2013/02/14

ஓருயிர் சீருடல்


    ன்னுடன் வளர்ந்தவர்கள் சிலரை, வழக்கம் போல், இந்த முறையும் சந்தித்தேன். இருந்திருந்து ஆஸ்திரேலியா ரமேஷை சந்திப்பேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆஸ்திரேலியா ரமேஷ் என்னுடன் பம்மலில் வளர்ந்தவன். அவன் பெயர்க்காரணம் அவனுக்கே தெரியாது. ஆஸ்திரேலியா எங்கே இருக்கிறது என்று கூட அறியாதவன். இன்றைக்கும் அப்படியே.

பம்மல் பஸ் நிலையம் அருகே மசாலா பால் அருந்தியபடி, நாங்கள் செய்த சில சுவாரசியமான சேட்டைகளைப் பற்றி அளவளாவினோம் (சுவாரசியமான சொல், starkly onomatopoeic).

க்ரிகெட் மேச் ஒன்றில் தகராறு வந்து அதற்குப் பழி வாங்க எண்ணி வசியம் வைத்தது.. பொழிச்சலூர் தர்மனை அழைத்து வந்து ஏவல் வைத்தது... எல்லாம் பேசினோம். "ஒரு கண்ணு வெளில வந்துரும் போலிருந்துச்சு.. நைட்டு முழுக்க ரத்தம் கக்னாண்டா பேமானி.. நானும் காட்டான் சுரேசும் ஜன்னல் வழியா பாத்தோம்டா.." என்று இத்தனை வருடம் கழித்தும் அடித்துச் சொல்கிறான் ரமேஷ். 'அத்தனை ரத்தம் கக்கினால் உயிருடன் இருந்திருக்கமாட்டான், இப்போது கேனடாவில் வசிக்கும் எங்கள் அந்நாள் வில்லன்' என்பது இப்போது எனக்குப் புரிகிறது. ரமேஷ் இன்றைக்கும் ஏவல் பில்லி என்று நம்பத் தயாராக இருக்கிறான். புரிதல்களைத் தவிர்த்ததே ரமேஷின் எளிமையான வாழ்வுக்குக் காரணமோ?

அப்போதெல்லாம் ரமேஷ் வெடவெடவென்று கொத்தவரங்காய் போலிருப்பான். இப்போது எடை கூடியிருக்கிறான். மசாலா பால் குடித்தாலே மூச்சு வாங்குகிறது அவனுக்கு. "மச்சி.. நீ அப்படியேக்றடா.. எனக்கு உடம்பெல்லாம் வெயிட் போட்ருச்சு" என்றான்.

"உடம்புல தாண்டா வெயிட் போடும்.. அது சுபாவம்" என்றேன்.

    என் பழைய நண்பர்கள், தொடர்புகளில் பலர் எடை மிகுந்திருக்கிறார்கள். in fact, சென்னையில் போன முறை சந்தித்தவர்களில் பலர் இந்த முறை எடை கூடியிருக்கிறார்களோ என்றுத் தோன்றியது. 'சத்துள்ள சாப்பாடு தான் சாப்பிடுறேன், இருந்தாலும்.." என்றார் ஒரு நண்பர். "தினம் பச்சைக் காய்கறி சேக்குறேன், உப்புக் காரம் இல்லாமே சாப்பிடுறேன்.. ஸ்வீட் சாப்பிடுறதில்லே.. இருந்தாலும்" என்றார் இன்னொரு நண்பர். "நீ வெயிட் கியிட் போடாம அப்படியே இருக்கியே? வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுறியா?" என்றார் கரிசனத்துடன் ஒரு உறவினர்.

