2012/11/24

அவல் என நினைத்தால்..





            ன்னொரு இந்திய நண்பர் மூட்டை கட்டத் தொடங்கியிருக்கிறார். மகள் முதுகலைக் கல்லூரியில் சேர்ந்த இரண்டே மாதங்களில் நட்புத் தம்பதிகள் இருவரும், "போதும்டா ஆசாமி! (நாத்திகத் தம்பதிகள்) இத்தனை நாள் அமெரிக்காவில் இருந்ததும் சேர்த்ததும் போதும்" என்று வேலையை உதறினார்கள், வீடு கார் என்று தொடங்கி ஐபாட் வரை அத்தனை வசதிப் பொருட்களையும் விற்றார்கள் (கராஜ் சேல் எனும் சுலபமான சந்தைமுறை இன்னும் இந்தியாவைத் தொடவில்லை என்று நினைக்கிறேன்). பெண் பெயரில் பாதிப் பணத்தைப் போட்டார்கள், மீதிப்பணத்தில் கோயமுத்தூர் அருகே முதியோர் இல்லம் ஒன்றில் இடம் வாங்கினார்கள்.. கிளம்பத் தயாராகி விட்டார்கள். புதுவருடத்தை இந்தியாவில் கொண்டாடப் போகிறார்கள். நீடித்த மின்சாரத் தடையுடன் வாழப் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்க நினைவாக ஒரு சிறிய விழா வைத்து அழைத்திருந்தார் நண்பர். போனதும் என்னை ஆறத்தழுவி, "எல்லாம் முடிஞ்சாச்சு அப்பாத்துரை" என்று என் பெயர் உடைய அழுத்தினார். "இனிமே பொண்ணு கல்யாணம் கில்யாணம்னு ஏதானு செஞ்சுகிட்டு, அதும் கல்யாணத்துக்குக் கூப்பிட்டா இங்கே வருவோம்.. இல்லாட்டி அவ்ளோ தான்.. இந்தப் பக்கமே தலைவச்சுப் படுக்கப் போறதில்லே.." என்றார். எனக்கு மட்டுமே கேட்டப் பெருமூச்சுடன் வாழ்த்தினேன்.

விழாவுக்கு வருகிறேன். இந்த ஊரில் நட்புக்கூட்டம் சேர்ந்தால் 'இந்த மேரதான் அந்த மேரதான்' என்று ஏதாவது செய்வார்கள். இது ஓடுகிற மேரதான் அல்ல. சொல்கிறேன்.

நண்பர் எம்ஜிஆர் ரசிகர். ஊருக்குக் கிளம்புமுன் தன் முப்பது வருட ஆசை ஒன்றைத் தீர்த்துக் கொண்டார். எம்ஜிஆர் சினிமா மேரதான் ஒன்றைத் தன் ஊர்திரும்பல் விழாவின் மையக் கொண்டாட்டமாக அமைத்தார் (மோகன்குமாரின் பதிவுப்பெயர், பொருள் புரிந்து நெற்றியில் அடித்தது).

ஒரு புறநகர் சினிமா அரங்கை வார இறுதிப் பேகேஜ் என்று புதன் கிழமை முதல் ஐந்து நாள் வாடகைக்கு எடுத்திருந்தார் நண்பர். அவர் அழைத்திருந்த சுமார் இருபது குடும்பங்களும் தினம் அரங்கிலேயே தஞ்சம். அரங்கில் இரண்டு சினிமா தியேட்டர்கள். இரண்டு தியேட்டரிலும் தினம் சுமார் பதினெட்டு மணி நேரம் எம்ஜிஆர் படங்கள் ஓட, அரங்கிலேயே விருந்து, அரட்டை, விடியோ விளையாட்டு, கேரம், சீட்டாட்டம்... எங்கிருந்தோ பல்லாங்குழி புளியங்கொட்டை கூட கொண்டு வந்திருந்தார்கள்!.. அண்மை ஓட்டலில் ஐந்து ரூம்கள் குட்டித்தூக்கம் மற்றும் பிற வசதிகளுக்கு என அருமையாக ஏற்பாடு செய்திருந்தார்.

எத்தனையோ வருடங்கள் கழித்து முதல் வரிசையில் அமர்ந்து விசில் அடித்தேன். சுகமான அனுபவம். ஒரு அமெரிக்க நண்பர் அத்தனை எம்ஜிஆர் படங்களையும் பார்த்தார். கிளம்பும் பொழுது தமிழ் சினிமா ஆச்சரியம் அவர் கண்களில் ஒட்டிக் கொண்டிருந்தது. "you guys make films, we only make movies" என்றார் எங்களிடம். புரிந்தது போல் தலையாட்டினோம்.

வித்தியாசமான thanksgiving. அரட்டை அமர்க்களத்தில் எங்கள் தூக்கம் போனது. எனினும் நட்புத் தம்பதியருக்குப் பெரும் நிறைவு. அதுதான் முக்கியம்.

Thanksgiving என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

அமெரிக்கா வந்த புதிது. ஒரு தமிழ் நண்பர் என் போன்ற சோற்றுக்கு லாட்டரியடித்த மாணவர்களை அழைத்து வருடந்தோறும் விருந்து கொடுப்பார். ஒருமுறை விருந்துக்கு ஒரு பிரிடிஷ் பேராசிரியரை அழைத்திருந்தார். சும்மா இருக்காமல் ஒரு கேனை அமெரிக்க மாணவன் அவரிடம், "இங்கிலாந்தில் தேங்ஸ்கிவிங் எல்லாம் கொண்டாடுவீர்களா?" என்றான்.

பேராசிரியர் அமைதியாக, "ஜூலை நாலாம் தேதி கொண்டாடுவோம்" என்றார்.


            னித இனம் மூளை மழுங்கி வருவதாக - நம்முடைய புத்திசாலித்தனம் குறைந்து வருவதாக - கண்டுபிடித்திருக்கிறார்கள் ஸ்டேன்பர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள். மனித அறிவாளுமையை நிர்ணயிக்கும் ஏறத்தாழ ஐந்தாயிரம் மரபணுக்களை வகைப்படுத்தி ஆராய்ந்தவர்கள், இந்தப் பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்கள்.

'இது என்ன பெரிய கண்டுபிடிப்பு - என் அப்பா அம்மாவுக்கும் மனைவி கணவருக்கும் இன்ன பிறருக்கும் எப்போதோ தெரிந்த விஷயமாச்சே?' என்று நீங்கள் எண்ணினால் நானும் துணை. எனினும், இவர்கள் கண்டுபிடித்திருப்பது உங்களையும் என்னையும் பற்றியல்ல. பொதுவாகச் சொல்லியிருக்கிறார்கள். அதாவது, மனித இனம் தன்னுடைய மூளை வளர்ச்சியின் உச்சத்தை எப்போதோ அடைந்துவிட்டதாம்.

எப்போது அடைந்ததாம்? மனித இனம் கூட்டாக வாழும் நாகரீகத்தைத் தழுவிய போது என்கிறார்கள். அதாவது, ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பாம்.

கூட்டாக வாழத்தொடங்கியதால் மனித அறிவு அந்த வாழ்க்கைக்குத் தேவையான மாற்றங்களுக்குத் தன்னைத் தயார் செய்வதிலேயே மூளையைச் செலவழிக்கத் தொடங்கியதால், மூளை தொடர்ந்து வளரவேயில்லையாம்.

இதை எதிர்த்து ஒரு ஆய்வாளக்கூட்டம், "அதெப்படி? இன்றைக்குக் காணப்படும் இத்தனை வளர்ச்சிகளும் மூளை வளராமல் ஏதாவது கடவுள் கொண்டு வந்து போட்டதா?" என்று வம்புக்கு வர, முதல் ஆய்வாளக் கூட்டம், "அப்படியில்லை.. மனித இனம் தன் மூளையை lateral developmentஆகப் பயன்படுத்தி வருகிறது. மூளையின் பயன்பாடு வளர்ந்தாலும் மூளையின் அளவு ஆயிரக்கணக்கான வருடங்களாக வளரவேயில்லை" என்று விளக்கியது. எதிர்கூட்டம் விடாமல் "இது போன்ற ஆய்வில் நேரத்தையும் பணத்தையும் செலவழிப்போருக்குத் தான் மூளை வளரவில்லை" என்று இடித்தது.

என்னுடைய ஓட்டு எதிர்க்கட்சிக்கு (எப்போதுமே).

போகட்டும், நம்முடைய மூமூமூமூமூ...மூதாதையரின் மூளை நம் மூளையைவிட ஒரு சைஸ் பெரிதாக இருந்திருக்கலாம். அதைக் கண்டுபிடிக்கும் அளவுக்கு நமக்கு மூளை இருக்கிறது. அதுதான் முக்கியம்.

மூளை அளவு என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

மூளை மியூசியம் ஒன்றில் உலகத்தின் அத்தனை நாடு/இன மக்களின் மூளை அளவுகளையும் விவரங்களையும் தொகுத்துக் காட்சியில் வைத்திருந்தார்களாம். மற்ற இனங்களை விட சர்தார்களின் மூளை மிகப்பெரிதாக இருந்ததாம். அதை மனைவி மக்களிடம் காட்டிப் பெருமைபட்ட ஒரு சர்தார், "நல்ல வேளை நாம மூளையை பொறுப்பா அப்படியே வச்சிருக்கோம், மத்தவங்களைப் போல செலவழிக்காம.." என்றாராம்.


            ந்தப் பக்கம் அப்படியென்றால், இந்தப்பக்கம் இப்படி ஒரு ஆராய்ச்சி.

மரணத்தை வெல்ல முடியும் என்றுத் தீர்மானமாகச் சொல்கிறார்கள் marine வேதியல் ஆராய்ச்சியாளர்கள்.

நிறையச் சிரிக்க வேண்டும், கவலை இல்லாமல் இருக்கவேண்டும், பற்றறுக்க வேண்டும், அரை வயிறு சாப்பிட வேண்டும் போன்ற 'சும்மா இலக்கியத்தனப்' பேச்சு இல்லை. திருமூலரின் 'காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக் கூற்றை யுதைக்குங் குறி'யுமல்ல.

இது அசலில் நோ டெத். சாவுக்குச் சாவு. கயாவுக்கு ஒரு கயா. மரணத்தை எண்ணிக் கலங்காத விஜயனின் ரகசியம். இந்த ரகசியம் கெமிஸ்ட்ரியில் புதைந்திருப்பதாகச் சொல்கிறார்கள் ஸ்மித்சோனியன் ஆய்வாளர்கள். அப்படி என்ன ரகசியம்?

செசியம் க்லோரைட், செசியம் க்லோரைட் என்று ஒரு உப்பு. இந்த உப்பின் ஒரு முக்கிய பாதிப்பு, RD என்று செல்லமாக வழங்கப்படும் Reversed Development. உடனே நாம் குரங்காவோம் என்று பயப்படவேண்டாம். இந்த RD ரொம்ப நல்ல RD.

நீரினங்களில் இந்த உப்பின் பாதிப்பை ஆராய்ந்தவர்கள், 'turritopsis nutricula' எனப்படும் jelly fish வகை தாமாக இறப்பதே இல்லை என்று கண்டுபிடித்தார்கள். செசியம் உப்பின் பாதிப்பினால் இந்த மீன் வகையின் உயிரணுக்கள் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்கின்றனவாம்.

alright! அங்கிருந்து மனித இனத்துக்குக்கானப் பயன்பாடு, தொட்டு விடும் தொலைவு தானே?

நமது உடலின் திசு மற்றும் உயியரணுக்களை 'பிறந்த நிலைக்கு' மீண்டும் எடுத்துப் புதுப்பிக்க வைக்கும் RD உப்பை வருக வருக என்று வரவேற்கிறேன். நமது செல்கள் இயற்கையாகத் தம்மைத்தாமே தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டால், என்றைக்கும் இளமை தானே? மரணபயமே லேதே? ..காலருகே வாடா, சற்றே உன்னை மிதிக்கிறேன். எல்லோரும் பாடலாம். மீசை optional.

காலனை வெல்லும் இந்த உப்பு, என் வாழ்நாளில் தெருமுனை முருகன் கடையில் கிடைக்கப் போவதில்லை. இந்த நூற்றாண்டு முடிவுக்குள் கிடைக்கலாம், முருகன் கடைகள் மூடினாலும். சின்ன சிக்கல்கள் தீர வேண்டும் முதலில். இது முழுக்க முழுக்க கதிரியக்க உப்பு என்பதால் கட்டுப்பாட்டுடன் nuclear medicineஆக மட்டுமே பயன்படுகிறது. இப்போதைக்கு 'அருகிலிருந்தும் தொடப்பயந்தேனே' கதை.

