2013/02/09

போகிற வழியில்...



     குடும்ப முன்னோர்/மூத்தோர் புகைப்படம் ஒன்றைச் சுட்டேன். இந்தக் கூட்டத்தில், as a gene, ஏதோ ஒரு கட்புலனாகா அணுவாக - ஏறக்குறைய கடவுள் மாதிரி - நானும் இருக்கிறேன் என்பது, கொஞ்சம் சொத்தையாக இருந்தாலும் நிறைவாகவே இருக்கிறது. சுதந்திரம் வருவதற்கு முன் படம் எடுத்தார்களாம். விடியலில் பிடித்தது. விடியலாகவே தொடரட்டும். நன்று.



                   ல்லிசிம்ஹன் தம்பதிகளை முன்பே சந்தித்திருக்கிறேன். இந்த முறை சந்தித்த போது 'இவர்களால் வீட்டை எப்படி இத்தனை சுத்தமாக வைத்திருக்க முடிகிறது?' என்று வியந்தேன். இத்தனைக்கும் தெரு முனையிலிருந்து தொலைபேசி 'இதோ வருகிறேன்' என்று சொல்லி, இதோவுக்கு அரை நிமிடம் முன்பாகவே வந்தேன். என்னைத் தேடி அப்படி யாராவது வந்தால் சட்டென்று பக்கத்து வீட்டு முகவரியைக் கொடுத்து அங்கே சந்திப்பேன். என் வீட்டு இலக்கணம் அப்படி! கணவரை 'சிங்கம்' என்று அழைக்கிறார் (how romantic!). சிங்கத்துக்கு hot rod constructionல் விருப்பம். எனக்கும். எப்போதாவது இரண்டு வாரம் ஒழிந்தால் சிங்கத்துடன் சேர்ந்து பழைய அம்பேசடர் அல்லது ஜாவாவைப் பிரித்துப் போட்டு உரமேறிய hot rod உருவாக்கலாம் என்ற ஆசை வந்தது. சென்னையின் செழிப்பில் custom hot rodல் கணிசமான காசு பார்க்கலாம். அண்மை வீடு ஒன்று அரவமின்றிக் கிடந்தது. விசாரித்தேன். 'சொத்துத் தகராறில் முடங்கியிருக்கிறது, நாற்பது ரூபாய் கேட்கிறார்கள்' என்று சொன்னார் சிங்கம். 'சீப்பா இருக்கே, தட்டிடுவோமா?' என்று கேட்டவுடன், 'ஹிஹி..' என்று நாற்பதுக்கு நெருக்கமாக பத்துப் பதினஞ்சு சைபர் போட்டார். ஆடிப்போய் வெளியே வந்து மூச்சைப் பிடிக்கக் கொஞ்சம் காம்பவுன்ட் சுவரில் சாய்ந்து நின்றேன். திருச்சி ஜன்னலைப் போல இந்தத் திருமயிலை காம்பவுன்ட் சுவரும் பல வகையில் சுவாரசியம். போய்ப் பாருங்கள் புரியும்.



         மிழகத்தில் விஸ்வரூபக் காய்ச்சல். 'ஆயிரம் ரூபாய் டிடிஎச் கட்டலாமா வேண்டாமா?' என்று இருக்கிற/இல்லாத முடியைப் பிய்த்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் குழப்பத்தை நீக்க, கமல்ஹாசனே வழக்கம் போல் இன்னொரு குழப்பத்தைக் கொடுத்தார். பிறகு அதை நீக்க இன்னொன்று. பிறகு அதைப் போக்க... 'creating a problem to solve it' என்று அருமையான மேலாண்மைத் தந்திரம் ஒன்று உண்டு. இதைச் சரியாகச் செய்யவில்லையென்றால் முட்டாள்தனமான முடிவுகள் விளையும். கமல்ஹாசன் என்ன நினைத்து குட்டையைக் கிளறினாறோ தெரியவில்லை. deflection and damage control முறைகளும் சரியில்லாமல் போனது வருத்தம். இந்தப் படத்துக்காக இன்னும் எத்தனை வழக்குகளைச் சந்திக்கப் போகிறாரோ தெரியவில்லை. சந்தடி சாக்கில் ஹுசேன் போல் ஹாசன் என்று leg bye சிக்ஸர் அடிக்கப் பார்த்தார். stupidity begets. ஹிஹ்ஹிஹ்ஹி. இவர் படத்துக்கு மட்டும் அடிக்கடி எதிர்ப்புகள் வருவதேன்? இவர் சொல்வது போல் சமூக அமைப்புகள் ஒன்று விடாமல் இவரை இளிச்சவாயன் என்று நினைக்கின்றனவா? அல்லது கலை என்ற பெயரில் எதையாவது கண்றாவியாக வேண்டுமென்றே செய்கிறாரா? ஒரு கலைஞனை முடக்குவதால், பாதிக்கப்பட்டக் கலைஞனைத் தவிர, யாருக்கும் எந்தப் பலனும் கிட்டியதாக வரலாற்றில் செய்தியில்லை. nevertheless, இந்தப் படத்தினால் இவர் நொடித்துப் போவதைப் பொறுக்க முடியவில்லை. இதைப் பதிவிடும் நேரம் படம் வந்திருக்கும் - அதாவது தமிழக தியேடர்களில். ஜனவரி 26 முதல் இணையத்தில் விஸ்வரூபம் HD பிரதிகள் கிடைப்பதாகத் தகவல்கள் புழங்கினாலும், ஹு i mean ஹாசனுக்காக, இந்தப் படத்தை அடுத்த சென்னைப் பயணத்தில் பணம் கொடுத்து டிகெட் வாங்கிப் பார்க்க முடிவு செய்திருக்கிறேன். (ஹிஹி..பேசுவது கிலியா?)