    ணவை மையமாகக் கொண்டது நம் கலாசாரம். யார் வந்தாலும் "என்ன சாப்பிடுறே? காபியாவது சாப்பிடு" என்பதே நம் விருந்தோம்பலின் ஆதாரம். யாரைப் பார்த்தாலும் "ஒரு நாள் வீட்டுக்குச் சாப்பிட வாங்க" என்பது involuntary அழைப்பு. வீட்டிலோ அம்மா அப்பா பிற உறவுகளின் நெருக்கடி. ஒன்று "சாப்பிட்டியா?" என்பார்கள். அல்லது "சாப்பிடுறியா?" என்பார்கள். "உக்காரு, எப்படி இருக்கே, வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க?" all come later. முதலில், "என்ன சாப்பிடுறே?". see what i mean? அப்படி இருக்கையில் சத்துள்ள உணவாக இருந்தால் என்ன, எதுவாக இருந்தால் என்ன?

சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடுவதால் எடை குறையும் என்பது, ஏறக்குறைய 'விஸ்வரூபம் உலகத்தரப் படம்' என்பது போல.. 'எல்லாவற்றையும் படைத்து காத்து ரட்சிக்கும் ஒருவர் ஒளிந்திருக்கிறார்' என்பது மாதிரி. உண்மைப் பொட்டலத்தில் வழங்கப்படும் அப்பட்டமான பொய்.

எதைச் சாப்பிட்டாலும்... சத்துள்ளதோ இல்லையோ, சுவையுள்ளதோ இல்லையோ... எடை குறையாது. எதையாவது சாப்பிடுவதால் எடை குறையும் என்றால், எனக்குத் தெரிந்த வரை, அது பேதி மருந்து மட்டுமே.

இன்றைய இளைஞர்கள் பலர் எடை கூடுவது பற்றி கவலைப்பட்டோ படாமலோ செய்வதறியாது இருப்பது வருத்தமாக இருக்கிறது. இன்றைய சூழல் ஒரு காரணம் என்றாலும், 'எடையைக் குறைப்பேன்' என்றக் குறிக்கோளும் செயல் தீவிரமும் முனைப்பும் இல்லாததே இவர்களில் பெரும்பாலோரின் சிக்கலுக்குக் காரணம் என்று நினைக்கிறேன்.

    டைக் கட்டுப்பாடு என்பது உணவு, உடல், உள்ளம் என மூன்று பரிமாணங்கள் கொண்டது. எடை கூடுவதும், நிற்பதும், குறைவதும் இந்த மூன்று பரிமாணங்கள் நம்மைக் கட்டி ஆள்வதிலோ அல்லது நாம் இந்த மூன்று பரிமாணங்களை அறிந்து ஆள்வதிலோ இருக்கிறது.

எடை கூடியிருந்தால் குறைக்க முடியும். எந்த வயதிலும். இதற்குத் தன்னம்பிக்கையும், சில புரிதல்களும் அவசியம்.
1. எடை ஒரு நாளில் கூடவில்லை; ஒரு நாளில் குறையப் போவதுமில்லை
2. எடை குறையவேண்டும் என்று உளமார விரும்பிச் செயலில் இறங்க வேண்டும்; ஆறு மாதங்களாவது தீவிரமாக இருக்க வேண்டும்

இருபது ஆண்டுகளுக்கு மேலாக, இடையில் ஆறு ஆண்டுகள் தவிர்த்து, இதுவரையில் என் எடையைத் தக்க வைத்திருக்கிறேன். குறைத்திருக்கிறேன். '98 வாக்கின் இடைப்பட்ட ஆறு ஆண்டுகள் எனக்கு ஒரு பாடம். எடை மிகக் கூடியிருந்தேன். உப்பியிருந்தேன் எனலாம். 'எடை கூட மாட்டேன்' என்பது மட்டுமல்ல, 'உடலைச் சீராக வைத்துக் கொள்வேன்' என்பது என் தினசரிச் சபதம். இந்தப் பின்புலத்தோடு, இனி நானறிந்த சில எடை குறைப்பு, தக்கவைப்பு ஆலோசனைகளை அவ்வப்போது இங்கே எழுதப் போவதாக இப்போதே எச்சரித்து விடுகிறேன்.

