2013/09/10

பாக்கெட்டுல காசில்லே ராக்கெட்டு கேக்குதோ?



சட்டமறிந்தவர்கள் முட்டாள்களா? முட்டாள்கள் சட்டமறிந்தவர்களா?

கேள்வி ஒருவரைப் பற்றியதென்றால் இரண்டு ம்.

        ஒபாமா என்றழைப்பதா ஒரு ம..க்கும்
            ஒதவாதான் என்றழைப்ப்ப்பதா
        ஓத்தான் என்றழைப்பதா
            ஒளறு வாயா என்றழைப்பதா?

சட்டத்துக்கு வருகிறேன்.

அமெரிக்காவில் புழங்கும் முட்டாள்தன சட்டங்கள் பற்றிச் சமீபத்தில் படித்தேன். டெமொக்ரேட்ஸ் ஆட்சியைப் பற்றிச் சொல்லவில்லை. கீழ்க்கண்டவை நான் இணைய மேய்ச்சலில் கண்ட புல்வெளி. அல்லது புல்ஷிட் வெளி. அமெரிக்காவில் இவை சட்டப்படிக் குற்றங்களாகும், கவனம்:
    • ஞாயிற்றுக் கிழமை ஹேம்பர்கர் சாப்பிடுவது மினசோடாவில்
    • பிணத்தை ஆபாசமாகத் திட்டுவது ஜோர்ஜியாவில்
    • ஐந்து நிமிடத்துக்கு மேல் முத்தம் கொடுப்பது ஐயொவாவில்
    • கோழிக்குஞ்சைத் தலையில் சுமந்து செல்வது விஸ்கான்சினில்
    • யானைகளை வைத்து உழுவது வட கரோலைனாவில்
    • கள் கடையில் பால் விற்பது இன்டியேனாவில்
    • குறுந்தாடி வைப்பது பாஸ்டனில்
    • பைஜாமா அணிந்து மீன் பிடிப்பது சிகாகோவில்

முட்டாளுக்கு வருகிறேன்.

சிரியாவைப் பற்றித் தினமொரு கொள்கையும் அறிக்கையும் விடும் கன்னுக்குட்டி.

தான் தோன்றித்தனமாக முடிவெடுத்தாகி விட்டது. பிறகு 'இன்றைக்கு அடித்தாலும் அடிப்பேன்; இரண்டு நாள் கழித்து அடித்தாலும் அடிப்பேன்; இரண்டு மாதம் கழித்து அடித்தாலும் அடிப்பேன்' என்ற பேச்சு தேவையா? அதையும் கடந்து "காங்கிரஸ் முடிவெடுக்கட்டும்" என்று சொல்வது அறிவுக்கொழுந்தாக இல்லையோ?

காங்கிரஸ் எப்படித் தீர்மானித்தாலும் பழி சுமத்த வழி கிடைத்துவிட்டது - என்று ஒபாமை எண்ணிக் கொண்டிருக்கிறது. அட அரைலூசுக் கொன்றவட்டை! நாட்டு மக்கள் சொல்றதைக் கேளு. அம்மாம் பெரிய காது ரெண்டு இருந்து என்ன பிரயோஜனம்? வந்த ஆறு வருசத்துல கிளப்பின பிரச்சினை பத்தாதுனு வூட்டுக்கு ரிடையராகிப் போற டயத்துல இன்னும் இழுத்து வுடுறியா?

உள்ளூர்ல அவனவன் சாப்பாட்டுக்கே வழியில்லாம சாவுறான் - இவுரு சிரியா மேலே ராகெட் வுடுறாராமுல்லே ராக்கெட்டு?

சிரியாக்கார அசாத்துப்பய அசுரனாவே இருக்கட்டுமே? அதைக் கேட்க அல்லாவும் யேசுவும் க்ருஷ்ணரும் யுகே யுகே சம்பவிக்குறதா சொல்லியிருக்காங்கள்ள? ஒனக்கென்னய்யா வந்துச்சு? ஒன்னை நம்பி ஓட்டுப் போட்டவங்களுக்கு எதுனா உபயோகமா செய்யச் சொன்னா ராக்கெட்டா விடப்போறே? ராக்கெட்டு விடுற முகறயப் பாரு? எப்பனாச்சும் மாஞ்சா போட்டுப் காத்தாடி விட்டிருக்கியாயா நீ?

