மோகத்தை ஒடுக்கச்சொன்ன முனிவன் மனைவிக்கு மூன்று சக்களத்தி. |
அகம் பிரம்மாஸ்மி. இனி அடுத்தக் கோவிலில் அங்கப்பிரதட்சிணம். |
தடுக்கி விழுந்து நெற்றியிலடிபட்ட கல்லை எறியப் போனால் ஐயோ, சிவலிங்கம். |
ஆசை கோபத்தைக் கட்டச்சொல்லும் காவிவேட்டிக்காரனுக்கு கடனில்லை குடும்பம் வாடகை வயோதிகப் பெற்றோரில்லை வேளைக்குச் சோறு பாதபூசை ஆமாஞ்சாமிக் கூட்டம். ஓத்தா டேய்! |
கொலைகாரப் பாவிக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனை குடும்பஸ்தனுக்கு. |
இறந்துபோன மனைவியின் நினைவில் சிறையிலிருக்கும் கொலைகாரக் கணவன். |
அம்மா வீடு எங்கே? இன்னும் கொஞ்ச தூரம். அம்மா வீடு, என்றும் அமைதி. |
அனுபவத்துக்கும் தத்துவத்துக்கும் இரண்டு தலைமுறை இடைவெளி. |
எல்லோரும் விழித்திருக்க அயர்ந்து உறங்குகிறான் குறட்டை மகான். |
அம்மா அப்பா சம்மதிக்க வேண்டும், இல்லை கணவன் மனைவி சம்மதிக்க வேண்டும் - இந்தக் காதல் பெருந்தொல்லை. |
சந்தக்காரி அறியாமல் விட்ட ட்டிக் ட்டிக் விதை என் காதல். |
2010/01/07
ட்டிக் ட்டிக் விதை
வகை
கவிதை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அப்பா,முதலாவதும் மூணாவதும் கருத்துப் புரிஞ்சு நல்லாவேயிருக்கு.
பதிலளிநீக்குஎல்லாமே நச்...நச்சுன்னு இருக்குங்க...
பதிலளிநீக்குகுட்டிக் கவிதை! நல்லா இருக்கு.
பதிலளிநீக்கு//அனுபவத்துக்கும் தத்வத்துக்கும் இரண்டு தலைமுறை இடைவெளி//
இது தத்துவம் மாதிரி இருக்கே, அனுபவம் இல்லாத தத்துவமா!
இரண்டாவது எனக்கு ரொம்ப பிடிச்சது.
காதலுக்கு பெத்த குழந்தைங்கள் சம்மதம் வேண்டும்னு ஒருத்தர் படமே எடுத்திருக்கார். வசந்த் இயக்கிய 'கேளடி கண்மணி' படம் இந்த சப்ஜெக்ட்தான்.
I like all of your haikus; last one just tops.
பதிலளிநீக்குRefreshing and impressive.
Nice colors too.
பதிலளிநீக்குநல்ல கலர்களில் நறுக்குன்னு எழுதி இருந்தாலும் ஒத்தை வார்த்தை தவிர்த்திருக்கலாம். அழகிய presentation.
பதிலளிநீக்குசுவையான ஹைகூ படித்து ரொம்ப நாளாகிறது. நன்று.
பதிலளிநீக்கு