'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?', 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' என்றெல்லாம் படிக்கும் போது இப்படித் தன்னை மறந்து நேசிக்க முடியுமா என்று தோன்றும். எந்தக் காலக் கட்டத்திலும் சரி, சுய மற்றும் சமுதாயக் கண்ணோட்டத்தில் இது போன்ற உணர்வுகள் ஒரு சிலருக்கேனும் இயற்கையாகத் தோன்றுமா? அல்லது கற்பனை வளமா?
தாயன்பு பற்றிப் படித்திருக்கிறேன், அறிந்திருக்கிறேன். காதலி மனைவி நெருக்கம் பற்றிப் படித்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன். பிள்ளைப் பாசம் பற்றிப் புரிந்திருக்கிறேன், உணர்ந்திருக்கிறேன். சுற்றம் நட்பு நேசம் பற்றிப் படித்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன், தெரிந்திருக்கிறேன். ஆனாலும், என்னளவில், இவை எல்லாமே புலப்படாத ஒரு வட்டத்துக்குள் இயங்கியவை போலவே தோன்றுகிறது. அளவுகோல் வைத்து அளந்தளித்தது போல் பட்டிருக்கிறது. எங்கே குறைந்தது எங்கே நிறைந்தது என்று சுட்டிக்காட்டும்படி இருந்திருக்கிறது. எதிர்பார்ப்புகளின் எல்லைகளுக்குள்ளே புழங்கியதாகப் பட்டிருக்கிறது. கடவுள் நம்பிக்கை போல் கண்மூடித்தனமாகச் செயல்படுத்தத் தோன்றியதேயில்லை. காற்றைப் போல் எதிர்பார்ப்புகளில்லாமல் பரவியதே இல்லை.
வாழ்நாளில் ஒரு முறை, ஒரே ஒரு முறையாவது இப்படிக் கண்மூடித்தனமாக அன்பை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காதா என்று அடிக்கடி நினைத்திருக்கிறேன். கற்பனையில் தான் நிகழுமென்று சலித்து அடங்கியிருக்கிறேன்.
சமீபத்தில் அந்த எண்ணம் மாறியது.
சில மாதங்களுக்கு முந்தைய இந்தியப் பயணத்தில் நண்பர் ஒருவரைச் சந்தித்து அப்படி இப்படி பேசிக்கொண்டிருந்த போது எனக்கு ஒரு புத்தகத்தைப் பரிசளித்தார். நண்பரின் தந்தை எழுதிய புத்தகம். நண்பரின் தாய் நினைவாகத் தந்தை எழுதியது. அஞ்சலி எழுத்துக்கள். ஆனால் மறைந்த மனைவியைப் பற்றி எழுதவில்லை. தங்கள் வாழ்வின் இனிமைகளையும் சிக்கல்களையும் பற்றி எழுதவில்லை. மாறாக, தங்களின் இனிமையான உலகத்துக்கு வெளியே நடைபெற்ற/பெறும் சாதாரண நிகழ்வுகளைத் தொட்டு எழுதிய அசாதாரணக் கருத்துக்கள்.
ஷா ஜெகான் மும்தாஜை சிலையாக வடித்துத் தன் காதலை வெளிப்படுத்தியிருக்கலாம். மும்தாஜைப் பற்றிக் கவிதை வடிக்கச் சொல்லியிருக்கலாம், வடித்திருக்கலாம். தாஜ்மகாலைக் கட்டுவானேன்? இந்தப் புத்தகத்தைப் படித்த போது புரிந்தது.
Abstract manifestation of uninhibited love. சிலருக்குத்தான் தெரியும். மிகச் சிலருக்குத்தான் புரியும். இன்னும் சிலரால்தான் உணர முடியும். அதை விடக் குறைவான சிலருக்குத்தான் வெளிப்படுத்த வரும்.
