2011/06/16

காதல் செய்வீர்

வெத்து வேலை



சினிமா-5 | 2011/6/16 | காதல் செய்வீர் (அ) கணேசய்யர் கூத்து

சில பாடல்களின் ஓலிப்பதிவுக் குறைகளுக்கு மன்னிக்கவும்

காதலன்: பின்னி வைத்த கூந்தலில் முல்லைப் பூவைச் சூடினால் கன்னி நடை பின்னல் போடுமா?
காதலி: மின்னலிடை வாடினால் கன்னி உந்தன் கையிலே அன்னம் போல சாய்ந்து கொள்ளுவேன்..

காதலி: ஒருவர் மட்டும் படிப்பது தான்..?
காதலன்: வேதம்
காதலி: இருவராகப் படிக்கச் சொல்லும்...?
காதலன்: காதல்

பொருள் கொண்ட கேள்வி பதில்கள் காதலில் சுகமானவை. பொருளற்றக் கேள்வி பதில்கள், தீவிர சுகமானவை. நிற்க, நான்கைந்து பேராக வேதம் படிப்பது அருமையான அனுபவம் என்பேன் ;-).

சாம்பார் என்றால் என்னவோ சற்று நெருக்கமாகத் தோன்றுகிறது. இருந்தாலும் கண்ணியப் போலீசினருக்காக முடிந்தவரை ஜெமினி கணேசன் என்றே எழுதுகிறேன். அவருக்கு மட்டும் எப்படித்தான் காதல் பாட்டுக்கள் அமைந்தனவோ! கூத்தடித்திருக்கிறார். கொடுத்து வைத்தவர்?

அப்பொழுதெல்லாம் மாம்பலம் போவதென்றால் பெரிய விஷயம். மின்சார ரயில், ரத்னா கபேயில் சாப்பிடக் காசு என்று குதூகலமாகப் போகும். பதின்ம நாட்களில் ஒரு முறை தென்னிந்திய இந்திப் பிரசார சபாவுக்குப் பணம் கட்டப் போக நேர்ந்தது. கழகங்களுக்குத் தெரியாமல் இந்தி படித்த ஆயிரத்தில் ஒருவன் நான். பரீட்சைக்குப் பணம் கட்டிவிட்டு நண்பர்கள் நால்வரும் பாண்டி பஜார் பக்கம் நடந்தபடி, எங்கேயோ தொலைந்து போனோம். திடீரென்று பார்த்தால் ஜெமினி கணேசன். அசல்! நண்பன் சும்மா நிற்காமல், "டேய். சாம்பார்டா! சாம்பார்டா!" என்று அலறினான். அவனுக்கு உற்சாகம். ஆனால் சாம்பார் பார்டிக்கோ கடும் கோபம்! சபையோர்களே, அன்றைக்கு ஓட்டத்தை நேரில் பார்த்தவன் சத்தியமாகச் சொல்கிறேன்: தெருமுனை வரை திட்டிக்கொண்டே அசுர வேகத்தில் எங்களைத் துரத்தினார் காதல் காட்டான்.

காட்டான் இல்லையா, பின்னே? டூயட் பாடுகிறேன் என்று தேவிகாவை இப்படித் துரத்தியிருக்கிறாரே? பா...வம், தேவிகா! கால் நகம் கூட வலித்திருக்குமே? (தேவிகா சூடியிருப்பது என்ன பூ? செம்பருத்தியா, ரிப்பன் பூவா? எத்தனை அழகு! பூவைச் சொன்னேன்.)

56 கருத்துகள்:

  1. கணேசஅய்யர் கூத்து! செம டைட்டில்! என்னம்மா யோசிச்சிருக்கீங்க! :)
    பாடல்கள் எல்லாமே அருமை! சின்ன சின்ன கண்ணிலே.....இந்த பாடலின் ஆரம்ப இசைக்காகவே பலமுறை கேட்கலாம், வைஜயந்தி மாலாவின் எழிலான நடனத்துக்காகவே பலமுறை பார்க்கலாம். பொதுவாகவே பீ.பீ.எஸ். பாடல்களை இரவில், தனிமையில் கேட்க மிகவும் பிடிக்கும். அதிலும் 'ஒடிவது போல் இடையிருக்கும்.....' பாடலின் நடுவில் வரும் இசை இரவின் அழகை இன்னும் ரசிக்க வைக்கும். இன்னும் கூட சில பாடல்களை சேர்த்திருக்க கூடாதா என்றுதான் கேட்க தோன்றிற்று. ஆனால் அதே நேரம் எவ்வளவு சேர்த்தாலும் இன்னும் கொஞ்சம் என்று கேட்டுக் கொண்டேதான் இருக்க தோன்றும், எல்லையே இல்லாமல்.

