2014/10/18

அப்பாதுரைக்கு வந்த நகசுத்தி


    நான் என் பாட்டுக்கு இமெயில் பாத்துட்டிருக்கேன். திடீர்னு 'நலந்தானா?'னு தில்லானா மோகனாங்கி ஸ்டைல்ல ஒரு இமெயில். யார் அனுப்பினாங்கனு பார்த்தா மோகன்ஜினு இருக்குது!

மோகன்ஜியை தெரியாதவங்க இருந்தா ஒரு இன்ட்ரோ. மோகன்ஜி இருக்காரே மோகன்ஜி... அதான் இருக்காருனு தெரிஞ்சு போயிடுச்சே பிறகென்ன இழுப்பு... இவரு வருஷத்துக்கு ஒரு பதிவு எழுதுவாரு. அதுக்கே அவருடைய ரசிகக் கூட்டம், 'தலைவர் ஒரு பதிவு எழுதுனா ஆயிரம் பதிவு எழுதின மாதிரி'னு பிகிலடிப்பாங்க. (என்னை மாதிரி ஆளுங்க மாஞ்சு மாஞ்சு எழுதினா இபிகோனு மிரட்டுறாங்க. தலைவிதி பாருங்க).

எனக்கு அனுப்பின இமெயில் மோகன்ஜி எழுதினதுதான்னு எப்படி கண்டுபிடிக்கிறது? சமீபத்தில் வவ்வால் அவர்கள் இன்னொருத்தர் பெயரில் பின்னூட்டமிட முடியும்னு நிரூபிச்சுக் காட்டினாரு. (என் பெயரில் பின்னூட்டம் போட்டு அசத்திட்டாரு). அந்த அனுபவத்துக்குப் பிறகு எல்லாத்தையுமே சந்தேக மூக்குடன் மோப்பம் பிடிக்கிறேன். என் பின்னூட்டமே நான் எழுதியது தானானு சந்தேகம் வருது. அந்த நடுக்கத்துல இவர் மோகன்ஜி தானா இல்லே வேறு யாராவது இவர் பெயரில் இமெயில் அனுப்புறாங்களானு சந்தேகம் வந்திடுச்சு. கொஞ்சம் விட்டு, கூடவே ஒரு கவிதை அனுப்புனாரு (கவிதைனு அவர் சொல்றாருங்க).

கவிதையை படிச்சதும் கொஞ்சம் தெஹிரியம். நிச்சயம் மோகன்ஜியாகத்தான் இருக்கணும்னு தோணிச்சு. பின்னே இப்படியெல்லாம் சிவகுமாரனா எழுதப் போறாரு?

'அண்ணாத்தே? என்ன ஆளையே காணோம்? ஒரு இமெயில் அனுப்பிட்டு வழக்கப்படி காணாமப் போய்டுவீங்களா? உங்களைக் காணாமப் பசலைப் பட்டது போதாதா? ஏன் திரும்பி வந்தீங்க?'னு சங்கமங்கை போல பதில் இமெயில் அனுப்பினேன். 'இல்லை இல்லை.. இனிமே காணாமப் போகமாட்டேன்'னு கீபோர்ட் அடிச்சு சத்தியம் செய்யாத குறையாச் சொன்னாரு.

எதுக்குச் சொல்றேன்னா... நல்லா எழுதுறவங்க, எழுதுறதை நிறுத்திக்கிட்டாங்கனா அது எழுத்துக்கு நஷ்டம்னு நான் நினைக்கறதுண்டு. மோகன்ஜி நல்லா எழுதுறவரு. அவரு திரும்ப எழுத வந்தா அதுவே தீபாவளி தான். வாங்க வாங்கனு சொல்லிக் கம்பளம் விரிப்போம், என்ன சொல்றீங்க? இதுக்கு பேரு மோஸ்தர் கவிதையாம். ஜோரா கை தட்டுவோம், என்ன சொல்றீங்க? மறுபடி இந்த மாதிரி கவிதை எழுதுனாருனா இலக்கிய போலீசு பாத்துக்கட்டும், நாம பத்தடி தள்ளீயே நின்னுக்குவோம், என்ன சொல்றீங்க?