         முன்பே சந்தித்த மற்றொரு பதிவர் ஜவஹர். புத்தகப் புண்காட்சியில் லேசாக உரசிய பின்னர் பொங்கல் நாட்கள் ஒன்றில் சந்தித்தோம். புத்தகம், இலக்கியம், சினிமா என்று மேற்சொன்ன தலைப்புகள் ஒவ்வொன்றிலும் நேரம் போனது தெரியாமல் அரட்டை. தொடர்ந்து ISO 6sigma என்று கணிசமான அரட்டை. அதற்குப் பிறகு பஸ் நிலையம் வரை நடந்து அங்கே கொஞ்சம் படு சுவாரசியமான சமூக அரட்டை (டாபிக் பற்றிச் சொல்லவே கூடாது என்று உறுதி வாங்கிக் கொண்டதால், உறுதி வாங்கிக் கொண்டாரென்பதை மட்டும் சொல்கிறேன்). இவரைச் சந்தித்த பின்னர் ஸ்ரீராமை சந்திக்க பிளான். பேச்சு சுவாரசியத்தில் நேரம் தொலைந்து போனதும், 'நம்ம ஸ்ரீராம் தானே?' என்று சாக்கு சொல்லிக் கொண்டோம். மறுபடி கொசுறுக்காகப் பேசினோம். புத்தகம் எழுத விரும்பும் பதிவர்களுக்கு நிறைய டிப்ஸ் வைத்திருக்கிறார். இதைப் பற்றி ஒரு பதிவு எழுதலாம் இவர். விடையுடன் விலகி, பரவிக்கிடந்த ஆட்டோக்கிருமியிடம் ஒட்டிக்கொண்ட போது இந்த சந்திப்பில் நாங்கள் நிறைய நெருங்கியிருக்கிறோம் என்பதை உணர்ந்தேன்.



         நாக்பூருக்கு போகிற பஸ்சில் OMG என்ற பெயரில் ஒரு இந்திப்படம் - அரைப்படம் பார்த்தேன். டூரிஸ்டுகளிடம் அனியாய விலைக்கு அபத்தமான பின்புலம் சொல்லி கடவுள் சிலைகளை விற்கும் நாத்திகர் ஒருவரின் கடை மட்டும் புயலில் சின்னாபின்னமாகிறது. இன்சூரன்சு கம்பெனிக்காரர்கள் 'act of god' என்று சின்ன எழுத்துக் காரணம் காட்டி அவருக்கு நஷ்ட ஈடு கிடையாது என்கிறார்கள். நிரூபியுங்கள் என்று வழக்கு போடுகிறார். சுவாரசியமான கரு. பாதியில் நிறுத்திவிட்டார்களே என்று கடுத்தேன்.



     ஸ்ஸில் வந்து இறங்கியதும் சாலையோர மர இலைகள் காலைச் சூரியனின் சிவப்பில் கொஞ்சம் தகிப்பது போல் தெரிந்தது. நாக்பூர் அதிகாலையைப் பாடாவதி ப்லேபுக்கில் பிடித்தேன். மீள்சந்திப்பு காஸ்யபன் அவர்களுடன். வயிற்றுக்கும் அறிவுக்கும் விருந்தாய்க் கழிந்தது நாட்பொழுது. எனக்கு வந்த சில சங்கடமான இமெயில்கள் பற்றி அவரிடம் அறிவுரை கேட்டேன். அரசியல் கலை இலக்கிய பதிவுலக கிசுகிசுக்கள் பேசினோம். படுஜாலி. இன்னும் நிறையப் புத்தகங்கள் பரிசாகக் கொடுத்தார். (இந்த முறை புண்காட்சியில் வாங்கியதையும் நண்பர்களிடம் பெற்றதையும் தொலைக்காமல் ஊருக்கு எடுத்துச் செல்லவேண்டும் பராபரமே!) வரும் கோடையில் இவருக்குப் பாராட்டு விழாவாம். தமிழ்நாட்டில் நடைபெறுகிறதாம். விவரங்களை அறிவிப்பார் என்று நம்புகிறேன். இப்பொழுதே வாழ்த்துக்களும் வணக்கங்களும்.



         புலம்பக்கூடாது. புலம்பி என்ன பயன்? ஹைதராவிலிருந்து எழும்பூர் வர முப்பத்தாறு மணி நேரத்துக்கு மேல் எடுத்துக்கொண்ட சண்டாள காசிகுடா எக்ஸ்பிரஸ் பற்றி புலம்பினால் போன காலம் திரும்பக் கிடைக்கவா போகிறது? வேண்டாம். ஐயையோ, புலம்புகிறேனே!



