2015/04/03


938


◄◄ இதற்கு முன்



    "வாட் நான்சென்ஸ்!" என்று எழுந்த மேரியைத் தடுத்தான் ஜோன்ஸ். "ப்லீஸ் ஸிட் டவுன்".

"திஸ் இஸ் ஸ்டுபிட். என்னால் ஏற்க முடியாது" என்று எழுந்த வினியைக் கை வைத்து அழுத்தினான். "ப்லீஸ். திஸ் இஸ் நாட் யுர் பெட்" என்றான் சற்றுத் தீர்மானமாக.

"யு ஜெர்க். லீவ் மி" என்று கைகளை உதறினாள் வினி. ஆனால் அவளை எழ விடவில்லை ஜோன்ஸ்.

நான் மிரண்டு போயிருந்தேன். மௌனத்தில் குமைந்தோம். மௌனத்துக்கும் அமைதிக்குமான வேறுபாடு அன்றைக்குப் புரிந்தது.

மைகேல் முதலில் பேசினான். "ஓகே. அதை எதிர்பார்க்கவில்லை. அதனாலென்ன? நீ சொன்ன பணயத்தை நான் ஏற்க முடியாது. காரணம், நீ தோற்றால் என்னுடன் அனுப்ப உன்னிடம் மகள் கிடையாது. இது பொருந்தாதப் பணயம்" என்றான் நிதானமாக.

"அடக்கடவுளே! நல்லவேளை. ஜோன்சுக்கு மகள் இருந்தா மைகேல் பெட் ஏத்துட்டிருப்பாரு போல. சே!" என்று கிண்டலாக நகைத்தாள் மேரி.

ஜோன்ஸின் கண்களில் ஒரு விசித்திர ஒளி தெரிவதை அப்போது தான் கவனித்தேன். சாத்தானைச் சுற்றியிருக்கும் தீயின் சிவப்பைப் போல் விபரீதமான ஒளி. 'வா! உன் ஆன்மாவை என்னிடம் விற்றுவிடு. ஆயுளுக்கும் என்னுலகில் விலங்குடன் சுதந்திரமாக இருக்கலாம். வா, வலிதரா தீயில் வேகலாம். வா, நிரந்தரத் துயரத்தில் சிரிக்கலாம்' என்று பார்ப்பவர்களை வசியம் செய்யும் ஒளி. சட்டென்று கண்களை விலக்கிப் பார்வையைத் திருப்பினேன்.

ஜோன்ஸ் முகத்தில் புன்னகை. "மைகேல். நீ சொல்வது முற்றிலும் உண்மை. நான் இன்னும் திருமணமே செய்யவில்லை. மகளுக்கு எங்கே போவேன்? மேரி சொல்வது போல் எனக்கு மகளிருந்தால் இந்தப் பணயம் ஏற்புடையதாகும் இல்லையா? ஆக, இந்தப் பந்தயத்துல பணயத்தின் அளவும் பெருமையும் பிரதானம் இல்லையா? உனக்கு உன் மகள் எவ்வளவு நெருக்கமோ முக்கியமோ எனக்கு அவ்வளவு முக்கியமான.. இன் பேக்ட்.. அளவிட முடியாத முக்கியமான ஒன்றைப் பணயம் வைத்தால்?"

"என்ன சொல்றே?"

"அப்பா!" என்ற வினியை மைகேல் கைகளால் அடக்கியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

"என் மூதாதையர் காலத்துலந்து எங்க பரம்பரை சொத்து. ப்லிமத்ல இறங்கிக் கும்பிட்ட என்னுடைய மூதாதையர்கள் வரை வேர் நீளும் என் சமர்வில் எஸ்டேட். நூற்றுப் பதினேழு ஏக்கர் நிலத்துல இருக்குற அத்தனையும் உனக்குச் சொந்தம். அதாவது பந்தயத்துல நான் தோற்றால்"

"நோ!" என்றாள் மேரி.

"அப்பா.. இது என்னுடைய வாழ்க்கை.." என்று எழுந்த வினியை மறுபடி உட்கார வைத்தான் ஜோன்ஸ். இம்முறை சற்று மென்மையாக.

"வெய்ட். அது போதாதுனா இப்ப கேம்ப்ரிட்ஜ்ல நான் கட்டியிருக்குற முப்பது வீடு குடியிருப்பு. தி ஹோல் காலனி. ப்லஸ்.. என் ஹார்வர்ட் பங்கு. ரெட் சாக்ஸ் பங்கு. அத்தனையும் பணயம் வைக்கிறேன்"

"எதுக்காக? என் மகளுக்காகவா? நோ! ஷி இஸ் பேர்லி எய்டீன்.. அவள் சின்னப் பெண்! வாட் ஆர் யூ போத் ட்ரையிங் டு ப்ரூவ்? என் மகளின் வாழ்க்கையை விளையாட்டுக் கருவியாக மாற்ற உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது" என்று இரைந்தாள் மேரி.

"இட் இஸ் த ஸ்பிரிட் ஆப் வேஜர். பணயத்தின் தாத்பர்யம்" என்று பதிலுக்கு இரைந்தான் ஜோன்ஸ். "உன் மகள் மேல் எனக்குப் பெரிய காதல் எதுவும் இல்லை. கொஞ்சம் யோசித்துப் பார். என் அந்தஸ்து என்ன? உங்கள் அந்தஸ்து என்ன? உன் மகளை மணக்கும் எண்ணம் எனக்கில்லை. அப்படியே செய்து கொண்டாலும், என்னை விடத் தகுதியான பாரம்பரிய செல்வந்த மணமகன் அவளுக்குக் கிடைக்கப் போவதில்லை. எவனாவது ஸ்டாக் ப்ரோகர் ஹார்வர்ட் ப்ரொபசர் என்று வேண்டுமானால் கிடைக்கலாம். எனக்குக் கொஞ்ச நாள் கம்பேனியனாக இருப்பாள்.. உடல்துணை.. அவ்வளவுதான். ஸோ ஸ்டாப் யுவர் அவுட்பர்ஸ்ட்" என்றான். மைகேலைப் பார்த்தான். "மைகேல். உன் மனதை உன் மனைவி புரிந்து கொள்ள வாய்ப்பே இல்லை. வா. என்னுடன் விளையாடு. நீ உரசிப் பார்ப்பது ஏனென்று எதுவென்று உனக்கும் எனக்கும் மட்டுமே தெரியும். நான் தயார் மைகேல். உன் மகள் ஒரு அடையாளம் இங்கே அவ்வளவுதான். வினியை விட, ஏன் மேரியை விட அழகான வனப்பான வாளிப்பான வேலைக்காரிகள் என் எஸ்டேட்டில் இருப்பது உனக்கே தெரியும் மைகேல்" என்றான். "உனக்கே தெரியும் மைகேல்" என்றதன் அழுத்தத்தை நாங்கள் கவனிக்கத் தவறவில்லை. மேரியின் முகம் அவமானத்தால் சிவந்ததைக் கவனித்தேன்.

ஜோன்ஸ் விடவில்லை. "அத்தனையும் பணயம் வைக்கிறேன். பந்தயத்தில் தோற்றால், என் சொத்துக்களை இழந்து உன் மகள் வினியிடம் இரண்டு வருடம் வேலைக்காரனாகவும் இருக்கிறேன். என்ன சொல்றே?"

போதை இருவருக்குமே தலைக்கேறியிருந்தது. போதாக்குறைக்கு பரம்பரை கௌரவம் அந்தஸ்து என்று மறைவாகக் கிடந்தப் பிசாசுகள் இருவர் மனதிலும் ஆட்டம் போடத் தொடங்கியிருந்தன.

மைகேல் நிதானமாக, "ஓகே, ஜோன்ஸ். அத்தனையும் பணயம் வைப்பாயா? உனக்கு அதிகாரமும் உரிமையும் இருக்கிறதா?" என்றான். "அப்பா!" என்ற மகளை மறுபடி அடக்கினான்.

"உனக்கு நம்பிக்கையில்லையென்றால் என் வக்கீலை உடனே அழைக்கிறேன். எனக்கு முழு உரிமை இருக்கிறது. இரு தரப்பிலும் நாம் நாணயமாக நடப்பதால் என் பணயமும் சரி உன் பணயமும் சரி... செல்லும்"

"நோ! என்னைப் பணயம் வைக்க முடியாது" என்று மறுபடி எழுந்த வினியை இந்த முறை அடக்கினான் மைகேல். "உனக்கு இன்னும் பதினெட்டு முடியவில்லை. சட்டப்படி நீ என் சொத்து. பணயம் வைக்க முடியும். ஆனால் இந்தப் பந்தயம், பணயம் பற்றியதில்லை என் புத்திகெட்ட மகளே! அவன் தோற்றால் அத்தனையும் உனக்குச் சொந்தம். சந்தேகமில்லாமல் தோற்கப் போகிறான். அவனுடைய சொத்து பாரம்பரியம் பெருமை அத்தனையையும் வென்றதும் நீ அவனைத் தெருநாய் போல நடத்தலாம்". மைகேலின் ஆத்திரம் தெளிவானது. "பெண்ணே. இது உன் அப்பனின் சாதாரண உரசலில்லை. இதில் ஜோன்ஸ் பற்றியெரியப் போகிறான். பேசாதிரு".

