2010/12/19

மரிஷ்காவின் பூதங்கள்

சிறுகதை


முன் கதை 1 2 3 4


தொலைவிலிருந்து பார்த்த போது ஒளிவட்டத்தின் கீழே தெரிந்த குழி, அருகில் வந்ததும் சமதளமாக இருந்தது. அண்மையில் குழிகள் இருந்தாலும் ஒளிவட்டம் தெரிந்த இடம் மட்டும், கூடுதல் கான்க்ரீட் இட்டு மெழுகியது போல் கடினமாக இருந்தது. புரியாமல் விழித்தேன். ஒருவேளை குதிக்கும் பொழுது பள்ளம் தோன்றுமோ என்று எண்ணித் தரையில் மெள்ள ஒரு காலால் அங்கங்கே தத்தினேன். சிறு வயதில் என் சகோதரிகள் தரையில் சதுரக்கட்டங்கள் வரைந்து ரைட்டா கொய்ட்டா என்று ஆடிய அசட்டுப்பெயர் ஆட்டம் நினைவுக்கு வந்தது. 'ஒருவேளை தவறாக ஒளியடித்ததோ, பக்கத்துக் குழியில் குதித்துப் பார்க்கலாமா?' என்று நினைத்த போது, "சீக்கிரம், அதுதான் சரியான பள்ளம். மூளையைப் பயன்படுத்து. நீ குதிக்க வேண்டிய குழி இன்னொரு பரிமாணத்தில், இணை அண்டத்தில் இருக்கிறது" என்ற கரப்பானின் குரல் மனதுள் கேட்டது. ஓ! எம்டிம்! சட்டென்று மாலை நினைவுக்கு வந்தது. தலை நிமிர்ந்த போது என்னைச் சுற்றி நான்கு புறங்களிலும் இருந்த குட்டிச்சாத்தான்களைப் பார்த்தேன். பாழும் குசாக்கள்! கரப்பான் வாய் திறக்காமல் சிறகடித்தது. சீக்கிரம்! குட்டிச்சாத்தான்கள் என்னை வைத்துக் காமெடி செய்கிறார்கள் என்று தோன்றினாலும், பள்ளத்தில் விழுவது போல் அழுந்தக் குதித்தேன்.

    ப்படியொன்றும் ஆழமாகத் தோன்றவில்லை. கண்களைத் திருத்திச் சுற்றிலும் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. பயந்தேன். கண்மூடித்தனமாகக் குதித்துவிட்டேனே, எப்படி வெளியே திரும்புவது என்று கரப்பான் சொல்லவில்லையே?! ஒரு வேளை குட்டிச்சாத்தான்கள் திடீரென்று மண்ணைப் போட்டு நம்மை மூடிவிட்டால்? பயத்துடன் மேலே பார்த்தேன். எரட்ஸ் மியுசீயத்தின் சுழலொளி விழுந்து விழுந்து போனதில் தலைக்கு மேலே வானம், காற்றில் படபடக்கும் கிழிந்த வேட்டியின் ஓட்டை போல் விட்டு விட்டுத் தெரிந்தது. குழியில் தான் குதித்திருக்கிறேன், சந்தேகமில்லை. கான்க்ரீட் தரையில் குதித்தும் மேலே தெரிந்த ஓட்டை ஆச்சரியப்படுத்தியது; திகிலும் வந்தது. முதல் முறையாக பேரலெல் யூனிவர்ஸ் பரிமாணத்துக்குள் போகிறேன். பொன்னாடை போர்த்தி மாலை போட்டு வரவேற்பார்களா என்று நினைத்து ஒரு நொடி கூட இருக்காது, என் மேல் ஒரு அசாதாரண உருவம் விழுந்து இருந்த மாலையையும் பறிக்கப் பார்த்தது. என் கழுத்திலிருந்த எம்டிமை இழுத்த உருவத்தை எட்டி உதைத்துத் தள்ளினேன். கீழே விழுந்த உருவம், புடலங்காய் போல் நெளிந்தது. பாம்பு! வந்த ஆத்திரத்தில் அதன் மேல் குதித்தேன். விலகிய பாம்பு சரேலென்று எழுந்துச் சாதாரணமாக நின்றது. "ஏய்" என்றேன். மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல், சினிமா எம்ஜிஆர் போல், "என்னை உன் தலைவனிடம் கொண்டு செல்" என்றேன்.

"தலைவி" என்ற பாம்பைச் சரியாகக் கவனித்தேன். பாம்பு போல் இருந்தாலும் செங்குத்தாக நின்று வளைந்தது. உடலெல்லாம் மீன் போல் செதிள்கள். பச்சைத் திரவம் போல் ஏதோ பளபளத்து ஒழுகியது. அதற்குள் இன்னும் சில பாம்புகள் அங்கே வந்து சேர்ந்து, "என்ன?" என்றன ஒருங்கே. எல்லாம் பச்சைப் பளபள. "அற்ப மானிடப் பதர். தலைவன் எங்கே என்கிறான்" என்று என் மேல் காறித் துப்பியது, முதலில் விழுந்த பாம்பு. "கா!" என்று செதிள் குலுங்கச் சிரித்தன அத்தனை பாம்புகளும். "முட்டாள், அண்டத்தையே ஆட்டிப்படைப்பது எங்கள் தலைவி தான். எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று தேவையில்லாமல் கவிதை சொல்லி, "மாலையைக் கொடு" என்று என் மேல் சீறின.

நான் ஒதுங்கி, "கா!" என்றேன். "முடியாது. என் மகனைப் பார்க்க வந்தேன். இங்கிருந்தால் எடுத்துப் போகிறேன். வழி விடுங்கள்".

"மகன், மகன், மகன்" என்று மற்ற பாம்புகள் அலறத் தொடங்கின. விசித்திரங்களுக்கு அளவே இல்லையே என்று நான் நினைத்த பொழுது, "முதலில் உன் மகனைப் பார்" என்று சிரித்தது பாம்பு. "மாலையைக் கொடு, உன் மகனைக் கொடுக்கிறோம்" என்றது. நான் எதிர்பாராத நேரத்தில் என் மேல் விழுந்த பாம்புகள், நான் சுதாரிக்கு முன்னர் என்னை வேகமாக இழுத்துச் சென்றன. வேறெதுவும் தோன்றாமல் எம்டிமைப் பிடித்தபடி சென்றேன்.

பத்து வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக என் மகனைப் பார்த்தேன். என் மகனே தான். சாயல் கொஞ்சம் தெரிந்தது. காணாமல் போன அன்றைக்கு இருந்த பதிமூன்று வயதுப் பையன் போலவே இருந்தான். வளரவே இல்லை! மற்றபடி விபரீதமாக மாறியிருந்தான்.

செவ்வகக் கல்படுக்கை ஒன்றின் மேல் நிர்வாணமாகக் கிடந்தான். படுக்கை அருகில் தொப்பை போட்ட ஒரு தடிப் பாம்பு நின்று கொண்டிருந்தது. சுற்றிலும் தீச்சட்டிகளும், புழு பூச்சிகளும், இறைச்சி போல் ரத்தம் கசிந்து கிடந்த பொருள்களும் குமட்டின. மிக மெலிந்திருந்தான். சதை வற்றி எலும்புகள் தெரிந்தன. கண்கள் செருகத் தொடங்கியிருந்தன. வாயோரம் பச்சைத் திரவம் கசிந்தது. "உன் மகனைப் பார். உன் எதிரிலேயே அவனைத் தின்னப் போகிறோம். அதற்காகத்தானே இத்தனை நாள் அவனைத் தினம் எங்கள் ரத்தம் ஒரு சொட்டுக் கொடுத்து ஊட்டமாக வளர்த்தோம்? உன் கண்ணெதிரில் அவனைச் சாப்பிடும் பொழுது, உன் சக்தி கரைவதைப் பார்க்க வேண்டும். எத்தனை யுகங்களாகக் காத்திருக்கிறோம் தலைவியும் நாங்களும்!" என்றது தடிப்பாம்பு.

அந்தக் கணத்தில் எனக்கு ஆத்திரம் வந்தது. மகனோ பாம்போ பேயோ பரிமாணமோ எதுவும் தோன்றவில்லை. ஒரு உயிரை, சிறுவனை, இப்படி வாட்டியெடுக்கிறார்களே என்ற ஆத்திரத்தில் "ஏய், தொப்பை! விடு அவனை!" என்று கத்தினேன்.