மரணத்தை வென்றால் 'கடவுள் சொர்க்கம் நரகம் எல்லாம் என்னாவது?' என்றக் கவலைகள் கிடக்கட்டும், மனிதம் மரணத்தை வெல்ல ஒரு சாத்திய வழி தெரிந்திருக்கிறது. அதுதான் முக்கியம்.
மரணம் கடவுள் சொர்க்கம் நரகம் என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

ஒரு பூசாரி, ஒரு மருத்துவர் - ஒரே நேரத்தில் இறந்த பின் எமனைச் சந்திக்கிறார்கள். எமன் இருவரையும் வரவேற்று "இருவருக்குமே சொர்க்கம்" என்று தீர்ப்பளித்து அனுப்புகிறான்.

சொர்க்கத்தில் ஒரு பெரிய வசதியான இடத்தில் மருத்துவருக்கு இடம் கிடைக்கிறது. பரமசிவனுக்குப் பக்கத்து வீடு.

பூசாரிக்கோ முப்பத்து இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து சொச்ச தேவர் ஒருவருடைய வீட்டின் பின்கட்டில் ஒரு இலையில்லா மரத்தடியில் சிறிய கூரை போட்டுக் கொடுக்கிறார்கள்.

மருத்துவருக்குப் புரியவில்லை. பரமசிவனிடம், "என்ன இது மிஸ்டர் பரமசிவம்? இந்தப் பூசாரி நாள் முழுதும் உம் போன்றக் கடவுள்களையே வழிபட்டு புகழ்பாடி வந்தார். அவருக்கு இப்படி ஒரு இடம். நாளும் பணம் தேடிக்கொண்டிருந்த டாக்டரான எனக்கு இத்தனை வசதியான இடமா, புரியவில்லையே!?" என்று கேட்டார்.

பரமசிவன், "ஐயா.. இங்கே பூசாரிகள் கணக்கில்லாமல் வராங்க.. ஆனால் பாருங்க.. சொர்க்கத்துக்கு வந்திருக்கும் முதல் டாக்டர் நீங்கள் தான். அதனால் இந்த வரவேற்பு" என்றார்.


            மெரிக்கத் தேர்தல் பரபரப்பினிடையே ஒரு கொடிய செயல் ஊடகங்களில் பின்தங்கிவிட்டது. பத்து மாதச் சிறுமியைக் கடத்திச் சென்றுக் கொன்றக் குற்றத்துக்காக ரகுநந்தன் எனும் கயவன் பிலடெல்பியாவில் கைது செய்யப்பட்டுச் சிறையிலிருக்கிறான். வழக்கு நடைபெற்று வருகிறது.

கிராதகன் ரகுநந்தன் சிறுமியை மட்டும் கொல்லவில்லை. சிறுமியைப் 'பார்த்துக் கொண்டிருந்த' அவளுடையப் பாட்டியையும் கொன்றிருக்கிறான். எதற்காக? ஐம்பதாயிரம் டாலர் பணத்துக்காக!

இந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்தால் கயவனும் திருந்துவானே?

தற்காப்புக்கான அனைத்து சக்தியும் இழந்த முதியவரை.. தற்காப்பு எண்ணம் கூடத் தோன்ற இயலாதக் குழந்தையை.. this.. this monster... this demon.. ரகுநந்தன் ராட்சசன் ஆனதேன்?

கொலைகளையும் செய்துவிட்டு, 'குழந்தையைக் காணவில்லை' என்று வஞ்சிக்கப்பட்டக் குடும்பத்துடன் 'தேடலில்' பங்கெடுத்துக் கொண்டானாம். இவன் மனிதன் தானா?

அனேகமாக இவனுக்கு மரண தண்டனை கிடைக்கும். கிடைக்க வேண்டும். ரகுநந்தனின் கொட்டைகளை அந்தக்காலத் துருப்பிடித்தப் பாக்குவெட்டியால் உயிர் போகும் வரை நசுக்கி நறுக்கிக் கொல்லவேண்டும் என்று கனம் கோர்ட்டாரைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

சிறுமியின் பெற்றோருக்கு என் உளமார்ந்த அனுதாபங்கள், வருத்தங்கள். எத்தனையோ கனவுகளுடன் அமெரிக்கா வந்து அத்தனையும் சிதைந்துத் திரும்பிய இந்தியத் தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்களுடைய இழப்புக்கு அளவில்லை. மிகக் கொடுமை.

இந்த வேளையில் உற்றார் உறவினரின் அன்பும் ஆதரவும் இவர்களுக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும். துயரினின்று மீள்வது முக்கியம். பணத்தாசைக்குச் சுலபமாகப் பலியாகும் நமக்கு ரகுநந்தன் போன்றக் கொலைகாரர்கள் பாடமாவதும் முக்கியம்.
கொலைகாரன் என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது. (எங்கே என் கண்ணியம்?)

ஒரு சிறுமியைக் கொலை செய்ய எண்ணிய ஒரு கொலைகாரன், அவளைக் கடத்தி ஒரு இருண்ட காட்டுக்குள் அழைத்துச் சென்றானாம்.

வேண்டாம்.. மேலே சொல்ல மனம் வரவில்லை.


            ந்த வாரம் அத்தனை எம்ஜிஆர் படங்களைப் பார்த்ததும், ஏற்கனவே தெரிந்திருந்த ஒன்று தீர்மானமானது.

சரோஜாதேவியே எம்ஜிஆருக்கு மிகப் பொருத்தமான ஜோடி. 'ஆயிரத்தில் ஒருவன்' மட்டும் விதிவிலக்கு.

கொஞ்சம் கூடப் பொருந்தாத இணை நடிகைகள் பாரதி, வாணிஸ்ரீ, மற்றும் லதா. தேவிகா சற்று ஆச்சரியமான பொருத்தம். எம்ஜிஆர் அருகில் இருந்தாலும் பானுமதி, சாவித்திரி இருவரும் ஏதோ தனியாக நடிப்பது போலிருந்தது. சந்திரகலா, மஞ்சுளா இருவரையும் ஏன் தன் ஜோடியாக நடிக்க வைத்தார் எம்ஜிஆர் என்பது புதிர்.

பின்னாள் படங்களைப் பார்க்கையில் எம்ஜிஆர் ஜெயலலிதாவுக்குப் பலமா அல்லது ஜெ எம்ஜிஆருக்குப் பலமாக இருந்தாரா என்றக் கேள்வி அடிக்கடித் தோன்றியது.

பாடல் காட்சிகளில் சரோஜாதேவி சளைக்காமல் எம்ஜிஆரையே கணக்கு பண்ணுகிறார்! எம்ஜிஆர் பானுமதியிடம் பயந்து நடிக்கிறார். பத்மினி எம்ஜிஆர் படங்களில் அழகாக இருக்கிறார். சௌகார் ஜானகிக்கு அட்டகாசமான பாடல்கள் கிடைத்திருக்கின்றன. கேஆர்விஜயா ஜெயலலிதா இருவருடனும் எம்ஜிஆர் 'நெருங்கி' நடித்திருக்கிறார்.

வில்லன்களில் நம்பியாருக்குத் தனியிடம் கொடுத்திருக்கிறார். மற்றவர் படங்கள் போல் நாகேஷ் காமெடி எம்ஜிஆர் படங்களில் அத்தனை சிறப்பாக இல்லை.

எம்ஜிஆரைப் போல் நடனமாட தமிழ்ச் சினிமாவில் யாரும் இல்லை. 'ஆடலுடன் பாடலைக் கேட்டு' போல் ஒரு வேக நடனக் காட்சியை நான் பார்த்ததில்லை என்றே நம்புகிறேன். விஜயலட்சுமியுடன் போட்டியாட்டம் சில நேரம் கேமரா ட்ரிக்கோ என்று நினைக்க வைத்தது. நடனத்தை ரசித்த இன்னும் சில பாடல்கள் 'பல்லவன் பல்லவி', 'நல்ல வேளை'.

ஜெமினி சிவாஜியைப் பார்க்கையில் எம்ஜிஆர், பாடலுக்கேற்ற உடையலங்காரத்தில் மிகுந்த கவனம் எடுத்துக் கொண்டிருக்கிறார். 'வனமேவும் ராஜகுமாரி' பாட்டில் ராஜேந்திரனுக்குத் துணைவரிகளைப் பாடுகிறார் என்றாலும் எம்ஜிஆரின் உடையும், நடன அசைவில் பெண் பாவனையும் மறக்கவே முடியவில்லை.

கேவிஎம் எம்ஜிஆருக்கு நிறைய ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார். மிகவும் ரசித்த கேவிஎம் பாடல்கள்:'உன்னை அறிந்தால்', 'அழகுக்கு மறு பெயர்'. இரண்டு பாடல்களிலும் சவுன்டுக்கு ராஜன் சொக்க வைக்கிறார். எம்எஸ்வி எம்ஜிஆருக்கு உபரியாக உழைத்தார் என்றுச் சொல்வார்கள். உண்மைதானோ என்றுத் தோன்றியது. அனைத்து டூயட்களிலும் டிஎம்எஸ்-சுசீலா அனுபவித்துப் பாடியிருக்கிறார்கள். 'தஞ்சாவூரு சீமையிலே', 'நாங்க புதுசா' பாடல்களில் சுசீலா டிஎம்ஸை லபக் என்று விழுங்கியிருக்கிறார்.

இந்த வாரம் பார்த்தப் படங்களில் மிக மோசமானது நவரத்தினம். மிக மோசமான பாடல் படமாக்கம்/வரிகள்: 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. எப்பேற்பட்ட பாடல் மெட்டை எப்படி வீணாக்கியுள்ளார் எம்ஜிஆர்... எண்ணித் தாங்கவில்லை. முதல் முறையாகப் பார்த்து, சற்றும் எதிர்பாராமல் ரசித்த படம்: பெற்றால் தான் பிள்ளையா.

எம்ஜிஆர் டூயட்களில் நிறைய 'சிப்பி/முத்து' உவமை வருகிறது. அதற்கு ஏற்ற நடன அசைவுகள் தணிக்கைக்குத் தப்பியது ஆச்சரியம். 'நீ வெட்கத்தை விட வேண்டும், நான் சொர்க்கத்தைத் தொட வேண்டும்' போன்றப் பாடல் வரிகளை மட்டும் பருப்பு ரசமாக மாற்றி என்ன பயன்? மிகவும் ரசித்த டூயட்கள்: 'பாட்டு வரும்', 'நாணமோ'. விடாமல் திருப்பித் திருப்பிப் போட்டுப் பார்த்த டூயட்: 'வளர்வது கண்ணுக்குத் தெரியலே'.

தனிப்பாடல்களில் 'ஒரு கை பார்ப்பேன்' என்ற பொருள் அடிக்கடி வருகிறது. 'உலகம் பிறந்தது எனக்காக' 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை' 'வெற்றி மீது வெற்றி' என எம்ஜிஆருக்கு அமைந்தாற்போல் கொள்கை/தனிப்பாடல்கள் பிறருக்கு அமையாதது ஆச்சரியம். பார்த்ததில் மிகவும் ரசித்தத் தனிப்பாடல்கள்: 'போயும் போயும்', 'தைரியமாகச் சொல்'.

கணக்கில்லாமல் எம்ஜிஆர் படம், பாட்டு, நட்புடன் அரட்டை என நாட்கள் போனதே தெரியவில்லை. நண்பரை நானும், இந்த விழாவை அவரும், எங்கள் மரணம் வரை மறக்கப் போவதில்லை. அதுதான் முக்கியம்.
எம்ஜிஆர் என்றதும் ஒரு ஜோக் நினைவுக்கு வருகிறது.

எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி மூவரும் சொர்க்கத்தில் சந்திச்சாங்களாம். 'கதாநாயகிங்களை ரம்பை ரதினு பாடினமே, அவங்க எப்படித்தான் இருக்காங்க பார்ப்போம்'னு தேவகன்னிகை குவார்டர்சுக்குப் போனாங்களாம். அங்கே ரதி, ரம்பை, மேனகை, திலோத்தமை எல்லாம் ஒரு ஓடையில உல்லாசமா குளிச்சிட்டிருந்தாங்களாம். அவங்க நடுவுல யாரது தெரிஞ்ச முகமா இருக்குதேனு பாத்தா.. நாகேஷாம். மூணு பேருக்கும் கடுப்பாயிடுச்சாம். நேரே போய்..