    பதிலளிநீக்கு
  2. சந்தோஷமாயிருக்கு அப்பாஜி.நன்றி நன்றி.இரவின் மடியில் கேக்கிறதுபோல இருக்கு.இன்னும்
    5-6 பாட்டைச் சேர்த்திருக்கலாமே.
    கணேசய்யர்தானே ஆடுறார்.

    அந்தக் காலத்தில நல்லாவே சைட் அடிச்சிருக்கீங்க.ஏன்னா ரசனை அப்பிடி !

    பதிலளிநீக்கு
  3. பொய்க் குரலாக இருந்தாலும் கேட்க சுகமாக இருந்தால் சரி.... ஏ எம் ராஜா பாடல்களில் நிறைய நல்ல பாடல்கள். பி பி எஸ் பாடல்கள் சுகம் ரகம். சமீபத்தில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பாட முயற்சித்தது பாவமாக இருந்தது. கூட இருந்தே கே ஜெ வொய், பி எஸ், ஏ எல் ஆர் எழுந்து நின்று கை தட்டி மரியாதை செய்தார்கள். நிறைய பாடல்கள் போடுவதை விட இன்னும் ரெண்டு கேட்கலாமோ என்னும்போது நிறுத்தினால்தான் சுகம். நல்ல சாப்பாடு போல...! அவரவர் மன லிஸ்ட்டில் ரெண்டு பாடல் அவரவர் கலெக்ஷனிலிருந்து எடுத்துக் கேட்டு விட்டுப் போக சௌகர்யம்!

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லாஜூன் 16, 2011

    நான்கைந்து பேராக வேதம் படிப்பது அருமையான அனுபவமா? மோசமான ஆளுயா! அதிகம் எத்தனை பேருடன் வேதம் படித்திருக்கிறீங்கள்? இல்லை, நானும் கேட்கிறேன்?

    பதிலளிநீக்கு
  5. தேவிகா ஒடிவது போலவா இருக்கிறார்கள்... தமிழர்களுக்கு பிக் இஸ் பியூட்டிஃபுல் ;-))

    பதிலளிநீக்கு
  6. அருமை. ஒரு அழகான மனிதர் குறித்த ஞாபக பகிர்வு.

    பதிலளிநீக்கு
  7. எம்.ஜி.ஆர்,சிவாஜி எனும் இரண்டு மிகப் பெரிய ஆளுமைகளின் நடுவே, அலட்டிகொள்ளாமல் தன் தடம் பதித்தவர் ஜெமினிகணேஷ். மிகப் பிரபலமான பல பாடல்கள் அவருக்கு வாய்த்தன.பாவம் அவரைபோய் சாம்பார்ன்னு சொன்ன உங்களை எனக்கே துரத்தணும் போல இருக்கு. அவருக்கு இருக்காதா? மாட்டியிருந்தா சாம்பார் வடை இல்ல ஆகியிருப்பீங்க. தேவிகா அக்கா சிவாஜிக்கு தான் நல்ல ஜோடி.
    பாட்டெல்லாம் முத்து முத்து...

    பதிலளிநீக்கு
  8. மூன்றாம் சுழி கண்ணில் படுவதே இல்லை... பாட்டெல்லாம் கேட்டுவிட்டு வருகிறேன்...

    பதிலளிநீக்கு
  9. ஜெமினியும் ஏன் அவர்கள் மகள்களும் கூட பேட்டியில் சொல்லியிருக்கிறார்கள்.. ’’எல்லாம் அப்பாவை நாடித்தான் வந்திருக்கிறது..அப்பா எதையும் நாடிச்செல்லவில்லை’’... நல்ல அப்பா... காதல் மன்னன்.

    எது எப்படியோ.. பி.பி.எஸ் காதுக்கு இரவு விருந்து...

    பதிலளிநீக்கு
  10. நாலு நல்ல விஷயம் சொல்லி கமலஹாசனை வெச்சு கூப்பிட்டாலும் வராத மைனர்... கா...ன்னவுடனே ஓடி வந்துட்டாரு... ( ரொம்ப நாளச்சு கலாய்ச்சு ... மோகன்ஜி துணைக்கு வாங்க... )

    பதிலளிநீக்கு
  11. //தமிழர்களுக்கு பிக் இஸ் பியூட்டிஃபுல் // அது குஷ்புவுக்கு முந்தய நூற்றாண்டு

    பதிலளிநீக்கு
  12. வருக meenakshi, ஹேமா, ஸ்ரீராம், RVS, தமிழ் உதயம், மோகன்ஜி, பத்மநாபன், ...

    பதிலளிநீக்கு
  13. RVS.. விஷயத்தையே மாத்திட்டீங்களே? ஒடிவது போல் இடைன்னா எதுக்கு உவமைனு நெனச்சீங்க? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க, புரியும். இல்லைனா, மறுபடியும் தேவிகாவைப் பாருங்க.. எனக்கே வெக்கமா இருக்கு :)

    பதிலளிநீக்கு
  14. மோகன்ஜி.. நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் :)
    சாம்பார்னு அவருக்குப் பெயர் வந்தது ஏன்? எனக்கென்னவோ இதில் சாதிப் பொறி பறக்குதுனு தோணுது.. சும்மா வத்தி வச்சுப் பார்ப்பமே.. i mean, காண்போமே?

    பதிலளிநீக்கு
  15. போட்டீங்களே போடு பத்மநாபன்.. அவரு அதுக்கெல்லாம் வரமாட்டாரு.. பக்கத்து வீட்டு மாமியைப் பத்தி அடுத்து வெண்பா எழுதலாம்னு இருக்கேன்.. நிச்சயம் வருவாரு.

    பிக் இஸ் ப்யூடிஃபுல்.. பட்டர் பிஸ்கெட் இஸ் நாட்.

    பதிலளிநீக்கு
  16. /// எனக்கென்னவோ இதில் சாதிப் பொறி பறக்குதுனு // நடுவுல ஓரு விழாவுல கலைஞர் , ஏதோ ஓரு சமன்பாடு சொல்லி ஜெமினி தமக்கு சொந்தக்காரர்ன்னு சொன்னார் .. அப்புறம் சாம்பாராவது மோராவது எல்லாம் அவியல் தான் ...

    பதிலளிநீக்கு
  17. அவியலுக்கு சாதியில்லையா என்ன?

    பதிலளிநீக்கு
  18. தெரியலையே .. எனக்கு பகுத்தறிவு பத்தாது

    பதிலளிநீக்கு
  19. எல்லாம் ஒரு மார்க்கமாத்தான் போய்க்கிட்டிருக்கு.. ஜெமினி எதுலயாவது ஜாதி வித்தியாசம் பாப்பாரா? அவரை சாம்பார்ன்னா...எப்படி?

    பத்து ஆர்.வீ.எஸ் வம்புக்கு போகக் கூடாதுன்னு தான் பாக்குறேன்.. சமீபமா அவரை அடிக்கடி சந்திக்கிறேன் "பிக் இஸ் பியூட்டிஃபுல் ". அவரோட தாரக மந்திரமாத்தான் தெரியுது.. அவரு வாங்கியிருக்குற D'ZIRE கார் கூட BIG தான். பேரப் பாருங்க 'டிசையர்'.. மைனர் ரசனையே தனி.
    நாம அவரு மாதிரியா? ANYRTHING IS BEAUTIFUL தானே நம்ம பாலிசி?. எதுன்னாலும் ஓ.கே! ஏதோ ஒண்ணு!

    பதிலளிநீக்கு
  20. ஞாயிற்றுக்கிழமைல இது போல ஒரு டிஸ்கஷன்.. அடடா... அற்புதம்..

    ஒரே நேரத்துல மூணு பேரை சமாளிக்கறது ரொம்ப கஷ்டம். முயற்சி செய்து பார்க்கறேன்.. ஒவ்வொருத்தரா பார்ப்போம்.

    அப்பாஜி! புரிஞ்சுகிட்டேன். இப்ப எனக்கு வெக்கமா இருக்கு... ;-)) அப்படியும் இடை ஒடியும் படியா சுமையா எதுவும் தெரியலையே... ஞானக் கண்களுக்கு தெரியுமோ?

    பத்துஜி! நக்மா, நமீதா, ஷகீலா, தீபா, அனுராதா, என்று வரிசை ஒரு மைல் நீளத்துக்கு நிக்கிது.. பேரை எழுதும்போதே வார்த்தை யெல்லாமே தடி தடியாத் தெரியுதுங்கோ..... தமன்னா, சிம்ரனை பிடிக்கறவங்க கூட மா. மலைகளை ரசிக்க தவறுவதில்லை. அந்தக் காலத்திலேயே சரோஜாதேவி ரொம்ப ஒல்லி!!!! அப்ப தயிர்சாதம் அப்படின்னு சொன்னா... அதுக்கும் சா.பொறி இருக்கா?

    மோகன்ஜி! வேணாம்.. சேப்பாயி உங்களை மன்னிக்க மாட்டாள். அடுத்த முறை ஏரியாவிற்கு வரும் போது ஆசைப்பட்டு ஒரு சேஞ்சுக்கு உங்க மேல ஏறிக்கப் போறா ஜாக்கிரதை... பிக் இஸ் பியூட்டிஃபுல் அப்படின்னு ஒத்துக்கோங்க.. எதுன்னாலும் ஓ.கே ன்னு சொல்லி வீணா வீட்ல உதை வாங்கப் போறீங்க.. அப்பாஜி ஏத்தி உட்டுட்டு போய்டுவார்... யார் அவதிப் படறது..

    அன்புடன்,
    லோகஷேமத்திர்க்காக ஆர்.வி.எஸ்.

    பதிலளிநீக்கு
  21. ஆர்.வி.எஸ் ..லிஸ்டே மலைக்க வைக்குது..அதுல நமீதா தவிர மற்றவர் எல்லாம் சென்ற நூற்றாண்டு...பெரும்பான்மை தமிழ் சமுதாயம் ஒல்லி பியூட்டிக்கு மாறிவிட்டார்கள்...

    பதிலளிநீக்கு
  22. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  23. மக்களே! அந்தக்கால தமிழ் இயக்குனர்களின் புத்திசாலித்தனத்தை ஏன் புரிஞ்சிக்க மாட்டீங்கறீங்க?..

    ரசிகர்கள் நடிப்பில் மட்டுமே முழுக்கவனம் வைக்க வேண்டும் எனும் உயரிய நோக்கத்துடனே கொஞ்சம் பூசினாப்புல கதாநாயகிகளை தேர்வு செய்தார்கள். இன்னிக்கு கூட அவர்கள் பலரின் நடிப்பு மனசில் நிக்குதா இல்லையா.. கலைக்கண்ணே இல்லையா உங்களுக்கு... காமாலக்கண்ணா இல்ல இருக்கு.

    கவிஞர் என்னவோ ஒடிவதுபோல் இடையிருக்கும் இருக்கட்டுமேன்னு பாட்டைப் போட்டுட்டு போயிட்டார். அதுக்காக 'இஞ்சு' டேப்பை கையில வச்சுகிட்டு அலைஞ்சா எப்படி?

    ஆர்.வீ.எஸ்ஸோ' பெரிதினும் பெரிது கேள்'என்கிறார்.
    இதுல்லாம் ஞாயமா க்கீதா?

    6/19/2011

    பதிலளிநீக்கு
  24. எல்லா கருத்தையும் படிச்சேன். கொஞ்சம் புரிஞ்சுது. கொஞ்சம் புரியலை. ஆனாலும் அந்த 'நீக்கப் பட்ட கருத்துரை' நீக்கற அளவுக்கு என்னவா இருக்கும்னு மனசு அடிச்சுக்குது.

    பதிலளிநீக்கு
  25. ப்ரிய ஸ்ரீராம்! "நீக்கப் பட்ட கருத்துரை" ஒரு 'எபெக்டு'க்காகத் தான்.ஹி..ஹி

    அதப் போட்டிருக்கலாம் தான்.. அப்புறம் ஆர்.வீ.எஸ் அவரோட கொள்கையை மாத்திக்கிடுவார்.. இந்த அண்ணன் பேர்ல அவருக்கு அத்துன மருவாதி!

    பதிலளிநீக்கு
  26. ஆண்டாண்டு காலமாக அருந்தமிழ் ரசிகர்களின் கலைக்கண் அப்படித்தான் இருந்தது...
    சமீபத்தில் தான் ஒல்லி ராணிகளின் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது... அதனால் தான் அந்த லிஸ்ட் கொடுத்தேன்..

    இன்ச் டேப் பற்றி "புதிரா..புனிதமா" புகழ் மறைந்த மருத்துவர் மாத்ருபூதம் சொன்னது ஞாபகம் வருகிறது.... என்னைவிட பெரியவர்கள் பலர் நடமாடும் இடம் என்பதால்....... அந்த நகைச்சுவையை விட்டுவிடுகிறேன்... மனிதர் சுவாரஸ்யம் குன்றாமல் அந்த டாக்டர் பெண்மணியை பக்கத்தில் உட்காரவைத்துக்கொண்டு பாட்டு ஜோக் என்று அலசினார்... வேறு திசையில் போயிட்டேனோ..... விட்டுடுவோம்.....

    ஸ்ரீராம்.. உங்கள் பங்குக்கு ஏதும் இல்லையா...

    பத்துஜி.. மாற்றம் என்பது மானிடத் தத்துவம்.. மாறும் உலகின் மகத்துவம் அறிவோம்.. அடேங்கப்பா... எந்த நேரத்துல என்ன வசனம் வருது பாருங்க.. சென்ற நூற்றாண்டு என்பதை விட... உங்கள் நூற்றாண்டு என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்....

    மோகன் அண்ணா! எப்போதுமே உங்களிடம் எனக்கு தெண்டம் சமர்பித்த விஞ்ஞாபனம் தான்....... இலக்கியங்களில் இதுபோல நிகழ்வுகள் இருந்தால் அள்ளிவிட்டால் என்னைப் போல இளங்காளைகள் பொறுக்கிகொள்வோம்.... நன்றி...

    கனேச்சைய்யரை கிளப்பி விட்ட ஆளை காணோமே...... கொடியிடை நாயகிகள் நடித்த படத்தேர்வில் இருப்பாரோ?

    ஆவலுடன் ஆர்.வி.எஸ்.

    பதிலளிநீக்கு
  27. //இதுல்லாம் ஞாயமா க்கீதா?//
    என்னை மிரட்டுவதற்காக கடைசி வார்த்தையை பிரயோகித்திருக்கிறார்
    மோகன் அண்ணா! புரிந்து கொண்டேன்... இனிமேல் அடங்கிவிடுவேன்.. ;-))

    பதிலளிநீக்கு
  28. இடை ரசிகப் பெருமக்களே.. 'ஒடிவது போல் இடை' இஞ்ச்டேப்புக்காக எழுதினதில்லீங்க.. வேணும்னா அந்த வரியைப் பாடுறப்ப சா.. ஜெமினியோட பாட்டுல கண் பார்வை வீச்சை இன்னொருக்கா பாத்துருங்க.

    RVS.. என்னா? சுமை தெரியலியா... ஊகூம்.. இது வேறே கேஸ் :)

    பதிலளிநீக்கு
  29. கலைஞர் கமென்ட் படித்தேன் பத்மநாபன். யோசிக்கணும். இதுல பாருங்க, இந்த சா.. ஜெமினி கணேசன் எனக்கும் தூ-ரத்து உறவு. அதை வச்சுகிட்டு கலைஞரை உறவு கொண்டாடினா உயிலில் எதுனா எழுதி வைப்பாரோ? அய்யய்யோ சிபிஐ துரத்துற மாதிரியே இருக்கே..

    பதிலளிநீக்கு
  30. மோகன்ஜி.. யாருங்க க்கீதா?

    பதிலளிநீக்கு
  31. நமீதா தவிர மத்தவங்க போன நூற்றாண்டா? அப்ப நாங்க எந்த நூற்றாண்டு பத்மநா? ஜெயமாலினி எந்த நூற்றாண்டு சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
  32. ஜெயமாலினி பெயர் சொல்லாமல் அடக்கிவாசிச்சேன் ..நீங்க சொல்லிட்டிங்க..இனி அவரை அடக்கறது கஷ்டம்....

    பதிலளிநீக்கு
  33. தேவிகா பேரழகி இல்லாவிட்டாலும் 'சற்றே பெரிய' அழகி என்றுதான் நான் நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  34. கவிஞர் இடை எப்படி இருக்க வேண்டும் என்ற தன் ஆசையை சொன்னால் அதை உங்கள் விருப்பத்துக்கு அடுத்த பக்கத்திலிருந்து பார்த்து அர்த்தம் கொண்டு வருகிறீர்கள்...நான் பாட்டுக்கு தேமே என்று ஆர்ட்டிச்ட்டைப் பார்க்காமல் பாட்டை மட்டும் ரசித்து விட்டுப் போனேன். இப்படி விவாதம் வருமென்று நினைக்கவில்லை. அப்பாதுரை எக்ஸ்ட்ரா லார்ஜ் பற்றி ஆர் வி எஸ் பக்கத்தில் சொல்லியிருந்தது ஞாபகம் வந்த போதே இங்கு ஜெமா பற்றி இழுத்து விட்டீர்கள். சமீப கால லிஸ்ட்டில் ரம்பா ஜோதிகா போன்றோரை விட்டு விட்டதை நினைவு படுத்துகிறேன். குறிப்பை கிரண்...!

    பதிலளிநீக்கு
  35. 'பெரிய அழகி' சரியே :) தேவிகாவின் கண்கள் படத்தில் எத்தனை பெரிதாக இருக்கின்றன!

    பதிலளிநீக்கு
  36. ஸ்ரீராம், உங்க கமென்ட் படிச்சுட்டு எதுக்கு ஒரு தடவை ஆர்டிஸ்டை பாத்துருவம்னு போய் வந்தேன். வேறே எதாவது விவாதம் வந்தா தயாரா இருக்கலாம் பாருங்க.

    கொடி இடைன்றாரு rvs.. எல்லாமே 'ஒல்லி' என்ற இஞ்ச்டேப் பொருளில் எடுத்துகிட்டா எப்படினு கேக்கத் தோணுது. கொடியிடைனாலும் ஒல்லியென்று பொருளில்லை. கவியரசு சும்மாவா? மின்னலிடை, கொடியிடை, பிடியிடை (யானைனும் ஒரு பொருள்), துடியிடை, ஒடியிடைனு அங்கங்கே பொருத்தமா பாடியிருக்காருனு நினைக்கிறேன்.

    இந்த நூற்றாண்டுக்கு வந்து rvs பட்டியலை கொஞ்சம் பார்த்துட்டு வரலாம்னு பாத்தா பாழாப்போன டைம் மெசின் ஜெமா நூற்றாண்டுலயே நிக்குது, என்ன செய்ய? ஜெகன்மோகினி விடியோ ஒளிச்சு வச்சாலும் தானா எடுத்துட்டு வந்துருது.

    பதிலளிநீக்கு
  37. //பெரிய அழகி' சரியே :) தேவிகாவின் கண்கள் படத்தில் எத்தனை பெரிதாக இருக்கின்றன! //
    இதை இதை இதைத்தான் எதிர்பார்த்தேன்... அகன்ற விழிகள் அவருக்கு... அவங்க பொண்ணு கனகாவுக்கும் அப்படித்தான்.. ;-))
    ஜிலுஜிலு ஜெயமாலினி... ஹும்.... யப்பா.... போதும்... ;-))
    க்கீதா... முதல் 'க்' கை நீக்கினால் என்னுடைய வாமபாகத்தின் பெயரின் வாமபாகம்.. ;-))

    பதிலளிநீக்கு
  38. நான் அண்ணாநகரில் இருக்கும்போது ஸ்ரீகாந்த் என்ற ஒரு நண்பன் தேவிகாவுக்கு கோவிலே கட்டும் அளவு தீவிர ரசிகன். ஸ்க்ரீன் முச்சூடும் அவரே இருப்பதால் அப்படி அவனுக்கு அவரை பிடித்ததோ தெரியவில்லை. அவர் நல்ல அழகு என்பதில் எனக்கும் உடன்பாடு தான். நீலவானம் படம் பாருங்கள்.

    இப்போதைய ஸ்ரேயே போல் ஒடிந்து விழும் நடிகைகளை விட அந்தக்கால பப்ளிமாஸ் பெட்டெர். இப்போதைய "எங்கேயும் காதல்" பட்லி நன்றாய் இருப்பதாய் உள்மனசு வெளிபடியாய் சொல்லுகின்றது !!

    தமிழர்களுக்கு சாவித்திரி, தேவிகா, ராஜஸ்ரீ, ஜெயந்தி, சரிதா, குஷ்பு, கிழவி அஞ்சலி தேவி, ஜெ.ஜெ என்று அப்படிதான் இருந்தார்கள். ஸ்ரீதர் தான் முதல்முதலில் காஞ்சனா என்று ஒரு ஒல்லிப்பிச்சானை கொடுத்து நமக்கு பழக்க படித்தினார்.

    சரி சரி, பாடல் நான் தினமும் கேட்பது தானே அதான் அதைப்பற்றி ஒன்று பெரியதாய் எழுதவில்லை.

    அதுசரி, நமீதாவுக்கு தனி இடுகை இட்ட ஆர்.வி.எஸ் இப்படி சொல்லலாமா ?

    பதிலளிநீக்கு
  39. //RVS கூறியது...அகன்ற விழிகள் அவருக்கு... அவங்க பொண்ணு கனகாவுக்கும் அப்படித்தான்.. ;-))//

    என் அத்திம்பேர் அப்போதெல்லாம் அடிக்கடி சொல்லுவார். "டேய், கனகா ந.தி / தே..வின் கூட்டு தயாரிப்பு என்று !"

    பதிலளிநீக்கு
  40. நான் ஏதோ சினிமாவில் பார்த்த தேவிகா என்றால்..தேவிகாவின் குடும்பத்தையே தெரிந்து வைத்திருக்கிறீர் rvs?

    பதிலளிநீக்கு
  41. தோ பார்யா. ஆபரேசன் அறுவைனு கையை ஒடிச்சிக்கிட்டாரு. தேவிகா நமீதான்னதும் ஓட்யாந்துட்டாரு.. அந்த அறுவைக்கு இந்த அறுவை மேலா சாய்?

    பதிலளிநீக்கு
  42. // ந.தி / தே..வின் கூட்டு தயாரிப்பு என்று !"//சினிமா உலகத்தை வைத்து ஓரு மகாபாரத கதையே எழுதலாம் போல .....

    பதிலளிநீக்கு
  43. சாம்பார் பரவாயில்லை! எம்.ஜி.ஆர். காதலில் வன்முறையல்லவா இருந்தது?

    பதிலளிநீக்கு
  44. தேவிகா உண்மையிலேயே பெரிய அழகி தான் என்பதற்கான ஆதாரம்

    http://www.youtube.com/watch?v=rA1cuzhcTfQ

    பதிலளிநீக்கு
  45. @bogan
    தெய்வமே! சிந்தை தெளிந்தேன்! ;-))

    பதிலளிநீக்கு
  46. ஆர் வி எஸ் 'பெரிய'ரசிகர் என்று முன்பே சொன்னேனா இல்லையா?

    பதிலளிநீக்கு
  47. எம்ஜிஆர் காதலில் வன்முறை.. சுவையான கருத்து சென்னைப் பித்தன்.

    பதிலளிநீக்கு
  48. சரியாகச் சொன்னீர்கள் bogan.
    youtube மிக மெதுவாகத் நினைவேறுகிறது. rvs.. கொஞ்சம் exit பண்ணுங்க.

    பதிலளிநீக்கு
  49. அப்பாதுரை அவர்களே! வயசு வித்தியாசம் பார்க்காமல் முழு முழு கெட்டவார்த்தை விஷயங்களை எவ்வளவு நாசூக்க எழுதறீங்கப்பா! சில சங்கேத வர்த்தைகள் (ந .தி. கூட்டுதயாரிப்பு ) புரியமாட்டேங்குது. ஒரு நோட்ஸ் போட்டால் நல்லது---காஸ்யபன்

    பதிலளிநீக்கு
  50. // நோட்ஸ் போட்டால் நல்லது // நோட்ஸ் போட்டால் நோட்டிஸ் வரும் .. அவர் ஏற்கனவே சிபிஐ கிலியில் இருக்கிறார் ...ஓரளவுக்கு அடக்கியே வாசிக்கலாம் .....

    பதிலளிநீக்கு
  51. //சென்னை பித்தன் சொன்னது…
    சாம்பார் பரவாயில்லை! எம்.ஜி.ஆர். காதலில் வன்முறையல்லவா இருந்தது? //

    நேற்று எங்கள் ஊரில் சன் டிவியில் "குடியிருந்த கோயில்" படம் - நீங்கள் சொன்னது போல் எம்.ஜி.யார் ராஜஸ்ரீயை வன்மையாய் தான் காதலிக்கின்றார் !! அங்கு ஒரு அடி, இங்கு ஒரு கிள்ளு, அப்படி ஒரு குத்து என்று. அந்த பம்ப்ளிமாசும் அவர்மேல் விழுந்து விழுந்து நடிப்பு வேறே. இதில் கொடுமை என்னவென்றால் பண்டாரிபாய் அம்மாவாக நடித்தாலும் உறவின் உணர்வுகளை கொச்சை படுத்தியதுபோல் இருக்கு !! எம்.ஜி.யார் பாணியில் எல்லாம் டபுள் ஒகே !

    பதிலளிநீக்கு
  52. //அப்பாதுரை சொன்னது… தோ பார்யா. ஆபரேசன் அறுவைனு கையை ஒடிச்சிக்கிட்டாரு. தேவிகா நமீதான்னதும் ஓட்யாந்துட்டாரு.. அந்த அறுவைக்கு இந்த அறுவை மேலா சாய்? //

    ஏதோ நம்ம சப்ஜெக்ட் என்று வந்து கருத்துரைத்தால் இப்படியா கேள்வி கேட்டு மானத்தை வாங்குவது துரை ?

    பதிலளிநீக்கு
  53. காஸ்யபன் சார், "ந .தி. கூட்டுதயாரிப்பு" என்றால் என்னவென்று எனக்கும் புரியவில்லை; குழம்பிக் கிடந்தேன். நல்ல வேளையாக உலக விஷயம் தெரிந்த ஒருவர் விளக்கினார்.
    அப்படி ஒரு ரூட் போனது தெரியவே தெரியாமல் இருந்த எனக்கு இப்போது தான் ஞானம் தந்தார். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

    பதிலளிநீக்கு
  54. தேவிகா நமீதா 'நம்ம' சப்ஜெக்ட்னு ஆயிடுச்சா சாய்?.. பலே!

    பதிலளிநீக்கு
  55. //அப்பாதுரை சொன்னது… தேவிகா நமீதா 'நம்ம' சப்ஜெக்ட்னு ஆயிடுச்சா சாய்?.. பலே! //

    துரை

    "நம்ம" என்று உன்னையும் சேர்த்து கொண்டபிறகு என்ன கவலை !!

    இன்றைய சூடான செய்தி தெரியுமா ? என்னுடைய கம்பெனி சி.இ.ஒ காலி. (இருபது மாதத்தில் கல்தா !). சி.இ.ஒ பதவி சூடானது தெரியும் - ஆனாலும் இவ்வளவா ? கொஞ்சம் யோசிக்கணும். ரிஸ்க் ரொம்ப ஜாஸ்த்தி இன்றைய காலத்தில்.

    இந்த எட்டு வருடத்தில் இது என்னுடைய நான்காவது !

    என்ன புதியவன் எனக்கு நன்கு பரிச்சியம் ஆனவர் அவ்வளவு தான் !

    பதிலளிநீக்கு
  56. அதி உச்சக்கட்ட இரசனையில் இருந்து எழுதியுள்ளீர்கள்போலும். மிக அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் எழுதப்பட்டுள்ள தங்களின் ஆக்கம் அருமை!...
    மிக்க நன்றி பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு