2011/05/15

அழகின் சிரிப்பு



தில்லி விமான நிலையத்தில் காத்திருந்தேன்.

சிகாகோ விமானம் தாமதமாகக் கிளம்புவதால் நிறைய நேரம் இருந்தது. லவுஞ்சில் சாயலாம் என்று ஒதுங்கினேன். பாதி ராத்திரி சாப்பிடப் பிடிக்காத எனக்கு அங்கே வெட்டிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்து அதிர்ச்சியாகிவிட்டது. இரவில் இப்படி வெறியோடு சாப்பிடுகிறார்களே என்று பயந்து வெளியே வந்தேன்.

சற்று நடந்த போது 3A கேட் அருகே வரிசையாகச் சாய்விருக்கைகளைக் கண்டு நின்றேன். ஐந்து பேர் கூட இல்லை. ஒரு வரிசையின் ஓரத்தில் ஒரு பெண்மணி புத்தகத்தால் முகத்தை மூடிக் கொண்டிருந்தார். 'இருபுறமும் இரண்டு இருக்கைகளாவது காலியாக இருக்க வேண்டும்' என்பது எனது இடம் பிடிக்கும் கொள்கையானதால், அந்தப் பெண்ணுக்கு எதிர் வரிசையில் அமர்ந்தேன். விமான நிலையத்தில் வாங்கிய புதுப்புத்தகம் ஒன்றைப் பிரித்து வாசனை பார்த்தேன்.

படிக்கத் தோன்றவில்லை. மறுபடி அந்தப் பெண்ணைக் கவனித்தேன். யாருடனோ செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். தற்செயலாக அந்தப் பெண்ணின் முகத்தைக் கவனித்தேன். அசந்து போனேன். அப்படி ஒரு அழகு! இருப்பத்தைந்து வயது இருக்கும் என்று நினைத்தேன். இரட்டைப் பின்னல் போட்டிருந்தார். இரட்டைப்பின்னலைக் கடைசியாகத் துவாபர யுகத்தில் பார்த்தது! அழகாக மையிட்ட கண்கள். காதுகளில் சிறு முத்துக்குடைகள் தலைகீழாகத் தொங்கின. தெரிந்த கழுத்தில் சிவப்போ வைலட்டோ மின்னியது. அவ்வப்போது கன்னத்தில் குழி விழ சிரித்தார். வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனை நேரம் அப்படிப் பார்த்தேனோ தெரியவில்லை. போன் பேசும் பொழுதே அந்தப் பெண் கடைக்கண்ணால் என்னைக் கவனித்ததையும் கவனித்தேன்.

சுதாரித்து முகந்திருப்பினேன். 'my goodness! என்ன செய்கிறேன்? எனக்கு என்ன வயது! சே! இப்படியா ஒரு பெண்ணைப் பார்வையால் விழுங்குவது?' என்று எனக்குள் நினைத்து குன்றினாலும், மறுபடி அந்தப் பெண்ணைப் பார்த்தேன். இப்போது செல்போனைக் காணோம். சும்மா நோட்டமிட்டுக் கொண்டிருந்தார். அருகே சென்று, "என்னை மன்னித்து விடுங்கள். உங்களை அப்படி வைத்த கண் வாங்காமல்.." என்றேன்.

"ஜொள் விட்டதற்கா?" என்றார் சரளமான ஆங்கிலத்தில்.

"தயவுசெஞ்சு மன்னிச்சுருங்க. உங்களைப் பார்த்ததும் எனக்கு ஒரு நடிகை, என்னுடைய அபிமான நடிகைகளில் ஒருவர், நினைவுக்கு வந்தது. அச்சு அவர் போலவே இருக்கிறீர்கள். i mean.. அச்சு உங்களைப் போலவே அவர் இருப்பார்" என்றேன்.

