2012/05/27

வலைச்சரத்தில் ஒரு வாரம்



2010/05/28
நான் நான் நான் நான் நான் நான் நான் நான் நான்
மற்றும்
நான்

2010/05/29
அதீத கனவுகள்
ராகவன்
கண்ணன் பாட்டு
Consent to be......nothing!
கனவுகளின் காதலன்
ஈழத்து முற்றம்
hemikrish

2010/05/30
எம்.ஏ.சுசீலா
யவ்வனம்
தேவியர் இல்லம்
கைகள் அள்ளிய நீர்
அகரம் அமுதா
மனவிழி

2010/05/31
மெட்ராஸ் தமிழன்
கண்ணனுக்காக
வேல் கண்ணன்
சித்தர்கள் இராச்சியம்
டங்கு டிங்கு டு
மனதோடு மட்டும்

2010/06/01
DISPASSIONATED DJ
மரகதம்
நித்திலம்
கே.பி.ஜனா...
உயிரோடை
தமிழ் உதயம்
kashyapan

2010/06/02
சிவகுமாரன் கவிதைகள்
உப்புமடச் சந்தி
எழுத்துப்பிழை
அன்பே சிவம்
உள்ளக் கமலம்
எங்கள் Blog

2010/06/03
நன்றி




2012/05/21

டூ மச் வெறி


    மீபத்தில் இரண்டு புத்தகங்கள் படித்து முடித்தேன். கொஞ்சம் இழுவை என்றாலும் சிந்திக்க வைத்தப் புத்தகங்கள்.

ரேசா கலிலி என்ற புனைப்பெயரில் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஆசிரியர். 'A time to betray' என்ற இந்தப் புத்தகம், இரண்டு வருடங்களுக்கு முன் அமெரிக்க ஊடகங்களில் மிகவும் பரவலாகப் பேசப்பட்டது. நான் கொஞ்சம் லேட். மகாபாரதத்தையே சமீபத்தில் தான் வாசித்தேன். இந்தப் புத்தகத்தை வெளிவந்த இரண்டு வருடங்களுக்குள் படித்தது ஒரு சாதனை என்பேன் :)

ஷா காலத்தில் டெஹ்ரேனில் வளர்ந்தவர் ரேசா கலிலி. இளவயது நண்பர்களுடன் அடித்தக் கொட்டங்கள் சுவையானவை என்றாலும் வியக்கும்படி ஏதுமில்லை. மேல்படிப்புக்காக அமெரிக்கா வந்த நேரத்தில் ஷாவின் அரசு, அயோதுலா கொமேனி என்ற முல்லாவின் தலைமையில் தூக்கியெறியப்படுகிறது. 'எளிமை' என்ற போர்வையில் ஆட்சிக்கு வந்த முல்லா கொமேனி, மக்களைக் கொடுமைப்படுத்தும் மதவெறியர்களின் அரசை எப்படிப் படிப்படியாக நியமித்திருக்கிறார் என்பதே புத்தகத்தின் சாரம். கொமேனியின் ராஜதந்திரம் ஒரு பாடம். இடையே இராக்குடனான எட்டு வருடப் போர் பற்றிய விவரங்கள். சதாம் ஹுசெய்ன் இரானை அழிக்காமல் விட்டது ஆச்சரியம். இவை எல்லாவற்றுக்கும் இடையில் 'பெர்சிய' கலாசாரமும் பாரம்பரியமும் தொலைந்து போனது என்ற செய்தியை, மென்மையாகக் கீறி வலிக்கும்படிச் சொல்லியிருக்கிறார். செப்டம்பர் பதினொன்றுக்கான ஒத்துழைப்பை இரான் அல் கேதாவுக்குக் கொடுத்தது என்பதை ஓரளவுக்கு வெளிப்படையாகவே குறிப்பிட்டிருப்பது அதிர்ச்சியாக இருந்தது!

ரேசா கலிலிக்கு இந்த விவரங்கள் எப்படித் தெரிந்தன? இரானின் புரட்சிப்படையில் கணினிப் பொறியாளராக இருந்ததால் அத்தனை ரகசியங்களும் இவர் அறிய வாய்ப்பிருந்தது. அரசின் உள்வட்டத்தில் இருந்தவர் இவருடைய இளவயது நண்பர் காசிம். எல்லாவற்றுக்கும் மேலாக, ரேசா அமெரிக்க உளவாளி. சிஐஏ நிறுவனத்தின் கையாள். கடைசியில் குடும்பம் முக்கியமென்று எல்லாவற்றையும் துறந்து இப்போது அமெரிக்காவில் குடியேறிவிட்டார். பத்து வருடங்களுக்கு மேல் இரானியப் பாதுகாப்புப் படையின் உள்வட்டத்திலும் சிஐஏவின் கையாளாகவும் நிழல் வாழ்க்கை வாழ்ந்தவரின் அனுபவங்கள் அங்கங்கே திடுக்கிட வைத்தன.

இரான்-அமெரிக்கா தொட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பால், இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மதவெறி என்னை மிகவும் தொல்லைக்குள்ளாக்கியது.

கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு இளம் பெண்களைக் கற்பழிக்க அனுமதித்த முல்லாக்களை எப்படி மனித இனத்தில் சேர்ப்பது? பெண்களைக் கொல்லுமுன் கற்பழித்தக் காரணம் என்ன தெரியுமா? கன்னிப் பெண்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்கிறதாம் இஸ்லாம். தங்கள் மதவெறி அரசியலுக்கு உட்படாதக் குடும்பத்தைச் சேர்ந்த கன்னிப்பெண்களுக்கு சொர்க்கம் கிடைக்கக் கூடாது என்பதனால் கற்பழித்தார்களாம்.

பதினாறு வயதுப் பெண்ணான தன் இளவயது நண்பனின் தங்கை, சிறுமியாகத் தன்னுடன் ஓடியாடி வளர்ந்தவள்... மதவெறியர்களால் தீவிரமாகக் கற்பழிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட அழைத்துச் செல்லப்படுவதை கவனிக்கிறார் ரேசா. அந்தப் பெண், கடைசி நிமிடங்களில் இவரை அடையாளம் கண்டுகொள்கிறார். பரிதாபமாகக் கெஞ்சும் அந்தக் கண்களை விவரித்திருக்கிறார் பாருங்கள் - என்னால் அன்றைக்குத் தூங்க முடியவில்லை. யாரையாவது அடித்துக் கொல்லவேண்டும் போல் தோன்றியது.

எத்தனையோ கொடுமைகளைப் பற்றிய விவரங்கள் புத்தகத்தில் இருந்தாலும், மேற்சொன்ன விவரம் என்னை நோகடித்தது. என்னுடன் கல்லூரியில் படித்த லாஹோர் நண்பனின் மனைவி சொன்னது நினைவுக்கு வருகிறது: "பெண்ணாய்ப் பிறப்பது கொடுமை. கத்தோலிக்க பெண் பிறவி, கேவலமான கொடுமை. இஸ்லாமியப் பெண் பிறவி, நரகத்தின் வாசல்".

    விலியம் டேல்ரிம்பிலின் 'The Last Mughal', இரண்டாவது புத்தகம். நான் எழுதிவரும் (க்க்க்ம்ம்ம்) ஒரு சரித்திரக் கதையின் பின்புலத்துக்காக எதையோ தேடி எங்கோ போய் இந்தப் புத்தகத்தில் விழுந்தேன். சுவாரசியமானப் புத்தகம். சரித்திரப் புத்தகங்களுக்கான குணாதிசயம் எனப்படும் இழுவை, இதிலும் உண்டு. ஜவ்வைக் கோந்தில் கலந்து நிறைய எழுதியிருக்கிறார். என்றாலும், புத்தகத்தை முழுமையாகப் படிக்க முடிகிறது.

செங்கிஸ் கான், பாபர், அக்பர்.. என்று அசகாயச் சூரர்களின் வழிவந்த பகதூர் ஷா (zafar) தன்னுடைய கடைசி நாட்களை அனாதையாக ரங்கூன் சிறையில் கழித்து உயிர்விடுவதில் தொடங்கும் புத்தகம் ஆங்காங்கே ஆச்சரியத்தையும் விறுவிறுப்பையும் கொடுத்தது. கிழக்கிந்தியக் கம்பெனியின் போர்த்தந்திரங்கள் வியக்க வைத்தன. இந்தியர்களை எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருந்தார்கள் என்பது அதிர்ச்சியாகக் கூட இருந்தது. சமகால வணிக நிறுவனங்களான டச்சு, போர்ச்சுகீசிய, ப்ரெஞ்சு, டென்மார்க் கிழக்கிந்தியக் கம்பெனிகள்.. பிரிடிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி அளவுக்கு ஏன் ஊடுறுவி வளரவில்லை என்று புரிந்து கொள்ள முடிந்தது.

'ஒரு மாபெரும் பரம்பரை தன்னுடன் முடிகிறது' என்ற எண்ணத்தின் தாக்கம் எப்படியிருக்கும்? உருப்படாத என் பரம்பரையில் என்னுடன் தமிழறிவு முடிகிறது என்பதே என்னை அவ்வப்போது பாதிக்கிறது. பகதூர் ஷாவின் மனநிலையை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. கடைசி நாட்களில் சிறையின் தனிமையில் எத்தகைய எண்ணங்கள் அவர் மனதில் ஓடியிருக்கும்? பேரரசுப் பாரம்பரியத்தை ஷட்டர் போட்டு இழுத்து மூடியது மட்டுமில்லாமல் சாவியை பிரிடிஷ் அரசுக்குக் கொடுத்துக் காலில் விழ வேண்டிய நிலைக்குத் தாழ்ந்தது மிகவும் வருத்தமாக இருந்தது.