இதோ, மோகன்ஜி எழுதியனுப்பின மோஸ்தர் கவிதை:

அப்பாதுரைக்கு வந்த நகசுத்தி




மோடி அமெரிக்கா வந்த நாளன்றே
அப்பாதுரைக்கு நகசுத்தி வந்திருந்தது.

வலது கை மோதிரவிரலில் அது குத்தலோடு குந்தியிருந்தது
அது வரும்வரை தனக்கு மோதிரவிரல்
ஒன்றிருப்பதே அவருக்கு தெரியாது.

அவரின் வலைப்பூவில் திங்களன்று
'கொக்கோக குமுறல்கள்' தொடங்க இயலாதது குறித்து
அவரிட்ட சிறுபதிவினாலேயே தான்
அனைவருக்கும் அது தெரிய வந்தது.

முதல்கருத்தாய் திண்டுக்கல் தனபாலனின்
'வாழ்த்துக்கள்' வந்தது

'நகசுத்தியும் நாகசக்தியும்' என்ற
ஆர்.வி.எஸ்ஸின் பேஸ்புக் பதிவுக்கு
ஆறாவது நிமிடமே 286 லைக்கும் 7 கமெண்டும் வந்தன.
அதற்கு பத்மநாபன் லைக் போட முனைந்த போது
ஐபாட் ஷட்டவுன் ஆகி முடியாமல் போனது.

நகசுத்தி குறித்து பதிவுபோட ஆதிரா உறுதிபூண்டார்

எலுமிச்சம்பழம் விரலில் சொருக
கீதாசந்தானம்,கோமதி அரசு மற்றும் ஶ்ரீராம்
யோசனை சொன்னார்கள்

கூரியரில் நிலாமகள் அனுப்பி வைத்த எலுமிச்சம்பழம்,
முப்பாத்தம்மன் கோவில் பிரஸாதம் எனத் தெரியாமல்
அதை அப்பாதுரை சொருகிக்கொண்டார்.

அகத்திக்கீரை சூப் ஆறுநாள் சாப்பிடச்சொன்ன சுந்தர்ஜி,
'நகஸ்ய கருணா நாஸ்தி நாகஸ்ய பயானகம் ' என்று
ஏதோ சொன்னது சற்று கலவரமாய் இருந்தது.

நகசுத்தியை 'படுவம்' என்பார்களென்றும்
தாங்கமுடியாத்து தான் 'படுவ வலி' என்றும்
அறிவன் பகிர்ந்தார்.
அதை 'பருவ வலி' என்று படித்துக்கொண்டபோது
அப்பாதுரைக்கு வலியே தெரியவில்லை.

மர்லின்மன்றோவுக்கும் நகசுத்தி வந்த கதையை
மோகன்ஜி சொன்னதன் கவர்ச்சி,
அப்பாதுரையின் அயர்ச்சிக்கு ஆறுதலானது

'கொக்கோக குமுறல்கள்' ஏதேனும்
தெய்வக்குத்தமாக இருக்குமோ என்ற
சுப்புத்தாத்தாவின் பின்னூட்டத்தை
பத்து பதிவர்கள் ஆமோதித்தார்கள்

'விரலுக்கு அதிகவேலை கொடுக்காதீர்கள்' என்ற
அனானியின் கரிசனத்தில்
டபுள்மீனிங் சாத்தியக்கூறுகள் இருப்பதாய்
அப்பாதுரைக்கு பட்டது

நகசுத்திக்கு 'நாக காந்தாரி'அல்லது 'காமவர்தினி' ராக
கீர்த்தனங்கள் சுகம் தருமே என்றார் மூவார்முத்து.
அதற்கு
'உண்மை' 'இருக்கலாம்' 'எதற்கும் கேட்டுப்பார்த்து விடுங்களேன்'
என்று முறையே
ரிஷபன்,வை.கோ,வெங்கட்நாகராஜ் தெரிவித்தார்கள்.

