2014/01/08

மீண்டும்
சந்திரிகையின் கதை


    தொலைந்து போன பதிவுகளை முடிந்தவரை மீட்டுச் சேர்க்கும் பணியில் மும்முரமாக இருந்த போது, எதிர்பாராமல் கிடைத்த போனஸ் பூத்தூரிகை காலப் பதிவுகள். சேமித்து வைத்ததே தெரியாது. அரசன், நான், சாவித்திரி, சாய்ராம், ஹேமா துவாரக்நாத், வளர்மதி, பேட்டை சசி... பூத்தூரிகையில் நிறைய பேர் எழுதினோம். நிறையக் கும்மி அடித்தோம். என்னிடம் இருந்த பதிவுகளை சேர்த்திருக்கிறேன். 2007-08ல் எழுதப்பட்டவை. அரசனுடன் சேர்ந்து எழுதத் தொடங்கிய குமாஸ்தா, திருவினையாகாத முயற்சி. எல்லாம் சுவாரசியமான நினைவுகளைக் கிளறின.

பதிவுகளைச் சேர்க்கும் பொழுது 'சந்திரிகையின் கதை' அத்தியாயம் ஒன்று, ப்லாகர் கோளாறால் தவறிப்போய் இரண்டு முறை பதிவானதும், புதுப்பதிவாக அமைந்ததை நீக்க வேண்டியிருந்தது. அதன் விளைவே முந்தைய பதிவில் பலரும் பார்த்த பிழைச் செய்தி. பின்னூட்டத்திலும் இமெயிலிலும் விசாரித்தமைக்கு நன்று. தடங்கலுக்கு வருந்துகிறேன். (எங்கள் ப்லாக்ல சுட்டிகளை ரிப்ரெஷ் செய்யுறதில்லே.. அவங்க தயவுல நாலு பேர் என் ப்லாகைப் படிக்க வரப்ப.. நான் உள்பட.. குறை சொல்ல மனம் வருமா? :-)

பாரதியார் எழுதி, முடிக்காமல் விட்ட அற்புத காவியம் 'சந்திரிகையின் கதை'. சில கதாபாத்திரங்களின் பின்னல் படிப்பவரைச் சிலிர்க்க வைக்கும். இதுவரை படிக்காதவர்களுக்காக, முதல் அத்தியாயத்துக்கான சுட்டி இதோ: சந்திரிகையின் கதை.

ஓ, மறக்குமுன்.. திண்டுக்கல் தனபாலனின் முனைப்பு எனக்கு ஒரு முன்னுதாரணம். ப்லாகரில் பிழை செய்தி வருவதை ஏற்காமல் 'ஏன் இந்தப் பிழை வருகிறது?' என்று விடாமல் தேடிப் படித்து ஒரு பின்னூட்டமும் போட்டு விட்டார். தனபாலனுக்கு நன்றி.

11 கருத்துகள்:

  1. சமீபத்தில் திரு. வெங்கட் நாகராஜ் அவர்களின் மகள் ரோஷ்ணியின் தளம், Google கேட்ட கேள்விற்கு தவறான பதிலால் தளம் முடக்கப்பட்டது... (சில தகவல்களை கூகிளிலிருந்து கேட்டிருந்தார்கள்.. அதில் பிறந்த வருடத்தை குறிப்பிட்டவுடன், 13 வயதுக்கு குறைவானவர்கள் பிளாக் வைத்திருக்கக்கூடாது என்று சொல்லி வலைப்பூவே நீக்கப்பட்டு விட்டதாக அறிவிப்பு...!)

    அவர்களுக்கு சொன்ன பதில் : (இது தவறாக நம் சமீபத்திய பதிவை delete செய்து விட்டாலும் உதவும்...)

    நீங்கள் கணினியை Ccleaner அல்லது மற்ற software கொண்டு clean செய்யாமல் இருந்தால் :

    1. முதலில் view History

    2. Search "http://roshnivenkat.blogspot.in/"

    3. அனைத்து பதிவுகளின் url-யை குறித்துக் வைத்துக் கொள்ளவும்... (Example : http://roshnivenkat.blogspot.in/2013/12/blog-post.html)

    4. பிறகு இன்னொரு tab-ல் cache:url (குறித்து வைத்துக் கொண்ட ஒவ்வொரு url-யையும் url எனும் இடத்தில் இடவும்... அந்தந்த பதிவு வரும்... அதை அப்படியே ஒன்றன் பின் ஒன்றாக word-ல் copy செய்து கொண்டு பிறகு புதிய தளத்தில் பகிரவும்...

    இனிமேல்... தங்களின் 3 தளத்திற்கும் : ஒவ்வொரு பதிவை வெளியிட்ட பின் அல்லது atleast வாரம் ஒரு முறையாவது செய்ய வேண்டியது :

    Settings ---> Other ---> Export Blog

    இவ்வாறு செய்தால், அந்த தளத்தில் உள்ள எல்லா பதிவுகளும் சேமிப்பு ஆகும்... இது போல் பிரச்சனை ஏற்படும் போது, உருவாக்கிய புதிய தளத்தில் மீண்டும் Settings ---> Other ---> Import Blog எல்லா பதிவுகளும் வந்து விடும்...!

    நன்றி...

    பதிலளிநீக்கு

  2. முதல் பத்தியே இன்னும் படித்து முடியவில்லை. பத்திக்குள் பதிவுகள் பல வைத்து. அதற்குண்டான கருத்துரைகளையும் , புகுத்தி வைத்து. அப்பப்பா இந்த அப்பாதுரையை என்ன சொல்ல. இப்போதைய பதிவுகளும் பின்னூட்டங்களும் மலைக்கும் மடுவுக்குமான நிலை. மீண்டும் வருவேன் முழுவதையும் படித்துவிட்டு.

    பதிலளிநீக்கு
  3. @டிடி,

    ஆயிரத்துக்கும் மேல் பதிவுகள் இருந்தால் எப்படிக் குறித்துக் கொள்வது? பேசாமல் பென் ட்ரைவில் எடுத்துடலாமா? :)))))

    பதிலளிநீக்கு
  4. சந்திரிகையின் கதை, பொதிகை தொலைக்காட்சியில் ஸ்வர்ணமால்யா நடித்து வெளிவந்தது. மறு ஒளிபரப்பும் வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  5. பொதிகை தொலைக்காட்சியில் பார்த்து இருக்கிறேன். பாரதியின் சந்திரிகையின் கதை.

    பதிலளிநீக்கு
  6. geethasmbsvm6 அவர்களுக்கு :

    அவ்வப்போது Settings ---> Other ---> Export Blog

    பதிலளிநீக்கு
  7. சந்திரிகை திரைப்படம் தகவலுக்கு நன்றி. ஸ்வர்ணமால்யா நடித்ததா - பழைய படமா? யார் யார் நடிச்சது? படம் எப்படி இருக்கும்? எப்படி முடித்திருந்தார்கள்?

    பதிலளிநீக்கு
  8. சந்திரிகை கதை என்று யுட்யூபில் தேடினால் நிறைய கிடைக்கிறது - hot kerala aunty என்று விடைப் பட்டியல் தொடங்கிறது.

    சத்தியமாக இதற்கும் பாரதியாருக்கும் தொடர்பில்லை என்று எனக்குக் கூடத் தோன்றுகிறது. பொதிகை ஒளிபரப்பு எங்காவது கிடைக்குமானால் யாராவது சொல்லுங்களேன்?

    பதிலளிநீக்கு
  9. @அப்பாதுரை,

    @டிடி,

    சினிமா இல்லை. நெடுந்தொடராக வந்தது. நாங்க சென்னையிலே அம்பத்தூரிலே இருக்கிறச்சே பார்த்திருக்கேன். குறைஞ்சது ஐந்து வருடங்கள் முன்னால்??? ஆமாம்னு நினைக்கிறேன். ஸ்வர்ணமால்யாவைத் தவிர மற்றச் சில நடிகர்களும் இருந்தாலும் அவங்க பெயரெல்லாம் நினைவில் இல்லை. :(

    பதிலளிநீக்கு
  10. போன பின்னூட்டத்தில் டிடி பேரைத் தப்பாச் சேர்த்துட்டேன். :)))))

    பதிலளிநீக்கு