அறிவுரையோ ஆலோசனையோ வழங்க எனக்கு ஒரு தகுதியும் கிடையாது. இருந்தாலும் அதை நான் என்றைக்கும் ஒரு பொருட்டாக நினைத்ததே இல்லை. தகுதியில்லாமல் ஆலோசனை வழங்கி வருடக்கணக்கில் பிழைத்துக் கொண்டிருக்கிறேன் என்றத் தகுதியுடன், சில ஆலோசனைகளை முன்வைக்கிறேன். எடை குறைக்க விரும்புவோர் இதைப் பின்பற்றி எடை குறைந்தால் சந்தோஷப்படுங்கள். எடை குறையாவிட்டால் வருத்தப்படாதீர்கள். எடை கூடினால் மட்டும் சுந்தர்ஜி மேல் வழக்கு தொடருங்கள்.

என்ன ஆனாலும் சரி, எடை மிகுந்தவர்களைக் கிண்டலோ கேலியோ செய்யாதிருப்போம்; பரிகசிக்கும் எண்ணத்தைக் கூடத் தவிர்ப்போம்.

எடை மிகுந்தவர்களைக் கண்டால், "இங்க பக்கத்துல நல்ல ஹோட்டல் என்ன இருக்கு?" என்று கேட்காதிருப்போம்.
        'அவன் எப்பவும் ரெண்டு டிகெட் வாங்குவான்பா',
        'அவளை இப்பல்லாம் ப்ளேன்ல செக்-இன் பண்ண அலோ பண்றதில்லே, பேகேஜ் தான்',
        'அவன் எங்க ஜட்டி வாங்குறான்னு தெரியலியே?'
        'இப்பல்லாம் பெண்டாட்டியைச் சுத்தி வாக்கிங் போய்ட்டு வரதே எனக்கு எக்சர்சைஸ்'
போன்றக் கேலிகளை, வேண்டுமானால் ஒரு முறை மனதார சிரித்துவிட்டு, நிஜ வாழ்வில் யார் மீதும் பயன்படுத்தாதிருப்போம். seriously.

    யாரையாவது கேலி செய்தே ஆக வேண்டுமென்றால், இருக்கவே இருக்கிறார்கள் வக்கீல்கள்.. மருத்துவர்கள்.. கமல்ஹாசன்.
- வக்கீல் படிப்பை பத்து வருடங்களாக்க வேண்டும். இப்போதிருக்கும் வேகத்தில் போனால் கூடிய சீக்கிரம் உலகில் மனிதர்களை விட வக்கீல்கள் அதிகமாகி விடுவார்கள்

- ஒரு வக்கீல் உண்மை சொல்கிறார் என்பது அவருடைய அசையாத உதடுகளைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்

- தன் வக்கீலுக்கு தொலைபேசினான் நம்மாள். வக்கீல் ஆபீஸ் உதவியாளர், "அவரு போன வாரம் இறந்துட்டாரு" என்றார். மறு நாள் தொலைபேசினான். மறுபடியும் உதவியாளர், "அவரு போன வாரம் இறந்துட்டாருங்க" என்றார். நம்மாள் தினம் விடாமல் தொலைபேசினான். பத்து நாட்களுக்கு இதே பதிலைச் சொன்ன உதவியாளர் எரிச்சலுடன், "ஏன் தினம் போன் பண்றீங்க? அவரு இறந்துட்டாருனு தினம் சொல்றேனில்லே?" என்றார். "இல்லிங்க, தினம் ஒரு நல்ல செய்தி கேட்கணும்னு என்னோட கொள்கை" என்றான் நம்மாள்.

- க்ருஷ்ணா ப்ரெயின்ஸ் மூளைக் கடையில் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.தமிழ்ப் பதிவர்கள் மூளை கிலோ எட்டணா, தச்சன் மூளை கிலோ மூன்று ரூபாய், சார்டர்ட் அகவுன்டன்ட் மூளை கிலோ எட்டு ரூபாய், மருத்துவன் மூளை கிலோ இருநூறு ரூபாய், வக்கீல் மூளை கிலோ ஐநூறு ரூபாய் என்ற விலைப்பட்டியலைப் பார்த்த வாடிக்கையாளர் கடைக்காரரிடம், "என்னங்க இது வக்கீல் மூளை விலை ரொம்ப அதிகமா இருக்கே?" என்றார். "ஆமாங்க.. ஒரு கிலோ மூளை எடுக்க எத்தினி ஆயிரம் வக்கீலுங்க ஆவுதுனு உங்களுக்குத் தெரிஞ்சா இப்படி கேக்க மாட்டீங்க" என்றார் கடைக்காரர்.