பட்டம் வாங்கணும்னு கடன் வாங்கிப் படிக்கிற பிள்ளைங்க கிட்டே அதிக வட்டி வாங்க உள்ளூர்ல சட்டம் போட்டு நல்லா குறட்டை விடுறே.. ஆனா வெளியூர்ப் பிள்ளைங்க பாடு உன் தூக்கத்தைக் கெடுக்குதா?

அட, ஆட்சிக்கு வந்து ஒண்ணாச்சும் உருப்படியா செஞ்சிருக்கியா அய்யா?

ஆட்சிக்கு வந்த முதல் நாள் க்வான்டனமோ சிறை மூடப்படும்னு சொன்னே? அய்யா, ஆட்சிக்கு வந்து ஆறு வருசமாச்சுய்யா.. ஒண்ணும் புடுங்கலேய்யா.

ஆட்சிக்கு வந்த ஒரு வருசத்துல வேலையில்லா திண்டாட்டம் காணாமப் போயிடும்னு சொன்னே. அய்யா ஆறு வருசமாச்சுய்யா.. ஒண்ணும் புடுங்கலேய்யா.

ஆட்சிக்கு வந்த இரண்டே வருசத்துல நிதி நிலமை சீராகும்னு சொன்னே. அய்யா ஆறு வருசமாச்சுய்யா.. ஒண்ணும் புடுங்கலேய்யா.

ஆட்சிக்கு வந்த மூணு வருசத்துல அத்தனை போரையும் நிறுத்தி அமைதியான அமெரிக்கா உருவாக்குறதா சொன்னே. அய்யா ஆறு வருசமாச்சுய்யா.. ஒண்ணும் புடுங்கலேய்யா.

இராக்கும் சரியில்லே, ஆப்கானும் சரியில்லே, இடையிலே சிரியாவுல சிரிப்பாச் சிரிக்க வைக்கப் பாக்குறே.. அய்யா புடுங்காமணி.

அறிக்கை விடுறதுக்கு மட்டும் இந்த ஆட்சியில் குறைச்சலில்லே. நடுவுல ஹிலரியம்மா அறிக்கை விடுறாங்க. வாம்மா ஞானக்கிழம், ஐ மீன், ஞானப்பழம். நாலு வருசமா அம்மா என்ன புடுங்கினீக? லிப்யாவை நீங்க மறந்தாலும் நாங்க மறப்போமுங்களா? இப்ப என்ன பெரிய தீவிரவாத ஆதிக்கம், கொடுமை அப்படி இப்படினு அறிக்கை விடுறீக? யாரை ஏமாத்தப் பாக்குறீங்க? பதினாறுல வந்துறணும்னு பிடிவாதமா இருக்கீக.. பாத்துரலாம் ஒரு கை. ஒரு ஓட்டு கூட கிடைக்காம ஓட ஓட விரட்டினாத்தான் மனசு ஆறும்.

ஏதோ என் அத்தைப் பையங்காரன் ஒரு ஜோக் அனுப்பினானோ பிழைச்சனோ. இல்லையின்னா சிரிப்பே காணாமப் போயிருக்கும்.

இறந்து போன இருவர் மேலுலகில் சந்தித்துக் கொண்டார்களாம். எப்படி இறந்தார்கள் என்று ஒருவருக்கொருவர் விசாரித்தார்கள். முதலாமவன், "நான் குளிரில் நடுங்கி செத்தேன்" என்றான்.

"குளிரில் நடுங்கிச் சாவதா? எப்படி இருந்தது?" என்றான் இரண்டாமவன்.

"முதலில் கை கால் எல்லாம் நடுங்கியது. பிறகு மெள்ள உடம்பெல்லாம் பனிக்காயத்தில் இறுகி விறைத்துப் போய் கடைசியில் இதயம் நின்றது. ரொம்ப சிரமமான மரணம்" என்றான் முதலாமவன். "நீ எப்படி இறந்தாய்?"