"விடுவதற்குத் தானே கடத்தி வந்தோம்?" என்று என் ரத்தம் உறையச் சிரித்தது தடிப் பாம்பு. "பத்து வருடமாக எங்கெல்லாம் விட்டிருக்கிறோம் பார்க்கிறாயா?" என்றபடி என் மகனைத் திருப்பியது. மகனின் பின்புறமெங்கும் வலுக்கட்டாய நுழைவுகளின் வடுக்கள். அதிர்ந்தேன். "கா!" என்று சிரித்தது பாம்பு மறுபடியும். "இவனை எங்க தலைவிக்கு பலி கொடுக்க, எங்களைப் போல மாத்த வேணாமா? போன பிறவியில சீக்கிரமே முடிஞ்சிருச்சு. இந்தப் பிறவியில கொஞ்சம் நாளாயிடுச்சு. இந்தா, நல்லாப் பாத்துக்க உன் மகனை" என்றபடி என் கண்ணெதிரிலியே அவனுள் மறுபடி நுழைந்து விலகியது. "கா, கா, கா" என்று சிரித்தது. நான் சுதாரிக்குமுன்னர் இன்னொரு முறை நுழைந்து விலகியது. தொடர்ந்து இன்னொரு முறை. மகன் துடித்தது தெரிந்தது.

எனக்கு ஆவேசம் வந்து கையில் கிடைத்த தீச்சட்டிகளை எடுத்து பாம்புகளின் மேல் எறிந்தேன். படுக்கையிலிருந்து தவறி விழுந்த பாம்பின் மேல் பாய்ந்து மிதித்தேன். சறுக்கி எழுந்தது பாம்பு. பிறகு, "பார்த்தாயா, உன் மகனை" என்றது. "மாலையைக் கொடு. நீ தப்ப முடியாது. உன்னையும் கட்டிப் போட்டு எங்கள் வழிக்குக் கொண்டு வருவோம். உன் மகனையே நழைந்து நுழைந்து அலுத்து விட்டது. உனக்குள் நுழைய வேண்டும், வா" என்று என்னிடம் சீறியது.

நான் பொருட்படுத்தாமல், எம்டிமைத் தொட்டுக்காட்டி நடுவிரலை நீட்டிப் பல்வெட்டினேன். படுத்திருந்த மகனை எழுப்பினேன். செருகிக்கிடந்தக் கண்களைத் திறந்து என்னைப் பார்க்க முனைந்தான். என்னவோ சொல்ல வந்தது புரிந்தது. என்ன சொல்கிறான்? நான் என்ன கேட்டும் அவனால் பதில் பேசக்கூடச் சக்தியில்லாமல் தவித்தான். ஏதேனும் சொல்லத் துணிந்த போது வாய் வழியே புகை போல் வர, மிகவும் வலியால் துடித்தான். "வேண்டாம், பேச வேண்டாம்" என்றேன். எப்படி இவனுடன் தொடர்பு கொள்வது?

என் மேல் பாய்ந்து கொண்டிருந்தப் பாம்புகளைத் தட்டி வீசினேன். ஒரு கையால் அவனை எழுப்பியபடி இன்னொரு கையால் அருகிலிருந்த தீச்சட்டிகளைப் பாம்புகள் மேல் வீசினேன். பலிக்கவில்லை. "முட்டாள்! இது இணையண்டம். இதெல்லாம் ஒன்றும் செய்யாது எங்களை" என்று சீறின. "மாலையைக் கொடு. உன் மகனை எடுத்துப் போ" என்றன ஒரே குரலில்.