- அட்டைப்புழுவுக்கும் வக்கீலுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்று அழுக்கில் திரியும் அருவருப்பான ரத்தம் உறிஞ்சும் பிராணி. இன்னொன்று ஒருவகை நீரினம்.

- ஒரு வக்கீல் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டால் pollution. ஆயிரம் வக்கீல் அப்படிச் செய்தால் அது solution (விசுவுக்குக் காணிக்கை).

மருத்துவர்களை... என்ன? ஓகே.. இன்னும் ஒன்றே ஒன்று.
சாகக் கிடந்த ஒரு கழக அரசியல்வாதி தன் நண்பர்களான வக்கீல், மருத்துவர், கமல்ஹாசன் மூவரையும் அழைத்தார். ஆளுக்கு ஒரு சிறு பெட்டியைக் கொடுத்து, "இதில் லட்ச ரூபாய் பணமும் பத்து பவுன் தங்கமும் இருக்கிறது. நான் இறந்ததும் என்னுடன் இதைப் புதைத்து விடுங்கள். ஒரு வேளை நான் நரகத்துக்குப் போனால் வெளியே வர எனக்குத் தேவைப்படும்" என்றார். அரசியல்வாதி இறந்து சில மாதங்கள் பொறுத்து மூவரும் சந்தித்துக் கொண்டார்கள்.

"உண்மையைச் சொல்லணும்னா.. பெட்டியைப் பாத்ததும்.. மேலை நாடுகள்ல episodic rationalism பத்தி எடுத்துச் சொன்ன கருத்துக்களின் அடிப்படையில இருபது வருசமா நான் என்னுடைய சொந்த ஆழ்மனதுல உருட்டிக்கிட்டிருந்த சுயமறுப்பு சிந்தனைகள ஒட்டிப் பிறந்த ஒரு எண்ணக்கதிர்.." என்று கமல்ஹாசன் தொடங்கியதும் வக்கீலும் மருத்துவரும் குறுக்கிட்டனர். "நிறுத்துபா.. அப்ப பணம் தங்கம் எல்லாத்தியும் நீயே எடுத்துக்கிட்டியா?" என்றனர்.

"இல்லை. யாருனா கேஸ் போட்டுறப் போறாங்களேனு ரெண்டு ரூவா நோட்டுல, 'ஆனைக்கு ஆரிங்குத்த் தீனி போடுவார்?' என்று ஒரு கவிதை எழுதி வச்சேன்" என்றார் கமல்ஹாசன்.

சற்றுப் பொறுத்து மருத்துவர், "நானும் ஐநூறு ரூபாய் தவிர மிச்ச எல்லாத்தியும் எடுத்துக்கிட்டேன்.." என்று தலைகுனிந்தபடி சொன்னார்,

வக்கீல் சீறினார். "அடப்பாவிகளா! நான் மட்டுந்தான் இங்கே சொன்னபடி செஞ்சவன் போலிருக்கு..."

கமல்ஹாசனும் மருத்துவரும் வியந்தனர். "ஆமாய்யா! சவப்பெட்டி வெயிட்டாயிரும்னு மொத்தத் தொகைக்கும் என் சொந்த செக் ஒண்ணை எழுதி வச்சேன்" என்றார் வக்கீல்.

32 கருத்துகள்:

  1. //எதையாவது சாப்பிடுவதால் எடை குறையும் என்றால், எனக்குத் தெரிந்த வரை, அது பேதி மருந்து மட்டுமே. //

    ஹா ஹா ஹா ! :)))

    பதிலளிநீக்கு
  2. //மேலை நாடுகள்ல episodic rationalism பத்தி எடுத்துச் சொன்ன கருத்துக்களின் அடிப்படையில இருபது வருசமா நான் என்னுடைய சொந்த ஆழ்மனதுல உருட்டிக்கிட்டிருந்த சுயமறுப்பு சிந்தனைகள ஒட்டிப் பிறந்த ஒரு எண்ணக்கதிர்.." என்று கமல்ஹாசன் தொடங்கியதும் //

    அப்பாதுரை ராக்ஸ்!