"அப்பா!" என்று அழத் தொடங்கியவளைச் சமாதானம் செய்தான் மைகேல். "வினி. ஸ்டாப் இட். உன்னை ஒரே மாலையில் பெரும் பணக்காரியாக மாற்றப் போகிறான், இந்த சாதாரண ஸ்டாக் ப்ரோகர் அப்பா.. இதோ இந்தப் பரம்பரை பணக்காரனை.. பாரம்பரியச் சீமானை.. பந்தயத்தில் வெல்லப் போகிறான் இந்தத் தரங்கெட்டப் புதுப்பணக்காரன். இது வெறும் சூதாட்டப் பந்தயம் இல்லை. உன் தலைவிதியை மாற்றப் போகிற உணர்வூட்டப் பந்தயம். எல்லாம் உனக்காகத்தான் என் மகளே!"

"இதை அனுமதிக்க மாட்டேன்!" என்ற மேரியை அடக்கினான் மைகேல். "இதில் தலையிடாதே! நான் என்ன செய்கிறேன் என்பது எனக்குத் தெரியும்!". மகளைப் பார்த்து, "வினி.. சொல்வதைக் கேள். ஜோன்ஸால் இந்த விவரங்களைச் சொல்லவே முடியாது. நான் வென்றால் உன் பரம்பரைக்கு சொத்து சேர்ந்து விடும். தோற்றாலும்... அதை விடு, இவனால் இந்த ஒயின் விவரங்களைச் சொல்லவே முடியாது. இது உன் அப்பா உனக்குத் தரும் உத்தரவாதம். என்னை நம்பு, என் அத்தனை உழைப்பின் மேல்.. என் உயிருக்கு இணையான உன் மேல்.. நான் ஆணையிட்டுத் தரும் உத்தரவாதம்.." என்றான்.

"அப்பா.. நிஜமாகவே இவரால் ஜெயிக்க முடியாதா?" என்றாள் வினி. அவள் இறங்கிவிட்டது தெரிந்து எனக்கு வருத்தமாக இருந்தது. மேரி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

ஜோன்ஸ் அமைதியாக, "அப்போ, இந்தப் பணயம் சரிதானே?" என்றான்.

"எனக்குச் சம்மதம், ஜோன்ஸ். இந்த மதுவின் நாடு, தோட்டம், வருடம் எல்லா விவரங்களையும் சரியாகச் சொல்லி வென்றால் என் மகள் வினியை நீ அழைத்துப் போகலாம். தவறினால் உன் பாரம்பரிய சொத்தான சமர்வில் எஸ்டேட், உன் செல்வத்தில் கட்டிய கேம்ப்ரிட்ஜ் காலனி, முதலீடு செய்த ஹார்வர்டு ரெட் சாக்ஸ் பங்குகள் எல்லாம் எனக்குச் சொந்தம். வினியின் வேலைக்காரனாக அவள் ஆணைகளுக்கடங்கி இரண்டு வருடங்கள் நீ இங்கே என் வீட்டில் இருக்க வேண்டும். இரு தரப்பிலும் நாணயமாக நடக்க எனக்கும் சம்மதம்" என்று மேசையில் இருந்த பழக்கத்தியை எடுத்து ஒரு ஆப்பிள் மேல் குத்தினான்.

"நாணயத்தின் பேரில் எனக்கும் சம்மதம்" என்ற ஜோன்ஸ் நிதானமாக அந்த ஆப்பிளைக் கத்தியோடு எடுத்துக் கடித்தான்.

மேரி உள்ளுக்குள் குமைவது தெரிந்தது. மைகேலின் முகத்தில் வெறி மட்டுமே தெரிந்தது. ஜோன்ஸின் முகத்தில் விபரீதம் பரவியிருந்தது. வினியை அவன் பார்த்த பார்வை!

ஆப்பிளை எறிந்த ஜோன்ஸ் மதுக்கிண்ணத்தை எடுத்தான். "இன்னும் கொஞ்சம் ஊற்று மைகேல்".

மைகேல் மது ஊற்றினான். அவன் மனதில் வெற்றியின் சங்கொலி. "போதுமா? இன்னும் ஏழு புட்டிகள் உள்ளே இருக்கு. அதையும் வேண்டுமானால் குடி. விவரத்தை சொன்னால் சரிதான். ஒரு சந்தேகம். ஆமாம்....உன் எஸ்டேட்டில் இருக்கும் மோனே மற்றும் மாடியில் இருக்கும் க்ரேன்ட் பியானோ.. எல்லாம் பணயத்தில் அடக்கம் தானே?"

"அத்தனையும் மைகேல். அத்தனையும்! என் வேலைக்காரிகள் உட்பட.. நம்ம ரெண்டு பேருக்குமே மிகவும் பிடித்த அந்த ஆப்பிரிக்க ஊமைச் சின்னப்பெண் உட்பட" என்றுச் சிரித்த ஜோன்ஸின் நிதானம் அச்சமூட்டியது. கோப்பையை உயர்த்தி ஒரே மூச்சில் குடித்தது ஆச்சரியமாக இருந்தது. இன்னுமொரு முறை நிரப்பச் சொன்னான். இப்பொழுது அதை மெள்ளப் பருகியபடி விவரங்களைச் சொல்லத் தொடங்கினான்.

இத்தாலி நாட்டின் ஒரு சிறிய தோட்டத்தின் 1934ம் வருட திராட்சை மது என்றான். அங்கே விளைந்த திராட்சை மதுவின் இருபது கேஸ்களும் எப்படி உலகப் போரில் ஜெர்மானியரால் திருடப்பட்டு பதுக்கப்பட்டு இங்கிலாந்து ஜெர்மானியர் ஜப்பானியர் என்று வரிசையாக ஒருவரை ஏமாற்றி ஒருவரால் கடத்தப்பட்டு முடிவில் அமெரிக்கா வந்தடைந்தது என்பதையெல்லாம் ஒரு கதை போல் அழகாகச் சொன்னான். பிறகு மதுவின் பெயரைச் சொன்னான். பிறகு தோட்டத்தின் பெயரைச் சொன்னான். வேண்டுமென்றே சில நொடிகள் மௌனமாயிருந்து பின் மைகேலிடம், "பாட்டிலை மறைத்திருக்கும் துணியை விலக்கிக் கொஞ்சம் பெயரைக் காட்டு. என் விவரங்கள் சரியா என்னவென்று பார்க்கலாம்" என்றதும் அறையில் மயான அமைதி. என்னைத் தட்டி, "மைகேல் கையிலிருக்கும் புட்டியிலிருந்து விவரங்களைப் படியேன்?" என்றான்.

மைகேல் பிணம் போலிருந்தான். அவன் கைகளிலிருந்த புட்டியை விலக்கிப் பெயர் தெரியும்படி படித்தேன். ஜோன்ஸ் சொன்ன நாடு தோட்டம் வருடம் எல்லாம் கச்சிதமாகப் பொருந்தின. அருகிலிருந்த வெண்ணைக் கத்தியை மைகேலை நோக்கி வீசினாள் மேரி. அது குறி தவறி எதிரே இருந்த அலமாரியில் பட்டு கண்ணாடி விரிசல்களுடன் விழுந்தது. வினி "அப்பா!" என்று அழுதாள். மேரிக்குப் பேச்சு வரவில்லை.

"ஸோ... யூ ஆர் மைன் டியர்" என்று வினியை நெருங்கினான் ஜோன்ஸ். "வா என்னுடன். இரண்டு வருடங்களுக்கு என்னுடன் இருக்க வா. நீ எனக்குச் சொந்தம். உன் ஆடைகளைக் களைந்து இதோ என் ஓவர்கோட்டை அணிந்து வா"

"அப்பா! நோ! அங்கில்.. ப்லீஸ் ஹெல்ப்" என்று ஜோன்ஸிடமிருந்து விலக முயன்றாள் வினி.

"ப்லீஸ் டேக் மி ஜோன்ஸ். என் மகளுக்குப் பதிலாக என்னை வேலைக்காரியாக எடுத்துக்கொள்.." என்று மகளை இழுத்துக் கொள்ள முயன்றாள் மேரி.

"நோ. வினி, போகலாம் வா" என்றான் ஜோன்ஸ்.

"நோ. இது செல்லாது. போலீஸைக் கூப்பிடுவேன்" என்று எழுந்த மேரியை வேகமாக அடக்கினான் ஜோன்ஸ். மைகேலைப் பார்த்தான். "வாட் இஸ் திஸ்? தோற்றதும் கலாட்டா செய்கிறீர்கள். நான் தோற்றிருந்தால் எப்படி நடந்து கொண்டிருப்பீர்கள்? மைகேல்.. இதானா உன் நாகரீகம்? புதுப்பணக்காரர்களின் கலாசாரமா?"

மைகேல் குரல் நடுங்கப் பேசினான். "ஜோன்ஸ். பந்தயத்தில் நீ வென்றது உண்மைதான்.. உள்ளறையில் போய் பேசலாமா? வேறு ஏதாவது ஏற்பாடு.." தடுமாறினான்.