சிலையை ஒரு முறை ரசிக்கலாம். அது மும்தாஜ் என்று தெரிந்து விடுவதால், அடுத்த ரசனையின் தரம் குறைந்துவிடுகிறது. தாஜ்மகால் அப்படி அல்ல. காரணம், அதைப் பார்க்கும் பொழுது நினைவில் நிற்பது, அன்பின் ஆழம். கட்டிடத்தின் அழகு, கண் பார்வைக்கு மட்டும்தான். மனம், அன்பின் ஆழத்தை அழகை சிரிப்பை சோகத்தை ரசிக்கத் தொடங்கிவிடுவதால், நம்மை நாமே அடையாளம் கண்டு மகிழவும் ஏங்கவும் முடிவதால், தாஜ்மகாலைத் திரும்பப் பார்த்து அனுபவிக்க முடிகிறது. அதிசயிக்க முடிகிறது.
இந்தப் புத்தகத்தைத் திரும்பத் திரும்பத் திரும்பப் படிக்க முடிகிறது. படிக்கும் பொழுது என்னையும் என் சுற்றுப்புறத்தையும் வியக்கத்தக்க அளவில் அடையாளம் காண முடிகிறது. தெரியாத விஷயமென்றோ புதுச்செய்தியோ எதுவும் இல்லை. சொல்லியிருக்கும் விதத்தை ரசிக்க முடிகிறது. ஒரு வரித் தத்துவங்களின் ஆழம் பிரமிக்க வைக்கிறது. ஒரு சுமைதாங்கியின் உரத்த வெளிப்பாடு என்றே இதை வைத்துக் கொண்டாலும், சில உண்மைகளை அவர் எடுத்துக் காட்டியிருக்கும் விதம் இந்தத் தம்பதிகளினிடையே இருந்த நெருக்கத்தைத் தாமரை இலை நீர் போல் பட்டும் படாமல் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தப் புத்தகத்தைப் படித்ததும் அடங்கியிருந்த எண்ணம் மறுபடி குற்றுயிராய் எழுந்து விட்டது. அன்பை வெளிப்படுத்த எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ, அதை இயற்கையாக வெளிப்படுத்தத் தெரிந்த மனிதர்களிடையே நானும் வாழ்கிறேன் என்ற நிறைவே இப்போதைக்கு அந்தக் குற்றுயிரைப் பேணி வருகிறது.
இதுவும் தாஜ்மகால் பார்வை. நண்பரின் தந்தை கட்டியிருக்கும் எண்ணத் தாஜ்மகாலுக்குள், நான் கண்டு பிரமித்தவை:
2010/04/29
தாஜ்மகால் பார்வை
போக்கற்ற சிந்தனை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தாஜ்மஹால் கட்டியிருப்பதை பற்றிய அவரின் கருத்து பிரமிக்க வைக்கிறது. இப்பொழுது தாஜ்மஹாலை நினைத்து பார்க்கும்போது இன்னும் அதன் மேல் உள்ள மதிப்பு மேலோங்குகிறது. உங்களை பிரமிக்க வைத்த கருத்து குவியல்கள் மிகவும் அருமை. அன்றாட வாழ்கையில் நடக்கும் யதார்த்தமான உண்மைகள்.
பதிலளிநீக்கு//சில உண்மைகள் அசௌகரியமானவை. எது நேர்கிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொண்டு அடுத்த பணியை கவனிப்பது தான் ஒரே வழி.//
நடைமுறையில் இதை செயல் படுத்துவது கடினம். நடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழ பழகி கொண்டுவிட்டால், வாழ்கை இயந்திர மயமாகிவிடும். கனவுகள், கற்பனைகள் என்ற இனிமையே இல்லாது போய்விடும். வாழ்கை சுவாரசியமாகவே இருக்காது. 'நம் வாழ்வு நம் கையில்' என்பதற்கு அர்த்தமே இல்லாது போய்விடும்.
பதிவு நன்றாக இருக்கிறது. இதை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
அந்த புத்தகத்தின் பெயர் என்ன?
//சின்னச் சின்ன சந்தோஷங்களை இனங்கண்டு சுவீகரித்துக் கொள்வது பலருக்குத் தெரியாது. ஆதாரமே இல்லாத, கற்பனையான கவலைகளாக, துவேஷமாக, கசப்பாகவே பொழுதுகளை விழுங்கப் பழக்கப்பட்டுப் போனவர்களுக்கு இந்தச் சின்ன சந்தோஷம் அடையாளம் தெரிவதில்லை. ரசனை ஒரு அற்புத மாமந்திரம்.//
பதிலளிநீக்குbeautiful!