    பதிலளிநீக்கு
  3. நீண்ட காலம் கழித்து வலை உலா வந்தால் இன்று என் வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிக்க வைத்து விட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
  4. சுவாரஸ்யமான எழுத்து.தொடர்ந்து வருவேன்

    பதிலளிநீக்கு
  5. ஹைய்யோ!!!!!

    // எதையாவது சாப்பிடுவதால் எடை குறையும் என்றால், எனக்குத் தெரிந்த வரை, அது பேதி மருந்து மட்டுமே. //'

    இந்திய மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் அதிலும் முக்கியமாக சென்னை மக்கள் இதை சாப்பிடாமல் இருக்கணுமுன்னு இப்பவே 'ஆண்டவனை' வேண்டிக்கிறேன்.

    ஏற்கனவே 'ஒன்'னால் நடைபாதை(??)யில் கால் வைக்க முடியலை. இதுலே ரெண்டுன்னா......... பேஜார் போங்க:(

    பதிலளிநீக்கு
  6. விஸ்தாரமாக விளையாடியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. இருடலாக இல்லாமல் சீருடலாக இருக்க வேண்டும் என்றி மிகச் சிறப்பாக சொல்லி இருக்கீங்க.நன்றி.

    வக்கீல் ஜோக்குகளுக்கு சிரிச்சு மாளலை.

    பதிலளிநீக்கு
  8. சிரிச்சு மாளலை....

    எடையை குறைக்க உதவும் ஆலோசனைகளுக்கு காத்திருக்கிறேன்....:)

    பதிலளிநீக்கு
  9. // சவப்பெட்டி வெயிட்டாயிரும்னு மொத்தத் தொகைக்கும் என் சொந்த செக் ஒண்ணை எழுதி வச்சேன்" என்றார் வக்கீல்.//

    ஹானஸ்ட்லி, இதே போல் ஒரு ஜோக்கை எனக்கு முன்னமேயே படித்த நினைவு இருக்கிறது. எங்கேன்னு தேடுகிறேன். பர்ஹாப்ஸ் இன் அ வெஸ்டர்ன் ஜர்னல்.

    அது இருக்கட்டும். மருத்துவர் சரி. வக்கீல் சரி. கமலஹாசன் எதுக்கு நடுவிலே வர்றாரு ?

    இந்த ட்யூப் லைட்டுக்கு புரியறாப்போல எழுதுங்க...

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    பதிலளிநீக்கு
  10. //ஆமாங்க.. ஒரு கிலோ மூளை எடுக்க எத்தினி ஆயிரம் வக்கீலுங்க ஆவுதுனு உங்களுக்குத் தெரிஞ்சா இப்படி கேக்க மாட்டீங்க" என்றார் கடைக்காரர்.//

    ஹிஹிஹிஹி

    எடை குறையவென்று எடுக்கும் முயற்சிகளால் எடை அதிகம் தான் ஆகிறது! :)))))

    இருக்கிறபடி இருக்கட்டும்னு விட்டால் சில சமயம் எடை குறைகிறது. பொதுவாகப் பெண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகள், மன அழுத்தம்(இந்த மன அழுத்தம் ஆண்களுக்கும் பொருந்தும்) இவையே எடை கூடுவதற்கோ குறைவதற்கோ காரணம் என எண்ணுகிறேன்.

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. //ஹானஸ்ட்லி, இதே போல் ஒரு ஜோக்கை எனக்கு முன்னமேயே படித்த நினைவு இருக்கிறது. எங்கேன்னு தேடுகிறேன்.... //

    தொலைக்காட்சியில் ஒருவர் சொல்லிக் கேட்ட நினைவும் உண்டு.

    அவர் பெயர், மொத்தம் ஐந்து எழுத்துக்கள்.