தவித்தேன். என்ன செய்ய? என்ன செய்ய? என்னென்னவோ சொன்னாளே? என் உயிருக்குக் கேடலிஸ்ட் சக்தி உண்டென்றாளே? எம்டிம் வைத்து அலைவரிசை ஒத்துப் போகச் சொன்னாளே? மனதளவில் பேச முயல்கிறானா? மனதுக்கு என்ன ப்ரீக்வன்சி? எம்டிமை அசைத்தேன். கரப்பானிடமிருந்தோ மற்ற குசாக்களிடமிருந்தோ செய்தி எதுவும் இல்லையே? சே, இதென்ன எம்டிம் தேவைப்படும் பொழுது வேலை செய்யவில்லையே? மேட் இன் சைனாவா? எதேச்சையாக எம்டிமைத் தொட்டு மூச்சிழுத்த போது மகன் குரல் கேட்டது, "என்னைக் காப்பாற்று". வித்தை புரிந்ததும் சுலபமானது. மூச்சு விடும்பொழுது, "பயப்படாதே" என்று மனதுள் சொன்னேன். மறுபடி மூச்சிழுத்து அடக்கினேன். அவன் நினைத்தது தெளிவாகக் கேட்டது. "பத்து வருடமாக இங்கே என்னைப் படுக்க வைத்து சித்திரவதை செய்து வருகிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் நான் முழுவதுமாக அவர்கள் போல் மாறிவிடுவேன். என்னால் மரிஷ்காவுக்குப் பயன் இருக்காது. என்னைக் காப்பாற்று. என்னால் எழக் கூட முடியாது". இவனும் மரிஷ்காவைப் படர்க்கையில் பேசுகிறானே?

நாங்கள் பேசிக்கொண்டது தெரிந்தது போல் தடிப்பாம்பு அலறியது. எங்கிருந்தோ நூற்றுக்கணக்கான பாம்புகள் வந்தன. "கட்டிப் போடுங்க அப்பனையும். அவனையும் தயார் செய்வோம்" என்றது. பாம்புகள் நெருங்கவும் மகன், "சீக்கிரம். உன் ரத்தம், என்னைக் காப்பாற்று, சீக்கிரம்" என்றான்.

என்ன செய்ய வேண்டும்? மரிஷ்கா. மரிஷ்கா! ஹெல்ப்! என்ன சொன்னாள்? உன்னையே நம்பியிருக்கிறேன். உன் ரத்தம். நீதான் காப்பாற்ற வேண்டும். என் ரத்தம், சரிதான். ஆளாளுக்கு என் ரத்தம் என்றார்களே தவிர, உருப்படியாக ஒன்றையும் சொல்லாமலே போனதை நினைத்ததும் எரிச்சலாக வந்தது. என் கண்ணெதிரே என் ரத்தம் குற்றுயிராய்க் கிடக்கிறதே? என்ன செய்ய? சட்டென்று புரிந்தது. மரிஷ்காவுக்கு மனதார நன்றி சொன்னேன். சுற்றுமுற்றும் பார்த்தேன். ஒன்றையும் காணோம். முதலில் தயங்கினாலும் வேறு வழி தோன்றாமல், படுக்கையின் விளிம்பில் என் இடது முழங்கையை பலம் கொண்ட மட்டும் ஓங்கி அடித்தேன். இரண்டாவது அடியில் கை உடைந்து ரத்தம் தெறிக்கத் தொடங்கியது. என் ரத்தம் தெறித்த மறு கணமே பாம்புகள் விலகி ஓடின. நான் வெறியுடன் "கா!" என்றேன். மகனை என் இடது தோளில் சார்த்திக் கொண்டு, வலது கையால் என் உடைந்த இடது கையை ரத்தம் சொட்ட வீசியபடியே தாவித் தாவி, குதித்த இடத்துக்கு வந்து நின்றேன். பாம்புகள் ரத்தம் படாதபடிச் சற்றுத் தள்ளி நின்றாலும் துரத்தி வந்தன. தலை உயர்த்திப் பார்த்த பொழுது மேலே குழியின் வாய் தெரிந்தது. கண் இமைக்கும் பொழுதில் மேலே வந்தேன்.

    ரையில் குப்புற விழுந்தேன் மகனுடன். ஏழெட்டுக் குசாக்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன. குளவி, என் கையை நக்கி நக்கிச் சரிசெய்தது. நம்பவே முடியவில்லை. "என் மகனைச் சரி செய்ய முடியாதா?" என்றேன். "முடியாது. மரிஷ்காவால் மட்டுமே முடியும்" என்றது குளவி. என்னை நேராகப் பார்த்தது. நான் தலையாட்டிப் புன்னகைத்தேன். நன்றி சொன்னேன்.