என்னைக் கண்ணால் வெட்டி, புருவத்தை வலிக்காமல் உயர்த்தி, கன்னத்தில் குழிவிழ இழைப் புன்னகை செய்தார். "i get it all the time" என்றார்

"no wonder"

கொஞ்சம் பொறுத்து, "நீங்கள் சொன்ன movie star, எனக்கு அத்தை பாட்டி முறை" என்றார்.

எனக்குச் சட்டென்று பேச்சு வரவில்லை. அவரை மறுபடி பார்த்து, "முகச்சாயல் அப்படியே இருக்கிறது" என்றேன். ஏன் இப்படி உளறுகிறேன்? சலித்து, "you made me go back in time" என்றேன். "உங்க முகம்... so captivating.. i mean.. in a good way.." மறுபடி வழிந்தேன். "please accept my apologies.." என்றேன்.

"thanks" என்றார். பிறகு அவரே மெள்ளப் பேசத் தொடங்கினார். indy அருகே ஒரு பிரபல பார்மசூடிகல் கம்பெனியில் வேலை பார்ப்பதாகச் சொன்னார். எம்பிஏ முடித்து வேலைக்குச் சேர்ந்து முதல் விடுமுறையில் இந்தியா போய் திரும்புவதாகச் சொன்னார். என்னைப் பற்றிக் கேட்டார். "நீங்களும் எம்பிஏவா? அட, அதே ஸ்கூலா? இவரைத் தெரியுமா அவரைத் தெரியுமா.." என்று கண்களை விரித்து.. ஆச்சரியப்பட்டு.. சிரித்துப் பேசி.. எனக்கு அவருடைய அத்தை பாட்டி நினைவு வந்துவிட்டது.

"என்னை மன்னிச்சுருங்க" என்றேன். "..to gawk at you like that.. i didn't mean to.. you must have thought..". கஷ்டம்! பிறகு தயங்கி, "please, let me make it up to you.. can i get you something?" என்றேன்.

சிரித்து, "well, if you must.. உங்க கிட்டே இருக்கிற புதுப் புத்தகத்தைக் கொடுங்க, வாங்கிக்கிறேன்" என்றார்.

புத்தகத்தைக் கவனித்திருக்கிறார்! அடிப்பாவி! ஜொள்ளுக்குப் பரிகாரம் புதுப்புத்தகமா? ம்ம்ம். "absolutely!" என்றேன். புத்தம்புது வோடவுஸ் ஆம்நிபஸ் தடிப்புத்தகத்தின் முதல் பக்கத்தில் கையெழுத்திட்டுக் கொடுத்தேன். "nice meeting you" என்று இடத்தை விட்டு நகர்ந்தேன்.

அவருடைய கண்கள் என்னைப் பின் தொடர்வது போல் தோன்றியது. அந்தக் கண்கள்! அந்தச் சிரிப்பு! அந்தக் கன்னக்குழி! முகத்தின் பொலிவு! என் வழியல்களைக் கொஞ்சம் கூடப் பொருட்படுத்தாத அவரின் demeanorல் இருந்தது தன்னம்பிக்கையா, attitudeஆ, அசாத்தியக் கௌரவமா?

என் கண்களுக்கு வேலியில்லை என்பது உறைத்தாலும், உலகில் அழகுக்கு அழிவேயில்லை என்று தோன்றியது.

குற்ற உணர்வுடன் ஒரு வித நிம்மதியும் பரவ லவுஞ்சுக்குள் நுழைந்தேன். இன்னும் தின்று கொண்டிருந்தார்கள்.

சினிமா-4 | 2011/5/15 | மதுபாலா


23 கருத்துகள்:

  1. ஜொள்ளுக ஜொள்ளிற் பயனுடைய ஜொள்ளற்க
    ஜொள்ளிற் பயனிலாஜ் ஜொள்

    நீங்கள் கலர்க்கலராய் பார்த்த பெண்ணை எங்களை கருப்பு வெள்ளையில் பார்க்கவைத்து விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. பாரதிதாசன் டைட்டில் தானே! ;-))

    பதிலளிநீக்கு
  3. அப்பாஜி...இந்தக் கதை நல்லாவே புரிஞ்சுது.அதுசரி....இந்தக் கதை வீட்ல தெரியுமா !