'நகசுத்திக்கு இலக்கியத்தில் சான்று உண்டா அண்ணா?' என்ற
சிவகுமாரன் கேள்விக்கும்,
'ஏன் அண்ணா நகசுத்தி நகத்திலேயே வருது?' என்ற
ஹேமாவின் கேள்விக்கும் பதிலை,
தனிஅஞ்சலில் அனுப்புவதாய் மோகன்ஜி சொன்னார்.

மருந்து போட்டாலும் மாங்காய் சொருகினாலும்
ஆறுநாள் இருந்துவிட்டு தன்னால் போகும் என்று
காஸ்யபன்சார் பின்னூட்டம் வந்தநாளில் வலிகுறைந்து
எலுமிச்சம்பழத்தை எடுத்து விட்டார் அப்பாதுரை.

வெட்கி சிவந்து குன்றியிருந்த விரலைப்பார்த்து
'ரிலாக்ஸ் மேன்' என்றார் வாஞ்சையோடு.
கையோடு அந்த விரலுக்கு
'அமெதிஸ்ட் சுகந்தி' கல் பதித்த
மோதிரம் போடுவதாய்
அதிவீர ராம பாண்டியருக்கு**
வேண்டிக்கொண்டார்

(**ஆண்ட்ரூ கார்னகி என்றும் பாடம்)

36 கருத்துகள்:

  1. ஆஹா தனி மெயிலில் இத்தனை சந்தேகமா அண்ணாச்சி.

    பதிலளிநீக்கு
  2. நகச்சுத்திக்கு எத்தனை உறவுகள் ஆலோசனையும் ஆதங்கமும் மீண்டூம் வாங்க ஐயா உங்க எழுத்தினை காணும் ஆவலுடன்!

    பதிலளிநீக்கு
  3. 'வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்' என்ற ஒரு வரிதான் இல்லை. அழகா ஒரு பேனர் தான் போட்டிருக்கீங்க அப்பாதுரை. அன்புக்கு நன்றி.

    ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது பதிவுகளை வலையேற்றி... பணியின் சுமை. எழுதத்தொடங்கி , நேரமின்மையால் நொண்டிக் கொண்டிருக்கிற மூன்று நான்கு நூல்களின் பொருட்டும், பிடித்ததை செய்வோம் என்ற உந்துதலாலும் பணியிலிருந்து விருப்ப ஓய்வை ஏற்றிருக்கிறேன். நிறைய பதிவுகள் இனி எனது வானவில் மனிதன் (http://vanavilmanithan.blogspot.in) வலைப்பூவில் வரும்.

    இந்த மாதிரிகவிதைகள் படிப்பவரை அதிகம் யோசிக்க வைப்பதில்லை. வார்த்தை விளையாட்டு, எதுகைமோனை சிக்கல்கள் இருப்பதில்லை. நேர்பட சொல்லல் ,கொஞ்சம் பகடி,கிண்டலும்,உறுத்தாத கேலியும் இந்தக்கவிதைகைளை சுவாரஸ்யப்படுத்துகின்றன.
    போகிற போக்கில் படிக்கவிட்டு , ஒரு புன்னகைக்கீற்றை உதட்டில் தவழவிடும் உபத்திரமில்லாத முயற்சி. நண்பர்கள் முயற்சிக்கலாமே?

    இந்தக்கவிதையில் நான் குறிப்பிட்டிருக்கும் அத்தனை பதிவர்களும் என் இதயத்திற்கு வெகு அருகில் இருப்பவர்கள். வலையுலகில் பதிவுகளாலும் கருத்துக்களாலும் நல்ல பங்களித்தவர்கள். அவர்களை வம்புக்கிழுக்க எனக்கில்லாத உரிமையா!