மற்ற பூதங்கள் புடை சூழ நட்டுவாக்களி வந்தது. "நல்ல விருந்துக்கு நன்றி தலைவா" என்றது நட்டு. "உன்னைத் துரத்தி வந்த அத்தனை பாம்புகளையும் நானும் இவர்களும் சாப்பிட்டு விட்டோம். நல்ல பசி" என்று பச்சைப்புகை வெளிவர ஏப்பம் விட்டது. "நன்றி தலைவா, நன்றி தலைவா" என்று மற்ற பூதங்களும் பச்சைப்புகை விட்டன.

கரப்பான் என்னைப் பாராட்டியது. "ஏய், நான் தவித்த போது எனக்கு உதவி செய்திருக்கலாமே?" என்றேன்.

"பரிமாணங்களுக்கிடையே பேசுவதைக் கேட்க உன்னால் முடியாது. அதனால் தான் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. பயப்படாதே. இனிமேல் அந்தத் தொந்தரவு இருக்காது. மரிஷ்காவைச் சந்திக்கலாம், கிளம்பு" என்றது.

என்னையும் மகனையும் நான்கு புறமும் குசாக்கள் சூழ்ந்துகொள்ள, அவசரமாக என் வண்டிக்கு விரைந்தோம். மகனை முன்னிருக்கையில் சாய்ந்து உட்கார வைத்தேன். அருகிலேயே கரப்பானும் உட்கார்ந்தது. வண்டியைக் கிளப்பியதும், சொல்லி வைத்தது போல் இடி மழை தொடங்கியது. அகழாய்வுப் பிரதேசமானதால் வண்டியைக் கவனமாகச் செலுத்தினேன். ரமத்-கேன் பக்கமாகத் திரும்பியதும், "இது ஜெரூசலம் வழியல்ல" என்றது கரப்பான்.

"தேவையில்லை. என் மகனை மருத்துவமனையில் சேர்க்கப் போகிறேன். எனக்கு மரிஷ்கா தேவையில்லை. போதும் இந்த விளையாட்டு"

"இப்போது தான் விளையாடுகிறாய். மகனை மருத்துவரால் பிழைக்க வைக்க முடியாது. நடப்பவையெல்லாம் இந்த உலகத்து இயல்புக்கு எதிரென்று தெரிந்தும் ஏன் குதர்க்கம் பேசுகிறாய்? வண்டியைத் திருப்பு" என்றது கரப்பான். "திருப்பு தலைவரே!" என்றன பின்னிருக்கைப் பூதங்கள். "மருத்துவமனை வேண்டாம். மரிஷ்காவிடம் போ!" என்றான் மகன். "சீக்கிரம், சீக்கிரம், நேரத்தை விரயம் செய்யாதே" என்றது கரப்பான். "திருப்பு தலைவரே" என்ற பூதங்களின் பின்பாட்டுத் தொடர்ந்தது.

என் எரிச்சல் உச்சத்தைத் தொட்டது. "ஷடப்! யூ இன்விடியஸ் நேஸ்டி லிடில் மைன்ட் ஃபக்கர்ஸ்!" என்று கத்தினேன். "நீ!" என்றேன், மகனிடம். "இன்னொரு முறை மரிஷ்காவைப் படர்க்கையில் பேசினால் நானே உன்னைக் கொன்று விடுவேன். அம்மாவென்ற மரியாதை இருக்கட்டும்" என்றேன். கரப்பானையும் குசாக்களையும் எரித்து விடுவது போல் பார்த்தேன். "உங்களால் என்ன முடியுமோ செய்து கொள்ளுங்கள். இவனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்போகிறேன். இதால் தானே இத்தனைச் சச்சரவும்? சனியன், இதை ஒழிக்கிறேன்" என்று எம்டிமைக் கழற்றித் தெருவில் வீசினேன்.

அதற்குமுன் இல்லாத, அல்லது நான் கவனிக்காத, சாலைத்தடுப்பில் இடித்து வண்டி பல்டியடித்து அடுத்திருந்தப் பெரிய பள்ளத்தில் தலைகீழாக விழுந்தது.

    ண் திறந்தபோது எதிரே மரிஷ்கா புன்னகைத்து, "என்ன ஹீரோ, எப்படி இருக்கே?" என்றாள்.


(பூதத்தைப் பின்தொடர ►►)

13 கருத்துகள்:

  1. பயத்துடன் தொடர்கிறேன்.. அற்புதம், அருமை, செழுமை...

    திரும்பிப்பார்ககாமல் காத்திருக்கிறேன், அடுத்து வருவதைப் படிக்க..

    பதிலளிநீக்கு
  2. கதை எப்படி போகும் என்றெல்லாம் கற்பனை பண்ண முடியல. ஆனாலும் கதை வித்தியாசமான பாதையில் போகுது.

    பதிலளிநீக்கு
  3. பலே....கதைல எம் ஜி ஆர் லாம் வேறயா... எங்க போனாலும் மரிஷ்கா கிட்டயிருந்து தப்ப முடியாது போல...

    பதிலளிநீக்கு
  4. தலைவிப் பாம்பை எப்பிடி உருவகம் செய்திருக்கிறீர்கள்.அட...அட என்ன கற்பனை.பாம்பு,கரப்பான் பூச்சின்னு தூக்கம் கலைக்கிறதே வேலையாப் போச்சு அப்பாஜி.நடு நடுவில நல்ல பாட்டுக்களும் போட்டுவிடுங்க.
    ஜீ...ரிலாக்ஸ் ப்ளீஸ் !

    பதிலளிநீக்கு
  5. வாங்க வசந்தா நடேசன், தமிழ் உதயம், ஸ்ரீராம், ஹேமா, ...

    ஹேமா: கதை மாவு கொஞ்சம் பாக்கி இருக்குது, அதைப் பணியாரமாக்கிட்டு பாட்டுப் பக்கம் ஒதுங்குறேன்.

    பதிலளிநீக்கு
  6. திகில்..பயம் என சுழன்று சுழன்று கதை நகர்கிறது... , கதாநாயகன் கடைசியில் எல்லாம் ஹெவி டோஸ் மாத்திரயில் வந்தகனவுகள் என்று வேர்த்து பூத்து படுக்கையிலிருந்து எழுந்தால் போதும் என்றளவிற்கு பயம் படிப்பவர்களையும் புரட்டி எடுக்கிறது...

    பதிலளிநீக்கு
  7. அன்புள்ள அப்பாதுரை அவர்களே..
    நீங்கள் மாங்காய்ப் பால உண்டவரா? அருவியாயக் கொட்டுகிறதே கற்பனை. கண்டிப்பாக உங்கள் கற்பனை அருவியில் மூர்ச்சையாகிப் போனேன். தண்ணீர் தெளித்து எழுப்பிய பின்னே மீண்டும் வந்து இந்த பின்னூட்டம் இடுகிறேன்.. ரொம்ப பய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா இருக்கு..

    ரொம்ப நல்லா கொண்டு போகிறீர்கள். என்னாலெல்லாம் ரசிக்க மட்டுமே முடியும் என்ற ஏக்கத்துடன்...தொடர்க.. நாங்களும் படித்து மயக்கம் போடுவதைத் தொடர்கிறோம்..

    பதிலளிநீக்கு
  8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  9. அப்பாஜி. பையனை பிழைக்க வைத்துவிட்டீர்கள். மரிஷ்கா வந்து நிற்கிறாள் தொடரும் கார்டு போட்டு விட்டீர்கள். வாரப் பத்திரிகை உத்தி... மேலும் பத்துஜி, ஆதிரா போன்றோர் பயப்படா வண்ணம் எழுதுங்கள். மீண்டும் ஆதிரா மயக்கம் போடாதவாறு பார்த்துக் கொள்ளவும். இது என் அன்பு வேண்டுகோள். ;-)
    ஸ்ரீராம் சொன்னது மாதிரி மரிஷ்கா சக்தி அந்த பாலகன் சக்தியை சாப்பிட்டு ஏப்பம் விடுமா?.... ;-)

    பதிலளிநீக்கு
  10. ஏதோ ஒரு மாய உலகத்துக்குப் போய் வந்தது போல் பிரமிப்பாக இருக்கிறது.இப்படியெல்லாம் எப்படிச் சிந்தித்து ஒரு கதை உருவாக்க முடிகிறது?
    தொடருங்கள்.பிரமிப்பு அடங்காமல் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. // சிறு வயதில் என் சகோதரிகள் தரையில் சதுரக்கட்டங்கள் வரைந்து ரைட்டா கொய்ட்டா என்று ஆடிய "அசட்டுப்பெயர்" ஆட்டம் நினைவுக்கு வந்தது.//

    அடுத்தவாட்டி சென்னை, குவைத், ஹைதராபாத் போனால் - "பவது பிச்சாந்தேகி" தான் உனக்கு !!