    பதிலளிநீக்கு
  4. ஆக நீதி...1. வெள்ளைக் கருப்பில் பதிந்தால் ரொம்ப அழுத்தமாக பதிந்துவிடும் ..மீள்வது கடினம்...

    2. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு சுவை // இன்னும் தின்று கொண்டிருந்தார்கள்//

    பதிலளிநீக்கு
  5. அளவாகத்தானே ஜொள்ளியிருக்கிறீர்கள்? ஜொள் விட வயதென்ன?! மதுபாலா பேத்தியா அவர்?

    பதிலளிநீக்கு
  6. //இரட்டைப்பின்னலைக் கடைசியாகத் துவாபர யுகத்தில் பார்த்தது!//

    nice. இரட்டைப்பின்னல் pidikkuma ungalukku?

    பதிலளிநீக்கு
  7. ஒரு ரசனையை ஜொள் என்று மக்கள் சொல்வதை வன்மையாய் ஆட்சேபிக்கிறேன்.

    அது எப்படி முதலாளி? ஏதோ லுக்கு விட்டமா நடையக் கட்டுனமான்னு இல்லாம சாரியெல்லாம் கேட்டுகிட்டு..

    கடைசியில மதுபாலா பேத்தி போல.

    மதுபாலாவைப் பார்த்த கண்களால் அதுபோல் இன்னொருவரா?

    ஹூஹும் ஏதோ சரியில்லை

    பதிலளிநீக்கு
  8. வாங்க RVS, யாதவன், ஹேமா, பத்மநாபன், சாய், ஸ்ரீராம், priya s, மோகன்ஜி, ...

    RVS, ஜொள் குறளா, பலே.

    ஹேமா, பொதுவில் வைத்த உரிமை (மீறல்?)அல்லவா இது?

    பத்மநாபன் - சரியாச் சொன்னீங்க. கருப்பின் அழுத்தம் கலரில் இல்லை.

    ஸ்ரீராம், privacy is an elastic fence என்றாலும் இதற்கு மேல் விவரமாக இழுக்க முடியாது என்று நினைக்கிறேன். (அளவோடு ஜொள்ளா? இதென்ன ஜொள்ளுக் கட்டுப்பாடு?)

    மோகன்ஜி, பாத்தமா நடையைக் கட்டுனமானு கெளம்பினா பேச முடியாதுங்களே? மன்னிப்பு கேட்டது அறிந்தே வெளிப்படுத்திய அனாகரீகத்துக்காக. பெண்ணழகு பிடிக்கும்; என்றாலும், வாழ்வில் இதுவரை இரண்டே முறை தான் இப்படிப் பெண்ணழகை ரசனை மீறிப் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். 1983ல் முதல் தரம். (காதலும் நட்பும் கெட்ட நாள், வேறே கதை) பிறகு சமீபத்தில்.

    பதிலளிநீக்கு
  9. // பிறகு சமீபத்தில்// அப்ப இது கதையில்லயா....இனி நிறைய கதை வரும்கிறிங்க...அது சரி அடுத்த தடவை இந்தியாவுக்கு விடுவாங்களா....

    பதிலளிநீக்கு
  10. அது வந்துங்க பத்மநாபன்.. 'பிறகு சமீபத்தில்' என்பது மட்டும் உண்மை. [இரண்டு வார்த்தை உண்மை சொல்லிட்டு, உண்மையே சொல்வேன்ன்னு சொல்லிக்கலாம் பாருங்க)

    பதிலளிநீக்கு
  11. இப்படி தான் நேற்று தென் கலிபோர்னியாவில் இருந்து வந்த விமானம் அங்கும் இங்கும் சுற்றி நியூ ஜெர்சி வரும் போதும் ராத்திரி பத்து மணி. முன் சீட்டில் ரெட் கலர் full length மார் மேலிருந்து ஆரம்பித்த அழகு பின் சீட்டில் இருந்து ஜொள்ளு விட்டு கடைசியில் முகத்தை பார்த்து நொந்த கதை போக்க இப்போ ரெண்டு பேக் அடிக்கறேன் பிரதர் !