         ந்தியாவை விட்டுக் கிளம்புகையில் மும்பை விமானத்தை, பேசின் பிரிட்ஜ் போல் அவுட்டரில் நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்பொழுது அவசரமாகப் பிடித்த மாலைப் பொழுதின் touchdown மயக்கம்.



         special 26 என்று ஒரு இந்திப்படம் பார்த்தேன். இறுதியில் ocean's eleven நினைவுக்கு வந்தாலும் mostly சுவாரசியமான படம். சில இடங்களில் நகைச்சுவை அட்டகாசம். intelligent humor என்பது போனஸ். அருமையான திரைக்கதையில் பாடல்கள் தொய்வுடன் செவிவலியும் கூட. தவிர்த்திருக்கலாம். பெயர் தெரியவில்லை - போலீஸ் சிபிஐ காரர்களாக வரும் இரண்டு மீசைக்காரர்களும் பிரமாதமாக நடித்திருக்கிறார்கள். அனுபம் கெர் ஒரு ஜாம்பவான். பின்னணி இசை, எடிடிங் பிரமாதம்.

எத்தனையோ வருடங்களுக்குப் பிறகு நான் தியேடரில் பார்த்த முதல் படம் கடல். மூச்சைக்கட்டும் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு. மற்றபடி "மணிரத்னத்தையும் ஜெயமோகனையும் படத்தில் வர்ராப்ல கவுறு கட்டி தலைகீழாத் தொங்கவிடணும்லே" என்ற exit chatter காதில் விழ அவசரமாக வெளியே வந்தேன். in violent agreement.

விஸ்வ பார்த்தேன்.. (பதிவை எழுதி முடிப்பதற்குள் படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது, என்ன செய்ய?) கமல்ஹாசன் தமிழ்ப்படத் தரத்தை உயர்த்துகிறார் என்று சொல்லிக்கொள்வது கேலியாக இருக்கிறது. ந்யூயோர்க் நகரில் பிராமண வழக்கில் பேசும் எவரையும் நான் சந்தித்ததில்லை (nuclear oncologists that too, wtf!). effiminate expressions இவருக்கு வரவேயில்லை. ஆச்சரியமாகவும் கஷ்டமாகவும் இருந்தது பார்ப்பதற்கு. i always thought acting was his forte. பாடல்களும் இசையும் நாராசம். சிக்கன் சமைத்துவிட்டு அடுப்பிலிருந்து எடுக்கிறார் - எல்லாப் பெண்களும் எனக்கு எனக்கு என்று சுவைக்க முன்வர, கமல் கேரக்டர் சொல்லும் வசனம்: "இருங்கருங்க.. பாப்பாத்திம்மா.. நீ மொதல்ல சாப்டுப் பாத்துச் சொல்லு. உனக்குத்தான் சிக்கன் ருசில்லாம் தெரியும்". what? தமிழ்நாடு பிராமண சங்கம், தமிழ் ஹிந்துகாரர்கள் எப்படி சும்மா விட்டார்கள்? (and oh, get this. microwaveல் எலும்புடன் சிக்கன் சமைப்பார்களா யாராவது? இது கூட தெரியவேண்டாம்? காட்சி அமைக்கிறார்களாம் உலகத் தரத்துக்கு!).

ஒன்று தெளிவானது. தமிழ்ப்படம் இந்திப்படத் தரத்துக்கு வரவே இன்னும் நாளாகும். உலகத்தரத்துக்கு இட்லி வடை பொங்கல் பரோட்டா சாப்ஸ் செய்கிறோமே, போதாதா?



     சென்ற வாரம் படித்த இரண்டு புத்தகங்களும் அற்புதம். முதலாவது மகாகவி சண்முகத்தின் 'அஷ்டலட்சுமி காவியம்' பற்றித் தனிப்பதிவாக எழுத விரும்புகிறேன். இரண்டாவது, ராகிரவின் 'புரபசர் மித்ரா'. ரசித்தேன். க்ருஷ்ணகுமார் என்ற பெயரில் எழுதி வெளிவந்தத் தொடர்கதை. பிரபல மேஜிக் நிபுணர் மித்ரா தன் மனைவியைச் சந்தேகிக்கிறார். தன் சந்தேகம் தொட்ட விவரங்களை அறிய தன் மனைவியை ஒரு காலக்கட்டத்துக்கு ஹிப்னோசிஸ் வழியாக அழைத்துச் செல்ல விரும்புகிறார். ஆனால் அதற்கான ஆற்றல் அவரிடம் இல்லை. பெண்ணை வளர்த்து கலை கற்றுத் தருகிறார் - இந்தக் காரியத்துக்காக. மித்ராவின் கொடூர நடத்தைகள் இன்றைக்குப் படித்தாலும் திடுக்கிட வைக்கின்றன. மித்ரா, மித்ராவின் மனைவி ஜெகதா - இரண்டும் அருமையானப் பாத்திரங்கள். நிஜ வாழ்வில் சில மனைவிகள் இப்படிப்பட்டக் கணவர்களிடம் வாழ்கிறார்கள் என்பது தெரிந்தாலும், 'ஐயோ வேண்டாமே!' என்று இரங்க வைக்கும்படியான பாத்திரம். லேசான காதலும் இழைந்த, சுவாரசியமான, பக்கத்துக்குப் பக்கம் விறுவிறுப்பான கதை. விறுவிறுப்பான திரைப்படமாக வரவேண்டிய கதை.

புரபசர் மித்ரா: அல்லயன்ஸ் பதிப்பகம், 2009 ஆண்டுப் பதிப்பு, விலை ரூ105.