    அன்புடன்

    மோகன்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் குறிப்பிட்டிருக்கும் அத்தனை பதிவர்களும் என் இதயத்திற்கு வெகு அருகில் இருப்பவர்கள். வலையுலகில் பதிவுகளாலும் கருத்துக்களாலும் நல்ல பங்களித்தவர்கள். அவர்களை வம்புக்கிழுக்க எனக்கில்லாத உரிமையா! //

      //இதயத்துக்கு வெகு அருகிலா ?? !!
      வலி எதாச்சும் அப்பப்ப வருதா ?

      அவுக எங்க இருக்காக ?
      இன்டர்னலா அல்லது அவுட் சைடா ?

      எதற்கும் ஒரு டாப்ளர் ஸ்கான் எடுத்து பாருங்கள்.

      சிலது, இன்னொசென்ட்.
      சிலது மலிக்னண்ட் .

      சுப்பு தாத்தா.

      நீக்கு
  4. சூரி சிவா சார் ! ஹா... ஹா..... ஸ்கேனில் காணக் கிடைக்குமோ ஸ்னேகம் ??

    பதிலளிநீக்கு
  5. :)))

    “ஸ்கேனில் காணக் கிடைக்குமோ ஸ்னேகம்?” அதானே.....

    பதிலளிநீக்கு
  6. கவிதையில் காணகிடைத்த
    ஸ்நேகம் மனதை நிறைத்தது

    பதிலளிநீக்கு
  7. ஸ்னேக கவிதையில் என் பெயரும் இடம் பெற்றதில் இதயபூர்வமான மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  8. வயிறு வலிக்க சிரித்தேன். ஒரு கணம் , அந்த நகச் சுத்தி எனக்கு வந்திருக்கக் கூடாதா என்று கூட நினைத்தேன். பின்னே ..... எத்தனை பேருடைய கரிசனம்.?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நகச் சுத்தி எனக்கு வந்திருக்கக் கூடாதா ?//

      உங்களிடம் இருப்பது நக சுத்தி அல்ல.

      நாக சக்தி.

      அதுவும் அந்த சக்தி யாரென்று நினைத்தீர்கள்?
      பராசக்தி நாவிலே
      நும் நாவிலே குடி கொண்டு இருக்கையில்
      எதுவுமே உம்மை சுத்தி த்தான் வரும்.

      சுப்பு தாத்தா.

      நீக்கு
    2. நன்றி சுப்புத் தாத்தா

      நீக்கு
  9. "மோஸ்தர்"னா என்ன அப்பாஜி ?

    பதிலளிநீக்கு
  10. திரு. மோஹன் ஜி அவர்கள் பற்றி திரு. அப்பாதுரை அவர்கள் எழுதியுள்ளது மிக அருமை.

    //என் பின்னூட்டமே நான் எழுதியது தானானு சந்தேகம் வருது.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! :)))))

    திரு, மோஹன் ஜி அவர்கள் திரு. அப்பாதுரையைப்பற்றி எழுதிய கவிதையும் சூப்பரோ சூப்பர் நகைச்சுவையாக உள்ளது.

    இப்போ எது யார் எழுதியிருந்தாலும், சம்பந்தப்பட்ட அனைவரின் கற்பனைக்கும், நகைச்சுவைக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள். - கோபு [VGK ]

    திரு. அப்பாதுரை அவர்களின் நகச்சுத்தி [ஒருவேளை நிஜமாக இருப்பின்] விரைவில் சரியாகி, VGK-40 சிறுகதை விமர்சனப்போட்டிக்கு அவரின் விமர்சனமும் எனக்கு வரும் சனி / ஞாயிறுக்குள் வந்து சேர வேண்டுமே என்பது மட்டுமே என் கவலை. அவாஅவா கவலை அவாஅவாளுக்கு :)))))

    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-1-of-4.html
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-2-of-4.html
    http://gopu1949.blogspot.in/2014/10/vgk-40-3-of-4.html

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  11. ஆஹாஹா... அற்புதம்!

    ( இந்தப் பின்னூட்டம் நான்தான் அளித்தேன் என்று உறுதியளிக்கிறேன். சான்றளிக்கிறேன்)

    மோகன்ஜியின் சிநே'கம்' கவிதையில் என்னையும் ஒட்ட வைத்திருப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  12. அடடா சூப்பர் கவிதை; சூப்பர் பதிவு!

    பதிலளிநீக்கு
  13. நகசுத்தியால் அவதிப்படும் அன்பருக்கு அகசுத்தியோடு நண்பர் எழுதிய கவிதை அசத்தல்

    பதிலளிநீக்கு
  14. இதுவரை ரசித்து கருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

    பதிவில் 'நக சுத்தி'யை, 'நகச்சுத்தி' எனப்படிக்கவும். இ'ச்' விட்டு போயிற்று. பதிவில்கூட 'இச்' வந்து விடாதபடி சுத்தபத்தமாக எழுதும் ஒழுக்கம் நிறைந்த பதிவன் நானாக்கும்.... அப்பாதுரையாரும் என்னைவிட சுத்தம்... சுத்தத்துலயும் சுத்தம் படுசுத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லிங்க.. நான் இச்சு சேர்க்கலாம்னு நினைச்சேன்.. அப்புறம் அதுக்கு ஒரு மோஸ்தர் வந்துருமோனு..

      நீக்கு
  15. அடுத்தவங்களை வார்றாங்கண்ணா ஆகா ஓகோன்றாங்கப்பா.

    பதிலளிநீக்கு
  16. //அடுத்தவங்களை வார்றாங்கண்ணா ஆகா ஓகோன்றாங்கப்பா.//

    ஏன்னு புரிஞ்சா சரி.

    அது இருக்கட்டும்.
    நரகாசுரன் கிட்டேந்து செல் வந்தது.
    என்னன்னு கேட்டேன்.
    என் சார்பிலே
    அப்பாஜிக்கு
    தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    சொல்லுங்க அப்படின்னார்.

    அதான். சொல்லிட்டேன்.

    மத்த எல்லா மோகன் ஜி ரசிகர்களுக்கும்
    லக்ஷ்மி குபேர சம்பத்துக்கள் பெருக வேண்டும்.
    என்று
    சுப்பு தாத்தா வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் கூட ஸ்கூல்ல லட்சுமி சம்பத்துனு ஒருத்தி படிச்சா.. காலேஜ் படிக்கிறப்பவே பெருகிட்டா.. இது யாரு லட்சுமி குபேர சம்பத்து?

      நீக்கு
  17. மர்லின் மன்றோக்கு நகசுத்தியா...
    அச்சச்சோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லையா பின்னே? நானும் அச்சச்சோ போட்டுக்கறேன்

      நீக்கு
  18. மூவார் ! 'சேலைச்சுத்தி' பார்க்கவியலா பேரெழிலுக்கு 'நகச்சுத்தி' வைத்து பார்க்கக்கூடாதா?!

    பதிலளிநீக்கு
  19. நல்லா இருக்கு நகச்சுத்தி. நிஜம்மாவே வந்தா என்ன செய்வீங்களோ தெரியலை! :)))) இந்தப் பின்னூட்டம் அளித்தது நான் தான் என்பதை உறுதி செய்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  20. நகச் சுத்திய பத்தி எழுதிய
    மோகன்ஜி
    நீங்கள்
    அஹ சுத்தியைப் பற்றி
    எழுதும் நாள்
    என்று வரும் ?

    அஹம் சுத்தும் பொருள்கள் எல்லாம்
    அழுக்கென இருக்கையிலே
    நகத்தைச் சுத்தி வருவது
    நாகமானாலும் என்ன ?

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நியாயமான கேள்வி.

      அகம் சுத்தமெனில் நகச்சுத்தி வராதோ?

      நீக்கு
    2. சரியான கேள்வி தான். ஆனா பதில் சொல்வதற்கு முன்னே,
      அகம், நகம் இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை , வேற்றுமை பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கணும்.

      நகம் என்பது நைல் . வளர்ந்துகினே போவுது. அத ஒரு லெவெலுக்கு மேலே வெட்டி விடுவாங்க விடுவாங்க . இல்லாட்டி,நம்மையும் பிராண்டும், பக்கத்தில் இருப்பவரையும் பிராண்டும். அழுக்கு சேரும்.

