்டும், இப்படியும் ஒரு சாமியார் ) என் அனுபவங்கள் பதில் தெரியாத சில நிகழ்வுகளாக எனக்குத் தோன்றியது. may be halucinations.! இதற்கு முன் உங்களது ஒரு கதை இதே சாயலில் படித்தது நினைவுக்கு வருகிறது
தன்னம்பிக்கையோடு புதுவருடத்தைத் தொடங்குவோம்.
பதிலளிநீக்கு//கந்நம் ஸ்டைல்// மீண்டும் உங்கள் பக்கத்தின் மூலம் பார்த்தேன்...
பதிலளிநீக்குவிரைவில் நமது சினிமாவில் வரக்கூடும்...
போகட்டும் 2012. 2013 - ஐ வரவேற்போம்... :)
கங்னம் என்ற பெயரில் ஏற்கெனவே குழுமங்களில் பார்த்தாகிவிட்டது. மறுபடி பார்க்கணுமா? :))))
பதிலளிநீக்குஅது சரி உலகம் அழியாமல் இருக்க என்ன தற்காப்பு ஏற்பாடுகள் செய்திருக்காங்களாம்? :)))))
உங்க நாகூர் கசம் ஸே கதையை இன்னும் படிக்கலை. இப்போ இங்கே ராத்திரி எட்டேமுக்கால் மணி. படிக்கலாமா வேண்டாமானு தெரியலை. ஏனெனில் பயமாக
இல்லை. அந்தப் பக்கத்தைத் தேடிப்போய்ப் படிக்கணும், ஏனெனில் இன்னும் சிறிது நேரத்தில் மின்சாரம் போயிடும். :))))))
நல்ல ஒரு அலசல்.
பதிலளிநீக்குநல்ல தகவல்கள் தந்துள்ளீர்கள்.
மிக்க நன்றி.
well said சுப்பு தாத்தா! குறை நம்மிடம்தான் இருக்கிறது.
பதிலளிநீக்குவாழ்க்கை இனிமையானது.துயரங்கள் வாழ்க்கை மீதான பார்வையை இன்னும் தெளிவாக்குகிறது - கண்ணாடியைத் துடைத்துக் கண்ணில் போட்டுக்கொள்வதைப் போல.
கன்னம் ஸ்டைல், இன்னொரு ஸ்டைல் வரும் வரைக்கும் இப்படியே த்ருத்கத்தில் சாணி மிதிக்கும். ஸைக்கு வாழ்த்துக்கள்.
இப்படி ஒரு ஹிட் ஆகும் என்று நினைத்திருக்கமாட்டார்.மற்றவர்களின் நிம்மதியை விட அவருடைய நிம்மதிக்கு பெருத்த சேதாரம் ஏற்பட்டிருக்கும்.
well said subbu thatha! (எனக்கும் முதலில் இதான் தோன்றியது சுந்தர்ஜி!)
பதிலளிநீக்கு//என் பிறந்த நாள் கடந்த வருடம்11-11-11 ல் வந்தபோது
பதிலளிநீக்குவாவ்.. அதுவே ஒரு சிறப்பு தானே GMB சார்? நூற்றாண்டுக்கு ஒரு முறை வரக்கூடிய அந்தப் பிறந்த நாளை வாழ்நாளிலேயே கொண்டாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறதே?
// மறுபடி பார்க்கணுமா? :))))
பதிலளிநீக்குடிவி, ரேடியோ, நண்பர்கள் வீட்டுப் பார்ட்டி, கஸ்டமர் பார்ட்டி, பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளோட நட்புக்களின் பிறந்தநாள், தெருவோர ப்ளாக் பார்ட்டி, பள்ளிக்கூட விழா, எலக்சன் ப்ரோக்ரேம், இரவு நேர டாக் ஷோ, காலை நேர மார்னிங் ஷோ இது போதாதென்று பேஸ்கெட்பால், பேஸ்பால், புட்பால் லீக் மேச்களின் தொடக்கம்... இப்படிப் பொழுது விடிஞ்சா போனா கந்னம் கேட்டவங்களுக்கு எப்ப்ப்ப்ப்படி இருக்கும்?? யாம் பெற்ற இன்பம் :))
இதென்ன ப யங்கரப் பின்னூட்டமா கீதா சாம்பசிவம்?