"மாரடைப்பு"

"அதெப்படி இருந்தது?"

"என் பெண்டாட்டி எனக்கு துரோகம் செய்கிறாள் என்று ரொம்ப நாளாகச் சந்தேகம். ஒரு நாள் சொல்லாமல் கொள்ளாமல் வீடு வந்தேன். அவளுடைய காதலன் வீட்டில் இருப்பானென்று ஒவ்வொரு அறையாகத் தேடினேன். ஒருவேளை பரணில் இருக்கிறானோ என்று வேகமாகப் போனவன் குறுக்கே போன எலியைப் பார்த்துப் பயந்து அலறி தடுக்கி விழுந்த அதிர்ச்சியில் மாரடைப்பு"

"அட லூசு! உங்க வீட்டுல இருந்த பெரிய ப்ரீஸரைத் தொறந்து பார்த்திருந்தா இன்னேரம் ரெண்டு பேரும் உயிரோட இருந்திருப்போமே?".

ஹ்ம்ம்ம்.. எனக்கென்னவோ இதுல ஒருத்தரு ஒபாமை இன்னொருத்தரு அவிசகெரினு தோணுது.

21 கருத்துகள்:

  1. இத்தினி நாளா அமேரிக்கா வல்லரசுன்னு நினச்சுகிட்டு இருந்தோம்..அதுவும் லொள்லரசு தானா ?

    பதிலளிநீக்கு
  2. இதை நம்ம பாணியிலே
    சொன்னது அருமை
    அப்பத்தான் கொஞ்சமாவது
    எரிச்சல் அடங்கும்

    பதிலளிநீக்கு
  3. Appadurai Sir,

    I am very very very happy today. You know why? America is also like India. Thank you for the post.

    Joke at the end is very good.

    பதிலளிநீக்கு
  4. அட ராமா! அங்கேயும் அப்படி தானா!

    பதிலளிநீக்கு

  5. அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனம் பொதுவாக அனைவரும் அறிந்ததுதான். இப்போது என்ன , எப்போதும் அமெரிக்கர்களும் அறிந்ததுதான். வியட்நாம் முதல் ஆஃப்கானிஸ்தான் வரை எடுத்த முடிவுகளில் அப்பாவி அமெரிக்க மக்கள் அடைந்த துயரங்கள் அவர்களுக்குத் தானே தெரியும்.

    பதிலளிநீக்கு
  6. அப்பாடி இப்பதான் சமாதானமாச்சு. லைம்லைட்ல இருக்கணும்னால் என்ன வேணா செய்வது நம் நாட்டினர் மட்டும் னு நினைச்சேன்:0)

    பதிலளிநீக்கு

  7. இந்த மாதிரி மொழிப் பிரயோகத்தில்தான் வீச்சு கிடைக்கிறதோ.?

    பதிலளிநீக்கு
  8. //ஏதோ என் அத்தைப் பையங்காரன் ஒரு ஜோக் அனுப்பினானோ பிழைச்சனோ. இல்லையின்னா சிரிப்பே காணாமப் போயிருக்கும்.//

    இருக்காதே, ஏனென்றால் இருந்த ஒரே அத்தையின் (ஏன் அந்த வழி சொந்தத்தில் உங்களுக்கு உயிருடன் இருக்கும் ஒரே ஜீவன்) குடும்பம் இந்த மூன்று மாதமாக அழுதுக்கொண்டு இருக்கின்றதே ????!!!!

    பதிலளிநீக்கு
  9. பேரிக்கா.. சாரி அமரிக்க இப்படி தான் ...

    போர் இல்லாம ..உலகில் யாரும் சாகம இருந்தா அவங்க வாழ முடியாது...

    உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பியிருக்கேன்

    பார்த்துட்டு அடுத்த பதிவு போடுங்க...
    நன்றி,
    வினோத்

    பதிலளிநீக்கு
  10. உங்களுக்கு ஒரு விஷயம் புரிஞ்சிருக்கனும்.
    அமெரிக்காவிலே இருக்கிற உங்களுக்கு அது புரியல்லேன்னா ??