    முதல் இரண்டு எழுத்து அவர் அப்பா பெயர்

    அடுத்த மூன்று எழுத்து அவர் பெயர்.

    பதிலளிநீக்கு
  13. /எல்லாவற்றையும் படைத்து காத்து ரட்சிக்கும் ஒருவர் ஒளிந்திருக்கிறார்' என்பது மாதிரி. உண்மைப் பொட்டலத்தில் வழங்கப்படும் அப்பட்டமான பொய்./ இத்தகைய புரிதல்களைத் தவிர்த்ததே ரமேஷின் எளிமையான வாழ்வுக்குக் காரணமோ?/எனக்கு ஏனோ GOEBELS நினைவு வருகிறது. மேலும் Blessed are those that are ignorant.!

    பதிலளிநீக்கு
  14. பெயரில்லாபிப்ரவரி 16, 2013

    'ஓருயிர் சீருடல்' தலைப்பே கலக்கல். 'காதலர் தினம்' அன்று இந்த பதிவு வெளிவந்ததால் 'ஓருயிர்' என்று படித்தவுடன் ஏதோ காதலர் ஸ்பெஷல் பதிவு என்று நினைத்தேன். :)

    சுவாரசியமா எழுதி இருக்கீங்க. குண்டா இருக்கறவங்களை பத்தி பேசற கிண்டல் எல்லாம் கலக்கல். அதை விட கலக்கல் கமல்ஹாசன் பேச தொடங்கியதும் என்று எழுதி இருப்பது. சிரிச்சு மாளல. :))

    //எடை குறையவென்று எடுக்கும் முயற்சிகளால் எடை அதிகம் தான் ஆகிறது! :)))))//
    கீதா மேடம் ரொம்ப ரொம்ப சரி. :)))

    பதிலளிநீக்கு
  15. க்ருஷ்ணா ப்ரெயின்ஸ் மூளைக் கடையில் வியாபாரம் சுறுசுறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.தமிழ்ப் பதிவர்கள் மூளை கிலோ எட்டணா,/

    மிகவும் சுறுசுறுப்பாக - முக்காலமும் சிந்தித்து ஷார்ப்பாக இருப்பதாலா .??!!

    பதிலளிநீக்கு
  16. ஜீவி புதிரை யாராவது அவிழ்த்தாங்களா?

    பதிலளிநீக்கு
  17. பின்னூட்டங்களுக்கு மிக நன்றி.

    ஜோக்குகள் எல்லாமே recycled தான். இதே ஜோக்குகளை வக்கீலுக்கு பதிலா மருத்துவர்னு மாத்தி இன்னும் இரண்டு மாசம் கழிச்சு பதிவிடலாம்னு இருக்கேன் :)

    பதிலளிநீக்கு
  18. அப்பாதுரை கூறியது...
    ஜீவி புதிரை யாராவது அவிழ்த்தாங்களா?//

    //அவர் பெயர், மொத்தம் ஐந்து எழுத்துக்கள்.

    முதல் இரண்டு எழுத்து அவர் அப்பா பெயர்

    அடுத்த மூன்று எழுத்து அவர் பெயர்.//


    சுகி சிவம் ..!

    பதிலளிநீக்கு

  19. இராஜராஜேஸ்வரி மீண்டும் ஜீனியஸ் என்று நிரூபிக்கிறார்போல் தெரிகிறது. !

    பதிலளிநீக்கு
  20. அப்பாதுரை சார்?
    உங்க கூட பேசப் போறதில்ல இனிமேல்.

    பதிலளிநீக்கு
  21. அப்பதுரை அவர்களே! உலகனாயகன் மீது இவ்வளவு கோபம் ஏன்? ---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  22. பெயரில்லாபிப்ரவரி 19, 2013

    // உலகனாயகன் மீது இவ்வளவு கோபம் ஏன்? //

    தலைகீழா விழுந்து கிடக்கிற கரப்பான்பூச்சி யை ஹாஸ்யம் என்கிற பேர்ல அடிச்சு துவைக்கிறார்லே !! இது அவ்வை ஷண்முகிலேந்து
    தொடருது... க்ரியேடிவ் ஜீனியஸ் ஒருத்தன் தான் இதுபோல செய்யமுடியும்போல

    ஒரு நாள் செஞ்ச வினைக்கு அனுபவிக்கணும்லே....

