2011/12/31
தமிழ்ச் சினிமா காதல் டூயட்கள் பற்றி ஆகஸ்டு மாதம் சில பதிவுகள் எழுதியிருந்தேன். சென்ற ஐம்பது வருடங்களின் சிறந்த தமிழ்ச்சினிமா காதல் பாடல்கள் பற்றி உங்கள் தேர்வுகளையும் கேட்டிருந்தேன்.
நான் ரசிக்கும் காதல் டூயட்களில் #2 இடத்தில் இந்தப் பாடல் என்று எழுதி நிறுத்தியிருந்தேன்.
பின்னூட்டங்களில் கிடைத்த உங்கள் தேர்வுகளில் சிலவற்றைத் தொகுத்து ஒரு பதிவும் எழுதியிருந்தேன் (நன்றி :-).
நான் ரசிக்கும் #1 காதல் டூயட் பாடல் பற்றிய பதிவோடு இந்த வருடத்துக்கு விடைகொடுக்க விரும்புகிறேன்.
பாடல், இசை, குரல், நடிப்பு, அலங்காரம், படப்பிடிப்பு என்று பல கோணங்களிலும் ரசிக்கக் கூடிய பாடல்களில் இது #1. ரசமான காதல் பாடலாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த ஒரு பாடலுக்காக மட்டும் கண்ணதாசனை அழைத்தார்களாம். காலத்தால் அழியாதக் காதல் மெல்லிசைக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தியை விட்டால் ஆளே இல்லை. சொக்கவைக்கும் காதல் டூயட்களுக்கு குரல் கொடுக்க, டிஎம்எஸ்-சுசீலாவை விட்டால் ஆளில்லை. தொடர்ந்து ரசிக்க முடிகிற காதல் ஜோடிகளுக்கு எம்ஜிஆர்-ஜெயலலிதாவை விட்டாலும் ஆளில்லை.
துள்ளும் இசை. பாடல் முழுதும் இழையூடும் spanish பாணி lilting guitar riff, மோக முத்தம் போலவே சிலிர்க்க வைக்கிறது. இந்தப் பாடலில், எம்ஜிஆர்-ஜெயலலிதாவின் ஆக்கிரமிப்பு திரையைவிட்டு மனதில் குடியேறிவிடுகிறது.
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டு ரசித்திருக்கிறேன் என்பதற்கு கணக்கே இல்லை. விடியோ வசதி கிடைத்ததும் எத்தனை முறை பார்த்து ரசித்திருக்கிறேன் என்பதற்கும். ஒவ்வொரு முறையும் ரசிப்பதற்குப் படப்பிடிப்பில் புதிதாக ஏதாவது தென்படுகிறது. இந்த முறை ஜெ தலையில் பதிந்திருக்கும் குட்டிக் குட்டி ரோஜாக்களை ரசிப்பதற்காகவே தொடர்ந்து மூன்று முறை பார்த்தேன் :).
ஒரு சிறப்பான ஆக்கத்தின் பின்னணியில் இருக்கும் கூட்டுழைப்பு, இந்தப் பாடலில் வெளிப்படுகிறது. சென்ற ஐம்பது வருடங்களின் சிறந்த தமிழ்ச்சினிமா காதல் டூயட்டுக்கான என்னுடைய தேர்வு இந்தப் பாடல்.
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
சினிமா-13 | 2012/12/31 | #1 தமிழ்ச்சினிமா காதல் பாட்டு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பதிவை படித்தாகி விட்டது. ஆனால் என்ன பாடல் என்று தெரியவில்லை. 'plug in installation failed' என்று பதிவில் வருகிறது. நீங்கள் எழுதி இருப்பதை வைத்து பார்க்கும்பொழுது இந்த பாடல் 'சின்னவளை முகம் சிவந்தவளை' என்ற பாடல் என்று நினைக்கிறேன். படம் தெரியாவிட்டாலும் பாடல் என்னவென்பதை தயவு செய்து பதிவில் எழுதுகிறீர்களா?
பதிலளிநீக்குஅப்பா! கடைசியாக நீங்க சொல்லிவிட்டீர்கள். :) இந்த பதிவிலாவது 'எங்கள்' ஸ்ரீராம் ம்ம்ம்ம்.....பார்க்கலாம்!
பதிவை படித்தாகி விட்டது. ஆனால் என்ன பாடல் என்று தெரியவில்லை. 'plug in installation failed' என்று பதிவில் வருகிறது.///
பதிலளிநீக்குRepeat, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே
பதிலளிநீக்கு//ஜெ தலையில் பதிந்திருக்கும் குட்டிக் குட்டி ரோஜாக்களை ரசிப்பதற்காகவே தொடர்ந்து மூன்று முறை பார்த்தேன் :). //
பதிலளிநீக்குஒரு வேளை 'நாணமோ இன்னும் நாணமோ' பாடலா?
இந்த வீடியோ இப்படி படுத்தறதே! சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்கலையே!
இவ்வளவு உசுப்பி .... பாடல் கேட்க முடியவில்லையே .. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குதடங்கலுக்கு வருந்துகிறேன் :)
பதிலளிநீக்குபழைய flash playerஐயே சேர்த்துவிட்டேன். இப்பொழுதாவது இயங்குகிறதா பார்ப்போம் :-)
('ஜெ தலையில் பூ' - இதை வைத்துப் பாடலைக் கண்டுபிடித்த meenakshi .. உங்கள் சினிமா பொது அறிவு பிரமிக்க வைக்கிறது!!)
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
பதிலளிநீக்குஇனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
அப்பாஜி...மனம் நிறைந்த 2012ன் அன்பு வாழ்த்துகள்.புரியிற மாதிரி எழுதுங்க புரியாதவங்களுக்காகவும்!
பதிலளிநீக்குஒரு பாட்டு மட்டும்தானா.எம்.ஜி.ஆர் பாட்டு ஒண்ணு மட்டும் போதுமா !
அப்பா ஸார்... இப்போது என்னால் ‘நாணமோ’ ஆயிரத்தில் ஒருவன் படப் பாடலைப் பார்த்து ரசிக்க முடிந்தது. உங்களைப் போலவே நானும் பார்க்காமலே மீனாக்ஷி மேடத்தை வியக்கிறேன். என்னைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆரின் பாடல்கள் எப்போது கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காதவை. உங்களுக்கு இதயம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குMissing Plug in.என்றிருக்கிறது. நாணமோ பாடல் தானா ?
பதிலளிநீக்குYou tube search சென்று நாணமோ பாடலைத் தேடி , confirm செய்து கொண்டேன் .
பதிலளிநீக்குமுழுமையாய் ரசித்தேன்.
நன்றி அப்பாஜி
அப்போலாம் ஜெ எவ்வளவு அழகா இருக்காங்க! ச! :)
பதிலளிநீக்குWish you a very Happy New Year!
அட வில்லன் கூட எவ்ளோ நல்லவரா இருக்காரு? 01:08-01:11 - நம்பியார் வந்து எட்டிப் பார்த்துவிட்டு விலகி ஒடுவதென்ன? மறுபடி 1 நிமிடத்தில் திரும்ப வந்து உறுதிபடுத்திக் கொண்டு :)
பதிலளிநீக்குஅருமை நண்பரே
பதிலளிநீக்குhttp://ambuli3d.blogspot.com