    அமேரிக்கா அதாகப்பட்டது யுனைடட ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா. எ டெமொக்ராடிக் கண்ட்ரி . மோர் தான் தட் ஒரு ப்ரீ சொஸைடி . .

    அங்க யாரு வேணா எத வேணாலும் பேசலாம். அங்கு இருக்கும் பேச்சு உரிமை, எழுத்து உரிமை எங்கயுமே கிடையாதாம்.

    ஒரு நாலு அஞ்சு மாசத்துக்கு முன்னாடி கூட , ஏதோ தெருவிலே போறவங்க இல்ல, செகரட்ரி ஆப ஸ்டேட்ஸ் கேரி அப்படின்னு ஒரு இம்பார்டன்ட் மேன் இன் தா காபினெட், வெளிநாட்டுலே போயி, அமெரிக்காவின் சிறப்பு என்ன அப்படின்னு சொன்னாராம்.உங்களுக்கு நான் சொல்ரதுலே சந்தேகம் இருந்துச்சுன்னா இங்கன போய் பாருங்க.
    http://www.reuters.com/article/2013/02/26/us-usa-kerry-liberties-idUSBRE91P0HJ20130226


    இன் அமெரிக்கா, யூ ஹாவ் எ ரைட் டு பி ஸ்டுபிட். என்று சொல்லிருக்கச்சே.

    அந்த நாட்டு ஜனாதிபதிக்கு அந்த ரைட் இல்லாத மாதிரி நீங்க பேசறது சரியில்ல.

    சுப்பு தாத்தா
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  11. பக்கத்து வீட்டுலயும் கரண்ட் போன சந்தோஷம்!

    பதிலளிநீக்கு
  12. ஆயுத விற்பனையாளன்
    அமைதியை விரும்பமாட்டான் ..!!!

    பதிலளிநீக்கு
  13. அங்கேயும் அதே அரசியல் அக்கபோரு தானா?
    எல்லா அரசியல்வாதியும் நல்ல பேசுறானுங்க...
    ஆனா ஒன்னும் பு..................கிறதில்லை தான்.

    இந்த ஜோக்கை இங்க நுழைச்சதுக்கு ஒரு சாதுரியம் / சாமர்த்தியம் வேணும். அது தான் உங்கட்ட நிரம்பவே இருக்கே.

    பதிலளிநீக்கு
  14. என்னது, பாஸ்டனில் குறுந்தாடி வைப்பது சட்டப்படி குற்றமா? எங்கள் ஊரில் தாடி வைத்தவனுக்கு தான் மவுசு. அதுவும் குறுந்தாடியாக இல்லாமல் சித்திரக்குள்ளன் மாதிரி நீ...........ண்ட தாடி இருந்தால் இன்னும் விசேஷம் :)

    பதிலளிநீக்கு
  15. இங்க இந்தியாவுலதான் இப்டின்னா அங்கயும் அதே கதைதானா?

    சீல இல்லன்னு சின்னாயி வூட்டுக்குப் போனா அவ ஈச்சம்பாய கட்டிக்கிட்டு ஈன்னு இளிச்சாளாம் :))

    பதிலளிநீக்கு
  16. இந்த போஸ்ட் எனக்கு ஏன் அப்டேட் ஆகலை?? ஏதாவது சதியோ?? :)

    பதிலளிநீக்கு
  17. DD யை வழி மொழிகிறேன் 'ப்ச்'

    பதிலளிநீக்கு
  18. //ராக்கெட்டு விடுற முகறயப் பாரு? எப்பனாச்சும் மாஞ்சா போட்டுப் காத்தாடி விட்டிருக்கியாயா நீ? // பப்பா தர லோக்கலாலா இருக்கு :-)))))))))

    பதிலளிநீக்கு
  19. :-)

    ஜார்ஜ் புஷ்ஷாவது “சொல்லி” அடிச்சாரு. இவுரு அடிக்கமாட்டேன்னு சொல்லிகிட்டே அடிக்கிறாரு.

    பதிலளிநீக்கு