மேலே சொன்னால் மக்கள் உதைக்க வருவாங்களோ? அப்ப ஜோக்கை இன்னொரு சமயம் சொல்றேன். இப்ப நான் ரசித்துப் பார்த்த சில வாத்தியார் டூயட்களைப் போட்டுச் சமாதானமாப் போயிடறேன்.

வாத்தியார் டூயட் பாடல்கள்
சற்று ஒதுங்கி, புத்தாண்டில் சந்திக்கிறேன். அனைவருக்கும் விழாக்கால மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

75 கருத்துகள்:

  1. முதலிலேயே ஒன்றைச் சொல்லி விட வேண்டும். அற்புதமான கெட் அப். பத்திரிகைகளில் 'காலங்கள்' படிப்பது போல.. திமிரத் திமிரத் தகவல் களஞ்சியம். நிறைய ஹோம் ஒர்க் செய்து, கொடுத்திருக்கிறீர்கள். ஒவ்வொன்றாக தேர்ந்து முக்குளிப்போம்.

    //அந்த வாழ்க்கைக்குத் தேவையான மாற்றங்களுக்குத் தன்னைத் தயார் செய்வதிலேயே மூளையைச் செலவழிக்கத் தொடங்கியதால், மூளை தொடர்ந்து வளரவேயில்லை யாம்.//

    செலவழிக்கக்கு பதில் அபிவிருத்தி செய்யத் தொடங்கியதால் என்பது என் கருத்து. விருத்திக்கேற்பவான வளர்ச்சி. பிரச்னைகள் ஏற்பட ஏற்பட அவற்றிற்கான தீர்வுகள் கண்டதே, கண்டுகொண்டிருப்பதே வளர்ச்சிக் கான அறிகுறி. சொல்லப்போனால், உபயோகப்படுத்தாமல் 'வெறுமனே' இருக்கும் சதவீதம் எக்கச்சக்கம். பாசிப்பிடிக்கற சமாச்சாரமாய் இருந்திருந்தால் என்றைக்கோ புழுத்துப் போயிருக்கும். இந்த விஷயத்தில் உங்கள் ஓட்டும் எதிர் தரப்புக்கே என்பதில் சந்தோஷம்.

    மூதாதையரின் சைஸ் விஷயத்தில், நீண்ட பரிணாம வளர்ச்சியின் விளைவால் தான் பெருமூளை அரைக்கோளங்களும், பெருமூளைப் புறணியும் மனிதனில் சிக்கலான அமைப்பைக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  2. //செசியம் க்லோரைட், செசியம் க்லோரைட் என்று ஒரு உப்பு. இந்த உப்பின்.. //

    இந்த உப்பின் பயன்பாடு முழுசாகக் கிடைக்க வேண்டும் எனில் சர்வாங்கமும் புதையப் புதைய ஜீவியம் முழுக்க முழுக்க அந்த jelly fish போல நீரில் மூழ்குண்டு இருக்க வேண்டும் என்று சொல்லி விடப்போகிறார்கள்! அதுவும் தவிர கொடுத்து வைத்த அந்த மீன் வகை மட்டுமே சாகாவரம் பெற்றவை என்பதும் மற்ற நீர்வாழ் இனங்களுக்கு இந்தக் கொடுப்பினை இல்லையா என்பதும் பிறாண்டுகிறது. இல்லை, அன்றைய அமிர்தமே இன்றைய இந்த
    செசியம் க்லோரைட் தானோ?

    கலக்குகிறீர்கள், அப்பாஜி!

    பதிலளிநீக்கு
  3. தகவல் களஞ்சியம், அறிவுக்களஞ்சியம், எத்தனை வேலைகள் கழுத்தை நெரித்தாலும்…. நமக்கு பிடித்த பாடலை பாடிக்கொண்டே வேலைகளை தொடரும்போது வேலையிலும் சுவாரஸ்யம் கூடும்…. வேலையில் தவறில்லாமல் இருக்கவும் செய்யும்…. இப்ப அப்படி தான்… அப்பாதுரை (நான் த் போடல சாமி த் போடவே இல்ல ) எத்தனை நாளாச்சு நம்ம அப்பாதுரை வலைக்கு போய்…. சரி போய் தான் பார்ப்போமேன்னு வந்து பார்த்தால் கொட்டிக்கிடக்கிறதே தகவல்களின் தொகுப்பு… ஆஹா…. அத்தனையும் எனக்கு புதுசுப்பா… பள்ளியாகட்டும், கல்லூரியாகட்டும், ஆபிசாகட்டும், வெளியூராகட்டும் இத்தனை நாள் நட்பாய் அன்பாய் இருந்துவிட்டு பிரியும்போது ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்குப்பா… என்னவோ நம்மைவிட்டு நம் குடும்பத்தினர் பிரிவது போல் அத்தனை வேதனை… எப்போதும்போல் போகிறவருக்கு நாம் ஒரு பார்ட்டி வைத்து வழி அனுப்ப முனைந்தால் தாங்க்ஸ்கிவிங் பாலிசி… அட இது ரீசண்டா மதுரை தமிழன் வலைப்பூவில் படித்தேன்… தாங்க்ஸ்கிவிங் கொண்டாட்டம் இருக்குன்னு… அவர் எம் ஜி ஆர் ரசிகனா இருந்ததால் தான் இருபது குடும்பங்களுக்கும் கொண்டாட்டமோ கொண்டாட்டம் தான் போங்க… முன் சீட்ல உட்கார்ந்து விசில் அடிச்சீங்களாக்கும்…. ஹை… அதோட துணுக்கு வேற… தாங்க்ஸ் கிவிங் கொண்டாடுவீங்களா நீங்கெல்லாம் அப்டின்னு கேட்டா அமைதியா ஜூலை நாலுன்னு சொல்றாரே… நானும் ரசித்தேன்பா…. நிறைய விஷயங்கள் அறிய முடிகிறது…

    அடுத்தது நாளை படிச்சு கருத்து இடுகிறேன்பா

    பதிலளிநீக்கு
  4. வருக ஜீவி, மஞ்சுபாஷிணி...

    எங்கிருந்து எங்கே முடிச்சு போடுறீங்க ஜீவி!! எதிர்பார்க்கவே இல்லை.

    பதிலளிநீக்கு
  5. அப்பாஜி...நிறைவான தேடலும் அலசலும்.மனித மூளை பற்றியும்.மரணம் பற்றியும் வாசிக்க சுவாரஸ்யம்தான்.பெரியவங்க சொல்லுங்க கேட்டுக்கிறேன்.வருங்காலம் அழிவா ஆக்கமா ?!

    பதிலளிநீக்கு
  6. // ரகுநந்தனின் கொட்டைகளை அந்தக்காலத் துருப்பிடித்தப் பாக்குவெட்டியால் உயிர் போகும் வரை நசுக்கி நறுக்கிக் கொல்லவேண்டும் என்று கனம் கோர்ட்டாரைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.//

    நிறைய செய்திகள் அதை அப்புறம் படித்து விடுகின்றேன்.

    இந்த அழகான சிறுமியை கொன்ற கயவனுக்கு உங்கள் ஐடியா நல்லா இருக்கே !! பழைய பாக்கு வெட்டி நல்ல பலசாலியின் கையில் கொடுத்து செய்ய வேண்டும் !! Phily இங்கே பக்கம் தான், முடிந்தால் என் அப்பாவிடம் எங்கள் வீட்டு பழைய பாக்குவெட்டி இருந்தால் அனுப்ப சொல்லி கொண்டு கொடுக்கவேண்டும்.

    இந்த இரட்டை கொலை நடந்த வீட்டின் அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸ் தான் என் நண்பனின் தங்கை வீடும். அவளுக்கும் ஒரு வயது குழந்தை. பல நாள் இந்த செய்தி கேட்டு தூக்கத்தை தொலைத்தனர் அந்த இந்திய தம்பிதியர். இப்போது இந்தியாவில் ஒருவருட அயோஷோமம் செய்ய சென்று விட்டார்கள்.

    உங்கள் நண்பர் போலே நானும் கோயம்புத்தூர் மற்றும் கேரளா பார்டர் என்று ஆணைக்கட்டி என்ற ஊரில் இடம் பார்த்து வருகின்றேன். ஸ்ரிங்கேரி மற்றும் வயநாடு மற்றும் இலஞ்சியும் உண்டு - அது அவ்வபோது இங்கே போரடிக்கும்போது மஞ்சப்பையில் இரண்டு வேஷ்டி துண்டு எடுத்துக்கொண்டு வாடைகைக்கு வீடு எடுத்து தங்க செல்லும் இடம் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  7. ஜீவி சார் சொன்ன மாதிரி முதலில் பதிவிட்டிருக்கும் அழகைப் பாராட்டியே தீர வேண்டும். மெயின் பதிவுக்கு அருகில் துணைப் பதிவுகளுடன் அழகான அமைப்பு.

    பதிலளிநீக்கு
  8. எத்தனை வருடங்கள் அமெரிக்கா, ஐரோப்பா என்று சென்றாலும் எம் ஜி ஆரை மறக்க முடியவில்லை நிலையும், யான் பெற்ற இன்பம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் என்ற எண்ணமும் ஆச்சரியமானவை.

    பதிலளிநீக்கு
  9. மரணத்தை வெல்ல முடியும் என்ற செய்திக்கு ஜீவி சாரின் எண்ண திசை 'அட' போட வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  10. ரகுநந்த அரக்கன் செய்தி படித்த நினைவு இருக்கிறது. அந்த அரக்கன் அவர்களுக்கு உறவுதான் என்றும் படித்த ஞாபகம். அவனை பள்ளிக் குழந்தைகள் முன்னிலையில் ஒரு கண்ணாடி அறையில் பூட்டி, மூச்சுக்கு மட்டும் சிறு துளையிட்டு, வேறு ஒன்றும் தராமல் கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்க வேண்டும். குழந்தைகளின் அனுதாபப் பார்வையை நாளும் அவன் சந்திக்க வேண்டும். அவனுக்கு உணவு இல்லாமல் தாங்கள் மட்டும் சாப்பிட அவர்கள் படும் கஷ்டத்தை அவன் பார்த்துக் கொண்டே...

    பதிலளிநீக்கு
  11. எம் ஜி ஆர் பற்றிய அலசல்.... கொஞ்சம் ஆமாம், கொஞ்சம் இல்லை... அவரவர்களுக்கு அவரவர்கள் பார்வை! :))

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லாநவம்பர் 24, 2012

    சில நேரம் நான் நடந்துக்கற விதத்தை பாக்கறப்போ அப்பறமா எனக்கே தோணும் எனக்கு நிஜமாவே மூளை இருக்கான்னு. :) அதனால மூளையை பத்தி நீங்க எழுத்தி இருக்கறதை படிச்சேன். தகவலுக்கு நன்றி சொல்றதோட நிறுத்திக்கறேன்.

    எம்.ஜி.ஆர். பற்றி எழுதி இருப்பது பிரமாதம். ரசித்து படித்தேன்.
    //எம்ஜிஆர் அருகில் இருந்தாலும் பானுமதி, சாவித்திரி இருவரும் ஏதோ தனியாக நடிப்பது போலிருந்தது.// :) சூப்பர்.
    எம்.ஜி.ஆர் அவர்களுக்கு ஜோடி என்றாலே சரோஜாதேவியும், ஜெயலலிதாவும்தான். இவர்கள் இருவரும் எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்த படங்களை நான் மிகவும் ரசித்து பார்ப்பேன். என்னை பொறுத்தவரை மற்ற எந்த ஹீரோயினுமே இவருக்கு துளி கூட பொருத்தம் கிடையாது. சமீபத்தில் பார்த்த படம் 'பறக்கும் பாவை'. அட்டகாசமான பாடல்கள், எம்.ஜி.ஆரும், சரோஜாதேவியும் கொஞ்சி கொஞ்சி பேசுவது இந்த இரண்டையும் ரசிக்கவே படம் பார்த்தேன். 'பெற்றால்தான் பிள்ளையா' படத்தில் வரும் 'கண்ணன் பிறந்தான் எங்கள்' பாடல் நான் என்றும் மிக மிக ரசிக்கும் பாடல்களில் ஒன்று. 'பருவத்தில் கொஞ்சம்' மிகவும் பிடித்த, மறந்தே போன பாடல். நினைவுபடுத்தியதற்கு மிகவும் நன்றி. எல்.ஆர். என்னமா பாடி இருக்காங்க. சான்சே இல்லை. டி.எம்.எஸ். குரல் சொக்கி சொக்கி அடிக்கறது. தொடர்ந்து மூன்று முறை கேட்டுவிட்டேன். நன்றி! 'பச்சைக்கிளி முத்துச்சரம்' எத்தனை முறை கேட்பேன், ஏன் கேட்பேன்னு தெரியாத அளவுக்கு கேட்டு கேட்டு ரசிக்கும் பாடல். பாடல் காட்சி படமாக்கி இருக்கும் விதம் கொடுமைதான். 'பாட்டு வரும், பாட்டு வரும்' இந்த பாட்டுல......... போறும் நிறுத்திக்கறேன். விட்டா நானும் பின்னூட்டம் எழுதறேன் பேர்வழின்னு ஒரு பதிவே எழுதிடுவேன்.