"ஏன் மைகேல்? இது இரு தரப்பிலும் நியாயமான முறையில் வைத்தப் பணயம். நாணயத்துடன் விளையாடிய ஆட்டம். ஐ வொன். யு லாஸ்ட். நான் தோற்றிருந்தால் வேறே ஏற்பாட்டுக்கு ஒத்துக்கிட்டிருப்பியா? லெட் அஸ் நாட் மேக் இட் வொர்ஸ்" என்றான் ஜோன்ஸ். ".. இந்த அருமையான சாப்பாட்டை வேஸ்ட் பண்ண மனசில்லே.. ஆனா இப்ப இருக்குற நிலையில சாப்பிடப் பிடிக்கலேனா ஐ வில் அன்டர்ஸ்டேன்ட்" என்று எழுந்தான். "வினி, வா போகலாம்" என்றான் மறுபடி.

எனக்கு வியர்த்தது. கைச்சட்டைப் பையிலிருந்து கர்சீபை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொள்ள நினைத்தேன். ஜோன்ஸிடம் தர மறந்த மூக்குக்கண்ணாடி!

"அப்பா.. அங்கில்.. டூ சம்திங்" என்ற வினியின் குரலில் அழுகையே ஓங்கியிருந்தது.

பேச்சு வராமல் நான் குரலைச் சரி செய்து கொண்டேன். "எக்ஸ்க்யூஸ் மி ஜோன்ஸ். இது உன்னுடைய கண்ணாடி.." என்று நீட்டினேன்.

"என்னுடையது தான். தேங்க்ஸ். நீ வேணும்னா சாப்பிட்டுக் கிளம்பு. நீதான் பாவம். சாப்பிட வந்தவன் இந்த விளையாட்டில் சிக்கிக்கிட்டு சாப்பிட முடியாம.. உனக்கு இந்த சாப்பாடு எங்கே கிடைக்கப் போகிறது? ப்லீஸ் ஈட். நான் வினியுடன் கிளம்புறேன்" என்றான். கண்ணாடியைப் பெறக் கை நீட்டினான்.

"நான் சாப்பிடுறது இருக்கட்டும். நீ வினியுடன் கிளம்ப முடியாது.. காரணம்.." என்றேன். அவனை நேராகப் பார்த்து, "நீ பந்தயத்தில் வெற்றி பெறவில்லை" என்றேன். மெள்ள. தெளிவாக. ஒவ்வொரு சொல்லாக.

"வாட்? யு ஆர் நாட் இன் திஸ். இது எங்க பந்தயம். எங்க பணயம். ஹூ ஆர் யூ?"

"சாட்சி. இந்தப் பந்தயத்துக்கான ஒரே வெளியாள் விட்னஸ்"

"ஸோ? ஐ ஸ்டில் வொன் த பெட். ஹவ் டூ யூ ஸே? யூ மீன் ஐ லாஸ்ட்? இனாமாகக் கிடைக்கும் அரை டாலர் சாராயம் குடிக்கிற உனக்கென்ன தெரியும் நான் சொன்ன விவரங்கள் பற்றி?"

"நீ சொன்ன விவரங்கள் எல்லாம் சரி. பந்தயத்தில் வெற்றி பெறவில்லை அவ்வளவுதான்"

இப்பொழுது வினி, மேரி, மைகேல் எல்லோரும் புது நம்பிக்கையுடன் என்னைப் பார்க்கத் தொடங்கியது சற்றுக் கூச்சமாக இருந்தது. ஜோன்ஸின் சாத்தான் ஒளி என்னைப் பாதிக்காமல் இருக்க, என் கண்களை அப்படி இப்படி விலக்கி அவன் முகத்தைப் பார்த்துப் பேசினேன். "ஜோன்ஸ்.. இந்தக் கண்ணாடி உன்னதுனு சொல்லி வாங்கிக்கிட்டே. ஆனா அது எங்கே கிடந்தது எப்படி எனக்குக் கிடைச்சதுனு சொல்ல அனுமதி கொடு. சொல்ல வேண்டாம்னு இருந்தேன்.. நான் மைகேல் வீட்டுக்குள்ளே வந்தப்போ நீ அவசரமா வெளியே போனே.."

"ஸோ? மேரிக்கும் வினிக்கும் ஒரு பொகே வாங்கப் போனேன்.. என் கல்சர்.."

"ரைட்.. ஆனா இந்தக் கண்ணாடியை விட்டுப் போயிட்டே. எங்கே? மைகேலோட ஸ்டடி ரூம்ல. இதில் என்ன விசேஷம்னு கேட்டின்னா.. இந்தக் கண்ணாடி கிடந்த இடத்துக்கு நேர் எதிரேதான் மைகேல் இந்த மதுப்புட்டிகளை அடுக்கியிருந்தான். விவரங்கள் எல்லாம் வெளிப்படையா தெரியும்படி. எதையும் மறைக்கவில்லை. நமக்கு மது ஊத்துறப்போ மைகேலே சொன்னான். ஸ்டடி ரூமின் ஒளிவெப்பத்துல சரியான பதத்துக்கு வரட்டும்னு நீ கொடுத்த டிப் பற்றிச் சொன்னான்... நாணயமான பணயம் நாணயமான பந்தயம்னு நீ சொன்னதெல்லாம் சரியில்லே.. அதனால இது வெற்றியில்லே.."

"என்ன சொல்றே?"

"ஏமாத்துனு சொல்றேன். ஸ்டடி ரூமுக்கு நீ ரகசியமா போய் எல்லா விவரத்தையும் மனனம் செய்துகிட்டு வெளியே போய் இன்னும் சில விவரம் தெரிஞ்சுகிட்டு வந்து அழகான கதை சொல்லியிருக்கேனு சொல்றேன்.."

"உளறாதே.. உள்ளறையில் இப்ப டிவி பார்த்தப்ப போட்டிருந்தேன்.. அங்கே விட்டிருக்க வேண்டும்.. இதெல்லாம் என்னிடம் பலிக்காது.. என்ன சொல்றே? என்ன உளறல் இது?"

சற்றுத் தயங்கினேன். "ஜோன்ஸ்.. மைகேலின் ஸ்டடிக்குள் நீ வந்ததை நான் பார்த்தேன். நீ இந்தப் பாட்டில் ஒன்றை எடுத்துப் படித்ததை நான் பார்த்தேன். கண்ணாடியைக் கீழே வைத்துவிட்டு விவரங்களை அவசரமாக எழுதிக்கொள்வது போல் ஏதோ செய்ததையும் பார்த்தேன். பிறகு அவசரமாக வெளியேறியதைப் பார்த்தேன்... ஆகவே.. இது உளறல் இல்லை. உன் கதையும் விவரமும் சரின்னு சொல்றேன். பந்தயத்துல மட்டும் ஜெயிக்கலேனு சொல்றேன். மைகேல் கோர்ட்டுக்கு போனா அவன் தரப்பு சாட்சியா எல்லாத்தையும் சொல்வேன்னு சொல்றேன்.. வினியை ஏமாத்திக் கூட்டிப் போக நீ போட்ட சதின்னும் சொல்றேன்.. பாரம்பரியப் பெருமையெல்லாம் வீணாப் போகும்னு சொல்றேன்... இதுக்கு மேலே நீ வினியைக் கூட்டிப் போகணும்னு நினைக்காதேனு சொல்றேன்.."

ஜோன்ஸ் என்னை வெறுப்புடன் பார்த்தான். "நீ சொல்றது பொய்னு உனக்கே தெரியும். அவுட்ரேஜியஸ் கன்ஜெக்சர்ஸ்.. உன்னை யார் நம்புவார்கள்?"

தயங்கினேன். "அந்த அறையில் நான் என்ன செய்து கொண்டிருந்தேன் என்பதைக் கேட்டால் இன்னும் விவரங்கள் சொல்வேன்.. அதற்குப் பிறகு நம்பக்கூடும் இல்லையா?"

மைகேல் எங்கள் இருவரையும் பேந்தப் பார்த்துக் கொண்டிருந்தான். மேரி குழம்பியிருந்தாள். வினி இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தாள்.

"என்ன செய்து கொண்டிருந்தாய்?"

"மேரியுடன் தனியாக இருந்தேன். இருவரும் அப்பொழுதுதான் உடை களையத் தொடங்கியிருந்தோம். ஸ்டடியில் காலடி ஓசை கேட்டதும்.. பெரிய விளக்கு திடீரென்று எரியத் தொடங்கியதும்.. அதிர்ந்து.. புத்தக அலமாரிக்குப் பின்னால் உருண்டு ஒளிந்து கொண்டோம். ஒய்ன் ஷெல்ப் எங்களுக்கு எதிரே இருந்ததால் நீ உள்ளே வந்ததையும் எங்களுக்கு முதுகைக் காட்டியபடி ஒய்ன் பாட்டில்களை எடுத்து விவரங்களைப் படித்ததையும் பார்த்தோம்.. உன் செயல்களில் ஒரு அவசரம் இருந்ததை நான் கவனித்தேன்.. வெளியே போகையில் பெரிய விளக்கை அணைக்காமல் போனதைப் பார்த்தோம்.. சில நொடிகளில் வினி உள்ளே வந்து விளக்கை அணைத்துவிட்டுப் போனதையும் பார்த்தோம்.." என்றேன்.