பதிலளிநீக்குஎன்ன மேஜிக் கீதா சாம்பசிவம், எனக்கு அந்த மாதிரி வரி வரியா கேப் விட்டு வரவில்லையே? எத்தனை லைன் கேப் கொடுத்தாலும் பவுக்கு பக்கத்துல ஒரு ஸ்பேஸ் விட்டு ய வந்துடுச்சே?
பதிலளிநீக்குஇத்தனை நாளும் சும்மா இருந்த மீடியா இப்போ ஒபாமா கந்னம் கச்சேரிக்குப் போறாருன்னதும், பத்து வருசத்துக்கு முன்னால அமெரிக்கா ஒழிகனு கோஷம் போட்டு பாடின கந்னம் பாட்டு நேத்துலந்து படாத பாடு படுது - படுத்துது. எழுதின வேளை பாருங்க!
பதிலளிநீக்குஒபாமாவுக்கும் அமெரிக்கா பிடிக்காது - கந்னத்துக்கும் அமெரிக்கா பிடிக்காது. என்னா ஒத்துமைனு சிலபேர் சொல்றாங்க.
மிக்க நன்றி அப்பாதுரை.
பதிலளிநீக்குசில வருஷங்களுக்கு முன்னாள் எடுத்த தீர்மானங்களையே இன்னும் நிறைவேற்ற முடியாமல் இருக்கிறேன். அதனால் இனி தீர்மானங்களே எடுக்க கூடாது என்று தீர்மானித்திருக்கிறேன். வருபவைகளை சமாளித்து வாழ்வதுதான் வாழ்வாக இருக்கிறது. இதற்கு தீர்மானங்கள் எதற்கு. :) நீங்கள் எப்பொழுதும்
பதிலளிநீக்குசொல்வதை போல 'பாதையை வகுத்து கொண்டே பயணிப்பது' வெகு சிலரால்தான் முடிகிறது.
'கந்நம்' இப்பொழுதான் பார்க்கிறேன். கடல் போன்ற ரசிகர்கள் கூட்டத்தின் உற்சாகத்தை பார்க்கும்போது மனதிற்கு உற்சாகமாத்தான் இருக்கிறது. ஸை அவர்களை மனதார வாழ்த்த தோன்றுகிறது. வாழ்த்துக்கிறேன். ஒருவரை உற்சாக படுத்த முடிவது என்பது எவ்வளவு பெரிய விஷயம். இவரால் எவ்வளவு பேர் உற்சாகமாக இருக்கிறார்கள். எனவே இது ஒரு மிக பெரிய சாதனைதான்.
பத்தோட பதினொன்றும் போச்சு. இப்போ பனிரெண்டு போக போறது. போகட்டும். பதிமூன்றில் வருபவைகளை சமாளிக்க மனதில் திடமும், உடலில் தெம்பும் இருக்கும் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையோடு 2013 ஐ வருக வருக என்று வாழ்த்தி வரவேற்கிறேன்.
அனாவசிய பயங்களையும் கண்மூடித்தனங்களையும் இந்த வருடத்தோடு அழிப்போம். தன்னம்பிக்கையோடு புதுவருடத்தைத் தொடங்குவோம்.//
பதிலளிநீக்குதன்னம்பிக்கயோடு புதுவருடத்தை நிச்சியமாய் தொடன்ங்குவோம்.
புது வருடம் எல்லோருக்கும் நல்லதே செய்யட்டும்.
http://qwertymp3.com/detail/1/bzFiSW1DaTE/pelli-thamboolam-prema-nindina.html
பதிலளிநீக்குமாலை சூடும் மணநாள் பாடலின் தெலுங்கு வெர்ஷனில் வரும் ”ஜீவிதமே ஒரு சங்க்ராந்தி அனுதினமும் மனக்கு யுகாதி” வரிகள்தாம் நினைவிற்கு வருகின்றன.
இப்பவே புத்தாண்டு வாழ்த்துகளை சொல்லிடறேன்,
பதிலளிநீக்குநடந்தது நல்லதற்கு நடப்பவை நல்லதற்கே நடக்கப்போவதும் நல்லதற்கே