    //நான் பொருட்படுத்தாமல், எம்டிமைத் தொட்டுக்காட்டி நடுவிரலை நீட்டிப் பல்வெட்டினேன்//

    அமெரிக்க பொம்பளை தான் அப்படி செய்வாள். இவனுமா !!

    இரண்டு வாரங்களுக்கு முன் (ஐயப்ப மாலை போடும் முன்) நான் என் பெற்றோர், மகன்கள் என்று Shop Rite கடைக்கு பூ வாங்க சென்றேன். அப்போது பணம் கொடுக்கும் வரிசையில் ஒரு அமெரிக்க சிறுவன் (அதாங்க Youth) என்னை ஏதோ சொல்லிவிட்டான். என் ஆங்கிலம், என் நிறம் என்று ! இப்பல்லாம் கோவம் சடக் சடக்கென்று வருது. அவனுக்கு அங்கேயே நன்கு கொடுத்தேன். அப்படியே விடமால் வெளியே காரை எடுத்தவன் என் கார் இருக்கும் வரிசையிலா வரணும் ? அவன் அப்படி வந்தபோது நான் சும்மா இல்லாமல் என் நடுவிரலை நீட்டி காண்பித்தது அவனை ரொம்ப கடுப்பாகி விட்டது ! கார் பார்க் முழுதும் துரத்தி, வெளியில் வந்தபிறகும் துரத்தி என் காருக்கு முன் வேண்டுமென்றே பிரேக் அடித்து நிற்பது / வேண்டுமென்றே லேன் விட்டு லேன் வந்து என்று - ஜாலியாக இருந்தது. நானும் அவனை விடுவதாக இல்லை. ஒரு இரண்டு மூன்று சிக்னல் ஒரே ஜாலி. போலீஸ் வரவில்லை. வந்து இருந்தால் இருவருக்கும் டிக்கெட் கிடைத்து இருக்கும் !!

    என் பெற்றோர் / மகன்கள் ஒரே டென்ஷன். நினைத்து பார்த்தால் என் பசங்க / பெற்றோர் முன் இப்படி பண்ணி இருக்க வேண்டாமே என்று அப்புறம் தோன்றியது. என்னையே அவன் திரும்பி பார்த்தால் உசிரு காலி தான் !

    //மேட் இன் சைனாவா?//

    குசும்பு !

    அதுசரி

    இன்னும் எத்தினி பாகம் இருக்குது நைனா ?

    ஏன்னா, எப்படி முடிப்பாய் என்று ஊகம் செய்ய முடியவில்லை - அதான் டென்ஷன் ?

    - சாய்

    பதிலளிநீக்கு
  12. நன்றி பத்மநாபன், ஆதிரா, RVS, சென்னை பித்தன், சாய், ... தொடர்ந்து படித்த பொறுமைக்கும் ரசனைக்கும், பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

    சாய், அடுத்த தவணையில் முடிந்து விடும்.. மாவு தீர்ந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  13. சாய்.. நல்லா இருக்குதே சிண்டு?
    நான் அசட்டுப்பெயர்னு சொன்னது ஆட்டத்தை - ஆடுனவங்களை இல்லை.

    கொஞ்சம் கவனமாவே இருங்க.. ரெண்டு டாலருக்கு இப்பல்லாம் சுட ஆரம்பிச்சுட்டாங்க.. ஒபாமா அரசுல எங்கத்தான் போய் நிக்குமோ தெரியல. கார்ல எதுனா நடந்து அந்தப் பையன் கிட்டே இன்சூரன்சு கூட இல்லாம போச்சுனா - அதுக்கும் சேத்து நீங்கதான் மொய் எழுதணும், கவனம். பேசாம தமிழ்ல பத்தாயிரம் கெட்ட வார்த்தையை சொல்லிட்டு (சாமி சரணமும் சேத்துகிட்டு) விலகுறது பெட்டர். கவனம்.

    பதிலளிநீக்கு