சாதாரணமாக நாம் நினைக்கும் சில விஷயங்கள் மற்றவர்கள் சொல்லும்போதுதான் விசேஷமாகத் தெரிகின்றன. இதுவும் அபபடி ஒன்றே...எடுத்துக் கொடுத்த உங்களுக்கு பாராட்டும் நன்றிகளும்.
பதிலளிநீக்குநன்றி ஸ்ரீராம்... தெரிந்தவை தான் மறக்கப் படுகின்றன, இல்லையா?
பதிலளிநீக்குரசமட்டம் யோசிப்பதில்லை - நான் மிகவும் ரசித்தது..
நன்றி, meenakshi.
பதிலளிநீக்குநடப்பதை அப்படியே ஏற்றுக் கொண்டு வாழப் பழகச் சொல்லியிருப்பதாகத் தெரியவில்லை.
'அடுத்த' என்பதை 'அப்படியே' என்று நீங்கள் பொருள் கொண்டிருக்கிறீர்கள். தவறில்லை. 'அடுத்த பணி' என்பது மாற்றத்தைக் குறிக்கிறது என்று நினைக்கிறேன். நாம் விரும்பாத ஒன்று நடப்பதைத் தடுக்க முடியாமல் போனால், குறை சொல்லாமல் அதை ஏற்றுக் கொள்வது தான் முறை?
அட்டவணையில் இருப்பது ஒவ்வொன்றும் ஆட்டோவுக்கு பின்னால் பொன்மொழிகளாக போடலாம் போலிருக்கே ?!?
பதிலளிநீக்குசாய்ராம்: ஆட்டோவுல எழுதி வைக்க தான் லாயக்கு; செயல்படுத்த ஒண்ணும் சரியில்லன்ற மாதிரி இருக்கே?
பதிலளிநீக்குjest aside, சொல்றது சுலபம், செய்யுறது கஷ்டம் தான்.
நான் நினைத்ததையே ஸ்ரீராமும் சொல்லியிருக்கிறார். மிளகுக் குழம்பை சாதமாகப் பிசைந்து ஏதோ ஒரு அவசரத்தில் சாப்பிட்டு வந்த பிறகு, அதே விருந்தில் நம்மோடு சாப்பிட்ட நம் ரசனைமிகு நண்பர் அந்த மிளகுக் குழம்பின் ஒவ்வொரு நல்ல அம்சத்தையும் எடுத்துக் கூறி, அதை எப்படி ரசித்துச் சாப்பிட்டார் என்பதை மற்ற நண்பர்களுக்கு விளக்கிக் கூறும்பொழுது எனக்கு என்ன உணர்வு தோன்றுமோ அந்த உணர்வு தோன்றுகிறது. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். தொப்பிகளைத் தூக்கி!
பதிலளிநீக்குமிளகு குழம்பு பசியைக் கிளப்பி விட்டுது kgg; beter than tajmahal, i must admit - சிறிது வயிற்றுக்கும் ஈயப்படுவதால். :-)
பதிலளிநீக்குநல்ல கருத்துக்கள். தெரிந்தவையென்றாலும் எடுத்துச் சொல்லும் போது நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்கு//சொல்வதையே செய்தாலும் செய்வதையெல்லாம் சொன்னாலும் எந்த உறவும் எந்த மட்டத்திலும் நீடிக்காது. அவை தொடர உண்மைகள் மறைக்கப்பட வேண்டும்.//
என்னை மிகவும் சிந்திக்க வைத்த கருத்து.
நெகிழ வைத்த பதிவு என்பது சரி.
பதிலளிநீக்கு'அடுத்த பணி'க்குப் பொருள் 'மாற்றம்' என்று நான் நினைக்கவில்லை. நல்லதாக இருந்தாலும் தீயதாக இருந்தாலும் நடப்பதை அப்படியே ஏற்றுக்கொண்டு தொடர்ந்தால் ஒரே நிலையில் இருக்க முடியும் என்று சொல்லியிருப்பதாக நினைக்கிறேன்.
good point, பெயரில்லா.