அறையில் புயலடங்கிய அமைதி. "என்னை மன்னித்துவிடு மைகேல்.." என்றேன்.

மேரி அழத்தொடங்கினாள். மைகேலிடம் "அவர் சொல்வது உண்மை. ஜோன்ஸை நாங்கள் பார்த்தோம்.." என்றாள். நான் இதை எதிர்பார்க்கவில்லை.

"ஐ டோன்ட் பிலீவ் திஸ். எல்லாம் பொய்.." என்றான் ஜோன்ஸ்.

"வெல்.. உனக்குத் தெரிஞ்ச உண்மை வேறா இருக்கலாம். கோர்ட்டுல நான் விவரம் சொன்னதும் அவங்க தீர்மானம் செய்யட்டும். பதினெட்டு வயது முடியாத ஒரு பெண்ணை ஏமாத்திக் கூட்டிட்டுப் போக பரம்பரை பாஸ்டன் பணக்காரன் என்னவெல்லாம் செய்வான்னு ஜூரிகள் தெரிஞ்சுக்கட்டும். நான் சொல்றது பொய்யானு தீர்மானம் செய்யட்டும்" என்றேன்.

பார்வையால் என்னை எரிக்க முயன்றுவிட்டு ஜோன்ஸ் விருட்டென்று வெளியேறினான்.

அடுத்தப் பதினைந்து நிமிடங்களுக்கு அறையில் பேச்சில்லை. கொஞ்சம் அழுகை. தொடர்ந்து நிம்மதிப் பெருமூச்சு. சிரிப்பு. வினி ஓடிவந்து என்னைக் கட்டிக் கொண்டாள். "அங்கில், மை சேவியர்!".

மேரி என்னை இறுக அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டாள். "என் பெண்ணைக் காப்பாற்றினாய்! என்னையும் காப்பாற்றினாய். ரொம்ப நன்றி" என்று விடாமல் அழுதாள்.

மைகேல் மட்டும் அமைதியாக இருந்தான். பிறகு, "எத்தனை நாளாக என் மனைவியுடன்...?"

மேரி வெடித்தாள். "முட்டாள்.. முட்டாள்! இதுவா உன் கேள்வி? உன் மகளை எப்படிப்பட்ட விபத்தில் இருந்து காப்பாற்றியிருக்கிறார் உன் நண்பர்? உனக்கு இந்த சந்தேகக் கேள்விதான் கேட்கத் தோன்றியதா? நீ மனிதன் தானா? நானாவது நேற்று வந்தவள். இவரை உனக்கு எத்தனை நாளாகப் பழக்கம்? சிறுபிள்ளைப் பழக்கம் இல்லையா? உன் மனைவி மேல் உனக்கு நம்பிக்கை இல்லை. நோ. உன் மேல் உனக்கு நம்பிக்கையில்லை. யூ இன்செக்யூர் இன்வெர்டிப்ரெட்.." என்று எழுந்தாள். வேகமாக அறைக்குள் போனவள், திரும்பி வந்தாள். "யு னோ வாட்? என் ஓட்டு ஜான் கென்னடிக்கு. உன் ரிபப்லிகன் தேரை மூழ்கிச் சாகட்டும்" என்று கருவிப் போனது சற்றுச் சிரிப்பாக இருந்தது.

வினி, "அங்கில்.. நிஜமாகவே நீங்க சொன்னபடி நடந்ததா? வெளில தானே உட்கார்ந்திட்டிருந்தீங்க? ஐ நெவர் வென்ட் இன்ஸைட் த ஸ்டடி.. நான் விளைக்கை அணைக்கவில்லை.. ஜோன்ஸின் கண்ணாடியை ஸ்டடியில் எடுத்திங்களா? அங்கே அவர் போனதைப் பார்த்திங்களா? வாட் ஹேபன்ட்?" என்று பதட்டத்துடன் அடுக்கினாள்.

வினியைப் பார்த்துச் சிரித்தேன். "எந்த உண்மை யாருக்குத் தெரிந்து இப்போது என்ன பயன்? உனக்காக.. தப்பா நினைக்காதே.. இன்னும் முதிராத ஒரு பெண்ணுக்காக ஜோன்ஸ் எல்லாவற்றையும் பணயம் வைத்ததும்.. ஒய்ன் விவரங்களைச் சொல்லும் போது அவன் கண்ணில் தெரிந்த வெறியும்.. உன்னை இந்த மாலை முழுதும் தொந்தரவு செய்த விதமும்.. என்னைக் கொஞ்சம் யோசிக்க வைச்சது.. போகட்டும், விடு. ஜோன்ஸ் இனிமே வரமாட்டான். அதுதானே முக்கியம்? எனக்கு அந்தக் கண்ணாடி ஸ்டடில கிடைக்கலேனு மட்டும் சொல்றேன் - நீ இத்தனை கேட்டதாலே" என்றேன்.

"அப்போ பொய் சொன்னீங்களா?"

என்னை வியப்புடன் பார்த்த விமியின் முகத்தை ஏந்தி, "wisdom is often nearer when we stoop than when we soar.." என்று அவள் நெற்றியில் முத்தமிட்டேன். "அதுவும் வர்ட்ஸ்வர்த். ரெட்டைப் பொருள். இப்படியே எல்லாத்தையும் வியந்து பார்த்து சந்தோஷமா இரு என் செல்லம்.. மை சைல்ட்" என்றேன்.

இதுவரை அமைதியாக இருந்த மைகேல், என் கைகளைப் பிடித்துக் கொண்டான். "உனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. வாட் கேன் ஐ டூ பார் யூ?" என்றான்.

என்னென்னவோ சொல்லத் தோன்றியது. அவன் தோள்களைத் தட்டிக் கொடுத்தேன். "கவனமாக இரு" என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

    சில மாதங்களுக்குப் பின் மைகேலிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவன் வீட்டில் சந்திக்காமல் பாஸ்டன் துறைமுகப் பகுதியில் ஒரு இத்தாலிய உணவகத்தில் சந்தித்தோம். சிறிது அங்கிங்கு அளைந்துவிட்டு விஷயத்துக்கு வந்தான்.

"வினி மேற்கே ஸ்டேன்பர்ட் போகிறாள். லிட்ரெசர் படிக்கிறாளாம்.."

"நல்லது" என்றேன்.

"மேரி என்னைவிட்டு விலகி ந்யூஹேம்ஷைர்ல அவ அப்பா வீட்டுல இருக்கா. விவாகரத்து வேணும் என்கிறாள். சர்ச்ல சொல்லி வாங்க அவமானமா இருக்கு. பட் வி வில் கெட் டிவோர்ஸ்ட்"

"ஸாரி"

"எல்லாம் என் தவறுதான். உன் மேல் சந்தேகப்பட்டு நடந்ததுக்கு என்னை மன்னிச்சுடு. இதுல நீ தலையிட்டிருக்கவே வேண்டாம்.. இருந்தாலும் என் பெண்ணுக்காக.. என் குடும்ப நிம்மதிக்காக நீ தலையிட்டு.. உன்னைப் புரிஞ்சுக்காமப் போனதுக்காக வெட்கப்படுறேன்.."

"நெவர் மைன்ட்.."

"அல்ப சூதாட்டத்துனால.." மைகேல் குலுங்கி அழத்தொடங்கினான்.

நள்ளிரவு போல் வீடு திரும்பினேன். பெக்கி எனக்காகக் காத்திருந்து நான் உள்ளே வந்ததும் முகம் நிறையப் புன்னகைத்தாள். "சிக்கன் பாட்பை செய்திருந்தேன்.. உன்னுடையதையும் சேர்த்து நானே சாப்பிட்டுவிட்டேன்" என்றாள். "மைகேல் எப்படி இருக்கிறான்?"

விவரங்கள் சொன்னேன். அமைதியாக இருந்தாள். பிறகு என்னைக் கட்டி, "ஐயம் ப்ரவுட் ஆப் யூ" என்றாள்.

    சொல்ல மறந்தேனே? சூதாட்டச் சம்பவத்துக்குப் பிறகு என் மனைவி மைகேலைச் சந்திப்பதில்லை. எங்களுக்குள் புது நெருக்கம் உருவாகியிருக்கிறது. பெக்கி கருத்தரித்திருக்கிறாள். பெண் குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. பெண்கள் சுதந்திரமாகச் செயல்படுவது எனக்குப் பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. வளவளவென்று விடாமல் பேசும் தன்னம்பிக்கை மிகுந்த புத்திசாலிப் பெண் குழந்தை எங்களுக்குப் பிறக்க வேண்டும் என்ற ஆசை உண்டாகியிருக்கிறது. விக்டோரியா, ஹிலரி என்ற இரண்டு பெயர்களில் ஒன்றைத் தேர்வு செய்வோம். யாருக்குத் தெரியும்? இன்னும் ஐம்பது வருடங்களில் என் பெண் அமெரிக்க அதிபராகவும் இருக்கலாம்.

எல்லாம் சூதாட்டப் பலன். ஜோன்சுக்கு நன்றி?