எல்லா ஆணவங்களும் இப்படித் தான் முடியுமோ?

பிரிடிஷ் ராஜா ராணிகள் எப்படியெல்லாம் திருடியிருக்கிறார்கள்! பிரிடிஷ் அரசின் ஆட்சிவெறி, பதவிவெறி, ஆதிக்கவெறி எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடிந்தது. பிரிடிஷ் அரசு நாசமாகட்டும் என்று ஒரு கணம் சிறுபிள்ளைத்தனமாக நினைக்காமலிருக்க முடியவில்லை.

மிக நீளமானப் புத்தகம். நூறு பக்கங்களாவது மேலோட்டமாகப் புரட்டியிருப்பேன். எனினும், படித்தப் பக்கங்களில் டேல்ரிம்பில் அருமையாக எழுதியிருப்பதை உணர்ந்தேன். பகதூர் ஷாவின் கலையார்வம், படாடோபம், அந்தக்கால தில்லி என்று நிறைய விவரங்கள் சுவாரசியமாக உள்ளன. படித்து முடித்ததும் பகதூர் ஷாவின் வாரிசுகள் யார், இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள் என்பதையும் சேர்த்திருக்கலாமோ என்று தோன்றியது.


2012/05/16

கருக்கடை


:கேனே ஜூரு?
:இந்திரா காந்தி.
:காந்திரா ரெது. ஜூரு?
    :ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.
    :ஐன்ஸ்டைன்ரா ஒது. ஜூரு?
        :ஏடால்ப் ஹிட்லர்.
        :கேனது ஹிட்லர்?
        :அபார க்லிங்டாங்.
        :அயா நோ. ஜூரு?
            :பெர்னார்ட் ஷா.
            :ரெது பெர்னார்ட். ஜூரு?
                :ராமசாமி நாயக்கர்.
                :கேனது நாயக்கர்?
                :அபார நௌதோ.
                :அயா.. சோகே. ஜூரு?
                    :ரஜினிகாந்த்.
                    :கேனது காந்த்?
                    :அபார கிப்ஷின்.
                    :ஒது ஈனா. ஜூரு?
                        :ஜெயேந்திர சரஸ்வதி.
                        :கேனது சரஸ்?
                        :அபார ஔதோ.
                        :அயா.. சோகே. ஜூரெல்?
                            :ந்யூடன், டவின்சி, சுப்புலட்சுமி, பந்டாரநாயகே, சர்ச்சில், ப்ரெஸ்லி, ஹூசெய்ன், மாசேதுங்,...
                            :ஒது முது பஞ்ரா ரெது ரெது. செங்கா கே?
                            :மே கே. சத சதம்.
                            :கே வாரே?
                            :மே வாரே. மே சாய்.
                                :கித் கெஷ்?
                                :ஏதஜார்.
                                :ஜோ! மூச் கெஷ்..
                                :மே ஆதி டிநே.. கே?
                                :கே.. கே.
                                    :ஆலே பெ?
                                    :யூ. கித் டே காப்?
                                        :ஒது. லை ஏ?
                                        :தி.
                                        :கே.



பின் குறிப்பு: [+]



2012/05/04

வருடல்


ண்ணைக்கட்டி உடலைச்சுடும்
உச்சி வெயில்
ஆதி அந்தம் தெரியாமல் வளரும்
அனாதைப் பாதை
ஓரப் புதர்த்தரையில் ஓடி மறையும்
அவசர நட்டுவாக்களி
தொடுவானில் விட்டுக் கரையும்
பசிப் பட்சி
தொலைதூரத் தனிமரத்தின் நிழல்கோட்டை நாடி
முக்கால் பயணம்.
கிழிந்த மேலாடை மூடிய மனதுள்
கிழியாத நினைவுகள்
எதிரே துள்ளியோடும் பதினாறுக்கு
எண்பதில் எத்தனை பதினாறு என்பது
கணிதம் தாண்டிப் புரியுமா?
எத்தனையோ கேள்விகள் குமிழியாய் எழும்ப
கேட்க மறுத்தது
ஒரு வாய் சோறு கொடுக்க முடியுமா தாயே?
அரிச்சுவடியை வரிசையாக நினைவில்..
அறுந்த நரம்பில் அபசுரமில்லாமல்..
காணாத காட்சிக்குக் கண்களை இடுக்கி..
ஒரு பஞ்சுக்கையின் அணைப்