பதிலளிநீக்கு//அன்பை வெளிப்படுத்த எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கிறதோ இல்லையோ...//
பதிலளிநீக்குதங்களின் இடுகையில் வெளிப்படும் அன்பின் வாசம் அந்த தம்பதிகள் வெளிப்படுத்திய அன்பிற்கு சிறிதும் குறையாத ஒன்று தோழரே ...
"ஏமாற்றங்கள் எங்கிருந்தோ வருகிற வெளிச்சரக்கல்ல."
நன்றி ஹேமலதா பாலசுப்ரமணியம்!
ரொம்பக் கவர்ச்சியான நூல் மதிப்புரை. நூலைப் படிக்கத் தூண்டும் வகையில் இருக்கிறது.
பதிலளிநீக்குhttp://kgjawarlal.wordpress.com
//
பதிலளிநீக்குபிளாட்பாரத்தில் கண் தெரியாத கணவன் மனைவி குழந்தைகள்..அவர்கள் சிரித்து மகிழ்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். உலகமே அந்தத் தம்பதியர்க்கு இருட்டு... அடுத்த வேளைக்கு என்று எந்த நிச்சய உறுதியும் இல்லாத நிலையிலேயே. அலட்டிக் கொள்பவர்கள் இதைப் பார்க்க வேண்டும்; ஆனால் பார்ப்பதில்லை.//
ஒரு வேளை எனக்கு கண்ணும், காதும், வாயும் ஒழுங்காய் இருப்பதால் தான் தொல்லையோ ?
- கண்டும் காணாமல் இருப்பதற்கு அறியவில்லை.
- எனக்கு பிடிப்பதையே கேட்க விளையும் காது
- கண்டதை உளரும் வாய் ?
தேவையா ?
பாதி பேர் இதே கதை தான் சாய்ராம் - என்னையும் சேர்த்து.
பதிலளிநீக்குஇந்த மாதிரி பரீட்சையில எப்பவும் முதல் மார்க் வாங்கலையேனு பாக்க முடியாது; பெயிலானாலும் பரவாயில்லை. பரீட்சைனு ஒதுக்கி வைக்காம இருக்குற வைக்கும் சரிதான் என்பது என் அபிப்பிராயம்.
அககா, அககா அற்புதம்... அற்புதம்
பதிலளிநீக்குஅத்துணையும் மேற்கோள்கள். முழுசா படிக்கவில்லை, கருத்துரை எழுத வந்துட்டேன். நிறைய எழுத தோணுது... தெரியல
இங்கு ஏனோ வந்தது
தாமதமாய்.. "என் நேரம்"!!!???
பின் வரும் வரிகளும், தொடர்ச்சியும் அருமை
அழகு, கண் பார்வைக்கு மட்டும்தான்...
..அதை இயற்கையாக வெளிப்படுத்தத் தெரிந்த மனிதர்களிடையே நானும் வாழ்கிறேன் என்ற நிறைவே..
புத்தகத்தில்,
இரு தரப்பினரின் எதிரெதிர் குணங்கள் உடனடியாகப் புலனாவதில்லை
மழையில் எருமை - அறிவுக்கு எட்டினவரை.
இலக்குகள் - அடைந்தால்தான் வெளியில் வரும், அது வரை குத்திக்கொண்டு இருக்கும் உள்மனத்தில்..
முழுவதும் படித்ததும்...
பதிலளிநீக்கு************************
அழுவதா, சிரிப்பதா தெரியவில்லை
விடுவதா, தொடர்வதா புரியவில்லை
அழுதுகொண்டே கேள்வி கேட்டது முட்டாள் மனம்.
எடுத்துகொள்ள தெரியவுமில்லை, விட்டுச்செல்ல முடியவுமில்லை அப்பாவி(யி)ன் மனசு.
தலைமறைவுக்கு மன்னிக்கவும்.
பதிலளிநீக்குஓசைப்படாமல் நூறு பதிவுகளா? வளர்க.
நூலறிமுகமும் நன்று.
நன்றி, விஜயன். அடிக்கடி வருக. அரசனில்லாவிட்டாலும் அமைச்சனுக்கு ஆதரவு..?
பதிலளிநீக்கு