வெத்து வேலை
:வாய்யா கொல்டி, எங்கே ஒதுங்கிப் போயிட்டிருக்கே?
:இந்தப் பக்கம் அரவமுன்னதனி சொன்னாங்கோ, அதான். மீரு பாகுன்னாரா?
:பாகா இருக்கேன். பாகா இருக்கேன். ரோடின் சிலையாட்டம் யோசிச்சிட்டிருக்கியே, என்ன விசயம்? உன் பேரு மறந்து போச்சா?
:லேது, கொத்த வருசம் ஒச்சிந்தி காதா?..
:புத்தாண்டுக்கு என்ன உறுதி எடுக்கனு யோசிக்கிறியா? யோசி, யோசி.
:மீகேமோ ஐடியா உந்தா?
:நாலஞ்சு நாளா இணையத்திலும் தொலைக்காட்சியிலும் இதே கேள்வி தான்யா. உடற்பயிற்சி, யோகா, எடைகுறைப்பு, மேற்படிப்பு, திருமணம்னு பலவகை ஆலோசனைகள குடுத்திட்டிருக்காங்க.
:ஒக மஞ்சி ஐடியா உந்தி நா தகிர..
:சொல்லு, கேப்போம்
:ரிசீகேசம் போவணும்னு கொன்னி ரோஜா...
:நல்ல ஐடியா தான்... திரும்பி வர மாதிரியும் ரோஜா வச்சிருக்கியா இல்லை போவ மட்டும் தானா?
:மீரேனு சேஸ்தாரு?
:நானும் பத்து வருசமா ஒவ்வொரு வருசமும் நிறைய உறுதிகள் எடுத்துட்டிருக்கேன். நல்ல செட்டிநாட்டுச் சாப்பாடு சாப்பிடணும்னு போன வருசம் எடுத்தேன், நிறைவேறிடுச்சு. இந்த வருசமும் இரண்டு உறுதிகள் எடுத்துட்டிருக்கேன்..
:ஆந்த்ரா போஜனமா?
:கிண்டலா?
:குஜராத்தி?
:நக்கல விடுயா. சொல்றத கேளு. புது வருசம் முழுக்க நான் யார் கிட்டயும் கோவமா பேசறதில்லேனு உறுதி எடுத்திட்டிருக்கேன்யா..
:அதி ரொம்ப கஷ்டம் காதா?
:யோவ், சும்மா குறுக்கே பேசினா பல்ல உடைப்பேன். மனுசனப் பேச விடுறீங்களா நீங்க? அதான் டக்குபுக்குனு தெலுங்கானா பண்ணிடறீங்க.
:நேனேனு செப்பனு..மீரே செப்பண்டி.
:எங்க அம்மாவைக் கூட்டிக்கிட்டு திருவையாறு ஆராதனைக்கு போவணும்னு ரொம்ப வருசமா நினைச்சிட்டிருக்கேன்... இந்த வருசம் முடியாது போலிருக்கு.
:போனி
:எங்கே போகச் சொல்லுறே? புத்தாண்டு உறுதி விவகாரமே பெரிய விவகாரமா போச்சுயா. புது வருசம்னா உறுதி எடுனு கழுத்தறுக்குறாங்க. அடுத்த நாளே எல்லாம் காத்துல போயிடுது, இதுல உறுதி எடுத்தா என்னா, எடுக்காட்டி என்னா?
:நம்மள மாத்திக்க கொத்த வருசமன்டே ஒக சான்சு தொரகததி காதா?
:அதுவும் சரிதான். ஆனா என்னைப் போல எத்தனையோ பேரு உறுதி எடுக்க முடியாம கஷ்டப்படுறாங்கயா. அதுக்காகத்தான் ஒரு லிஸ்டு போட்டிருக்கேன். இதப் பாரு, ஐம்பது போடோ காபி எடுத்து வச்சிருக்கேன். இங்கே நின்னுகிட்டு வரவங்களுக்கெல்லாம் கொடுக்கப் போறேன்.
:இவ்வண்டி சூஸ்தானு..
:இருயா, நானே படிக்கிறேன் கேளு. ஐடியா குடுக்குறதோட, அதை எப்படி நிறைவேத்துறதுனும் வழி சொல்லப் போறேன்.
2. குழந்தைகளிடம் பொய் சொல்லாதீர்கள். அடுத்த முறை கடவுள் உண்டா என்று குழந்தை கேட்கும் போது அம்மையப்பன் டயலாக் அடியுங்கள்.
3. முப்பது வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், பத்து பவுண்டு எடை குறையுங்கள். என்றைக்கும் இருபத்தொன்பது என்று நினைத்துக் கொண்டால் கவலையே இல்லை.
4. தினம் பத்து நிமிடம் உடற்பயிற்சி செய்யுங்கள். அல்லது உடற்பயிற்சி செய்பவரைப் பார்த்துக் கொண்டிருங்கள்.
5. புகை பிடிப்பதை நிறுத்துங்கள். பிடித்தே ஆகவேண்டுமென்றால் உங்கள் குழந்தைக்கும் தாய்க்கும் ஒன்று கொடுத்து உடன் புகைக்கச் சொல்லுங்கள்.
6. ஒரு இசைக்கருவி வாசிக்கப் பழகிக் கொள்ளுங்கள். குறைந்தது இசைக்கருவி என்று எழுதி வாசிக்கப் பழகிக் கொள்ளுங்கள்.
7. பணம் சேருங்கள். நோட்டு அடித்துச் சேர்ப்பதாக இருந்தால், மூணு ரூபாய் ஏழு ரூபாய் நோட்டைத் தவிருங்கள்.
8. காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். ஆண் பெண் என்று இல்லை; நல்ல கவிதை, இலக்கியம், மழலை, மலையருவி, செவ்வானம், இரவின் அமைதி, விண்வெளி... கடவுளைத் தவிர எதை வேண்டுமானாலும் காதலிக்கலாம், அதுவும் உங்கள் விருப்பம், உங்கள் வசதி.
9. எதையும் பொருட்டாக எண்ணாமலிருக்கப் பழகிக் கொள்ளுங்கள். குளிருக்கு மட்டும் ஸ்வெட்டர் போட்டுக் கொள்ளுங்கள்.
10. சாப்பாட்டில் மூன்றில் ஒரு பங்கைக் குறையுங்கள். அருகில் யாராவது இன்னும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அவரையே பார்த்தபடி இருங்கள். அவரும் சாப்பிடுவதைக் குறைத்துக் கொண்டுவிடுவார், உங்களுக்கும் நிறைவு கிடைக்கும்.
:என்னய்யா, எப்படி நம்ம ஐடியா?
:எவுரண்டி மீரு?
புத்தாண்டு லொள் | 2010/01/01
'அப்பா'டி.... என்ன பண்றதுன்னு பார்த்தேன்...
பதிலளிநீக்குஇந்த பத்து யோசனைகளையே கடைபிடிச்சிடறேன்....(அப்போ எட்டு ரூபாய், ஒன்பது ருபாய் எல்லாம் அடிக்கலாம்னு சொல்றீங்க...)
நகைச்சுவையாகச் சொன்னாலும் நல்ல யோசனைகள். பத்தில் இரண்டையாவது கடைபிடிக்க வேண்டும்.
பதிலளிநீக்கு6. ஒரு இசைக்கருவி வாசிக்கப் பழகிக் கொள்ளுங்கள். குறைந்தது இசைக்கருவி என்று எழுதி வாசிக்கப் பழகிக் கொள்ளுங்கள்//
பதிலளிநீக்குலொள்ளு தங்க முடியல சாமி!!
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு