2012/06/06

நாட்பட



விழித்ததும் அவள் உடனிருப்பதை உணர்ந்தேன்.
எழ முயன்ற என்னை அழுந்தப் பிடித்தாள்.
"ஆ! வலிக்கிறது" என்றேன்.
உதறி எழுந்தேன்.
என்னுடன் கழிவறைக்குள் வந்தாள்.
"ஏய்.. வெளியே இரு" என்று அதட்டியபோது சிரித்தாற் போல் தோன்றியது.
காபி அருந்துகையில் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். முதுகை இறுக்கினாள்.
"என்ன இது? விலகு. நேரமாகிறது. போக வேண்டும்" என்றேன்.
அவள் இணங்கவில்லை.
"நானும் வருவேன்" என்றாள்.
பிறகு ஹெல்த்ப்லெக்சில் ஓடத் தொடங்கியதும் திடீரென்று காணாமல் போனாள்.
ஒழிந்தாள் என்று எண்ணினேன்.
இரண்டாவது மைலில் அவளைக் கவனித்தேன்.
உருவம் சுருங்கிக் கண்ணுக்கு எளிதில் புலப்படாமல், என் காலருகே ஓடிக் கொண்டிருந்தாள்.
"எந்த உருவிலும் வருவேன்" என்றுச் சிரித்துச் சட்டென்று என் காலைக் கடித்தாள்.
துடித்தேன்.
கிக்பாக்சிங் பயிற்சியின் போது விரல்களைக் கடித்தாள்.
தினப்பழக்க நீச்சலின் போது, கூடவே வந்து என் கால்களை நீருள் இழுத்தாள்.
வீடு திரும்புகையில் தொல்லை பொறுக்காமல், "யார் நீ? ஏன் என்னைத் தொடர்கிறாய்?" என்றேன்.
"எப்போதும் உன்னைத் தொடர்ந்தே வருகிறேன், நீ தான் என்னைக் கவனிக்கவில்லை" என்றாள்.
"ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்றேன்.
"அப்போது தானே கவனிக்கிறாய்?" என்றாள்.

15 கருத்துகள்:

  1. எடிபசுக்கு இது பரவாயில்லை. கொஞ்சம் புரிகிறது. பின்னூட்ட முடிகிறது! வகை : கவிதை?! மையக் கருத்தா?

    பதிலளிநீக்கு
  2. காபி அருந்துகையில் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். முதுகை இறுக்கினாள்.
    "என்ன இது? விலகு. நேரமாகிறது. போக வேண்டும்" என்றேன்.
    அவள் இணங்கவில்லை.
    "நானும் வருவேன்" என்றாள்.//

    ஹிஹிஹி, சூர்யா, ஜோதிகா காஃபி விளம்பரத்தைப் பார்த்திருப்பாளோ? :P:P:P

    பதிலளிநீக்கு
  3. அது என்ன லேபலில் கவதை??? இது கவிதை இல்லைனு சொல்றீங்களா? ஆனால் இது புரியுதே! :))))))))

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. ஒரே பின்னூட்டம் ரெண்டு தரம் வந்துடுச்சு. அதான் எடுத்துட்டேன். :))))))

    பதிலளிநீக்கு
  6. நாட்பட நாட்படத்தான் புரியுமோ !!

    பதிலளிநீக்கு
  7. அது எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்
    அது சொல்வது மிகச் சரி எனப் புரிகையில்
    கவிதை புரிகிறது

    பதிலளிநீக்கு
  8. //"ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்?" என்றேன்.
    "அப்போது தானே கவனிக்கிறாய்?" என்றாள். //

    எடிபஸ் மாதிரி இதுவும் இன்னொன்று.
    'பால்' மாறியிருக்கிறது; அவ்வளவு தான்!

    பதிலளிநீக்கு
  9. பின்தொடரும் எல்லாமே இப்படித்தானோ !

    பதிலளிநீக்கு
  10. பின்னூட்டமே கவிதை ரமணி. நன்று.

    பதிலளிநீக்கு
  11. உள்ளம் என்பது ஆமை பாடலில் வரும் - அது நாட்ப ட நாட்பட புரியம் - என்ற வரிகள் காதில் ஒலிக்கின்றன. சத்தியமாய் வதை செய்யவில்லை. கவிதை என்றே லேபில் போடுங்கள்.

    பதிலளிநீக்கு
  12. விடாது பின் தொடரும் வதைதானே கவிதை.

    அதன் வதை போல சுகமும் வேறேதுமில்லை.

    பதிலளிநீக்கு
  13. இது தான் ஊழிற் பெருவலியோ?

    ரசித்தேன் குறும்பரே!

    பதிலளிநீக்கு