கட்டிவச்ச கோவிலுண்டு நாட்டுலே
கடுங் காலித்தனம் ஒழியக் காங்கலியே?
பட்டியெல்லா மடங்களுண்டு நாட்டுலே
பசி போகப்பிடிச் சோத்தைக் காங்கலியே?
மேகங்கொட்டி வெள்ளமுண்டு நாட்டுலே
மவ தாகத்துக்கு நீரைக் காங்கலியே?
ராகத்தோடே பாட்டுமுண்டு நாட்டுலே
ராத் தூங்கவொரு கவியைக் காங்கலியே?
கத்தரல்லா கந்தனுண்டு நாட்டுலே
குணங் காக்கவொரு கடவுளக் காங்கலியே?
மெத்தமெத்த படிப்புமுண்டு நாட்டுலே
மன மொத்துவாழு மறிவைக் காங்கலியே?
ஆனந்தம் அருளுமுண்டு நாட்டுலே
அட அடுக்களையில் அன்பைக் காங்கலியே?
வானந்தொட்ட காதலுண்டு நாட்டுலே
வழி வாழவொரு துணையைக் காங்கலியே?
பத்தாயிரந் தொழிலுண்டு நாட்டுலே
பய பொழைக்கவொரு வழியைக் காங்கலியே?
எத்தனையோ லெட்சமுண்டு நாட்டுலே
எஞ் செலவுக்கொரு சல்லிக் காங்கலியே?
அருமை துரை. எளிமையான நடையில் இனிமையான கவிதை. வாழ்த்துக்கள்.---கீது
பதிலளிநீக்குExcellent! கவிதை வரிகள் கண்கலங்க வைத்து விட்டது. படங்களும் மிகப் பொருத்தம். வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குDurai
பதிலளிநீக்குBrilliant. Some seems resonate a lot with my feeling for sure.
I am just wondering whether I can get a tune for this. Looks worth a try to get a song out of this.
May be after decades a tamil song that has meaning and situational needs of today
நன்றி geetha santhanam,meenakshi and சாய்ராம் கோபாலன்.
பதிலளிநீக்கு(ஹ்ம்ம்ம்ம்? இளையராஜாவுக்கு அனுப்பி வக்கவா சாய்ராம்?)
why not Vedhanth ? He has genuine interest for music !
பதிலளிநீக்குஇளையராஜா - huh- ஹ்ம்ம்ம்ம்?
that's a great idea. vedanth, it is. then we will sell it to a tamil movie looking for title song?
பதிலளிநீக்குஆனந்தம் அருளுமுண்டு நாட்டுலே
பதிலளிநீக்குஅட அடுக்களையில் அன்பைக் காங்கலியே?
வானந்தொட்ட காதலுண்டு நாட்டுலே
வழி வாழவொரு துணையைக் காங்கலியே?//
அருமை.
நாட்டுப்புறப் பாடல் கேட்ட கல்யாணராமன் போல மகிழ்கிறேன்.
திரை கடலெல்லாம் ஓடிட்டு வந்தாச்சு - இன்னும்
பதிலளிநீக்குதிரவியத்தை காங்கலையே ?
Anu கூறியது: இன்னும் திரவியத்தை காங்கலையே ?
பதிலளிநீக்குtrademark நக்கல்... வாழ்க.
திரவியம் சிக்கலில் இருப்பது தெரியும்.