         ண்பதுகளின் தொடக்கத்தில் பெங்களூரின் ஹொசஹள்ளி பகுதியில் விடலை நண்பர்களுடன் இருபத்தேழு இஞ்ச் பெல்பாட்டம் அணிந்து, ராஜாஜி நகர் பெண்களை சைட் அடிக்கையில் ஹம் செய்துத் திரிந்த கன்னட சினிமாப் பாடல். எங்கள் கலெக்டிவ் ஜொள்ளுக்குக் காரணமான சுகுணா என்றொரு பெண், எங்கே எப்படி இருக்கிறாளோ! இசை இளையராஜா என்று இந்தப் பயணத்தில் தான் தெரிந்து கொண்டேன். பெங்களூர் நண்பனிடம் அவசரமாகச் சுட்ட பாடலுடன், இப்போதைக்கு விடை.


32 கருத்துகள்:

  1. பெயரில்லாபிப்ரவரி 09, 2013

    குடும்ப படம் அட்டகாசம். அந்த காலத்து கருப்பு வெள்ளை படத்துக்கு இருக்கற அழகே தனிதான். நடுல உக்காந்துண்டு இருக்கற பாட்டி ரொம்ப கம்பீரமாவும், அவருக்கு இடது பக்க கொடில உக்காந்துண்டு இருக்கற மாமா ரொம்ப லட்சணமாவும் இருக்கா. இந்த மாமா பக்கத்துல உக்காந்துண்டு இருக்கற பையன் படு cute.

    பதிவு சுவாரசியம். மும்பை விமானத்தில் இருந்து எடுத்த படம் சூப்பர். நடுல அதென்ன மகர ஜோதியாட்டம் இருக்கு.

    ப்ரோபசர் மித்ரா புத்தகம் பத்தின விமர்சனம் இன்னொரு பதிவுல கூட படிச்சிருக்கேன். அப்பவே இந்த புத்தகத்தை கட்டயாம் படிக்கணும்னு நினைச்சுண்டேன். இப்ப நீங்களும் இதை பத்தி எழுதி இருக்கீங்க. படிச்சுட வேண்டியதுதான்.

    விஸ்வரூபம் படம் விஸ்வரூப பிரச்சனையாகி இப்ப வெளில வந்தாச்சா. இங்க ஒரு
    பிரச்சனையும் இல்லாம ரிலீஸ் ஆனா அன்னிக்கே கும்பலா போய் பாத்தாச்சு. படத்துல சில கொலைகள் பண்றத அப்படியே காட்டும்போது மனசு என்னவோ மாதிரி இருந்துது. மத்தபடி கமல் அவர்கள் எடுத்துள்ள முயற்சிக்காக ஒரு தடவ பாக்கலாம். படத்துல அந்த கால ஹீரோயின் Zarina (அப்ப ரொம்ப ஸ்வீட்டா இருப்பாங்க) எதுக்கு வந்தாங்கன்னே தெரியல.

    இந்த பாட்டு நிறைய தடவ கேட்டிருக்கேன். இந்த பாட்டு இதே மெட்டுல எஸ்.பீ.பீ. ஜானகி குரல்ல தமிழ்லேயும் வந்திருக்கு. 'கோதை மேனி கொய்யா பூ' இதான் ஆரம்பம்னு நினைக்கறேன். ஆனா தமிழ்ல விட கன்னடத்துல இந்த பாட்டு ரொம்ப அழகா இருக்கா மாதிரி எனக்கு தோணும்.

    பதிலளிநீக்கு
  2. 'கன்னி வண்ணம் ஊதாப்பூ' என்று தமிழில் இந்தப் பாடல் கேட்டிருக்கிறேன். பிடித்த பாடல். ஏதோ விஜயகாந்த் படமென்று ஞாபகம். சுகுணாக்களை நினைவு படுத்தும் இளையராஜா வாழ்க!இதே போல விழியிலே மணி விழியிலே என்ற ஒரு பாடலின் கன்னட வெர்சனும் நன்றாக இருக்கும். (ஜோதியலே)

    கமலஹாசனை நீங்கள் பாராட்டியிருந்தால் ஆச்சர்யப் பட்டிருப்பேன்!

    ப்ரொபசர் மித்ரா பற்றி அரைகுறையாக எங்களில் ஒரு பதிவு வந்தது. ஜீவி சார் நாகரீகமாகக் கடிந்து கொண்ட பதிவு!!

    முடி சூடிய படம் கேட்டேனே...!! பேசின் ப்ரிட்ஜ் விமானம் படம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. ப்ரொபசர் மித்ரா படிக்கும் ஆர்வத்தை கிளறி விட்டீர்கள். அதென்னவோ புத்தக கண்காட்சிக்கு போகும் வாய்ப்பு இதுவரை கிட்டவில்லை. மற்ற அனுபவங்கள் அனைத்தும் நன்று.

    பதிலளிநீக்கு
  4. என் அப்பா அம்மா இருக்கும் பழைய குடும்பப்படம் ஒன்று சமீபத்தி்ல கிடைத்த போது கொள்ளை சந்தோஷப்பட்டேன். சொத்தையாய் இருந்தாலும் நான் இருக்கிறேன் என்ற உங்கள் வார்த்தைகளிலுள்ள மகிழ்ச்சி + ஆறுதல் என்னால் உணர முடிகிறது. ரம்யமா இருக்கு படம் பாக்க.

    விமானத்துல இருந்து நீங்க சுட்ட படம் அட்டகாசம்! ரொம்பவே ரசிக்‌க வெச்சது.

    புரொபசர் மித்ரா பத்தியும், மறுபடியும் தேவகி பத்தியும் நான் ரசிச்ச விஷயங்களைச் சொல்லி ரா.கி.ர.வுடன் உரையாடிய பொழுதுகள் உங்கள் விமர்சனத்தைப் படிக்கையில் நினைவில் நிழலாடுகின்றன. Legend Sir!

    கன்னி வண்ணம் ஊதாப்பூ தொட்ட கைகள் தாழம்பூ பாடல் கேட்க இனிமையாகவே இருக்கும். கன்னட வர்ஷன் இப்போதான் கேக்கறேன்.

    அப்புறம்.... உங்களைச் சந்திக்கறப்பல்லாம் நண்பர்கள் புத்தகம் அன்பளிக்கறாங்களே... எப்படிங்கற ரகசியத்த மட்டும் எனக்குச் சொல்லித் தாங்களேன்... (புத்தகம் அன்பளிக்கற நண்பர்கள் அமையவும் குடுத்து வெச்சிருக்கணும்டா...னு அனல்மூச்சு விடுது மனஸ்)

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. //இந்தக் கூட்டத்தில் ஏதோ ஒரு கட்புலனாகா அணுவாக - ஏறக்குறைய கடவுள் மாதிரி - நானும் இருக்கிறேன் என்பது, கொஞ்சம் சொத்தையாக இருந்தாலும் நிறைவாகவே இருக்கிறது.//

    பாட்டியின் மடியினில், தலையில் கை வைத்து யோசித்தபடி, இருப்பதிலேயே மிகச்சிறிய குழந்தையாய், அது தாங்களாக இருக்கக்கூடும் என்பது என் யூகம்.

    சரியா?????????

    பதிலளிநீக்கு
  7. //”அடுத்த முறை, ஓ..மீண்டும் திருச்சி வந்தால், வை.கோ வீட்டில் ஜன்னலோரமாக இடம் கேட்டுத் தங்கத் தோன்றியது.

    திருச்சி செல்லும் எல்லாரும் அவசியம் வை.கோ வீட்டு ஜன்னலை விசிட் செய்ய வேண்டும்.

    காணக்கண் கோடி வேண்டும்.”
    - அப்பாதுரை//

    -=-=-=-=-=-=-=-

    என் வீட்டு ஜன்னல் கம்பி
    ஒவ்வொன்றாய்க்
    கேட்டுப்பார் !

    [ பகுதி 2 ]

    அனுபவம் By
    வை. கோபாலகிருஷ்ணன்,

    இன்று வெளியாகி விட்டது.

    இது எல்லோருடைய தகவலுக்குமாக மட்டுமே.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2013/02/2.html

    பதிலளிநீக்கு
  8. குடும்ப படம் அழகாய் இருக்கிறது.

    திருமயிலை காம்பவுன்ட் சுவரும் பல வகையில் சுவாரசியம். போய்ப் பாருங்கள் புரியும்.//

    வல்லி அக்கா தன் வீட்டு காம்பவுண்ட சுவர்பற்றி பதிவு போடுவார்கள் என நினைக்கிறேன். அவர்களையும், அவர்கள் காம்பவுண்ட் சுவரையும் பார்க்க ஆவல்.

    மாலை பொழுதின் மயக்கம் படம் அருமை.

    பதிலளிநீக்கு
  9. பலரின் இனிய சந்திப்பு... விஸ்வரூப பார்வை...

    மாலைநேர மயக்கம் சூப்பர்...

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லாபிப்ரவரி 09, 2013

    'கன்னி வண்ணம் ஊதாப்பூ' இதுதான் பாடலின் முதல் வரி. மறந்து விட்டது. நன்றி ஸ்ரீராம், கணேஷ்.

    'விழியிலே மணி விழ்யில்' எனக்கு மிக மிக பிடித்த பாடல். எஸ்.பீ.பீ. குரல் இந்த பாடலில் அவ்வளவு இனிமை. தேன்தான். இந்த பாடல் கன்னடத்திலும் மிகவும் இனிமையாய்
    இருக்கும். இன்னும் சில பாடல்கள் கூட தமிழை விட கன்னடத்தில் கேட்க இன்னும் இனிமையாய் இருக்கும். மெட்டு ஒன்றே என்றாலும் மொழியின் அழகு அந்த மெட்டில் இன்னும் இனிமையாக இருப்பது போல் எனக்கு தோன்றும்.
    'ஆடல் பாடல் காதல் என்பது அப்போது' இந்த பாடல் இதே மெட்டில் கன்னடத்தில் 'ஜீவ வீனே நீடு' என்று ஜானகி, எஸ்.பீ.பீ. குரலில் தமிழை விட கன்னடத்தில் கேட்க மிக மிக இனிமையாய் இருக்கும். தமிழை விட கன்னடத்தில் இந்த பாடல் சூப்பர் ஹிட்.

    பதிலளிநீக்கு
  11. //கூட்டத்தில் ஏதோ ஒரு கட்புலனாகா அணுவாக - ஏறக்குறைய கடவுள் மாதிரி - நானும் இருக்கிறேன் என்பது, கொஞ்சம் சொத்தையாக இருந்தாலும் நிறைவாகவே இருக்கிறது. சுதந்திரம் வருவதற்கு முன் தினம் படம் எடுத்தார்களாம். விடியலில் பிடித்தது.//

    சுதந்திரம்ம் வரதுக்கு முன் தினம் எடுத்த படத்தில் நீங்களாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ? நிஜம்ம்மாவா? நம்ப முடியவில்லை!
    ம்ப முடியவில்லை!
    பமுடியவில்லை
    முடியவில்லை
    டியவில்லை
    யவில்லை
    வில்லை
    ல்லை
    லை


    இதெல்லாம் எதிரொலி!


    //ஒன்று தெளிவானது. தமிழ்ப்படம் இந்திப்படத் தரத்துக்கு வரவே இன்னும் நாளாகும். உலகத்தரத்துக்கு இட்லி வடை பொங்கல் பரோட்டா சாப்ஸ் செய்கிறோமே, போதாதா?//

    ஹிஹிஹி, அதே ,அதே சபாபதே! தமிழ்ப்படங்களில் அலட்டல் இருக்கும் அளவுக்கு விஷயம் இருப்பதில்லை! இத்தனைக்கும் இப்போதைய பெரும்பாலான படங்கள் பார்த்ததில்லை. ரெவ்யூ படிப்பதோடு சரி. ஒரு சில காட்சிகளை எப்போதேனும் தொலைக்காட்சியில் காண்பதோடு சரி. அதுக்கே ஐயே என்று சொல்ல வைக்கும்! :))))))

    குட்டி, மல்லி, வீடு, காஞ்சீபுரம் போன்ற படங்கள் இந்த லிஸ்டில் வராது. தமிழ்ப்படங்கள் அதீதக் கற்பனைகளோடு படங்களாகவே இருப்பது மாபெரும் குறை! எப்போ யதார்த்தம் வரும்னு புரியவில்லை. பேருந்து விபத்து குறித்த ஒரு படம், பெயர் நினைவில் இல்லை. கொஞ்சம் பார்க்கும்படியாக இருக்கும், ஒரு சில காட்சிகளைத் தவிர்த்து!

    பதிலளிநீக்கு
  12. நீங்கள் கொடுத்திருக்கும் பாடலைக் கன்னடத்திலும் கேட்டதில்லை. தமிழிலும் கேட்டதில்லை! :)))))

    பதிலளிநீக்கு
  13. வல்லி வீட்டுக் காம்பவுண்டு சுவர் அட்டகாசம் தான். :))))) எங்களுக்கும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  14. / நானும் இருக்கிறேன் என்பது, கொஞ்சம் சொத்தையாக இருந்தாலும் நிறைவாகவே இருக்கிறது//

    அந்த இரண்டு ( அல்லது மூன்றா ?) வாண்டுகளில் நீங்கள் யாராக இருக்குமென மனம் ஆவலுற்றது.

    // இந்தக் கூட்டத்தில் ஏதோ ஒரு கட்புலனாகா அணுவாக...// எனும் அடுத்த சொற்தொடர் யாராக இருந்தாலும்

    அதுவே தானே என நினைத்தது.

    நிற்க. இது வேறு.
    நீங்கள் குறிப்பிட்ட ந்யூ யார்க் உண்மை நிலைகளை நானும் அறிவேன்.
    It is defying one's imagination and equally a pity that why the 'creative genius' felt the need to do such deliberate mocking.


    இதுவும் வேறு.
    உங்களைச் சந்திக்க இயலாமல் போனது ஒரு குறையாகவே தோன்றுகிறது. உலகம் உருண்டை என்பர். என்றாவது
    சந்திப்போமா ? தெரியவில்லை.


    சுப்பு ரத்தினம்.

    பதிலளிநீக்கு
  15. பின்னூட்டங்களுக்கு நன்றி.
    (முன்னோர்/மூத்தோர் படத்தில் நான் நானாக இடம்பெற வாய்ப்பே இல்லை :-)

    பதிலளிநீக்கு
  16. இவ்வளவு ஆச்சாரமான குடும்பத்துல பொறந்துட்டு ...... ஹூம்!

    பதிலளிநீக்கு
  17. "கல்யாணப் பந்தலில் ஆடும் தோரணமா, கச்சேரி ரசிகர்கள் கேட்கும் மோகனமா?" என்றார் கவிஞர். பதிவில் உள்ள பாடல் அந்த மோகன ராகம்தான். நன்றாக இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  18. சுவையான அனுபவங்கள்.சிறப்பான விஷயங்கள்.
    குடும்ப படம் அற்புதம். இப்பெல்லாம், இந்த மாதிரி வைதீகமான மனிதர்களை எங்கே பார்க்க முடிகிறது??

    சினிமா நான் அதிகம் பார்க்க மாட்டேன். ஆனால் கமலஹாசன் விடாமல் செய்யும் புதுப்புது முயற்சிகளுக்காக அவருடைய படங்களை மட்டும் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்கிற வழக்கத்தை வைத்துக் கொண்டுள்ளேன்.

    சுவாரசியமான பகிர்வு.

    பதிலளிநீக்கு

  19. The Family photo-- I've only seen such pictures in photo documentaries they show in News channels- or when I steal memories from those unaffordable Illustrated history books at Landmark... Frozen time!
    the "vish" review-- hilarious! I havn't seen the film yet-- though glimpses of it-- (courtesy: "thiruttu vcd"). Am in no hurry to see it either. Let alone NY nuc oncologists... I have never heard such Brahman tamil in trichy-chennai even. Sounds wired!
    OMG-- actually a good film. wrote a review in my blog. Though the plot is a lift-off-- has been well-"Inidanised".
    Special 26-- I hope to watch it- that is when I find time!... Neeraj Pandey- the director--- has already become my favorite. his "A Wednesday" was awesome!
    Kannada song--- beautiful!

    பதிலளிநீக்கு
  20. Special 26-- I hope to watch it- that is when I find time!... Neeraj Pandey- the director--- has already become my favorite. his "A Wednesday" was awesome! //

    அப்போவே எழுத நினைத்து விட்டுப் போனது. நானும் ஸ்பெஷல் 26 படிக்கலை. ஆனால் புதன்கிழமை பார்த்தேன். பலமுறை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கோணத்தில் அற்புதமான படம். இம்மாதிரியெல்லாம் தமிழில் முடியவே முடியாது என்பது வருந்தத் தக்க உண்மை. இங்கே ஹீரோவுக்காகச் சில விஷயங்களில் மாற்றம் செய்துடுவாங்க. :((((( கதையின் உண்மையான கருவே கெட்டுப் போயிடும்.

    பதிலளிநீக்கு
  21. புகைப்படம் அழகு;உவகைக் கூட்டுகிறது. இந்தப் படத்தில் உங்களின் அந்த மெத்தப் படித்த மாமா இருக்கிறாரா, அப்பாஜி?
    அவரைப் பற்றி நீங்கள் குறிப்பிட்டதிலிருந்து மனசில் அவர் குறித்து மரியாதை மண்டுகிறது. மனிதர்கள் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மரியாதை மட்டும் அதையெல்லாம் நினைத்துப் பார்ப்பதில்லை; அதற்கு என்றும் அழிவில்லை என்பதற்காகச் சொல்ல வந்தேன். எல்லாருக்குமே இப்படி ஒரு மாமா-- தாயின் சகோதரர்-- அமைந்து விடுகிறார்கள். எனக்கும் அப்படி அமைந்ததினால் அருமை தெரிகிறது.

    //கடவுள் சிலைகளை விற்கும் நாத்திகர்- அவரின் கடை மட்டும் புயலில் சின்னாபின்னமாகிறது-- இன்சூரன்சு கம்பெனிக்காரர்கள் 'act of god'(!) என்று சின்ன எழுத்துக் காரணம் காட்டி அவருக்கு நஷ்ட ஈடு கிடையாது என்கிறார்கள். //

    ஒவ்வொரு -- -- நடுவே நிறைய்ய கதைக்கருக்கள் கஷ்டப்பட்டு இடுக்கிக் கொண்டு கிடப்பதாகத் தோன்றுகிறதே!
    எவ்வளவு அருமையான பின்னல்?..

    புரொபசர் மித்ரா! -- அதுக்கு முந்தி ஒண்ணு சொல்லணும். இன்னிக்கு காலம்பற அவரோட 'படகு வீடு' கதை உற்பத்தி ஸ்தலம் பற்றி ரா.கி.ரா-வே சொன்ன சுவாரஸ்யங்களைப் படிச்சேன். நிறைய விஷயங்கள் தெரிந்திருப்போரும் சின்ன சின்ன விஷயங்களில் கோட்டை விட்டு விடுவது பற்றி யோசனை நீண்டது.

    பகிர்தல் தொடரட்டும்,ஜி!


    பதிலளிநீக்கு
  22. குடும்பப் படம் அருமை.

    யன்னல் படிக்கின்றோம். காம்பவுண் சுவருக்கு.... காத்திருக்கின்றோம்.

    பல தகவல்களை அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  23. அந்த கால புகைப்படம் ரொம்பவே அழகு...

    வை.கோ சார் வீட்டு ஜன்னல் கம்பி கதைகள் சொல்லிக் கொண்டிருப்பது போல, வல்லிம்மா வீட்டு காம்பவுண்டு சுவரும் கதைகள் சொல்லப் போகிறது. ஆர்வம் கூடுகிறது. வல்லிம்மா எங்கிருந்தாலும் இதை படித்து விட்டு கதைகளை ஆரம்பிக்கவும்....:)

    பதிலளிநீக்கு
  24. புகைப்படக்காட்சிகள் அருமை ..

    ப்ரோபசர் மித்ரா தொடர்கதையாக படித்திருக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  25. காம்பவுன்ட் சுவர் கதைகள்னு வல்லியம்மாவை எழுத வச்சுருவோம் போலிருக்கே..? :)

    பதிலளிநீக்கு
  26. வல்லிம்மா வீட்டுக் காம்பவுண்டுச்சுவருக்குக் கதையெல்லாம் கிடையாது.
    காம்பவுண்டே இல்லாமல் இருந்த காலம்.
    பாட்டி கதவைத் திறந்தபடி வடுவூரார் நாவலில் மூழ்கியிருக்க,பின்பக்கக் கிணற்றில்
    வைத்திருந்த மன்னார்குடிச் சொம்பை ஒரு திருடன் எடுத்து ஓடிய பிறகுக்
    கட்டப்பட்டது.
    வீடு கட்ட 54 ஆயிரம். காம்பவுண்டு கட்டப் பத்தாயிரம் நடுவில் நான்கு வருடங்கள்.
    ஒரு மின் தூண் அமைக்கப் பட்டதும் அந்த இடம் பொதுக் கழிப்பிடம் ஆனது.
    ரொமண்டிக் சிங்கம் மின்வேலி அமைக்க ஆசைப் பட்டார். அவ்வளவு
    துர்நாற்றம்!!!