    குழந்தையின் முகத்தை பார்க்கும்போது மனசு துடிச்சு போறது. எவ்வளவு கொடுமை! மனசு தாங்கவே இல்லை.

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லாநவம்பர் 24, 2012

    ஜீ.வீ., ஸ்ரீராம் இவர்கள் இருவரையும் தொடர்ந்து என்னுடைய பாராட்டையும் ஏற்றுக் கொள்ளுங்கள். பதிவு வெளிவந்திருக்கும் விதம் மிகவும் அழகு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. பழைய எம் ஜி, ஆர் படங்களை
    தேர்ந்தெடுத்துக் கொடுத்த நண்பருக்கு
    தங்கள் சார்பாக என நன்றியையும்
    தெரிவித்துக் கொள்கிறேன்
    சரோஜாதேவி எம்.ஜி.ஆர் குறித்து நீங்கள்
    சொல்லியுள்ள விஷயம் மிகச் சரி
    அந்த இண்டிமெசி வேறு ஒரு நடிகையுடன்
    தலைவருக்கு இல்லாதுபோல்தான் படுகிறது

    பிரிதல் குறித்து தாங்கள் அதை ஒரு நிகழ்வாகச்
    சொல்லிப்போக முயன்றாலும் அதிலிருந்த சோகம்
    மனம் கனக்கச் செய்து போனது
    மரணத்தின் போது நாம் உணராமல் போகிறோம்
    ஆனால் இது போன்ற பிரிதல்கள் உண்மையில்
    மரணத்தை விடக் கொடுமையானது
    அதை கொண்டாடித் தீர்ப்பதுதான் சிறந்த வழி
    இல்லையேல் மனம் நொறுங்கிப்போகும்






    பதிலளிநீக்கு
  15. மரணத்தை மனிதன் வென்று விடக் கூடுமானால், மரணத்தைத் தொட முடியாத வாழ்க்கை எத்தனை கொடூரமானதாக இருக்கும்? அணுவைக் கண்டுபிடித்துவிட்டு முழித்துக்கொண்டிருப்பது போலா?

    பிறப்பதும், இறப்பதுமான அனுபவம்தான் வாழ்க்கையாக இருக்கும். மரணத்தை மனிதன் வென்று விடுவானாயின் வாழ்க்கையே மரணமாய் விடும்.

    பிறவாமல் இருப்பதுதான் வரம். சாகாமல் இருப்பது சாபம்.

    எம்.ஜி.ஆர். சினிமாக்களை அதிகம் நான் பார்க்க வாய்த்ததில்லை. ஆனால் உங்களைப் போல் ஒரு ரசிகனை நான் பார்த்ததில்லை. படித்ததில்லை. எத்தனை எத்தனை பெர்முடேஷன்ஸ், காம்பினேஷன்ஸ்? திரும்பத் திரும்ப கரையைத் தொடும் அலை போல் அசை போட்டுக்கொண்டிருக்கிறேன்.

    வடிவமைப்பு ஜோர். சிரிதி என்ற ப்ரயோகம் ஸ்வாரஸ்யம். சங்க காலத்தை நினைவூட்டும்படி.

    விழாக்கால, புத்தாண்டு வாழ்த்துக்கள் அப்பாதுரை.

    பதிலளிநீக்கு
  16. வித்தியாசமான thanksgiving.

    தகவல் களஞ்சியமாய் அருமையான பகிர்வுகள்... ரசிக்கவைத்தன ,,

    பதிலளிநீக்கு
  17. பெயரில்லாநவம்பர் 24, 2012

    Arputham.
    I am talking about the way of presentation and design.
    -surya
    contents? vaztha arivu illai so vanaggi padikkiren.

    பதிலளிநீக்கு
  18. இன்னும் வழக்கு நடைபெற என்ன பாக்கி உள்ளது? தண்டனையை தீர்மானிக்க வேண்டியது தானே கோர்ட்டார்? அப்பாதுரையோட அசத்தலான செய்தி சிரிதி நேற்று ராத்திரி படித்துவிட்டு போட்ட கருத்து பாதியில் நிற்கவே இன்று மீதியை படிக்க நினைத்து சாப்பிட்டுக்கொண்டே படிப்பது எனக்கு மிகவும் பிடித்த ( மிக மிக கெட்ட பழக்கம் இது) விஷயம்... டிபன்பாக்ஸை திறந்துக்கொண்டே குழந்தைப்படம் இருக்கிறதே என்ன செய்தி இதை முதலில் படிக்கலாம் என்று நினைத்து படித்துக்கொண்டே வந்தேன். நெஞ்சடைத்துப்போய் மூடி வைத்துவிட்டேன்.

    சாப்பிட மனம் செல்லவில்லை.. குழந்தையின் முகம் எத்தனை பூவாய் மலர்ந்து சிரிக்கிறது.... இந்த பிஞ்சுக்குழந்தையை கொல்ல அவன் முயன்றபோது கூட மாமா என்று இவன் காலைத்தானேத்தானே அந்தக்குழந்தை பிடிச்சிருக்கும் கண்ணீரோடு..

    சமீபத்தில் வலைச்சரத்தில் வேர்களைத்தேடி குணசீலன் ஒரு பதிவு போட்டிருந்தார். ஒரு மானைக்கொன்று சாப்பிட சிங்கம் பாய்ந்த்தாம்... ஆனால் அப்பத்தான் சிங்கத்திற்கு தெரிந்த்து மான் குட்டி ஈன முயல்வதை... உடனே கொல்ல வந்த மனதை மாற்றிக்கொண்டு அந்த மானையையும் குட்டியையும் காப்பாற்றிவிட துடித்த்தாம்.. ஆனால் காப்பாற்ற இயலாத சோகத்தில் சிங்கம் இறந்துவிட்டதாம்.. பகவானே... கொன்று பசியாற வந்த ஐந்தறிவு மிருகத்துக்கு கூட பரிவு தயை என்ற மனநிலை இருக்கும்போது எதையும் ஆராய்ந்து செயல்படும் ஆற்றிவு படைத்த மனிதனுக்கு ஏன் இப்படி ஒரு கருணை துளி கூட மனதில் இல்லாது போயிற்று.... மனம் அரற்றிக்கொண்டே இருக்கிறது எனக்கு....

    இவனுக்கு கொடுக்கவேண்டிய கொடிய தண்டனை இவன் கையில் ஒரு கைக்குழந்தையைக்கொடுத்து அதை அன்போடு வளர்க்கச்சொல்லவேண்டும்..

    தினம் தினம் ஒவ்வொரு நொடியும் அந்த குழந்தையின் புன்னகையும் மழலையும் இவன் மனதை தின்று அரிக்கவேண்டும்...

    ஐயோ ஐயோ ஏதுமறியா குழந்தையை கேவலம் பணத்துக்கு ஆசைப்பட்டு கொன்றேனே என்று துடிக்க துடிக்க இவன் மனமே இவனைக்கொல்லவேண்டும்.. இதைவிட கொடிய தண்டனை இவனுக்கு கிடைக்காது.

    தூக்கிலிட்டாலும் வலியும் வேதனையும் மரணம் ஏற்படும்வரை இவன் உடலுக்கு மட்டுமே.. திருந்தாத உள்ளத்துடன் இவன் இறந்து என்ன பயன்? இவன் மனதுக்கு அல்லவா தண்டனை கிடைக்கவேண்டும்? தன் சுகம், தன் வலி, தன் நலம் மட்டுமே பெரிதாக நினைக்கும் இவனைப்போன்றோரால் இனி யாருக்கும் இந்த கொடிய நிலை வரவே கூடாது. இறுதி மூச்சு வரை அந்த முதியோர் இவனிடம் போராடி இருக்கிறார்களே பகவானே....

    கலியுகத்தில் இன்னும் என்னென்ன கொடுமைகள் நடக்கப்போகிறதோ திகில் மனதை அப்புகிறது. மும்பை அட்டாக்கில் எத்தனைப்பேரை ஈவு இரக்கமின்றி கொன்றவர்களில் மீதமான கசாப்பை தூக்கில் போடுமுன் உன் இறுதி ஆசை என்னவென்று கேட்டார்களாம். ஒன்றுமில்லை என்றானாம்.

    இவன் மனம் உறுத்தவே இல்லையா? :( இத்தனைப்பேரை கொன்ற மனதில் துளி கூடவா நினைத்து பார்த்திருக்கமாட்டான்? உலகம் எங்குப்போய்க்கொண்டு இருக்கிறது? மனிதம் மரித்த மனிதன் உயிரோடு இருந்து என்ன சாதித்து என்னப்பயன்?

    பதிலளிநீக்கு
  19. அந்தக் குழந்தையைக் கொன்ற செய்தியை முன்பே படித்திருந்தேன், இப்போதான் மறந்துவருகிறது. ஒரே ஆறுதல், அந்தக் குழந்தையின் படம் இதுவரை என் கண்ணில் படாமல் இருந்தது. இன்று இங்கு பார்த்துவிட்டேன். :-((
    ______________

    மரணம், கசப்பு மருந்து போல, அவசியமேதான். தவிர்க்க முடியாது. கடவுளைப் போல. :-)))))

    விக்கியில் பார்த்தேன்: In spite of this remarkable ability, most Turritopsis medusae are likely to fall victim to the general hazards of life as plankton, including being eaten by other animals, or succumbing to disease.

    ஆக, அதற்கும் மரணம் இருக்கத்தான் செய்கிறது. வயதானபின் ‘இயற்கை’ மரணம் என்பதுதான் இல்லை(ஆனா இருக்கு). :-)))

    மனித இனத்திலும், இயற்கை சாவைவிட, நோய் & விபத்துகளினால்தான் அதிகம் இழப்பு (என்று நினைக்கிறேன்). அதைத் தடுக்க முடிந்தால், (ஒருவேளை) வரவேற்கலாம்.

    போலவே, அடுத்தவருக்கு மரணம் விளைவிக்க நினைத்தால், அது பூமராங்காக ஆகிவிட ஏதேனும் “இனிப்பு” இருக்குமான்னு விஜாரிச்சுச் சொல்லுங்க. :-))

    பதிலளிநீக்கு
  20. அந்த செசியம் குலோரைட் பற்றி மேல் விவரங்கள் சொல்லுங்களேன். அதே யோசனையாக இருக்கிறது.

    அமுதம் சரி. அப்போ ஆலகாலவிஷம்?
    பார்க்கடலை (பாரைச் சுற்றிய கடல்) தான் பாற்கடல் என்று மருவிப் போயிருக்குமோ?..

    பதிலளிநீக்கு
  21. well done, ஹூஸைனம்மா. உங்க 'தேடலை' பாராட்டுறேன். பிடிங்க பாராட்டுப் பத்திரம்.

    அதுல பாருங்க.. மனித மூளை மழுங்கல் பத்தி எழுதுறப்ப 'ஹூஸைனம்மா தவிர'னு எழுத நினைச்சேங்க.. உண்மையா சொல்றேன்.. ப்ச.. எழுதியிருக்கணும்.. :)

    ஹிஹி.. ஐஸ் வச்சாச்சு இல்ல, இப்ப குண்டைத் தூக்கிப் போடலாம்.