    அதேன்.

    பதிலளிநீக்கு
  23. ஐயையோ.. ஒரு கோபமும் கிடையாது. கல்லெறிவது சுலபம் என்பதை நன்றாக அறிவேன். ஒரு காமெடி வாய்ப்பை இழக்க மனம் வரவில்லை, அவ்வளவு தான். this is in jest of a public profile, nothing personal.

    பதிலளிநீக்கு
  24. ஓகே.. க்ரியேடிவ் ஜீனியஸ்... ஹிஹி.. இதான் காமெடி.

    பதிலளிநீக்கு
  25. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (21.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி எழுதுகிறேன். நாளைய 21.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

    பதிலளிநீக்கு
  26. இராஜராஜேஸ்வரி சொன்னது

    அப்பாதுரை கூறியது...
    ஜீவி புதிரை யாராவது அவிழ்த்தாங்களா?//

    //அவர் பெயர், மொத்தம் ஐந்து எழுத்துக்கள்.
    முதல் இரண்டு எழுத்து அவர் அப்பா பெயர்
    அடுத்த மூன்று எழுத்து அவர் பெயர்.//

    சுகி சிவம் ..! //

    இராஜி மேடம்!

    இப்பொழுது தான் பார்த்தேன். எல்லா விவரங்களையும் விரல் நுனியில் வைத்திருப்பீர்கள், போலிருக்கு.
    பாராட்டுக்கள்.

    அந்த 'சுகி'யும், 'சு'-சுப்ரமணிய பாரதியையும், 'கி'- (கல்கி) கிருஷ்ண மூர்த்தியையும் குறிப்பதாக வாசித்துத் தெரிந்து கொண்ட நினைவு இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  27. சுகி சிவம் சரியான விடையா?
    இராரானா சும்மாவா?! மறுபடியும் மூக்மேல்விரல். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  28. மேலதிகத் தகவல்கள்: சுகி சிவத்தின் தந்தையார் சுகி சுப்ரமணியன். இந்த 'சுகி' தேர்வு அவரது தான். சென்னை வானொலியில் நாடக இலாகாவை திறம்பட நிர்வகித்தவர். நல்ல இலக்கிய ரசிகர்.

    பதிலளிநீக்கு
  29. விழுந்து விழுந்து சிரித்தேன் என க‌தைக‌ளில் ப‌டித்த‌திருக்கிறேன். 'பேதி மாத்திரை, க‌ம‌ல் க‌விதையும் செய்தியும்ம், அட்டைப்புழு க‌ம்பெரிஷ‌ன் என.... ரொம்ப‌ நாள் க‌ழிச்சு விழுந்து சிரிச்சேன் அப்பாஜி. எடை கூடினால்,அது ஏன் சுந்த‌ர்ஜி மீது ம‌ட்டும் வ‌ழ‌க்குத் தொடுக்க‌னும்...?


    பதிலளிநீக்கு
  30. உங்க அனுபவத்தில பார்த்தவங்க எல்லாம் 75% (என்னையும் சேர்த்து)
    ராங்க்சைட் ஆஃப் ஃபார்ட்டீஸ் துரை.:)

    நடைப் பயிற்சி இல்லாதது, கணினி முன்னால் சௌகர்யமான நாற்காலி,
    இரண்டு வேளை நல்ல காப்பி இன்னும் இத்யாதி வழக்கங்கள் எடை கூடலுக்குக் காரணம்.
    பதிவர் மூளை இவ்வளவு சீப்பா இருக்கே.வாங்க வேண்டியதுதான்.! பதிவும் பதில்களும் அதீத ஹாஸ்ய
    ரகம். ரொம்பப் பேரைச் சிரிக்க வைத்த உங்களுக்கு இந்த ரசனை நீடிக்க வாழ்த்துகள்:)

    பதிலளிநீக்கு