இக்கதை Roald Dahl 1945 வாக்கில் எழுதிய 'Taste' எனும் சிறுகதையின் தழுவல். மொழியாக்கத்தில் சில உரிமைகளை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நிறைகள் டாலுக்குச் சொந்தம். குறைகள் என்னுடையவை.
தொடர்ந்து படித்ததற்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.

35 கருத்துகள்:

  1. இந்தக் கதையின் கருத்தே/"wisdom is often nearer when we stoop than when we soar/ வெரி இண்டெரெஸ்டிங்.

    பதிலளிநீக்கு
  2. பொய்மையும் வாய்மையிடத்த, புரை தீர்ந்த
    நன்மை பயக்குமெனின்.

    யாரு சொன்னாங்க ??

    திருவள்ளுவரா?

    இல்லைன்னேன்.

    பின்னே யாரு?

    மது மயக்கம் தீர்ந்தப்பறம்
    மைக்கேல் சொன்னாங்கன்னேன் .

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  3. 'தழுவல் கதை' யிலே உங்களை அடிச்சிக்க முடியாது பாஸ் ! ஆங்கிலக் கதையைத் தழுவி எழுதினதைச் சொன்னேன். விறுவிறுப்பான நடை உங்கள் சிக்னேச்சர்.... பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  4. சகுனிக்கே சவாலா...? என்று தோன்றியது...

    பதிலளிநீக்கு
  5. கண்ணாடி எங்கே இருந்ததாம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதையைப் படிச்சா தெரியும் :-) [முன் கதையில்]

      நீக்கு
  6. ஒரே பொய்யைப் பலமுறை திருப்பித் திருப்பிச் சொன்னால் உண்மையாகிவிடும் என்னும் ‘கோயபெல்ஸின்” தத்துவம் தெரிந்தவரா இந்தக் கதையில் வரும் “நான்” ?எங்கோ இடிக்கிறதே...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கேள்வி.
      பொய்யும் இல்லை உண்மையும் இல்லை என்ற உச்ச நிலையில் பொய்யும் உண்டு உண்மையும் உண்டு, இல்லையா சார்? North Poleன் மையத்தில் கிழக்கு மேற்கு பார்க்க முடியுமா? இருந்தாலும் கிழக்கு மேற்கு என்று நம்புகிறோம் நம்பி எல்லாம் செய்கிறோம் சொல்கிறோம். வடக்கே போகப் போக கிழக்கு மேற்கு தெற்கு எல்லாம் காணாமல் போவது மெய்யா பொய்யா? இதில் பொய் மெய்யானதா, மெய் உருவாகப் பொய் தேவைப்பட்டதா? அல்லது இரண்டுமே கருவிகள் தானா?
      கதையில் பொய்யும் இல்லை மெய்யும் இல்லை என்பது என் கருத்து. of course, i am not the origin or terminal of opinion here.

      நீக்கு
    2. கடவுள் இருக்கிறார்னு சொல்றாப்புலயானு கேக்குறீங்க.. இல்லையா? அது சரி

      நீக்கு
    3. கொயபில்ஸ் தத்துவம் முழுமையாக எடுத்து பிரசுரித்தால் நல்லது.

      நீங்கள் சொல்லியிருப்பது அந்த "தத்துவத்தின்" முதல் பாதி தான்.
      யதேச்சாதிகாரமாக செயல்படும் எந்த அரசும் செய்யும் செயலைத்தான்
      ஜோசப் கோயபலஸ் எடுத்து உரைத்ததாக நான் எண்ணுகிறேன்.

      எந்த ஒரு பொய்யும் அரசு அதிகாரம் அதன் பின்னணியில் இருக்கும் வரை தான் விலை போகும் என்று சொல்லுவது கொயபில்ஸ் தத்துவத்தின் இரண்டாம் பகுதி.

      ஐயமிருப்பின் இங்கே பார்க்கவும்.
      https://www.jewishvirtuallibrary.org/jsource/Holocaust/goebbelslie.html

      நீக்கு
  7. இதை விடப் பொருத்தமான முடிவு இருக்க முடியாது. அருமை.

    பதிலளிநீக்கு
  8. கதையில் வரும் "நான்" சொன்னதெல்லாம் உண்மையோ அல்லது பொய்யோ.. ஆனால் அது ஒரு அப்பாவி பெண்ணை பெரிய ஆபத்திலிருந்து தப்பிக்க வைக்க உதவி செய்தது நல்லதா போச்சு

    பதிலளிநீக்கு
  9. அற்புதம்... அருமையான முடிவு..
    மிக சிறப்பான மொழியாக்கம். வாழ்த்துக்கள். சார்..

    பதிலளிநீக்கு
  10. இந்த கதையிலே ஒரு சட்டத் தவறு இருக்கிறது.

    அதை வேண்டும் என்றே தான் சுட்டிக் காட்டாது இருந்தேன்.

    ஜோன்சும் மைக்கேலும் ஒரு காண்ட்ராக்ட் போட்டு அதில் மைகேல் தனது பெண் வினி ஐ கண்சிடரேசன் ஆக வைக்கிறார். இல்லையா.

    இந்த காண்ட்ராக்டே சட்டப்படி செல்லாது.

    எல்லா ஒப்பந்தமும் சட்டப்படி செல்லும் ஒப்பந்தமாகாது. அதனால், ஒப்பந்தமே இல்லை நடக்கவில்லை என்று சொல்லவும் முடியாது.

    ஒரு லீகல் கான்ட்ராக்ட் மினிமம் இவைதனை உள்ளடிக்கி இருக்கவேண்டும்.

    ஒப்பந்தத்தின் உள் நுழைபவர்கள் ஒப்பந்தம் ஒன்று போட தகுதி உள்ளவர்களாக இருக்கவேண்டும். parties to the contract must be capable of entering to the contract. principle of capacity to contract. A contract to be legally valid must be entered into by two people of sound mind. that means. If anyone of them is under sedation or under the influence of liquor so as not to be able to come to a legal state of mind

    செய்துகொள்ளும் ஒப்பந்தம் அன்றைய தேதி நிலவும் சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். any contract to be subject to the then provisions of Law of the land.

    முக்கியமாக கன்சிடரேசன் சட்டப்படி அனுமதிக்கத்தக்கதாக இருக்கவேண்டும்.
    legality of object and consideration.

    மேலும் 1960 களில் வேஜரிங் ஒப்பந்தங்கள் சட்டப்படி அனுமதிக்க்கபடவில்லை. சிலவற்றை நீக்கிவிட்டு. குதிரை பந்தயம் போன்றவை. ஸ்பெசிபிக்கா அனுமதிக்கப்பட்டவை.

    இறுதியாக, கன்சிடரேஷன் ஒப்பந்தத்துக்காக ஒருவர் மற்றோவருக்குத் தரும் தொகை . அது ஒரு ஹயுமன் லைபாக இருக்கும் பட்சத்தில் அதுவும் சலேவரி சட்டத்தின் கீழ், இந்தியாவில் பாண்டட் லேபர் சட்டம். குற்றம். இந்த ஒப்பந்தம் போட்டதற்காகவே
    மைக்கேல் மற்றும் ஜோன்ஸ் குற்றவாளிகள்.

    கதை சுவாரஸ்யம் தான்.



    கீதா அம்மா சொன்னது போல பாஞ்சாலியை வச்சு சூதாடியது கூட தப்பு தான். ஆனா ராஜாவான திருதராஷ்ட்ரன் புத்தி மயக்கத்துலே அனுமதிச்சுட்டான். ராஜ குரு துரோணரும் பீமரும் விதுரரும் அவரவர் காரணங்களால் எதிர்த்து சொல்ல முடியவில்லை.

    பாஞ்சாலியே போராட வேண்டியிருந்தது.

    அன்னைக்கு லார்ட் கிருஷ்ணா.

    இந்த கதைலே யாரு ? லேட்டா வந்தாலும் பொய்யோ மெய்யோ நல்லது செஞ்சுட்டாரு.

    கடைசியா கதை அப்படின்னு சொன்னப்பறம் மீன மேஷம் பார்த்து அதுலே குத்தம் இதுலே குத்தம் அப்படின்னு சொல்லக் கூடாது.
    லாஜிக் எல்லாம் இந்தக் காலத்து சினிமா கதைகள் லே எதுலே இருக்கு?

    (விஸ்வரூபம் படத்திலே முதல் பாட்டிலே லாஜிக் இருக்கு, அதான் அந்த ........க்கு தான் ருசி தெரியும் நு சொல்றாரே அதுலே ) என்ற நக்கல் அடிக்கக் கூடாது. ஆமாம் சொல்லிட்டேன். என் ப்ராதா கொவிச்சுப்பன்.

    ஒரு வரி விடாம படிக்க வச்சுடுத்து இல்லையா ...அது தான் கதை.
    சூப்பர். இனிமே அடுத்த கதை எப்ப ??

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டப்படி சரி; நியாயப்படி சரி. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா கவுன்சிலர் அவர்களே?

      பாஞ்சாலி போராட வேண்டியிருந்தது.. now, we have a whole different meaning for justice here, don't we? இந்த (அ)நியாயத்தில் மட்டும் எத்தனை justifications பார்க்கிறோம் பேசுகிறோம் நம்புகிறோம்?

      சட்டம் என்பது காலத்துக்கேற்ப மாறியது தானே? ஐம்பது வருடங்களுக்கு முன் கறுப்பர்களைக் கொன்று சட்டப்படி வெளியெ வந்தார்கள் வெள்ளையர்கள். நூறு வருடங்களுக்கு முன் பெண்களுக்கு ஓட்டுரிமை சட்டப்படி கிடைக்கவில்லை. ஐநூறு வருடங்களுக்கு முன் கடவுள் இல்லை என்று சொன்னால் சட்டப்படி கழுத்தை விஷ்க்! ஆக, சட்டம் என்பது ஜவ்வும் வாழைப்பழமும் கலந்த எண்ணைப்பிசுக்கு.

      ஒப்பந்தத்துக்கும் பந்தயத்துக்கும் வேற்பாடு உண்டே? ஒப்பந்தம் இல்லா பந்தயம் சட்டப்படி செல்லும்; சட்டப்படி செல்லாது. ரெண்டுமே. ஒபாமா தோற்பார்னு பெட் கட்டி அனியாயத்துக்கு இழந்து கடைசியில் கோர்ட் ஆணைக்குப் பணிந்து தோற்ற பணத்தைக் கட்டியவர் கதையை இணையத்தில் படியுங்களேன்? (ஒபாமா ஜெயித்ததே பெரிய தண்டனைனு சொல்லாம கோர்ட் இவரைப் பணம் கட்டச் சொன்ன அனியாயத்தை எங்கே போய் ஒப்பாரி வைக்க?)

      இருந்தாலும் பிச்சிட்டீங்கனு தான் சொல்லணும். முழுக்கப் படிச்சதுக்கு நன்றி.

      தவறு இருந்தா என்ன மன்னா.. எத்தனை தவறோ.. அதுக்கேத்த மாதிரி....

      நீக்கு
  11. சூது மயக்கம் மது மயக்கத்தைவிட வலிமையானது. அவர்கள் இருவரும் மதுவருந்தாமல் பந்தயம் கட்டி இருந்திருந்தாலும் அநியாயம் நடப்பதற்கு சாத்தியம் அதிகம்,.,இல்லையா.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. In that event also the contracting parties can never make a human life as consideration. Being illegal the contact is void and illegal ab initio.
      Albeit illegal things are equally nice and pleasant .

      நீக்கு
    2. சூது மயக்கம் பல நேரம் அறிவோடு செயல்படுவதால் உண்டாவது. மதுமயக்கம் அறிவை இழந்து செயல்படுவது. சூதில் உணர்வு இல்லாமல் போவதற்கு அறிவு மழுங்காமல் இருப்பதும் ஒரு காரணம், strange paradox.

      மதுவும் சூதும் கலந்தால் பெரும்பாலும் சூதின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் - of course, பட்டை பட்டையாகப் போட்டுவிட்டு சூதாடவே கூடாது..

      நீக்கு
    3. குடித்து விட்டு கசினோவில் சீட்டாட்டத்தில் பணம் கட்டுவதும் ஒப்பந்தம் தான் - perfectly legal. பணம் கட்ட முடியாமல் தோற்றவர்கள் டாய்லெட் கழுவியிருக்கிறார்கள். ரெஸ்டாரெண்டில் சாப்பிட்டுப் பணம் கொடுக்க முடியாமல் பாத்திரம் கழுவுவதும் இந்த வகை தான். சாப்பிட உட்காரும் பொழுது பணம் கொடுப்பது ஒரு implied contract - ஒப்பந்தம் இருக்கிறதோ இல்லையோ. அது போல பணம் கொடுக்காதவர்களை பாத்திரம் கழுவ வைப்போம் என்று policy போடுவதும் human consideration பேரில் illegal. இங்கே சூது இல்லையே தவிர, எழுதாத ஒப்பந்தம் இருக்கிறது. சட்டப்படி செல்லுபடியாகிறது.

      நீக்கு
    4. Eating at a hotel implies that u accept to be governed by the price list of dishes.there is an implied contract though unwritten.u get inside an auto as the driver to get u to destination A .when u land at the place specified u r to pay what he demands. U had the liberty to negotiate when u started.u kept quiet. What u chose to forbear at the start u cant insist later. Here there is a contract which is implied and legal too. There is no illegality in any of the basics of a cotract here. But my point is consideration can never be the amoral pleasures of a human life.
      At the same time let me add that
      Had vini enjoyed her role even by an attitude of silence my legal acumen wd force me to take a different b
      View.
      Ok .oh
      Ok.
      Let all this go to dustbin.
      All laws lead us to end of blind lanes.
      Law is an
      Ass.

      Angarai
      Siva
      Sury

      நீக்கு
  12. Right as per law
    Right as per nyaaya ?
    Is there a difference?

    Yes.
    There is a difference.
    For example
    U lend me $ 5000 and i execute a promissory note. (U may not lend that is another matter)
    This pronote has a validity period of 3 years (in a few states it is 2 yrs and 3 months)
    Now if i do not pay u even the interest on the sum lent and also place an endorsement on the back of the pronote before expiry of the validity period here it is 3 yrs u cannot enforce this in a court of law. The instrument is legally lapsed.
    Your plaint will be dismissed.
    But what is nyaaya?
    I have received the money which iam duty bound to repay.
    Likewise a son is not legally bound to repay the debts of his fathet if he does not inherit anything moveable or immoveable.
    But several of us repay as a matter of gratitude.
    This is the difference.
    At the same time let me add
    Nyaaya is above law and
    Dharma is above nyaaya.
    And swadharma is above dharma
    And rajadharma is above everything else.

    I hope somwtime in future to any of your postings i shall explain

    But for the moment
    Pl let me know
    Wh there is left
    Anything in the bottle
    Michael and Jones
    Left.
    Subbuthatha

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //சட்டப்படி சரி; நியாயப்படி சரி. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டா கவுன்சிலர் அவர்களே?//
      நியாயம் என்று தியாலஜி லே எதை சொல்கிறோமோ அது
      சட்டத்தை விட பெரியது.
      சட்டம் நியாயத்துக்கு உட்பட்டது. ஆனால், நியாயம் மானுட பொது நீதிக்கு உட்பட்டது.
      சட்டம் பல வகைப்படும். அரசினால் இயற்றப்பட்டது மட்டுமன்றி, அவ்வப்போது நீதிமன்றங்களால் வரையறுக்கப்பட்டவை யும் சட்டமாம்.
      உங்களிடம் நான் 1000 டாலர் கடன் வாங்கி ஒரு ப்ரோநோட் எழுதிகொடுத்து இருக்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். ( ஒரு உதாரணத்துக்குத்தான். என்னை நம்பி நீங்கள் கொடுக்கமாட்டீர்கள் என எனக்கே தெரியும்)
      இந்த ப்ரோநோட் சட்டப்படி ஒரு கால வரையறைக்கு உட்பட்டது.
      3 வருஷங்களுக்குள் என்னிடம் குறைந்த பட்சம் அந்த கடனுக்கான் வட்டியை என்னிடம் வசூல் செய்து, அதையும் அந்த ப்ரோநோட்டில் என்றார்ஸ் செய்து இருக்கவேண்டும். இல்லையென்றால் அந்த ப்ரோநோட் காலாவதி ஆகிவிடும். அதற்குப்பிறகு இது கோர்ட்டில் செல்லுபடியாகாது.
      இது சட்டம்.
      அதே சமயம், கடன் கொடுத்தது நிஜம். வாங்கியது நிஜம். அதைத் திருப்பி தருவது தான் முறை. கால் கேடு முடிந்து விட்டது என்ற சாக்கில் வாங்கிய பணத்தை ஏப்பம் விடுவது பொது நீதிக்கு புறம்பானது. பார்க்கப்போனால், பல குடும்பங்களில், தகப்பன் ஏதும் சொத்துக்கள் விட்டு விட்டு போகாத காலத்திலும் கூட, அவரது சந்ததிகள் தந்தை பட்ட கடனை அடைக்கின்றனர். சட்டப்படி, ஏதும் பிதுர் ராஜ்யமாக ஏதும் பெறாவிடில் கடனுக்கும் அவர்கள் பாத்யப்பட்டவர்கள் இல்லை.
      பொது நீதி நியாயம். இது ஹைலி இண்டிவிஜுவலிச்டிக் . இதை நீ ஏன் செய்யவில்லை என்று கேள்வி கேட்க முடியாது.
      இந்த நியாயத்தை discretionary wisdom governed by common law எனவும் பொத்தாம் போக்காக சொல்லலாம்.
      என்ன சொன்னாலும், நியாயம் சட்டத்திற்கு மேற்பட்டது.
      நியாயத்திற்கும் மேற்பட்டது தர்மம். தர்மத்திற்கும் மேற்பட்டது ஸ்வதர்மம். ஸ்வதர்மத்திர்க்கும் மேற்பட்டது ராஜ தர்மம்.
      மகாபாரதக் கதைகளில் போர் நிகழும் பல இடங்களில் சட்டம் கடைப்பிடிக்கப்பட்டது. நியாயம் அல்ல.
      அதெல்லாம் இன்னொரு சமயம், அதற்கென்று ஒரு சமயம் வரும்போது சொல்கிறேன். ( அதுவும் நீங்கள் கேட்டால்)
      இப்போதைக்கு
      அந்த ஜோன்ஸ் வெளிலே பொயாச்சுல்லே..
      அந்த பாட்டில் என்னாச்சு ? புல்லா வே தீர்ந்து போச்சா ?
      இன்னம் கொஞ்சம் மிச்சம் இருக்கா ?

      சுப்பு தாத்தா.
      ( ஆங்கில பின்னூட்டத்திற்கு தமிழாக்கம்)

      நீக்கு
    2. மேஜர் சுந்தர்ராஜன் பாணியா?

      பொது நீதியாவது புடலங்காயாவது. புரோநோட்டு எழுதிக்கொடுத்தும் பணம் வாங்கி ஏப்பம் விடும் காலம் இதுவென்று அனுபவ பூர்வமாக உணர்கிறேன். எங்கே தவறு செய்கிறோம் என்பது புரியாமலே போவது விந்தை.

      நியாயம் கண்டிப்பாக சட்டத்துக்கு மேம்ப்பட்டது தான். தர்மத்துக்கும் மேம்பட்டது என்று நினைக்கிறேன். தர்மத்தைக் கடைபிடிப்பவர்கள் நியாயத்தை கொஞ்சம் லூசாகவே எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நம்ப வேண்டியதில்லை. உதாரணம்: கர்ணன், கிருஷ்ணன், ராமன், காந்தி,...

      பாட்டில் காலினு தோணுது. மிச்சமிருந்தா சென்னை வரப்ப யாருக்கும் தெரியாம ஷேர் பண்ணிக்கலாம்.

      :எங்கப்பா குடிச்சே சொத்தையெல்லாம் அழிச்சாருபா
      :உனக்கென்ன வச்சாரு
      :ஒரு சொட்டு கூட வைக்கலே
      (என் அப்பாவுக்கும் பொருந்தும் ஜோக்)

      நீக்கு
  13. அதர்ம வழுவாமையும் தர்மம் தானே?
    தர்மம் என்பது செயலொழுக்கம்.. right?
    துரியோதனன் யுதிஷ்ட்ரன் இரண்டு பேர்ல தர்மப் பாதையிலந்து விலகினது யுதிஷ்ட்ரன்னு படிச்சிருக்கேன். puzzling.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தர்மம் என்ற சொல் பல்வேறு துறைகளில் பல்வேறு விதமாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

      நூறு ஒரு ரூபாய் காசுகள் எடுத்துக்கொண்டு, பங்குனி உத்திரத்து அன்று, பழனியாண்டவன் கோவில் வாசலில் கையேந்தி நிற்கும்
      பிச்சைக்காரருக்கு ஆளுக்கு ஒரு காசு கொடுத்து விட்டு, மகா தர்மம் பண்ணி விட்டோம் என்பது ஒரு வகை.

      தோசை ரூபாய் 175, பூரி 90, வடை 50 சாப்பாடு 200 காபி 30 எனத் தாளித்து விட்டு, செலவு போக மிச்சம் வருகிற உபரித் தொகையை, கோவிலுக்கு மொசைக் கல் போட்டது தான் என போர்டு வைத்துக்கொள்வது அடுத்த ரகம்.

      இன்கம் டாக்ஸ் காரன் தொந்தரவு சகிக்காமல், 80 ஜி, கீழே, தொண்டு நிறுவனங்களுக்கு, பணம் தந்து அதில் ஐம்பதோ விழுக்க்காடோ அல்லது முழுசாவோ வருமான வரி விலக்கு பெற்று விட்டு,
      மனசு நிம்மதி பெறுவது அடுத்த க்ரூப்.

      தன்னால் தன சேமிப்பு லிருந்து முடியாது எனினும் தனது தொழிலின் செல்வாக்கு காரணமாக் தனது நண்பர்களிடம் கை காட்டி, தன்னால் தான் இத்தனை வசூல் முடிஞ்சது என்று சொல்வது அடுத்தது.

      இதெல்லாம் தர்மம் என்று அவரவர்கள் நினைத்துக்கொள்ளலாம்.
      தர்மம் என்றால் charity என்றும் அர்த்தம். ஈகை என இதை ஒரு குறுகிய கண் ஓட்டத்தில் நினைப்பவரும் உண்டு.
      "வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை.." என வள்ளுவனும் சொன்னாரே.!!
      ஆயினும், தர்மம் என்பது ஈகையை உள்ளட்டக்கியது. அதற்கும் மேற்பட்டது.
      //அதர்ம வழுவாமையும் தர்மம் தானே?
      தர்மம் என்பது செயலொழுக்கம்.. right?//

      தர்மம் என்பது தனக்கே தான் விதித்து இருக்கும் நெறி, கோட்பாடுகள், அதில் இருந்து வழுவாமை இவையும் அல்ல.
      To stray away from own"s own decided course of action is not also dharmam.



      தர்மம் என்பது யூனிவர்சல் ஜஸ்டிஸ்.

      தனக்கென வாழாதவர். தனக்கு ஒரு நியாயம். பிறருக்கு ஒரு நியாயம் என்று நினையாதவர்.

      யார் இருக்க முடியும் ? சரித்திரத்தில் சில பெயர்கள் உள . ஆனால் சப்ஜெக்ட் டு கான்றவர்சி.

      என் மனசுக்குப் பட்ட அளவில்,

      "வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளபிற உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும்" கருணை உள்ளம் கொண்ட வள்ளலார்
      எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
      தம்உயிர்போல் எண்ணி உள்ளே
      ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
      யாவர்அவர் உளந்தான் சுத்த
      சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
      இடம்எனநான் தெரிந்தேன் அந்த
      வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
      சிந்தைமிக விழைந்த தாலோ!ம் பதைத்தேன் நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன் ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”

      எனச் சொல்வதோடு நிற்காது

      வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
      மரபினில்யான்ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
      ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
      இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
      மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
      மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
      கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
      கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே!


      என இறைவனிடம் தனக்கு அருள் ஒளியை வேண்டி நின்று


      எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
      தம்உயிர்போல் எண்ணி உள்ளே
      ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
      யாவர்அவர் உளந்தான் சுத்த
      சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
      இடம்எனநான் தெரிந்தேன் அந்த
      வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
      சிந்தைமிக விழைந்த தாலோ!

      "பிற உயிர்களையும் தம் உயிர் போல் பாவிக்கும் கருணை உள்ளம் கொண்டவராக" வாழ்ந்த
      வள்ளலார் "தர்மம் " என்றால் என்ன என்பதற்கு ஒரு ரோல் மாடல்.

      தர்மம் என்ற சொல்லுக்கே ஒரு விளக்காக விளங்கியவர் வள்ளலார்.




      பாரி, கிஷ்டன், கர்ணன் இவர்கள் கொடையாளிகள் தான் . மறுப்பதற்கில்லை.
      சென்னைக்கு வரும்போது இந்த ஏழைக் கிசவனுக்கு நீங்கள் ஒரு லட்டு பாக்கெட் வாங்கி வந்தால்,
      ஆஹா, நீங்களும் தர்ம சிந்தனை உள்ளவர்தான்.

      ஆனால்,
      வள்ளலார் தர்மம் தனித்து நிற்கிறது.
      எங்கோ உச்சியில் நிற்கிறது.


      இந்த தர்மத்துக்கும் மேற்பட்டது ஸ்வதர்மம்.

      ஸ்வதர்மத்துக்கும் மேற்பட்டது ராஜ தர்மம்.

      இதெல்லாம் சொல்லி எல்லாரையும்
      ஸ்ரமப்படுத்த வேண்டாம்.

      ததாஸ்து.

      இலையைப் போடுங்கோ.

      பசி உயிர் போறது.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
  14. In the abpve comments the sentence commencing ".........to stray away...." Should actually start with
    Not to stray away.........

    Subbu thatha



    பதிலளிநீக்கு
  15. “அவன் அவனாய் பார்த்து திருந்தா விட்டால்” என்பது திருடனுக்கு மட்டுமல்ல குற்றம் புரியும் அனைவருக்கும் பொருந்தும். சட்டம், நியாயம், தருமம், ஸ்வதர்மம், ராஜதர்மம் எவை எதுவும் மனிதனின் குணத்தை / மனதை மாற்றவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது. அந்த விஷயத்தில் ஒருவன் தான் செய்த தவறுக்கு வருந்துபவன். மற்றவன் அதற்காகக் கூட வருந்தாதவன். அவ்வளவுதான். சரியான வாய்ப்பும் தப்பிப்பதர்கான வசதியும் இருந்துவிட்டால் / இருப்பதாக ஒருவன் கருதிவிட்டால் சில சமயம் குற்றம் நடந்துவிடுகின்றது. தலைவெட்டும் தண்டனைகள் வழங்கும் நாட்டில் கூட குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதும் தலைகள் வெட்டப்படுவதும் நடந்து கொண்டே தானே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏற்புடைய கணிப்பு. தர்மம் நியாயம் எல்லாம் கவைக்குதவாதவை, unfortunately. கொன்றால் பாவம் தின்றால் போச்சு.

      நீக்கு
  16. அதெல்லாம் கிடக்கட்டும்... அடுத்த கதை எப்போ மொதலாளி??