    மரணத்தை வெல்லுறதும், மரணத்தைத் தவிர்க்குறதும் வேறே வேறே இல்லிங்களா? (சுந்தர்ஜி ஜரா கவனிக்க ஹை)

    அதுக்கு மேலே இன்னொரு லேயர் இருக்குதுங்களே.. அழிவு. எல்லாத்துக்குமே அழிவு (relative termனாலும்) உண்டு. மனிதம் என்ன மேஜிக்கு செஞ்சாலும் இந்த பூமிக்கே கடைசி நாள்னு ஒண்ணு உண்டே.. பூமியை விட்டு வேறே எங்கே அண்டத்துல ஓடினாலும் அங்கேயும் expiry date உண்டே? அதனால மரணத்தை வெல்ல முடியும், தவிர்க்க முடியாதுன்றது என் கட்சி. இதுல ஒரு சூட்சுமம் இருக்குதுங்க.. ஆனா அது நாத்திகத்தை நம்புறவங்களுக்குத் தான் எடுபடும்.

    என்னதான் சொல்லுங்க... கடவுள் எல்லாம் கொஞ்ச நாள் தான் :)

    பதிலளிநீக்கு
  22. பதிவை எழுதியிருக்கும் முறை உங்களின் தனி ஸ்டைல். சுவை. எம்ஜியார் படங்களை நண்பர்களுடன் பார்க்க ஏற்பாடு செய்தவருக்கு ஒரு ஜே. எம்ஜியார் படங்கள் பற்றி உங்கள் ஆய்வறிக்கை சூப்பர். எம்ஜியாரையே அதட்டியவர் பானுமதி ஒருவர்தான் என்று நினைக்கிறேன். 
    கண்ணையும் கருத்தையும் கவர்ந்த குழந்தையைப்  பற்றிய செய்தி கொடுமையிலும் கொடுமை. அசுரர்கள் புராணக் காலத்தில் மட்டுமல்ல இன்றும் இருக்கிறார்கள்? ஆமாம், தேவர்கள் எங்கே. எங்கள் பல்லாக் பாசிடிவ் செய்திகளில் சில தேவர்களைப் பார்க்கலாம். 

    பதிலளிநீக்கு
  23. இந்தப் பச்சைப் பிள்ளையைப் பாருங்க.. அதுக்கு அழிவு வரும்னு எவனாவது அன்னிக்குக் காலையில சொன்னா நம்பியிருப்பாங்களா? ரகுநந்தன்னு நல்லா சாமி பேரை வச்சுகிட்டு மனித ரூபத்துல வந்தாரு பாருங்க.. ராட்சசன்.. அது போலத்தான்.

    ஹூஸைனம்மா.. நீங்க சொல்லுறாப்புல jelly fishஐ இன்னொரு ஜீவன் சாப்பிட்டு அழிவைக் கொண்டுவரலாம். (நான் சாப்பிட்ட jelly fish ஏற்கனவே செத்திருந்திச்சு :) அதே போல மரணத்தை வென்ற மனிதனை ஒரு அடாமிக் வண்டியோ, துப்பாக்கியோ ஒரு செகண்டுல எதிர்பாராம அழிச்சுட்டுப் போயிரலாம். நான் சொல்ல வந்தது அழிவைப் பத்தியில்லை. மரணத்தை வெல்வது என்பது ஆக்கம் பற்றியது இல்லையா?

    jelly fish மனிதரைப் பார்க்கிலும் insignificant இல்லிங்களா? மனிதன் என்கிற என் ஆணவத்தைக் கொஞ்சம் மன்னிச்சுட்டு என் கருத்தை மட்டும் கவனிங்க. அப்படி நமது செல்களைப் புதுப்பித்து மரணத்தை வெல்லும் நாள் வரப்ப, திடீர் அழிவுக்கான வழிகளையும் ஆராய்ந்து அடக்கும் பக்குவம் வரும்னு நிச்சயமா நம்புறேன்.

    மனிதம் இன்னும் பரிணாமித்துக் கொண்டே இருக்கிறது. அடுத்த 150ம் வருட மனிதகுலம் அச்சு நம்மைப் போல் இருக்காது என்று ஒரு baselineல் உங்களை சிந்திக்க அழைக்கிறேன். உதாரணத்துக்கு, இயல்பான உறவோடு சந்ததி பெறும் வழக்கம் 10%க்கும் குறைவாக இருக்கும். மனித உடல் பகுதிகளில் மாறுதல் இருக்கும். உதாரணமா, இயல்பான உறவு முறையில் பிறந்த பிள்ளைகளுக்கு பிறந்த அன்றைக்கே கண்கள், மூட்டுகள் இவற்றை மாற்றி அமைக்கும் தேவையிருக்கும். இதுலயே இப்படின்னா, இன்னும் நிறைய சொல்லலாம்.

    முக்கியமா, கடவுள் மதம் எல்லாம் ஒழிஞ்சிருக்கும் - அதனால மனிதனை எதிர்பாராமல் கொல்லும் கருவிகளும் ம்யூசியத்தில் தான் இருக்கும்.

    பதிலளிநீக்கு
  24. மஞ்சுபாஷிணி.. தவறா நினைக்காதீங்க.. நீங்க எழுதினதைப் படிச்சதும் ஒரு காட்சியா மனசுல விரிய, பலமா சிரிப்பு வந்துடுச்சு..
    //டிபன்பாக்ஸை திறந்துக்கொண்டே குழந்தைப்படம் இருக்கிறதே என்ன செய்தி இதை முதலில் படிக்கலாம் என்று நினைத்து படித்துக்கொண்டே வந்தேன். நெஞ்சடைத்துப்போய் மூடி வைத்துவிட்டேன்.

    சாப்பாடு பாட்டுக்கு அது, கொலை சமாசாரம் பாட்டுக்கு அதுனு நீங்க இருந்தா தொல்லையில்லே. சாப்பாட்டு வேஸ்டா போச்சா? அதையும் ரகுநந்தன் தலையில போடுங்க.

    என் மகன் டைப்பா இருந்தாலாவது பரவாயில்லே.. அவன் விடியோ கேம்லந்து சாப்பாடு வரைக்கும் எல்லாத்துக்கும் பாத்ரூம் தான் கதி. கேட்டா, "it is just a place like any dad" என்பான். அடப்பாவி.. இவ்வளவு விஸ்தாரமா வீடு கட்டி வசதியா நாற்காலி சோபா எல்லாம் போட்டா.. என்று நான் புலம்புவதோடு சரி.

    பதிலளிநீக்கு
  25. நான் ஒரு தண்டனை சொல்றேன்.. சாய் இன்னொண்ணு சொல்றாரு.. ஸ்ரீராம் வேறே விதமா சொல்றாரு.. மஞ்சுபாஷிணி இன்னொரு விதம் (எனக்கென்னவோ அந்த தண்டனை குழந்தைக்குனு தோணுதுங்க)..

    ஆக மொத்தம் ரகுநந்தன் தயவால எல்லாரும் இன்னொருத்தரை எப்படி சித்திரவதை செய்யணும்னு யோசிக்கிறோம்.. என்னே ஈசனின் திருவிளையாடல்!

    பதிலளிநீக்கு
  26. சுந்தர்ஜி.. இன்றைக்கும் மரணத்தை வென்று கொண்டுதானே இருக்கிறோம்? ஆயிரம் வருடங்களுக்கு முன் சராசரி lifespan ஆண்களுக்கு முப்பது, பெண்களுக்கு 20 என்றிருந்தது. இன்றைக்கு ஆண்களுக்கு 65, பெண்களுக்கு 70 என்றாகியிருக்கிறது.

    மரணத்தை வெல்வதும் மரணத்தைத் தழுவுவதும் வேறே. தேவைப்படும் பொழுது மரணத்தைத் தழுவும் வசதி வரும் நாள், மனித வளர்ச்சியின் இன்னொரு பெரும் மைல்கல்.

    வரம் சாபம் எல்லாம் romantic expressions, அதுக்கு மேலே பிரிச்சா பட்டனு போயிரும். பிறவாமை என்று எதுவும் இல்லை - என்றைக்குமே அப்படி ஒன்று இருந்ததில்லை என்பது என் கருத்து.

    ஆனால் சாகாமை ஒரு வரம், அல்லது வரத்துக்கு அண்மை எனலாம். அந்த வரம் தேவையா இல்லையா என்று தீர்மானிக்கும் அறிவு மனிதனுக்குரியது.

    RDஓ இன்னொரு வழிமுறையோ- மனிதம் தன் வாழ்நாளைத் தன் தேவைக்கேற்ப அமைத்துக் கொள்ளும் முறையை, வசதியைத் தான் நான் மரணத்தை வெல்லுவதாகக் கருதுகிறேன். மற்றபடி 'வாழ்வது', ஒரு continuous maintenance என்பதில் எனக்கும் உடன்பாடே.

    பதிலளிநீக்கு
  27. //ஆக மொத்தம் ரகுநந்தன் தயவால எல்லாரும் இன்னொருத்தரை எப்படி சித்திரவதை செய்யணும்னு யோசிக்கிறோம்.. என்னே ஈசனின் திருவிளையாடல்!//

    நீங்கள் சொல்வதும் உண்மையே. ஆனால் சொல்வதும் செய்வதும் வேறு தானே !!

    அதுக்கு ஏன் சிவனே என்று இருக்கும் சிவனை குப்பிடுகின்றாய் ?

    பதிலளிநீக்கு
  28. சரியானப் புரிதல் ரமணி. நன்றி. பிரிவின் சோகம் - அது தனிமைப்படுத்தி அனுபவிக்க வேண்டிய ஒன்று. விழா எனும் ஒப்பனையும் தேவைப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  29. சிவன் தான் கூப்பிட வச்சாருன்றேன்? (ஈசன்னா சிவன் தானா? அல்லா கிடையாதா?)

    பதிலளிநீக்கு
  30. எதிர்பாரா மென்முறைத் தாக்குதல் ஜீவி.

    நீரினம் இறவாமை என்றதும் பாற்கடல், அமுதம், ஆலகாலம் என்று ஒரு புரட்டு புரட்டிவிட்டீர்களே.. (புரட்டு - unintended pun :=). good shot.

    இந்து மததத்துக்கு வெளியே இதெல்லாம் அசல் புரட்டுன்றதால இதை ஒரு விளையாட்டுன்னே வச்சுக்குவோம் - அப்ப இந்த விளையாட்டுக்கு நானும் வரேன். சிவனை சூபர்மேன் ஆக்கிடுவோம். அமிர்தம் CsClனா, ஆலகாலம் கதிரியக்கம். சிவன் ஏற்கனவே ரேடியோ ஆக்டிவ் (சூபர்மேனாச்சே?) என்றதால ஆலகாலத்தை லபக்கிட்டாரு. இப்படி ஒரு fantasy கதை எழுதலாம் போலிருக்கே?







    பதிலளிநீக்கு
  31. செசியம் க்லோரைட் பத்தின ஞானப்பொடி ஒரு விபத்து ஜீவி சார்.

    என் வேலை.. என் வீட்டுச் சிக்கல்.. நான் உறுப்பினராக உள்ள ஒரு இயக்கம்.. நான் எழுதும் இன்னொரு பதிவு.. இவை அத்தனை தொடர்பாகவும் nuclear medicine பற்றி விவரமாகப் படிக்க நேரிட்டது. (everything is connected - பாருங்க, spirituality is not divinity :)

    அதைப் படிக்கிறப்ப கேன்சர் ட்ரீட்மென்ட், ஸ்டெம் செல்னு ஒண்ணு மாத்தி ஒண்ணா துருவிட்டிருந்தேனா - landed in cesium chloride.

    ஹூஸைனம்மா ஏற்கனவே முன்னுதாரணமா அமைஞ்சுட்டாங்க. இது பத்தின விவரங்கள் விகியில் கிடைக்குது.

    பொதுவாக விகி விவரங்களைக் கொடுத்தாலும் மேலோட்டமாகவே காணப்படுகிறது. இன்னும் விவரங்கள் தேவைப்பட்டா smithsonian institute researchல் கிடைக்குது. அல்லது nuclear medicine research development & techniques பத்தின விவரங்களில் கிடைக்குது. நான் போன பாதை கடைசி பாதை.

    RD பத்தி ரொம்ப நாளாகவே நிறைய ஆராய்ச்சி நடந்துட்டிருந்தாலும் cesium discovery ஒரு மைல்கல். விடியலுக்கு இன்னும் எத்தனையோ தூரம் போக வேண்டும், எனினும், இந்த jelly fish தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ள முடிகிறது என்பது ஒரு நம்பிக்கை மற்றும் ஊக்க ஒளிகீற்று. இதைப் பயன்படுத்தி cancer நோயாளிகளின் cell therapyல் முன்னேற்றம் காண்கிறோம் என்பது proof. இப்போதைக்கு அவ்வளவு தான்.

    ஆனால், வருங்காலத்தில் cell renewal, comprehensive human rejuvenation போன்றவை மரணத்தை முழுமையாக வெல்லும் இலக்கின் முக்கிய மைல்கற்களாக அமையும். அதற்கு RD, cesium போன்றவை துணைவரும். கல்லாதது உலகளவு.

    ரொம்ப சிந்திக்க வைக்கிறீர்கள். (னம்பள்கி சரக்கு நஹி ஹை)

    பதிலளிநீக்கு
  32. இரண்டாயிரம் என்று எழுதியிருக்க வேண்டும் சுந்தர்ஜி.. தவறு என்னுடையது.

    பதிலளிநீக்கு
  33. //இப்படி ஒரு fantasy கதை எழுதலாம் போலிருக்கே? //

    ஒரே நேரத்தில் மூக்கில் வியர்த்திருக்கிறது, பாருங்கள். நானும் அதுக்குத் தான் ஒன் லைனைத் தயார் பண்ணி வைச்சிண்டு, உங்களைக் கடாவினேன். இனிமே ரோடு போட்டுடலாம். தேங்க்ஸ், அப்பாஜி!

    பதிலளிநீக்கு
  34. 'அவல் என நினைத்தால்' என்ன? அவலே தான்; அதுவும் சரியான கார்த்திகை அவல்! மெல்ல மெல்ல என்ன சுகம் என்கிறீர்கள்??.. அடுத்த கோட்டா, புத்தாண்டுக்கு அப்புறம் தானா?..

    பதிலளிநீக்கு
  35. நன்றி ஜீவி சார்.

    கொஞ்சம் நாள் பின்னூட்ட சவாரி போகலாம்னு தான். நிறைய ப்லாக் படிக்காமலே விட்டுப்போச்சு.

    (கலவாமை வேண்டும் என்பார் ஜோதிக்காரர் - அவருக்கென்ன சுலபமா சொல்லிட்டு போயிட்டாரு)

    பதிலளிநீக்கு
  36. அப்பப்பா எப்படிப்பட்ட ஒரு அலசல் எத்தனை தேடல்களின் தொகுப்பு

    பணத்திற்காக தேவதையை சொல்லவும் நா எழ வில்லை என்னே கொடுமை...

    //நிறையச் சிரிக்க வேண்டும், கவலை இல்லாமல் இருக்கவேண்டும், பற்றறுக்க வேண்டும், அரை வயிறு சாப்பிட வேண்டும் போன்ற //

    பதிலளிநீக்கு
  37. You have presented a small thesis on MGR's movies immediately after watching them. Good post and very good analysis.

    Somehow or other, my eyes refused to take off from the child photo. You could have avoided posting that photo also. Mind refused to think further and get paralysed after seeing this photo.

    பதிலளிநீக்கு
  38. //மனித மூளை மழுங்கல் பத்தி எழுதுறப்ப 'ஹூஸைனம்மா தவிர'னு எழுத நினைச்சேங்க.. //

    ரொம்ப ரசிச்சேன்... அவ்வப்போது என் பெரியவன், “நிஜமாவே நீ காலேஜ் போய் படிச்சியா?” என்று கேப்பான். அதே மாதிரி...!! :-))))

    விக்கியில் தேடியதற்குக் காரணம், குறிப்பிட்ட வகை ஜெல்லிகளுக்கு தோன்றிய நாள் முதல் மரணமே இல்லையென்றால், கடல் முழுதும் இவ்வகைகளால் நிரம்பியிருக்க வேண்டுமே என்று என்னுள் எழுந்த (அசட்டுத்தனமான) கேள்விக்கு விடை தேடியே!! :-)))

    //அழிவு. எல்லாத்துக்குமே அழிவு (relative termனாலும்) உண்டு. மனிதம் என்ன மேஜிக்கு செஞ்சாலும் .... அதனால மரணத்தை வெல்ல முடியும், தவிர்க்க முடியாதுன்றது என் கட்சி.//

    வெல்ல முடியும், தவிர்க்க முடியாது!! Oxymoron?? ;-D

    மரணத்தை வெல்வது முடியுமா, முடியாதா என்பதல்ல இங்கு மேட்டர். What purpose does it serve? மேலே சொன்ன ரகுநந்தனை எப்படிக் கொல்ல வேண்டும் என்று கோபம் மேலிட நீங்கள் சொல்கிறீர்களே, ஒருவேளை அவன் செசிலியம் குளோரைட் சாப்பிட்டு மரணத்தை வென்றவனாக இருந்தால்?

    வலி தரும் நோய்களை வெல்ல முடிந்தால்... மனதார வரவேற்பேன். மரணம் இல்லை, ஆனால் கொடூரமான வலி உண்டு என்ற நிலையில் வாழ யார்தான் விரும்புவார்? (சில வாரங்கள் முன் விகடனில், அரசு மருத்துவமனைகளில் புற்றுநோயின் இறுதி நிலைகளில் இருப்பவர்கள் குறித்த கட்டுரை படித்தீர்களா?)

    மரணம் வெல்லப்படக்கூடாது என்று சொல்லவரவில்லை. மரண பயம் எனக்கும் உண்டு. என் மரணத்தைவிட, (என் வாழ்நாளிற்குள்) நேசிப்பவர்களின் மரணம் என்கிற நினைப்பே பதற வைக்கிறதுதான். (ஒருவேளை) CsCl கிடைத்தால், எப்படியாவது ஒரு டோஸ் வாங்கப் பார்ப்பேன், அவர்களுக்குக் கொடுப்பதற்கு. (அதியமான் ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்தது போலன்னு பாராட்டுவீங்கதானே? :-))) )

    இதுக்குமேலே இதப்பத்தி பேசுற அளவு “விவரமில்லை” என்பதால், இத்துடன் என் உரையை முடித்துக் கொல்கிறேன்!!:-))))

    பதிலளிநீக்கு
  39. சுந்தர்ஜியின் கருத்து தான் என்னதும். செசியம்குளோரட் - இயற்கைக்கு முரணானது. இன்னொரு மருந்து வரட்டும் - அதைச் சாப்பிடுபவர்களுக்கு மறுபிறவி உண்டு - தவிர்ப்பவர்களுக்கு இல்லை என்பது போல்.
    ரகுநந்தன் போல் எங்கள்மதுரை சிவகங்கை பக்கம் நிறைய இருக்கின்றனர். சென்ற வாரம் இங்கே அரசியல் பகையில் ஒருவரை வெட்டும் போது உடனிருந்த12வயது மகனையும் 8வயது மகளையும் வெட்டிச் சாய்த்தனர். ( கொலைப் பின்னணியில் கம்யூனிஸ்ட்கள் இருப்பதாக செய்தி)

    பதிலளிநீக்கு
  40. பதிவை வெளியிட்டிருக்க என்னமா உழைச்சிருக்கீங்க. அதான் அருமைனா செய்தித் தொகுப்புகள் அதைவிட அருமை. ஆச்சரியம் என்னன்னா, இறவா வரம் தரும் உப்பைப் பத்திப் படிக்கிறச்சே எனக்கும் தேவருலக அமிர்தமோனு தான் தோணித்து. பின்னூட்டங்களிலே பார்த்தால் ஜீவி சாரும் அதையே சொல்லி இருக்கார். ஹிஹிஹி, க்ரேட் பீபிள் திங்க் அலைக் னு சொல்றது இதானோ! :))))


    பதிலளிநீக்கு
  41. சும்மா இருக்காமல் ஒரு கேனை அமெரிக்க மாணவன் அவரிடம், "இங்கிலாந்தில் தேங்ஸ்கிவிங் எல்லாம் கொண்டாடுவீர்களா?" என்றான்.

    பேராசிரியர் அமைதியாக, "ஜூலை நாலாம் தேதி கொண்டாடுவோம்" என்றார்.//

    ஹிஹிஹி, நல்லா ரசிச்சுச் சிரிச்சேன்.

    ஆனால் அடுத்து வந்த ரகுநந்தனைப் பற்றிப் படிச்சதும் மனசு மறுபடி வேதனையாப் போச்சு. தொலைக்காட்சிகளிலும் காட்டினாங்க.

    பதிலளிநீக்கு
  42. எம்ஜிஆர், தன்னம்பிக்கை ஊட்டும் படங்களும், பாடல்களுமே தேர்ந்தெடுத்தார். அதனால் தானோ என்னமோ இன்னமும் பலரும் அவரை மறக்கவில்லை. எனக்கு மூணு பேரிடமும் அவ்வளவெல்லாம் கிரேஸ் கிடையாது. என்றாலும் பல எம்ஜிஆர் படப் பாடல்களின் வரிகளும், அவை பாடப்பட்டிருக்கும் விதமும் மனதைக் கவரும்.

    எப்படி போரடிக்காமல் தொடர்ந்து அத்தனை படங்களையும் பார்த்தீங்கனு யோசிச்சால் ஆச்சரியமா இருக்கு. நிச்சயமா எங்க இரண்டு பேராலும் முடியாது. இரண்டாவது படம் பார்க்கிறச்சேயே போரடிக்க ஆரம்பிச்சுடும். :)))))

    பதிலளிநீக்கு
  43. கோவை முதியோர் இல்லம் குறித்தும், அங்கேயோ அல்லது பெண்களூரிலோ நடக்கும் முதியோர் இல்லத்திலேயோ இப்போதே இடம் பதிவு செய்யச் சொல்லி எங்களையும் பலர் சொன்னார்கள். ஆனால் யோசிச்சுப் பார்த்ததிலும், மேலும் பலரிடம் கேட்டதிலும், விசாரணைகள் செய்ததிலும் சரியாக வராதுனு முடிவு பண்ணிட்டோம். ஒரு சில செளகரியங்கள் இருந்தாலும் அதிலும் பல பிரச்னைகளும் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  44. எங்களுக்குத் தான் மின் வெட்டு. பதிவுகள் போட முடியலைனா நீங்களும் லீவு எடுத்துட்டீங்க! :)))) உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் விழாக்கால வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  45. மரணத்துக்குப் பதில் 'மூப்பை வெல்லும் சாத்தியம்' என்று எழுதியிருக்க வேண்டும் என்று இப்பொழுது தோன்றுகிறது.

    செசியமோ வசியமோ எதுவுமே சாவைத் தவிர்க்க முடியாது. ஆனால் இது சாவை மனிதனின் கைக்குள், கட்டுக்குள், கொண்டுவரும் சக்தியின் சாத்தியம் - இதைத்தான் சொல்ல வந்தேன். conquer என்று மனதில் தோன்றியதை தமிழில் உருட்டியதில் உடைந்து விட்டதோ என்று வருந்துகிறேன். (ஹிஹி.. எனக்கு மீசையும் இல்லை, இங்கே எல்லாம் ஒரே கல்லாக இருக்கிறது:-)

    பதிலளிநீக்கு
  46. முதியோர் இல்லம் பற்றிய பிரச்சினைகள் பற்றி நேரம் கிடைக்கும் பொழுது எழுதுங்களேன் கீதா சாம்பசிவம்? எங்களுக்கெல்லாம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    விளம்பரப் படத்தையும் யுட்யூப் விடியோவையும் பார்த்துவிட்டு முடிவு செய்யும் (எனக்குத் தெரிந்து) எத்தனையோ பேர் இருக்கிறார்கள். நான் உள்பட, இதைப் பற்றி நிறைய பேர் யோசிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  47. செசியம் பற்றியும் பதிவு பின்னூட்டங்கள் பற்றியும் என் மெத்தப் படித்த மாமாவிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

    "அவனவன் எப்படாப் போவோம், இன்னிக்குப் போவோமா, அட்லீஸ்ட் நாளைக்காவது போனாப் போறும்னு உக்காந்திட்டிருக்கான்.. இதுல நீ உப்பு லேகியம்னு ஏதாவது சொல்லிட்டிருக்கியே?" என்றார்.

    "ஏன் மாமா.. எப்ப வேணுமோ அப்ப போகலாம்னு இருந்தா சந்தோஷமா இருக்க மாட்டியா?"