      அகம் என்பது இந்த உடம்பா, புத்தியா, மனசா ,சரி, எதோ ஒன்னு.

      அகம் என்று நான்/ நாம் எத நினைக்கிறேனோ, அல்லது நினைக்கிறோமோ ,, அது இரண்டு அன் சீனுக்கு நடுவிலே , அதாவது, நம்ம புறப்பதற்கு முன்னாடி, இறந்தப்பரம் இந்த இரண்டுக்கும் நடுவிலே ,
      உள்ளது. பிரசன்ட் டென்ஸ் . உடம்பும் சரி, புத்தியும் சரி,மனசும் சரி, எல்லாமே ஒரு வித வளர்ச்சிய அடஞ்சிகிட்டே போவுது.

      ஒரு ஸ்டேஜிலே
      நம்மை விடாது. நம்மை அது இது அப்படின்னு நினைக்க வச்சு, கோபுரத்து உச்சிக்கு போயி, கொண்டு போய் வைக்கும் அளவுக்கு,
      அதீத ஆசையும் அதீத ஆணவத்தையும் வளர்த்திக்கொண்டே போவது.

      இதுவும் ஜாஸ்தியா போகும்போது,நம்மையும் அறியாம,மற்றவர்களை பிராண்டும்.

      அதான் காமோ காரசீத். மன்யுற கராசீத் என்று அட் லீஸ்ட் வருசத்துக்கு ஒருவதரம் சொல்லி, இந்த அகத்தை சுத்தி பண்ண நினைக்கிறோம்.

      ஆக,அகம், நகம் இரண்டையுமே அந்த அந்த இடத்திலே பக்குவத்திலே வைக்கணும்.

      மேலே டீடைலா மோகன்ஜி எப்படி எந்த அகச்சுத்தி பண்றதுக்கு, குருவருள் முக்கியம் அப்படின்னு எழுதுவார்.

      ததாஸ்து.

      சுப்பு தாத்தா.

      அது கிடக்கட்டும்.அஸ்வத்தாமன் மேற்கொண்டு என்ன சொன்னார் ?
      IS HE STILL THERE OR
      ஹதஹ குஞ்சறஹா வா ?,

      நீக்கு
    3. சூப்பரோ சூப்பர் சூரி சார், அகத்தையும் நகத்தையும் இப்படி compare/contrast பண்ணியது படிக்கப் படிக்க சுகம்.

      அசுவத்தாமன் வந்து.. அந்த அடைமொழிக்கென்ன சொல்றது.. ஹுரஸ்சித்?

      நீக்கு
  21. அஹ சுத்திக்கு ஆயிரமாய் வழியுண்டே !
    குஹ சரணம்சற் குருவே சரணமென்றே
    இக பரசுகம் காணும் வித்தைகளும்
    செக மெங்கும் மிகவும் உண்டே!

    வானவில்லுக்கு வருவீராகில்,
    காலப்போக்கில் சொல்வேன் பாரும்.
    மோனவுலகுக்கு செல்லும்வழி
    இங்குரைத்தால் ஏசுவாரே




    பதிலளிநீக்கு
  22. இந்தக்கவிதையில் நான் குறிப்பிட்டிருக்கும் அத்தனை பதிவர்களும் என் இதயத்திற்கு வெகு அருகில் இருப்பவர்கள். வலையுலகில் பதிவுகளாலும் கருத்துக்களாலும் நல்ல பங்களித்தவர்கள். அவர்களை வம்புக்கிழுக்க எனக்கில்லாத உரிமையா! //

    :))

    வை.கோ. சார் போலவே பின்னூட்டம் போட்டது யாருப்பா?

    நகசுத்தி - அகசுத்தி அலசல் நல்ல தூண்டல்.

    மோஸ்தர்- எது மாதிரியும் இல்லாத புது மாதிரின்னு சொல்லலாமா...

    பதிலளிநீக்கு