    பதிலளிநீக்கு
  12. அன்புள்ள அப்பாதுரை, அவர்களுக்கு! டெல்லியிலிருந்து சென்னை செல்லும் ரயிலின் பெயரைத்தெரிவித்து ,வகுப்பு மற்றும் பெட்டி எண் ,படுக்கை எண் ஆகியவற்றியத்தெரிவித்தால் நாகபுரி ரயில் நிலையத்தில் உங்களைப் பார்ப்பேன் என்று சொன்னேன் . நீர் டெல்லி விமான நிலையத்தில் நடத்திய கூத்து இப்போதுதான் தெரிய வந்துள்ளது .தங்கள் மனைவி,மகள்,மகன் ஆகியொருக்கு தமிழ் மொழியை எழுதவோ ,படிக்கவோ தெரியாது என்பதை இறைவன் தங்களுக்கு அருளிய கொடையாகவே கருதுகிறென் . வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்.

    பதிலளிநீக்கு
  13. உண்மைதான் அழகுக்கு அழிவே கிடையாது
    ஜொள்ளர்களுக்கும குறைவே கிடையாது புவிமேல்)

    பதிலளிநீக்கு
  14. //kashyapan சொன்னது… அன்புள்ள அப்பாதுரை, அவர்களுக்கு! டெல்லியிலிருந்து சென்னை செல்லும் ரயிலின் பெயரைத்தெரிவித்து, வகுப்பு மற்றும் பெட்டி எண் ,படுக்கை எண் ஆகியவற்றியத்தெரிவித்தால் நாகபுரி ரயில் நிலையத்தில் உங்களைப் பார்ப்பேன் என்று சொன்னேன் . நீர் டெல்லி விமான நிலையத்தில் நடத்திய கூத்து இப்போதுதான் தெரிய வந்துள்ளது.//

    hahaha.... Super Sir.

    பதிலளிநீக்கு
  15. வாங்க அப்பாவி தங்கமணி, இராஜராஜேஸ்வரி, kashyapan, bogan, ...

    பதிலளிநீக்கு
  16. நல்ல கமெந்ட் போட்டீங்க kashyapan! கொடை என்பது இரண்டு பக்கமும் ஓடும் நதியாச்சே? அந்தப் பக்கக் கூத்தெல்லாம் இன்னும் ரெண்டுபடி மேலே.. சொல்றப்ப மட்டும் ஆம்பிளைங்களை ஜொள்திலகம் அது இதுனு சொல்லிக்குவாங்க.. :)

    பதிலளிநீக்கு
  17. நல்ல கதை. இதுல கஸ்யபன் சார் பின்னூட்டம் ரொம்ப சூப்பர்.

    என் கருத்து என்னவென்றால், நம்மூரில் இப்படி ஜெர்க் ஆகி விளக்கம் கொடுப்பவர்கள் உண்மையிலேயே நல்லவர்கள் அல்லது ஜொள்ளர்கள். அழகிய பெண் கட்டாயம் இதெல்லாம் கடந்து வந்திருப்பாள். புத்தகம் சல்லிசாக் கிடைச்சாச்சு. நிஜமா அத்தைப் பாட்டியான்னு யாராச்சும் நியாயப்படுத்தணுமா என்ன? :-)

    பதிலளிநீக்கு
  18. வாங்க கெபி. just a yarn, நீங்க சொன்னது சரி.

    பதிலளிநீக்கு
  19. வித்தியாசமான நடையில் அமைந்த கதை.!

    படிக்கும் போதே சிரிப்பலைகளையும் ஏற்படுத்தி விட்டன.

    நன்றி

    பதிலளிநீக்கு