    பதிலளிநீக்கு
  17. பதில்கள்
    1. இது இரண்டு மதிப்பெண் கேள்வியா? பத்து மதிப்பெண் கேள்வியா?

      இன்னொரு கேள்வி.
      ராஜ நிலையில் ராஜ தர்மம் பெரிதா? சுய தர்மமா?

      (எனக்கும் கேட்கத்தான் தெரியும் - ஹிஹி.. வாங்க சாந்தினி,. லாங் டைம் நோ பின்னூட்டைம்)

      நீக்கு
  18. இந்த முதற் கேள்விக்கு பதில் அளிக்குமுன்,
    இரண்டாம் கேள்வியை படித்த உடன், ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

    not fully fiction though.

    ஒரு பள்ளியில் பரீட்சை நேரம் வந்துவிட்டது. வினாத்தாள் தயாரிக்கப்பட்டு, அச்சிட வேண்டும்.அந்த நேரம் என்று பார்த்து,
    சரித்திர ஆசிரியர் ஸிக் லீவ் போட்டு விட்டார்.

    அந்த சரித்திர பாடங்களில் வினாத்தாளை யாரை கொண்டு தயாரிப்பது
    என ஹெட் மாஸ்டர் முடிவு செய்து, பள்ளியிலே சீனியர் ஆன சயின்ஸ் ஆசிரியரைக் கூப்பிட்டு, நீங்கள் வினாத்தாள் தயார் செய்யுங்கள். என்னிடம் காண்பிக்க வேண்டிய அவசியம் கிடையாது.
    நேரடியாக ப்ரிண்டிற்கு அனுப்பி விடுங்கள் என்று சொல்லிவிட்டார்.

    சயின்ஸ் வாத்தியாருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தனக்கும் சரித்திரத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லவும் அவரது கௌரவம் (note the word Garvam here) இடம் கொடுக்கவில்லை.
    ஒரு வழியாக தயார் செய்து அனுப்பி விட்டார்.

    பரீட்சை துவங்கி விட்டது.வினாத்தாள் பெட்டியைத் திறந்து வினாத்தாள் களையும் எல்லா மாணவரிடமும் விநியோகம் செய்து விட்டார்கள்.

    முதல் ஐந்து நிமிடங்களுக்கு உள்ளேயே பரீட்சை ஹாலில் பரபரப்பு.

    சார் !!! அவுட் ஆப் சிலபஸ் என்று மாணவர்கள் கத்தத் துவங்கினர்.
    ஹெட் மாஸ்டர் வந்தார்.
    அமைதி அமைதி என்று சொல்லிவிட்டு,

    என்ன என்று பார்த்தார்.

    வினாத்தாளில் முதல் வினா :

    எலிசபெத் ராணியின் படத்தை வரைந்து பாகங்களைக் குறி.

    மார்க்: 10.

    சுப்பு தாத்தா.

    என்ன முதற் கேள்வி க்கு பதிலா ?

    ராஜ தர்மம் என்றால் என்ன என்று சொல்வதற்கு தகுந்தாற்போல் ஒரு கதை எழுதுங்களேன். நீங்கள் எழுதுவீர்கள். உங்களால் முடியும்.

    இப்படிக்கு
    சுதா. (சுப்பு தாத்தா வின் சுருக்கம். மோகன்ஜி இட்ட நாமகரணம் )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா!

      ராஜ தர்மம் என்பது முக்ய மந்திரிகளின் job securityக்காக உருவாக்கப்பட்டது என்பது என் கருத்து. ராஜாவுக்கும் - மானுடன் என்ற பார்வையில் - மானுட தர்மம், ஸ்வதர்மம், இவை தான் வழிகாட்டிகளாக வேண்டும். ராஜ தர்மம ஸ்வ்தர்மம் இரண்டுக்குமான conflictகள் வரும் பொழுது சில ராஜாக்களே ஸ்வதர்மத்தோடு நடந்து கொண்டிருக்கிறார்கள். ராஜதர்மம் என்றப் பொதுப்பார்வை, பல நேரம் ராஜா என்கிற தனி மானுடனின் தர்ம நியமங்கள் நெறிகளை சற்று அசைத்தே இருக்கின்றன. ஸ்வதர்மம் வால் சுருட்டிக் கொண்டு ஓடியிருக்கிறது என்பதற்கு கடவுள்களிலிருந்து ராமாயணம், மகாபாரதம், மனு, பாரி, அரிச்சந்திரன், என்று தொடர்ந்து சமீப மகாத்மா காந்தி வரை உதாரணங்களைச் சொல்லலாம்.. of course, இப்போது அரச நீதியும் ஆண்டி நீதியும் ஒன்று தான் என்ற நிலையில் இருக்கிறோம் - அதாவது தர்மம் gets redefined every moment.

      நீக்கு
  19. தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ. என்பது வாக்கியம்.

    தர்மம் காப்பாற்றுகிறது. காப்பாற்றுபவர்களை என்று பொருள் சொல்கிறார்கள்.

    தர்மத்தைக் காப்பாற்ற எவர் கடமைப் பட்டு இருக்கிறார்களோ அவர்கள் தர்மத்தை காப்பாற்ற வேண்டும். அப்படிக் காப்பாற்றினால், தர்மம் அவர்களைக் காப்பாற்றும்.

    தலையில் இருந்து இருந்து ஆரம்பித்தால், முதற்கண் அரசன் தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி என்பர்.

    ஒரு நாட்டிற்கு அரசன் தர்மத்தின் காவலனாக உள்ளான். பார்க்கப்போனால், தர்மம் என்னும் கோட்டைக்கு காவற்காப்போன் அரசன் தான்.

    ஒரு நாட்டில் தர்மம் கடைப்பிடிக்கப்படுகிறதா இல்லையா என்பது அந்த நாட்டு அரசன் எந்த அளவுக்கு சொந்த விருப்பு, வெறுப்பு, களைக் கடந்து, சட்டம், நியாயம், தர்மம், ஸ்வதர்மம் இவற்றையும் கடந்து ராஜ தர்மத்தை பின் பற்றுகிறானோ அதை ஒட்டியே இருக்கும்.

    இது தவிர, ஒரு தனி மனிதனுக்கு கடமைகள் இருக்கின்றன. மனைவி, மக்கள், தனது சுற்றம், உற்றம், இவர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகள். இந்தக் கடமைகள் பல சட்ட அடிப்படையிலும், பல நியாயப்படியும், இன்னும் சில தர்மப்படியும் உள்ளன. இவற்றிர்குள்ளும், ஒன்றோடு ஒன்று முரண்படும்போது, எந்தக் கடமை முன் நிற்கும் ? இது அவனவன் கருத்து சார்ந்தது.

    அம்மா அப்பாவைக் காப்பாற்ற வேண்டும். ஆனால், மனைவி, குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும். இதில் எது முதலானது?

    கான்ப்ளிக்ட் ஆப் இண்டரெஸ்ட். வரும்போது மனிதன், சாதாரணமாக,

    நியாயத்தையும் தர்மத்தையும் விட, ஒரு சச்சரவுக்குள் புக வேண்டாம் என்று நினைக்கிறான். பழி பாவம் இதற்கெல்லாம் அஞ்சுவதை விட, மன அமைதி முக்கியம். தவறு என்று சொல்லமுடியாது.

    தனி மனிதனுக்கே இது போன்ற கான்ப்ளிக்ட் ஆப் இண்டரெஸ்ட் வரும்போது, அரசனுக்கு வருவதில் ஆச்சரியம் இல்லை.

    நீதிக்கு முன் எல்லோரும் சமம் என்று இருக்கும்போது, தன் மகனே குற்றவாளி எனக்கருதிய அரசன் செய்த நீதி நமக்கு தெரிகிறது.

    வழக்கென்று நீர் மொழிந்தால் மற்றதெல்லாம் வலிப்பட்டு
    குழக்கன்றை ஈன்றலரும் கோவுறு நோய் மருந்தாமோ
    ....பெரிய புராணம் கதை நினைவுக்கு வருகிறது.

    பசு மாட்டுக்கு நீதி வழங்கிய அரசன் செய்தது ராஜ தர்மம் .

    கோவலனுக்கு மரண தண்டனை கொடுத்தது தவறு எனத் தெரிந்ததும், அதற்கு பரிகாரமாக தன் உயிரையே தந்த அரசன் செய்ததும் ஒரு வகை ராஜ தர்மம் தான்.

    அரியலூரில் 1960 ல் நடந்த ரயில் விபத்து ஒரு காங் மேன் செய்த தவறு என்று சொல்லாது,தன பதவியை துறந்த லால் பகதூர் சாஸ்திரி செய்தது ராஜ தர்மம் எனச் சொல்லலாம்.

    இருப்பினும், ராஜ தர்மம் என்பது இப்போது rarity .

    இன்னும் பேசலாம்.

    அதெல்லாம் இருக்கட்டும்.
    உங்களுடைய கடைசி வாக்கியம் சத்யம் அப்பாதுரை அவர்களே .

    இப்படி எல்லாம் அடிக்கடி நீங்கள் பேச ஆரம்பித்தால், எனக்கு உத்தியோகம் போய்விடும்.



    சு. தா.






    பதிலளிநீக்கு