மலை அருவி சுனாமியில் நீச்சல் முதலை சுறா பிரானாவுடன் போர் தொட்டிக்குள் குட்டிமீன் கற்பனை. |
எத்தனை வகை,
எத்தனை நிறம்!
எல்லாரும் இந்நாட்டு டின்னர்.
எத்தனை நிறம்!
எல்லாரும் இந்நாட்டு டின்னர்.
அலைவாசி வலைவீசி... இலைவாசி. | கடலுக்குள் எங்கே வந்தன காதலி கண்கள்? | துணை தேடும் பெண்ணே சற்றே தூண்டிலுக்கப்பால் துள். | நீருக்குள் தங்கரதம் செம்மீன். |
உயிருண்டு மணமில்லை
உயிரில்லை மணமுண்டு
நீர்ப்பூக்கள்.
உயிரில்லை மணமுண்டு
நீர்ப்பூக்கள்.
சுறாவுக்கும் எறாவுக்கும் என்ன வித்தியாசம்? காரம். நேரம். |
மீன் மீனையுண்ணும்
கடல்மிராண்டித்தனம்
மனித டிஎன்ஏ.
நேற்றைய மீனிலிருந்து பிறந்தவன்
இன்றைய மீனையழிக்கிறான்
நாளைய செய்தியில் நீதி.
கடல்மிராண்டித்தனம்
மனித டிஎன்ஏ.
நேற்றைய மீனிலிருந்து பிறந்தவன்
இன்றைய மீனையழிக்கிறான்
நாளைய செய்தியில் நீதி.
மீனை உருவாக்கிய தேவன் கருணையுடன் தூண்டிலை உருவாக்கினார். | பற்களைக் காட்டும் சுறாவுக்கு உற்சாக வரவேற்பு. ஸ்க்ரீன் சேவர் மீன்கள்! | நீரிருப்பீரோ நானிருப்பேனோ நீரிருக்கும் வரை நெத்திலி. |
தமிழாசிரியர்
உண்ட மீன்
கயல்.
உண்ட மீன்
கயல்.
எத்தனை வகை,
பதிலளிநீக்குஎத்தனை நிறம்!
எல்லாரும் இந்நாட்டு டின்னர்//
ஹா..ஹா... அருமை.
எல்லாமே நல்லா இருக்கு
//நீருக்குள்
பதிலளிநீக்குதங்கரதம்
செம்மீன்//
அழகான கற்பனை! நல்லா இருக்கு கவிதை!
தொட்டிக்குள் குட்டி மீன் இப்படி கூட கற்பனை பண்ணி இருக்கலாம் என்று ஒரு சின்ன கற்பனை.
எங்களை
கூட்டில் அடைத்து, வேடிக்கை காட்டி களிப்பு!
கொன்று, உலையிலிட்டு உணவாக்கி ருசிப்பு!
பக்குவம் செய்து மருந்தாக்கி பிழைப்பு!
போதாதென்று இப்படி கவிதையாக்கியும் ஒரு ரசிப்பு!
ம்ம்ம்ம்...!
நன்றி ஸ்ரீராம். எங்கள் பிளாக் மீன் படத்தைப் பார்த்து விழித்த போது தோன்றியவை.
பதிலளிநீக்கு//meenakshi சொன்னது…எங்களை
பதிலளிநீக்குகூட்டில் அடைத்து, வேடிக்கை காட்டி களிப்பு! கொன்று, உலையிலிட்டு உணவாக்கி ருசிப்பு! பக்குவம் செய்து மருந்தாக்கி பிழைப்பு! போதாதென்று இப்படி கவிதையாக்கியும் ஒரு ரசிப்பு!
ம்ம்ம்ம்...!//
பலே பலே ? மண்டபத்திலே யாராவது எழுதிக்கொடுத்தது இல்லையே ? சும்மா சொன்னேன்.
உங்கள் கற்பனை குதிரையை அடிக்கடி இன்னும் ஓட விடுங்கள்.
| தொட்டிக்குள் குட்டி மீன் இப்படி கூட கற்பனை பண்ணி இருக்கலாம் |
பதிலளிநீக்கு(என்னைப் போல்) பெரும்பாலானோரின் மனக்கோட்டையையும் கையாலாகாத்தனத்தையும் தொட்டி மீன் கற்பனை சித்தரிப்பதாக எழுதினேன்... உங்கள் கற்பனையும் நன்றாக இருக்கிறது meenakshi.
நன்றி சாய்ராம்! கற்பனை குதிரை எதுக்காக ஓடறதுன்னே தெரியாம ஓடிண்டேதான் இருக்கு.
பதிலளிநீக்குநன்றி அப்பாதுரை! உங்களுடையது லட்சிய மீன். அடைபட்டு கிடந்தும் தன் லட்சியத்தை கற்பனையிலாவது அடைய நினைக்கிறது. என்னுடையது சராசரி மீன். கற்பனையிலும் நிஜத்தின் புலம்பல் தான்.
லட்சிய மீன், அலட்சிய மீன், சரி மீன், சராசரி மீன்... எல்லாமே காரக்குழம்போட நல்லாத் தான் இருக்கும். வித்தியாசமே தெரியாது.
பதிலளிநீக்குபுலம்பினா மண்டைல ரெண்டு போடுங்க, சரியாயிடும். மனுசனுக்கே மவுசக் காணோமாம், இதுல மீனுக்கென்ன பவுசுன்னேன்?
//புலம்பினா மண்டைல ரெண்டு போடுங்க, சரியாயிடும்//
பதிலளிநீக்குயாரு மண்டையிலே ? மீன் மண்டை தானே ?
//யாரு மண்டையிலே ? மீன் மண்டை தானே ?//
பதிலளிநீக்குபரவாயில்லையே சாய்ராம், புரியாத மாதிரி இப்படி கேள்விகள் கேட்டு, சூப்பர் ஐடியா தறீங்க! பேஷ்! இது நல்லா இருக்கே!
மச்ச அவதாரம் பத்தி எழுதிட்டீங்க - மத்த அவதாரங்கள் பத்தி எப்போ?
பதிலளிநீக்கு//kggouthaman
பதிலளிநீக்குமச்ச அவதாரம் பத்தி எழுதிட்டீங்க - மத்த அவதாரங்கள் பத்தி எப்போ?//
அப்பாதுரையின் ரீசென்ட் புகைப்படம் !
அப்பாதுரையை பன்னினு நேரா சொன்ன மொதல் ஆசாமி நீங்க தான் சாய்ராம் கோபாலன்.
பதிலளிநீக்கு//பெயரில்லா கூறியது... அப்பாதுரையை பன்னினு நேரா சொன்ன மொதல் ஆசாமி நீங்க தான் சாய்ராம் கோபாலன் //
பதிலளிநீக்குஏங்க நான் சொல்லவந்தது அவர் அடுத்தது "வராக (the boar)" அவதாரம் பற்றி எழுதுவார் என்று சொன்னேன் !!
நீங்கள் அவரை அப்படி சொல்லிவிட்டு என் மேல் பழி போடுகின்றீர்கள் !?
அனானி யாரு? ஆசாமி யாரு? ஆகாசாமி போலத் தோணுதே? ஆகாசாமிணியோ?
பதிலளிநீக்கு