    "தலைகீழா சொல்றியேடா? சந்தோஷமா இருந்தா எப்ப வேணும்னா போகலாம்னு இருக்கலாம். மனுஷனுக்கு ஆரோக்கியம், வசதி, நிம்மதி எல்லாம் இருந்தா பரவாயில்லே. எல்லாத்துக்கும் மேலே பொழுது போக வேண்டாமாடா? தினம் செஞ்சதையே செஞ்சுட்டு.. சேம் ருட்டீன்.. லைப் பிகம்ஸ் மொனாடனஸ் யு ஸீ.. இடர்னல் மொனாடனியை எவன் சீந்துவான்? விளையாட்டா இருக்கா?.. அப்படியே நீ சொல்ற மாதிரி உப்பைத் தின்னு சிரஞ்சீவியா இருந்தாலும்.. அடுத்தவனைப் பிடிக்கணுமே? பித்தலாட்டம் எல்லாம் பண்ணாம இருக்கணுமே? ஒரு மனுஷனுக்கு இன்னொரு மனுஷனைப் பிடிக்காம இருந்தா என்ன லேகியம் சாப்பிட்டு என்ன பிரயோசனம்? பணம் காசு கூட ஜாஸ்தி தேவையில்லே.. வியாதி ரௌத்ரம் பேதம் எல்லாம் ஒழிஞ்சு மனுஷனா நடந்தா நீ சொல்ற உப்பைத் திங்கலாம்.. அதுக்கு ஏதாவது ஊறுகாய் கண்டுபிடிச்சிருக்கானா சொல்லு, சேர்த்து சாப்பிடலாம்." என்று முடித்தார்.

    வாழ்வின் ஆயாசம் புரிந்தாலும் மரணத்தை வெல்லும் சாத்தியம் எனக்கு என்னவோ ஒரு பெரிய அதிசயமாகவே தோன்றுகிறது. உப்பிருந்தால் ஊறுகாய் அவசியமில்லை என்றே நினைக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  48. அப்பாதுரை, ஒண்ணு சொல்வேன் கோவிக்கக்கூடாது, சரியா? சிரிப்பு வந்தா வேணா சிரிச்சுக்கலாம், ஓக்கே? ஆனா திட்டக்கூடாது.

    //'மூப்பை வெல்லும் சாத்தியம்'//
    ஆனானப்பட்ட செசியம் உப்பை கடசீல காயகல்பம், தங்கபஸ்பம் ரேஞ்சுக்கு ஆக்கிட்டீங்களே!!

    :-D :-D :-D :-D :-D :-D :-D :-D

    பதிலளிநீக்கு
  49. டங்கு டங்குனு ஏதாவது சத்தம் கேட்குதா ஹூஸைனம்மா? என் தலையும் இந்தச் சுவரும் சந்தித்தால்.

    எனக்கு வேணும், எனக்கு வேணும்.

    பதிலளிநீக்கு
  50. பெயரில்லாநவம்பர் 29, 2012

    // அப்படியே நீ சொல்ற மாதிரி உப்பைத் தின்னு சிரஞ்சீவியா இருந்தாலும்.. அடுத்தவனைப் பிடிக்கணுமே? பித்தலாட்டம் எல்லாம் பண்ணாம இருக்கணுமே? ஒரு மனுஷனுக்கு இன்னொரு மனுஷனைப் பிடிக்காம இருந்தா என்ன லேகியம் சாப்பிட்டு என்ன பிரயோசனம்? பணம் காசு கூட ஜாஸ்தி தேவையில்லே.. வியாதி ரௌத்ரம் பேதம் எல்லாம் ஒழிஞ்சு மனுஷனா நடந்தா நீ சொல்ற உப்பைத் திங்கலாம்.. அதுக்கு ஏதாவது ஊறுகாய் கண்டுபிடிச்சிருக்கானா சொல்லு, சேர்த்து சாப்பிடலாம்." என்று முடித்தார்.//

    பிரமாதம்! மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு
  51. பெயரில்லாநவம்பர் 29, 2012

    கோவைல இருக்கற ஒரு முதியோர் இல்லம், இங்க ஐம்பது வயசுக்கு மேற்பட்டவங்க எல்லாம் சேரலாம். என்னுடைய தோழியோட அம்மா, அப்பா இங்க சேந்து மூணு வருஷம் ஆறது. ரொம்ப நல்லா இருக்காம். சுத்தமா, காற்றோட்டமா இருக்காம். ஒருத்தருக்கு ரெண்டு லட்சமோ, மூணு லட்சமோ முதல்ல குடுக்கணும். அப்பறம் மாசா மாசம் ஐயாயிரம் ரூபாய் ஒருத்தருக்கு. பொதுவில ஒரு சமையல் அறை இருக்கு. நமக்கு அவங்க கொடுக்கற சாப்பாடு தவிர வேற ஏதாவது
    சாப்பிட வேணும்னா நாமே பண்ணிக்கலாம். மேட்டுப்பாளையம் பக்கத்துல இருக்கறதால அவ்வளவா வெயில் தெரியாம சுகமா இருக்காம்.

    என்னோட இன்னொரு தோழி, இந்த வருஷம் ஜூன் மாசம் இந்தியா போனபோது கோயம்பத்தூர் போயிட்டு வந்திருக்கா. அவ இது மாதிரி இன்னும் ரெண்டு இடம் பாத்துட்டு வந்திருக்கா. எல்லாமே ரொம்ப சுத்தமா, அழகா இருக்காம். அவ என்கிட்டே பேசும்போது, சமைக்கவே வேண்டாம், பேசமா எனக்கு இப்பவே போய்டலாம் போல இருக்கு. ஆனா ஐம்பது வயசு ஆகணும்னு சொல்றாளேன்னு ரொம்ப வருத்தபட்டுண்டா. :))

    பதிலளிநீக்கு
  52. மீனாக்ஷி said "கோவையில் நல்ல இல்லம், வெய்யில் தெரியாது, குளிர்ச்சியாக இருக்கும், இப்பவே போயிடலாம் போல இருக்குன்னு....."

    சென்னையைத் தவிர மற்ற எல்லா ஊர்களிலும் இப்போது குறைந்தபட்சம் 15 மணிநேரம் மின்வெட்டு! இந்தநிலை மாறும்வரை (இப்போதைக்கு ஜூன் 13 ல எல்லாம் சரியாயிடும்னு சொல்றாங்க) மற்ற எல்லா நகரும் நரகமே! :)))))

    பதிலளிநீக்கு
  53. தொடர்ச்சியா எம்ஜிஆர் படம் பார்க்குறதே பெரிய டார்சராச்சே? எப்படி தேறி வந்து பதிவும் போடுறீங்க?

    பதிலளிநீக்கு
  54. லேட்டா வந்து உங்க பதிவையும் அதைவிட உங்களுக்கு வர பின்னொட்டங்களையும் படிப்பது சுகம். எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க, யோசிக்கறாங்க?

    பதிலளிநீக்கு
  55. மரணத்தை வெல்வது என்றால் பொதுவாக அதக்கு மரணைத்தை ஒழிப்பது என்று தான் பொதுவான பொருள். தமிழ் மன்னர்கள் போரில் வென்றால் எதிராளி மன்னன் க்ளோஸ் என்றே பொருள். எங்க சைகாலஜியும் அப்படித்தான். காலனை வென்றான்னு சொன்னால் சாவே கிடையாதுன்று பொருள்.

    மூப்பை வெல்வது செசியம் பாயின்டையே அப்செட் பண்ணுது. இதைப் பத்தி தொடர்ந்து எழுதப்போறீங்கனு பட்சி சொல்லுது.

    பதிலளிநீக்கு
  56. எம் ஜி ஆர் வாரம். எப்படி ரசித்திருக்கிறீர்கள் துரை. அவரைப் பார்த்தாலே ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.நீங்கள் சொன்ன அத்தனை பாடல்கள் நடிகைகள் கணிப்பு அப்படியே உண்மை.

    அந்தக் குழந்தை விஷயம்.ம்ஹூம் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

    அந்த உப்பு உங்களுக்குக் கிடைத்தால் எனக்கும் அனுப்புங்கள். வாழ்க்கையை மீண்டும் வாழ வேண்டும்.:)

    பதிலளிநீக்கு
  57. எவ்வளவு விஷயங்கள் உங்கள் இந்த பதிவில், என் போன்றவர்கள் 5,6 பதிவில் எழுதுவதை ஒரே பதிவில் எழுதி இருக்கிறீர்கள். எத்தனை விஷயங்கள், மனதை கலங்க, கனக்க வைக்கும் விஷயங்கள், சிரிக்க சிந்திக்க வைக்கும் விஷ்யங்கள் எல்லாம் கலந்த தகவல் களஞ்சியம்.

    காலத்தை வென்றவர் தான் எம்.ஜி. ஆர். இன்னும் அவரை மறக்காமல் அவர் படங்களைப் பார்த்து கருத்துக்களை அழகாய் சரியாக சொல்லி அனைவரது பாரட்டை பெற்று விட்டீர்கள்.

    //நண்பரை நானும், இந்த விழாவை அவரும், எங்கள் மரணம் வரை மறக்கப் போவதில்லை. அதுதான் முக்கியம்.//
    அந்த நண்பரை நிச்சியம் மறக்க முடியாது.

    (கராஜ் சேல் எனும் சுலபமான சந்தைமுறை இன்னும் இந்தியாவைத் தொடவில்லை என்று நினைக்கிறேன்).
    இந்தியாவிலும் வந்து விட்டது.
    தொலைக்காட்சி விளபரங்களில் வருகிறது .

    உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  58. எவ்வளவு விஷயங்கள் உங்கள் இந்த பதிவில், என் போன்றவர்கள் 5,6 பதிவில் எழுதுவதை ஒரே பதிவில் எழுதி இருக்கிறீர்கள். எத்தனை விஷயங்கள், மனதை கலங்க, கனக்க வைக்கும் விஷயங்கள், சிரிக்க சிந்திக்க வைக்கும் விஷ்யங்கள் எல்லாம் கலந்த தகவல் களஞ்சியம்.

    காலத்தை வென்றவர் தான் எம்.ஜி. ஆர். இன்னும் அவரை மறக்காமல் அவர் படங்களைப் பார்த்து கருத்துக்களை அழகாய் சரியாக சொல்லி அனைவரது பாரட்டை பெற்று விட்டீர்கள்.

    //நண்பரை நானும், இந்த விழாவை அவரும், எங்கள் மரணம் வரை மறக்கப் போவதில்லை. அதுதான் முக்கியம்.//
    அந்த நண்பரை நிச்சியம் மறக்க முடியாது.

    (கராஜ் சேல் எனும் சுலபமான சந்தைமுறை இன்னும் இந்தியாவைத் தொடவில்லை என்று நினைக்கிறேன்).
    இந்தியாவிலும் வந்து விட்டது.
    தொலைக்காட்சி விளபரங்களில் வருகிறது .

    உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  59. வல்லிசிம்ஹன் வாழ்க! நம்ம கட்சி வாழ்க! உப்பு வாழ்க!

    'மீண்டும் வாழ வேண்டும்'னு அட்டகாசமான துணிச்சலான கொள்கையைச் சொல்லி என்னுடைய காலைப் பொழுதை நினைச்சுப் பார்க்காத அளவுக்கு உசத்திட்டீங்க! கிடைச்சா காபியில ரெண்டு உப்பைப் போட்டு சாப்பிட்டிருப்பேன்.

    ஒரு ஓட்டாவது விழணுமேனு ராம்னி மாதிரி எத்தனை நாள் பயந்துட்டிருக்கிறது? ரொம்ப தேங்க்ஸ்.

    பதிலளிநீக்கு
  60. நன்றி மீனாக்ஷி. கீதா சாம்பவசிம் சொன்ன கருத்தில் இருக்கும் உள்ளூர் அலசல் விவரத்தைத் தெரிஞ்சுக்கலாம்னுதான்.

    இங்கிருந்து போறவங்க பெரும்பாலும் sugar coated side மட்டும் பாக்கறாங்க, or சிலர் அதுகூட பாக்கறதில்லை (யுட்யூப்). அவங்கவங்க ரிடையர் ஆறப்ப தேவைப்படும்னு ஒரு investment நோக்கமோ இல்லை அப்பா அம்மாவை இப்போதைக்குப் போட்டு வைப்போம்ன்ற கரிசனம் (?) காரணமாவோ பார்க்கிறாங்கனு தோணுது.

    உங்க ப்ரென்ட் முடிவெடுக்க என்னென்ன காரணங்கள் வைத்தார், எப்படி எது முக்கியமாக பட்டது, எத்தனை இடங்கள் பார்த்தார், கோவை இடத்தை ஏன் செலக்சன் செய்தார்னு விவரம் சொல்லலாம்னா சொல்லுங்களேன்? நிச்சயம் உபயோகப்படும்.