    பிறகு ஒரு பெயிண்ட் அடிப்பவரின் ஆலோசனையில் பிள்ளையார், அம்பாள் படங்கள் வரையப் பட்டன. இப்போது அவ்வளவு
    நாற்றம் இல்லை. இருந்தாலும் மனிதர்களின் அவசரங்கள்
    அவ்வளவு சீக்கிரம் அழிவதில்லை:(

    சிங்கமும் அசராமல் செடிகள் நட்டுப் பராமரித்துப் பார்த்தார். அவர்கள் அந்தச் செடிகளுக்கே உரமிட ஆரம்பித்துவிட்டார்கள்.:)
    இப்பொழுது காம்பவுண்டு சுவரில் தாத்தா பெயரும் வீட்டுப் பெயரும் சரியாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  27. அந்தப் படம் எப்படி இவ்வளவு தெளிவாக இருக்கிறது துரை?

    அந்த நாளின் பரிசுத்தம் பளிச்சிடுகிறது.வெகு அழகு.

    ராகிர படிக்க ஆரம்பிக்கணும். திஜா விடமாட்டேன் என்கிறார்.
    அதென்ன வீடு சுத்தமாயிருந்தது என்று எழுதி இருக்கிறீர்கள். ஜன்னல் ஒட்டடை கண்ணில் படவில்லையா.
    இன்வர்ட்டர் மேல் தூசி உங்கள் பார்வையில் படக் கூடாதே என்று வேண்டிக் கொண்டேன்.
    பேச்சு சுவாரஸ்யத்தில் மீதி வீட்டை நீங்கள் பார்க்கவில்லை.
    நதிங் லாஸ்ட்!!!
    நன்றி துரை.

    பதிலளிநீக்கு
  28. அப்பதுரை அவர்களே! "அந்த கூட்டத்தில் as a gene ஏதோ கட்புலனாகாத அணுவாக, ...கடவுளாக "அறிவியல்" ரீதியாக சரிதான் ! ஆனாலும் உமக்கு கோழுப்புத்தான் ! or rather intelegence in itsarroganat form ! any way it is fine !---kaaSyapan

    பதிலளிநீக்கு
  29. அன்பின் திரு அப்பாதுரை சார்,

    உங்களுடைய முன்னோர்கள் படம் அருமை. பகிர்விற்கு நன்றி. புரொபசர் மித்ரா கதை படிக்கவேண்டும் என்று ஆவல் அதிகமாகிவிட்டது. நல்லதொரு தொகுப்பு..

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  30. (இந்த முறை புண்காட்சியில் வாங்கியதையும் //

    கண்காட்சி ரொம்ப படுத்தி புண்காட்சியாகிவிட்டதா!!

    ஏதாவது கண்காட்சி என்றால் காத தூரம் ஓடிவிடுவேன் ..

    பதிலளிநீக்கு
  31. //”அடுத்த முறை, ஓ..மீண்டும் திருச்சி வந்தால், வை.கோ வீட்டில் ஜன்னலோரமாக இடம் கேட்டுத் தங்கத் தோன்றியது.

    திருச்சி செல்லும் எல்லாரும் அவசியம் வை.கோ வீட்டு ஜன்னலை விசிட் செய்ய வேண்டும்.

    காணக்கண் கோடி வேண்டும்.”
    - அப்பாதுரை//

    -=-=-=-=-=-=-=-

    என் வீட்டு ஜன்னல் கம்பி
    ஒவ்வொன்றாய்க்
    கேட்டுப்பார் !

    [ இறுதிப் பகுதி 3 of 3 ]

    அனுபவம் By
    வை. கோபாலகிருஷ்ணன்,

    நேற்று வெளியாகி விட்டது.

    இது எல்லோருடைய தகவலுக்குமாக மட்டுமே.

    இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2013/02/blog-post_5541.html

    பதிலளிநீக்கு
  32. || இது கூட தெரியவேண்டாம்? காட்சி அமைக்கிறார்களாம் உலகத் தரத்துக்கு!).

    ஒன்று தெளிவானது. தமிழ்ப்படம் இந்திப்படத் தரத்துக்கு வரவே இன்னும் நாளாகும். ||

    ரொம்பச் சரி.
    இதைத்தான் நானும் சொல்லியிருக்கிறேன்.!

    நம்மவர்கள் நம்மவரை ரொம்பவும்தான் தூக்குகிறார்கள்.

    அப்புறம் உங்களது புகைப் படக் கருவியும் அதன் கண்களும் அதன் பின்னான உங்கள் கண்களும் அருமை.

    கூடவே போட்டோஷாப் வேலைகளும்..

    அந்த மும்பை ஏர்போர்ட் படம்...அழகு!

    நன்றி.

    பதிலளிநீக்கு