கோடை விடுமுறையில் பரணைச் சுத்தம் செய்யும் பொழுது டிவிடியைப் பார்த்தேன்; தூசி கூடப் படியாமல் சுத்தமாக இருந்தது.
இருபது வருசமிருக்குமா இந்தப் படம் பார்த்து (பரங்கிமலை ஜோதி தியேடர் என்று ஞாபகம்)? தகர டப்பா படமென்றாலும், ரஜினி பேசி நடித்த ஆங்கிலப் படமென்பதால் ஸ்பெசல். படத்தின் கதாநாயகனும் நாயகியும் முகவரி இல்லாமல் போய்விட்டார்கள். சிகரெட் எறிந்துக் கவ்வும் டேக்சி டிரைவர் இன்றைக்கும் சூப்பர் ஸ்டார். ரஜினி இல்லாமலிருந்தால் இந்தப் படம் அட்டை டப்பா.
ஒன்றரை மணி நேரப் படத்தை அரை மணிக்குள் சுருக்கியிருக்கிறேன். நூறு மெகாபைட்டிற்கு மிகுந்திருப்பதால் சற்று மெள்ளத் தளமிறங்கும்; பொறுமையும் விருப்பமும் வசதியும் (இணைய வசதி, வேகம்) இருந்தால் பார்க்கவும் - ரஜனிக்காக ஒருதரம். (tip:பாதிப்படம் இறங்கவிட்டு பிறகு பார்க்கத் தொடங்கவும்)
சினிமா-1 | 2010/08/12 | Bloodstone, ரஜனிகாந்த்
2010/08/12
ரஜினியின் Bloodstone
வெத்து வேலை
வகை
சினிமா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
பிரிண்ட் தெளிவாக இருக்கிறது...ஆங்கில அலர்ஜியில் இதுவரை பார்த்ததில்லை. ரஜினி ஆங்கிலம்ன்னு உசுப்புனதால பார்க்கும் ஆர்வம். வலை வேகம் கூடி கிடைக்கும் நேரத்தில் பார்த்துவிடவேண்டும்...மிக்க நன்றி
பதிலளிநீக்குநூத்தி மூணு எம்பி ... இறங்கவா என்கிறது... ஐயோ இப்போ வேணாம் அப்புறமா ன்னுட்டேன்.
பதிலளிநீக்குஎன் சார் உங்களுக்கு இந்த கொல வெறி (உங்க பிளாக் பேரு நல்லாஇருக்கு சார் )
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
பதிலளிநீக்குஎன்ன? பிளாக் பேரு நல்லா இருக்கா... இப்படி அனியாய அடி அடிக்கிறீங்களே மங்குனி?
அதுல பாருங்க பத்மநாபன்... ரஜினி பேசியிருக்கும் வசனங்களில் அனேகமாக எல்லாமே இரண்டு சிலபில் வார்த்தைகள் தான்... பார்த்துப் பார்த்து எழுதியிருக்கிறார்கள். நெகோஷியேடர் என்பது தான் இந்தப் படத்திலேயே ரஜினி பேசியிருக்கும் பெரிய்ய்ய வார்த்தை.
பதிலளிநீக்குபார்க்கப் பொறுமை இல்லை. இந்தப் படத்துல ஏதேனும் பஞ்ச் டயலாக் இருந்தா அதை மட்டும் தனி கிளிப் ஆகப போடுங்க. பார்க்கிறேன்.
பதிலளிநீக்குஉதாரணம்:
கண்ணா. 'உனக்கு ஃபுட் சாப்பிட்டா பிளட் ஊறும; எனக்கு உன் பிளட்ட எடுத்தாதான் நெஞ்சு ஆறும்
ஹா ஹா ஹா'
இந்த படத்தில் ரஜினி உண்டு.சரி.அவர் ஆங்கிலம் பேசி நடித்திருப்பதாக சொன்னீர்களே.அது சரியில்லை.இப்போதெல்லாம் கவ்தம் மேனன் போன்றோர் இயக்கும் தமிழ்ப் படங்களில் கூட இதைவிட கூடுதலாய் ஆங்கிலம் பேசுகிறார்கள்.
பதிலளிநீக்குஇந்தப் படம் வந்தப்ப, ஏதோ ஒரு தமிழ்ப்படத்துல இதைவிட கமலகாசன் அதிகமா இங்க்லிஷ் பேசி நடிச்சதா கிண்டல் செய்வாங்க, போகன்.
பதிலளிநீக்குஇந்தப் படத்துல இருக்குற ஒரே ஒரு சுமாரான பன்ச் டயலாக், அதுவும் ரஜினி பேசலிங்க kgg. வில்லனும் ஹூரோவும் பேசிக்கிறாங்க. சரியா எடிட் செஞ்சு சேர்க்க முடியலே. படத்தின் க்ளைமேக்ஸ்ல ஹீரோ மாட்டிக்குவார். ஹீரோவின் பெயர் மெக்வே; அதை மெக்வீ என்பார் வில்லன். (american and british pronounciations of veigh)
பதிலளிநீக்குஹீ: the name is mcway!
வி: vee, way...."but what's in a name - shakespeare"
ஹீ: yeah? "fuck you - david mammet"
பஞ்ச் டயலாக் எல்லாம் ரஜினி அப்ப அவ்வளவா பாலோ செய்யலைனு நினைக்கிறேன்.
Super. I had not seen this movie. Thank you for sharing
பதிலளிநீக்கு(படித்ததோடு நிற்காமல் :) பரிந்துரை செய்ததற்கு, மிக்க நன்றி, குமார்.
பதிலளிநீக்குரொம்ப நாளா பார்க்கனும்னு நினைச்ச படம் ... இப்போ பார்க்கிற மூட் இல்ல ...பின்னொரு நாள் கண்டிப்பா பார்க்கிறேன் ... படம் அப்போ நல்லா ஓடிச்சா இல்லையா சார் ?
பதிலளிநீக்குவாங்க நியோ... இப்போ நலம் தானே? பின்னூட்ட மழையா பொழிஞ்சிருக்கீங்க.. நன்றி.
பதிலளிநீக்கு(ரஜினி படம் ஓடிச்சா? நீங்க வேறே! நிக்கக்கூட முடியாம படுத்துடிச்சுனு நினைவு.)