    என் வீட்டில் மூத்தவர்கள் நிம்மதியாக இருக்கலாம் என்று கிராமத்துப் பக்கம் போனார்கள். இப்போ சமையல், க்லீனிங்க், காய்கறி மளிகை வாங்குவது எல்லாம் சிரமமாக இருக்கிறது (நகர்ப்புறத்திலேயே ஆள் கிடைக்க மாட்டேங்குது, கிராமத்துல யார் வருவாங்க உதவிக்கு?). மருத்துவ வசதி வேணும்னா பத்து பதினஞ்சு மைல் போகணும். பஸ் வசதியாகக் கிடையாது. பஸ் ஸ்டாப்புக்கு ஒரு மைல் நடக்கணும். இல்லையென்றால் ஆஸ்தான ஆட்டோ வைக்கணும். போதாக்குறைக்கு நகர நெரிசல் சத்தம் வேணாம் அமைதியா இருப்போம்னு கிராமத்துக்குப் போனா அங்கே பளிங்கு பளிங்கா கோவில் மடம்னு கட்டி மைக் போட்டு க்ருஷ்ணா ராமா மாரியம்மானு காலைலந்து இரவு வரை ஒரே கூச்சல். இதெல்லாம் வேண்டாம்னு இருந்தா டிவியை விட்டா கதியில்லைனு இருக்கணும். புத்தகம் படிக்கும் பழக்கம் ஏறக்குறைய தொலைந்து போனதால் பொழுதும் போவதில்லை. எல்லாத்துக்கும் மேலே கண் தெரிவதில்லை - வீட்டுக்குள் வந்தால் இருட்டு. கரண்ட் கட். இதெல்லாம் முதலில் முடிவு செஞ்சப்ப தோணியிருக்காது. இப்ப முதியோர் இல்லம் போயிருக்கலாமோனு யோசிக்கறாங்க.

    எல்லாத்தையும் பணத்தால அடிக்க முடியாதே? அப்படி முடிஞ்சவங்க எத்தனை பேர் இருப்பாங்கனு நினைக்கிறீங்க? வெளிநாட்டுல இருக்குறவங்க 'ப்ராப்ளமா? அதைப் பணத்தாலயே அடிப்பேன்'னு சொல்லலாம், ப்ரேக்டிகலா முடியுமானு தெரியலே.

    ஹிஹி.. உங்க ப்ரண்டு ரொம்ப பாவங்க.. ரொம்ப வேலையோ? இந்த ஊர்ல சமைக்குறதே இப்படின்னா.. இந்தியால ரொம்ப சிரமப்படுவாங்க.. :-) சமைக்க வேணாம்னா முதியோர் இல்லத்துக்குப் போறதா சொல்றாங்க? ம்ம்ம்ம்..

    பதிலளிநீக்கு
  61. எம்ஜிஆர் படம் டார்சரா?
    இதை உடனே கழகக் கண்மணிகளுக்கு அனுப்பி வைக்கிறேன் ராம்.

    உண்மையில் படம் ஸ்க்ரீன் பண்ணியது ஒரு அனுபவத்துக்காகத் தான். சொந்தமா எம்ஜிஆர் படம் தியேடரில் ஓட்டினோம்னு ஒரு அனுபவம் - இது என் ஜெனரேஷனுக்குப் புரியும் ராம்.

    பாதி நேரம் பேசிட்டிருந்தோம். ரொம்ப வருஷமா இங்க இருந்ததுனால பழைய நண்பர்கள் நிறைய வந்திருந்தாங்க.. நிறைய அரட்டை, நிறைய விஷயங்கள், சில கதைகள்.

    பதிலளிநீக்கு
  62. வருக கோமதி அரசு!
    'காலத்தை வென்றவர் எம்ஜிஆர்' - ஆ! உப்பு சமாசாரம்!

    காலத்தை வெல்லுவதுனா நமக்கு இப்படித்தான் தோணும் போலிருக்கு. (ராமசுப்ரமணியம், உங்களுக்கும் ஒரு ஓட்டு போட்டு விடுகிறேன்).

    பதிலளிநீக்கு
  63. ஸ்ரீராம்.. ஜூன் 13ம் தேதினு குறிப்பா சொல்றதுக்கு (பனிரெண்டாம் பதினாலாம் தேதி கூட இல்லை :-) என்ன காரணம்னு சொல்றாங்க? அதுக்குள்ள தட்டுப்பாடு தீரும்நு நம்புறாப்புல எதுனா விவரங்கள் உண்டா சொல்லுங்களேன்? a specific date is an intrigue.

    சென்னையைத் தவிர மற்ற இடங்களில் 15மணி நேரம் மின்சாரம் கிடையாது என்பதைப் படிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  64. பின்னூட்டம் முழ நீளத்துக்குக் கொடுத்தால் போகலை. :(

    பதிலளிநீக்கு
  65. மஞ்சுபாஷிணியால எப்படி முடியறதுனு புரியலை. :)))))

    மீனாக்ஷி சொ50 சன்னதை/எழுதினதை நானும் படிச்சேன். ஆனால் நான் கேட்டறிந்தவரையிலும், விளம்பரங்களிலும் வீடுகளைச் சொந்தமாகவே கொடுக்கின்றனர். குறைந்த பக்ஷ விலை 650 சதுர அடிக்கு 25 லக்ஷம்னு படிச்ச நினைவு. இதிலே சுத்தம் இருக்கலாம். சமையல் பண்ண வேண்டாம்னு இருக்கலாம். ஆனால் என்னால் எல்லாம் இப்படி இருக்கிறது ரொம்பக் கஷ்டம்.

    பதிலளிநீக்கு
  66. கீழே தள்ளினால் தான் வெளியே வாங்கிச் சாப்பிடுவது/ அல்லது சமையலுக்கு ஆள் போடுவது என கொள்கையே வைச்சிருக்கேன். இன்னிக்கும் 30 பேர் ஆனாலும் சமைச்சுப்போடத்தான் ஆசை. அங்கே போய்ச் சும்மா உட்கார முடியுமா?

    ஒருநாள் இரண்டு நாட்கள் அவங்க சாப்பாடு புதிய ருசியாக இருக்கலாம். தினம் தினம் சாப்பிட முடியுமா?

    பதிலளிநீக்கு
  67. வீடு நாம் வாங்கிக் கொண்ட பிறகு இருவருமே அதில் இருக்கலாம். இருவரில் ஒருவர் போய்ச் சேர்ந்த பின்னரும் மத்தவங்க இருக்கலாம். அதுக்குப் பின்னர் அந்த வீடு வாரிசுகளுக்குப் போய்ச் சேரும்னு சொல்றாங்க. இது பற்றித் தெளிவாகக் கேட்க வேண்டும். அவங்களுக்கும் ஐம்பது வயதுக்குப் பின்னால் தான் வீடு வந்து சேரும்னா அதுவரை அந்த வீட்டை என்ன செய்வாங்க?

    பதிலளிநீக்கு
  68. பெரும்பாலான என் ஆர் ஐ இளைஞர்கள், இளைஞிகள் தங்கள் பெற்றோரை இங்கே விடுவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதை நடத்துபவர்களும் என் ஆர் ஐக்களின் பெற்றோர்களுக்காகவே நடத்துகிறார்கள். இதில் பல விஷயங்கள் அடங்கி இருக்கின்றது. விரிவாக எழுத வேண்டும். நேரம் கிடைச்சால் பார்க்கலாம்.

    பதிலளிநீக்கு

  69. //எல்லாத்தையும் பணத்தால அடிக்க முடியாதே? அப்படி முடிஞ்சவங்க எத்தனை பேர் இருப்பாங்கனு நினைக்கிறீங்க? வெளிநாட்டுல இருக்குறவங்க 'ப்ராப்ளமா? அதைப் பணத்தாலயே அடிப்பேன்'னு சொல்லலாம், ப்ரேக்டிகலா முடியுமானு தெரியலே.//

    இதேதான் நான் நினைப்பதும். ஹிஹிஹி, இந்த விஷயத்திலும் அப்பாதுரையோடு ஒத்துப் போயாக வேண்டி இருக்கு! :))) வேறே வழியில்லை. :))))))

    //ஹிஹி.. உங்க ப்ரண்டு ரொம்ப பாவங்க.. ரொம்ப வேலையோ? இந்த ஊர்ல சமைக்குறதே இப்படின்னா.. இந்தியால ரொம்ப சிரமப்படுவாங்க.. :-) சமைக்க வேணாம்னா முதியோர் இல்லத்துக்குப் போறதா சொல்றாங்க? ம்ம்ம்ம்..//

    சமையல் என்ன அவ்வளவு கஷ்டமானு நினைச்சா ஆச்சரியமா இருக்கு. உண்மையில் இந்தியாவில் சமைப்பதை விடவும் யு.எஸ்ஸில் சமைப்பது சுலபமே. இதுக்காகவா முதியோர் இல்லம்? கடவுளே! :)))))

    பதிலளிநீக்கு
  70. //ஸ்ரீராம்.. ஜூன் 13ம் தேதினு குறிப்பா சொல்றதுக்கு //

    ஜூன் 2013!

    :))))))

    பதிலளிநீக்கு
  71. பெயரில்லாநவம்பர் 30, 2012

    // உண்மையில் இந்தியாவில் சமைப்பதை விடவும் யு.எஸ்ஸில் சமைப்பது சுலபமே. இதுக்காகவா முதியோர் இல்லம்? கடவுளே! :))))//
    இக்கரைக்கு அக்கறை பச்சைதான் என்றுமே. சமையல் மட்டும்தான் வேலைன்னா, சமைக்கறது ஒண்ணும் அவ்வளவு பெரிய வேலை கிடையாதுதான். வேலைக்கு உதவி இல்லாம வீட்டை மெயின்டைன் பண்ணிண்டு, சமைக்கணும்னா கொஞ்சம் கஷ்டம்தான், எனக்கும், இன்னும் என்னை மாதிரி ஒரு சிலருக்கும். :) இங்க ஒரு நாள் முடியலைன்னு கொஞ்சம் உக்காந்தா, மறுநாள் ரெண்டு மடங்கு வேலை. :)) அங்க இருக்கறவங்களை கேட்டா வேற மாதிரி
    சொல்லுவாங்க. ஒவ்வொரு வீடும் ஒரு மாதிரி.
    என் தோழியை விடுங்க. எனக்கு சமைக்கரதுல ரொம்ப ஆர்வம் எல்லாம் கிடையாது. அதே நேரம் எனக்கு பிடிச்சவங்களுக்கு பண்ணனும்னா நிச்சயமா
    பண்ணுவேன். சமயலுக்கு ஆள் வெச்சுக்கறது, வெளில வாங்கி சாப்பிடறது இது ரெண்டும் எனக்கு சுத்தமா என்னிக்கும் ஒத்து வராத விஷயம். அதனால நான் சமத்தா சமைச்சுடுவேன். வேற வழி. :)) ஒரு நாள், ரெண்டு நாள் வெளில வாங்கி சாப்பிடலாம். தினம் எல்லாம் நிச்சயமா முடியாது. இதுக்காகவே எனக்கு பிற்காலத்துல முதியோர் இல்லம் சரி வரும்னு தோணல. ஆனா உடம்பு முடியாத போய், பாத்துக்கவும் ஆள் இல்லாதவங்களுக்கு இது நிச்சயமா சொர்கம்தான். முதியோர் இல்லம்னா ஏதோ அனாதை விடுதி மாதிரின்னு நெனச்ச காலம் போய், இப்போ யாருக்கும் தொந்தரவா இல்லாம, யாரையும்
    தொந்தரவு பண்ணாம, நாமும் நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சு போற மாதிரி காலம் மாறி போனது ரொம்ப ரொம்ப வரவேற்கதக்கது.

    பதிலளிநீக்கு
  72. பெயரில்லாடிசம்பர் 01, 2012

    Thank you for so many fantastic MGR songs.

    பதிலளிநீக்கு
  73. புதிய தகவல்கள் பற்பல கருத்துக்களுடன் உங்கள் தளம் அருமையாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  74. 'வளர்வது கண்ணுக்குத் தெரியலே' - எங்க பிடிச்சீங்க! இது பாடினவங்களுகக்கும் நடிச்சவங்களுகும் கூட ஞாபகம் இருக்காது. ஸ்பானிஷ் கிதார் இசை நல்ல இனிமை. எம்ஜிஆர் வழக்கமா இருக்குறதை விட போலி. இருந்தாலும் நாலஞ்சு தடவை பாத்தாச்சு.

    பதிலளிநீக்கு